Thursday, December 19, 2013

HUM- திரை விமர்சனம்.

ஹம் படம் தமிழ்நாட்டு மக்களுக்கே பரிச்சயம் ஆன ஒரு படம். இந்தப் படத்தை அடிப்படையாகக் கொண்டு சத்யா மூவிஸ் எடுத்த படம். அந்தப் படத்தின் வெற்றி விழா . அதைத் தொடந்து சத்யா மூவிஸ் நிர்வாகிக்க்கு ஏற்பட்ட பிரச்ச்னைகள் போன்றவை தமிழ்நாட்டுக்கே அந்த ஆண்டு பிஸியாக அமைய வைத்தன.
http://www.webmallindia.com/img/film/hindi/hum_1323173487.jpg
சத்யா மூவீஸாரின் படத்தில் ரஜினிதான் ஹீரோ என்றாலும் ஹம் படத்தில் ரஜினி ஹீரோ அல்ல. பாஷாவில் தம்பியாக ஒரு போலீஸ் வருவாரே அந்தப் பாத்திரம்தான் ரஜினிக்கு. நீங்க யாரு.., பம்பாயில என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்று ரஜினியைப் பார்த்து பேசுவது போல ரஜினி அந்தப் படத்தில் இவர் பேரு டைகர், பம்பாயில் ஒரு கிரிமினல் என்றுஅமிதாப்பைப் பார்த்து பேசுவார். அவ்வளவுதான். இத்தனைக்கும் இந்தப் படம் 1991ல் வந்திருக்கிறது. 91ல் தளபதி, மன்னன் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னாலும் கூட மாப்பிள்ளை, பணக்காரன் என்று எல்லாமே ஹிட்டோஹிட்தான்.  ராமராஜன், மைக் மோகன், டி.ஆர். பாக்கியராஜ் போன்ற வெள்ளிவிழா குரூப்ஸ் தங்கள் கடையை காலி செய்து கொண்டிருக்கும்போது, டெண்டுல்கர் போல நின்று நிலையாக ஹிட்களைக் கொடுத்துக் கொண்டு  தான் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்த ஆண்டு அது. அந்த ஆண்டில் அப்படி ஒரு படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.


அதற்கு முந்தைய சில வருடங்களில் அமிதாப் பச்சனின் படங்கள் வரிசையாக வெற்றியடையாமல் போயின. அமிதாப்பின் வெற்றிப் படஙக்ள் பலவும் ரஜினியால் ரீமேக் செய்யப் பட்டு இங்கு  ஹிட் ஆனவை. தவிரவும் ரஜினி, கமல் ஆகியோர் இந்தியில் நுழைந்த போது அந்தப் படங்கள் ஒரு துவக்கம் கொடுப்பதற்காக அமிதாப் நடித்துக் கொடுத்திருக்கிறார்.  90களில் ரஜினிக்கு தென்னிந்தியா முழுவதுமே ஒரு மார்க்கெட் இருந்தது. நம்பினால் நம்புங்கள் 94- 95 களில் பல தெலுங்கு படங்கள், வெறுமனவே ரம்பாவையும், ரம்யா கிருஷ்ணனையும் நம்பி இங்கு கல்லா கட்டியுள்ளன. இது இல்லாமல் சிரஞ்சீவி, விஜ்யசாந்திக்கெல்லாம் இங்கு தனி மார்க்கெட்டே உண்டு. அதே கணக்கில் பார்த்தால் ரஜினி நடித்திருப்பது தென்னிந்திய சிறு நகரங்களில் ஒரு நல்ல துவக்கத்தையே கொடுத்திருக்கும். இதில் அமிதாப்பிற்கு ஜோடி இருக்கு ஆனால் இல்லை.. அப்போதைய இளைஞன் கோவிந்தாவும் அதில் நடித்திருப்பார்.

இந்த படத்திற்கு பிற்கு நிஜமாகவே அமிதாப் ஒரு ஓய்வு எடுத்தார். அதுவரை இதுதான் கடைசி, இதுதான் கடைசி என்றே சொல்வார்கள். ஆனால் அடுத்த படம் வரும். இந்தப் படம் ஓரளவு ஹிட்தான். அமிதாப்பும் ஓய்வு எடுத்தார். அந்த ஹிட்டுக்கு உதவுவதற்காக ரஜினி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்ததாகவே எனக்குத் தோன்றுகிறது.

=======================================================================

கதைன்னுப் பார்த்தா ஒரு வரிசையில் சொல்லலாம் மூன்று அண்ணன் தம்பிகள். ஒரு குடும்பப்பாட்டு கிளைமாக்ஸ் காட்சியில் அந்தப் பாட்டைப் பாடி எல்லோரும் ஒன்று சேர்வார்கள்.  யதோன் கி பாரத் என்ற பெயரில் வந்த படம். அதில் அண்ணன் தம்பிகள் ரயிலில் பிரிவார்கள். இதில் மூவரும் சேர்ந்தே ஏறிவிடுவார்கள். அதனால் பிரியவெ மாட்டார்கள். கிளைமாக்ஸில் வில்லன் கட்டி வைத்த பின்னர் குடும்பப் பாட்டை பாடி சேர்ந்து விடுவார்கள்.  இது போலவே  அண்ணன் தம்பிகள் கடைசி வரையில் பிரியாமல் நின்று படம் முடிந்த பின் குடும்பப் பாட்டு பாடுவார்கள் விஜய காந்த் நடித்த வானத்தைப் போல படத்தில் ., அதையும் கூட இந்தப் படத்தின் ரீமேக் என்று சொல்லலாம். ஆனால் ஏனோ சொல்லவில்லை

==============================================================
பாஷா இந்தியில் மீண்டும் ரீமேக் செய்யப் பட்டு அங்கும் நன்றாக ஓடியதாகச் சொல்கிறார்கள். அந்த அளவு ஹம் மிலிருந்து பாஷா மாற்றப் பட்டுள்ளது.

இந்தியில் இந்த ஃப்ளாஷ் பேக் அதனுள் ஒரு ஃப்ளாஷ் பேக் என்றெல்லாம் கிடையாது. சீரான வரிசையாகக் காட்சிகள்தான்.   டைகர் (அவர்தாம் மாணிக் பாஷா) ஒரு கோபக் கார இளைஞர் .அவரது நண்பர்  கோன்சால் கண்ணாடி போட்ட இன்னொரு இளைஞர். இவர்கள்  மும்பை தாதா பாக்தாவர் (நம்ம ஆண்டணி)ஐ  எதிர்கிறார்கள்.  கோன்சாலின் சகோதரி ஜும்மா ஒரு நடனமாது. அவரோடு டீ கப் வைத்துக் கொண்டு ஒரு குத்துப் பாடல் இரண்டு முறை இருக்கிறது. டைகரின் அப்பா , மாணிக்கத்தின் அப்பாவைப் போலவே வில்லனிடம் வேலை பார்க்கிறார். டைகரின் அப்பாவுக்கும் இரண்டாம் தாரம் உண்டு. இரு மகன்கள்.  டைகரின் நண்பரைக் கொல்ல, டைகர் கொதித்து எழ  டைகரை காப்பாற்ற டைகரின் அப்பாவும் மாற்றாந்தாயும் பலியாகிறார்கள். கொதித்தெழுந்த டைகர் பாக்தாவாரின் சாம்ராஜ்யத்தை சூரையாடி விட்டு பாக்தாவரை கொல்லப் போகும்போது அங்கொரு டேஞ்சர் காமெடி போலீஸ் அனுபம் கேர் வந்து டைகரை போகச் சொல்லி விடுகிறார். வில்லனின் வீட்டை சூறையாடி விட்டு. அந்த ஊர் ஆண்டனியின் மனைவி குழந்தையை கொன்று விடுகிறார்.

டேஞ்சர் காமெடி போலிஸ் டைகர் ஒரு கெட்டவன் என்று அலுவலக குறிப்பு எழுதி வைத்து விட்டு தொழிலதிபராக செட்டில் ஆகி விடுகிறார். டைகர்தான் வில்லனின் வீட்டைக் கொள்ளையடித்துவிட்டு மனைவி குழந்தையை கொன்றதாக கதை பரப்பி விடுகிறார்.

டைகர் ரயிலில் பாம்பேயை விட்டு வெளியெறுகிறார், அவரது தோழியோடும் சின்னத் தம்பிகளோடும் ஓடும் ரயில் ஏறுகிறார். எல்லோரும் ஏறிய பின் உனது பழைய வாழ்க்கை எதுவும் வேண்டாம். நீ உன் தம்பிகளிடம் முழு அன்பைச் செலுத்து என்று சொல்லி விட்டு ஜும்மா நின்று விடுகிறார்.


கொஞ்சம் மொக்கையாகத் தெரிகிறதா?  அதனால்தான் சத்யா மூவீஸ் கதை இலாகா பிச்சுப் பிச்சு ஃபிளாஷ்பாக் ஆக்கியிருக்கிறார்.அடுத்த காட்சியில் நேராக ஊட்டிக்கு வந்து விடுகிறார்கள்.  பெரிய தம்பி நல்லா படிச்சு இன்ஸ்பெக்ட்ராகி கல்யாணம்  ஆகி நன்றாக பாட்டுப் படிக்கக் கூடிய பெரிய சைஸ் குழந்தை ஒன்றும் இருக்கிறது.  ஃப்ளாஷ் பாக்கில் அவரை விட ச்ற்றே சின்னப் பையனாக இருக்கும் சின்னத்தம்பி கல்லூரி மாணவனாகவே  இருக்கிறார். மக்குப் பையன் ப்போல..

வீட்டில் ஒவ்வொருவரும் அவரை விரட்ட பம்பரமாய் சுற்றி வேலை செய்கிறார். அந்த வேகத்தில் அவர் கீழே விழுகிறார். விழுந்த உடன் இந்தக் குடும்பத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை என்று கூறி அழுகிறார். உடனே  குடும்பப் பாட்டைப் பாடி சமாதானப் படுத்துகிறார்கள்.சின்னத் தம்பி  கோவிந்தா ஒரு பெண்ணைக் காதலிக்க பெண்ணின் தந்தையின் விருப்பத்திற்கேற்ப ஒரு மிலிட்டரிக்காரராக வேடமிட்டு அமிதாப் குடும்பட்த்துடன் செல்ல குட்டு  வெளிப்பட   பெண்ணின் வீட்டில் அவரை த் துப்புகிறார். உடனே ரஜினியின் மனைவியாக வரும் பெண் ஐந்து விரல்களையும் காட்டி குடும்பப் பாட்டை ப் பாடுகீறார்.இதே மாதிரி தங்கையின் திருமணத்திற்காக ரஜினி பேசும்போது அவர்து மாற்றாந்தாய் ரஜினியைப் புகழ்ந்து பேசுவார். ரஜினி எல்லாத்தையும் விட்டு கொடுப்பதாகப் பேசுவார். இதில் பெரிய தம்பியின் மனைவி கூட்டுக் குடும்பத்தைப் ப்ற்றியே பேசுவார்.


அப்படியே படம் செல்ல மெயின் வில்லன் வெளியேறி வருகிறார். உடைந்து போன தன் வீட்டைப் பார்த்து விட்டு டைகரைத்தேட ஆள் அனுப்புகிறார்.  கடைசியில் ஊட்டி வீட்டைக் கண்டு பிடித்து விடுகிறார்கள்.

ரஜினியின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்று மாமியாருக்கும், மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை என்று இவர்களுக்கும் தந்தி வருகிறது.

ரஜினியின் மனைவி, குழந்தையை வில்லன் கடத்தி, தனது உடைந்து போன பழைய வீட்டில் அடைத்து வைக்கிறார். அமிதாப் வீட்டிற்கு ஃபோன் செய்து டைகரைக் கேட்கிறார். ரஜினிக்கு பழசெல்லாம் தெரியாததால் கோன் டைகர் என்று சொல்லி ஃபோனை கட் செய்கிறார்.   ரஜினியின் மனைவி மற்றும் குழந்தையைத் தேடி பெங்களூருவுக்குச் செல்கிறார்கள். இருவரையும் விசாரிக்கும்போது ஒரு டிரைவர் தவறாகப் பேச அமிதாப் கொதித்தெழுந்து அவனைப் புரட்டி விடுகிறார். அதற்கு ஈடாக தமிழில் ரஜினிக்கு கோபம் வரும் காட்சி  படும் பயங்கரமாக இருக்கும்.


அமிதாப் டைகரைப் பற்றி தெரிந்த தன் கடந்த கால நண்பர்களுடன் ஃபோன் செய்ய  ஜும்மா பெங்களூரில் இருப்பது தெரிய வருகிறது. அவரைப் பார்க்க போகிறார். இந்தக் காட்சி வரை படம் வானத்தைப் போல படம் மாதிரியே ஒரு திகிலுடன் தான் செல்கிறது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்த உடன் இந்தக் காட்சி வருகிறது.ஜும்மா பழைய பாடல் ஒரு குஜாலாகப் பாடுகிறார்.  படம் அப்படியே கமர்ஷியல் ஆக்‌ஷன் த்ரில்லராக மாறுகிறது. இந்த நிலையில் ரஜினிக்கு திரும்பவும் ஃபோன் வருகிறது. உன் அண்ணந்தான் டைகர் என்று சொல்கிறது. உடனே அவர் பழைய ஃபைல்களை எடுத்துப் பார்க்கிறார். அதில் இன்ஸ்பெக்டர் கிரிதர் அவரைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதி இருப்பதை படித்து விட்டு வருகிறார்.  வீட்டிற்கு நுழைந்த உடன் அமிதாப்பை இவர் ஒரு பயங்கர ரவுடி என்று வீட்டிற்குள் திட்டுகீறார்.

