Wednesday, March 24, 2010

பிளாக்கர், பதிவர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி

என்னமோ போங்க..,  கூகிள் அண்ணாச்சி தயவில் காசு செலவில்லாமல் நமக்கொன்று ஒரு பூவை ஆரம்பித்து, சிலரெல்லாம் இரண்டு மூன்று வைத்துக்கொண்டு  விரும்பியதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறோம்.  அந்த வலைப்பூவிற்கு ஒரே சட்டையைப் போட்டு இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது மாற்றுபவர்கள் இருக்கிறார்கள்.

காலையில் ஒன்று மாலையில் மாற்றுபவர்களும் இருக்கிறார்கள். இதில் பிளாக்கர் கணக்கில் வழக்கம்போல் க்ளாசிக் வார்ப்புருக்களை வைத்து அதில் வண்ணங்களை மாற்றி வித்தியாசம் காட்டிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். வெளியாள் கொடுக்கும் வார்ப்புருக்களை போட்டுக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போது பிளாக்கர் கணக்கிலேயே பல விதங்களில் நமது வலைப்பூவிற்கு  சட்டை, பேண்ட், கோட், சூட் போன்றவை அணிய முடியும். கால்சட்டைக்கு இரண்டு பாக்கெட், மூன்று பாக்கெட் வைத்துக் கொள்ள முடியும். இதெல்லாம் வெளியாள் கொடுப்பதில் இருப்பதில்லை. அதற்கு ஒரே வழி
http://draft.blogger.com  உள்ளே நுழைவது தான் . பின்னர் அதில் நுழைந்து  – Layout ஐ ஒரு தட்டுத் தட்டினால் வழக்கமாகத் தோன்றும் நான்கோடு ஐந்தாக  Template Designer 
 தோன்றுகிறது, அதைத் தட்டி ஒவ்வொரு வகையிலும் நுழைந்தால் அட.., அட...  சட்டை படு சுவாரஸியமாக கிடைக்கிறது .இனி பூந்து விளையாடலாம்.


எனக்கு இந்த தகவல் எப்பூடி.., வலைப்பூ மூலமாக கிடைத்தது.

29 comments:

  1. மருத்துவரே ... தலைப்பில் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்துட்டீங்களே...

    அவ்...அவ்...அவ்...

    ReplyDelete
  2. நல்ல செய்திதான் அடிக்கடி டிசைனை மாற்றலாம்

    ReplyDelete
  3. நன்றி தல..

    உங்க உபயத்துல நானும் மாறியாச்சி..

    ReplyDelete
  4. என்னவோ ஏதோன்னு வந்தேன்.. இப்பிடி சப்புன்னு போச்சே??

    ReplyDelete
  5. தலைப்பை பார்த்து பதறி விட்டேன்...புது சட்டை நல்ல இருக்கு..நல்ல பகிர்வு அண்ணே......

    ReplyDelete
  6. தல உண்மையிலேயே அதிர்ச்சிதான். ஸ்டார்ஜன்னோட கருவிப்பட்டையை காணோம், தமிழிஷ் பட்டையையும் காணோம்.

    ReplyDelete
  7. அருமை நல்ல செய்தி சுரேஷ்

    ReplyDelete
  8. // அக்பர் said...
    தல உண்மையிலேயே அதிர்ச்சிதான். ஸ்டார்ஜன்னோட கருவிப்பட்டையை காணோம், தமிழிஷ் பட்டையையும் காணோம்//

    இது Refresh issueவாக‌ இருக்க‌லாம், அவ‌ர் சிறிது நேர‌ம் க‌ழித்து முய‌ற்சி செய்தால் அல்ல‌து புதிய‌தாக‌ ஒரு டெஸ்ட் இடுகையை வெளியிட்டால் அதில் ப‌ட்டைக‌ள் இருக்க‌லாம்

    ReplyDelete
  9. நான் கூட என்னவோ ஏதோ என்று நினைத்தேன்.....
    ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி??....

    ReplyDelete
  10. நல்லா பகிர்வுங்க. நன்றி.

    புது டெம்பிளேட் சட்டைக்குள்ள
    (வலது) கைய்ய விட்ட சுரங்கம் மாதிரி போய்க்கிட்டே இருக்கு?
    சைட்ல இருக்கும் இடத்துல கிரிக்கெட் விளையாடலாமா?

    ஆனா ”மோகம் முப்பது நாள்... ஆசை அறுபது நாள்’
    கேசுதான் இதுவும்.”இக்கரைக்கு அக்கரைப் பச்சை”?

    ReplyDelete
  11. வடை போச்சே ...

    சென்ற வாரம் தான் நான் இதனை உபயோகித்து “புது சட்டை” போட்டேன்

    நன்றி ‘தல’

    ReplyDelete
  12. நல்ல செய்தி....

    நன்றி.....

    ReplyDelete
  13. பதிவுக்கு நன்றி சகா!..... இன்ப அதிர்ச்சி பதிவு......நானும் வலைப்பூ அலங்காரத்தை மாற்றிவிட்டேன்....

    ReplyDelete
  14. ஆமா, நேத்துதான் என் வலைப்பூவுக்கு புத்தாடை அணியும்போது கவனித்தேன்.

    ReplyDelete
  15. உபயோகமான தகவல், நன்றி.

    ReplyDelete
  16. அருமையான பதிவு நண்பரே,பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றிங்க. அருமையா இருக்கு.

    ReplyDelete
  18. தல... நான் மாறணும்...ஆனா மாறலை!

    ReplyDelete
  19. வருகையும் கருத்தும் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  20. //ஆனா ”மோகம் முப்பது நாள்... ஆசை அறுபது நாள்’
    கேசுதான் இதுவும்.”இக்கரைக்கு அக்கரைப் பச்சை”?//


    உண்மைதான் தல.., புதுச் சட்டை மாற்ற நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    ஆன்மாவை மாற்ற யாராலும் முடியாது

    ReplyDelete
  21. //தல... நான் மாறணும்...ஆனா மாறலை!//

    அது..,

    ReplyDelete
  22. ராகவன் சொன்னதத்தான் நானும் சொல்ல வேண்டும். இந்த ஒரு பக்க கதை சஸ்பென்ஸ் கொஞ்சம் ஓவரா இல்லையா? டாக்டர் என்பதால் இந்த அதிர்ச்சி வைத்தியமா?

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  23. Really useful to every blogger. Thankyou.

    ReplyDelete
  24. வருகையும் கருத்தும் கொடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..,

    ReplyDelete
  25. கொஞ்ச நாள் நிர்வாணமா இருக்க விடமாட்டிங்களே அதுக்குல் சட்ட பேன்ட் எல்லாம் கொடுத்துகிட்டு என்ன சிறு பிள்ளைய விடுங்க

    ReplyDelete
  26. மிக்க நன்றி சகோதரம்...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பொது அறிவுக் கவிதைகள் - 4

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails