Wednesday, December 17, 2008

கலைஞருக்கே தெரியாத ரகசியம்?படிக்காதவன் கிளைமாக்ஸ் பகுதியில் சிவாஜி ரஜினியைப் பார்த்து ஒரு டயலாக் சொல்வார்.

அண்ணன் நீதிபதி, ஒரு தம்பி குற்றவாளி, ஒரு தம்பி சாட்சி


என்று சொல்லி கண்ணீர் விடுவார்.

அதே மாதிரி காட்சி குற்றவாளி தம்பிக்கு பதிலாக தங்கச்சி. அது என்ன படம்


அந்த காட்சிக்கு முன் சூழ்நிலையை உணர்ந்த உடனே (குற்றவாளிக் கூண்டில் நிற்பது தம்பிதான் என்ற உண்மையும் சாட்சியாய் நிற்பது மற்றொரு உடன்பிறப்புதான் என்ற உண்மையும்) அண்ணன் நீதிபதி மயக்கம் அடைந்து விடுவிறார்.

அந்தப் படத்திலும் அப்படித்தான் ஆனால் முப்பது வருஷத்துக்கு முன் வந்தது.


சாட்சியாய் நிற்கும் தம்பிக்கு குற்றவாளி அண்ணன் தான் ஆதரவாய் இருப்பார்.

அதிலும் அப்படித்தான். குற்றவாளி தங்கச்சிக்கு கிறுக்கு அண்ணந்தான் துணையாக இருப்பார்.

ஆரம்ப கட்டத்திலேயே பெரிய அண்ணனை தம்பிகள் பிரிந்து விடுகிறார்கள். இதில் பெரிய அண்ணனை தங்கை பார்த்ததே கிடையாது. அடுத்த அண்ணனும் நடுவில் பிரிந்து விடுகிறார்.

படிக்காதவன் படத்திலும் அப்படித்தான். கடைசித்தம்பிக்கு பெரிய அண்ணனை அடையாளம் தெரியாது. ஆனால் நடுத்தம்பிக்கு மூத்தவரை நன்றாக அடையாளம் தெரியும்.

கடைசியில் யாரும் குற்றவாளி இல்லை என்று விடுதலை ஆகி குடும்பம் மொத்தமும் சேர சுபம்.

ஒன்று படிக்காதவன் என்றால் மற்றது பராசக்தி. உண்மை. சிவாஜி கணேசன் அவர்களின் அறிமுகப் படத்தில் வந்த பல முக்கிய காட்சிகளை மையப் படுத்தியே படிக்காதவன் படமும் வெளி வந்துள்ளது.


ஐயா! ஜாலி கலைஞருக்கே இந்த ரகசியம் தெரியுமான்னு தெரியல.., ஆனா நாம கண்டுபிடித்துவிட்டோம்
.........................................................................................................................................
திருடா திருடி மற்றும் அன்பே வா படங்களை ஏற்கனவே முதல் பாகத்தில் பார்த்திருந்தாலும் சற்று விரிவாகப் பார்ப்போம்.


அன்பே வா.

ஒரு நேர்மையான தொழிலழிபருக்கும் ஒரு கல்லூரி மாணவிக்கும் இடையே ஏற்படும் காதல்கதை.

திருடா திருடியில் வீட்டுக்கு அடங்க்காத பையனுக்கும் எடுத்தெரிந்து பேசும் பெண்ணுக்கும் இடைப்பட்ட காதல் கதை.

இரண்டு படங்களிலும் ஒருவரை ஒருவர் காலை வாரிக் கொண்டே இருப்பார்கள். உள்ளுக்குள் காதல் வைத்திருந்தாலும் வெளிப்படுத்தினால் எங்கே காமெடி கீமெடி பண்ணிவிடிவார்களோ என்றே நினைத்து கொண்டிருப்பார்கள்.

கிளை மாக்ஸில்கூட இந்த நிலைதான் நீடிக்கிறது. திருடா திருடியில் வீட்டு ஓனர் பொண்ணு வருவது போல் இதில் பழைய நண்பர் அசோகன் வருகிறார். இவர்கள் உள்ளே நுழைவதுகூட இரண்டு படங்களிலும் ஒரு சிறிய இடைவெளியை ஜோடிகளுக்கு நடுவே ஏற்படுத்துகிறது. பின்னர் இவர்களே படம் முடிவதற்கும் ஒரு ஏற்பாடு செய்கிறார்கள்.

கிளைமாக்ஸில் கூட சரோஜாதேவியை எம்ஜியார், துரத்திக் கொண்டே ஓட வில்லன் கூட்டம் வழிமறித்து சண்டை

இதிலும் திருடியை தனுஷ் பின் தொடர ஒரே சண்டை கம் ஜாலி.

பிடிந்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள் .
===========================================================

தமிழ் மணத்தில் சூடான இடுகைகளை எடுத்துவிட்டதாலும் இது மக்களை சென்றடைய வேண்டிய கட்டாயம் ஒன்று இருப்பதாலும் தொடர்ச்சியான பின்னூட்டங்களும் தொடர்ச்சியான ஓட்டுக்களும் இந்த இடுகைக்குத் தேவைப் படுகின்றன.

27 comments:

 1. பராசக்திக்கும் படிக்காதவனுக்கும் நீங்கள் சொல்கின்ற ஒற்றுமை இருந்தாலும் படிக்காதவன் படம் அமிதாப் நடித்து காதர் கான் எழுதிய "குத்தார்" எனும் இந்தி படத்தின் தமிழாக்கம் தான் படிக்காதவன். காதர் கான் பராசக்தி படத்தை பார்த்து விட்டு தான் குத்தார் படத்தின் கதையை எழுதியிருப்பார் என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது.

  ReplyDelete
 2. //பராசக்திக்கும் படிக்காதவனுக்கும் நீங்கள் சொல்கின்ற ஒற்றுமை இருந்தாலும் ///
  ஒவ்வொரு வரும் அவர்களுக்கு தகுந்தார் போல் மாற்றங்கள் செய்து கொண்டே செல்லும்போது இதுமாதிரி புது மாதிரி வந்து விழும். மற்றபடி தீ, பில்லா மாதிரி ஈ யடித்தான் காப்பி வகைஎன்று நான் சொல்ல வில்லை. சின்ன சின்ன மாற்றங்கலாய் எப்படி ஒரு படம் சிதைந்து உரு மாறி வந்தது என்பதை தனியே கூறியுள்ளேன்.  ஒரே கதை தனித்தனிப் படங்களின் ஹீரோக்களாக அஜித், வடிவேலு

  சுட்டி மேல் ஓரத்தில் உள்ளது.  தவிர இது ஒரு பொழுது போக்குதான். யாரையும் குற்றம் சாட்ட அல்ல.

  ReplyDelete
 3. //

  காதர் கான் பராசக்தி படத்தை பார்த்து விட்டு தான் குத்தார் படத்தின் கதையை எழுதியிருப்பார்

  //  பொதுவாக துறையில் உள்ளவர்கள் வெளி மொழி படங்களில், சிறந்த மற்றும் வெற்றி பெற்ற படங்களைப் பார்ப்பது வழக்கம்தான்.  லாவாரிஸ் என்ற அதி பயங்கர செண்டிமெண்ட் கலந்த ஒரு சோகப் படம், பணக்காரன் என்ற பெயரில் கமர்சியல் கலாட்டாவாக வெளி வரவில்லையா..........

  ReplyDelete
 4. வருக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றி சந்தனமுல்லை மேடம்

  ReplyDelete
 5. வணக்கம்
  நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

  http://www.thamizhstudio.com/

  Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

  வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

  Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

  Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

  ReplyDelete
 6. என்னங்க இங்க எதையும் paste பண்ண முடியல? கொஞ்சம் கவனிங்க.

  **படிக்காதவன்** நடுதம்பிக்கு மூத்தவரை நன்றாக அடையாளம் தெரியாது... தெரியாதா தெரியுமா? குழப்புறிங்களே...

  ReplyDelete
 7. சினிமாக்காதலன் தல வாழ்க..........

  ReplyDelete
 8. //பிடிந்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள் //

  இதெல்லாம் சமூகக் கடமை...

  ReplyDelete
 9. //பிடிந்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள் .//

  நான் பிடிச்சதினாலேதான் ஓட்டு போட்டேன்

  ReplyDelete
 10. //குறும்பன் said...

  என்னங்க இங்க எதையும் paste பண்ண முடியல? கொஞ்சம் கவனிங்க.

  **படிக்காதவன்** நடுதம்பிக்கு மூத்தவரை நன்றாக அடையாளம் தெரியாது... தெரியாதா தெரியுமா? குழப்புறிங்களே...
  //

  தெரிகிறது தல.., திருத்திவிட்டேன்,,

  ReplyDelete
 11. //பிரியமுடன்.........வசந்த் said...

  சினிமாக்காதலன் தல வாழ்க..........
  //

  நன்றி தல..,

  ReplyDelete
 12. //பழமைபேசி said...

  //பிடிந்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள் //

  இதெல்லாம் சமூகக் கடமை...
  //


  நன்றி தல..,

  ReplyDelete
 13. //நசரேயன் said...

  //பிடிந்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள் .//

  நான் பிடிச்சதினாலேதான் ஓட்டு போட்டேன்
  //


  நன்றி தல..,

  ReplyDelete
 14. //SUREஷ் (பழனியிலிருந்து) said...

  //குறும்பன் said...

  என்னங்க இங்க எதையும் paste பண்ண முடியல? கொஞ்சம் கவனிங்க.//

  மத்தவங்க பண்ணியிருக்காங்க தல..,

  சில நேரங்களில் எனக்கும் அந்த மாதிரி பேஸ்ட் பண்ணமுடியாம போகுது. அப்ப ப்ரெஷ் பண்ணிட்டு திரும்ப ட்ரை பண்ணினா ஓ.கே ஆயிடுது தல..

  அதாவது ரீஃபெஷ் பண்ணிட்டு

  ReplyDelete
 15. //தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் //

  மேல் நோக்கிய கட்டைவிரல் நண்பர்களே மறந்துபோய் கீழ் நோக்கிய விரலில் இரண்டு நண்பர்கள் அழுத்தியிருப்பது எதிர்மறை ஓட்டாகி இரண்டு கழிந்துவிட்டன..,

  தமிழ்மணத்தில் ஒருகணினிக்கு ஒரு நபர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் விதிகள் கடுமையாக்கப் பட்டுள்ளதை கவனித்தில் கொண்டு நிறைய நேர்மறை வாக்குகள் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

  ReplyDelete
 16. ம்ம்... புரியுது.... நெருப்பு நரி உலவியில paste பண்ணமுடியல. IE ல பண்ணமுடியுது. நான் நெருப்பு நரியை பாவிப்பவன் அதிலுள்ள தமிழ் நீட்சி கொண்டு தமிழ் தட்டச்சு செய்பவன்.
  பல விசைகள் நெருப்பு நரி உலவியில வேலை செய்யவில்லை. IE-ல வேலை செய்யுது.

  This comment box is optimized for IE. என்று மேல எழுதிவிடுங்கள். இஃகிஃகி

  ReplyDelete
 17. //குறும்பன் said...

  ம்ம்... புரியுது.... நெருப்பு நரி உலவியில குறும்பன் said...

  ம்ம்... புரியுது.... நெருப்பு நரி உலவியில paste பண்ணமுடியல. IE ல பண்ணமுடியுது. நான் நெருப்பு நரியை பாவிப்பவன் அதிலுள்ள தமிழ் நீட்சி கொண்டு தமிழ் தட்டச்சு செய்பவன்.
  பல விசைகள் நெருப்பு நரி உலவியில வேலை செய்யவில்லை. IE-ல வேலை செய்யுது.

  This comment box is optimized for IE. என்று மேல எழுதிவிடுங்கள். இஃகிஃகி
  பண்ணமுடியல. IE ல பண்ணமுடியுது. நான் நெருப்பு நரியை பாவிப்பவன் அதிலுள்ள தமிழ் நீட்சி கொண்டு தமிழ் தட்டச்சு செய்பவன்.
  பல விசைகள் நெருப்பு நரி உலவியில வேலை செய்யவில்லை. IE-ல வேலை செய்யுது.

  This comment box is optimized for IE. என்று மேல எழுதிவிடுங்கள். இஃகிஃகி
  //  ஐயா, நானும் நரி உலவி உபயோகம் செய்து பார்த்தேன். ப்ளாக்கர் கணக்கினுள் நுழைந்தபிறகு paste செய்ய முடிகிறது. ப்ளாக்கர் கணக்கினுள் நுழையாமல் பேஸ்ட் செய்ய முடியவில்லை. தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் சொன்னால் சரி செய்ய வசதியாக இருக்கும்

  ReplyDelete
 18. நல்ல ஒப்புமை பதிவு

  ReplyDelete
 19. அன்பே வா திரைப்படத்தை குஷி படத்துக்கு முன்னோடியாகவும் சொல்லலாம்.

  ReplyDelete
 20. "ஐயா! ஜாலி கலைஞருக்கே இந்த ரகசியம் தெரியுமான்னு தெரியல.., ஆனா நாம கண்டுபிடித்துவிட்டோம்."

  நாமெல்லாம் யாரு....

  ReplyDelete
 21. //Kurai Ondrum Illai said...

  நல்ல ஒப்புமை பதிவு
  //

  நன்றி தல..,

  ReplyDelete
 22. //லக்கிலுக் said...

  அன்பே வா திரைப்படத்தை குஷி படத்துக்கு முன்னோடியாகவும் சொல்லலாம்.
  //

  உண்மைதான் தல..,

  அசோகன் கதாபாத்திரத்துக்கு மும்தாஜ் .., ஓரளவு பொருந்திப் பார்க்கமுடிகிறது.

  ReplyDelete
 23. //starjan said...

  "ஐயா! ஜாலி கலைஞருக்கே இந்த ரகசியம் தெரியுமான்னு தெரியல.., ஆனா நாம கண்டுபிடித்துவிட்டோம்."

  நாமெல்லாம் யாரு....
  //


  தொப்புள் கொடி உறவு விட்டுப் போகுமா என்ன..?

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல,,,

  ReplyDelete
 24. எப்படி சொல்ல....


  எனக்கு தெரியலியே....

  ReplyDelete
 25. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன் அவர்களே

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails