Monday, April 26, 2010

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறப்பது சரிதானா..,

தமிழக சுகாதார அமைப்பின் சார்பாக ஒரு கருத்தரங்கம் ஏப்ரல் 9, 10ம் தேதிகளில் நடைபெறுகிறது என்ற செய்தியும் அதில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும்  தங்கள் அனுபவங்களை ஆராய்ச்சிகளை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் மார்ச் மாதத்தில் எங்களுக்கு தகவலும் சில தினங்களில் அழைப்பிதழும் கிடைத்தது. 

இந்த அமைப்பு உருவாக்கமே நாட்றாம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலரின் எண்ணத்தில் உருவானதாக விழாவில் பேசியவர்கள் சொன்னார்கள். இதில் கலந்து கொள்வதற்காக சுகாதாரச் செயலர் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் போன்றவர்களையெல்லாம் அழைத்திருந்தனர்.

நடைபெறும் இடம் வேலூர் மாவட்டம் என்றதுமே ஆஹா..,  ஊரைவிட்டு வெகுதூரம் என்பதே ஒரு மகிழ்ச்சியான விஷயமாகப் பட்டது .

அடுத்ததாக கலந்து கொள்வதற்கு, தங்குவதற்கு சாப்பிட எல்லாம் நாமே காசு கொடுக்க வேண்டும். அதுவும் முன்னதாகவே கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள்.  இரண்டுநாள்  டென்சன் இல்லாமல் கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்த பின்னர்  அங்கு ஆராய்ச்சி கட்டுரைகள் வழங்கலாம் என்று முடிவானது.

கல்லூரி காலங்களிலேயே நாமெல்லாம் செமினார் பிரசந்த் செய்வது என்றால் நம்மைவிட மக்கள் மிகவும்மகிழ்ச்சி அடைவார்கள்.  வெகுசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள்  புத்தகத்தில் இருப்பதை அப்படியே பேப்பரில் எழுதிவந்து  over head projector மூலம் காட்டி  அதை வித்தியாசமான ஆங்கிலத்தில் ஒப்பித்து  கைதட்டலும் துறையின் முக்கியஸ்தர்களிடம் நல்ல பெயரும் பெற்றுச் செல்வார்கள். சிலர் சிறப்பாக தயாரித்து  எங்களைப் போன்ற சராசையை எட்ட நினைக்கும் மாணவர்களுக்கும் புரியும் வகையில் எடுப்பார்கள்.அவர்களை பல அறிவு ஜீவுகள் ரஜினி படம் பார்ப்பது போல பார்த்து பாராட்டுவார்கள். 

இந்த இடைவெளியில் நாங்களும் செமினார் எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் கொஞ்சம் நகைச்சுவையாக ( திருவிளையாடலில் தருமி சொல்வாரே " கொஞ்சம் நகைச்சுவையா எழுதறேன். இருந்தாலும் புலவன்னு ஒத்துக்கறாங்க - அந்த மாதிரி) வழங்குவது மக்களுக்கு புத்துணர்ச்சி வழங்குவதாக இருக்கும்.  

அதே போல இந்த கருத்தரங்கிலும் நாம் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து தயார் செய்து சுருக்கத்தை ஆராய்ச்சி குழுவிடம் அனுப்பி ஒப்புதல் வாங்கலாம் என்று முடிவுக்கு வந்தோம். நமது சுருக்கத்தை சக மருத்துவர்களுக்கு அனுப்பினோம்.

டேய். அந்தக் காலத்துல ஸ்டூடண்ட்.  ஸ்டூடண்ட மாதிரி சுத்திட்டு இருந்ததை மக்கள் ஒத்துக்கிட்டாங்க. இன்னிக்கு டாக்டர். டாக்டர் மாதிரி சுத்திட்டு இருந்தா ஒத்துக்க மாட்டாங்க. டாக்டராவே ஏதாவது செய்  அப்படின்னு ஒரு பெரிய முட்டுக் கட்டை போட்டனர்.

சரி என்று யோசித்த போதுதான் அப்போதைய முண்ணனி பத்திரிக்கையில் வந்த ஒரு தவறான செய்தியைப் பற்றி உண்மை நிலவரத்தை கண்டறியும் பணியும் மக்களிடம் ஏற்பட்டிருந்த பதட்டத்தை தணிக்கும் பணியும்  எங்கள் தலையில் அமர்ந்திருந்தது, ஓரளவு அதில் வெற்றியும் கண்டுவிட்டதால்  அதையே கருத்தரங்கில் சம்ர்ப்பிப்பது என்று முடிவு செய்து அதை ஆராய்ச்சிக் குழுவிற்கு அனுப்பி ஒப்புதலும் பெற்றுவிட்டோம். 

இனி எப்படி  ஏலகிரிக்கு போவது என்று முடிவு செய்தோம். நான்கு பேர் எங்கள் பகுதியிலிருந்தே புறப்பட ஆயத்தம் ஆனோம்.  பேருந்தா? புகைவண்டியா என்ற கேள்வி எழுந்தது. அருகில் ஜோலார்பேட்டை இருப்பதால் அங்குவந்துவிட்டால் அங்கிருந்து சுலபமாக சாலைப் போக்குவரத்து இருப்பதாக சொன்னார்கள். ஆனால் ஜோலார்பேட்டை போக கோவை , திருப்பூர், ஈரோடு போன்ற ஏதாவது ஒரு ஊரில் வந்து ரயில் ஏற வேண்டும். அதற்கு மூன்று மணி நேரம் சாலைப் போக்க்குவரத்து.

திண்டுக்கல்லில் இருந்து விழுப்புறம் வந்து அங்கிருந்து செல்லலாம் என்றார்கள்.  அதற்கும் திண்டுக்கல்லுக்கு ஒன்னறை மணீநேரமும். விழுப்புறத்திலிருந்து   மூன்று மணிநேரத்திற்கு மேலும் சாலைப் பயணம் செய்ய் வேண்டியிருக்கும் என்ற சூழல்.  பேருந்தில் வந்தால் ஈரோடு மூன்று மணிநேரம் அங்கிருந்து சேலம் ஒன்றரை மணிநேரம், அங்கிருந்து திருப்பத்தூர் இரண்டு மணிநேரம். அங்கிருந்து  ஜோலார்பேட்டை ஒன்றரை மணிநேரம் அங்கிருந்து  மலைப் பயணமாக முக்கால் மணிநேரம்.  இந்த ஒவ்வொருஇடத்திருக்கும் பேருந்து மாறி மாறி மாறி மாறி மாறி பயணிக்க வேண்டிய சூழல்.   முழுப் பயணத்தையும் சாலைப் பயணமாகவே மேற்கொள்வது என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொண்டோம். நண்பரின் டாடாஇண்டிகா வை  தேர்ந்தெடுத்து ஓட்டுனரையும் ஏற்பாடு செய்து விட்டோம்.  நிகழ்ச்சிக்கு புறப்பட சில நாட்கள் இருக்கும்போது இன்னொரு நண்பர் எங்களை அணுகி தானும் வருவதாகச் சொன்னார்.  இல்லையென்றால் அவர் பேருந்தில்தான் வர வேண்டும் என்றும்  அதற்கு வராமலேயே போய்விடலாம் என்றும் சொன்னதில் அவரையும் அழைத்துச் செல்வது என்று முடிவானது, 

வேறொரு வாகனம் கிடைக்காத சூழலில் ஓட்டுநரை கழட்டிவிட்டுவிட்டு நாங்களே ஓட்டுவது என்று முடிவு செய்தோம். பெரும்பாலோனோர் சொந்தமாக ஓட்டுநர் உரிமம் வைத்து இருப்பவர்கள் இருபது கிமீக்கு மேலே போனார் ஓட்டுநர் வைத்துக் கொள்ப்வர்கள்.  இருந்தாலும் இவ்வளவு தூரத்தையும் நாங்களே ஓட்டுவது என்று முடிவு செய்தொம். 

ஒருவழியாக  முதல்நாள் மாலை  வாகனத்தை கிளப்பினோம். நண்பர் ஓட்ட ஆரம்பித்தார். 
ஓட்ட ஆரம்பித்த சில நிமிடங்களில் நண்பருக்கு அலைப்பேசி அழைப்பு 
சார் நேற்று பார்த்தோம். இன்னிக்கும் பார்க்கணும் . நான் பிஸி இது நண்பர். இதே போன்று அவருக்கு சில அழைப்புகள். 

நீ விலகு நான் ஓட்டுகிறேன். மற்றொரு நண்பர் களம் புகுந்தார், அவருக்கும் அதேபோல அழைப்புகள். 

சில மணிநேரம் இதேபோல நடக்க  அனைத்து அலைப்பேசிகளையும்  மௌனவகையில் போடு ஒருகைப்பையில் வைத்துவிட்டு  பயணத்தைத் தொடர்ந்தோம். 


சில நிமிடங்கள் போயிருக்கும்

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறப்பது சரிதானா..,  என்றொரு அலறல். ஒரு அலை பேசியிலிருந்து.  இருப்பதிலேயே இளைஞனான நண்பருக்கு அவரின் வருங்கால வழிகாட்டியின் அழைப்பு சுருக்கமாக சொன்னால்  போலிஸிடம் இருந்து  மிரட்டல் . நண்பர் தனது அலைப் பேசீயை வைத்து பேசிக் கொண்டெ வந்தார்.  வண்டி  பெருந்துரையை கடந்தபோது சன்னமாக அண்ணே எங்க பேட்டரியைக் கொடுங்கண்ணே என்று மற்றொரு நண்பரின் கெஞ்சிக் கொண்டிருந்தா.  அவரோ சத்தமாக கார் ஓடிட்டி இருக்கும்போதெல்லாம் பேட்டரியக் கொடுக்க முடியாது. தவிர  இன்னும் கொஞ்சம் நேரத்தில் கார் லைட்டெல்லாம் போட வேண்டி இருக்கு,  என்று கூறினார். அண்ணே மொபைல் பேட்டரியை க் கொடுங்கண்ணே.  ஒருவழியாக எம்டியெஸ் வைத்திருக்கும் நபரின்  அலைபேசி மூலம் அவர் தொடர்ந்தார்.  அவரே அருகில் இருக்கும் நபரிடம்

எப்ப சார் நாம் ஏற்காடு போவோம் ?என்றார்.

ஏற்காடா? நாமா? நாம போகப் போவது ஏழகிரிடா.., 

சார் அது வறக்காடு சார். இந்த வெயில்ல போனா  கருவாடா போயிடுவோம்.

அடே..,  நம்ம துறை முன்னோடிகள் என்ன சொல்லியிருக்காங்க.  நாமெல்லாம் கிராமத்த நோக்கி போகனும்டா..,  இந்த மாதிரி வறட்சியான இடங்கள்ல தாண்டா நம்ம வேலை அதிகம்.  அதுனாலதான் இந்த மாநாட்ட கூட ஏழகிரில வச்சிருக்காங்க.


நீங்க ஏற்காடுன்னு சொன்னதுனாலதான் நான் வந்தேன். நாம் இப்படியே போறவழில இறங்கிக்கறேன். நீங்க போய்ட்டு வாங்க.

மகனே உன்பேர்ல டிக்கெட் எடுத்தாச்சு,  ரூம் போட்டாச்சு. நீ வரல ...  இனிமேல் நீ வேலைக்கே வர முடியாது. இன்னொரு நண்பர் விரட்ட ஆரம்பித்தார்.

தெரியும்டி.  உன் ஆளு ஏற்காட்டில் இருக்கான்னுதான் நீ கிளம்பி வந்தேன்னு எங்களுக்கு தெரியும். ஆனா நீ ஏற்காடு போகப் போவதில்லை எங்களோடு  ஏலகிரிக்குத்தான் வரப் போறே..

இல்லண்ணே வந்து

இப்படியே வந்து போயின்னுட்டு இருந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் இன்னும் கொஞ்சம் நேரத்தில் வரும் அதுல புடிச்சு தள்ளிவ்விட்டிருவேன்.

அப்பக்கூட நீ ஏற்காடு போக முடியாது

உன் ஆளுக்குச் சொல்லிடுறா...,

இவ்வாறு சொல்லிக் கொண்டு இருக்கும்போதே வண்டி சேலத்தின் முக்கிய வீதியில் செல்ல ஆரம்பித்தது,

அண்ணே இந்த வீதியில்தான் அவன் படிக்கும்போது தங்கி இருந்தான்.

டே தப்பித்தவறி இங்க இறங்கிடாதடா..,   உலக்த்தின் மோசமான கிருமியெல்லாம் இங்க தங்கி இருந்திருக்கு. இறங்கின அப்படியே  பரலோகம்தான். 

வண்டி சென்று கொண்டே இருந்தது.................,

இத்தோடு தொடர்புடைய இடுகைகள்

தமிழகத்தில் முதன் முறையாக.., 


கருத்தரங்குத் துளிகள்

1 comment:

  1. தல ட்ரிப் நல்ல படியா முடிஞ்சதா.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails