யந்திரன் entirely different entertainment
முதல் காட்சியில் நாயகன் சங்கராயனிலிருந்து இறங்கி வருகிறார். நாட்டிலேயே முதல்முறையாக பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டு வருகிறார்.
அவரது பெற்றோர் அவருக்கு திருமண்த்திற்கு பெண் பார்க்கிறார்கள். இந்திய கலாச்சாரத்திற்கு தகுந்த பெண்ணாய் பார்க்கிறார். கேரளாவிற்குச் செல்கிறார். போகும் வழியில் பொள்ளாட்சி ரோட்டில் ஒரு பாட்டு. உடன் ஆட ஸ்ரேயா..
கேரளாவில் அவரை வில்லன் கூட்டத்தினர் கடத்தி விடுகின்றனர். தலமை மந்திரவாதி திலகன்,, தலைவரின் உடலில் ஒரு யந்திர தகட்டை வைத்து விடுகிறார். யந்திர தகடு உடலில் சேர்ந்த உடன் தலைவர் வில்லன் கூட்டத்தின் சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார்.
வில்லன் கூட்டத்தினர், உலகில் உள்ள பெரும்தலைகள் பலரை கொண்று குவிக்க ஆணையிடுகின்றனர். முதலில் ரஷ்யத் தொழில் அதிபரை கொல்கிறார். அதனை ஒரு அழகி விடியோ எடுத்து விடுகிறார். அடுத்து ஜெர்ம்னிக்குச் செல்கிறார்.
இந்த நிலையில் தலைவர் யந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது அவரின் குடும்பத்திற்கு தெரிந்துவிடுகிறது. உடனே இமயமலையில் 1000ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மகான் அமிதாப்ஜியிடம் செல்கின்றனர். அவர் தனது தவ வலிமையால் தலைவரின் ஆன்மாவைத்தனியாக பிரித்து தலைவரைக் காப்பாற்ற அனுப்புகிறார். தலைவரின் ஆன்மா மனித உருக் கொண்டு தலைவரை காப்பாற்றச் செல்கிறார்.
இந்த நிலையில் எந்திரத் தலைவர் அமரிக்கா செல்கிறார். கடல் கடந்து செல்லும் சக்தியை அமிதாப்ஜி தராததால் ஆத்ம சக்தி திரும்பி விடுகிறார்.
கடல் கடந்து செல்லும் சக்தியை ஆதித்ய கணேசச் சித்தரிடம் தான் இருக்கிறது. அவர் விண்ணுலகம் பார்க்கும் ஆசையில் மண்ணுலகம் நீங்கிவிட்டார். அவரை வரவைக்க சிறப்பு வழிபாடுகள் செய்ய வேண்டும் என்கிறார். அந்த பூசைகளை அவர் திருமணம் செய்து கொள்ளும் பெண்தான் செய்ய வேண்டும் என்கிறார்.
ஐஸ்வர்யா பூஜைகள் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ஜெர்மானிய தொழிலதிபரைத் தலைவர் ஐ.நா. சபை வாசலில் வைத்துக் கொண்று விடுகிறார். அடுத்த கட்ட பூஜையாக இமயமலை பனிக்கு நடுவே பூங்குண்டம் அமைத்து அங்கே கிடைக்கும் இலைகளை ஆடையாக அணிந்து நடணம் ஆடி பூஜை செய்கிறார்.கூடவே ஐந்து இளம் கன்னிப்பெண்களும் ஆடுகிறார்கள். தலைவர் செய்த கொலையால் உலகமே பரபரப்பாகிறது. இந்தியாவின் மேல் போர் தொடுக்க அமரிக்கா திட்டமிடுகிறது.
அடுத்த கட்டமாக அமெரிக்க ஜனாதிபதியை முடிக்கும் பணி கொடுக்க்ப் படுகிறது. தலைவர் மறுத்து விடுகிறார். வில்லன் குரூப் மந்திர வாதிகள் அதீத கோபம் அடைகிறார்கள். ஐஸ்வர்யாவின் பூஜை காரணமாக ஆதித்ய கணேச சித்தர் தோன்றி பல ரகசியங்களைச் சொல்கிறார்.இந்த வலுவான பாத்திரத்தை சிவாஜி சாருக்கு கொடுக்கிறார்கள். முழுக்க கிராபிக்ஸ்.
தலைவரின் நாடி, நரம்பு, ரத்தம், சதை, நகம், பனியன், ஜட்டி எல்லாமே நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் இருப்பதால் தலைவர் என்றுமே தவறு செய்யமாட்டார். இதுவரை அவர் கொன்றவர்கள் எல்லாம் உலக பயங்கரவாதிகள். அவர் என்றுமே நல்லவர்களை எதிர்க்க மாட்டார். என்று கூறுகிறார். அடுத்த ரகசியத்தையும் கூறுகிறார். தலைவர் பிறந்த அன்றுதான் வானில் துருவ நட்சத்திரம் காணாமல் போனது. அத்னால் தலைவர்தான் துருவ நட்சத்திரம். இதை வெளியே சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். ஆதம சக்தி அமெரிக்கா செல்லும் சக்தியைக் கொடுக்கிறார்.
வில்லன் கோஷ்டி யெந்திரனை அடைத்துவைத்து விட்டு இந்தியா முழுவதும் குண்டு வைக்கின்றனர். ஆத்ம சக்தி அமெரிக்கா சென்று விட்டு, யெந்திரனை விடிவித்து இந்தியா அனுப்பிவிட்டு அங்கே அவர் தங்கிவிடுகிறார். தலைவர் அனைத்து இடங்களிலும் குண்டுகளை எடுக்கிறார். அங்கே அமெரிக்க ஜணாதிபதியைக் காப்பற்றும் பொறுப்பை ஆத்மாவும். இந்தியாவில் நடக்கும் மயிர் கூச்செரியும் சாகஸங்களை யெந்திரனும் செய்கிறார்கள். கூடவே ஐஸ்ஸும் போய் மிகவும் உதவி செய்கிறார். அங்கே தலைவர்க்கு பிரபல டென்னிஸ் வீராங்கணை உதவி செய்கிறார்.
கடைசியில் அமெரிக்காவையும் இந்தியாவையும் தலைவர் காப்பாற்றீவிடுகிறார். இந்த நிலையில் வெளி கிரகங்களீலிருந்து இரண்டு வாகண்ங்கள் வருகின்றன. அதில் இருந்து இறங்குபவர்கள் தாங்கள் ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிவிட்டு
யூனிவர்ஸ் முழுவதும் உன்னை வென்றிட யாரு...
பிரபஞ்ச நாயகனே ........
பாட்டுடன் படம் முடிவடைகிறது.
டாங்கர் வண்டியில் துரத்தும் படைகளைப் பார்த்து தலைவரின் வசனம்..
யெந்திரனுக்கே யெந்திரமா........
தலைவர் ஒவ்வொருவரையும் போட்டுத்தள்ளும்போது பேசும் வசனம்
நான் ஒருத்தனக் கொண்ணா நூறு பேரை கொண்ண மாதிரி
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் டக் டக் என்று பயணம் செய்துவிட்டு
ஆண்டவன் சொன்னான் அமெரிக்கா வந்தேன்
ஆண்டவன் சொன்னான் அமெரிக்காவிலிருந்து வந்தேன்
சொல்லி பல வகைகளில் கலகல்ப்பாக்கலாம்.
பின்குறிப்பு:-
வழ்க்கமாக ரஜினி படமென்றால் பழைய ரஜினி படங்களீன் சாயல் இருந்தே தீர வேண்டும். அதனை ஓரளவே நிறைவேற்ற முடிந்தது.
பின்பின்குறிப்பு:-
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் மேல்நோக்கிய தமிழ் மணக் கட்டைவிரலிலும் தமிழீஷிலும் க்ளிக் செய்து விடுங்கள்.
18 மாதங்களாக மீள்பதிவு வந்துகொண்டிருக்கிறது. படத்தைத்தான் காணோம்.
=====================
25 மாதங்களுக்கு பின் ஒருவழியாக பாடல்கள் வந்துவிட்டன.,
copy wright senchachaa?
ReplyDeleteஅட்ரா சக்கை அட்ரா சக்கை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பெயரில்லா...............
ReplyDeleteபுருனோ சார்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇந்த திறைக்கதையை அப்படியே சைனீஸில் எடுத்தால் ஹிட்டோ ஹிட்டு பார்க்கலாம்..
ReplyDelete(உங்களையெல்லாம் வட துருவத்துக்கு நாடு கடத்தனுமுங்கோவ்)
வருகைக்கு நன்றி கும்கி சார்.
ReplyDeleteதலைவருக்கு வட துருவத்திலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அங்கே ஒரு தியேட்டரில் ரிலீஸான முத்து இன்னும் ஓடிக் கொண்டே இருக்கிறது.
வட துருவத்து கலாசார நடனத்தை படத்தில் சேர்த்ததற்கு அதுவும் ஒரு காரணம்
எந்திரன் படத்தை முதலில் ரிலீஸ் பண்ண் பெருமை உங்களுக்குதான்
ReplyDeleteவருகைகும் கருத்துக்கும் நன்றி குடுகுப்பை சார்
ReplyDeleteபாத்து, அடுத்த ரஜினி படத்தை இந்தக்கதையே வச்சி எடுத்தாலும் எடுக்கலாம். நல்லா இருக்கு
ReplyDeleteகலக்கல் சார்...
ReplyDeleteநல்ல கற்பனை. உங்கள் கதையில் உள்ள சில காட்சிகள் கூட இடம் பெறலாம்.
ReplyDeleteஇது ஷங்கர் படம் என்பதால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை ரோபோ கொல்வது போன்ற காட்சிகள் நிச்சயம் இருக்கும்.
//லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை ரோபோ கொல்வது//
ReplyDeleteமந்திரவாதிகள் தயாரித்த எந்திர தகடு உடலில் இருப்பதால் தலைவர் எந்திரன் என்றே அழிக்கப் படுகிறார்.
இந்தக் கதையில் லஞ்சம் வாங்கும் பயங்கரவாதிகளை தலைவர் கொல்கிறார்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteசின்ன அம்மிணி மேடம்,
ராம்சுரேஷ் சார்,
சினிமா ரசிகன், சார்.
//சின்ன அம்மிணி கூறியது...
ReplyDeleteபாத்து, அடுத்த ரஜினி படத்தை இந்தக்கதையே வச்சி எடுத்தாலும் எடுக்கலாம்.//
ஏறக்குறைய பாபா முதலான படங்களின் சாயலிலேயே இந்தக் கனவு காணப் பட்டது மேடம்.
சுரேஷ்!!!
ReplyDeleteபிச்சுட்டீங்க!
நான் உண்மையிலேயே
கதை இதுதான் போலன்னு
நெனச்சேன்.
அப்புறம் கமென்ட்ஸ்
பாத்துட்டுத்தான்!!!!
உடனே ட்ரான்ஸ்ஃபெர்
வாங்கிகிட்டு சென்னை
போங்க!!1
தேவா.
வாங்க thevanmayam சார்.
ReplyDelete//உடனே ட்ரான்ஸ்ஃபெர்
வாங்கிகிட்டு சென்னை
போங்க!!//
காமடி, கீமடி பண்ணலயே..........
அற்புதமான கற்பனை வளம். காட்சி அமைப்பு, கதாபாத்திரங்கள், மாய மந்திரங்கள் என ரஜினியை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு போயிட்டீங்க.
ReplyDelete//அற்புதமான கற்பனை வளம். காட்சி அமைப்பு, கதாபாத்திரங்கள், மாய மந்திரங்கள் என ரஜினியை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு போயிட்டீங்க.//
ReplyDeleteவாங்க சதங்கா...
பாராட்டுதலுக்கு நன்றி.
இதெல்லாம் ஏற்கனவே ரஜினி படங்களீல் வந்த காட்சிகள்தான். எடிட் மட்டுமே நம்மளோடது
ஆகா, கதை இங்கே வந்து விட்டதா
ReplyDelete// நசரேயன் கூறியது...
ReplyDeleteஆகா, கதை இங்கே வந்து விட்டதா//
vanga sir
Yep. Excellent.
ReplyDeleteYou can beat Shankar.
-Mappla.
வாங்க மாப்ள,
ReplyDeleteபாராட்டுதல்களுக்கு நன்றி
ஆஹா, இத எப்படி மிஸ் பண்ணேன்னே தெரியலயே...
ReplyDeleteமசாலா மிக்ஸ்.. ரொம்ம்ம்ப நல்லா இருக்கு.
get true news about Enthiran roborajiini.com..........
ReplyDeleteபஞ்ச் டயலாக்கு எல்லாம் எப்படி பிடிக்கிறீங்க?
ReplyDeleteரவா கேசரியில முந்திரி தட்டுப்படுற மாதிரி அமர்க்களமா இருக்கு
//காமடி, கீமடி பண்ணலயே..........
ReplyDelete//
எப்டி எப்டி எப்டி தல கலக்கீடீங்க
//மந்திரவாதிகள் தயாரித்த எந்திர தகடு உடலில் இருப்பதால் தலைவர் எந்திரன் என்றே அழிக்கப் படுகிறார்.
ReplyDelete//
இது டெர்மினேடர் மாதிரி இல்லை
கலக்கல் suresh
ReplyDelete@இளைய பல்லவன்
ReplyDelete@robo alias Enthiran
@முரளிகண்ணன்
@jaisankar jaganathan
@T.V.Radhakrishnan
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
//jaisankar jaganathan said...
ReplyDeleteஇது டெர்மினேடர் மாதிரி இல்லை//
கடைசியில் ஒரு கேள்விக்குறி விடுபட்டுவிட்டது என்று நினைக்கிறேன்.
ஆச்சரிய குறி போட்டால் ஒரு பொருளும், முற்றுப்புள்ளி வைத்தால் வேறொரு பொருளும் தரும் வகையில் எழுதியுள்ளீர்கள்.., தல..,
இது எங்கயோ கேட்ட குரல்
ReplyDelete// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteஇது எங்கயோ கேட்ட குரல்//
உண்மைதான் தல.., பல முறை மீள்பதிவிட்ட இடுகைதான்.
கலக்கல் தல
ReplyDeleteகாப்பிரைட் வாங்கிடுங்க....
"படம் வருமுன் விமர்சனமா?
ReplyDeleteஎந்திரன் வந்ததும் என் திறன் புரியும்"
---ரஜினி
சகாதேவன்
கொஞ்சம் வன்முறை, கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம், கொஞ்சம் அறிவு இவை எல்லாம் கலந்த ஒரு மனிதனின் வாழ்க்கைதான் தம்பி வெட்டோத்தி சுந்தரம்
ReplyDeletehttp://www.vettothi.com/
??? Comments Dates..?
ReplyDeleteVoted.
//பிரியமுடன்...வசந்த் said...
ReplyDeleteகலக்கல் தல
காப்பிரைட் வாங்கிடுங்க....
//
நன்றி தல
//சகாதேவன் said...
"படம் வருமுன் விமர்சனமா?
எந்திரன் வந்ததும் என் திறன் புரியும்"
---ரஜினி
//
நன்றி தல
//tataindiaxenon said...
கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com
//
காலம் கடந்துவிட்டது என்று நினைக்கிறேன்
//Anjali said...
கொஞ்சம் வன்முறை, கொஞ்சம் காதல், கொஞ்சம் காமம், கொஞ்சம் அறிவு இவை எல்லாம் கலந்த ஒரு மனிதனின் வாழ்க்கைதான் தம்பி வெட்டோத்தி சுந்தரம்
http://www.vettothi.com/
//அப்படியா தல
//ஸ்ரீராம். said...
ReplyDelete??? Comments Dates..?
Voted.
//
மீள்பதிவு தல, அதனால் அப்போது போட்ட பின்னூட்டங்கள் அந்த அந்த தேதியில் உள்ளன