Tuesday, April 28, 2009

சுமித்ராவின் சரித்திரம் பக்கம்-1

மணமேடையில் சுமித்ராவின் கண்வர் அந்த கேள்வியைக் கேட்டதும் நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டோம். கல்லூரி என்ற காட்டிற்குள் கட்டவிழ்ந்த கம்பளிப் பூச்சிகளாய் சுற்றியவர்கள்தான் நாங்கள். எங்களில் முதலில் திருமணம் ஆனது சுமித்ராவிற்குத்தான். இன்னும் பயிற்சிக் காலத்தில் நாங்கள் அனைவரும் இருந்ததால் சுமித்ராவின் திருமணத்திற்கு எல்லோரும் சென்றிருந்தோம். மணமக்களுக்குப் பரிசுகளை நாங்கள் கொடுத்தபோது சுமித்ராவின் கணவர் சுமன்குமாரைப் பார்த்து கேட்ட கேள்விதான் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"ஏன் இந்தப் பையன் மட்டும் இவ்வளவு சோகமாய் இருக்கிறான்?" என்று கேட்டார்.

"அடப்பாவி மணமேடையில்கூட என் வாழ்க்கையில் விளையாடுகிறாயா" என்று சொன்னாள் சுமிதரா.
..................................................................................................................................

என்ன நடக்கிறது அங்கே....

..................................................................................................................................

சுமித்ராவும் சுமன்குமாரும் எங்களுடன் கல்லூரியில் படிப்பவர்கள்தான். அடுத்தடுத்த பெயர்களாய் இருப்பதால் செயல் முறை வகுப்புகளில் அவர்கள் பெரும்பாலும் ஜோடியாக இருப்பார்கள். முதலாமாண்டில் எங்களுக்கு சதாரண்மாக எங்களுக்கு எந்த ஒரு உறுத்தலையும் அந்த ஜோடி எங்களுக்கு ஏற்படுத்த வில்லை. முதலாமாண்டு சுற்றுலாச் செல்லும்வரை...................

வழக்கமாக டேபிள்ஸ்... டேபிள்ஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சுமன்குமாருக்கு சீட் போட்டு வைத்திருந்தாள் சுமித்ரா. வண்டியில் ஏறும்போதே எங்களுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. நாங்கள் கடைசியில் ஏறி எங்களுடைய குட்டி குட்டிப் பைகளை கிடைத்த் இடத்தில் வீசிவிட்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தபோது சுமன்மட்டும் அமைதியாக சுமித்ராவின் பக்கத்தில் உட்கார்ந்துவந்தான். அந்த சுற்றுலாவில் ஆண்களும் பெண்களும் கலந்து உட்காரும் அளவு நாங்கள் நாகரிகமெல்லாம் அடைந்திருக்கவில்லை.

இன்னும் சொல்லப் போனால் உடன்பயிலும் பெண்களுக்கு பயந்தோ அல்லது மரியாதை கொடுத்தோ ஒரு ஓரமாய் ஒதுங்கிப் போய்தான் சிகரெட் பிடிக்கும் நிகழ்ச்சி கூட நடந்து கொண்டிருந்தது.

நாங்கல் இருந்த உற்சாகத்தில் எங்களுக்கு இது ஒரு விஷ்யமாகவே படவில்லை. கொடைக்கானலில் போய்சுற்ற ஆரம்பித்தோம். படகுவிடும் இடத்திற்குப் போன போதுதான் எங்களுக்கு இந்த மாற்றம் கொஞ்சம் தட்டுப் பட ஆரம்பித்தது. அந்தப் பகுதியில் நிறையப் பேர் மிதிவண்டி விட்டுக் கொண்டு இருந்தனர். ஏற்கனவே மூத்த மாணவர்கள் சொல்லி இருந்ததால் பின் இருக்கையில் அமர்ந்து வர யாராவது கிடைக்க மாட்டார்களா.. என்று பல மாணவர்களும் வலைப் போட்டு தேடிக் கொண்டிருந்தனர்.

நாங்கள் ஒரு ஓரமாக நின்று இயற்கை அழகையும் இயற்கை அழகை அனுபவித்துக் கொண்டிருந்த காதலர்களின் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தோம். அதுவே ஏதோ சொர்கத்தில் மிதப்பது போல இருந்தது.

அப்படியே திரும்பிப் பார்த்தால் சுமனும் சுமித்ராவும் ஒரே மிதிவண்டியில்........
வழக்கமாக ஒருவர் பின்னால் அமர்ந்துவர முன்னால் இருப்பவர் ஏதோ ஐஸ்வர்யாராய் பின்னால் அமர்ந்திருப்பதாய் நினைத்து மாங்கு மாங்கு வென மிதித்து வருவார். இங்கோ இருவரும் சேர்ந்து மிதித்துக் கொண்டிருந்தனர்.

மற்றவர்களைப் பார்த்து புகைவிட்டே (பொறாமைப் படுவதைக் குறிக்கும் சொல்) காலத்தை ஓட்டிவந்த எங்களுக்கு இந்த ஜோடி அந்தப் புகையை நேரடியாக இருதயத்திற்குள்ளேயே கொண்டு சென்றது. மூச்சுத்திணறலில் அப்போதே சிலர் கல்யாணியிடம் தஞ்சம் புகுந்தனர் (முதலாமாண்டு அல்லவா)

ஒருவாறாக அந்தச் சுற்றுலாவில் உருவான சிலபல ஜோடிகளில் ஒன்றாக சுமன் சுமித்ரா உருவானது.

ஊர்திரும்பும் பணி துவங்கியது. இம்முறையும் சுமித்ராவின் பக்கத்து இருக்கையில் ஒரு பெரிய பை இருந்தது. நல்ல உற்சாகத்தில் இருந்த தோழர்கள்
சுமன் இங்க வாடா.................. உன்சீட் ரெடி....................

என்று உற்க்க சப்தமிட்டனர்.

சுமன் வந்த உடன் சுமித்ரா கூறினாள் உன்னையும் என்னையும் தப்பா பேசுறாங்க நீ வேற சீட்டுக்குப் போ.......

===============(தொடரும்)=====================================

இந்தக் கதை சுபமாகத்தான் முடியும். அதனால் தைரியமாகக் கதையை தொடர்ந்து படிக்கலாம்
இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல

பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு

பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி,

பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும்

பதினாறாம் பகுதி sweet sixteen

பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி

பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம்

பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை

இருபதாம் பகுதி டபுள் மீனிங் 


இருபத்தொன்றாம் பகுதி  நான் சுத்தமானவள் 

தொடரும்..,

16 comments:

 1. mmmmmmmmmmmmmmmmmm

  kojam kilu kilupa ellam serunga

  appothaan kujala irukum bosssssssssss

  ReplyDelete
 2. // கல்லூரி என்ற காட்டிற்குள் கட்டவிழ்ந்த கம்பளிப் பூச்சிகளாய் சுற்றியவர்கள்தான் நாங்கள்//
  நல்ல எழுத்தாற்றல். நல்லா வருவீங்க பாஸ்.

  ReplyDelete
 3. Nalla iruku eppadi thodranum nu potutingale sikirama adutha pathiva podunga

  ReplyDelete
 4. வருக்கைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

  சேரா பாலா சார்,

  ராமலிங்கம் சார்,

  சுரேஷ் சார்..,

  ReplyDelete
 5. சூப்பர் பாஸூ... அடுத்த பதிவு சீக்கிரம் எழுதவும் .. :-) (டென்சன் தாங்கல..)

  ReplyDelete
 6. சைடுல இருக்குற ஜோதிகா.. எப்பிடிங்க புடிச்சீங்க.. பாத்துக்கிட்டே இருந்தேன் தலா.. நல்லா இருக்கு...

  ReplyDelete
 7. //கடைக்குட்டி said...

  சூப்பர் பாஸூ... அடுத்த பதிவு சீக்கிரம் எழுதவும் .. :-) (டென்சன் தாங்கல..)
  //

  நன்றி தல... சீக்கிரம் போட்டுவிடலாம்

  ReplyDelete
 8. //கடைக்குட்டி said...

  சைடுல இருக்குற ஜோதிகா.. எப்பிடிங்க புடிச்சீங்க.. பாத்துக்கிட்டே இருந்தேன் தலா.. நல்லா இருக்கு...
  //

  அந்த படத்தின்மீது சொடுங்குங்க தல.. இந்தமாதிரி நிறைய துண்டுகள் பக்கெட்டுக்குள் இருக்கின்றன

  ReplyDelete
 9. //டக்ளஸ்....... said...

  Superb Story ...
  //


  நன்றி தல...,

  ReplyDelete
 10. //. மூச்சுத்திணறலில் அப்போதே சிலர் கல்யாணியிடம் தஞ்சம் புகுந்தனர் (முதலாமாண்டு அல்லவா)
  //

  கல்யாணி. என்னது தல. புரியல

  ReplyDelete
 11. தல,

  எனக்கும் ஒரு kalyaani வேணும் தல.

  வெங்கட்,
  வெடிகுண்டு வெங்கட்.

  ReplyDelete
 12. alagana kathai thodarnthu eluthungal

  ReplyDelete
 13. //வெடிகுண்டு வெங்கட் said...

  தல,

  எனக்கும் ஒரு kalyaani வேணும் தல.
  //


  அதுதான் உங்கள் விருப்பமா தல..

  ReplyDelete
 14. //sakthi said...

  alagana kathai thodarnthu eluthungal
  //

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails