Saturday, February 28, 2009

கட்டைவிரல் உயர்த்திப் பிடித்த கூட்டம்

வழக்கமாக இடுகை எழுதி முடித்த பின்னர்தான் தமிழ்மணக்கட்டைவிரல் பற்றீயும் அதிலும் மேல்நோக்கிய கட்டைவிரலில் க்ளிக் செய்து வாசகர் பரிந்துரையில் முதல் ஓட்டை நமக்குநாமே போட்டு எப்படியாவது முகப்பில் இடம்பிடிக்க படாதபாடு படுவோம். இந்த இடுகை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தஅந்த கட்டைவிரல் பற்றியதுதான்.


ஒருபள்ளியின் நடைபெற்ற ஆண்டுவிழாவில்தான் இந்த கருத்துக்களைக் கூறினார்கள்.

குழந்தைகளைப் படிக்கச் சொல்லிவிட்டு டி.வி. பார்க்கும் பெற்றோர்களைப் பற்றியும் நாம் பார்க்கும் காட்ட்சிகள் நம்மை எப்படி ஆளுமை செய்கின்றன என்பது பற்றியும் அருமையாகக் கூறினார்கள்.

முதல் வரிசையில் வரிசைகளில் இருப்பவர்களை மட்டும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். பின் வரிசையில் இருப்பவர்களை சாட்சியாக வைய்த்துக் கொண்டனர்.

அனைவரையும் ஆட்டிக் காட்டிவிரலை உயர்த்திக் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர். அதே நேரத்தில் இந்த அறிவிப்பு செய்தவர் தனது கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார். முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலோரும் தங்களது கட்டைவிரலையே உயர்த்திக் காட்டினர். கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆட்காட்டிவிரலை உயர்த்திக் காட்டியவர்கள் வெகு சிலரே.. செயல்முறையிலேயே
நாம் என்னதான் நினைத்தலும் எவ்வளவுதான் அறிவை வள்ர்த்து வைத்திருந்தாலும் நாம் பார்க்கும் காட்சிகள்தான் நம்மை பெருமளவு ஆளுமை செய்கின்றன.
என்பதை அழகாகக் காட்டினார்கள்...

.................................................................................................................................................

Saturday, February 14, 2009

முன்னொருகாலத்தில் எங்கள் காதலர்தின அனுபவம்

அது ஒரு காதலர் தினம்। நாங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது।। ஒரு வி।ஐ।பி। வருகிறார் என்று ஊரே பரபரப்பாக இருந்தது। எங்களுக்கும் ஒரு பரபரப்பாக இருந்தது। எங்கள் நண்பன் அரவிந்தசாமி, மணிஷாவிடம் காதலைச் சொல்லப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்। அவர்கள் காதலை சொல்லிக் கொள்ளவில்லையே தவிர மற்றபடி காதலர்கள்போல்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்।

அவர்களுக்கு அடிக்கடி பாடங்களில் சந்தேகம் வரும்। அதை சரி செய்ய இவர் இருக்கும் இடத்திற்கு அவரும் அவர் இடத்திற்கு இவரும் வருவார்। ஓரே வகுப்புதான்। ஆனால் செயல்முறை வேறுவேறு இடங்களில்।। அருகில் இருக்கும் எங்களிடம் எல்லாம் சந்தேகம் கேட்க மாட்டார்கள்। இவர்கள் ஒன்றாக படிப்பது எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத காரணத்தால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம் என்றே நினைக்கிறேன்। பொதுவாக இது போன்று ஆரம்பிக்கும்போது மற்ற நண்பர்களை வெட்டி விடுவார்கள்।

லஷ்மி காம்ப்ளக்ஸில் என்னமோ வாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றிருந்தான்। அரவிந்தசாமி। । கல்லூரி விடுதியில் மதிய உணவு எடுத்தபின் கிரிக்கட் ஒன்பிச் விளையாடிக் கொண்டிருந்தபோது காந்தி புரத்தில் குண்டு வெடித்ததாக செய்தி வந்தது। இவன் வேற அங்கதானே போயிருக்கிறான்। ஒன்றும் புரியவில்லை। யூனிட்ஸ்க்கு என்ன ஆச்சோ என்று என் ரூம்மேட் வேறு புலம்ப ஆரம்பித்தான்। மனிஷாவும் அவனுக்கும் ஒரே இடத்தில் செயல்முறை வகுப்பு இருப்பதால் அப்படி।

சிறிது நேரம் கழித்தபின் நிஜமாகவே எங்களுக்கு படபடப்பு அதிகம் ஆனது। நாங்கள் சென்று பார்த்து வர வேண்டும் என்றால் எங்கள் சீணியர் மாணவர்கள் அனுமதிக்கவில்லை। (யாரும் வண்டி கடன் கொடுக்கவில்லை)। மாலைப் பொழுது ஆனது। அவர்களைப் பற்றி ஒரு தகவலும் இல்லை। ஆனால் ஊரில் ஆங்காங்கே குண்டு வெடிப்பதாக மட்டும் தகவல் வந்து கொண்டே இருந்தது। இந்த நேரத்தில் அரவிந்தசாமி வீட்டில் இருந்து வேறு பத்திரமாக இருக்கிறீர்களா? என்று போண் வேறு செய்துவிட்டார்கள்। அப்போது செல்போன் கிடையாது।

மிகக் கொடுமையான நேரங்கள் அது। அந்தநேரத்தில் அடுத்த தகவல் வந்தது। மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலேயே குண்டுவெடித்தது। செவிலியர்கள் பலி। மற்றும் படுகாயம்। யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்। உலகப் போர் காலத்தில் கூட மருத்துவமனைக்குள் குண்டு வெடித்து கிடையாதாம்।

நாங்கள் என்ன செய்ய முடியும் அரவிந்தசாமியின் வீட்டிலிருந்து மீண்டும் போன் வந்தால் என்ன சொல்வது। கூப்பிடுகிறோம் என்று சொல்லி வைத்துவிட்டோம்। அதன்பிறகு போண் பிசியாகவே இருந்தது। எல்லா மாணவர்களையும் அவர்கள் வீட்டில் விசாரித்துக் கொண்டிருந்தனர்।। இரவும் வந்துவிட்டது। அப்போது மருத்துவ மனையை விசாரித்து ரெண்டும் இருக்கா என்றும் கேட்டோம்। ஒரு தகவலும் இல்லை।

மருநாள் காலை। கோவையில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை। ஆனால் மருத்துவ கல்லூரி படுவேகத்துடன் இயங்கி கொண்டிருந்தது। வேகமாக மருத்துவ மனைக்குச் சென்று காயம் அடைந்தவர்கள் மரணம் அடைந்தவர்கள் என்று எல்லா பகுதிகளையும் சுற்றி சுற்றீ வந்தோம்। மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பெரிய வேலை ஒன்றும் கிடையாது என்றாலும் அன்று பார்க்க வருபவர்களுக்கு கூட நிறைய வேலை இருந்தது।

ஒவ்வொரு முறை சுற்றும் போதும் தப்பித்து விட்டார்கள் என்று மனம் சந்தோஷப் படும்। அடுத்த வினாடியே இப்போது ஏதும் கொண்டுவந்திருப்பார்களோ நாம் சரியாய் பார்க்கவில்லையோ என்று துக்க பட வைக்கும்। உடனே மீண்டும் ஒரு சுற்று। நரக வேதணை என்பது அதுதான்। இப்போது கூட அன்று கண்ட காட்சிகள் குலைநடுங்க வைக்கின்றன। அடுத்த மூன்று நாட்களும் எல்லா வார்டுகளையும் சுத்தோசுத்து என்று சுத்தி ஒருவழியாக நிலமை கட்டுக்குல் வந்தது।

,

இவர்கள் என்ன ஆனார்கள்।? அங்கேதான் விதி।। காதலர் தினத்தை கொண்டாட முதலில் தேர்ந்தெடுத்த இடம்। ஈச்சனாரி பிள்ளையார் கோவில்। அவ்விடம் ஊரின் நுழைவாயிலில் இருக்கிறது। அங்கேயே செய்தி கிடைத்த உடன் அப்படியே அவனது பைக்கில் பொள்ளாச்சிக்கு (சொந்த ஊர்) போய் மணிஷாவையும் ஊருக்கு அனுப்பிவிட்டான்। மறுநாள் அவன் மாணவர் விடுதிக்கு போன் போட்டிருக்கிறான்। நாங்கள் பயிற்சி மருத்துவர்களுடன் இருந்திருக்கிறோம்।எங்களுக்கு மூன்று நாள் கழித்து தெரிந்தது.
எப்படியோ என்னோட ரூம்மேட்
யூனிட்ஸ்க்கு ஒன்னும் ஆகல
என்று மகிழ்ச்சியுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.


இது ஒரு மீள்பதிவு. ஏற்கனவே நவம்பரில் பதிவிட்டதுதான்.

மறக்காமல் தமிழ்மண மேல்நோக்கிய கட்டைவிரலிலும், தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள்.

Saturday, February 7, 2009

விஜய் - தமிழ்ப்படம் - கேட்காமலே சில சிந்தனைகள்

எனது இந்த இடுகையைப் படிக்கும்முன் முரளிக் கண்ணன் அவர்களின்

விஜய் நம்பர்- 1 ஆக முடியுமா? படித்துவிட்டு பிறகு வாருங்கள்.

விஜய் அவர்களின் லட்சியம் செயல்பாடு ஆகியவற்றை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் ஒரு உண்மையைத் தெளிவாக அறிய முடியும்.

அதற்கு முன் எம்ஜியாரின் கால கட்டங்களையும் ரஜினியின் கால கட்டங்களையும் கொஞ்சம் ஆராய்ந்தால் முரளிக்கண்ணன் சார் அவர்களின் ஒப்பீடு போல வேறுசில விஷயங்களையும் அறியலாம்.

எம்ஜியாரின் கால கட்டத்திலேயே எஸ். எஸ். ராஜேந்திரன் (தமிழ்நடிகர்களில் முதன்முதலாக ச.ம.உ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.). ஜெமினி, ஆகியோர் இருந்திருக்கிறார்கள். பின்னர் முத்துராமன், ஜெயசங்கர் ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். சிவக்குமார் ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.

பாலச்சந்தரின் படங்களில் கூட ஆரம்ப கட்டங்களில் ஜெமினி , முத்துராமன் ஆகியோரின் இளமை போதாத கதாப்பாத்திரங்களுக்குதான் ரஜினி கமல் போடப் பட்டதாக பேசப் படுவதும் உண்டு.

எம்.ஜி.யாரையும் ரஜினியையும் ஒப்பீடு செய்தோமென்றால் எம்.ஜி.யாரின் காலத்தில் நடித்த நடித்த நடிகர்களையும் ரஜினி காலத்தில் நடித்த நடிகர்களையும் ஒப்பு நோக்குதலே சரியாக அமையும். ஜெய்சங்கரையோ, ரவிச்சந்திரனையோ, ஏ.வி.எம் ராஜனையோ அடுத்த நம்பர் 1 என்று அந்த காலகட்டத்தில் பேசியிருப்பார்களா? என்பது தெரியவில்லை. சிவக்குமாருக்கு கூட அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்குமா தெரியவில்லை. (ஒருவேளை ராமன் பரசுராமன் ஓடியிருந்தால் பேசப் பட்டிருப்பாரோ என்னமோ).

விஜயகுமார், எம்.ஜி.ஆர் ரசிகராகவே கூட நடித்துப் பார்த்தால் ஒருகதாப் பாத்திரமாகக் கூட அவரை ஒருமையில் அழைக்கத்தயங்கியவர் அவர். ( இன்று போல் என்றும் வாழ்க படத்தில் எம்.ஜி.யாரோடு சண்டை போடும்போது பேசும் வசனம்தான்0

அதே போல இன்று நடிக்கும் நடிகர்களையும் எடுத்துக் கொண்டால் அந்த காலக் கட்டத்தில் இருப்பது போன்ற சூழலோடு பொருத்திப் பார்க்கமுடிகிறது. எல்லா நடிகர்களும் அடிதடி, சராசரி இளைஞர்களை கவரும்படியான கதைகளையும் படமாக்கி வருகிறார்கள். இது பழைய காலகட்டத்தில் நடித்த இரண்டாம் வரிசை நடிகர்களின்பாணிதான். எத்தனை நடிகர்கள் ரஜினி பாணியில் நடித்தாலும் ரஜினி ரசிகனாக வேஷம் போட்டாலும் அது ரஜினியின் இடத்தைப் பலப் படுத்துமேதவிர இவர்களுக்கு உதவாது.

விஜய்க்கு கூட தனது இடம் பற்றி மிகத்தெளிவான கருத்து இருப்பதாகவே தோன்றுகிறது. அதனால்தான் வில்லு படத்தைப் பற்றிய பேச்சுகளில்கூட அது ஒரு ஜேம்ஸ்பாண்டு படம் மாதிரி ஒரு தோற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.


பழைய தமிழ்நடிகர்களில் ஜேம்ஸ்பாண்ட் என்றால் அது ஒருவர்தான். எத்தனை ரகசிய உளவாளி படங்களில் நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆரை யாரும் ஜேம்ஸ் பாண்ட் என்று சொல்ல மாட்டார்கள். அந்த ஜேம்ஸ் பாண்ட் அவர் ஜெயசங்கர் ஒருவர்தான். எனவே விஜய் அடுத்த ஜெயசங்கராகவே கருதப் படுவார், கருதப் படுகிறார்.

எம்.ஜி.யார்ர்க்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் முதலிடம் பிடித்தவர். அதே காலகட்டத்தில் எம்.ஜி.யார் முண்ணணியில் இருந்தார்.அவர் ஜெய சங்கர்.

அதேபோல ரஜினிக்கு அடுத்த தலைமுறை நடிகர். அவரது தலைமுறையில் அவரே முதலிடம்.   அவர் விஜய்.

எம்.ஜி.ஆர், ரஜினி வரிசைக்கு இன்னும் பத்து(20) ஆண்டுகள் கழித்து புதிதாக நடிக்க வருபரால் முயற்சி செய்ய முடியும். அதற்கும் திரைப் படக் கலையின் வடிவம்கூட மாறிப் போய்விடும் வாய்ப்பு கூட இருக்கிறது.
===========================================================

இது ஒரு மீள்பதிவு
http://tamilshots.mywebdunia.com/images/vijay.jpg


===========================================================

இன்றைய அவரது பாணி எம்.ஜி.ஆர் பாணி படத்தலைப்புகளிலும், ரஜினி பாணியில் ரசிகர் மன்றங்கள் நடத்துவதிலும் செல்கிறது. இந்த இடுகை வெளிவந்த காலத்திற்குப் பிறகு படத்திற்கு பெயர்வைக்கும் போக்கும் ரசிகர் மன்றங்களை நடத்திச் செல்லும் போக்கும் பெருமளவு மாறியிருக்கிறது என்றாலும் அன்றைய சூழலை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்து ரசிக்கவே இந்த மீள் பதிவு.http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/izizi//mywebdunia/UserData/DataV/vijayonline/images/vijaynewatmstillsn08.jpg

இந்த இடுகையைப் படித்துத்தான் விஜய் தனது பாணியை மாற்றிக் கொண்டார் என்றெல்லாம் நான் கூறமாட்டேன் என்பதையும் இந்த இனிய த்ருணத்திலே வலையுலகத்தின் முன் வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்பதனையும் டிஸ்கியாக போட்டுக் கொள்ள இருக்கிறேன் என்பதையும் கூறிக் கொள்ள ஆசைப் படுகிறேன்

http://gallery.techsatish.net/d/53592-3/Vijay+and+his+fans+observe+fast+over+Sri+Lankan+Tamils+issue+_3_.jpg

மீண்டும் மீள்பதிவு

Saturday, January 31, 2009

தருமியைப் பார்த்தால் உங்களுக்கு சிரிப்பு வருகிறதா...

திருவிளையாடல் படம் பார்த்திருக்கிறீர்களா.... (பார்க்காவிட்டால் இன்று பார்த்துவிடுங்கள்). அதில் இன்றும் மனம் கவர்ந்த பாத்திரம் எது என்று நினைத்துப் பாருங்கள். சந்தேகமே இல்லாமல் தருமியாகத்தான் இருக்கும். மற்ற பாத்திரங்கள் அந்த கதையில் ஈடுபாடு உள்ளவர்களையும் கதாநாயக நாயகிகளின் ரசிகர்களுக்கும் மட்டுமே பரிச்சமாயிருக்கும். ஆனால் தருமி எல்லோரையும் சென்றடைந்திருக்கும். அந்த பாத்திரத்தை நாகேஷ் அவர்களைத்தவிர வேறு யாரும் செய்திருந்தால் அப்படி ஒரு வெற்றி அடைந்திருக்குமா என்றால்......

அந்தப் பாத்திரத்தை மட்டும் பாருங்கள். ஒரு ஒப்புக்கு வரும் பத்தோடு பதினொன்றான பாத்திரம். பாட்டை வாங்குகிறார். சபையில் பாடி திரும்பிவருகிறார். வந்து நாயகனிடம் தருகிறார். அப்புறம் கதை அதன்போக்கில் செல்கிறது. இதில் ஒரு நகைச்சுவையாளனால் என்ன செய்து விட முடியும்? ஆனால் சாதித்திருக்கிறாரே....

அந்த பாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய சுவைதான் எத்தனை? அந்த பாத்திரத்தைப் பார்த்து நீங்கள் சிரித்திருந்தால் உங்களுக்கு இரும்பு மனம் என்றுதான் சொல்லவேண்டும்.

முதல் காட்சியில் பரிசுத்தொகையைக் கேட்டு ஏற்படும் பிரமிப்பு... அந்த பிரமிப்பே அடுத்த காட்சியில் அவலமாக மாறும் நிலை. ஒரு ஏழையின் புலம்பலாக மாறும். ஒட்டுமொத்த ஏழ்மையின் குரலாக மாறி ஒலிக்க வைத்திருப்பார். அடுத்த காட்சியில் மெத்த படித்த மேதாவியுடன் போட்டியிடும் சாதாரணனாக அனைவரின் பரிதாபத்தையும் பெறுவார்.

சரியோ.. தவறோ.. அந்தப் பாத்திரம் பரிசினைப் பெற வேண்டும் என்ற பரிதவிப்பினை அனைவர் மனதிலும் ஏற்படுத்தி இருப்பார்.


நான் பார்க்கறதுக்கு சாதாரணமாத்தான் இருப்பேன். ஆனால் என் புலமையைப் பத்தி உனக்குத்தெரியாது..

எனக்கு கேட்க மட்டும்தான் தெரியும்
...

கொஞ்சம் வசனநடையில் எழுதறேன். இருந்தாலும் புலவன்னு ஒத்துக்கறாங்க.....

எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைத்துக் கொள்ளுங்கள்
..

அங்க ஒருத்தன் இருக்கான். அவன் தான் உன்பாட்டை குற்றம் சொன்னான்.

பேசறதெல்லாம் பேசு. எழுதுபோது மட்டும் கோட்டை விட்டுறு.


இந்த வசனங்களையெல்லாம் வேறொருவர் எழுதி இருந்தாலும் அதை பேசும் தொனியில் ஆயிரம் அர்த்தங்களை தந்தவர். நாகேஷ்.

வசனங்களை விடுங்கள்.


கோவிலில் நுழைந்த உடன் பாடல் எழுதுவதறாக அவர் துடிக்கும் துடிப்பு.

தமிழ்சங்கத்தில் நுழைந்த உடன் மன்னன் யாரென தெரியாமல் அனைவருக்கும் வணக்கம் சொல்லும் பாங்கு.

மொழியில்லாமல் அனைவரின் மனதிலும் இடம்பிடிக்க முடியும் என்பதை நிரூபித்த பிறவிக் கலைஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

Sunday, January 25, 2009

எந்திரன் உங்களுக்காக ஒரு பழைய கதை

ஊழல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தனது முகங்களைக் காட்டி வளர்ந்துகொண்டே இருக்கிறது. கல்தோன்றி மண்தோன்றிய காலத்திலிருந்தே பல்வேறு விதமான மோசடிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அதனடிப்படையில் பல்வேறுவிதமான இலக்கியங்களும் இதிகாசங்களும் உருவாகிக்கொண்டேதான் இருக்கின்றன.

நவீன கால படைப்பாளிகளில் ஷங்கர் மிகவும் முக்கியமானவர். நாட்டில் நடக்கும் பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி மக்களை விழிப்புணர்வு கொண்டுவருவதில் ஷங்கரின் படங்களுக்கு தனி இடம் உண்டு. அதைப் போன்ற ஒரு கதைதான்


கம்ப்யூட்டர் ஊழலுக்குள் எந்திரன்.


முன்குறிப்பு: இந்தக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.


சிறுவன் ரஜினி கூட்டல் கணக்குப் போடுவதற்கு பாசிமணிகளை உபயோகப் படுத்துவதிலிருந்து படம் துவங்குகிறது. அடுத்த காட்சியில் எல்லோரும் வாய்ப்பாடு உபயோகப் படுத்தும் போது சிறுவன் ரஜினி கால்குலேட்டர் உபயோகப் படுத்துகிறார்.

கல்லூரிக்குச் செல்லும்போது பைக் ஓட்டுவதற்கு நவீன சாதனம் ஒன்றை உபயோகப் படுத்துகிறார். தனியாக ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி துவக்குகிறார். அப்போது கார் ஓட்ட தனி சாதனம் ஒன்றை உபயோகப் படுத்துகிறார். அதில் பல்வேறு நவீன வசதிகளை வைத்திருக்கிறார். ஒரு சூப்பர் கம்ப்யூட்டராக அதை உருவாக்கி உபயோகப் படுத்துகிறார். ஆட்டோ அப்டேட் வசதியை உருவாக்கி வைக்கிறார்.

அவரது கம்ப்யூட்டர் கம்பெனி உலக அளவில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கிறது. உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு ஊர்களை தேர்ந்தெடுத்து தன் சொந்த செலவில் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கிறார். உலக மக்கள் அனைவரும் ரஜினிகாருவை புகழ்ந்து விழா எடுக்கிறார்கள்.
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா"
பழைய பாட்டை ரீமிக்ஸ் போட்டு ஆடுகிறார்கள்.

பாட்டு முடிந்ததும் ரஜினிகாரு கைதுசெய்யப் படுகிறார். அவர்மீது சரமாறியாக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன. கழிப்பிடம் கட்ட குழிதோண்டியதில் கிடைத்த மண்ணை நாடுவிட்டு நாடுதாண்டி கொட்டியதாக கணக்குக் காட்டி பலகோடி ரூபாய்கள் வருமான வரி ஏய்ப்பு செய்த்தாக குற்றம் சாட்டப் படுகிறது. அவர் கைது செய்யப் பட்டதால் அவரது கம்பெனியின் ஷேர் மதிப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. அதனால் அப்பாவி கிராமத்து மாணவர்கள் பொங்கி எழுகிறார்கள்.

ரஜினியின் வீட்டை சூறையாடுகிறார்கள். அவரது தானியங்கி சூப்பர் கம்ப்யூட்டர் சாதனம் தூக்கி குப்பை வண்டிக்குள் போடப் படுகிறது. குப்பை வண்டியில் போகும் சாதனம் ஆட்டோ அப்டேட் ஆகிறது. மனித உருவத்தைப் பெருகிறது. குப்பை வண்டிக்குள் இருந்து ரஜினியைப் போலவே உருவ அமைப்பைக் கொண்ட எந்திரன் வெளியே வருகிறார். ( ஜீன்ஸ் படத்தைவிட அற்புதமாக வரவேண்டும் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் அனிமேசன் காட்சிகள் அமெரிக்காவில் உள்ள நானோஹார்டு கம்பெனியில் செய்து வருகிறார்கள். இவர்கள் பில்கேட்ஸுடன் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

எந்திரன் ரஜினி வெளியே வந்தவுடன் துப்பறியும் பணியில் ஈடுபடுகிறார். பிபாசா பாசுவின் நடனம் பார்ப்பதற்காக ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறார். அங்கே அவருக்கு ஒரு உண்மை தெரிகிறது.

அமெரிக்க ஜனாதிபதியின் தூண்டுதல் காரணமாக இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்ற உண்மையை அவர் கண்டறிந்த உடனேயே பிபாசா கடத்தப் படுகிறார். பிபாசாவைப் பின் தொடர்ந்து எந்திரன் செல்கிறார். பிபாசாவை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று அமெரிக்க ஜனாதிபதிமுன் நிறுத்துகிறார்கள். ( அமெரிக்க ஜனாதிபதி பாத்திரம் தமிழ்திரையில் வருவது இந்த ஆண்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது).

அங்கே பிபாசா மீண்டும் நடணம் ஆடுகிறார். அந்த நடனத்தைக் காண அவரின் பால்ய நண்பர்களும் வருகிறார்கள். அவர்களைப் பார்த்த எந்திரன் அதிர்ச்சியடைகிறார். அவர்களில் ஒருவர் வினுசர்க்கரவர்த்தி. கதையில் அடுத்த திருப்பம் வருகிறது.

..........................................................................................................

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ரஜினி கல்லூரியில் படித்துவருகிறார். உலக அளவில் நடக்கும் அறிவியல் வினாடிவினால் வெற்றி பெற்றுவிட்டு விமானத்தில் வருகிறார். அப்போது ஒருபெண் அவரைப் பார்த்த உடன் காதல் கொண்டு பாட்டு பாடுகிறார். ரஜினியிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார்.
நான் தான் மிஸ். வேர்ல்டு.
என்பதைக் கேட்ட ரஜினி தனக்கே உரிய சிரிப்பை உதிர்த்துவிட்டு திரும்பி விடுகிறார். ரஜினி படிக்கும் கல்லூரிக்கு வேலைக்கு சேர்ந்து விடுகிறார் ஐஸ்வர்யா . ரஜினியை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

பணம் அதிகமாய் இருந்தால் ராத்திரி தூக்கம் வராது
பொண்டாட்டி
அழகாயிருந்தால்

எப்போமே தூக்கம் வராது
என்று சொல்லிவிட்டு தன் மாமன் மகளை திருமணம் செய்து கொள்கிறார். கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் துவக்கி உலக அளவில் பெரிய தொழிலதிபர் ஆகிறார். அவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர் மனைவி சமைத்துக் கொடுத்த உணவையே சாப்பிடுகிறார்.

ரஜினி திருமணம் செய்து கொள்ளமுடியாத ஐஸ்வர்யா கிராமத்தில் போய் தவம் செய்யத்தொடங்குகிறார்.

..................................................................................................

ஐஸ்வர்யாவின் தந்தைதான் வினுசர்க்கரவர்த்தி. தன் மகள் சாமியார் ஆக காரணமாய் இருந்த ரஜினியைப் பழிவாங்க தனது பால்ய நண்பன் அமெரிக்க ஜனாதிபதியை அனுகிறார். அவரது செல்வாக்கினைப் பயன்படுத்தி ரஜினியின் கம்ப்யூட்டர் கம்பெனியில் பல ஊழல் குற்றச் சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைக்கிறார்கள்'

அமெரிக்க ஜனாதிபதியை தனியே சந்தித்த எந்திரன் நடந்த உண்மைகளைச் சொல்ல ஜனாதிபதி திருந்திவிடுகிறார். ரஜினியைக் கொல்ல வினுச் சர்க்கரவர்த்தி ஆட்களை அனுப்புகிறார். அவரைக் காப்பாற்ற எந்திரன் பறந்து வருகிறார். வான் வழியிலேயே அவரைத்தடுக்க முயற்சிகள் நடக்கின்றன். பலத்த சண்டைக்குப் பின்னர் முதலாளி ரஜினியும் எந்திரன் ரஜினியும் ஐஸ்வர்யாவின் கிராமத்திற்கு செல்கின்றனர். சண்டை நடக்கிறது. ஐஸ்வர்யா தவம் கலைந்து எழுந்து விடுகிறார். ரஜினியைப் பார்த்து
இன்னும்
கல்லூரி மாணவன் மாதிரித்தான் இருக்கறீங்க
என்று சொல்கிறார். அதற்கு ரஜினி
நீ 94ல தான் மிஸ். வேர்ல்டு

நான் எப்பவுமே மிஸ்டர். வேர்ல்டு


என்று கூறுகிறார். மனம் திருந்திய ஐஸ்வர்யா ரஜினி ரசிகர் மன்றத்தில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பிக்கிறார்.

சத்தியமே லட்சியமாய் கொள்ளலடா
பாட்டுடன் கதை நிறைவடைகிறது.

Friday, January 16, 2009

விரக தாபத்தில்.... ஓர் உலக சினிமா

இப்பொழுதெல்லாம் நமது திரைப்படங்கள் உலக மக்கள் அனைவரின் பார்வைக்கும் செல்கின்றன. குறைந்தபட்சம் உலகத்தமிழ் மக்களின் சந்தைக்கு வருகிறது. சில நேரங்கள் மக்களின் ரசனை என்பதும் வியாபாரம் என்பதும் வேறு வேறு பாதையில் சென்று விடுகிறது. உலக சினிமா கலைஞர்கள் பல்வேறு விருதுகள் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏதோ நமக்குத் தெரிந்த சில நுடபங்களை சொல்லிக் கொடுத்து நம் மக்களை விருதுகள் வாங்கி குவிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த இடுகை துவங்கப் படுகிறது. உங்கள் அனைவரின் ஒட்டு மொத்த ஆலோசனைகளைப் பெற்று தமிழ் படத்துக்கு ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வாங்கி குவிக்க வேண்டும் என்பதே நமது லட்சியம்.


ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பதே அதன் கதையின் காலடியில்தான் இருக்கிறதாம். அதனால் நல்ல கதை வேண்டும். தமிழ் படம் எடுப்பதால் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பிற்போக்கான கிராமத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். அங்கே இருக்கும் மூட நம்பிக்கைகள், மது மாது இன்னபிற பழக்கங்களை கதையின் அடிநாதமாக கொண்டிருக்க வேண்டும். அதன் தீமைகளைப் பற்றியும் திருத்துவதைப் பற்றியும் படம் எடுத்து விடக் கூடாது. அப்படி எடுத்து விட்டால் இயல்புக்கு மீறிய (லாஜிக் இல்லாத) படமாகக் கருதி நிராகரிக்க படும்.


விதவைகளைப் பற்றி ப்டம் எடுத்தால் அவர்கள் விரகதாபத்தால் வேதனைப் படுவதையும் குடும்பத்தார் அவர்களை கொடுமைப் படுத்துவதையும் எடுக்கவேண்டும். குடும்பத்தார் ஆதரவுடன் கடுமையாக உழைத்து குடுப்பத்தை முன்னேற்றுவதாக எடுத்தால் அது வெறும் வியாபார ரீதியான படமாகவே கருதப் படும். தவிரவும் மேலை நாட்டினர் நம்மை இவ்வளவு நல்லவர்களாகவே ஒத்துக் கொள்ளமாட்டார்கள். மது, மாது குடிப்பதை எதிர்க்கும் மனிதர்கள் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலேயே கிடையாது என்ற கருத்துடந்தான் இந்தப் படங்களைப் பார்ப்பார்கள்.
கற்பினைக் காப்பாற்றுவதற்காக பல நாள் பட்டினி என்று படம் எடுத்தால் கொஞ்சமும் நம்பும் படி இல்லை என்று நிராகரித்து விடுவார்கள்.

முதியவர்களை ஒதுக்கித்தள்ளுவது போலவும் அவர்களை கொடுமைப் படுத்துவது போலவும் படம் எடுக்கவேண்டும் அவர்களுக்கு ஆதரவு தரவும் ஆள் இருக்கிறது என்பது படம் எடுப்பது தவிர்க்கப் படவேண்டும்.


பல ஆண்டுகளாக ஒரே ஆளை ஒருதலையாய் காதலிப்பது அதை உள்ளே வைத்துக் கொண்டு உருகுவது எல்லாம் பூ.... போன நூற்றாண்டிலேயே முரளி செய்துவிட்டார் என ஒதுக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது.


கதாநாயகியை கொலை செய்வது என்று முடிவு செய்தால் ஒரு கத்திக்குத்து, தோட்டா உபயோகப் படுத்துவது உலகத்தரம் வாய்ந்த தமிழ் அல்லது இந்திய சினிமாவுக்கு அழகல்ல. கற்பழித்துதான் கொலை செய்யப் படவேண்டும். பலரும் சேர்ந்து கற்பழித்தால் அறிவுஜீவிகளால் பாராட்டப் படும் வாய்ப்பு இருக்கிறது.


குழந்தைகள் பிச்சை எடுப்பது அவர்களை அடித்து கையைகாலை உடைத்து பிச்சை எடுக்க வைப்பது போன்ற நெஞ்சைக் கண்க்கவைக்கும் காட்சிகள் இருந்தால் கூடுதல் மரியாதை கிடைக்கும்.

குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் ஆண்மகன் பாத்திரமே படத்தில் இல்லாமல் இருப்பது கூடுதல் மதிப்பெண் தரும்.

ரத்தம் சிந்திக்கொண்டே இருப்பது , நிர்வாணமாகத்தோண்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றே தீர வேண்டும்.

நிற்பது, நடப்பது, உட்கார்வது, கதவைத்திறப்பது போன்ற காட்சிகள் மிக இயல்பாக எடுக்கப் படவேண்டும். கதவைதிறக்காமல் வீட்டுள் நுழையும் லாஜிக் இல்லாத படங்கள் நிராகரிக்கப் படும்.

நாயகனோ, நாயகியோ மோசமான குணமுடையவர்களாகக் காட்டுதல் நலம். கடைசியில் கொடுமையான முறையில் பிரிவது இன்னும் நலம்.

இதெல்லாம் உலகத்தரம் வாய்ந்த படங்களுக்கான யோசனைகள். உங்களுக்கு தோன்றுவதை நீங்களும் சொல்லுங்கள்.

Thursday, January 15, 2009

நான் பார்த்த படிக்காதவன்

படிக்காதவன் இளம்பருவத்தில் வரும் ரசிகர்களை ஏமாற்றாத படம். முதல் காட்சியிலேயே இரத்தச் சிவப்பினை குளோசப் காட்ட்சியில் காட்டி பயமுறுத்துகின்றனர். அடுத்த காட்சியிலேயே அதனை தக்காலியாக மாற்றி விடுகிறார்கள். டைட்டில் சாங் அற்புதமாக அமைந்திருக்கிறது.

பின்னே சிவாஜிகணேசன் m.p.பாடும் பாட்டென்றால் சும்மாவா.... ஒரு கூட்டுக் குயிலாக... மலேசியா வாசுதேவன் குரலில் பட்டையைக் கிளப்பி இருப்பார். குழந்தைகளாக சூப்பர் தம்பிகள். பாட்டு முடிந்ததும் தேர்வெழுத அவ்ளோ பெரிய சிவாஜி தன்னோட சின்னத்தம்பிகளை அண்ணியிடம் விட்டு விட்டு செல்கிறார்.
அண்ணியின் சொற்கள் தாங்காமல் தம்பிகள் வீட்டைவிட்டு கிளம்பிவிடுகிறார்கள்.

இந்தப் படத்தை முன்னமே பார்த்த காரணத்தாலேயே வெள்ளைச்சாமி அண்ணன் தன் தம்பிகளை அண்ணியிடமிருந்து காப்பாற்றிவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. (வானத்தைப் போல).

மூட்டை தூக்கியாவது தம்பிக்கு ரொட்டி வாங்கி கொடுக்கும் உன்னதமான பாத்திரம் சூப்பர் ஸ்டாருக்கு. பின்னி பெடல் எடுப்பார்.

தப்பி வந்த தம்பிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் தந்தையாக நாகேஷ். அவரது மகனும், மக்ளும் சூப்பர் அவர்களை அண்ணா என்றே அழைக்கிறார்கள்.

சூப்பர் ஒரு கார் வைத்திருப்பார். அதில் யாராவது போதைப் பொருளுடன் ஏறினால் ஸ்டார்ட் ஆகாது. சிவப்பு விளக்கு எறியும். வயிற்றீல் இருந்தால் கூட எறியும். லக்ஷ்மி ஸ்டார்ட்.. சூப்பர் சொல்லும் வசனம்.. நாங்கள் சைக்கிள் எடுக்கும் போது சொல்வது வழக்கமாய் மாறியது.

காரோட்டியாக மாறி தம்பியை காலேஜில் படிக்கவைக்கிறார். தம்பியின் கல்லூரியை விட்டு வரும்போது சட்டை, பேண்ட், கோட் என எல்லா பாக்கெட்டுகளில் இருந்து பணம் கொடுப்பார். கண்கலங்குவார். தனது புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை போன்ற படங்களுக்குப் பின் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம்.

தம்பியின் காதலியாக மனைவியாக நீலாம்பரி வருவார். தம்பியை பணக்கார வீட்டு மாப்பிள்ளையாக கேட்கும்போது சுயமரியாதைபேசிவிட்டு தம்ம்பியின் எண்ணம் தெரிந்தபின் திரும்பவும் போய் சம்பந்தம் பேசுவது, தம்பி பாஸ் என்று தெரிந்த பின் குதியாட்டம் போடுவது.. பின்னர் போலி எண்ணை கொடுத்தி ஏமாற்றிவிட்டார் என தெரிந்தபின் தம்பியிடம் போய் நியாயம் பேசுவது,, பின்னர் தம்பியிடம் மூக்குடை பட்டு திரும்பி வருவது என சூப்பர் அசத்துவார்.

தம்பியிடம் அவமானப்பட்டுத்திரும்பி தண்ணியடிக்கச் செலவது, அங்கே அம்பிகாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு பாடும் பாட்டு இன்னும்கூட கல்லூரிகளில் மாணவர்கலால் பாடப் படுகிறதாம் (காரணம் வேறு).

பின்னர் அதே தம்பி சின்ன மாமனாரால் ஏமாற்றப் பட்டு திரும்ப அவர் வீட்டுக்கு திருமபச் செல்ல அங்கே கொலைக் குற்றம் சாட்டப் பட நீதி மன்றத்தில் நிறுத்தப் படுகிறார். அங்கே நீதிபதியாக பெரியண்ணன்.

பெரிய அண்ணனை முதலிலேயே சூப்பர் பார்த்து விடுகிறார். அவர் முன்னிலையில்தான் தம்பிக்கு திருமணமே செய்து வைக்கிறார்.

குற்றவாளியின் பேர் ஊர் கேட்டவுடன் பெரிய அண்ணன் தெரிந்து கொண்டவுடன் கண் கலங்கி மீண்டும் வக்கீலாக மாறுகிறார். கோர்ட் காட்சிகளுக்கு இங்கே கிளிக் செய்யவும். ஃபோட்டோவில் இருக்கும் நின்று போன வாட்சைவைத்து உண்மை கொலை குற்றவாளிகளை கண்டறிகிறார்.


கடைசியில் சூப்பர் சண்டை போடாவிட்டால் படம் ஓடுமா.. என்ற சந்தேகம் போல .. ஒரு துரத்தல் சண்டை போட்டு வில்லன் ஜேம்ஸ் பாண்டை பிடித்துக் கொடுக்க அண்ணியும் திருந்த சுபம்.


யப்பா... எவ்ளோ பெரிய கதை. இதுல அம்பிகா.. நாகேஷ். அவர்தம் பிள்ளைகள், வில்லன் செயல்பாடுகள் பத்தி வேற எதுவும் எழுதுல..............

எத்தனை படம் எடுத்திருக்கலாம். ஒரே படத்தில் வைத்துவிட்டார்கள்.

Monday, January 12, 2009

அவசரத்தில் முளைத்த புல்லு

இது கொஞ்சம் அவசரமா எழுதும் பதிவு. நமது வலைஞர்களின் பதிவுகளை படித்துக் கொண்டிருந்தபோது உடனடியாக எழுதத்தோன்றியது.

இது நான் எப்போதோ பார்த்த படம் ..


தந்தை ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றுவார். அவரது கூட்டாளிகள் கெட்டவர்கள்.. அவர்கள் எதிரி நாட்டுக்கு ரகசியங்களை விற்கும்போது மேஜர் தமிழ்மணி பார்த்து விடுவார். அப்போது அவரை கொண்றுவிட்டு அவரை தேசத்துரோகி ஆக்கிவிடுவார்கள். தேசத்துரோகக்குற்றம் சாட்டப் பட்டதால் அவரது வீட்டை சூறையாடி விடுகிறார்கள். மகன் வளர்ந்து பெரியவர் ஆக வளர்கிறார்.

அவருக்கு பழைய கதை தெரிகிறது. தந்தை கூட்டாளி எதிரிகளை தேடுகிறார். ஒருவர் முக்கிய அரசியல் கட்சி தலைவராகவும் ஒருவர் பெரிய தொழிலதிபராகவும் இருக்கிறார். என்னவொரு ஒற்றுமை என்றால் அதில் ஒருவர் ராஜூகாரு மாதிரியே இருப்பார். அவரை பின்னி பெடலெடுப்பார் ஆனந்த்.
இது தாய்நாடு திரைப் படத்தின் கதைசுருக்கம். சத்தியராஜ் இரட்டை வேடத்திலும் ராதிகா, ஸ்ரீவித்யா, நம்பியார், இளவரசன் ஆகியோர் நடித்திருப்பார்கள்.


இதேபோல் ஒரு படம் வந்திருக்கிறதாம். அதை இந்திப் படத்தின் ரீமேக் என்று சொல்கிறார்களாம். நம்பாதீர்கள். அது முழுக்க நமது தமிழனுக்கே சேர வேண்டிய பெருமை.

பொங்கல் கொண்டாடும் வீரம்மிக்க தமிழ் இளைஞர்களே..

தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன். தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களுக்கும் உணவு வழங்கிக் கொண்டிருக்கிற பஞ்ச பூதங்களுக்கும் நன்றி சொல்லத் தொடங்கிவிட்டனர். தமிழனின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுகளும் நடத்தப் படப் போகின்றன்.

தமிழன் மறந்துபோன தமிழனின் வீர விளையாட்டு ஒன்று இருக்கிறது. அதுதான் இளவட்டக் கல் தூக்குவது. நினைவு படுத்துவதற்கு சில உதாரணங்கள்.
1. முதல்மரியாதை படத்தில் சிவாஜி தூக்குவார். நினைவுபடுத்திப் பாருங்கள். அதற்கு சிறப்பு தீம் மியூசிக் கூட சேர்த்திருப்பார்கள்.
2.விரும்புகிறேன் படத்தில் பிரசாந்த் தூக்குவார்.

இதையும் மீறி ஞாபகம் வராதவற்களுக்கு சிறிய விளக்கம்.. ஊரின் ஒரு முக்கிய இடத்தில் ஒரு பெரிய கல் இருக்கும். அந்தக் கல்லை தூக்கும் சக்திபடைத்தவனுக்கு மட்டுமே திருமணம் செய்யும் தகுதி இருப்பதாக நினைத்தார்கள். எடைக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

இன்று கூட கிராமம்தோறும் அந்தக் கல்லை நிறுவலாம். அதில் சிலநிலைகளைக் கூட கொண்டுவரலாம். கொஞ்சம் கொஞ்சமாக எடைகளை அதிகரிக்கலாம். அதைத்தூக்கும் இளைஞர்களுக்கு ஒரு கவுரவம் கூட கிடைக்கும். மற்ற விளையாட்டுகளைவிட ஆபத்து குறைவு. அதே நேரத்தில் வலிமையை நிரூபிக்கும் வாய்ப்பும் அதிகம். செலவும் குறைவு.

இதனால் யாருக்கும் எந்தவிதமான உடல் உயிர் பாதிப்புகளும் கிடையாது. கவுரவமும் கிடைக்கும்.

எனவே தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழனின் மானம் காக்கவும் தனது வலிமையை நிரூபிக்கவும், மறைந்துவரும் நமது வீரவிளையாட்டாம் இளவட்டக் கல் தூக்குவதை ஊருக்கு ஊர் தெருவுக்கும் தெரு நிறுவ வேண்டும்.

Thursday, January 8, 2009

பட்டிக் காட்டான் தலையில் மிளகாய் அரைக்கிறார்களா...

இதனைப் படிக்க ஆரம்பிக்கும் முன் நீங்கள் ஒரு உண்மையை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள். எனக்கு முதலீடுகள் பற்றியோ பங்கு வர்த்தகம் பற்றியோ எதுவும் தெரியாது. ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரி குடிமகன் எப்படியெல்லாம் நினைத்து கொண்டிருப்பானோ அவ்வளவுதான் எனக்கும் தெரியும். (உண்மையில் நான் பிறந்தது, படித்தது இப்போது பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதும் அதே குக்கிராமத்தில்தான் கல்லூரி படிப்பு மட்டும் கோவையில் )


கல்லூரி பேராசிரியர் ஒரு அறிவுரை சொல்லியிருந்தார். சம்பாதிக்கும் பணத்தை பூட்டி வைத்துக் கொண்டிருப்பதற்கு அந்தப் பணத்தை சம்பாதிக்கலாமலே இருக்கலாம் என்று கூறுவார். அவரது அறிவுரைகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். உதாரணமாக நம்மிடம் வேலை செய்யும் ஒருவருக்கு வேலை தெரியவில்லை என்றால் அவருக்கு நாம் சொல்லிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். கழிப்பிடம் சுத்தம் செய்பவருக்கு சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் அவருக்கு சொல்லித்தரும் அளவுக்கு நாம் வேலை தெரிந்திருக்க வேண்டுமாம். அப்போதுதான் ஒரு அமைப்பை நிறுவி நடத்தமுடியுமாம்.

பணி செய்யும் இடத்தில் நிறைய பேர் வருகிறார். நீட்டும் இடத்தில் மட்டும் கையெழுத்துப் போடுங்கள். பங்கு மார்க்கெட் போகும் வேகத்தில் ஒரே நாளில் உங்களுக்கு இவ்வளவு லாபம் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். சிறு நகரத்திற்கு{கிராமத்திற்கு தொடர்புடைய நகரம். அவ்வளவுதான் மற்றபடி அங்கு போவதுகூட ஒரு சுற்றுலா போவது மாதிரியான நிலைதான்} அவர்கள் சொல்லும் வார்த்தைகள்தான் வேதவாக்கு. கரும்பு விற்ற காசுகளைக்கூட சிலர் கொடுத்து வந்தனர். என்னைப் போன்ற சிலருக்கு இணையம் மூலம் வர்த்தகம் முதலீடு என்பதே புரியாத நிலையில் இருந்தது.

சில காகிதங்களைக் காட்டி இதன் மதிப்பு ஒரு லட்சம் என்றார்கள். சில நாட்கள் கழித்து ஒன்றரை லட்சம் என்றார்கள். திடீரென வர்த்தகம் வீழ்ச்சி அதனால் அதன் மதிப்பு 75ஆயிரம் என்கிறார்கள். நமக்கு தேவைப் படும்போது பணமாக்கலாம் என்றால் முடியாதாம் நல்ல நிலையில் இருக்கும்போது விற்றால்தான் லாபமாம். கண்ட நேரத்தில் விற்றால் நட்டமாம். இப்படி சிலருக்கு அனுபவம். இதில் எத்தனை அவர்களுக்கு ஏற்பட்டதோ.. எத்தனை அவர்களாகவே சேர்த்துக் கொண்டதோ தெரியவில்லை.


நேற்று 170 ரூபாயாக இருந்த காகிதம் இன்று 30 ரூபாயாக மாறியிருக்கிறது. நேற்றும் அதை உபயோகப் படுத்தி ஒரு கடலை மிட்டாயும் வாங்க முடியாது. இன்றும் வாங்க முடியாது. உபயோகமாகாத பணம் எந்தப் பேரில் எந்த மதிப்பில் இருந்தால் என்ன.... வர்த்தகர்களுக்கு வேண்டுமானால் பங்கு வர்த்தகம் பட்டையைக் கிளப்பலாம். எங்களுக்கு பட்டைதான் போடும்.



அடுத்ததாக சோப்பு, பேஸ்ட், பவுடர் விற்பது... ஒரு பேஸ்ட், டூத் பேஸ்ட்தான் 75ரூபாயாம். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உங்களுக்கு இவ்வளவு லாபம் வரும் என்கிறார்கள். மக்களை சேர்த்து கொண்டே போனால் நம் காட்டில் பண மழை பொழியுமாமே. என்னைச் சந்தித்த ஒருவர், இனிமேல் எந்த வேலையுமே செய்யாவிட்டாலுமே மாதம் ஒரு லகரம் வருமாம். கம்பனியில் ஊக்கப் படுத்தி கார், வெளிநாட்டுச் சுற்றுலா எல்லாம் கூட்டிப் போகிறார்களாம். அது எப்படி ஒரு வேலையும் செய்யாதவருக்கு ஒரு லகரம் ஊதியம் தருவார்கள்.. அதற்கும் அவர் விளக்கம் கொடுக்கிறார். இதுவரையில் அவர் செய்த வேலைக்காக நிறுவனமே கொடுக்கும் ஊக்கத்தொகையாம். அவர் சேர்த்து விட்டவர்கள் முதலீடு செய்ய செய்ய இவருக்கு ஒரு பங்கு ஊக்கத்தொகையாக க் கிடைக்குமாம். இப்படியே நிறையப் பேருக்கு ஊக்கத்தொகை கொடுத்தால் உண்மையில் எவ்வளவுதான் உண்மையான முதலீடு? இவ்வளவு கமிஷன் போனால் அந்த பவுடர், பேஸ்ட்டின் உண்மையான விலைதான் என்ன..? இவர்கள் நேரடி மார்க்கெட்டில் நுழைந்தால் அதன் விற்பனை விலைகள் என்னவாக இருக்கும்..? இவர்கள் பொருடகளை விற்பதற்காக கூட்டம் சேர்க்கிறார்களா.. அல்லது அதன் போர்வையில் முதலீடுகளை சேர்க்கிறார்களா... அல்லது மூட்டைக் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்களா....

இத்தனை பேருக்கு கொடுக்கும் ஊக்கத்தொகை புதிய சேர்ர்க்கையாளர்களுடையது என்றால் அந்தப் பணம் கமிஷன் கொடுக்க போதுமானதாக இருக்குமா. ... அப்படியென்றால் எதுதான் முதலீடு?


இதெற்கெல்லாம் எனக்கு மட்டுமல்ல... பலருக்கும் பதில் தெரியாமல்தான் சுற்றிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் பதில் சொல்லுவது போல் ஏதாவது பதிவுகள் இருந்தால் அதன் லிங்க் களைக் கொடுங்களேன்..

பின் குறிப்பு:-

மல்டி லெவல் மார்க்கெட்டிங், ஷேர் மார்க்கெட், இன்னும் பல முதலீடு செய்ய என்னை அனுகியவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தில் எழுதியவை. மற்றபடி இதனால் யாருக்காவது மன வருத்தம் இருந்தால் பொருத்தருளுங்கள்.

இது ஒரு மீள்பதிவு

Wednesday, January 7, 2009

மின்னணு உதவியுடன் நடந்த சாப்பாட்டுப் போட்டி.

கல்லூரியில் ஆண்கள் விடுதி பரபரப்பாக இருந்தது. இந்தவார இறுதியில் விடுதி தினம் கொண்டாடப் போகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளில் எல்லோரும் முழுவீச்சில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். சிலர் கொண்டாடவே ஆரம்பித்திருந்தனர். அன்றைய தினம் விடுதியில் இட்லிசாப்பிடும் போட்டி நடப்பதாக இருந்தது.


போட்டிக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. ஒவ்வொரு குழுவிலும் இருவர். அவர்களுக்கு 25 இட்லிகள் கொடுக்கப் படும். அதனை வேகமாக சாப்பிட்டு முடிப்பவர் வென்றவராக அறிவிக்கப் படுவார். விடுதி சமையலறையில் அதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுவந்தன. மாலை 7மணியளவில்பெயர் கொடுத்தவர்களை பார்த்தபோது ஏறக்குறைய 30அணியினர் இருந்தனர். விடுதி சமையலறையில் ஒரே நேரத்தில் 500 இட்லிகள் மட்டுமே தயார் செய்யும்வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரண்டுமுறை சமையல் செய்து போட்டி நடத்தலாம் என்றால் ஆறிய இடலி, சூடான இட்லி பாகுபாடு வருமே.. ஒரு சுற்றுக்கும் மற்றொரு சுற்றுக்கும் நடுவே அரைமணிநேரம் இடைவெளி கிடைக்கும்


போட்டி நடத்துபவர்கள் தங்கள் மூளையை கண்டபடி கசக்கி ஒருவழியைக் கண்டுபிடித்தனர். முதல்முறை இட்லி எடுத்தவுடன் முதல் சுற்றினை நடத்துவது ஒவ்வொருவரின் நேரத்தையை குறித்துக் கொள்வது. பின்னர் இரண்டாம் முறை நடத்துவது . அதில் போட்டியாளர்களின் நேரங்களை குறித்துக் கொள்வது ,, குறைவான நேரத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களை வெற்றியாளர்களாக அறிவிப்பது என முடிவானது. அனைத்து ஆண்டு மாணவர்கள் பிரதிநிதிகளும் ஒத்துக் கொண்டணர்.

முதல் சுற்றில் இறுதிஆண்டு-இளைஞர்பிரிவில் இருந்த எம்ஜியார்-சிவாஜி ஜோடி நான்கு நிமிடங்களுக்கு சில வினாடிகள் குறைவான நேரத்தில் 25 இட்லிகளையும் சாப்பிட்டுவிட்டனர். மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அஜித்-விஜய் ஆகியோர் நான்குநிமிடங்கள் மற்றும் சிலவினாடிகள் எடுத்துக் கொண்டனர். மற்றவர்கள் எல்லோருமே 5நிமிடங்களுக்கு மேலே எடுத்துக் கொண்டனர்.


அஜித்-விஜய் ஜோடிக்கு பயங்கர ஃபீலிங்ஸ். பின்னே.. சில வினாடிகளில் முதலிடம் பறிபோனது மனதை உலுக்கும் செய்திதானே.. அவர்களுக்கு அதிக நேரம் செலவானதன் காரணங்கள் நண்பர்களால் ஆராயப் பட்டது. உடனடியாக அவர்கள் அடுத்த முடிவு எடுத்தனர். அது
அவர்கள் அடுத்த சுற்றிலும் கலந்து கொள்ள முடிவு செய்தனர்..
ஏற்கனவே 25 இட்லிகளை சாப்பிட்டவர்கள் மீண்டும் 25 இடலி சாப்பிட உட்கார்ந்தால் அதிர்ச்சியாக இருக்காதா..

அந்த அதிச்சியிலேயே அவர்கள் கலந்து கொள்வதை மற்றவர்கள் எதிர்க்கவில்லை. அவர்களும் உட்கார்ந்தனர். சாப்பிட்டனர். ஆனால் இந்தச் சுற்றில் அவர்கள் ஏறக்குறைய நான்கு நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தனர். அதாவது இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை அவர்கள் கைப்பற்றினர்.


அவர்கள் முதலிடம் பெறாவிட்டாலும் அவர்களது இந்த பெர்ஃபாமன்ஸ் பார்த்து விடுதியே அதிர்ந்துதான் போனது.

பின்குறிப்பு:-
1..50 இட்லிகளை சாப்பிட்டுவிட்டு தாகசாந்திக்கு வேறு கொஞ்சம் குளிர்பானம் குடித்தனர்.
2.. போட்டியின்போது எலக்ட்ரானிக் வாட்ச் உபயோகப் படுத்தப் பட்டது. தமிழில் மின்னணு கடிகாரம்.

===========================================

இது ஒரு மீள்பதிவு, வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் வருவதற்கு வெகுநாட்கள் முன்பே (7-1-1009) எழுதப்பட்டது.

Monday, January 5, 2009

கோழையா? அஹிம்சாவாதியா? பொறுமைசாலியா?

கத்தியின்றி இரத்தம் இன்றி போராடும் முறை என்று அஹிம்சை முறயைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அஹிம்சை என்பது முற்றிலும் வேறு பட்ட ஒன்று.

அதில் ரத்தம் அளவே இல்லாமல் சிந்தப் பட்டிருக்கிறது. இந்திய சுதந்திரப் போரிலேயே எத்தனையோ தியாகிகள் தங்கள் இரத்தத்தையும், இன்னுயிரையும் தந்திருக்கின்றனர். அவர்கள் சிந்திய இரத்தத்தைப் பார்த்து அதிகாரம் கொண்டிருப்பவர்கள் தங்கள் மனசாட்ட்சியால் ஹிம்சை செய்யப் பட்டு நரக வேதனை அடைந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்குமாறு கட்டாயப் படுத்தப் பட்டனர். மீண்டும் ஒருமுறை யோசித்துப் பாருங்கள். அஹிம்சை என்பது கத்தியும் ரத்தமும் இன்றி போராடும் முறையா...? இரத்தம் சிந்துவதைப் பற்றி கவலையே படாத லட்சிய வாதிகளின் போராட்டமுறையா...?



ஆயுதம் எடுத்துப் போராடுவதற்கு வெறும் உடல்வலிமை மட்டும் போதும். ஆயுத வீரர்களுக்கு வழி நடத்த கொஞ்சம் போர்தந்திரங்கள் தெரிந்தால் போதும். ஆனால் அஹிம்சை முறையில் போரிடுவதற்கு வன்முறையைத்தாங்கும் உடல் வலிமையும், மன வலிமையும் மிகமிக அவசியம். அவமானங்களைத் தாங்கும் உள்ளத்தெளிவும் அவசியம். அந்த அளவு உடல் வலிமையும் மன வலிமையும் உள்ளத்தெளிவும் இல்லாதவர்கள் அஹிம்சை முறையைப் பின் பற்றுவதற்கே தகுதி இல்லாதவர்களாக மாறிவிடுகிறார்கள்.


பாட்ஷா படத்தில் பாட்ஷாவை கட்டி வைத்து அடிப்பார்கள். ஆனால் பாட்ஷா மிக அமைதியாக சிரித்துக் கொண்டு இருப்பார். காந்தி, யேசு போன்றோரையெல்லாம் உவமைப் படுத்துப் பாடுவார்கள். அந்தப் பாட்டிற்கு முன் பாட்ஷா தம்பிக்காக கெஞ்சுவார். அவரை கட்டி வைக்க அழைத்துச் செல்லப் படும்போது கொதித்தெழும் கூட்டாளிகளை ஒரு விரல் அசைவில் நிறுத்தி வைப்பார். அடிக்கப் படும்போது கூட வலியைத்தாங்கி கொண்டு சிரிப்பார். அடி வாங்கி ஓய்ந்த பிற்கு கூட வலியுடன் சிரிப்பார். அனைத்து அடிகளையும் வாங்கிக் கொண்டு நிற்கும் வல்லமை படைத்தவராக நாயகனைக் காட்டுவார்கள்.

கீழே உள்ள காட்சியில் 3நிமிடம் கழித்து வருகிறது, மேற்கண்ட காட்சிகள்



அப்படி அமைதியாக பொறுமை காத்தவர் பொங்கி எழும் காட்சியை கீழே பாருங்கள்



அஹிம்சையை பின்பற்ற நினைப்பவர்களின் அடிப்படைத்தகுதிகளை மிக அழகாக பாட்ஷா படத்தில் பாட்ஷாவைக் கட்டி வைத்து அடிக்கும் போது வரும் காட்சிகளில் அற்புத்மாக விளக்கியிருப்பார்கள்.


http://www.lazygeek.net/images/jaggubhai2.jpg

திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும்.........

திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வரும் ஒரு நிகழ்வு. வெகுசிலருக்கு வராமல் கூட இருக்கலாம். வராமல் போனது கூட ஒரு நிகழ்வாகவே கருதப் படும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி அது. சிலநேரங்களில் அது பெற்றோரால் நிச்சயக்கப்படும் வகையிலும் சில நேரங்களில் அவர்களாகவே நிச்சயிக்கப் படுவதாகவும் அமைகிறது.

அவர்களாகவே முடிவு செய்வது பற்றி நாம் பேசப் போவதில்லை. பெற்றோரால் உறுதி படுத்தப் படும் திருமணங்களிலிருந்து ஒரு நிகழ்வினைப் பற்றி மட்டும் பார்ப்போம். பல இடங்களில் ஆணும் பெண்ணும் நிச்சயத்திற்கு முன் பேசுகின்றனர். பெரும்பாலும் பேச ஆசைப் படுகின்றனர். இப்படி பேசுவதால் ஏதாவது நன்மை இருக்கிறதா? ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிலநிமிடங்களில் எவ்வாறு அது சாத்தியம்?

பல நேரங்களில் காதலிக்க தைரியம் இல்லாத இளைஞர்கள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கடலை போடுவதற்கும் ஊர்சுற்றுவதற்கும் பயன் படுத்திக் கொள்கிறார்கள். இதில் அத்துமீறலுக்குத்தான் வாய்ப்பு இருக்கிறதே தவிர புரிந்து கொள்வது என்பது.............


ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதும் சிறந்தவர்களாகக் காட்டிக் கொள்வதும் மட்டுமே உண்மையில் நடைபெறுகிறது. தங்களின் ரசனைகளை வெளிக் காட்டிக் கொள்கிறார்களா.. என்றால் இல்லை. எல்லாவற்றிலும் பெஸ்ட். என்ற நிலைமையிலேயே பழகுகின்றனர். வெறும் இனக்கவர்ச்சி மட்டுமே நிற்கிறது. திருமணத்திற்கு பின் ஏற்படக்கூடிய ஒரு சஸ்பென்ஸ் ப்போய்விடுவதால் பல நேரங்களில் சளிப்பு மட்டுமே மீந்து போகிறது. சின்ன குறைகள் வெளியே தெரியும் போது அது சண்டையாய் மாறி திருமணத்தையே முறித்துவிடக்கூடிய சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

என்னமோ போங்க...........

Saturday, January 3, 2009

மூன்றுமணி நேரம் அடங்கி இருக்கும் ஒருவயது குழந்தைகள்

உங்கள் வீட்டில் ஒன்று அல்லது இரண்டு வயதில் குழந்தைகள் இருக்கிறார்களா.... அவர்கள் என்றாவது ஒரு மூன்று மணி நேரம் அமைதியாக ஒரே இடத்தில் இருந்து பார்த்திருக்கிறீர்களா,,,

நானும் பார்த்ததில்லை. அப்படி ஒரு முப்பது குழந்தைகளாவது அமர்ந்திருப்பார்கள் என்ற எண்ணம் வரக்கூடிய சூழல் எனக்கு ஏற்பட்டது.

அன்று வேலைநிமித்தம் பொழுதுசாயும் வேலையில் ஒரு தேநீர் சாலையில் தேநீர் அருந்தும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சாலைக்கு அருகில் ஒரு திரையரங்கம் இருந்தது. அந்த நேரத்தில் திரைப்படம் முடிந்து மக்கள் சாரைசாரையாகச் சென்று கொண்டிருந்தனர்.

இப்பொழுதெல்லாம் வெகு அபூர்வமாகவே திரையரங்கிற்குச் செல்கிறோம். அப்படியே போனாலும் இரு சக்கரவாகனத்தில் சென்று படம் முடிந்த உடனே கிளம்பிடுவோம். பள்ளியில் படிக்கும் காலத்திலும் இருசக்கரவாகனமே.. மிதிவண்டி. அதனால் இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை.

அது ஒரு கிராமத்தில் உள்ள திரையரங்கு. கிராமம் என்றால் வாரம் ஒருமுறை சந்தை நடக்கும். அந்த அளவு சற்றே பெரிய கிராமம்தான். சனி, ஞாயிறுகளில் மதிய காட்சியுண்டு. தேநீர் அருந்திக் கொண்டே அந்தக் கூட்டத்தைப் பார்த்தபோது பார்வையில் பட்டவிஷயம் இதுதான். நிறைய தாய்மார்கள் தங்கள் ஒரு அல்லது இரு வயது குழந்தைகளுடன் வந்து படம் பார்த்துவிட்டு சென்று கொண்டிருந்தனர். எப்படியும் இருபது முப்பது குழந்தைகளாவது இருப்பார்கள். அனைவரும் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள்தான்.

கண்டிப்பாக குளிர்சாதனவசதி செய்யப் பட்ட அரங்கம் கிடையாது அது. ஒரு சிலர் தங்கள் கணவருடன் வந்திருந்தனர். பொதுவாக குழந்தைகள் அரை மணிநேரம் அடங்கி இருந்தாலே அது ஆச்சர்யப்படத்தக்க விஷ்யம் தான். இவர்கள் எப்படி மூன்று மணிநேரம் குழந்தையுடன் படம் பார்த்திருப்பார்கள்.? உங்களுக்கு ஏதாவது ரகசியம் தெரியுமா..

சாதாரணமாக கல்யாண வீடுகளிலோ, கோயில்களிலோ எப்படியும் குழந்தைகள் ஏதாவது ஒன்றாவது அழுது கொண்டும் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த குழந்தைகள் எப்படி அமைதியாக இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பின் திரைப்படம் விட்டுவரும் கூட்டங்களைப் பார்த்தால் எப்படியும் பல தாய்மார்கள் குழந்தைகளுடன் படம்பார்த்துவிட்டு வருகிறார்கள். எப்படி இது சாத்தியம்...? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்................

Monday, December 29, 2008

ரஜினி, சரத், பாம்பே, பழனி

ரொம்ப நாள் ஆகிவிட்டமாதிரி இருக்கிறது நமது விருப்பத் தலைப்பான ரீமேக் சுவடே தெரியாத தமிழ் படங்கள் வரிசையை ஆராய்வது,



இந்த முறை இரண்டு சூப்பர் ஹிட் படங்களை ஆராயலாம். சில வருடங்களில் ரீமேக் செய்யப்படங்கள் இவை.

பா(ட்)ஷா:-
பாஷா கதையைப் பற்றி சொலவதற்கு என்ன இருக்கிறது. அந்தப்படம் வந்த போது பெரும்பாலான வலைஞர்கள் பம்பரமாக சினிமா பார்ர்க்கும் பருவத்தில் இருந்திருப்பார்கள் என்பதால் அந்தக் கதையை அப்படியே விடுகிறேன். இந்தப் படம் வந்தபோது நாங்கள் மாநிலம் தழுவிய பொது தேர்வில் பங்கெடுக்க இருந்ததால் படம் பார்க்க அனுமதி இல்லை. நகரத்தில் இருந்த மாணவர்கள் பார்த்துவிட்டு படத்தில் சுத்தமாக நகைச்சுவையே இல்லை. அப்புறம் எங்க.. என்பதே அவர்கள் விமர்சனமாக இருந்தது. நக்மாவுக்கு லிப்ட் கொடுக்கும் முதல் காட்சியில் மட்டுமே நகைச்சுவை தலை காட்டும்.


அப்புறம் மே மாதத்தில்தான் படம் பார்த்தோம். கல்லூரிக்கு போனபின் தான் தெரிந்தது எந்த ரஜினி படம் என்றாலும் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டுதான் படத்திற்குச் செல்ல வேண்டுமாம். அப்போதுதான் நமது ரசனைக்கு அங்கீகாரம் கிடைக்குமாம். ஆனால் எங்கள் சீனியர் ராம்ஸ் அந்தப் படம் சுற்றுவட்டாரம் பதினெட்டுப் பட்டியில் எங்கு படம் போட்டாலும் பார்ப்பார். துணைக்கு எங்களை மாதிரி யாரையாவது கூட்டிச் செல்வார். ஒவ்வொரு ஜூனியர் மாணவரும் இருபத்தைந்து முறையாவது பார்த்திருப்பார்கள். இந்த நிலை அவர் பாஸ் செய்து பி.ஜி. வாங்கும் வரை தொடர்ந்தது.

ஏய்:-

இதில் சரத் குமார் பழனியில் வந்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பார். அவரது லட்சியம் தங்கையை கலக்டெர் ஆக்குவது. ரஜினியும் அப்படியே... ஆனால் ரஜினிக்கு டாக்டர், இன்ஸ்பெக்டர். கல்யாணம் என்று பல லட்சியங்கள். இதில் தங்கை சொந்தத் தங்கை அல்ல. அதிலும் மாற்றாந்தாய் பிள்ளைகள்தான். இதில் நண்பன் சத்தியம் வாங்குகிறார். அதில் அப்பா...


ஃபிளாஷ்பேக்:- வில்லனின் அட்டூளியம் தாங்காமல் சரத் தனது நண்பருடன் சேர்ந்து பழி வாங்குகிறார். ரஜினியும் அப்படியே.. ரஜினியின் தந்தை கொல்லப் படுகிறார். இதில் நண்பன் கொல்லப் படுகிறார்.

தங்கைக்காக கண்டபடி அமைதி காக்கிறார்கள்

அவர்களுக்குள் அடங்கியிருக்கும் புயல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வ்ருவது தெரியும்.. விரல் மட்டும் தூக்குவது, ஒருதடவ சொன்னா என்று மட்டும் சொல்வது.. சரத்துக்கும் அப்படித்தான் கண் புருவம் துடிப்பது, சதைகள் இருகுவது என்று படிப்படியாக போகும்.

வில்லன் அவர்களது தங்கை மேல் கைவைக்க நினைக்க.. அவர்கள் சுயரூபம் வெளிப் படுகிறது. கடைசியில் வில்லன் அழிய சுபம்.


அதில் அவன யாருன்னு நினைச்ச என்று தாயார் ஆரம்பிப்பார். இதில் தங்கை பேசுவார்.


மிகவும் சீரியஸாக வந்த படம் பாஷா... வடிவேலு, தங்கை, நமிதா, மற்றும் பாட்டியுடன் சேர்ந்து நகைச்சுவையில் புகுந்து விளையாடி இருப்பார் சரத் குமார்.

இரண்டும் சூப்பர் ஹிட்தான். இருந்தாலும் நக்மாவைவிட நக்மாவின் ரீமேக் நமிதா சூப்பரோ சூப்பர் ஹிட்.





Wednesday, December 24, 2008

ரஜினிக்கு உதவும் ஐஸ்வர்யா

சூப்பர் ஸ்டார் படங்கள் என்றாலே தனி மதிப்பு நம்மிடம் இருந்து கொண்டே இருக்கிறது। அவரது படங்களின் மீது நமக்கு என்றும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும்। அவரது நிகழ்காலப் படங்களும் எதிர்காலப் படங்களும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு இருந்து கொண்டே இருக்கும்।
அந்த வகையில் கதை எண் 1 பெரிய பொழுது போக்கு சித்திரமாக அமைந்தது।

இப்போது எந்திரனை கல்லூரியில் வைத்துப் பார்க்கும் நம்முடைய சின்ன ஆசை।


ரோபோ ஒரு கல்லூரி மாணவன்। இரண்டாம் ஆண்டு எந்த நேரமும் புத்தகம் கையுமாக இருப்பவர்। வம்பு தும்பு எதர்க்கும் போகாதவர்। (சூப்பர் ஸ்டாரின் இளமையான தோற்றத்திற்காக இருபது கோடி செலவிடப் படுகிறது)। அவரது அமைதியான அறிவான நடவடிக்கைகளாலும், கல்லூரியில் உள்ள எறும்புகளுக்கு கூட உதவும் எண்ணமும் இருப்பதாலும் கல்லூரியின் கனவுக் கன்னி ஐஸ்வர்யா அவர் மேல் காதல் கொள்கிறார்। [ஐஸ்வர்யாவின் இளமையான தோற்றத்திற்காக பத்துக் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது]। சூப்பர் ஸ்டார் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்। தனக்கு அதிகமான வேலைகள் இருப்பதாகவும் தன்னால் காதலில் எல்லாம் ஈடுபட முடியாது என்றும் கூறுகிறார்।
http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/07/enthiran.gif
அதிர்ச்சி அடையும் ஐஸ்வர்யா தனது காதலில் என்ன குறை என்று ஆக்ரோஷமாக கேள்வி கேட்கிறார்। இன்றைய இளைஞர்கள் போல தான் ஒன்றும் டைம்பாசுக்காக காதலிக்க வில்லை என்றும் இரண்டுநிமிடங்கள் இடைவிடாது வசனம் பேசுகிறார்। இளைஞர்களைப் பற்றி பேசும்போது மட்டும் அவரது காது துடிக்கிறது। மற்றபடி அமைதியாக காதலிக்க முடியாது என்று கூறுகிறார்। கோபத்தின் உச்சிக்கே செல்லும் ஐஸ்வர்யா அந்தக் கேள்வியைக் கேட்டு விடுகிறார்


நீங்கென்ன மனுசனா? எந்திரனா? பேருதான் ரோபோன்னா ஆளும் ரோபா மாதிரி இருக்கீங்க।
கேட்டுக்கொண்டு இருக்கும் வானத்திற்கு பயங்கர கோபம் வருகிறது। மாநகரத்தின் ஓரத்தில் இருக்கும் கடலுக்கும் பயங்கர கோபம் வருகிறது। இடிமின்னல் கொந்தளிப்பு வருகிறது। ரஜினி அமைதியாக இருக்கிறார்। பக்கத்தில் ஓடும் ரயில் கூட தட தட வென்று ஓடுகிறது। ஐஸ்வர்யாவின் கண்களில் ரத்தம் வடிகிறது , அப்படியே மயங்கிசாய்கிறார்। அவரை ஒரு வயதானவர் தூக்கிகிறார்। மயக்கம் தெளிந்தவுடன் ஐஸ்வர்யாவைப் பார்க்கிறார்।


ரோபோ சாதாரண மாண்வன் இல்லைம்மா அவன நம்பி ஒரு நாடே இருக்கு। என்று சொல்லிக் கொண்டே ஃப்ளாஸ்பேக் போகிறார்।


