Saturday, December 14, 2013

கல்யாண சமையல் சாதம்- ஏ கிளாஸ்

டிஸ்கி:- முன்னொரு காலத்தில் முத்துராமன் மஞ்சுளா நடிப்பில் மறுபிறவி என்றொரு படம் வந்தது. 1995-98ல் சன் டிவியை இரவு 12க்கு மேல் பார்த்த ரசிக கண்மனிகளுக்கு அந்தப் படம் ரொம்பவும் பரிச்சயம். அடுத்த கட்டத்தில் கார்த்திக் ராதா நடிப்பில் வாலிபமே வா வா என்றொரு படம். அதுவும் பிரபலம்தான்.  இப்போது அடுத்த காலகட்டம். அதே போன்றதொரு கதை. ஆனால் கவுதம் கார்த்திக் நடிக்கவில்லை. பிரசன்னா நடித்து இருக்கிறார். அந்தப் படம் தான் கல்யாண சமையல் சாதம்.


முதலில் இந்தப் படம் ஆகா போன்றதொரு படம்போல என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் தயிர் சாதம் மட்டும் சாப்பிடும் எண்ணத்தில் படம் பார்க்க ஆரம்பித்தவனுக்கு ஓப்பனிங்கே ஒரு இன்ப அதிர்ச்சிதான்.  பொண்ணு உட்கார்ந்துட்டா, ஓ உட்கார்ந்துட்டாளா..., நானும்தான் உட்கார்ந்துட்டேன் என்று ஆரம்பித்து,  if u want to talk, first learn WHISPER, உடனே ஒரு கெக்கெபிக்கே சிரிப்பு என்று டைட்டில் போடுகிறது.

முதல் படத்தில் கல்யாணத்திற்கு பிறகு முத்துராமனுக்கு அதில் ஒரு பலஹீனம் தென்படும். அவரது மனைவி தனது தளராத முயற்சியால் அதை சரிசெய்வார்.

இரண்டாவது படத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் ராதா போடும் சண்டை, மற்றும் கார்த்திக்கின் ஃபேவரிட் குத்துச் சண்டை வீரரின் மேல் திணிக்கப் படும் சதியின் காரணமாக கார்த்திக் தானும் ஒரு பலவீனமான மனிதரோ என்று வீட்டைவிட்டு ஓட கிளைமாக்ஸில் ராதா தானே களத்தில் இறங்கி, அவரும் வெற்றி பெற்று கார்த்திக்கையும் வெற்றியடையச் செய்வார். அவர்கள் இருவரும் வெற்றி யடைந்ததை அவர்களது சொந்தக் காரர்கள் வரிசையாக வந்து பார்த்து மகிழச்சியடைந்து செல்வார்கள்.

இந்தப் படத்தில் என்னவென்றால் முழுக்க முழுக்க ஒரு அரேஞ்சுடு மேரேஜ். பார்த்ததும் நாயகியிடம் விழுந்து விடுகிறார். ஹீரோ .   அவரது தாசானுதாசன் ஆகி விடுகிறார்.  திருமணத்துக்கு முன்பே ஒரு முயற்சித்துப் பார்க்க்க ..........., முயற்சி தோல்வி அடைகிறது.    இந்த முயற்சிக்கு முன்னால் சில டயலாக்குகள்,, இப்பெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடிய மக்கள் களத்தில் இறங்கிடறாங்க,, இன்னும் சிலர் கல்லூரியின் போதே.., நீ அப்படி இல்லையில்ல என்று......  அதாவது ஹீரோ ஹீரோயின் சுத்தமானவங்களாம்........., 


இந்த இடத்தில்தான்  பழையகால விமர்சனங்கள் சில நினைவுக்கு வ்ந்தன. சில நேரங்களில் சில மனிதர்கள், அரங்கேற்றம் போன்ற சில ப்டங்கள் பற்றிய பேச்சுவந்த போது அந்த ப் படத்தின் நாயகிகள் எல்லாம் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக படைப்பக்கப் பட்டிருப்பார்கள்,  அதற்காக சிலர் கொதித்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது படைப்பாளிகளால் சொல்லப் பட்ட ஒரு விளக்கம். பொதுவாக நாயகி கெட்டுப் போகிறார் என்றால் அவர் சுத்தமானவர் என்பதை மக்களிடம் காட்டவேண்டுமாம். இயல்பான கதாநாயகி கெட்டுப் போகிறார் என்றால் மக்களிடம் அதிர்ச்சி எதுவும் வராதாம். அதனால் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த கதாநாயகியைக் காட்டுவார்களாம். அவர்கள் கெட்டுப் போனால் பார்ப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி உருவாகுமாம. ஒரு வேளை அதே தியரிதான் இங்கு உபயோகப் படுத்தப் பட்டு நாயகனையும் நாயகியையும் குறிப்பிட்ட சமூகத்தில் காட்டுகிறார்களா என்ற சந்தேகம் கூட எழுகிறது.

நாயகி மனதளவில் நாயகனுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்.  மறுபிறவியில் திருமணம் முடிந்து விட்டதால் மஞ்சுளா தனது கணவனை மீட்டெடுக்க கண்டபடி போராடுவார். பார்க்கும் நமக்கு தண்ணீரே வந்துவிடும் கண்களில்.வாலிபமே வா வாவில் கார்த்திக்கின் போராட்டம்தான் படம் முழுவதும் ராதாவின் அதிரடி கிளைமாக்ஸில்தான்.  கிளைமாக்ஸ் முடிந்ததும் அவர்களின் சொந்தக்காரர்கள் பார்த்து சந்தோசப் படுவதுபோல் நாமும் சந்தோஷப் படுவோம். இதில் கல்யாணம் ஆகவில்லை. தவிரவும் இவர்கள் சுத்தமானவர்கள். அதனால் அவருக்கு முழு அளவில் ஆதரவு கொடுக்கிறார் மனதளவில்.  பல இடங்களில் உட்கார்ந்து இது பற்றிப் பேசுகிறார்.

கோபத்தில் மாப்பிள்ளை ஒரு புஸ்ஸூ என்று சொல்லுவிட்டு ஹீரோ வருத்தப் படுவாரோ என்று இவர் வருத்தப் படுகிறார். மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு பிரச்ச்னை இருப்பது தெரிந்தும் மாமனார் திருமணத்தை தொடர்ந்து நடத்துகிறார். வாழ்க அந்த மாமனார்.   இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்வதற்குக்கூட பிரசன்னா அவ்வளவு கூச்சப் படுகிறார். அந்த அளவுக்கு அவர் நல்லவராம்.  இவ்வாறாக பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்பதிலேயேபடத்தை கொண்டு போகிறார்கள். கடைசியில் அவருக்கு எப்படி சரியானது என்பது தெரியாமலேயே சரியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

6 comments:

 1. பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது...!

  ReplyDelete
  Replies
  1. படம் பாருங்க தல, இன்னும் பல பல விஷயங்கள் ஞாபகம் வரும்

   Delete
 2. தமிழ் மணம் + 1
  பிரமாதம். நல்ல அலசல்!

  ReplyDelete
  Replies
  1. ஏ செண்டர் ரசிகர்களுக்கான படம் தல..,

   Delete
 3. சோக்கா கீதுபா கம்பேரிசன் ரிவீயு...

  ReplyDelete
  Replies
  1. அந்தப் படங்களுக்கு பக்கத்தில்கூட இது வராது தல..,

   Delete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails