Monday, May 10, 2010

நெஞ்சோடு நெஞ்சு மோதிய அனுபவம் .., 10-5-10

அண்ணாச்சியின் மனைவி தற்கொலை முயற்சிக்கான காரணத்தைக் கேட்டவுடன்(சுட்டி) அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.  அரசல் புரசலாக திருமணத்திற்கு முன் தற்கொலை முயற்சியெல்லாம் மேற்கொள்ளப் பட்டது. அவர்கள் இருவரின் காதலும் தெய்வீகமானது என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்த கதை ஒரே நேரத்தில் காமடி பீஸ் ஆனதில் அண்ணாச்சிக்கும் துளி கூட வருத்தம் இல்லை. அவர் எப்போதும் எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளக் கூடியவர்.

மகிழ்வுந்து அப்படியே சிங்காரப் பேட்டைக்குள் நுழைந்து அங்குள்ள நண்பரின் வீட்டில் இரவு அடைக்கலம் ஆனோம்.  அன்றிரவு என்ன நடந்தது என்பது போனவர்களின் நினைவுச் செல்களில் திரை போட்டு மறைக்கப் பட்டு விட்டதால் மறுநாள் காலையில் வெகுசீக்கிரத்திலேயே எழுந்து விட்டோம்.  குளித்து தயாராகி ஏலகிரியை நோக்கிச் செல்லத் தொடங்கினோம்.

பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்க திருப்பத்தூரில் சாப்பிடும் முடிவை சற்று முன்னேயே வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் வழியிலேயே கடையை தேடி கண்டுபிடித்தோம். இடைவெளியில் இருந்த ஓரளவு நல்ல கடையில் சாப்பிட அமர்ந்தோம்.  ஒவ்வொருவருக்கும் மூன்று இட்லிகளும், விருப்பப்பட்ட வகையில் ஒரு தோசையும் கூடுதலாக வடையும் சாப்பிட்டோம் சிலர் இந்த அளவுகளில் சற்று கூடுதலாகவே சாப்பிட்டனர். மொத்தம் ஐந்து பேர். பில் கேட்டபோது தலையே சுற்றிவிட்டது. இவ்வளவுக்கும் சேர்த்து மொத்தம் அறுபது ரூபாய்.  நீண்ட தூர பேருந்து நிறுத்தம் செய்யும் இடங்களில் ஒருவர் சிற்றுண்டி மட்டுமே சாப்பிடும் பணத்தில் ஐந்து பேர் சாப்பிட்டு இருந்தோம்.

மகிழ்வுந்தில் பயணம் செய்தோம் செய்தோம், செய்தோம்.  ஏலகிரி மலையின் அடிவாரத்திற்கு சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் குரங்குகள் வந்து சேர்ந்தன. பழனி மலைக்கே மீண்டும் வந்த உணர்வோடு மலைமீது ஏறத் தொடங்கினோம். ஒவ்வொரு வளைவுக்கும் பாரி, ஓரி என்ற வள்ளல்கள் பெயரும் கபிலர், ஔவை என்று புலவர்கள் பெயராக மொத்தம் 14 பெயர்களில் வைத்திருந்தனர்.

எங்களுக்கு ஒதுக்கப் பட்ட்டிருந்த விடுதி அறைகளுக்குச் சென்று மீண்டும் ஒருமுறை தயாராகிக் கொண்டு  கருத்தரங்கு நடந்த டான்பாஸ்கோ பள்ளிக்கு வந்து சேர்ந்தோம்.

=========================================

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறப்பது சரிதானா..,

அண்ணாச்சியோட டேலண்ட்

இதே தளத்திலும் 

============================================

கூட்டு உழைப்பு - இருதயக் குறைபாடு - தொடர் சிகிச்சை

 

தமிழகத்தில் முதன் முறையாக.., 

 கருத்தரங்குத் துளிகள்

http://ruraldoctors.blogspot.com/  

தளத்திலும் எழுதியுள்ள கருத்தரங்கு பற்றிய பிற இடுகைகள். படித்துப் பார்க்க தொடுப்புகள் கொடுத்துள்ளேன்.

============================================================
கருத்தரங்கில் பேசப் பட்ட விஷயங்களைப் பற்றி தனித்தனி இடுகைகளாக கொடுக்கும் எண்ணம் இருப்பதால் அவற்றைப் பின்னர் பார்ப்போம்.

கருத்தரங்கில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்களில் ஒன்று  இது. கல்லூரிக்கால நண்பர்கள் இருவர் சந்தித்துக் கொண்ட காட்சி நாமெல்லாம் நம்ப முடியவில்லை. சினிமாட்டிக்கான கற்பனை என்றெல்லாம் சொல்லும் வண்ணம் அமைந்த ஒரு காட்சி.  இரண்டு நண்பர்கள் வேகமாக ஓடி வந்து ஒருவர் நெஞ்சில் மற்றவர் மோதி தங்கள் பாசத்தை பரிமாறிக் கொண்டனர்.  அவர்களது வேகத்தை நேரில் பார்த்தால் மட்டுமே புலப் படும் என்றுதான் நினைத்திருந்தோம் சில நாட்களுக்கு முன் தொலைபேசியில் அந்த செய்தியைக் கேள்விப் படும் வரை.  மோதியவர்களில் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று முறை சிறந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான விருதை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வாங்கியவர். அவருக்கு இரண்டு விலா எலும்புகளில் விரிசல் ஏற்பட்டு விட்டதாம். அவ்வளவு வேகத்தில் இருவரும் மோதியிருந்தார்கள் . பார்த்தவர்கள் கிலியடையும் வகையில்

============================================================

கருத்தரங்கில் நாங்களும்  சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்க இருந்ததால் போன உடன் சம்மந்தப்பட்ட பொறுப்பாளரைச் சந்தித்து எங்களுக்கான நேரம் கேட்கச் சென்றோம்.

அப்போது

புதிய நண்பர்;  எங்களுக்கு எப்போங்க நேரம் ஒதுக்கி இருக்கீங்க?

பொறுப்பு அலுவலர்:  உங்களுக்கு ஹால் 2, தேநீர் இடைவேளைக்குப் பிறகு

புதிய நண்பர்:-  ஹால் 2 தனியா இருங்குங்க. எங்களுக்கு ஹால் 1. கொடுங்க

பொ. அ. :-  இல்லைங்க பார்த்துத்தான் போட்டு இருக்கோம்.

புதிய நண்பர்:- அங்க கூட்டமே வராதுங்க. தனியா இருக்கு

பொ.அ. கவலைப்படாதீங்க. நாங்க பாதிப் பேர பிரிச்சு அங்க அனுப்புவோம்

புதிய நண்பரின் நண்பர்:- புது கோட் சூட் டெல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கான். கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க.

பொறுப்பு அலுவலர் டென்சனாகி விடுகிறார். வாங்க சார் பார்த்துக்கலாம்.

.......................................

பிற்பகல் கட்டுரை சமர்ப்பித்த பின்னர்.

அதே நண்பர்கள், பொறுப்பு அலுவருடன் பேசும் காட்சி

பொ. அ. :- பார்த்தீங்களா சார். எவ்வளாவு கூட்டம். நீங்க என்னமோ கூட்டமே இருக்காதுன்னு சொன்னீங்க. இப்ப என்ன சொல்றீங்க!

புதிய நண்பரின் நண்பர்:-  எல்லாம் சரி மேடம். எவ்ளோ கூட்டத்த அனுப்பின நீங்க எங்கள அனுப்பாம விட்டுட்டீங்களே..........................

பொ. அ. பரிதாபமாக பார்க்கிறார்.
புதிய ந. ந :- எங்களுக்கு நாளைக்காம். பார்த்து அப்பவும் கூட்டத்தை அனுப்புங்க

================================================================

நான்கைந்து ஆண்டுகாலம் கழித்துப் பார்க்கும் தோழிகள்  பேசிக் கொண்டிருக்கும்போது

உன் வீட்டுக்காரர் என்ன பண்ணுறார்டி?

M.D.(psychiatry) பண்ணுறார்.

உங்கூட குடும்பம் நடத்துறார்ல. கண்டிப்பா தங்கப் பதக்கம் வாங்கிடுவார்.

============================================================

ஏங்க்கா நான் கொடுத்த கிரீம் எப்படி இருந்துச்சு. ( இந்த கும்பல் எம்.எல்.எம் மூலமாக பொருட்கள் விற்கும் கும்பல் போல)

அதை ஏண்டி கேட்கிற. போட்ட உடனே முகமெல்லாம் அலற்சி ஆகி வீங்கிப் போச்சு.

இன்னொரு தோழி: பேசாம வேற யாருக்காவது கொடுத்திடு

எப்படிடி. 2000 போட்டு வாங்கி இன்னொருத்தருக்கு சும்மா கொடுக்கறது

இன்னொரு தோழி( அதே) : அப்ப நீயே டெய்லி போடு. மூஞ்சி வீங்கிட்டு சுத்து
=========================================================

இது போன்று பல சுவையான ஒட்டுக் கேட்டல்களுக்குப் பிறகு சான்றிதழ்கள் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு நாங்கள் திரும்பும்போது எங்களுக்கே தெரியாமல் எங்களைப் புகைப் படம் எடுத்து எங்களுக்கு வழங்கி அசத்தினார்கள் அமைப்புக் குழுவினர்.

எங்களை முதலிலேயே புகைப்படம் எடுத்தது எங்களுக்கு தெரியாது,. ஆனால் எங்களுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியை புகைப்படக்காரர் நிறுத்தி நிதானமாக படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த நண்பர் அவரை அழைத்து எங்களையும் இதே மாதிரி படம் எடுப்பீர்களா? நாங்களும் மேக்கப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறோம் என்றார். புகைப்படக்காரர் அவரையும் நிறுத்தி நிதானமாக எடுத்துக் கொண்டிருந்தார்,  எங்களை படம் எடுத்தது நினைவில் இருந்தாதாலோ என்னமோ எங்கள் பக்கம் அவர் திரும்பவே இல்லை..


மொத்தத்தில் பயணம் சுவையாகவே இருந்தது.

============================================================



=======================================================================



=====================================================================



=========================================================================



====================================================================
சில திரைப்பட காணொளிகளை இணைத்திருக்கிறேன். மின்னஞ்சல் மூலம் வாசிப்பவர்களுக்கு ஏனோ இந்த காணொளிகள் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் தளத்திற்கு வந்து கண்டுகளிக்காறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

6 comments:

  1. நாங்களும் சேர்ந்து ஒட்டு கேட்ட மாதிரி இருக்குதுங்க....சார்..

    ReplyDelete
  2. நாமெல்லாம் எழுத்தாளர்கள் ஆகிவிட்டோமல்லவா சார். அதனால் அப்படித்தான் ஆகிவிடுகிறது.

    ReplyDelete
  3. //மகிழ்வுந்து அப்படியே சிங்காரப் பேட்டைக்குள் நுழைந்து அங்குள்ள நண்பரின் வீட்டில் இரவு அடைக்கலம் ஆனோம். அன்றிரவு என்ன நடந்தது என்பது போனவர்களின் நினைவுச் செல்களில் திரை போட்டு மறைக்கப் பட்டு விட்டதால் மறுநாள் காலையில் வெகுசீக்கிரத்திலேயே எழுந்து விட்டோம்.//

    ஆனா அங்க என்ன நடந்ததுன்னு எனக்கு நல்லாவே தெரியுமே!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  4. //நாமெல்லாம் எழுத்தாளர்கள் ஆகிவிட்டோமல்லவா சார்//

    வாழும் வள்ளுவர் அண்ணன் சுரேஷ் வாழ்க.

    ReplyDelete
  5. //ஆனா அங்க என்ன நடந்ததுன்னு எனக்கு நல்லாவே தெரியுமே//

    ஏதேது? பயங்கரவாதிக்கு எல்லா இடத்திலேயும் ஆட்கள் இருப்பார்கள் போலிருக்கிறதே?

    ReplyDelete
  6. //பயங்கரவாதி டாக்டர் செவன் said...

    ஆனா அங்க என்ன நடந்ததுன்னு எனக்கு நல்லாவே தெரியுமே!
    //

    //King Viswa said...

    //ஆனா அங்க என்ன நடந்ததுன்னு எனக்கு நல்லாவே தெரியுமே//

    ஏதேது? பயங்கரவாதிக்கு எல்லா இடத்திலேயும் ஆட்கள் இருப்பார்கள் போலிருக்கிறதே? //

    அதனால்தான் அவர் உலகப் பயங்கரவாதி, மலையில் கொண்டு சிறைவைத்திருக்கின்றனர்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails