பாசத்திற்கு உரிய டோனி,
நீங்களெல்லாம் என்ன செய்கிறீர்கள் என்றே தெரியவில்லை. தலைமுடி வெட்டி ஒரு நாயகன் போல உலாவி வருகிறீர்கள். நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவும் தப்பில்லை என்ற உயரிய கொள்கையுடன் நடத்தப் பட்டு வரும் ஐ.பி. எல் போட்டிகளை வளர்த்துவருபவர்களில் நீங்களும் ஒருவர் என்பதே உண்மை. நீங்களும் சரி, உங்கள் சகா என்றுமே தலைவராக முடியவே முடியாத யுவராஜிம் சரி. நன்றாகத்தான இருக்குறீர்கள். நன்றாகத்தான் ஸ்டைல் செய்கிறீர்கள், நன்றாகத்தான் பேட்டி கொடுக்குறீர்கள். ஆனாலும் என்ன பயன்?
நமது வீட்டு காரமிளகாய் பக்கத்துவீட்டுக் குழம்பில் மிதக்க விட்டு விட்டீர்களே! டென்னிஸ் ஆடிவந்த மல்லிகை இனி மாற்றான் தோட்டத்தில் மணக்கப் போகிறதாமே.., சமீப காலத்தில் உங்களால் கிரிக்கெட் தான் விளையாட முடியவில்லை. குறைந்த பட்சம் வில்லனுக்கு வில்லனாகக் கூடவா மாறமுடியவில்லை,
சற்றும் மனம் தளரவேண்டாம். உடனடியாக அஜித் தின் பழைய திரைப் படங்களைப் பாருங்கள். இன்னொருவருடன் நிச்சயம் செய்யப் பட்ட பெண். இன்னொருவரை காதலித்த பெண், இன்னொருவரை மணந்த பெண் போன்றவர்களை எப்படியெல்லாம் நம் வழிக்கு கொண்டுவர முடியும் என்று என்பதை அழகாக விளக்கி இருப்பார்கள்.
இதையெல்லாம் நாங்கள் ஏதோ வயிற்றெரிச்சலில் எழுதும் கடிதமாக நினைக்க வேண்டும். எதிர்காலத்தில் நடக்கப் போகும் ஒலிம்பிக் போட்டிக்களில் இந்தியாவிற்கு கிடைக்க இருக்கும் தங்கப் பதக்கங்கள் வேற்று நாட்டுப் பேரால் வந்து விடக்கூடாதே என்ற தேசப் பற்றால்தான் எழுதுகிறோம்.
கிரிக்கெட்டிற்கு அடிப்படையே டென்னிஸ்தானாமே, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பார்களே..,
டென்னிஸ் பதக்கத்தைத்தான் நழுவவிட்டு வீட்டீர்கள்,. 20-20 உலகக் கோப்பையில் நடக்க இருக்கும் சதியையாவது புரிந்து கொள்ளுங்கள். இதுவரை தனக்கு கேப்டன் பதவியே வேண்டாம் என்று முடிதுறந்த ஒருவரை துணைத்தலைவராக அனுப்புகிறார்கள். என்னென்னவோ மணிமாறனைத் துணைத்தலைவராக பத்வி கொடுத்து கப்பல் பயணத்திற்கு அனுப்பிய ஆயிரத்தில் ஒருவன் நம்பியார் நினைவிற்கு வருகிறார், மணிமாறன் பதவி வேண்டாம் என்று சொன்னாலும்கூட அவரது வாள்வீச்சு அவருக்கு பதவி வாங்கித்தந்தது போல இங்கும், ஏதாவது நடந்து விடுமோ என்று தோன்றுகிறது .
நீங்கள் கவனத்துடன் இருந்தால் ஜோகிந்தர் கூட ஜோராக ஆடுவார். மந்தாரமாய் இருந்தால் மாத்யூ ஹைடனின் மங்கூஸ் பேட் கூட உங்களை ஆட்டமிழக்கச் செய்து விடும் .
போன வருடம் மந்திரா
அடுந்த வருடம் எந்திரா
இதுதான் இங்கு தந்திரா
எச்சரிக்கையுடன் இருங்கள் டோனி. அப்போதுதான் 20-20 யின் டான் பிராட்மேன், ஜார்க்கண்டின் ரிச்சர்ட்ஸ் அப்படியெல்லாம் உங்களுக்கு புகழ்மாலை சூட்ட முடியும். இல்லையென்றால் எதிர்கால கொச்சி அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யுவராஜுடன் போட்டிபோட வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்
இப்படிக்கு
முடியோடு சேர்ந்து முயற்சியைத் தொலைத்த ரசிகர்கள்.
//போன வருடம் மந்திரா
ReplyDeleteஅடுந்த வருடம் எந்திரா
இதுதான் இங்கு தந்திரா //
அண்ணனின் கவிதை நம்பர் 8114.
// இல்லையென்றால் எதிர்கால கொச்சி அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யுவராஜுடன் போட்டிபோட வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்//
ReplyDeleteபோகிற போக்கை பார்த்தால் இது கூட நடந்துரும் போல இருக்கே?
//கிரிக்கெட்டிற்கு அடிப்படையே டென்னிஸ்தானாமே, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பார்களே..//
ReplyDeleteதல, ஏற்கனவே சானியா மிர்சாவை சோயப் மாலிக் தள்ளிக்கிட்டு போய்ட்ட சோகத்துல இருக்கும்போது, இதனை வேற நியாபகப்படுத்தனுமா?
//உடனடியாக அஜித் தின் பழைய திரைப் படங்களைப் பாருங்கள். இன்னொருவருடன் நிச்சயம் செய்யப் பட்ட பெண். இன்னொருவரை காதலித்த பெண், இன்னொருவரை மணந்த பெண் போன்றவர்களை எப்படியெல்லாம் நம் வழிக்கு கொண்டுவர முடியும் என்று என்பதை அழகாக விளக்கி இருப்பார்கள்//
ReplyDeleteதல,
என்ன நீங்கள் ஏதோ தல (அஜித்) தான் இந்த தகாத உறவுக்கு எல்லாம் பயிற்சி அளிப்பவர் என்று கூறுகிறீர்களோ?
"வாழ்க சோயப். ஒழிக டோனி" என்று கூட ஒரு க்ளப் ஆரம்பிக்கப் போகிறார்களாம். அதுக்கு நீங்க தலைவராமே?
ReplyDeleteவோட்டு போட்டாச்சு தல.
ReplyDeleteதல,
ReplyDeleteஇன்னைக்கு காலையில பேப்பர்ல இந்த செய்திய பார்த்தவுடனே, எனக்கு என்னமோ நீங்க இதப் பத்தி ஒரு பதிவு போடுவீங்க என்று தோன்றியது. நீங்களும் செய்துவிட்டீர்கள். நன்றி.
ஒருகால கட்டத்தில் காதல் மன்னன், அடுத்து கார்த்திக் நடித்த படம், வாலி, போன்று காதலுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வந்து கொண்டிருந்தன தல. இப்போது படப் பெயர்கள் வர மறுக்கின்றன..,
ReplyDelete//"வாழ்க சோயப். ஒழிக டோனி" என்று கூட ஒரு க்ளப் ஆரம்பிக்கப் போகிறார்களாம். அதுக்கு நீங்க தலைவராமே?//
ReplyDeleteவில்லனைவிட காப்பாற்ற முடியாத நாயகனே ஒழிக கோஷத்திற்கு பொறுத்தமானவர்..,
இவ்வளவு வேகத்தில் பின்னூட்டங்களும் ஓட்டும் போடும் தலை விஸ்வா வாழ்க..,
ReplyDeleteதல விஸ்வா வாழ்க,, வாழ்க..,
சோயப் ஒழிக ஒழிக..,
தல,
ReplyDelete//இவ்வளவு வேகத்தில் பின்னூட்டங்களும் ஓட்டும் போடும் தலை விஸ்வா வாழ்க..,
தல விஸ்வா வாழ்க,, வாழ்க..,
சோயப் ஒழிக ஒழிக.//
தல (நீங்க - SUREஷ் (பழனியிலிருந்து) இருக்கும்போது வால் (நான்) ஆடக்கூடாது தல.
பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநண்பரே ஒன்று கவனித்தீர்களா , அணைத்து அணி தலைவர்களும் ஆட்ட களத்தில் மிக மிக சுறுசுறுப்பாக இருக்கும் போது நமது "அஞ்சா நெஞ்சன்" டோனி மட்டும் எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நடந்து கொள்கிறார் .
ReplyDeleteமந்திரா, எந்திரா, தந்திரா..... சூப்பர் கலக்கல் நண்பரே.....
//பகிர்வுக்கு நன்றி said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
//
//பகிர்ந்தமைக்கு நன்றி said...
பகிர்ந்தமைக்கு நன்றி.
//
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி..,கருத்துக்கும் நன்றி..,
//mahe said...
ReplyDeleteநண்பரே ஒன்று கவனித்தீர்களா , அணைத்து அணி தலைவர்களும் ஆட்ட களத்தில் மிக மிக சுறுசுறுப்பாக இருக்கும் போது நமது "அஞ்சா நெஞ்சன்" டோனி மட்டும் எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நடந்து கொள்கிறார் .
//
அவர் அணி மாறப் போகிறாராம். ஒரு கனவு வந்து கொண்டே இருக்கிறது..,
டென்னிஸ் விளையாடத்தெரிஞ்ச ஒரே பொண்ணும் இப்போ ஃப்ளைட் ஏற போகுதா....?
ReplyDeleteActually, you do not know how to appreciate this...!
ReplyDeleteAs MCP, you always think only from male's perspective and do not consider anything from woman's side!
Because of this marriage knot, Indo-Pak relation will improve significantly! - Manmohan Singh to NDTV
As per your logic, if Pak wins the world cup and Shoaib happens to be the Captain, then the credit should come to India, rite?!
Nice post!
-MCE
P.S - Sorry for englishfying as Thamizh not available rite now:-)
எனக்கென்னவோ இது இந்தியாவின் ராஜதந்திர சதியாகவே படுகிறது..
ReplyDeleteகொஞ்சக் காலமாகவே சானியா சறுக்கி வருகிறார்.
இனியும் சானியாவால் ஒலிம்பிக் பதக்கம் போணியாகாது எனத் தெரிந்து தான் ஷோயிபின் தலையில் கட்டி விட்டார்களோ?
அதுசரி சோயிப் மளிக்கும் இந்திய மருமகன் தானே? மையார் வீட்டு வரவேற்பு எப்படி இருக்கும்? ;)
சானியா பாகிஸ்தானுக்காக டென்னிஸ் ஆடுவாரா? சோயிப் இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடுவாரா? ;)
தல ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.
ReplyDelete//என் நடை பாதையில்(ராம்) said...
ReplyDeleteடென்னிஸ் விளையாடத்தெரிஞ்ச ஒரே பொண்ணும் இப்போ ஃப்ளைட் ஏற போகுதா....?
//
விதி தல.., விதி..,
//(Mis)Chief Editor said...
ReplyDeleteActually, you do not know how to appreciate this...!
As MCP, you always think only from male's perspective and do not consider anything from woman's side!
Because of this marriage knot, Indo-Pak relation will improve significantly! - Manmohan Singh to NDTV
As per your logic, if Pak wins the world cup and Shoaib happens to be the Captain, then the credit should come to India, rite?!
Nice post!
-MCE//
உண்மைதான் தல.., ஜீரணிக்க மனம் மறுக்கிறது தல.,
காந்தார நாட்டு இளவரசி
அஸ்தினாபுர அரசி ஆனபோது
அஸ்தினாபுர இளவரசர் காந்தார மன்னர் ஆகவில்லை. இதுதான் இதிகாசம்
//LOSHAN said...
ReplyDeleteஎனக்கென்னவோ இது இந்தியாவின் ராஜதந்திர சதியாகவே படுகிறது..
கொஞ்சக் காலமாகவே சானியா சறுக்கி வருகிறார்.
இனியும் சானியாவால் ஒலிம்பிக் பதக்கம் போணியாகாது எனத் தெரிந்து தான் ஷோயிபின் தலையில் கட்டி விட்டார்களோ?
//
ஓ..., மகஸியா ஓ..., மகசியா...,
//சானியா பாகிஸ்தானுக்காக டென்னிஸ் ஆடுவாரா? சோயிப் இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடுவாரா? ;)//
ReplyDeleteலாலாக்கு டோல் டப்பிம்மா..,
லாலாக்கு டோல் டப்பிம்மா..,
தமிழ்ப்பட எக்ஸ்பிரஸனோடு படியுங்கள்
//அக்பர் said...
ReplyDeleteதல ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.
//
நன்றி தல..,
//நமது வீட்டு காரமிளகாய் பக்கத்துவீட்டுக் குழம்பில் மிதக்க விட்டு விட்டீர்களே! /
ReplyDeleteதல என்னா பண்ணா இந்த குழம்பை இங்கேயே மிதக்கவிடலாம்னு சொல்லிட்டீங்கனா நல்லாயிருக்கும்
புகுந்தவீடுதான் சொந்தவீடு என்கிற பட்சத்தில் ஒரு டென்னிஸ் மங்கையை நம் நாடு இழக்கிறது என்பதை நினைக்கயில் ஒரு மிகுந்த வருத்தம்தான்
//அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteதல என்னா பண்ணா இந்த குழம்பை இங்கேயே மிதக்கவிடலாம்னு சொல்லிட்டீங்கனா நல்லாயிருக்கும்//
தெரியலயே..,
puli padhunguvadhu payathan nanpare atutha matham parum puli payum purinjutha ,,,,,,,,,
ReplyDeleteஅநாநி அண்ணா, நீங்க யாரச் சொல்றீங்க அண்ணா
ReplyDeleteஅய்யயோ என்ன இதெல்லாம்... இப்பிடி வருத்தப்பட்டா எப்பிடி. ஏற்கெனவே லட்சுமிராய் கிட்டவே போகாத தோனியா !!! :) சானியாவ பாக்க போறாரு. நல்ல கத.
ReplyDelete//எட்வின் said...
ReplyDeleteஅய்யயோ என்ன இதெல்லாம்... இப்பிடி வருத்தப்பட்டா எப்பிடி. ஏற்கெனவே லட்சுமிராய் கிட்டவே போகாத தோனியா !!! :) சானியாவ பாக்க போறாரு. நல்ல கத.
//
லட்சுமி ராய்ன்னா யாருன்னே இந்த சிங்கத்துக்கு தெரியாதே
yes.romba mukiyamana pinnutam.. but etha dhoni pappara? paatha nalla erukum.
ReplyDeleteகலாய்ச்சிட்டீங்களே
ReplyDelete