இந்தக் காட்சியில் அவர் ஒரு இன்ஸ்பெக்டர் என்பது நினைவுக்கு வந்து துப்பாக்கியைக் காட்டி அண்ணனை கைது செய்யப் பார்க்க சின்னத் தம்பி குறுக்கே பாய்ந்து தடுக்க அண்ணன் தப்பிச் செல்ல இணைந்த கைகள் எதிரும் புதிருமாக மாறுகின்றன. அமிதாப் தப்பிச் சென்றவுடன் ஜும்மா பேச ஆரம்பிக்கிறார். தம்பிகளுக்காக அவர் வாழ்க்கையையே தியாகம் செய்ததையும், அதுவும் மாற்றாந்தாய் வழித் தம்பிகள் என்பதையும் எடுத்துச்சொல்கிறா. உடனே ரஜினி திருந்தி விடுகிறார். கதையின் பிற்பகுதி ரஜினியின் மனைவி குழந்தையைச் சுற்றி வந்தாலும் இந்தக் கதாபாத்திரம் 1991ம் ஆண்டு ரஜினிக்கானது அல்ல.   கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே தெரியும் உண்மை. மார்க்கெட்டிங்கிற்காக நடித்துக் கொடுத்தது போலவே இருக்கிறது.


அதற்குள்  அமிதாப் வில்லனின் இடத்திற்குள் சென்று விட ரஜினியின் குடும்பத்தை வெடி குண்டால் கட்டி வைத்து அவரைச் சுற்றி பெரிய அடியாள் படையுடன் வில்லன் நிற்கிறார். வழக்கம்போல உரத்த குரலில் அமிதாப் பேசுகிறார். சண்டை உனக்கும் எனக்கும்தான் . உன் குடும்பத்தை நான் ஒன்றும் செய்யவில்லை என்று பாஷா போலவே பேசுகிறார். குடும்பத்தைக் கொன்றது. சூரையாடியது எல்லாம்  இன்ஸ்பெக்டர் கிரிதர்தான் என்று சொல்கிறார். அதை உறுதி படுத்துவதற்காக சிரிப்பு போலீஸ் கிரிதர் ஹெலிகாப்டரில் வந்து அத்தனை அடியாட்களை மெஷின் கன் வைத்து சுட்டுவிட்டு படத்தின் முக்கிய வில்லனாக பிரமோசன் பெறுகிறார்.  சகோதரர்கள் பாட்டுப் பாடிவிட்டு ஒருவரை ஒரு கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்படியே ரஜியின் மனைவியைத் தூக்கி தண்ணீருக்குள் போட்டு விடுகிறார்கள்.  சண்டை நடக்கிறது.  கடைசியில் ராணுவம் வருகிறது.  பழைய வில்லன் புதிய வில்லன்மேல் வெடிகுண்டினை மாட்டிவிட பாஷா போல அமிதாப் தலைமேல் அவரைத் தூக்கி இவர் போல போடுகீறார். வெடிகுண்டு வெடித்து வில்லன்கள் சாக  இவர்கள் எல்லோரும் ஒன்று சேருகிறார்கள். சுபம்.


படத்தின் முக்கிய வித்தியாசம் என்னவென்றால் டைகர் ஒரு சராசரி கோபக்கார இளைஞர்.  பாஷா அதிபயங்கர சக்திவாய்ந்த கடத்தல் மன்னன்.

மற்றபடி சிரிப்பு போலீஸ்- கேசவன், கோவிந்தா யுவராணி அப்படி இப்படி என்று சின்ன சின்ன மாறுதல்தான்.


வில்லனின் பெண்ணை தூக்கிக் கொண்டு போய் வளர்ப்பதாக சின்ன வயதில் ஏதோ ஒரு படத்தில் பார்த்த நினைவு. ஆனால் ஹம்மில் தாய் மகள் இருவரையும் கொன்று விடுகிறார். அது எந்த படம் என்று இல்லை.

ஜும்மா பாத்திரத்தை ஃபிளாஷ்பாக் காட்சிகளில் தமிழ்படத்தில் காட்டவேவில்லை . ஃப்ளாஷ்பாக்கிலும் நக்மா வந்திருந்தால் ரசிகர்கள் குழம்பாமல் இருந்திருப்பார்கள். படத்தின் பிற்பகுதியில் வரும் ஜும்மா நக்மா போலத்தான் இளமையாக இருக்கிறார்,.No comments:

Post a Comment

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails