Wednesday, May 11, 2011

தமிழகம் முழுவதும் நாங்கள் எடுத்த எக்ஸிட்போல் கருத்துக் கணிப்புகள்

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்த நாங்கள் எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து முடிவு செய்தோம்.  நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் எல்லாம் பார்த்தால் ஏறக்குறைய தமிழ்நாடு முழுவதற்கும் ஆள் இருந்தது. கேள்விகளைத் தயார் செய்து வைத்தோம்.

1.இது வரை இருந்த முதல்வர்களில் நன்றாக செயல்பட்டவர் யார்? இந்த தேர்தலில் யார் முதல்வராக வர ஆசைப் படுகிறீர்கள்?

2.புதிய சட்ட சபையில் அதிமுக எத்த்னை இடங்களைப் பிடிக்கும்? திமுக எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? மற்ற அணிகளுக்கு எவ்வளவு?

3 கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் இந்திய அளவை ஒப்பு நோக்க அதிகரித்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா?

4.விலைவாசி அதிகரிப்பு இந்திய அளவைவிட் குறைந்திருக்கிறதா? அதிகரித்திருக்கிறதா?

5. தொலைக்காட்சி, ஸ்டவ், கிரைண்டர் பிரச்சாரம் எடுபடுமா?

6.ஊழல் ஒரு பிரச்சனையாக இருக்குமா?

7.அரசியல் தலைவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறீர்களா?

8.வடிவேலுவின் பிரச்சாரம் எடுபடுமா?   வடிவேலு அடுத்த கருப்பு எம்.ஜி.ஆர் ஆக மாறி திமுக வெற்றிக்கு உதவுவாரா?

9.மின்வெட்டு தேர்தல் பிரச்சனையா?


10.இந்திய அரசியலில் தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் எதிரொலிக்குமா?




இப்படியெல்லாம்  கேள்விகளை வைத்துக் கொண்டு மூத்த நண்பர் ஒருவரிடம் கேள்வித்தாள் பற்றி கருத்துக் கேட்டோம். அவரும் சில விஷய்ங்களைப் பேசி விட்டு, யார் யாரிடம் எல்லாம் கொடுத்து கேட்கப் போகிறீர்கள் என்று கேட்டார். நாங்களும் பெரும்பாலான நண்பர்கள் பெயர் மற்றும் அவரது நண்பர்கள் என்று 150-200 பெயர்களைச் சொன்னோம். 

இது போன்ற வாக்கெடுப்பு ஏற்றவகையில் பலதரப் பட்ட வேளை செய்பவர்கள். பல ஊர்களில் குடியிருப்பவர்கள், பல்வேறு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பவர்கள் என்று பரவலாக இருப்பதையும் சொன்னோம்.

அவர் உடனே சில கேள்விகளில் சில மாற்றங்கள் சொன்னார். 

முதல் கேள்விக்கு சச்சின் பெயரை சேர்த்துக் கொள்

இரண்டாவது கேள்விக்கு இந்திய கிரிக்கெட் அணியை சேர்த்துக்கொள்

மூன்று நான்காவது கேள்விக்கு கேள்வி புரிகிறதா இல்லையா என்று ஒரு வாய்ப்பினைக் கொடு


என்பது மாதிரி வரிசையாகச் சொன்னார். எனக்கென்னவோ கேள்வித்தாளில், சச்சின் பெயரைச் சேர்த்தால் அவர்தான் முதலிடம் வருவார் என்று தோன்றியது. இது போன்று அவர் சொன்ன மாற்றங்களில் மொத்தமாக குழம்பி நின்றதும் அவரே சொன்னார்.   உங்க லிஸ்ட் பாருங்கப்பா, அவங்களெல்லாம் என்ன சொல்லுவாங்கன்னு நீங்க யோசித்து சில எண்களைப் போட்டு கருத்துக் கணிப்பு வெளியிட்டு விடு அவ்வளவுதான் விஷயம். இதுக்கு போய் பக்கம் பக்கமா அச்சிட்டு அதை விநியோகித்து, அதை தபாலில் திரும்பப் பெற்று, அதை தொகுத்து.., அதற்குள் உண்மையான முடிவுகளே வந்து விடும்  என்று சொல்லி விட்டார்.


2 comments:

  1. 2016 பொதுத்தேர்தலுக்கு முன் கருத்துக்கணிப்புகள்
    வெளியிட்டுவிடுவீர்களா?

    ReplyDelete
  2. //suji said...

    2016 பொதுத்தேர்தலுக்கு முன் கருத்துக்கணிப்புகள்
    வெளியிட்டுவிடுவீர்களா?
    //

    நண்பர் கூறிய வழியிலேயே சில பல கருத்துக்கணிப்புக்களை இந்த தேர்தலிலேயே வெளியிட்டுவிடலாம். மிக சுலப்ம்தான்.

    0-235

    25-210

    50-165

    100-135

    105-130

    110-125

    115-120

    120-115

    அப்படியே திருப்பிப் போட்டு விடலாம். உங்களுக்கு எது பிடிக்குமோ அதை எடுத்துக் கொள்ளலாம்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails