Sunday, September 4, 2016

தர்ம துரை யின் மூன்று நாயகிகள்- ஓர் உள்ளார்ந்த பார்வை

தர்ம துரை நாயகிகளைப் பற்றி மட்டும் நாம் பார்ப்போம்.

முதலில் ஸ்டெல்லா,

தன்னை முதன்முதலாக தொட்டுத் தூக்கிய ஆண்மகனை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். அவன் தன்னை நிராகரித்தது தெரிந்த பின்னர் தண்ணி போட்டுக் கொண்டு இரவில் ஹீரோவின் அறைக் கதவைத் தட்டுகிறார். ஹீரோ தன்னை வெறுக்கவில்லை என்பதை தொடர்ந்து ஹீரோவுடன் தொடர்ந்து பழகுகிறார். ஹீரோவின் நிழலாக இருக்கிறார். ஹீரோவுக்கு கஷ்டம் என்றவுடன் துடிக்கிறார். படிப்பு முடிந்த உடன் தன்னை வந்து பெண் கேட்குமாறு ஹீரோவுடன் சொல்கிறார். இந்த அனைத்து நிகழ்விலும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக சுபாஷிணி இருக்கிறார்.

அன்புச்செல்வி

ஹீரோ பயிற்சி பெறும் கிராம மருத்துவமனைக்கு கிராமத்து பாட்டிகளுடன் அவர்களுக்கு உதவியாக வருகிறார். அவரது தாயார் மருத்துவ வசதி இல்லாததால் மரணம் அடைந்ததால் பிறருடன் உதவிக்கு வருவதாகச் சொல்லுகிறார். பார்க்கும் அனைத்து ஆண்களையும் அண்ணே.., என்று அழைக்கிறார். இவரைப் பார்த்த உடன் ஹீரோவுக்கு பிடித்து விடுகிறது. ஊர் பெயர் விசாரித்து பெண் கேட்கிறார்.  ஹீரோவின் சாதிக்காரராக காட்டுகிறார்கள்.  பத்தாம் வகுப்பு படித்தவராக காட்டப் படுகிறார். ஆனால் பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள் எழுதும் எழுத்தாளராக காட்டப் படுகிறார். தனது மாப்பிள்ளை என்று தெரிந்த உடன் ஹீரோவை மாமா என்று அழைக்க ஆரம்பித்து விடுகிறார்.திருமணம் நடக்காது என்ற சூழலில் தற்கொலை செய்து கொள்கிறார்.

முழுக்க முழுக்க தற்கால சிறுநகர, கிராமப்புற ஆண்களின் விருப்பமாக இருக்கிறார்.

புத்திசாலியாக இருக்க வேண்டும். ஆனால் பெரிய புத்திசாலியாக இருக்க கூடாது. பெரிதாக படித்திருக்க கூடாது.ஆனால் நாகரீகமாக இருக்க வேண்டும். நடுவகிடெடுத்து சீவி ஒற்றை சடை போட்டு புடவை கட்டி இருக்க வேண்டும். அனைவரையும் அண்ணனாக  நினைக்க வேண்டும். தன் ஒருவனை மட்டும் மாமாவாக பார்க்க வேண்டும். ஹீரோ விலகினால் தற்கொலை பண்ணிக் கொண்டு சாக வேண்டும்.

எதற்காக இந்தப் படைப்பு என்று தெரிய வில்லை. ஸ்டெல்லாவையே அவர் திருமணம் செய்து கொள்ள நினைத்து அது நடக்காமல் போனதால் ஹீரோ குடிகாரனாக சற்றே மனநிலை சிதறியவராக காட்டி இருக்கலாம். புதிதாக ஒரு பாத்திரம் ஏன் என்று தெரியவில்லை.

ஒரே காரணம் மட்டுமே தோன்றுகிறது. அன்புச் செல்வி அவரது சாதிக்காரர். ஸ்டெல்லா வேறு மதத்தவர். ஸ்டெல்லாவை அவரது சாதிக்காரர் மதத்துக் காரராகக் காட்டி இருந்தால் நிராகரிப்பு இருந்திருக்காது, கதை நகர்ந்திருக்காது. மதத்தின் காரணமாக நிராகரிப்பு என்பதை காட்ட விரும்பாத காரணத்தால் இயக்குநர் ஒரு புதிய கதா பாத்திரத்தை படைத்து சாக வைக்கிறார்.

மீண்டும் ஸ்டெல்லா

வீட்டிலிருந்து தப்பி ஓடும் மது அடிமை, மனநலம் பிறழ்ந்த ஹீரோ முதலில் ஸ்டெல்லாவை நாடிப் போகிறார். அங்கு ஸ்டெல்லா விபத்தில் இறந்ததாகச் சொல்லி விடுகிறார்கள்.  . அதாவது அன்புச் செல்வி, ஸ்டெல்லா இரண்டும் பாத்திரங்களும் இறந்து விடுவதாக காட்டப் படுவதாலேயே இரண்டும் ஒரே பாத்திரம் என்றும் இயக்குநர் சில பல காரணங்களுக்காக இரண்டு பாத்திரங்களையும் பிரித்து வைக்கிறார் என்பது புலப் படும்.

சுபாஷிணி

ஸ்டெல்லா இறந்தது தெரிந்த பின்னர் ஹீரோவின் பயணம் சுபாஷிணியைத் தேடி, சுபாஷிணி கணவனைப் பிரிந்து வாழ்கிறார். ஹீரோ சுபாஷிணியைச் சேர்ந்த உடன் மதுவிலிருந்து மீள ஆரம்பிக்கிறார். மனநலம் பெறுகிறார். சுபாஷிணியும் விவாகரத்து பெற்று விடுகிறார். விவாகரத்து வழக்கு முன்னரே துவங்கப் பட்ட ஒன்று என்று காட்டுகிறார்கள். சுபாஷிணியுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார். சொந்தமாக கிளினிக் வைத்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.


ஹீரோ சுபாஷிணியை சேர்ந்த உடனேயே எல்லாமே சுபம் ஆகி விடுகிறது. சுபாஷிணியும் ஹீரோவுக்காகவே காத்திருந்தது போல இருக்கிறது. ஏதோ ஒரு முன் ஜென்ம பந்தம் தொடர்வது போல காட்டப் படுகிறது. அப்படி என்றால் கல்லூரியிலேயே  இருந்து இருக்க வேண்டுமே, ஆம் கலை நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து  perform செய்திருக்கிறார்கள்.  ஆனால் கல்லூரியில் ஏன் இருவருக்கும் அந்தக் காதல் வர வில்லை என்ற கேள்வி கேட்கும் போது மறைமுகமாக நமக்கே அந்தப் பதில் தோன்றுகிறது. ஸ்டெல்லாவும் சுபாஷிணியும் ஒருவரே..,  
ஹிரோ சுபாஷிணியை சேர்ந்து விடுவதால் அவரது கல்லூரிக் காலக் காதலை சேர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை மீண்டும் பெறுகிறார்.  பின்னர் எதற்காக இத்தனை கதாபாத்திரங்கள் ? யோசிக்கும்போது தோன்றுவது இதுதான்

ஹீரோ கல்லூரியில் ஒரு பெண்ணை விரும்புகிறார். அவர் வேறு மதம் அல்லது சாதியைச் சேர்ந்தவர். ஹீரோ அவ்வாறு காதலிப்பதை இயக்குநர் விரும்ப வில்லை. அது மட்டுமல்லாமல் அவரது வீட்டினரும் விரும்பவில்லை. எனவே அவரது திருமணத்திற்கு ரகசிய வழியில் முட்டுக்கட்டை போடுகிறார்கள். நொந்து போன ஹீரோ மது அடிமையாகி விடுகிறார். வீட்டிலே இருந்து கொண்டு அனைவரையும் கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் குடும்பத்தினரே அவரை கொள்ள முடிவெடுப்பதால் அவரது தாய் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார். அவர் தனது காதலை தேடிப் போய் மகிழ்ச்சியாக வாழ்கிறார். 


மூன்று பெண்கள் இருப்பதன் முழு காரணமும் இயக்குநரே.., ஹீரோ  சாதி மீறி ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்ல அவர் விரும்பவில்லை. இறுதியில் சுபாஷிணியைக் கூட அவர் மணம் செய்து கொள்ளாமல்தான் வாழ்கிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

#darmaduraipsk

6 comments:

  1. கபாலியை விடாவா இது குப்பை!
    குப்பை மேடு கபாலியை பார்க்கும் இது எவரெஸ்ட்!

    ReplyDelete
  2. இதை குப்பை என்று சொல்லவில்லை. ஆனால் கபாலி எந்த விதத்தில் உங்களுக்கு குப்பை என்று தோன்றுகிறது என்று விளக்கமுடியுமா? mr.anony

    ReplyDelete
    Replies
    1. கபாலியில் குப்பையை தவிர வேறு என்ன இருக்கிறது என்று நீங்கள் சொல்லுங்கள் முதலில்..

      Delete
    2. mr.shankar, நீங்கள் கிளர வேண்டியது நுகர வேண்டியது நிறைய இருக்கிறது.

      Delete
  3. நான் சொல்ல வந்தது...
    விஜய் சேதுபதி நடித்து இருந்தால் ரஜினி நடித்த கபாலி படம் மாதிரி குப்பை படம் ஆகமால்,தர்மதுரை மாதிரி நல்ல படம்மாக இருந்திருக்கும்!

    விஜய சேதுபேதி ரஜினியை விட நூறு மடங்கு இயல்பு தமிழில் (அட! தூய தமிழில்!) நடித்த நடிக்கும் நல்ல நடிகர்!

    ReplyDelete
    Replies
    1. இந்தப் படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதியை ஒப்பு நோக்க வேண்டிய அவசியமென்ன? ரஜினி தன்னை நிரூபித்து தனக்குத் தேவையாக பொருளையும் புகழையும் ஈட்டி விட்டார். விஜய் சேதுபதி இன்னும் வளர வேண்டியவர் வெகுகாலம் நிலைத்து நிற்க வேண்டியவர். தர்மதுரை போன்று ஆதிக்க சாதிகளின் கோர முகத்தை வெளிகொணரும் படத்தில் நடித்ததற்காக பாராட்டப் பட வேண்டியவர். அவரை வாழ்த்துக்கள். அவரை ஏற்கனவே வளர்ந்த ஒருவரோடு ஒப்புமை செய்து அழித்து விடாதீர்கள்.

      Delete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails