Wednesday, April 28, 2010

அண்ணாச்சியோட டேலண்ட்

வண்டி சேலத்தின் முக்கிய வீதி (என்று நினைக்கிறேன்)யில் போய் கொண்டு இருந்தபோது நண்பர் கோடைப் பண்பலை போட்டுக் கொண்டிருந்தார். அதில் ஒரு அம்மணி  நேயருடன் கடலைப் போட்டுக் கொண்டிருந்தார்.  படுத்துக் கொண்டு போர்த்திக் கொள்வாரா அல்லது போர்த்திக் கொண்டு படுப்பாரா என்பது பற்றி மிக சீரியஸாக  ஒரு கடலை.  அதை தானைத்தமிழகமே கேட்டு ரசித்துக் கொண்டிருந்தது என்பதை நினைக்கையில் இதயமே புல்லரித்துக் கொண்டிருந்தது.


வழக்கமாக அந்த நேரத்தில்  மகிழ்வுந்தில் இருந்த அனைவருமே  கடமையே கண்ணாக இருக்கும் நேரமானதால் அவர்கள் இது போன்ற கடலைகளையெல்லாம் கேட்டதே இல்லை.  அவ்வப்போது தொலைக்காட்சியில் இது போன்ற கடலைகளை கேட்டிருந்தாலும் பண்பலையில் போட்ட கடலை   பதறவைத்துக் கொண்டிருந்தது.


அந்த மகிழ்வுந்தில் இருந்தவர்கள் யார்? அவர்கள் ஏன்  சேலத்தின் முக்கிய வீதிகளில் சென்றனர்? குறிப்பிட்ட வீதியில் அவர்கள் இறங்க மறுத்தது ஏன் போன்ற விவரங்களை அறிய  இந்தச் சுட்டி உங்களுக்கு உதவும்.

=======================================

இந்த நேரத்தில்  வான வேடிக்கைகள்  விண்ணைப் பிளந்து கொண்டு இருந்தன.  ஏதோ கோவில் திருவிழா போல விஜய் அஜித் ரசிகர்கள் இணைந்து வரவேற்பு வலையங்கள் வைத்திருந்தனர்.  பிரசாந்த்,  அர்ஜுன் போன்றவர்களின் ரசிகர் மன்றங்களைக் கூட காண நேர்ந்தது.

நண்பர்கள் தங்களுக்காகவே வரவேற்பு வாணவேடிக்கைகள் இருப்பதாக மிகவும் மகிழ்ச்சியுடன்  சொல்லிக் கொண்ட்டு ஏறக்குறைய ஒரு மணிநேர டிராஃபிக் ஜாமைப் பொறுத்துக் கொண்டனர்.

இந்த சூழலில் ந்மது இளைய நண்பரின் எம்டியெஸ் அலர ஆரம்பித்தது. அப்போது கோடப் பண்பலையில்  தூங்காதே தம்பி தூங்காதே பாடல் ஒலிப் பரப்பாகிக் கொண்டிருந்தது,.

அந்தப் பாட்டையே இன்னொருவர்


பேசாதே தம்பி பேசாதே என்று பாடிக் கொண்டுவந்தார்.

கடைதனில் பேசியவன் முதல் இழந்தான்.  உயர் கல்வியில் பேசியவன் புகழ் இழந்தான்.  என்று அப்படியே அந்த இடத்திலேயே அந்தப் பாடலை உல்டா அடித்துக் கொண்டே வந்தார்.

ஆனாலும் நமது சிங்கக் குட்டி அந்த டாடா இண்டிகா மகிழ்வுந்தின் ஓர் ஓரத்தில் அமர்ந்து கடலையைச் சார்த்திக் கொண்டு வந்தார்.   இன்னும் சில பாடல்களைப் பாடிய நம்து நண்பர் கொஞ்சம் கடுப்பாகி  அலை பேசியை பிடுங்கி  ஒரு ஓரமாக வீசிவிட்டார்.

வண்டி ஒரு உணவகத்தில் நின்றது. நண்பர் கேட்டார்.

நண்பர் கேட்டார்.
-----------------------------------------------------------------
யார் யாருக்கெல்லாம் கேஸ் ட்ரபுள் இருக்கு

ஏண்ணே..,  ஓட்டல் சரியில்லையா?

இந்த ஓட்டல் சமையல் பூரா கேஸ்ல செய்யராங்களாம். கேஸ் ட்ரபுள் இருக்கறவங்க வேற இடம் பாருங்க.

---------------------------------------------------------------------

ராத்திரி உணவு அமர்க்களமாய் உள்ளே போன பின் பயணத்தைத் தொடர்ந்தோம்.  கொஞ்சம் அப்படி இப்படிச் சென்று கொண்டு இருந்த நேரத்தில் இளஞ்சிங்கம் மீண்டும் தனது அலைப் பேசியில் எம்டியெஸ் கம்பெணியை குழிதோண்டிப் புதைப்பதற்கான வகைகளை ஆராய ஆரம்பித்தது.

டேய், ஃபோனை தூக்கிப் போடல.,  நாங்க உன்னைத்தூக்கி வெளிய போட்டுட்டு போயிடுவோம்.

வேண்டாம்னே அவன் இதுதான் வசதின்னு இங்கியே இறங்கிடுவான்.  பேசாம  வாங்க,

அவன முதல்ல நிறுத்தச் சொல்லு.., அப்புறம் நான் நிறுத்தறேன்.

அண்ணே உங்களுக்கெல்லாம் பொறாமை..,

நீங்க படிக்கும்போது செல் கிடையாது. அப்படியே இருந்தாலும் யாரும் பேசியிருக்க மாட்டாங்க. சின்ன பையன் சந்தோஷமா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலண்ணே..,

ஆமா.., ஆமா..,  இருந்த லேண்ட் லைன்ன கூட இவனுக்கு ஒரு ஃபிகரும்  ஃபோன் பண்ணாது.

டேய்  நாங்கெல்ல்லாம் எப்பவுமே எல்.ஹெச் ல தான் குடியிருப்போம். இங்க வந்தாத்தாண்டா ஃபோனெல்லாம்.  நாங்கதான் டைரக்ட் டீலிங்ஸ் பண்ணுவமே...,

இன்னொருவர்

அண்ணே சும்மா கதை விடாதீங்க.., நீங்க என்ன டீலிங்ஸ் விடுவீங்கண்ணு எங்களுக்குத் தெரியாதா? பத்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வில்ஸ் வாங்கிட்டு ஒரு ஓரமாய் உங்கார்ந்து வர போற ஃபிகர உத்து உத்து பார்ப்பீங்க..,

டேய் எங்க ரேஞ்சே வேற..,

சும்மா கதை விடாதீங்கண்ணே..,  வில்ஸ் வாங்கிக் கொடுத்தது நாணு.

சார் இவர் லவ் மேரேஜ்ன்னு சொன்னாங்க.., மேடம் சூஸைடு அட்டம்ட்டு கூட பண்ணாங்களாமே..,   இளஞ்சிங்கம் ஆர்வமாய் வாய் திறந்தான்.

 ஓ  அதெல்லாம் உனக்கு தெரிஞ்சு போச்சா...!

ஒரு நாள் யாரோ சொன்னாங்க சார்.

அது ஒரு பெரிய கதைடா..,

மாப்பிள்ளை கவர்மெண்ட் வேலை,  தானே சொந்த முயற்சில ஆஸ்பத்திரியெல்லாம் கட்டியிருக்கார், அதுவும் நல்லாப் போயிட்டு இருக்குன்னு தரகர் சொல்லியிருக்கார்.  அவங்க வீட்டலயும் விசாரிச்சுப் பார்த்துட்டு   மாப்பிள்ளை சொக்கத்தங்கம், கடின உழைப்பாளி அப்படின்னு முடிவு கட்டிட்டு  பொண்ணு தர்ரதா ஒத்துக்கிட்டாங்க..,

மேடமும் அப்பா, அம்மா பார்த்து ஓ.கேன்னா சரிதான்னு சொல்லிட்டாங்க.  கடையில் நிச்சயம் பண்ற அன்னைக்கு பார்த்தா மாப்பிள்ளை நம்ம ஆளு..,

மேடம் ஒரே ரகளை,  நான் கல்லை கட்டிட்டி கிணத்துல குதிச்சாலும் குதிப்பேனே தவிர இந்த ஆளக் கட்ட்டிக்க மாட்டேன்னு ஒரே ரகளை, நான் அந்த மாத்திரை முழுங்கிடுவேன் இந்த மாத்திரை முழுங்கிடுவேன்னு ஒரே சீன்.  


அப்புறம் நாங்கெல்லாம் போயி அண்ணன் ரொம்ப நல்லவர்.  காலேஜ்ல கம்ஃப்ளீஷன் வாங்கின அன்னைக்கே வேற ஆளா மாறிட்டார்.  ஊரில் அவர் ஒரு பெரிய புள்ளி, அப்படி இப்படின்னு சொல்லி  ஒரு பில்டப் கொடுத்து மனச மாத்தினோம்.  ஆனா அதயே இவர கல்யாணம் பண்ணிக்கறதுக்காக நடந்ததாச் சொன்னார் பார்த்தியா...,  அங்கதாண்டா இருக்கு அண்ணாச்சியொட டேலண்ட்.

பழச விடுங்கடா..,  இப்ப அவன் எம்டியெஸ ஆஃப் பண்ணுவானா மாட்டானா? அதச் சொல்லச் சொல்லு..

அண்ணே அந்த பாட்டரியும் அவுட்டுண்ணே..,  இனி நம்மளோடதான் அவன் பேசி ஆகணும்.

பேசிக்கொண்டே வண்டி நகர்ந்து கொண்டு இருந்தது.

10 comments:

  1. சுரேஷ் சார்,

    மீ த ஃபர்ஸ்ட்டு!

    பதிவைப் மீண்டும் படித்து விட்டு வருகிறேன்!

    ReplyDelete
  2. வருங்கால, ஐயம் சாரி,

    நிகழ்கால எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுரேஷ் அண்ணன் வாழ்க

    ReplyDelete
  3. அண்ணே டீ இன்னும் வரல.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி தல

    //பத்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வில்ஸ்//

    அண்ணாச்சியின் காலகட்டம்

    ReplyDelete
  5. //பத்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வில்ஸ்//

    நிசமாவா சார்...?

    ReplyDelete
  6. அன்ஃபார்ச்சுனேட்லி என்னையெல்லாம் இந்த கான்ஃபரன்ஸுக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லீட்டாங்க!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  7. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    கதை சூப்பருங்கோ... //

    நன்றி தலைவரே..,

    ReplyDelete
  8. //பட்டாபட்டி.. said...

    //பத்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வில்ஸ்//

    நிசமாவா சார்...? //

    அண்ணாச்சி கல்லூரியி படித்த காலம் எனக் கொள்க!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    ReplyDelete
  9. //பயங்கரவாதி டாக்டர் செவன் said...

    அன்ஃபார்ச்சுனேட்லி என்னையெல்லாம் இந்த கான்ஃபரன்ஸுக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லீட்டாங்க!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.//

    முதல்லயே சொல்லியிருந்தா நீதிமன்றத்தில வழக்கு போட்டிருக்கலாமே தல..,

    இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல

    உங்கள தடுத்தது யாருன்னு சொல்லுங்க தல தூக்கிடுவோம்,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails