Friday, September 9, 2016

வடக்கத்தியர் எதிர்க்கும் ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை ஒவ்வொரு வருடமும் கேரளத்தில் கொண்டாடப் படும் விமரிசையான பண்டிகை. தமிழகத்திலும் கேரளாவை ஒட்டிய பகுதிகளில் ஒருநாள் விடுப்பு விடும் அளவிற்கு எல்லோரும் கொண்டாடும் ஒரு பண்டிகை.

மகாபலி மன்னனை வாமன அவதாரம் எடுத்து மூன்றடி கேட்டு கதைமுடித்தார் விஷ்ணு என்பதுதான் கதை. அந்த மகாபலி மன்னன் தன்னுடைய நாட்டுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வருவதாகவும் மக்களுக்கு நல்லாசிகள் வழங்குவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. இன்றுவரை மக்களை அவரை அன்போடுதான் வரவேற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

மகாபலி மன்னனின் ஆட்சிச் சிறப்பை இந்த ஒரு பாடலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Maveli nadu vaneedum kalam,
manusharellarum onnupole
amodhathode vasikkum kalam
apathangarkkumottillathanum.
adhikal vyadhikalonnumilla
balamaranangal kelppanilla
Dushtare kankondu kanmanilla
Nallavarallathe illa paaril..illa paaril
kallavum illa chathiyumilla
ellolamilla polivachanam
kallampparayum cherunazhiyum
kallatharangal mattonnumilla
Vellikolaadikal naazhikalum
Ellam kanakkinu thulyamaayi..thulyamaayi
When Maveli ruled the land,
All the people were equal-
Times when people were joyful and merry;
They were all free from harm.
There was neither anxiety nor sickness,
Deaths of children were unheard of,
No wicked person was in sight anywhere
All the people on the land were good.
There was neither theft nor deceit,
And no false words or promises.
Measures and weights were right;
There were no lies,
No one cheated or wronged his neighbor.
When Maveli ruled the land,
All the people formed one casteless race




 மகாபலி மன்னரின் ஆட்சியில் மக்கள் அனைவரும் சமமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்திருக்கின்றனர். துன்பங்கள், துயரங்கள் நீங்கி வாழ்ந்திருக்கின்றனர். சிசு மரணம் அவன் ஆட்சியில் இல்லை. (இன்றும்கூட ஒரு நாட்டின் மருத்துவ வசதியினை தெரிந்துகொள்ள குழந்தைகள் மரணவிகிதத்தைத் தான் எடுத்துக் கொள்கின்றனர்.) அங்கு பொய், புரட்டு கிடையாது, ஏமாற்று கிடையாது.  சாதி வித்தியாசமற்ற ஒரு இனத்தை உருவாக்கி வாழ்கின்றனர் என்று இந்தப் பாடல் சொல்கிறது.


இவ்வளவு நல்லவரான மகாபலி சக்கரவர்த்தியினை  போரிட்டு ஜெயிக்க முடியாத விஷ்ணு மூன்றடி பிச்சை கேட்டு பாதாள உலகத்திற்கு அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.   இந்தக் கதையில் எப்படிப் பார்த்தாலும் மகாபலிதான் ஹீரோ , விஷ்ணுதான் வில்லன்.

மகாபலியை கதை முடிப்பதற்கு பொறாமையைத்தவிர வேறு காரணம் தேடினாலும் கிடைக்கவில்லை.


இந்த கதைகளை, இது போன்ற பாடல்களை ஒவ்வொரு ஆண்டும் சொல்லிதான் கேரள மக்கள் தங்கள் மக்களை வளர்க்கிறார்கள். அதனால் கூட கேரளாவில் அதிக அளவில் இந்துக்கள் அல்லாத மக்கள் (பெரும்பாலும் மதம் மாறிய மக்கள்)  இருப்பதாகச் சொல்லலாம். இது போன்ற கதைகள் கேரளாவை விட்டு வெளியே சொல்லப் படுவது  பழம் நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதாக வடநாட்டு பழமை வாதிகள் நினைக்கிறார்களாம். அதனால் ஓணம் பண்டிகை கேரளாவை விட்டு வெளியே கொண்டாடப் படுவதை அவர்கள் விரும்பவில்லையாம்.  


பின்னினைப்பு:- ஒருவேளை நரகாசுரன் கதையும் இப்படித்தானோ? 

பின்னிணைப்பு:- வாமன அவதாரத்திற்கு பிறகு அடுத்தடுத்த யுகங்களில்தான் ராம, கிருஷ்ண அவதாரங்கள் வருகின்றன. ஒருவேளை மகாபலி உயிருடன் இருந்தால்  அவர் உருவாக்கிய சாதி வித்தியாசம் அற்ற ஏற்ற தாழ்வற்ற சமுதாயம்தான் இருந்து இருக்குமா?

No comments:

Post a Comment

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails