அந்த வகையில் கதை எண் 1 பெரிய பொழுது போக்கு சித்திரமாக அமைந்தது।
இப்போது எந்திரனை கல்லூரியில் வைத்துப் பார்க்கும் நம்முடைய சின்ன ஆசை।
ரோபோ ஒரு கல்லூரி மாணவன்। இரண்டாம் ஆண்டு எந்த நேரமும் புத்தகம் கையுமாக இருப்பவர்। வம்பு தும்பு எதர்க்கும் போகாதவர்। (சூப்பர் ஸ்டாரின் இளமையான தோற்றத்திற்காக இருபது கோடி செலவிடப் படுகிறது)। அவரது அமைதியான அறிவான நடவடிக்கைகளாலும், கல்லூரியில் உள்ள எறும்புகளுக்கு கூட உதவும் எண்ணமும் இருப்பதாலும் கல்லூரியின் கனவுக் கன்னி ஐஸ்வர்யா அவர் மேல் காதல் கொள்கிறார்। [ஐஸ்வர்யாவின் இளமையான தோற்றத்திற்காக பத்துக் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது]। சூப்பர் ஸ்டார் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்। தனக்கு அதிகமான வேலைகள் இருப்பதாகவும் தன்னால் காதலில் எல்லாம் ஈடுபட முடியாது என்றும் கூறுகிறார்।
அதிர்ச்சி அடையும் ஐஸ்வர்யா தனது காதலில் என்ன குறை என்று ஆக்ரோஷமாக கேள்வி கேட்கிறார்। இன்றைய இளைஞர்கள் போல தான் ஒன்றும் டைம்பாசுக்காக காதலிக்க வில்லை என்றும் இரண்டுநிமிடங்கள் இடைவிடாது வசனம் பேசுகிறார்। இளைஞர்களைப் பற்றி பேசும்போது மட்டும் அவரது காது துடிக்கிறது। மற்றபடி அமைதியாக காதலிக்க முடியாது என்று கூறுகிறார்। கோபத்தின் உச்சிக்கே செல்லும் ஐஸ்வர்யா அந்தக் கேள்வியைக் கேட்டு விடுகிறார்
நீங்கென்ன மனுசனா? எந்திரனா? பேருதான் ரோபோன்னா ஆளும் ரோபா மாதிரி இருக்கீங்க।கேட்டுக்கொண்டு இருக்கும் வானத்திற்கு பயங்கர கோபம் வருகிறது। மாநகரத்தின் ஓரத்தில் இருக்கும் கடலுக்கும் பயங்கர கோபம் வருகிறது। இடிமின்னல் கொந்தளிப்பு வருகிறது। ரஜினி அமைதியாக இருக்கிறார்। பக்கத்தில் ஓடும் ரயில் கூட தட தட வென்று ஓடுகிறது। ஐஸ்வர்யாவின் கண்களில் ரத்தம் வடிகிறது , அப்படியே மயங்கிசாய்கிறார்। அவரை ஒரு வயதானவர் தூக்கிகிறார்। மயக்கம் தெளிந்தவுடன் ஐஸ்வர்யாவைப் பார்க்கிறார்।
ரோபோ சாதாரண மாண்வன் இல்லைம்மா அவன நம்பி ஒரு நாடே இருக்கு। என்று சொல்லிக் கொண்டே ஃப்ளாஸ்பேக் போகிறார்।
இளமை கொஞ்சும் கிராமம்। அப்படியே வயல் வெளியிலேயேதான் ஊருக்குள்ளேயும் வெளியேயும் போகும்வழி, வரும்வழி। அதில்தான் பிரசன்னாவும் பிரியா மணியும் பள்ளிக் கூடம் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்। தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன। பிரசன்னாதான் பனிரண்டாம் வகுப்பில் முதல் மாணவன்। பிரியாமணி ஃபெயில்। நான் ஃபெயில் ஆனா என்ன நீதான் பெரிய படிப்பெல்லாம் படிக்க போறயே என்று பிரசன்னாவை வாழ்த்துகிறார்। மெடிக்கல், என்ஞ்னிய்ரிங், அக்ரி, டீச்சர், வக்கீல், போலீஸ் திருடன் என்று எல்லா படிப்புகளுக்கும் அப்ளிகேசன் போடுகிறார்। பிரியா மணியும் அதற்கெல்லாம் ஸ்டாம்ப் ஒட்டிக் கொடுத்துக் கொண்டே கேட்கிறார்। உனக்குத்தான் எதுவேனாலும் கெடைக்குமே ஏன் இப்படி டைம் வேஸ்ட் பண்ணிக் கொண்டு இருக்க, என்கிறார்। பிரசன்னா சிரித்துக் கொண்டே படிவங்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்। சிலநாட்கள் ஆட்டமும் பாட்டுமாக களிகிறது।
முதலில் மெடிக்கலில் இருந்து பதில் வருகிறது। சந்தோஷத்துடன் திறக்கிறார்। பிரசன்னா கடிதத்தை பிரித்த உடன் அப்படியே சோர்ந்து விடுகிறார்। வேகமாக ஓடி வந்து பார்க்கும் பிரியா மணி பிரசன்னாவின் முகத்தைப் பார்க்கும் விளிக்கிறார்। பிரசன்னாவின் விண்ணப்பம் மதிப்பெண்கள் இருந்தும் நிராகரிக்கப் பட்டு விடுகிறது। அடுத்து ஒவ்வொரு விண்ணப்பமும் நிராகரிக்கப் படுகிறது। எல்லா அலுவலகங்களுக்கும் சென்று காரணம் கேட்கிறார்கள் । எல்லா அலுவலகங்களிலும் காரணம் கேட்கிறார்கள்। எல்லா இடங்களிலும் ஒரே பதில்தான் நீ இந்த நாட்டின் குடிமகனே கிடையாது। இந்நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே நாங்க இடம் கொடுக்க முடியும் மற்ற நாட்டு காரர்கள் உங்கள் தூதரகம் மூலமாகத்தான் வரவேண்டும் என்று சொல்லி விடுகிறார்கள்।
அப்போதுதான் அந்த உண்மை தெரிகிறது। பிரசன்னா பிறந்த கிராமம் இன்னும் சுதந்திரம் அடையவே இல்லை। அங்கே யுரேனியம் அதிகம் கிடைப்பதால் ஒரு ஐரோப்பிய நாட்டின் பிடியிலேயே இருக்கிறார்கள்।பிரசன்னா எங்கெங்கோ அலைந்து திரிந்தும் அவருக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்க வில்லை। மனம் உடைந்து போகிறார்। கூடவே பிரியா மணியும் சுற்றுகிறார்। அப்போதுதான் அந்த முடிவு எடுக்கிறார்கள்। இருவரும் ஒன்று சேர்கிறார்கள்।
இந்த மண்ணில் குழந்தைபிறந்தால் அது இந்த நாட்டு குடிமகன் ஆகிவிடுவான்,எனவே நமது குழந்தையை இங்கேயே பெற்றுக் கொண்டு லட்சியத்தை நிறைவேற்றுமாறு கூறிக் கொண்டு உயிரை விடுகிறார்। குழந்தையை பெற்றபின் பிரியாமணியும் உயிரை விடுகிறார்। எந்திரத்தனமாக உழைக்க வேண்டும் என்ற காரணத்தில் ரோபோ என்று பெயர் வைக்கிறார்கள்।
கதையைக் கேட்டவுடன் ஐஸ்வர்யா நெகிழ்ந்து போகிறார்।
எங்க அத்தை எங்க மாமனாருக்கு உதவியது போல நான் இவருக்கு உதவுவேன் என்று சொல்லிக் கொண்டே காஃபி போட்டுக் கொடுக்கிறார்।வெற்றீக் கொடி நாட்டு பாடல் ஆரம்பம் ஆகிறது। பாடலின் ஒவ்வொரு பத்திக்கும் ரஜினி ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி அடைகிறார்। கடைசி வரி வரும்போது அவர் ஐ। ஏ। எஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்று விடுகிறார்।
அவர் நிறைய மதிப் பெண்கள் பெற்றதால் அவரை நேரடியாக உள்துறைச் செயலராக நியமிக்கிறார்கள் , ( இது இரண்டாவது முறையாக நிகழ்த்தப் படும் சாதனை। ஏற்கனவே தென்னவனில் விஜயகாந்த் குறைந்தவயதில் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டு இருக்கிறார்) ।
அலுவலகத்தில் கோப்புகளைப் பார்த்துக் கொண்டே வருகிறார்। அப்போது அதிர்ச்சிகரமான உண்மை வெளிவருகிறது। பிரசன்னா பிறந்த கிராமத்தை ஆளூம் ஐரோப்பிய மன்னராக ஐஸ்வர்யாவின் தந்தையே இருந்து வருகிறார்। அதனால் ஜோடிகளுக்கு நடுவே பிரச்சனை வருகிறது। தலைவர் சோகமாக முந்திரி தோப்பைச் சுற்றிவந்து பாட்டுப் பாடுகிறார்।
இப்படி ஒரு கிராமம் இருப்பது மந்திரி ஒருவருக்கு தெரிந்து விடுகிறது। அவர் உலக பயங்கரவாதிகளுடன் கூட்டணி அமைத்து ஐஸ்வர்யாவின் தந்தை நாட்டைக் கைப் பற்றிவிடுகிறார்। பிரசன்னாவின் கிராமத்தில் உள்ள யுரேனியத்தைக் கைப் பற்றி உலக அணுஆயுதங்களை வளர்த்த் முயற்சிக்கிறார்। இந்த தகவல்களை ஐஸ்வர்யா வந்து சொன்னவுடன் பொங்கி எழும் சூப்பர் ஸ்டார்। தனி ஆளாக ஐஸ்வர்யாவின் நாட்டிற்குச் சென்று அவரது தந்தையை விடுவிக்கிறார்।
பிரதான வில்லனான அமைச்சருடன் ஒத்தைக்கி ஒத்தை சண்டை போட்டு அழிக்கிறார்।
ஐஸ்வர்யாவை மணந்து கொண்டு தனது சொந்த கிராமத்திற்கு மன்னராக திரும்பி வருகிறார்।
சுபம்।
=================================================================
ஹி ஹி மீள்பதிவுதான்,
வெளிவந்துள்ள எந்திரன் பாடல்கள் இந்தக் கதைக்கு மிக அழகாகப் பொருந்துவதைக் கவனியுங்கள்
இந்தக் கதை பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் மேல்நோக்கிய தமிழ்மணக் கட்டைவிரலிலும் தமிழீஷிலும் கிளிக் செய்து விடுங்கள்
நம்ப மாட்டேன்... நம்ப மாட்டேன்....
ReplyDeleteஇது பார்க்கிறததுக்கு கதை போல் இருப்பதால் இதில் ரஜினி நடிக்கவே மாட்டார் என்று நம்புகிறேன்.
வாங்க நையாண்டி நைனா சார்
ReplyDelete//கதை போல் //
ஹா........ ஹா.............
அட்டகாசமான கற்பனை. ரஜினிக்கேற்ற கதை தான்..
ReplyDeleteவாங்க ராம்சுரேஷ்.........
ReplyDeleteநல்லா சிந்திக்கிறீங்க பாஸ்.. நிஜமாவே நீங்க சினிமாவுக்கு போலாம்ங்க..
ReplyDeleteஆனாலும் இன்னும் கொஞ்சம் தீவிரமா இயங்கணும். ஏன்னா நிஜ படங்களே கூட நீங்கள் சொல்வதைவிடவும் பிரமாண்டமாக வந்திருக்கின்றன (உதா : குருவி)
ReplyDeleteஅடுத்த கதை குருவியவிட பிரமாண்டமாய் தயாராகுது பாஸ்
ReplyDeleteவருகைக்கும் உற்சாகத்துக்கும் நன்றி தாமிரா சார்
அட...கதை படிக்கறதுக்கே இவ்ளோ மொக்கைய இருக்கே? இத என்னான்னு தியேட்டர்ல போய் பார்க்கறது?நன்றி டாக்டர் கத்தியே இல்லாமல் அறுவை செய்த ஒரே டாக்டர் பட்டம் போட்டியின்றி உங்களுக்கே (கதைக்கு...!!!) ரஜினிய ஒழிச்சுக் கட்டறதுன்னு முடிவே பண்ணிட்டிங்காப்பா !!!
ReplyDeleteROTFL!
ReplyDeleteஎந்திரன் தயாரிப்பாளர் கைமாறியதிலே ரசிகர்கள் மகிழ்ச்சிhttp://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008
ReplyDeleteகடவுளே சீக்ரமா இந்த படம் வெளிவரணும்...இல்லனா வேற யாரவது இந்த கதையை காப்பி அடிச்சிடபோறாங்க..!
ReplyDeleteசார் இனிமேலாவது பார்த்து சூதனமா நடந்துக்கோங்க ...இல்லனா கதைய சுட்ருவாங்க!
வாங்க மிஸஸ்.டவுட் அம்மா,
ReplyDeleteசந்தனமுல்லை அம்மா,
ஜுர்கேன் க்ருகேர் ஐயா,
மற்றும் மதிப்பிற்குரிய பெயரில்லா...
பாராட்டுதல்களுக்கு நன்றி.
Hi,
ReplyDeleteWish u merry Xmas and Happy New Year 2009 ;) Advanced wishes ;)
Insurance Agent
சங்கர் ஐயா சீக்கிரம் படத்தை வெளியிடுங்க, உங்க கதை எல்லாம் தண்ணி மாதிரி ஓடுது
ReplyDelete"EXCELLENT STORY"...TYR TO WRITE SCREEN PLAY ALSO...FORTUNE FAVOURS....YOU WILL DEFINETELY BECOME A FAMOUS STORY TELLER SHORTLY....
ReplyDeleteYES PL...
ReplyDeleteநன்றி Bendz சார்,
ReplyDeleteநசரேயன் சார்,
RAMASUBRAMANIA SHARMA சார்
வாழ்த்துக்களுக்கும்
பாராட்டுதல்களுக்கும்
ஆதரவிற்கும்.
அட! அட!! அட!!! குப்புற படுத்து ரூம் போட்டு யோசிப்போர் சங்கத்தில் உங்களை உடனடியாக நிரந்தர உறுப்பினராக சேர்த்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்!
ReplyDelete(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது!!)
நன்றி Expatguru சார்.
ReplyDeleteஏன்...ஏன்... ஏனிந்த கொலவெரி ரஜின்னி மேல
ReplyDelete//
ReplyDeleteபிளாகர் ஆளவந்தான் கூறியது...
ஏன்...ஏன்... ஏனிந்த கொலவெரி ரஜின்னி மேல///
நாங்க பாடி பழகிய முதல் பாடலே அண்ணனுக்கு ஜே...........
காளையனுக்கு ஜே..............
அப்படிங்கற உரிமைதான்
//நாங்க பாடி பழகிய முதல் பாடலே அண்ணனுக்கு ஜே...........
ReplyDeleteகாளையனுக்கு ஜே..............
அப்படிங்கற உரிமைதான்//
நீங்க த்த்த்தீதீவிர ரசிகர் என்பது நல்லாவே தெரியுது..
ரஜினி பற்றிய ஒரு விசயம்.. எத்தனை பேர் எவ்ளோ கிண்டல் பண்ணாலும், அது அவருக்கு வளர்ச்சியை தான் குடுக்க்குது.
என்னோட இந்த பதிவ பாருங்க.. முதல்வன் படத்த ரஜினியை கற்ப்னை பண்ணி பார்த்த மாதிரி, இதையும் அப்டியே பார்த்தேன்.. நல்லா தான் இருந்தது.
//ரஜினி பற்றிய ஒரு விசயம்.. எத்தனை பேர் எவ்ளோ கிண்டல் பண்ணாலும், அது அவருக்கு வளர்ச்சியை தான் குடுக்க்குது. //
ReplyDeleteஆமா சார், அஞ்சு மணிநேரத்தில ஐநூறு ஹிட்ஸ் ஆயிருக்கு
உண்மையில் இப்படி வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
ReplyDeleteசிவாஜி இதை விட அட்டாக இருந்தது என்று நினைக்கிறேன்
நன்றி புருனோ சார்
ReplyDeleteஇதைக் கேளுங்க.
ReplyDeleteஒரு நண்பன் எந்திரன் புகைப்படம் பாத்துட்டு, ரஜினி வயசு ஆயிட்டது தெரியுதுன்னான். அதுக்கு ஒரு தீவிர ரசிக நண்பன் சொன்னான்...
'ஐஸ்வர்யா ராய் என்ன சின்ன பொண்ணா. அவ வயசுக்கு பொருத்தமா தெரியணும்கிறதுக்காக ரஜினிக்கு மேக்-அப் அப்படி போட்டிருப்பாங்க.
சீரியசா சொன்னான், இதை!
வாங்க வித்யாசாகரன்
ReplyDelete//'ஐஸ்வர்யா ராய் என்ன சின்ன பொண்ணா. அவ வயசுக்கு பொருத்தமா தெரியணும்கிறதுக்காக ரஜினிக்கு மேக்-அப் அப்படி போட்டிருப்பாங்க.//
உலக அழ்கிதான் வேணும்னா இப்போதைய ரெண்டு ஆண்டுகளில் யாரையாவது பிடித்து இருக்கலாம்
ஐஸ் மாதிரி ஆட்கள் எல்லாம்
சூப்பர் ஸ்டாருக்கு அம்மா, பாட்டி மாதிரி வேடங்களுக்கே சரி
கிகிகிகிகிகி
ReplyDelete//
ReplyDeleteஐஸ் மாதிரி ஆட்கள் எல்லாம்
சூப்பர் ஸ்டாருக்கு அம்மா, பாட்டி மாதிரி வேடங்களுக்கே சரி
//
அப்பவும் ரஜினி அப்பா/தாத்தா வேடங்கள்ல நடிப்பார் பரவாயில்லியா?
ஐஸ் கூட ஜோடி போட்டாகனுங்கிறது தானே என்களோட நீண்ட நாள் கனவு
வாங்க தூயா, ஆளவந்தான்.
ReplyDelete//அப்பவும் ரஜினி அப்பா/தாத்தா வேடங்கள்ல நடிப்பார் பரவாயில்லியா?
ஐஸ் கூட ஜோடி போட்டாகனுங்கிறது தானே என்களோட நீண்ட நாள் கனவு//
எத்தனை கொள்ளுத்தாத்தாவாக நடித்தாலும் பல்லாயிரம் வய்துகள் ஆன சித்தராய் நடித்தாலும் இளைஞனாக ஒரு வேடம் வரவேண்டும்.
இந்தக் கதையில் கூட இளஞ்சோடிகள்தான் அப்பா, அம்மாவாக நடிக்க முடியும்
ReplyDeleteசுரேஷ் சான்சே இல்ல.
ReplyDeleteரொம்ப ரொம்ப அருமையான கதை.
இத நீங்க சினிமாவா எடுக்கற பட்சத்துல நான் ப்ரசன்னா & ரஜினி ரோல்ல டபுள் ஆக்ட் பண்ண தயார்.
Enjoyed and laughed...Thanks.
ReplyDeleteவாங்க இளைய பல்லவன், பெயரில்லா.....
ReplyDeleteஇது மாதிரி நிறைய படம் எடுக்கலாம்.. வாங்க
நல்லா கதை எழுதுகிறீர்கள் ...
ReplyDeleteநன்றி அதிரை ஜமால் அவர்களே...
ReplyDeleteStory Superuuuuuu.......
ReplyDeleteSenthil,
Bangalore
நன்றி நண்பர் செந்தில் அவர்களே..
ReplyDeleteசிவந்த மண் படத்துக்கு ஷங்கர் சாயம் பூசிருக்கிங்க போல ;-)
ReplyDelete//சிவந்த மண் படத்துக்கு ஷங்கர் சாயம் பூசிருக்கிங்க போல ;-)//
ReplyDeleteஇல்லை.. இல்லவே இல்லை..
பழைய விஜயகாந்த் படங்களையும் ரஜினி படங்களையும் கலக்கி சங்கர் சாயம் சேர்த்தது.
தெரியாத்தனமா அலுவலகத்திலே படிச்சி புட்டேன், நான் சிரிக்கிற சிரிப்பிலே எல்லோரும் என்னை லூசு ன்னு நினைச்சி பிட்டாங்க
ReplyDeleteநானும் இன்னொரு வெர்சன் எழுதுறேன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நசரேயன் சார்...,
ReplyDeleteஉங்கள் முயற்சியையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்
//சூப்பர் ஸ்டாரின் இளமையான தோற்றத்திற்காக இருபது கோடி செலவிடப் படுகிறது
ReplyDelete+
ஐஸ்வர்யாவின் இளமையான தோற்றத்திற்காக பத்துக் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது//
சூப்பர் தல.
//மெடிக்கல், என்ஞ்னிய்ரிங், அக்ரி, டீச்சர், வக்கீல், போலீஸ் திருடன் என்று எல்லா படிப்புகளுக்கும் அப்ளிகேசன் போடுகிறார்// தல, அந்த கடைசி வேலை (அரசியல்வாதி) எந்த அப்பிளிகேசனும் இல்லாமல் கிடைக்குமே?
//பிரசன்னா பிறந்த கிராமம் இன்னும் சுதந்திரம் அடையவே இல்லை। அங்கே யுரேனியம் அதிகம் கிடைப்பதால் ஒரு ஐரோப்பிய நாட்டின் பிடியிலேயே இருக்கிறார்கள்// ரூம் போட்டு யோசிப்பீங்களா தல?
//அப்போதுதான் அந்த முடிவு எடுக்கிறார்கள்। இருவரும் ஒன்று சேர்கிறார்கள்// பிரம்மாதம்.
//வெற்றீக் கொடி நாட்டு பாடல் ஆரம்பம் ஆகிறது। பாடலின் ஒவ்வொரு பத்திக்கும் ரஜினி ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி அடைகிறார்। கடைசி வரி வரும்போது அவர் ஐ। ஏ। எஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்று விடுகிறார்// அண்ணாமலை பார்ட் டூ?
//அவர் நிறைய மதிப் பெண்கள் பெற்றதால் அவரை நேரடியாக உள்துறைச் செயலராக நியமிக்கிறார்கள் , ( இது இரண்டாவது முறையாக நிகழ்த்தப் படும் சாதனை। ஏற்கனவே தென்னவனில் விஜயகாந்த் குறைந்தவயதில் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டு இருக்கிறார்)// அங்கதான் எங்க தல நிக்குறார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிங்விஸ்வா..,
ReplyDeleteஆரம்பம் அருமை... போகப்போக அலுப்பு தட்டிப்போச்சு.
ReplyDeleteரிப்ப்பீட்ட்டே....
ReplyDeleteநல்ல பகிர்வுக்கு ஓட்டு போட்டாச்சு :-)
ReplyDelete@ஊர்சுற்றி
ReplyDelete@Starjan ( ஸ்டார்ஜன்
@சிங்கக்குட்டி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,
இதை சினிமாவா எடுத்தா நிஜ எந்திரன விட நல்லாயிருக்கும் போலயே...!!!
ReplyDelete//அம்பிகா said...
ReplyDeleteஇதை சினிமாவா எடுத்தா நிஜ எந்திரன விட நல்லாயிருக்கும் போலயே...!!! //
வாங்க அம்பிகா, மத்த எந்திரன் கதையெல்லாம் படித்துவிட்டீர்களா..,