இளமை கொஞ்சும் கிராமம்। அப்படியே வயல் வெளியிலேயேதான் ஊருக்குள்ளேயும் வெளியேயும் போகும்வழி, வரும்வழி। அதில்தான் பிரசன்னாவும் பிரியா மணியும் பள்ளிக் கூடம் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்। தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன। பிரசன்னாதான் பனிரண்டாம் வகுப்பில் முதல் மாணவன்। பிரியாமணி ஃபெயில்। நான் ஃபெயில் ஆனா என்ன நீதான் பெரிய படிப்பெல்லாம் படிக்க போறயே என்று பிரசன்னாவை வாழ்த்துகிறார்। மெடிக்கல், என்ஞ்னிய்ரிங், அக்ரி, டீச்சர், வக்கீல், போலீஸ் திருடன் என்று எல்லா படிப்புகளுக்கும் அப்ளிகேசன் போடுகிறார்। பிரியா மணியும் அதற்கெல்லாம் ஸ்டாம்ப் ஒட்டிக் கொடுத்துக் கொண்டே கேட்கிறார்। உனக்குத்தான் எதுவேனாலும் கெடைக்குமே ஏன் இப்படி டைம் வேஸ்ட் பண்ணிக் கொண்டு இருக்க, என்கிறார்। பிரசன்னா சிரித்துக் கொண்டே படிவங்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்। சிலநாட்கள் ஆட்டமும் பாட்டுமாக களிகிறது।

முதலில் மெடிக்கலில் இருந்து பதில் வருகிறது। சந்தோஷத்துடன் திறக்கிறார்। பிரசன்னா கடிதத்தை பிரித்த உடன் அப்படியே சோர்ந்து விடுகிறார்। வேகமாக ஓடி வந்து பார்க்கும் பிரியா மணி பிரசன்னாவின் முகத்தைப் பார்க்கும் விளிக்கிறார்। பிரசன்னாவின் விண்ணப்பம் மதிப்பெண்கள் இருந்தும் நிராகரிக்கப் பட்டு விடுகிறது। அடுத்து ஒவ்வொரு விண்ணப்பமும் நிராகரிக்கப் படுகிறது। எல்லா அலுவலகங்களுக்கும் சென்று காரணம் கேட்கிறார்கள் । எல்லா அலுவலகங்களிலும் காரணம் கேட்கிறார்கள்। எல்லா இடங்களிலும் ஒரே பதில்தான் நீ இந்த நாட்டின் குடிமகனே கிடையாது। இந்நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே நாங்க இடம் கொடுக்க முடியும் மற்ற நாட்டு காரர்கள் உங்கள் தூதரகம் மூலமாகத்தான் வரவேண்டும் என்று சொல்லி விடுகிறார்கள்।


அப்போதுதான் அந்த உண்மை தெரிகிறது। பிரசன்னா பிறந்த கிராமம் இன்னும் சுதந்திரம் அடையவே இல்லை। அங்கே யுரேனியம் அதிகம் கிடைப்பதால் ஒரு ஐரோப்பிய நாட்டின் பிடியிலேயே இருக்கிறார்கள்।
பிரசன்னா எங்கெங்கோ அலைந்து திரிந்தும் அவருக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்க வில்லை। மனம் உடைந்து போகிறார்। கூடவே பிரியா மணியும் சுற்றுகிறார்। அப்போதுதான் அந்த முடிவு எடுக்கிறார்கள்। இருவரும் ஒன்று சேர்கிறார்கள்।
இந்த மண்ணில் குழந்தைபிறந்தால் அது இந்த நாட்டு குடிமகன் ஆகிவிடுவான்,
எனவே நமது குழந்தையை இங்கேயே பெற்றுக் கொண்டு லட்சியத்தை நிறைவேற்றுமாறு கூறிக் கொண்டு உயிரை விடுகிறார்। குழந்தையை பெற்றபின் பிரியாமணியும் உயிரை விடுகிறார்। எந்திரத்தனமாக உழைக்க வேண்டும் என்ற காரணத்தில் ரோபோ என்று பெயர் வைக்கிறார்கள்।


கதையைக் கேட்டவுடன் ஐஸ்வர்யா நெகிழ்ந்து போகிறார்।
எங்க அத்தை எங்க மாமனாருக்கு உதவியது போல நான் இவருக்கு உதவுவேன் என்று சொல்லிக் கொண்டே காஃபி போட்டுக் கொடுக்கிறார்।
வெற்றீக் கொடி நாட்டு பாடல் ஆரம்பம் ஆகிறது। பாடலின் ஒவ்வொரு பத்திக்கும் ரஜினி ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி அடைகிறார்। கடைசி வரி வரும்போது அவர் ஐ। ஏ। எஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்று விடுகிறார்।

அவர் நிறைய மதிப் பெண்கள் பெற்றதால் அவரை நேரடியாக உள்துறைச் செயலராக நியமிக்கிறார்கள் , ( இது இரண்டாவது முறையாக நிகழ்த்தப் படும் சாதனை। ஏற்கனவே தென்னவனில் விஜயகாந்த் குறைந்தவயதில் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டு இருக்கிறார்) ।



அலுவலகத்தில் கோப்புகளைப் பார்த்துக் கொண்டே வருகிறார்। அப்போது அதிர்ச்சிகரமான உண்மை வெளிவருகிறது। பிரசன்னா பிறந்த கிராமத்தை ஆளூம் ஐரோப்பிய மன்னராக ஐஸ்வர்யாவின் தந்தையே இருந்து வருகிறார்। அதனால் ஜோடிகளுக்கு நடுவே பிரச்சனை வருகிறது। தலைவர் சோகமாக முந்திரி தோப்பைச் சுற்றிவந்து பாட்டுப் பாடுகிறார்।

இப்படி ஒரு கிராமம் இருப்பது மந்திரி ஒருவருக்கு தெரிந்து விடுகிறது। அவர் உலக பயங்கரவாதிகளுடன் கூட்டணி அமைத்து ஐஸ்வர்யாவின் தந்தை நாட்டைக் கைப் பற்றிவிடுகிறார்। பிரசன்னாவின் கிராமத்தில் உள்ள யுரேனியத்தைக் கைப் பற்றி உலக அணுஆயுதங்களை வளர்த்த் முயற்சிக்கிறார்। இந்த தகவல்களை ஐஸ்வர்யா வந்து சொன்னவுடன் பொங்கி எழும் சூப்பர் ஸ்டார்। தனி ஆளாக ஐஸ்வர்யாவின் நாட்டிற்குச் சென்று அவரது தந்தையை விடுவிக்கிறார்।
பிரதான வில்லனான அமைச்சருடன் ஒத்தைக்கி ஒத்தை சண்டை போட்டு அழிக்கிறார்।


ஐஸ்வர்யாவை மணந்து கொண்டு தனது சொந்த கிராமத்திற்கு மன்னராக திரும்பி வருகிறார்।

சுபம்।

=================================================================

ஹி ஹி மீள்பதிவுதான்,

வெளிவந்துள்ள எந்திரன் பாடல்கள் இந்தக் கதைக்கு மிக அழகாகப் பொருந்துவதைக் கவனியுங்கள்

இந்தக் கதை பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் மேல்நோக்கிய தமிழ்மணக் கட்டைவிரலிலும் தமிழீஷிலும் கிளிக் செய்து விடுங்கள்

Tuesday, December 23, 2008

இதற்கெல்லாம் ரஜினி கவலைப் படவேண்டியதில்லை

இந்த இடுகை மிகவும் காலந்தாழ்த்தி போடப் பட்டிருப்பதாக நினக்கலாம்। அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு। முதலாவது அப்போது நான் ப்ளாக் எதுவும் எழுதவில்லை। இரண்டாவது மேலும் காலந்தாழ்த்த நான் நினைக்கவில்லை।



குறைந்தபட்சம் ரஜினி ரசிகர்கள் மட்டுமாவது மகிழ்ச்சி அடைய இந்த இடுகை உதவும்। திண்டுக்கல் சாரதி படம் பார்த்தவர்கள் கூறுவது பேசாமல் குசேல்ன் படத்தை இதே இயக்குனரிடம் கொடுத்து இருக்கலாம் என்று கூறிவருகிறார்கள்



அன்புள்ள ரஜினிகாந்த் என்றொரு படம் அந்தப் படத்தின் கதையை முதலில் எம்ஜியருக்காக தயார் செய்யப் பட்டதாம்। அவர் முதல்வராகி விட்டதால் ரஜினி என்று கூட பேசிக் கொள்கிறார்கள்.


குசேலனுக்கு முன் சந்திரமுகி வந்தது। அதன் மலையால மூலத்திற்கும் கன்னட மூலத்திற்கும் பல மடங்கு மாற்றங்கள்। படம் வென்றதால் வாசு। சூப்பர் ஆகப் பேசப் பட்டார்। இதற்கு முன் லாவாரிஸ் என்றொரு இந்திப் படம் பார்க்கும்போதே கண்கள் பனிக்கும் இதயம் கணக்கும் கதை। அமிதாப் பச்சனின் அற்புத நடிப்பில் வெளியான படம் । ஒரு அனாதையின் வாழ்வின் கொடுமையையும் அவனது உள்ள குமுரல்களையும் அழகாக வெளிப் படுத்தி இருப்பார்கள்। அதே படத்தை தமிழில் பணக் காரனாக எடுத்தார்கள்। சுத்த கமர்சியலாக... சில பல மாற்றங்களுடன்......... ரஜினி மேடையில் பேசும் ஒரு காட்சியைத் தவிர மற்ற இடங்களில் பெரிய ஒரு பாதிப்பும் ஏற்படாத ஒரு கமர்சியல் படம் அது। வாசுவின் திறமை ரீமேக் திறமை பலமுறை வெளிப் படுத்தப் பட்டுள்ளது।



அன்புள்ள ரஜினி காந்த் வந்தபோது படத்தில் ஒரு குழந்தை ரசிகைக்காக ரஜினியே தனது நேரத்தை செலவிட்ட போது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் ரசித்தார்கள்। தங்களுக்காக வந்து தங்களுடன் நேரத்தை செலவிட்டதாக நினைத்தனர்।


ஆனால் குசேலன் படத்தில் ஒரு நண்பனுக்காக தலைவர் கண்கள் கலங்குவதை யாரும் ஏற்கத்தயாராக இல்லை। அந்த காரணத்திற்காக தலைவனின் கண்கள் கலங்குவதை மீண்டும் பார்க்க விரும்பாத ரசிகர்கள் மீண்டும் பார்க்காத காரணத்தாலேயே அந்தப் படம் தோல்வி அடைந்தது। ரசிகர்களின் பேராரதவாலேயே அந்தப் படம் தோல்வி அடைந்தது எனச் சொல்லலாம்। எனவே குசேலன் தோல்வி அடைந்ததற்கு வாசுவோ, ரஜினியோ வருத்தப் படவே தேவையில்லை।

Monday, December 22, 2008

எதிர் ஓட்டு போடுபவர்களே! இங்கே வாங்க

  • எல்லாத்திரைப்படத்திற்கும் லாஜிக் இருக்க வேண்டும் என்றும் லாஜிக் இல்லாமல் எடுக்கப் படும் திரைப்படங்கள் மக்களால் நிராகரிக்கப் படும் என்றும் பேசப் படுகிறது.
    ஆனால் ஒரு தமிழ் திரைப் படம் பெரும்பாலான முக்கிய காட்சிகள் அனைத்திலும் லாஜிக் மீறப் பட்டிருக்கும். சாதாரணமாக நடக்கவேஏஏஏ இயலாத சம்பவங்களைக்கொண்டு பின்னப் பட்டு வெற்றி பெற்ற படம் இது.

    இது நம்ம ஆளு

    பட்டணத்திற்கு வேளை தேடி வந்த நபர் சுண்டல் விற்க முன்வருகிறார். இதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். அடுத்து அதற்காக அந்தணர் வேடம் போடுகிறார். சுண்டல் விற்பதில் வரும் லாபத்தைப்போல பல மடங்கு செலவு செய்து போடப் படும் வேசம் இது. என்ன கொடுமை சார் இது

    அடுத்து ரோட்டில் பார்த்து அவரை புரோகிதம் செய்ய அழைகிறார்கள். எங்கேயாவது நடக்குமா?

    தவறாக மந்திரம் சொல்வதைப் பார்த்து அந்த ஊர் நாட்டாமை அந்தணர் அவருக்கு இருக்க இடம், படுக்க பாய், சம்பாதிக்க வேலை, அவ்வப்போது இலைப் போட்டு சோறு, தனியாக பாயசம், வடை வேறு கொடுக்கிறார். இந்த நாட்டாமைக் காரர் ஒழுங்காக மந்திரம் சொல்லாததால் தலையில் தீயைத் தூக்கிப்போட்டவர் என்ற பில்டப் வேறு.......

    இதையெல்லாம் பார்த்து லவ் வேறு வருமாம்.........

    ஒரு தெருவில் நடக்கும் பாட்டுப் போட்டியில் செயித்து கண் ஆபரேசன் செய்யும் அளவு பரிசாம்...............

    நாட்டாமைக்காரர் செட்டப் அப்பா அம்மாவைப் பார்த்ததும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்களாம். ஊரில் நடப்பதாக சொன்னாலும் இவ்வளவு படித்தவராக காட்டப்படும் நாட்டாமையை அடிமுட்டாள் ஆக்குகிறார்கள்.

    ஒரிஜினல் தன்மை தெரிந்தவுடன் அவர் வாங்கும் சத்தியம் உலகில் எங்கும் இல்லாத ஒரு சத்தியம். கொலை செய்திருக்கலாம். கோபத்தில் என்று நினைத்துக் கொள்ளலாம். இல்லை விவாகரத்து செய்திருக்கலாம். இதைச் செய்யாமல் பெண்ணைத் தொடக்கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். கொடுமையோ கொடுமை.

    இதற்கடுத்து பல பலான சங்கதிகள். கடைசியில் நடக்க வேண்டியது நடக்கிறது. இந்த படம் தீண்டாமை எதிராண கொள்கையை வலியுறுத்தி எடுக்கப் பட்டதாக ஒரு விளக்கம். எப்படி என்றுதான் தெரியவில்லை.

    இயக்குநர் பாலகுமாரனாம். இதுவே ஒரு லாஜிக் இல்லாத விஷயம். யாருக்காவது உண்மை தெரியுமா................
==========================================================

தமிழ் மணத்தில் புதிய ஓட்டுமுறை அறிமுகப் படுத்தப் பட்ட பிறகு

நான் எழுதிய

தமிழ்மணம் பரிந்துரை : 2/10

Pathivu Toolbar ©2009thamizmanam.com

யார்க்கராய் இருந்தால் என்ன? ஃபுல்டாஸ் ஆனா என்ன?


இடுகை மொத்தம் பத்து ஓட்டுக்களும் அதில் எதிர் ஓட்டுகளைக் கழித்து இப்போதைய ஒட்டுமொத்த ஓட்டு மதிப்பு இரண்டு என்பதும் தெரிவித்துக் கொள்ளப் படுகிறது. ஓட்டுக்களின் மதிப்பு ஃப்யர் ஃபாக்ஸ் மற்றும் கூகிள் உலாவிகளில் தெரிகிறது. ஏனோ I E உலாவியில் தெரியவில்லை.

இந்த இடுகைக்கு என்ன நிலமை என்று பார்ப்போம்
===========================================================
இது ஒரு மீள்பதிவு. எழுத ஆரம்பித்த மாததில் பதிவிட்டது.

Saturday, December 20, 2008

தமிழில் யாரும் செய்யாத ஒரு முயற்சி. பதிவுலகில் புதுசு கண்ணா புதுசு

  • ௧+௭=௮
  • ௨+௭=௯
  • ௩+௭=௧0
  • ௪+௭=௧௧
  • ௫+௭=௧௨
  • ௬+௭=௧௩
  • ௭+௭=௧௪
  • ௮+௭=௧௫
  • ௯+௭=௧௬
  • ௧0+௭=௧௭
ஒரு ஆசைதான் தமிழ்ல வாய்ப்பாடு எழுதிப பார்க்கனும்னு । பிடிச்சிருந்தா தமிழ்மணம் மேல்நோக்கிய கட்டைவிரலிலும்
தமிழீஷிலும் க்ளிக் செய்து விடுங்கள்।


Thursday, December 18, 2008

குந்தவைதான் கொலையாளியா? ஆதாரங்களுடன் ஒரு அலசல்

பொன்னியின் செல்வன் படித்த போது பலரும் பலமாதிரி அந்த நூலை அலசியிருப்பார்கள். நாங்களும் சில நேரங்களில் அலசியபோது கொண்டுவந்த கருத்துகள்தான் இவை.



இந்த நூலினை மகாபாரதத்தையும், சாணக்கியன் சபதத்தையும் கொஞ்சம் நினைவு கூற வேண்டும். ச்குனியின் ராஜ தந்திரங்களையும் , சாணக்கியனின் ராஜ தந்திரங்களும் கொஞ்சமும் குறைந்ததல்ல. சாண்க்கியணை விட சகுனிக்கு காரணங்கள் அதிகம். ஆனால் சகுனி தோற்றதால் வில்லன் கதாபாத்திரமாகவும், சாணக்கியன் வென்றுவிட்டதால் ராஜ தந்திரத்திற்கு ஒரு உதாரணமாகவும் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். அதே நிலைப் பாட்டுடன் கல்கின் பொன்னியின் செல்வன் படித்துப் பாருங்கள்.



முதல் காட்சியில் வந்தியத் தேவன் தூதராக வருகிறார். கல்கி இங்கே தெளிவாகக் கூறுகிறார். இரண்டு ஓலைகளை எடுத்துக் கொண்டு என்று. தந்தைக்கு ஒன்று, தங்கைக்கு ஒன்று. கரிகால் ஆதித்யர் தங்கை குந்தவையை முழுவதும் நம்பியிருந்தால் ஒரே ஓலையில் தங்கைக்கு கடிதம் எழுதி மொத்த தகவல்களையும் அனுப்பியிருக்கலாம். அவருக்கு தங்கை மேல் நம்பிக்கை முழுவதுமாக இல்லை என்பதற்கு இரண்டு ஓலைகளே சாட்சி.

இரண்டாவது ஓலையில் நம்பிக்கையான ஒற்றன் என்று கூறுகிறார். இதை இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று தங்கைக்கு உதவுவதற்காக. இரண்டாவது. தங்கையின் செயல்பாடுகளை அவருக்கு தெரியாமலே கண்காணிக்க.


கல்கியின் எழுத்துக்கள் நமக்கு தெரிவிக்கும் உண்மைகள் இவை.

அடுத்ததாக கந்தமாறன் அரண்மனை நிகழ்வுகள்.


தனியாக ஒரு போட்டி பொதுக்குழு கூட்டப் படுகிறது. அது ஆதித்யர் அரசர் ஆவதை தடுக்க என்று கூறுகிறார்கள். சோழ நாட்டு எதிர்கால் நலனுக்காக என்று கூறுகிறார்கள். அங்கு நடந்த கூட்டத்தில் குந்தவையின் தலையீட்டினை எதிர்த்து மாபெரும் உரையாற்றுகிறார். பெரிய பழுவேட்டரையர். குந்தவையின் செல்வாக்கு ஆட்சியில் நுழைந்திருக்கிறது என்பதையும் கல்கி அவர்கள் நமக்கு காட்டுகிறார்.

ஆதித்யரின் ஆசைகளுக்கு குந்தவை குறுக்கிடுவதையும் அதற்கு காரணங்கள் புரியாதது போலவும் காட்டுகிறார். அது ஏன் குந்தவையின் ஆதிக்க மனப்பான்மையாக இருக்க கூடாது.


நந்தினியின் மேல் கொண்ட நிறைவேறாத காதலும், வீரபாண்டியனைக் கொல்லும்போது நின்ற நந்தினியின் கண்ணீரும் அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவரை காஞ்சி செல்லவைத்தது என்று கூறுகிறார்கள். நந்தினி தேவி கதாபாத்திரமே கற்பனை என்னும்போது ஆதித்யர் நாடு திரும்பாமல் இருந்ததற்கு காரணம் என்னவாக இருக்க முடியும். இதில் நாம் காணும் முடிவு என்னவென்றால் நந்தினியின் கதாபாத்திரம் கற்பனையாக இருக்கும் பட்சத்தில் அவருடைய இயல்புகள் குந்தவையின் பிம்பமாகவே இருக்க முடியும்.

கடம்பூர் மாளிகையில் கந்தமாறன் தங்கையை காதலுடன் நோக்குகிறான் வந்தியத்தேவன் . அது மட்டும் இல்லாமல் அதற்கு முந்தைய காலகட்டத்திலேயே இருவருக்கும் மணம் புரிவதற்கான பேச்சுக்கள் இருந்திருக்கின்றன என்றும் கல்கி தெளிவாக கூறுகிறார்.
கந்தமாறன் தங்கை கொலைப் பழியினைக் கூட ஏற்றுக் கொள்கிறார். அந்தப் பெண்ணை விட்டு விட்டு குந்தவை பின்னால் வந்தியதேவன் செல்கிறார்.


அதே போல ஆதித்யனை விட்டுவிட்டு குந்தவைக்கே முழு விசுவாசமாய் மாறிவிடுகிறார் வந்தியத் தேவன். இதுவும் கல்கியின் கூற்றுதான்.

அருண்மொழிக்குக் கூட தனது தோழிகளில் ஒருத்தியை மணம் முடித்து வைக்கவே விரும்புகிறார். குந்தவையும் வெளிநாடு ஒன்றுக்கு வாழ்க்கைப் பட்டு செல்ல விரும்பவில்லை என்பதை கல்கி அவர்களே மிகவும் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.


அகண்டபாரதம் அமைக்க ஆசைப்படும் உன்னத எண்ணம் கொண்டவராக குந்தவை தேவி காட்டப் படிகிறார். ஆனால் கடைசி கட்டங்களில் வடக்கு ஆதித்யனுக்கு தெற்கு அருள்மொழிக்கு என்றெல்லாம் பேச்சுக்கள் வருகின்றன. இதையும் கல்கி கூறிவிடுகிறார்.


ப்போது நான் வைப்பது மட்டுமே வாதம்.



தனது ஆதிக்கத்திற்கு வராத தன் அண்ணனிடம் பேச தனது காதலனை அனுப்புகிறார். அங்கு போய் சந்திக்கிறார். கல்கி நந்தினியும் ஆதித்யரும் பேசுவதாகக் காட்டும் இடத்தில் வந்தியத்தேவனும் இருக்கிறார். அவரும் ஏன் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டிருக்கக் கூடாது? நந்தினியை பல முறை பார்த்து ஜொள் விட்டவர்தான் வந்தியத்தேவன் . வாதங்களில் எல்லோரும் மாறி மாறி டென்சன் ஆகி ஏன்கொலை நடந்திருக்கக் கூடாது?


இதில் வந்தியத்தேவர் கடம்பூர் சென்றதையும், கொலையுண்ட இடத்தில் வந்தியத்தேவன் இருந்ததையும், வந்தியத்தேவனின் கத்தியால்தான் ஆதித்யர் கொலையுண்டார். என்பதையும் கல்கி எழுதியிருக்கிறார். இது மட்டும் அல்லாது கொலையைப் பார்த்த மணிமேகலை கடம்பூர் இளவரசியும் வந்தியத்தேவனை தப்புவிப்பதற்காக தன்மேல் பழியைப் போட்டுக் கொள்கிறாள். இதுவும் கல்கியின் எழுத்துத்தான்.

எனவே ஆட்சி அதிகாரத்தின் போதையில் இருந்த குந்தவையின் தூண்டுதலால்தான் வந்தியத்தேவன் இந்தக் கொலையைச் செய்திருப்பார் என்று நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
கொலையை யார் செய்தார் என்பதை கல்கி சொல்லவே இல்லை என்பதையும் இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதை வெளியே சொல்ல விரும்பாத காரணத்தாலேயே அவர் அவ்வாறு செய்திருக்கிறார் என்று கூட சொல்லலாம். பழிதன்மேல் வராமல் இருப்பதற்காக உத்தம சோழனை டம்மி அரசனாக சில காலம் இருத்தி பின்னர் அருள்மொழி ஆட்சிக்கு வருகிறார். அந்த டம்மி அரசனும் குந்தவையின் சம வயதினருமான் உத்தம சோழனும் சில ஆண்டுகளீல் மரணம் அடைகிறார்.

ராஜ ராஜன் கூட பெரும்பாலும் ஊரில் இல்லாமல் போர்களிலேயே இருக்கிறார்.
குந்தவை சிறப்பாக ஆட்சி செய்தார் என்பதும் வரலாறு. சுருக்கஞ்சொன்னால் வென்றுவிட்டதால் குந்தவை சாணக்கியனுக்கு ஒப்பாகப் பேசப் படுகிறார், தோற்றிருந்தால் அவர் சகுனியாகவோ நந்தினியாகவோதான் கருதப் பட்டிருப்பார்.


----------------------------------------------
மிகப் பழைய இடுகைதான். இருந்தாலும் பல புதிய புதிய பதிவர்கள் இருப்பதால் அவர்களுக்கான மீள்பதிவு

------------------------------------------------
புதியவர்கள் பின்னூட்டங்களையும் சேர்ந்து நிதானமாகப் படித்து கருத்துக்கூறுங்களேன்.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails