Sunday, December 8, 2013

சச்சினை வீழ்த்திய பிபாசா பாசு

டிஸ்கி:- இது கொஞ்சம் காலதாமதமாக வந்த இடுகையாக இருந்தாலுன் கூட இப்போது அலசுவது என்பது கொஞ்சம் நடுநிலையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

சச்சின் ரசிகர்களால் அப்படி இப்படி பேசப்பட்டாலும்  உண்மையில் வெளியான போது தோல்வியான திரைக்கதை அது. சச்சின் வெளியான போது நான் திரைப் படம் பார்க்காமல் இருந்த காலகட்டம் தவிர அப்போது பிளாக்கர் எல்லாம் இருந்ததா என்றும் தெரிய வில்லை. நானும் களத்தில் இல்லை.

 சமீபத்தில்தான் எனக்கு இந்தப் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் ரசிகர்கள்  சிறப்பாகவே சொல்லியிருந்ததால் நானும் நல்ல எதிர்பார்ப்புடந்தான் பார்க்க ஆரம்பித்தேன்.  படம் பார்த்தபின் அது ஒரு படத்துக்கான எல்லா விஷயங்களுடந்தான் இருந்தது. இருந்தாலும் படத்தின் தோல்விக்கான் காரணத்தை அலசியபோது சில் விஷயங்கள் வெளிப்படையாகவே தெரிந்தன.


1.இது போன்ற ஜனரஞ்சகமான படத்துக்கு ஏ சர்டிஃபிகேட் அனாவசியம். குறிப்பாக அதைத் தவிர்த்திருக்க வேண்டும்.  முக்கியமாக குஷி மும்தாஜ் கதாபாத்திரத்திற்கு அந்த வயோதிக தோற்றம் உடைய பிபாசா அம்மையார் தேவையே இல்லை. அதுவும் கல்லூரி முடிய 30 நாட்கள் இருக்கும் நிலையில் நடனப் பயிற்சி எல்லாம் செய்யும் செய்யும் பெண்மணி தேவையே இல்லை.


2.குஷி வெற்றியடைந்திருந்த சில வருடங்கள் வெளிவந்த திருடா திருடியும் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.  இரண்டும் ஈகோ அடிப்படையில் வெளிவந்த படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  திருடா திருடிக்கும்  எம்ஜியாரின் அன்பே வாவுக்கும் உள்ள தொடர்பு ரீமேக் லேபிளை சுண்டி தெரிந்து கொள்ள முடியும். இந்தப் படத்திலும் சரோஜா தேவி சொல்லும் அதே காரணத்தை ஜெனிலியா கிளை மாக்ஸில் சொல்லுகிறார்.   இந்தப் படத்தை குஷி பார்ட் 2 என்றே ரிலீஸ் செய்து இருக்கலாம்.

3.இது போன்ற படங்களுக்கு நல்ல காதல் பாடல்கள் அவசியம். இந்த படத்தில் அவை சுத்தமாக மிஸ்ஸிங்.  ஒருவேளை நல்ல பாடல்கள் இருந்திருந்தால்  இந்தப் பாடல்களும் ஹிட் அடித்திருக்கும்.4. அந்தப் படம் வந்த போது நாயகி தேர்வைப் பற்றியும் குறை சொல்லி பத்திரிக்கைகளில் எழுதியதாக நினைவு. ஒரு வேளை படம் வெற்றி பெற்றிருந்தால் ஜெனிலியாவை சரியான தேர்வு என்று சொல்லி இருப்பார்கள். இப்போது பார்க்கும்போது பாத்திரத்தில் அவர் சரியாகத்தான் பொருந்தி இருப்பதாகத் தோன்றுகிறது.


மொத்தத்தில்  மிக லேசான சருக்கல்களால் மிகப் பெரிய வெற்றிப் படமாக வந்திருக்க வேண்டிய படம் தூங்கி விட்டதாகவே தோன்றுகிறது. சருக்கல்கள் இருந்தாலும் இன்று மீண்டும் ரிலீஸ் செய்தாலும் படம் வெளியான போது கிடைத்த வர வேற்பை விட இன்று நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.

4 comments:

 1. இந்தப் படத்தில் வடிவேலு மட்டும் இல்லை என்றால்... இன்னும்.......

  ReplyDelete
  Replies
  1. இந்தப் படத்துக்கு வடிவேலு ப்ளசும் கிடையாது மைனஸும் கிடையாது தல..,

   Delete
 2. ஹலோ! பழனி டாக்டர்!
  சச்சினை வீழ்த்தியது பிபாசா பாசு இல்லை பாஸ்; சச்சினை வீழ்த்தியது பிசாசு பாஸ்; ஆம், டோனி என்ற பிசாசு பாஸ்! டோனி [நம்ம மாமா துணையுடன் தான்] ஏறி நிக்கலை என்றால் இன்னும் பேட்டைத் தூக்கிக் கொண்டு வந்திருப்பார்! சச்சினுக்கு கும்பானி சப்போர்ட் எப்படி என்று தெரியும்.

  கோலி என்ன ஆட்டம் ஆடினாலும், சப்பை சர்மாவுக்கு (ரோஹித்துக்கு)...கவாஸ்கரும் சாஸ்திரியும் பல்லக்கு தூகுவத்தின் காரணம்?

  அடுத்த சச்சின் நம்ம சப்பை ஷர்மா தான். அவர் எல்லா பந்துகளையும் சாப்பிட்டு விட்டு அவர் average ஐ ஏத்தாமல் அவுட் ஆகமாட்டார். பார்ப்போம் இன்றைக்கு எப்படி ஆடுக்கிறார் என்று!

  தலைப்பில் சூடு அதிகம்; அதான் வந்தேன்.
  தமிழ்மணம் வோட்டு + 1 போட்டாச்சு!

  ReplyDelete
  Replies
  1. தல ஆரம்பத்திலிருந்தே திரைப்படம் என்றுதான் சொல்லி எழுதியிருக்கிறேன்..

   Delete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails