Monday, May 13, 2013

நான் செய்வது தவறாகக் கூட இருக்கலாம்.

டிஸ்கி:-  இது தவறாக இருக்கலாம். சட்டப் படி தவறாக இருந்தால் கூட சம்பந்தப் பட்டவர்களின் விருப்பப் படி இது சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன். கீழே உள்ள படம் ஃபேஸ்புக்கில் பார்த்தது. இதைப் பலரிடமும் பகிரவேண்டும் என்று நினைப்பதால் இங்கே பகிருகிறேன். படத்தை தனியே சன்னலில் கிளிக் செய்து பிரமாண்டத்தை அனுபவித்து மகிழுங்கள்.
https://www.facebook.com/photo.php?fbid=345073098927907&set=a.140107089424510.21102.140092109426008

தளத்தில் பார்த்தது. இந்தக் காட்சிக்கான விளக்கம்.

கற்பனை புகைப்படம் : அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்
முதலாவது பாகம் - புது வெள்ளம்

காட்சி 1 - பரந்து விரிந்த வீரநாராயண ஏரியின்
அழகை ரசித்தவாறே தென்கோடிக்கு வந்த
வந்தியத்தேவன் கண்ட
காட்சி கற்பனையில்....,  


===========================================================

கல்கியில் எழுத்து வடிவில்  http://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D

===================================================================

This image is a reconstruction of the first few paragraphs of Ponniyin Selvan

Kalki Fans, Don't Miss the relevant paragraphs given below
Those who are not fans of Kalki, you will become a fan, if you read this

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது.

காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் 'வீராணத்து ஏரி' என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது.

நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம்.

வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன.

உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான்.ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.

ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும்? வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார்? தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா? போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா? அதனால் 'யானை மேல் துஞ்சிய தேவர்' எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா?

இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான்! அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வபக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பூரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.

இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளாமரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் வெள்ளம் வந்து ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது.

இந்த மனோகரமான தோற்றத்தின் இனிமையையும் குதூகலத்தையும் அதிகப்படுத்தும்படியான இன்னும் சில காட்சிகளை வந்தியத்தேவன் அங்கே கண்டான்.

அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள்.

சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள்.
"வடவாறு பொங்கி வருது
வந்து பாருங்கள், பள்ளியரே!
வெள்ளாறு விரைந்து வருது
வேடிக்கை பாருங்கள், தோழியரே!
காவேரி புரண்டு வருது
காண வாருங்கள், பாங்கியரே!"
என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத்தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாகப் பாய்ந்தன.

 ==================================================================

மேலே உள்ள படத்தை மேற்கண்ட விளக்கங்களுடன்  https://www.facebook.com/photo.php?fbid=10151604510794828&set=np.65751321.1028319651&type=1&ref=notif&notif_t=close_friend_activity&theater 

பகிர நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

=================================================================

இவ்வளவு பெரிய காட்சியை படத்தில் கொண்டுவந்திருக்கும் போது, அதுவும் பிரம்மாண்டத்தை உணர்த்துகிறது. என்னும் போது பொன்னியின் செல்வன் திரைப்படமாய் வந்து நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு வளர்க்கிறது.  ஒரு வேளை கோச்சடையான் வென்றால் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்தே தீரும்.

Sunday, May 12, 2013

MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

தமிழ்நாட்டில் தமிழ் மண்ணில் கொண்டாடும் விழாக்கள் பல. அதில் பொங்கல் தனிச் சிறப்பு வாய்ந்தது. அதில் மாட்டுப் பொங்கல் தனித்தன்மை வாய்ந்தது.

விவசாயத்திற்கு பலவிதங்களில் மாடுகளின் பங்கு முக்கியமானது. காளைகள் உழுவதற்கு உதவுகின்றன. வண்டிகளை இழுப்பதன் மூலம் பயணத்திற்கும் சரக்கு இடமாற்றத்திற்கும் மிகவும் உதவுகின்றன. பல எந்திரங்களும் எந்திரங்களின் மூலம் இயங்கும் வாகனங்கள் உபயோகத்தில் இருந்தாலும் காளைகளின் பங்கு முக்கியமானது. பசுக்களும் சளைத்தவை அல்ல. பால் பொருட்கள் இல்லாமல் நம்மால் நமது வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாடுபோல உழைப்பு என்பதே விசுவாததிற்கும் கடின உழைப்புக்கும் கூறப் படும் வார்த்தையாக இருக்கிறது.

அவ்வளவு கடுமையாக உழைக்கும் மாட்டுக்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது. அன்று அதிகாலையிலேயே மாட்டைக் குளிப்பாட்டி விடுவார்கள். அன்றைய தினம் விரும்பிய வண்ணம் மாட்டுக்கு மேய்ச்சல் இருக்கும். விரும்பிய வண்ணம் வண்ணங்கள் தீட்டி, கொம்புகள் அலங்கரித்து சில இடங்களில் துணிகள் கூட அணிவித்து மகிழ்வார்கள்.

மாலைப் பொழுதில் பொங்கல்வைத்து அதனை மாட்டுக்கு ஊட்டி அழகு பார்த்து பின்னரே குடும்பத்தினர் உண்டுமகிழ்வார்கள்.

குறிப்பாக அன்றைய தினம் மாட்டுக்கு எந்த வேலையும் கொடுக்க மாட்டார்கள்.

========================================================================

குடும்பத்திற்காக கடினமாக உழைக்கும் இன்னொரு ஜீவன் உண்டு. அவர்தான் அன்னை. அவர் எவ்வள்வு பெரிய நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் குடும்பத்தின் அடிப்படை வேலைகள் அனைத்தையும் செய்வார். குழந்தை வளர்ப்பில் அவரது பங்கு மிக முக்கியமானது.

வெள்ளையர் கண்டுபிடித்த MOTHER'S DAY அன்று அன்னையருக்கு அனைவரும் மரியாதை செலுத்துவார்களாம்.
அன்றும் கூட இனிப்புகளையும் பலகாரங்களையும் செய்து கொண்டாடினால் அதையும் அன்னைதான் செய்ய வேண்டியிருக்கிறது. தாயாருக்கு மட்டும் புத்தாடை என்பதை அந்த தாயாரே விரும்புவதில்லை.


எனவே அன்னையர் தினத்தை அனுதினமும் கொண்டாடி அன்னையரைப் போற்றுவோம். (அதற்காக இன்று கொண்டாடாமல் இருந்து விடவே வேண்டாம். அவருக்கு ஓய்வு கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம்). அன்னை என்றால் உங்களைப் பெற்ற அன்னையை மட்டுமல்ல.
உங்கள் குழந்தையைப் பெற்ற அன்னையையும் தான்.

=======================================================================
இவரும் கூட அம்மாதான்




=================================================================


சில குடும்பங்களில் அம்மா செய்யும் வேலைகளுக்காகத்தான் வேலைக்காரி வைத்திருக்கிறார்கள். பல குடும்பங்களில் அம்மாதான் அந்த வேலைகளைச் செய்கிறார்.

நாளைய தினம் பதிவர்கள் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய கலந்துரையாடலுக்குச் செல்லப் போவதால் இந்தப் பதிவினை இன்றே வெளியிட்டு உள்ளேன்.

குழந்தைகள் மீதான வன்முறைபற்றி நான் எழுதிய இந்தப் பதிவில்

பின்னூட்டத்தில்

"குழந்தையை வேலைக்காரி மாதிரி நடத்தாதே" என்று சொல்லும்போதே, வேலைக்காரிக்கும், வீட்டில் சின்னச்சின்ன வேலைகள் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் எளிதில் புரிந்துவிடும். இதில் நீங்கள் குழம்பிக்கொள்ள வேண்டியதில்லை.
என்று நண்பர் குறிப்பிட்டிருந்தார்.

எனது பதிலில்



பல நேரங்களில் சின்ன சின்னவேலைகளுக்குக் கூட வேலையாட்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். நம்வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளும் நாம் செய்ய வேண்டிய வேலைகள்தான். இதில் வேலைக்காரி மாதிரி நடத்தாதே. என்ற வாக்கியத்தின் பொருளைக் கூற முடியுமா? வேலைக்காரர்கள் என்பவர்கள் அடிமைகள் அல்ல. உங்கள் வேலையையைச் செய்ய உங்கள் உடலும் நேரமும் இடம் கொடுக்காததால் விலை கொடுத்து வேலையை வாங்குகிறோம். அப்படிப்பார்த்தால் உங்களைவிட வேலைக்காரர்களுக்கு சுயமரியாதை அதிகமாக இருக்கவேண்டும். வேலைக்காரர்களைப் போல் குழந்தையை நடத்தாதே என்ற வாசகம் எழும்போதே வேலைக்காரர்களையும் குழந்தைகளையும் அடிமையாக நடத்துவதாக பொருள்படும் அல்லது உங்கள் வேலையை மற்றவர்கள் மேல் திணிக்கும் கொடூர பழக்கத்திற்கு குழந்தையை அடிமைப் படுத்துவதாகப் பொருள்படாதா......


மேலும் இது தொடர்பான விவாதங்களைப் படிக்க இங்கே செல்லவும்

கலந்துரையாடலுக்குச் செல்லும் முன் இது போல இன்னும் பல கேள்விகளுடன் செல்லுங்கள். தெளிவு படுத்திக் கொண்டுவாருங்கள்

டிஸ்கி;- மீள்பதிவுதான். முதன்முதலில் வெளிவந்த தேதியறிய முதல் பின்னூட்டம் பார்க்கவும்

Saturday, May 11, 2013

தேவையா 11ம் வகுப்பு?

12 வகுப்பு ரிசல்ட் வந்த பிறகு பொதுவாக எழும் விமர்சனம். 11ம் வகுப்பு பாடம் சொல்லித் தராமல் நேரடியாக் 12ம் வகுப்பு பாடங்களைச் சொல்லித் தருவதாக எல்லோரும் விமர்சித்து வருகிறார்கள். நாங்கள் படிக்கும்போதும் இதே போன்று சொல்லுவார்கள். என்னோட சந்தேகம் என்னன்னா   11ம் வகுப்பு பாடம் சொல்லித் தராமல் நேரடியாக 12ம் வகுப்பு பாடம் எடுக்க முடியும் அதுவும் மாணவர்களுக்கு புரியும் அப்படின்னா அந்த 11ம் வகுப்பு பாடம் எதற்காக? 

அப்படி சில பாடங்களை எதற்காக கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டுப் பாடமும் அடுத்த ஆண்டிற்காக பாடத்திற்கு அடிப்படையாக இருந்தால்தானே அந்த பாடத்திற்கு ஒரு மரியாதை இருக்கும்? அதை விடுத்துவிட்டு  அங்க 12ம் வகுப்புப் பாடம் சொல்லியே தருவதில்லை என்று புலம்புவதோ அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யச் சொல்லி போராட்டம் நடத்துவதோ வெட்டி வேலை.

===========================================
உடுமலைப் பேட்டைக்கு அருகே உள்ள ஒரு பள்ளியின் விளம்பரம் ஒன்று இன்றைய தினந்தந்தியில் வந்திருந்தது. மாணவர்கள் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதம், பன்னிரெண்டாம் வகுப்பில் அவரது மதிப்பெண் சதவீதம் ஆகியவை பட்டியலிட்டு இருந்தார்கள். நூறுசதவீதம் தேர்ச்சி தரும் பள்ளி அது. பத்தாம் வகுப்பில் 60% கீழே எடுத்த பல மாணவர்களும்  12ல் 80%க்கும் மேல் எடுத்ததாக விளம்பரப் படுத்தி இருந்தார்கள். வாழ்க அந்தப் பள்ளி


தங்கள் பள்ளியில் இத்த்னை பேர் 1150க்கு மேல் எடுத்ததாக தம்பட்டம் அடிக்கும் பள்ளிக்ள் அதே மாணவர்கள் பத்தாம் வகுப்பில் எத்தனை சதவீதம் எடுத்தனர். தங்கள் பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை விளம்பரம்படுத்தி மாணவர்களை எந்த அளவு முன்னேறி இருக்கிறோம் என்று காட்டுவார்களா? அந்த தைரியம், நேர்மை அந்தப் பள்ளிகளுக்கு இருக்கிறதா?

Friday, May 10, 2013

கர்நாடகத் தேர்தலும் +2 முடிவும்

கர்நாடக சட்ட சபை ரிசல்ட் வந்த சூட்டோடு ப்ளஸ் 2 ரிசல்ட் வந்துவிட்டது. கர்நாட்க ரிசல்ட் வந்த உடனே பல இடுகைகள் வந்து கொண்டிருக்கின்றன. நாமும் இடுகை போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்த போது ப்ளஸ் 2 ரிசல்ட்டும் வந்து விட்டது. சரி இதற்காவது ஏதாவது எழுதியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது ஒரு வடிவம் கிடைத்தது. இரண்டையும் எழுதிவிடுவோம் என்று யோசித்துப் பார்த்தால் கடைசியில் பல் ஒற்றுமைகள் இரண்டிலும் இருக்கின்றன.

  • ஒண்ணுமே பண்ணாட்டியும் அன்னை சொன்னதக் கேட்டால் ஜெயிக்கலாம்.
  • பூ பின்னாடி சுத்தற விட கையை நம்பலாம்.
  • இன்னைக்கு ஜெயிச்சவங்க அடுத்த அஞ்சுவருஷம் ஆடலாம். ஆனா அதுக்கு அப்புறம் அப்படிங்கறத இந்த அஞ்சு வருஷத்தில கரெக்ட் பண்ணி வச்சுக்கணும்.
  • பப்ளிக்கா  @#*%  படம் பார்த்தா கண்டிப்பா ஆப்புதான்.
  •  
  • தோத்ததுக்காக கவலைப் பட வேண்டியதே இல்ல.
  •  
  • ஊருக்கே புடிக்காத  காலேஜ், கோர்ஸ், கட்சி உங்க வீட்டுக்கு பிடிச்சு போகலாம்.
  • நாமே நம்ம ஆள செலக்ட் பண்ணி வெச்சிருந்தா கூட ஜெயிச்சோட்டோமும் நாமே சொல்லிட கூடாது. அத அன்னை வாயால சொல்லச் சொல்லணும் அப்பத்தான் மரியாதை.
  •  
  • பவர் கட் ஒரு மேட்டரான்னே தெரியவில்லை.

 


ஆனாலும் சில விஷயங்களில் ப்ளஸ் டூ மாணவர்களைப் பார்த்து அரசியல் வாதிகள் பொறாமை படும் விஷ்யங்களும் இருக்கின்றன.

  • ப்ளஸ் டூ தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடியாக சிறப்புத் தேர்வு வைப்பது போல தேர்தலில் தோற்றவர்களுக்கும் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். 

  • அட்லீஸ்ட் மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதாவது சுலபமாக இருந்தால் பரவாயில்லை.

  • எந்த எந்த தொகுதியில் தோத்தமோ அந்த தொகுதிக்கு மட்டும் சிறப்புத் தேர்தல் வைத்தால் சந்தோஷப் படுவார்கள்.

தமிழ் மணப் பட்டையில் பிரச்சனை

இந்த வலைப்பூவில் தமிழ்மண ஓட்டுப் பட்டையில் ஓட்டுப் போடும் வையில் மாறாமல் அப்படியே நிற்கிறது.   submit to thamil manam  என்றே வருகிற்து. தமிழ் மணத்தில் கொடுக்கப் ப்ட்ட வழிகளில் முயற்சித்துப் பார்த்து விட்டேன் என்ன செய்வது? தவிரவும் எஃபுளோரர் கொண்டு திறக்கவும் முடியவில்லை. எப்படி சரிசெய்வது?

Sunday, May 5, 2013

அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியும் சி.எஸ்.கேவும்

இந்த அரியாசனத்துக்குத் தேவை நான் சொன்னதைக் கேட்டு நடமாடும் ஒரு பொம்மை - ராஜகுரு பி.எஸ்.வீரப்பா

உலகச் சரித்திரத்திற்கும் கிரிக்கெட் சரித்திரத்திற்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு. மிக மிகப் பெரியஅ அணிகள் என்று பேசப் பட்ட அணிகள் எல்லாம் குறிப்பிட்ட காலம் வரை ஒவ்வொரு வீரர்களாக மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அணிவீரர்கள் நிரந்தர இடம் பிடித்துவிடுவார்கள். குறிப்பாக கேப்டன்.. அப்படி நீண்டகாலம் ஒருவரே கேப்டனாக இருந்துவிட்டால் அவர்களுக்குப் பின் அந்த அணிக்கு வரும் தடுமாற்றம் மிக மோசமாக இருந்திருக்கிறது. லாயிட்ஸ்,  இம்ரான்கான்,  ரணதுங்க, குரோன்யே, சமீபத்தில் ரிக்கி பாண்டிங்.  இந்த நீண்ட கால கேப்டன் நிரந்தரக் கேப்டன் போன்றவர்க்ள் மிக அதிக வெற்றிகளை குவித்து இருந்தாலும். அணியின் அடுத்த தலை ததிகிணத்தாம் போடும் சூழல்தான் இருக்கிறது.

 சாம்ராஜ்யங்களில் விக்டோரியா ராணியின் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறையாமல் இருந்தது. ஆனால் அதற்கடுத்த கட்டங்களில்  ஐரோப்ப்பாவின் ஒரு ஓரத்துக்கே சென்றுவிட்டது. ஔரங்கசீப்பிற்குப் பின் முகலாய சாம்ராஜ்யமே  அம்பேல் ஆனது.  நீண்ட நாளைக்குப் பின் மன்னரான ராஜராஜரின் வம்சம் கூட ராஜேந்திரருக்குப் பின் சில ஆண்டுகளில் அடியோடு அழிந்து போனது.  சோழநாட்டை ஆள ஆள் வேண்டுமென்று ராஜராஜரின் மகளின் வாரிசை (சாளுக்கிய தேசக் காரர்) கூப்பிட்டுவிட்டிருந்துக்கிறார்கள். இப்போது சோழவாரிசு என்று சொல்பவர்கள் எப்படி என்று தெரியவில்லை.


இதையெல்லாம் கண்டுதானோ என்னவோ  அமெரிக்காவில் யாரும் இருமுறைக்கு மேல் அதிபராகக் கூடாது என்று சட்டம் போட்டிருக்கிறார்கள். ஆனாலும் கூட புஷ் மகன் புஷ் என்று ஒரு குடும்பத்தின் கீழ் 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததன் பலன்  பெரிய பொருளாதார ஆட்டம். 

இவ்வளவு முன்னோடிகள் இருந்தும்  சி எஸ் கே அணியில்  கேப்டன் உட்பட பலரும்  நிரந்தர இடம் பிடித்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  சுதாரித்துக் கொண்டால் நல்லது.

Saturday, April 27, 2013

எம்ஜியார், ரஜினிகாந்த்,சல்மான்கான்,சிவாஜி சேர்ந்து செய்த காரியம்

உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா  - பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்

தமிழ்மணம் இடுகைகளை நாம் படிக்க மிகவும் உதவி செய்யும் ஒரு தளம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நமக்குப் பிடித்த இடுகைகளை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வாறு ஒரு சிறந்த இடுகையை இன்று படிக்க நேர்ந்தது.  சரி பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி சொல்லுவோம் என்று எண்ணி அவர்கள் பெயரைப் பார்த்த போது கீழ்கண்ட பெயர்கள் இருந்தன. 

இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்



kamalhassan shahrukhkhan mgramachandran salmankhan kkarun09 kumanan5183 kaleelullahkhan satwik nisanthika bagavathar aamirkhan alexpandian geminiganesan sivajiganesan Hajahmohamed rajnikanth senthilkkum

சன்னலை மூடு

ரஞ்சிக் கோப்பைக்கு IPLகாரர்கள் சொல்லித்தரும் பாடம்

ஐ.பி. எல். கிரிக்கெட் ஆரம்பித்த இரண்டாம் வருடத்திலேயே உலகம் சுற்றப் போய்விட்டது. நம்மூர் சின்னப் பசங்க எல்லாம் தென்னாப்பிரிக்கா பார்க்க போய்விட்டார்கள்.(போயிருக்கற பசங்கல விளையாடவிட்டால் பரவாயில்லை) சென்ற முறை உலககோப்பை நடந்த போது அங்கே அழகிகளின் நடனம் நடந்ததே. யாராவது மறக்க முடியுமா.. ஒவ்வொரு சிக்ஸ்ருக்கும் ரசிகர்கள் போல்டு ஆனார்களே... அதே மாதிரி இந்த வருடம் கூட எதிர்பார்க்கலாம்.

ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் இவ்வளவு பேரும்புகழும் பெற்ற போட்டிகளைப் பார்த்தாவது ரஞ்சி கோப்பைக்காரர்கள் சுதாரிக்க வேண்டும்.

ரஞ்சிக்கோப்பை அணிகளையும் ப்ரீத்தி, சில்பா போன்றோருக்கு ஏலம் கொடுத்துவிடலாம். ஏலம் எடுக்காவிட்டால் இலவசமாகவாவது கொடுத்துவிடலாம். பெரிய பெரிய திரை எல்லாம் வைத்து கிரிக்கெட் போட்டியை மைத்தானத்துக்குள்ளேயே ஒளிபரப்புகிறார்கள். அதே போல் பெரிய பெரிய திரை வைத்து போட்டியை ஒளிபரப்ப வேண்டும். கிரிக்கெட் போரடித்தால் அதில் ப்ரீத்தி, ஷில்பா போன்றோர் நடித்த பாடல்களை ஒளிபரப்பலாம். பொன்வைக்கும் இடத்தில் பூ வைப்பது என்பார்களே அப்படி. பெரிய பெரிய திரைகளில் ப்ரித்தியின் நடனத்தைப் பார்க்கவாவது ரசிகர்கள் வருவார்கள். அந்தக் காட்சிகளையும் 3D படங்களாக ஒளிபரப்பலாம். தனியாக கண்ணாடிகளை விற்று காசு பார்க்கலாம்.

அவ்வாறு இலவசமாகக் கூட வாங்க மாட்டேன் என்று சொன்னால் அதற்கும் கவலைப் பட வேண்டியதில்லை. IPL காரர்களிடம் பேசி அந்த அணியை ஏலம் எடுக்க caution depositஆக இந்த அணிகளை ஏலம் எடுக்கவேண்டும் என்ற ஒரு புதிய விதியை கொடுக்கலாம்.

ஆட்டத்தின் போது அக்சய் குமார் வகையாறாவைச் சேர்ந்த ஃபேசன் ஷோ கலைஞர்களைக் கூட்டிக் கொண்டு சென்றால் கூட்டம் அலை மோதத் தொடங்கிவிடும்.
(படத்தைப் பற்றிய விவாதங்கள் இங்கே)அவர்களை மைதானத்திலேயே விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் கொடுக்கச் சொன்னால் ரசிகர்களும் உற்சாகம் கொள்வார்கள். இது போண்ற ஃபேஷன் ஷோ ஆட்களை வைத்து அப்போதே கிளிந்து போன ஆடைகளையும் ஜிப் போன ஆடைகளையும் நல்லவிலைக்கு விற்று விடலாம்.

அனுஷ்கா,மந்திரா பேடி மாதிரி திறமை வாய்ந்த ஆட்களை சின்னத்திரை https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrfpAidiL5VuI7igEMHix_Fb9QHnGTdkbnNlrjvxfjhjXh88Yh3NDxZxVbuIg2T2s9cuheyoCmTaW8aKjqhfZCbCLWtXQF2-W_qaIgDAMC-ZQNWJgluZMPTQlwsaqwtCwIorJWnDpfXcd4/s400/anushka-0003.jpghttp://www.bosey.co.in/blogpics/mandira.jpg
வர்ணனையாளர்களாக நியமித்து அவர்களது கருத்துக்களை ஒளிபரப்பிக் கொண்டே இருந்தால் கிரிக்கெட் ரசிகர்கள் ஐந்து நாட்களும் ஆட்டத்தின் போது தொலைக்காட்சியைவிட்டு நகராமல் இருப்பார்கள். ஆறு, நான்கு, விக்கெட் நிகழ்வுகளின்போது மட்டும் கிரிக்கெட் காட்டினால் போதும். விளம்பர வருவாய் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

ஓரளவு ரஞ்சிக் கோப்பை போட்டிகளும் பிரபலம் அடைந்துவிட்டால் உலகம் பூராவும் நமது போட்டிகளை நடத்தலாம். அங்குள்ள நடிகர்கள், நடிகைகள், விளம்பர மாடல்கள் போன்றோரை உபயோகப் படுத்திவந்தால் உலகின் அனைத்து வித மைதானங்களிலும் விளையாடும் திறமையை நமது ஆட்டக்காரர்கள் பெறுவார்கள். பணமும் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு எத்தனை நாள்தான் குண்டுசட்டியில் குதிரை ஓட்டப் போகிறார்கள்

டிஸ்கி;- மிகப் பழைய பதிவு, மீள்பதிவாக வருகிறது. வெளிவந்த காலம் அறிய முதல் பின்னூட்டத்தின் தேதி பாருங்களேன்.

Sunday, April 21, 2013

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் சுந்தரபாண்டியன் 2 ?

விக்கிற விலைவாசில பாதாமும் பிஸ்தாவும் வாங்கிக் கொடுத்து பொண்ண நாங்க வளர்த்தால் நீங்க அஞ்சு ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சட்டை போட்டுக் கொண்டு கரெக்ட் பண்ணிட்டு போயிடுவீங்க நாங்க பார்த்திட்டு சும்மா இருக்கணும்     
 உபயம்: சந்தானம்- கலகலப்பு

மேல இருக்கற வசனத்தை கேட்டு ரசித்து என்சாய் பண்ணி சிரித்து குதித்து விசிலடித்த அதே ரசிக்க கண்மணிகளுக்கு கௌரவம்ன்னு ஒரு படத்த ரீலீஸ் பண்ணியிறுக்காங்க.  நல்ல விஷயம்தான். அது ஏற்கணவே இந்தியில் வந்தது. அதில் ஜாதிப் பெயர்லாம் சொல்லியிருக்காங்க. இதில சொல்லல அப்பிடின்னு ஒரு குரூப் சொல்லிட்டு இருக்காங்க.  நல்ல படங்க எந்த மொழில இருந்தாலும் தமிழுக்கு கொண்டு வருவதுதானே நாம பாரதியாருக்கு செய்யற மரியாதை.  அதை செய்திருக்கும் ராதா மோகனுக்கும், பிரகாஷ் ராஜுக்கும் வாழ்த்துக்கள். ஏற்கனவே ஒரு டிவி நிகழ்ச்சியில கவுரவக் கொலைப் பற்றியும் , ஜாதிக் கொடுமைகள் பற்றியும் பேசி ஒருதடவ மார்க்கெட்டிங் பண்ணியாச்சு.  ஆனாலும் பாருங்க   ஒரு தினசரிப் பத்திரிக்கை. இது கவுரவக் கொலை அல்ல., உணர்ச்சி வேகத்தில் செய்த கொலை என்று எழுதியிருங்காங்க.   மத்தபடி படத்தைப் பத்தி நல்லாத்தான் எழுதி இருக்காங்க. ஆனாலும் உணர்ச்சி வேகத்தில் செய்த கொலை அப்படிங்க வார்த்தையைப் படிச்சதும் ஷாக் ஆயிட்டேங்க., அதுவும் எப்படி.,  பாண்டவர் பூமி படத்தில் கொலை நடந்த உடனே நம்ம ராஜ்கிரண் நிப்பாரே அப்படி.,

இப்ப பாருங்க.,  ஜாதி, கவுரவ கொலை அப்படி இப்படின்னு பேசி பதிவர்கள் விமர்சனம் கூட எழுத முன் வர மாட்டாங்கராங்க., திருமதி தமிழை விட கவுரவும் படத்துக்கு  பதிவர்களின் விமர்சனம் குறைவுதான்.

======================================================================
தமிழ் திரையில்  ஜாதிப் பிரச்சனை பற்றி பேசுவதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன. அதைப் பின்பற்றினால் மட்டுமே அந்த படம் மக்கள் வரவேற்பைப் பெரும்.

உயர்ந்த தாழ்ந்த ஜாதிப் பிரச்சனைகளைப் பற்றிப் பேச கூடாது, வேண்டுமென்றால் உயர்ந்த பிற்படுத்தப் பட்ட மிகவும் பிற்படுத்தப் பட்ட ஜாதிப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசலாம்.

தாழ்ந்த ஜாதி  என்ற வார்த்தைக்குப் பதிலாக ஏழைகள் என்று உபயோகப் படுத்தலாம். பரதேசி என்று கூட சொல்லலாம். ஆனால் தலித் என்று சொல்லக் கூடாது.

தாழ்ந்த ஜாதியைக் காப்பாற்ற ஒரு உயர்ந்த ஜாதிக் காரர்தான் வரவேண்டும். அவர் ஜாதி வித்தியாசம் இல்லாமல் இருப்பார்.   அவர் தந்தையும் அவ்வாறே இருத்தல் நலம். அவர் வீட்டில் எல்லாம் ஏழைகளுக்கும் சோறு போடுவதாக ஒரு காட்சி அமைத்து. ஹீரோ குரூப்ஸ் வரும்போது. சாப்பிடுபவர்கள் எழுந்து  நின்று முதுகை வளைத்து  சாமீன்னு சொல்லி ஒரு கும்பிடு போட்டால் படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும். அனைத்து தரப்பினரும் பாராட்டுவார்கள். 

தமிழில் வெளி வந்த ஜாதி மறுப்பு திரைப்படங்களில் வெற்றிபெற்ற படங்கள் இரண்டு.

1. இது நம்ம ஆளு. அதிலும் ஹீரோ தலித் கிடையாது. சவரம் செய்யும் பிரிவைச் சேர்ந்தவர்.  தலித் என்பவர் அவர்களுக்கும் கீழே

2.வேதம் புதிது. இதிலும் கூட சத்தியராஜைப் பார்த்து அமலாவின் தம்பி கேட்கும் கேள்விகளை தமிழகமே புல்லரித்துப் பார்த்தது. நீங்க படித்து வாங்கிய பட்டமா? என்று கேட்டபோது சத்தியராஜ் ஷாக்காகி நிற்க தமிழகமே ஷாக் ஆகி நின்ற மாதிரி ஒரு ஃபீலிங்ஸ். யோசிச்சு பாருங்க,  அதே கேள்வியை ஒரு தாழ்த்தப் பட்ட சிறுவன் கேட்டிருந்தால் புல்லரித்து நின்ற ஜனம் என்ன செய்து இருப்பார்கள்?

==================================================================
இன்னொரு படமும் உண்டு. அதில் நிஜமாகவே ஹீரோவை தலித் ஆக காட்சி இருப்பார்கள். குடும்ப கவுரவம் காக்க அந்தப்  பெண் சாக,   மேல்ஜாதிப் பெண் காதலித்த இளைஞனும் கடைசியில் சாக எல்லோரும் நெஞ்சமும் மகிச்சியாக இருக்க அந்தப் படம் வெற்றி பெற்றது.   யாருக்காவது நினைவு  இருக்கா?

=================================================

கவுரவக் கொலை பற்றி மிக சமீபத்தில் உள்ளது உள்ளபடி ஒரு படத்தில் காட்சிப் படுத்தி இருப்பார்கள். படத்தில் துவக்கத்திலேயே  அந்த பையனை துரத்திக் கொண்டுப் போய் நடுக் காட்டில் வைத்து அவன் கெஞ்சும்போது தங்களது  வழக்கமான டயலாக் சொல்லி அந்தப் பையனை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றுவிட்டு அவர்கள் அப்படித்தான் என்று பதிவு செய்திருப்பார்கள்.  அந்தப் படம்  சுந்தர பாண்டியன்.

பில்லா உருவான கதையை பில்லா 2 என்று சொல்லி (அதை நாயகன் 2, பாஷா 2 என்று சொல்லி இருக்கலாம் ) வெளிவிட்டது மாதிரி  இந்தப் படத்தையும்  சுந்தர பாண்டியன் 2 என்று சொல்லி மார்கெட்டிங் பண்ணி இருக்கலாம்.  டிவி நிகழ்ச்சியில் அழுத பெண்களின் கண்ணீரை விட பவர் ஃபுல்லாக இருந்திருக்கும்.

Wednesday, April 3, 2013

காதல் கோவணம்

அம்மணமாக சுற்றும் ஊரில் கோவணம் கட்டிக் கொள்வது போன்றதுதான் காதல் திருமணம். சிலர் அந்தக் கோவணத்தைக் கழட்டி தலையில் சுற்றிக் கொள்வதாலேயே காதல் திருமணம் என்பது முழுவதும் ஒதுக்க வேண்டியது என்ற முடிவுக்கு வரவேண்டியது இல்லை.
 

பெரும்பாலும் காதல் திருமணத்திற்கு எதிரி என்று பார்த்தால் பெற்றோர் என்று சொல்லுவார்கள். பார்த்தால் அப்படியும் இருக்காது. கூட இருக்கும் சொந்தங்கள் பந்தங்கள் என்று சொல்லிக் கொண்டு சுற்றுபவர்கள். இந்தப் பெண்ணையும் மாப்பிள்ளையும் குறிவைத்து சுற்றிக் கொண்டு இருந்தவர்கள் இவர்கள்தான் பெரிய எதிரியாக இருந்து இம்சை கொடுப்பார்கள். இவர்களுக்கு பயந்துதான் பெரும்பாலும் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள்., கருணைக் கொலைகள் தான் ஒரு மானஸ்தன் என்பதை  தன் சாதிக்காரனுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். 

200- 300 கிமீ தள்ளி உள்ள, சில நேரங்களில் பக்கத்து மாநிலங்களில் உள்ள பெண்ணையோ, மாப்பிள்ளையையோ மெட்ரிமோனியலில் தங்கள் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இருந்த ஒரே காரணத்துக்காக மணம் முடித்து வைக்கும் பெற்றோர்களால் ஏன் தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பெண்ணையோ மாப்பிள்ளையையோ திருமணம் முடித்து வைக்க முடியவில்லை? இந்த சுற்றமும் சூழ நிற்கும் கூட்டங்களால் வந்த வினைதான் இது. 

தங்கள் சாதியிலேயே திருமணம் செய்து கொண்ட பலரையும் பாருங்களேன். அவர்களது கஷ்ட காலங்களில் இந்த சுற்றமும் சூழ வந்து கும்மியடித்தவர்கள் யாராவது வந்து உதவி செய்து இருக்கிறார்களா என்று?   காதல் திருமணம் செய்தவனானாலும், பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் ஆனாலும் அவனவனாகப் பார்த்து அந்தக் கஷ்டங்களைச் சமாளித்தால்தான் உண்டு.

அப்புறம் எப்படித்தான் இதைத் தாண்டுவது எனப் பாருங்கள்.  காதலிப்பவர்கள் இருவரும் சொந்தமாக ஒரு வேலை தேடிக் கொண்டு பிறந்த ஊரை விட்டு தள்ளி இருக்கும் நகரத்துச் சென்றவர்கள் காதல் திருமணம் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். காதல் திருமணம் செய்து கொண்டு சொந்த ஊருக்குக்கு போனவர்கள் கதிதான் அதோ கதி ஆகியிருக்கிறது.

சொந்த ஊர், சொந்த மண் என்ற நினைப்போடு இருந்தால் கருணைக் கொலையை  சந்தித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது, இதில் தலித், தலித் அல்லாதவர்கள் என்ற வேறுபாடு இருப்பதாகத் தோன்றவில்லை.   ஆனால் சாதி வேறுபாடு பார்த்தல் என்று எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் சாதி பார்க்காமல் பழகும் மக்களும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அப்படி சாதி பார்க்காமல் பழகுபவர்கள்கூட சாதி மறுப்பு திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்களா என்பது சற்று சந்தேகம் தான். 

எனக்குத் தெரிந்தவரை  சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள்  சொந்த ஊர் பக்கம் போகாமல் இருப்பது. இருவருமே நல்ல வேலையில் இருப்பது.ஆகிய காரணங்கள் மட்டுமே அவர்களது திருமணத்தை வாழ வைக்கும். இதை பயந்து ஓடுதல் என்று நினைக்கத் தேவையில்லை. புதிய வாழ்க்கை என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். முடிந்தால் உங்களை பெற்றவர்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவர்களும் கண்டிப்பாக உங்களுடன் வந்து மகிழ்ச்சியாகத் தான் இருப்பார்கள்.  அப்படி உங்களோடு வர மறுத்தால்  பெற்றோர் பார்த்து வைத்து திருமணங்களில் எத்தனை பேர் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டினால் அவர்களும் மனம் மாறக் கூடும்.

=================================================================
இன்றைய இளைஞர்கள் ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்ள எனக்குத் தெரிந்து சில காரணங்கள்.

1. அவர்களை யாருமே காதலிக்க மறுப்பது.., சிலர் சிலபல முயற்சிகள் செய்தும் பலனிக்காமல் போயிருக்கும்.

2.இதுவரைக்கும் பெற்றோர் சொன்னதை கேட்கவில்லை. இதை மட்டுமாவது பெற்றோர் விருப்பதுக்கு விட்டு விடுவோம் என்று ஒதுங்குவது ( இதில் அவர்களது சோம்பேரித் தனமும் இருக்கிறது)

3.நமக்கு நல்ல துணை கிடைத்து விட்டது. நமது சகோதர / சகோதரிக்கு நல்ல துணை கிடைக்குமா என்ற சந்தேகம். ( பம்பாய் அரவிந்த சாமி மாதிரி யாருக்கும் பதில் சொல்லத் தெரிவதில்லை)

Sunday, January 15, 2012

எம்.ஜி.யார் பாணியில் விஜய்

நண்பன் திரைப்படம், வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. சில திரைப்படங்கள் விஜயை வேறொரு களத்திற்கு அழைத்து செல்லும் வகையில் அமைந்திருக்கும்.  பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, திருமலை போன்ற படங்களுக்கு பிறகு விஜய் தனது பயணத்தை மாற்றிக் கொண்டிருப்பார். நண்பனும் அது போன்ற ஒரு படம்தான்.  ஆனால் நண்பன் போன்ற கதையை எழுதும் ஆட்கள் இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.  நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தில் வாழும் விஜய் கதாபாத்திரம் தமிழுக்குப் புதுசு. விஜய் ரசிகர்கள் சிலராவது ஆல் ஈஸ் வெல் என்று சொல்லிக் கொண்டு சுற்றினால் அதுவே மிகப் பெரிய வெற்றிதான்.  கருப்பு வெள்ளைக் காலத்து எம்.ஜி.ஆர் படங்களில் சில, பல தத்துவங்கள் எம் ஜியாரால் ரசிகர்களுக்கு திணிக்கப் பட்டு இருக்கும். ரசிகர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதன் பால் ஈர்க்கப்பட்டு இருப்பார்கள். அது போலத்தான் ஆல் ஈஸ் வெல்.  எப்படியோ நல்லது நடப்பதை வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.

விஜய்க்கு பன்ச் டயலாக் இல்லை. எண்ட்ரி சீன் இல்லையென்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள்.  ஆல் ஈஸ் வெல்லைவிட என்ன ஒரு பன்ச் டய்லாக் வேண்டும்.  விஜய்யின்  எண்ட்ரி சீன் சொல்கிறதே படித்ததை வாழ்க்கையில் உபயோகித்து வாழ்பவர் என்று.  இதைவிட பவர்ஃபுல் எண்ட்ரி சீன் இதுவரை விஜய் படங்களில் வந்ததே இல்லை என்றுதான் சொல்லுவேன்.  காட்சிக்கு காட்சி  விஜய் ஒரு மாபெரும் பராக்கிரமசாலியாகவே காட்டப் படுகிறார்.  சக மாணவர்களுக்காக பொங்கி எழுவதிலும், அவர்களால் ஒரு வருடம் முழுவதும் செய்ய முடியாததை ஒரே நாளில் செய்து முடிப்பது ஆகட்டும், நண்பர்களுக்காக எதையும் செய்பவராக ஆகட்டும். முதலாளிக்காக அனைத்தையும் இழந்துவிட்டு செல்லும்போது. முதலாளிக்காக அனைத்தையும் கொடுத்துவிட்டாலும் விஜய் நிமிர்ந்து நிற்கிறார்.  விருப்பப்பட்டு படித்தால் சொந்தக்காலில் சந்தோஷமாக நிற்க்கலாம் என்ற கருத்து அற்புதமாக சொல்லப் பட்டு இருக்கிறது.  அமெரிக்காவில் போய் பேங்க் வேலை செய்வதற்கு எதற்கு என்சினியரிங், படிக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பி இருக்கிறார்? ( கேள்வி இந்தியில் எழுப்பப் பட்டு ஷ்ங்கரால் தமிழ் படுத்தப் பட்டிருந்தாலும் இந்தக் கேள்வி ஜீவாவோ, ஸ்ரீகாந்தோ கேட்டிருந்தால் அது நம் காதில் கூட விழுந்திருக்காது)

இது போன்ற வலிமை வாய்ந்த ஹீரோ பாத்திரம் இனிமேல் விஜய்க்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் விஜய்க்கு மட்டுமல்லாது எல்லா ஹீரோக்களுமே இது போன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும்.



அனைத்து மாணவர்களுக்கும் ஒரு கருத்து சொல்லப் படுகிறது, அதுதான் விஜய் முதல் மாணவனாக வரும் விதம். எத்தனை விஜய் ரசிகர்கள் அதை கவனிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் ஒருவர் கவனித்துப் பயன் பெற்றாலும் மகிழ்ச்சியே..,

அடுத்ததாக கருத்துப் புரியாமல் மனனம் செய்து தேர்வு எழுதும் மாணவர்களை கண்டபடி கலாய்த்து இருந்தாலும் அந்த மாணவனும் நிறைய சம்பாதித்து தனக்கு பிடித்த வாழ்க்கை வாழ்வதாகவே காட்டி இருக்கிறார்கள்.  அனைத்து விதங்களிலும் நண்பன் ஆல் ஈஸ் வெல்..,

===========================================================================

என்றே முடித்து விடுவதுதான் நல்லது. இல்லியானாவை பற்றி எது பேசினாலும் அது எதிர்மறையாகத்தான் அமையும்.  விஜய் போன்ற ஒரு மிகச்சிறந்த மாணவனுக்கு  இல்லியானாவைப் போன்ற மிக மிக சுமாரான ஜோடிதான் அமையும் என்று  நிதர்சனைத்தைக் காட்டுகிறார்கள்.  இல்லியானாவை  ஆந்திராவில் நம்பர் ஒன் என்கிறார்கள்.  விஜயசாந்தி, ரம்யாகிருஷ்ணா , அனுஷ்கா வரிசையில் இல்லியானா என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.  சாப்பாட்டில் எல்லாமே இனிப்பாக இருந்தால் திகட்டிவிடும் அல்லவா,  அது போலதான் இந்தப் படத்தில் இலியானாவும்..,

Thursday, November 24, 2011

ராமன், சீதை உதாரணத் தம்பதிகளா?

டிஸ்கி:- புராண, இதிகாச கதைகள் எதிர்ப்பாளர்கள் மனம் புண்படும் விதமாக இந்த இடுகை இருப்பதாக நினைத்தால் சற்று ஒதுங்கி நில்லுங்கள்.


ஏக பத்தினி விரதனாக ராமனையும், பதிவிரதையாக சீதையும் பலரும் உதாரணமாகச் சொல்லி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால யாராவது ராமன், சீதையை உதாரணத் தம்பதியாகச் சொல்லிப் பார்த்திருக்கிறோமா? எங்காவது உதாராணத் தம்பதிகள் கதை ஏதாவது இருக்கிறதா?


கண்ணகி கதையிலும் சரியான தம்பதிகள் கிடையாது.

சாவித்ரி கதையிலும் சத்தியவான் டம்மி பீஸ்தான்.


அனுசூயா கதையோ தலை சுற்றவைக்கக் கூடியது.


இவர்கள் கதையில் எல்லாம் கணவர்களைப் பற்றி பெரிதாக எதுவும் இல்லாத நிலையில் சீதையின் கணவர் மட்டும் பத்தினி விரதனாக காட்டப் படுகிறார். 


ஒரே ஒரு மனைவியோடு  அவரையும் காட்டுக்கு அனுப்பி விட்டு ஆட்சிக் கட்டிலில் இருந்ததால் அவரைப் பற்றி இவ்வாறான புகழ்ச்சி மொழிகளை பரப்பி இருப்பார்களோ..


சீதையாக நடித்ததால்தான் கணவனைப் பிரிந்து மனைவி படும் வேதனை புரிந்தது என்று நயந்தாரா சொன்னதாக செய்திகள் வந்து இருக்கின்றன. சீதையாக நடிக்க அவர் அசைவ உணவுகளை தவிர்த்ததாக வேறு சொல்லி இருக்கிறார்.  சீதை சுத்த சைவம் என்று கம்பராமாயணத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எங்காவது சொல்லி இருக்கிறார்களா..?  ராமன் சீதையைப் பிரிந்த பின்னர் புலால் உண்பதை தவிர்த்ததாக வேறு பேசிக் கொள்கிறார்கள். இது பற்றி கம்ப, வால்மீகி ராமாயணங்களில் ஏதாவது சொல்லி இருக்கிறார்களா..?


Sunday, November 6, 2011

ஜேம்ஸ் பாண்ட், சூப்பர் ஹீரோவாக சூர்யா நடிக்கும் புத்தம் புதிய படம்

ஸ்பைடர் மேன், பேட் மேன் கதைகள் படிக்கும்போது ஒரு பிரமிப்பு ஏற்படும். அப்படியே அந்தக் காட்சிகளில் நாமும் இருப்பது போன்ற ஒரு உணர்வு. அந்தப் படங்கள் திரைப்படங்களாக வந்தபோது  லாஜிக் பற்றியெல்லாம் கவலைப் படாமல் பிரமிப்புடன் ரசித்துப் பார்த்தோம். கதாநாயகனுக்காக இல்லாமல், கதாப்பாத்திரத்துக்காக பெரிய அளவில் ரசிகர்களை சேர்த்து வைத்த கதாப்பாத்திரங்கள் அவை.  சீன்கானரி வேண்டுமானால் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தைவிட அதிகமாக ரசிகர்களைப் பெற்றிருக்கலாம். ஆனால் பிய்ர்ஸ் பிரஸ்ணனைவிட ஜேம்ஸ்பாண்ட்க்குத்தான் ரசிகர்கள் கூட்டம்  இருக்கும். தமிழில் கூட இதுமாதிரி சூப்பர் ஹீரோ படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன்.  ஆனாலும் அவை இரண்டாம்பாகம் மூன்றாம்பாகம் வந்தமாதிரியெல்லாம் இடுப்பதில்லை.

இரும்புக்கை மாயாவி கதை பார்த்திருப்பீர்கள்.  ஆய்வகத்தில் நடக்கும் ஒரு விபத்தின் காரணமாக மாயாவிக்கு அதீத சக்தி வரும். ஸ்பைடர் மேணுக்கும் அப்படித்தான். அவரின் வில்லன்களுக்கும் அப்படித்தான்.  கந்தசாமி, வேலாயுதம் போன்றவர்களுக்கு இதுபோன்ற விபத்து நடக்காவிட்டாலும் மக்களைப் பாதுகாக்க மிகுந்த சக்தி படைத்தவர்களாக இருந்தார்கள். 

அப்படிப்பட்ட ஒரு கதை இப்போது சூர்யாவிற்கு வாய்த்துள்ளது. ஆய்வக உதவியோடு அதிபயங்கர சக்திகள் அவர் உடலில் ஏற்றப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை விஜய் ஏலத்தில் எடுத்துவிட்டதால்  இவரது படத்துக்கு சீன உளவாளிகளை பயன்படுத்துகிறார்கள்.  அவர்களின் அழிவு சக்தியை சமாளிக்க இந்திய தேசமே நடுநடுங்கிக் கொண்டிருக்கும்போது  சூர்யா தனது அதி அற்புத சக்தியைப் பயன்படுத்தி  சாரூக்கான், சடன்பிரேக் போட்டு ட்ரெயினை நிறுத்துவது போல கொடிய அழிவு ஆயுதங்களின் சக்தியை சூர்யா தடுத்து நிறுத்துகிறார்


ஹலோ ஹலோ என்ன இந்தப் படம் ஏற்கனவே வந்து விட்டதா? ஐயா அது வேற அது பல்லவ தமிழ் இளவரசன் துறவரம் போய் இந்திய தேசத்தை வெல்ல தனியாக ஒரு நாட்டு மக்களை தயார்படுத்திய கதை.  அட அதுவும் இல்லையா? பரவாயில்லை விடுங்கள். சூர்யா, ஏ.ஆர் முருகதாஸிடம் சொல்லி அதி அற்புத சக்தி வாய்ந்த சூர்யாவின் அடுத்த அடுத்த சாகஸங்களை வெளிவிடச் சொல்லுங்கள். நமக்கு ஜாலியாக இருக்கும்

Monday, October 17, 2011

பவர் ஸ்டார் படம் மச்சி


பவர் ஸ்டாட் பத்தி தெரியாத தகவல்கள் இன்னைக்கு யூட்யூப்ல தெரிஞ்சிக்கிட்டேன். நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Wednesday, October 5, 2011

ஸ்ட்ராங்கான மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்


https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/305116_267436236629976_192867670753500_811266_220613920_n.jpg     









மனைவி நல்லா ஸ்ட்ராங்கா இருந்தா ஒரு சக்கரம் இல்லாட்டிக்கூட வண்டி ஓட்டலாம் அப்படிங்கறதா எவ்வளவு அழகா சொல்லி இருக்காங்க பாருங்க

Tuesday, August 9, 2011

நயன் தாரா, ஆன்மீகம், இந்திய அரசியல் சட்டம்

நயந்தாரா இன்று இந்து மதத்திற்கு மாறியதாக செய்திகள் சொல்கின்றன.  அவர் திருமணம் செய்து கொள்ள வசதியாகத்தான் இந்து மதத்திற்கு மாறியதாக சில நண்பர்களும் ஊடகங்களும் கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இது அவர்களின் சொந்த விஷயம் என்றாலும்கூட நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. கேள்விகள் கண்டிப்பாக நயந்தாராவின் சொந்த வாழ்க்கை பற்றி அல்ல. எனவே எனது குழப்பங்களுக்கு விடை சொல்ல நினைக்கும் நண்பர்கள் தயவு செய்து நயந்தாராவின் சொந்த வாழ்க்கைக்குள் நுழைய வேண்டாம்.

1.சட்டப் படியோ அல்லது மத முறைப் படியோ ஒருவர் இந்து மதத்திற்கு மாற முடியுமா?

2.இந்து மத கடவுள்களை வணங்குபவர்கள், பின்பற்றுபவர்கள் சட்டப் படி இந்துக்கள் என்று அழைக்கப் படுவார்களா?

3.இந்து மதத்திற்கு மாற முடியும் என்றால், மதத்தில் நுழைந்து விட்டு சாதிக்குள் நுழையாமல் இருக்க முடியுமா?

4.மதத்திற்குள் நுழைபவர்கள் சாதிக்குள் நுழைய முடியும் என்றால் எந்த சாதிக்குள் நுழையலாம்?

5. இந்து மதத்தின் ஒரு சாதியில் இருந்து வேறொரு சாதிக்கு மாறமுடியுமா?  அப்படி மாறினால் சட்டப் படி செல்லுபடியாகுமா? அவர்களுக்கு அரசில் சலுகைக்கள் ( இட ஒதுக்கீடு, கலப்புத் திருமண உதவிகள் கிடைக்குமா?

Friday, June 24, 2011

900/1200 க்கு தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட்

இன்றைய தேதியில் எம்பிபிஎஸ் சீட்டுக்காக பெற்றோர் அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.  (சில பெற்றோர் லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் சீட்டுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொள்வோம்). தமிழ்நாட்டில் கட் ஆஃப் மதிப்பெண் ஒன்று இரண்டு குறைந்தால் கூட தனியார் மருத்துவ கல்லூரிகளில் சில லட்சங்கள் அதிகம் ஆகிக் கொண்டே இருக்கிறதாம்.

ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர 900 மதிப்பெண் எடுத்தாலே கூடப் போதும். ஆனால் என்ன கீழே கொடுக்கப் பட்டிருப்பதுபோல மதிப்பெண் வாங்கி இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

உயிரியல்- 200/200
வேதியியல் 200/200
இயற்பியல் 200/200
கணிதம் 100/200
தமிழ் 100/200
ஆங்கிலம் 100/200

நம்பினால் நம்புங்கள் மேலே உள்ளமாதிரி மதிப்பெண்கள் வாங்கியிருந்தால் கண்டிப்பாக உங்களது 900 மதிப்பெண்ணுக்கே எம்.பி.பி.எஸ் சீட் கண்டிப்பாக கிடைக்கும்.

Sunday, June 12, 2011

அசைந்த திரை அஞ்சன விழிகள் - நான் ஒரு வாசகன்


சென்ற பகுதியில் சுங்க அதிகாரி இளையபல்லவனை தனியாக அழைத்து பேசுகிறார் என்ற சந்தேகம் வந்த்தல்லவா? கலிங்கத்தின் ஊழிய்ம் செய்தாலும் பிறப்பால் தமிழனாக இருந்த்தால் அந்த சுங்க அதிகாரி கருண்காரப் பல்லவனுக்கு உதவி செய்வதாக சொல்லுகிறார் ஆசிரியர். (உடனே நமது உள்மனது நம்ப்பிட்ட்டோம் நம்ம்ம்ம்ப்பிட்ட்ட்டோம் என்று உரக்கச் சொல்கிறது)  கருணாகரப் பல்லவனே சில கேள்விகளை கேட்கிறார். முறையான பயணமாக முறைப்படிக் கப்பலில் வந்து அரச முத்திரை மோதிரத்தைக் காட்டியவனை அனுப்பாமல் ஏன் தனியே அழைத்து வந்தீர்கள் என்று கேட்கிறார்.  அதற்கு சுங்க அதிகாரி தங்கள் கொண்டு வரும் பத்திரத்தில் கலிங்க துறைமுகங்களை சோழநாட்டுக்குச் சொந்தமாக்கும் வகையில் எழுதப் பட்டுள்ளதால்  தாங்கள் சிறையில் அடைக்கப் படுவீர்கள் என்றும் பின்னர் கொள்ளப் படுவீர்கள் என்றும் சொல்கிறார்.  பத்திரத்தில் எழுதப் பட்டுள்ளதை சுங்க அதிகாரி சொன்னதைக் கேட்ட்தும் இளைய பல்லவன் அதிர்ச்சி அடைந்த்தாக நாவலாசிரியர் சொல்கிறார். 


ஏற்கனவே நம்ப்பிட்ட்ட்ட்டோம் என்று நமது உள்மனது சொன்ன வார்த்தைகள் இப்போது எதிரொலிக்க ஆரம்பிக்கின்றன.
சோழநாட்டு ஒற்ற்ர்கள் இங்கு அதிக அளவில் உலவுவதாகவும், சோழநாடு கலிங்கத்தின் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் உலாவுவதாகவும் அதனால் சோழநாட்டவர்கள் பலரும் கைது செய்யப் பட்டுவருவதாகவும் சொல்கிறார்.


இந்த நேரத்தில் பாலூர் துறைமுகத்திற்கும், தமிழகத்தின் மற்ற துறைமுகங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை சாண்டில்யன் விளக்குகிறார். ஆங்கில நாவலாசிரியர்கள் பொதுவாக தங்கள் நாவல்களில் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விளக்குவார்கள். 

குறிப்பாக ஒரு பைக் மெக்கானிக் பைக்கை ரிப்பேர் செய்வதாகட்டும் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வதாகட்டும் ஒருவரியில் சொல்லாமல் அங்கும் நடக்கும் செயல்கள் நம் கண் முன்பே நடப்பது போல சொல்லுவார்கள்.  ஒவ்வொரு படியாக அதன சாதகபாதகங்கள் மாற்றுவழிகள் எல்லாவற்றையும் அலசுவார்கள். ஒரு நாவல் படிக்கும்போது பல்வேறு செய்திகளைப் பார்த்துப் பழகிய உணர்வினை வாசகனுக்கு ஏற்படுத்துவார்கள். தற்போதைய தமிழ் நாவல் ஆசிரியர்களில் தொழில்நுட்ப ரீதியாக வாசகனுக்கு கற்றல் அனுப்வத்தை கொடுப்பவர்கள் மிக்க் குறைவாக உள்ளனர். 


தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இரவில் நடமாடுவது கூட கண்காணிப்பிற்க்கு உள்ளாக்கப் பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது, அதுமட்டுமல்ல, அது மட்டுமல்ல என்ற ரீதியில் சிறிது நேரம் பேசி விட்டு சோழ நாட்டு இளவல் அம்மங்கா தேவியின் மகன் ராஜராஜ நரேந்திர செல்வனும் ( கவனிக்க சோழன் என்று சொல்லவில்லை ) கைது செய்யப் பட்டுள்ளதாக சொன்னதும்தான் சென்ற பகுதியின் கடைசியில் சொன்ன வாக்கியத்தை உணர்ச்சி வசப் பட்டு இளையபல்லவன் உச்சரிக்கிறான். (அத்தனை துணிவா கலிங்கத்து பீமனுக்கு)

சென்ற பகுதியிலேயே அதைக் கேட்ட வீர்ர்கள் இளையப்ல்லவனை நோக்கிப் பாய அவர்களை கொண்டுவிடுகிறான். அமளி துமளி கிளம்புகிறது. அராபியர் அங்கியுடன் இளையப்ல்லவன் தப்பிச் செல்கிறான். பின்னர் அந்த அங்கியைத்துறந்து பாலூரின் வீதிகளில் ஓடுகிறான். படிக்கும் நமக்கென்னவோ நாமும் சேர்ந்து ஓடுவதுபோலவே தோன்றுகிறது. அவனை கலிங்கத்து வீர்ர்கள் துற்த்துகிறார்கள்.


ஒரு வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொள்கிறான். அந்த அறைக்கு ஒரு பெண் வருகிறார்கள் சாண்டில்யன் ரசிகர்களுக்கு உடனே நிமிர்ந்து உங்கார்ந்து கொள்வார்கள். வழங்கமான சாண்டில்யன் டச். ஆமாம் அந்தப் பெண் உடைமாற்ற தொடங்குகிறார். தமிழர் பண்பாட்டைக் காக்கும் வகையில் கண்களை மூடிக்கொண்ட இளைய பல்லவன் திறைச்சீலையைப் பிடிக்க சத்தம் கேட்டு அந்தப் பெண் இளையனைப் பார்க்க இந்தப் பகுதி அப்படியே அடுத்த பகுதிக்கு பயணம் செய்கிறது.


அந்தப் பெண் உடை மாற்றும் அழகை அப்படியே காப்பி பேஸ்ட் பாணியில் டைப் செய்யலாம். திரட்டிகள் நம் தளத்தை தடைசெய்து விட்டால் நாம் என்ன செய்வது என்ற அச்சத்தின் காரணமாக நாம் அதை ஒரே வரியில் முடித்து விட்டோம்.


இந்த பகுதியில் புதிதாக தப்பிப் போய் ஒரு பெண் உடைமாற்றும் மாளிகையில் ஒளிந்து கொள்வது மட்டுமே இணைந்துள்ளது.. மற்ற்படி சென்ற பாகத்தின்விளக்க உரையாக மட்டுமே இந்தப் பகுதி அமைந்துள்ளது..

இந்தப் பகுதியின் நமது சந்தேகங்கள். புதிதாக பெரியதாக் இல்லாவிட்டாலும் கூட இந்த நாவலின் கற்பனைக் கதாபாத்திரங்கள் எவை எவை என்ற எண்ணம் நமக்கு வருகிறது. பொதுவாக சரித்திர கதைகளில் சில கற்பனைக் கதாபாத்திரங்கள் உலவும். அந்த கதாபாத்திரம் இல்லாவிட்டால் அந்தக் கதையே நமக்குப் பிடிக்காமல் போய்விடக்கூடிய அபாயம் பல நாவல்களுக்கு நிகழ்ந்திருக்கிறது.

குறிப்பாக பொன்னியின் செல்வனில் ந்ந்தினி பாத்திரம் கற்பனை என்கிறார்கள்.  ந்ந்தினி இல்லாமல் பொன்னியின் செல்வனில் ஏதாவது கிக் இருந்திடுமா? குறைந்த பட்சம் ந்ந்தினி போன்ற கவர்ச்சி இல்லாவிட்டாலும் ஒரு கிழவியாவது இருந்திருந்தால்தானே பல இடங்கள் நகர்ந்திருக்க முடியும். சுத்தமாக ந்ந்தினியே இல்லையென்றால்......

சரி அதை அங்கேயே விடுங்கள் எனது எண்ணமெல்லாம் இதுவரை நாம் சந்தித்த எந்த எந்த பாத்திரங்கள் கற்பனை எவை உண்மை.  என்பதுத்தான். போகப் போகப் பார்ப்போம்.

Thursday, June 2, 2011

சாண்டில்யனின் கடல்புறா - ஒரு வாசகனின் அனுபவம்

இளைய பல்லவன்

காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த களப்போர் என்ற வாக்கியத்தோடு கடல்புறா தொடங்குகிறது. சாண்டில்யன் ஒரு இளமைதுள்ளும் ஒரு எழுத்தாளரின் அடையாளமாக அந்த வரிகள் விளங்குகின்றன்.  காஞ்சியில் சோழமன்னன் குலோத்துங்கள் இருக்கும்போதே அவனது படைகள்  கலிங்க நாட்டை அழித்தது என்று கலிங்கத்து பரணியில் பாடி இருக்கிறார்களாம். அதைத்தான் மேற்கோள் காட்டுகிறார் என்று நினைத்தால் கூடவே இன்னொரு விளக்கமும் கொடுக்கிறார். அதாவது காஞ்சி என்பது பெண்களில் அணியும் ஒரு ஆபரணம். கலிங்கம் என்பது ஆடை. ஆக பெண்ணின் நகை களையாமல் உடைகள் குலைந்த களப் போர்.  என்பதாக அந்த வாக்கியத்தைக் குறிக்கிறார். முதல் வரி படிக்கும்போதே ஜிவ்வென்று இருக்கிறது. அந்தக் காலத்திலேயே இதைப் படித்திருந்தால் நமது அறிவு மேலும் வளர்ந்திருக்குமே என்ற ஏக்கம் வரத்தான் செய்கிறது.


பாலூர் துறைமுகம். பாலூரா துறைமுகம் என்றழைக்கப் படும் இடத்தில் நமது கதை துவங்குகிறது அந்த இடம் கோதாவரி ஆற்றின் முடிவில் இருக்கிறதாம். கோதாவரி ஆற்றீன் துணையாறுகள் கலந்து கடலில் கலப்பதையே புணர்தலுக்கு ஒப்பிடுகிறார் நாவல் ஆசிரியர். சித்திரா பவுர்ணமியின் அதிகாலை வேளையில் கடற்கரையை ஒப்பிட்டு அந்த இடத்தையே நம் கண்முன்னால் கொண்டுவரும் அவர் கிரேக்க, அரேப்பிய சீன் வணிகர்களையும் அவர்தம் தோற்றம்,. ஆடைகள் ஆகியவை பற்றி விளக்குகிறார்.  அதே  நேரத்தில் பேய் அடிமைகள் என்றொரு பதத்தினை அவர் உபயோகப் படுத்துகிறார். அவர்கள் நீக்ரோக்கள் ( எனது ஒரு இடுகையின்போது இந்தப் பதத்தினை நீக்குமாறு நண்பர் ஒருவர் வேண்டுகோள் விடுத்திருந்தார், அப்போது நீக்கிவிட்டேன். இப்போது இதற்கு பதிலாக வேறுபதம்  எனக்கு தெரியாத காரணத்தாலும் நாவலாசிரியர் உபயோகப் படுத்தியதாலும் அப்படியே எழுதியுள்ளேன். ) அவர்களை அரேபியர்கள் சீனர்களுக்கு விற்றதாக புதினத்தில் சொல்லப் பட்டுள்ளது.  ஆந்திர மக்களும் வட நாட்டினரும் கூட வாணிகம் செய்ய இந்த இடத்திற்கு வந்திருப்பதாகவும். மேலைதேசம், கீழைநாட்டினரும் கலந்து இருந்த இடமாக இருந்தாலும் தமிழ் மக்கள் அங்கு அதிகம் வாழ்ந்ததாலேயே அந்த இடம் பாலூர் என்று அழைக்கப் பட்டதாக கூறியுள்ளார்.

கடல், கரை, மக்கள் , வாணிகம் ஆகியவற்றை விளக்கிவிட்டு நாயகன் அறிமுகம் செய்கிறார்.  ரஜினியின் அறிமுகக் காட்சியை விட விஜய் அறிமுகக் காட்சியை விட, ஏன் பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசனின் அறிமுகக் காட்சியை விட இந்த கதை நாயகனின் அறிமுகக் காட்சி அமர்களமாக அமைந்திருக்கிறது.  ஒரு படகில் இருந்து புரவியுடன் நாயகன் இறங்கி வருகிறார். அவர் கால் வைத்த உடனேயே கலிங்கத்துப் போரின் வித்து விதைக்கப் பட்டதாகவும் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு அதிகரித்து விட்டதாகவும் சூரியனின் ஒளிக் கதிர்களுக்கே ஒளிவந்ததாகவும் சொல்லுகிறார். நெற்றி, முடி, கன்னம் கன்னத்தழும்பு என வர்ணித்துவிட்டு அவருக்கு வயது 21 என்று சொல்லுகிறார். மக்களே குறித்துக் கொள்ளுங்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 21 வயதில் ஒரு ஆண்மகனுக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கின்றன என்பது போகப் போக்த் தெரியும்.

அவர் கையில் வைத்திருக்கும் வாளினை விளக்கும்போது அவர் ஒன்று ஏழையில்லை என்று சொல்லி வர்ண்னை செய்கிறார்,.  அவரது வாளின் வர்ணனையே பிரமிப்பாக இருக்கிறது . இந்த வாளின் வர்ணனைகளை ராணாவிற்கு அப்படியே உபயோகப் படுத்திக் கொண்டால் நன்றாகத்தான் இருக்கும்.

அடுத்ததாக அந்த வீரர் சுங்கச் சாவடிக்குள் நுழைகிறார். அந்த சாவடியை மண்டபம் என்றே நமக்கு ஆசிரியர் அறிமுகப் படுத்துகிறார். அங்கு சுங்கப் பணம் வசூலிக்கப் படுவது, சுங்க முத்திரை இடப் படுவது என்பது பற்றியெல்லாம் சொல்லப் படுகின்றன.

ஒரு நாவலில் சொல்ல வேண்டிய இடங்களில் கதைகளோடு இன்னபிற பல செய்திகளும் பதியப் பட வேண்டும் என்பதில் ஆசிரியர் முனைப்புடனேயே இருக்கிறார். கடல்புறா முடிக்கும்போது நாம்  11ம்நூற்றாண்டின் பல செய்திகளையும் நம்மோடு  உள்வாங்கிக் கொண்டிருப்போம் என்றே நம்பலாம்.


நமது நாயகர் வணிகரல்லாத பயணிகளின் பரிசோதனைப் பகுதிக்கு வந்து தன் உடமைகளைப் பரிசோதிக்க கொடுத்துவிட்டு முத்திரை மோதிரத்தைக் காட்டுகிறார். அந்த முத்திரை மோதிரத்தைப் பார்த்த உடன் அந்த அதிகாரி நமது வீரரை தனியே அழைத்துச் செல்லுகிறார். அவ்வாறு அழைத்துச் செல்லும்போது தனது இடத்தில் வேறொரு நபரையும் இறுத்திச் செல்வதையும் நாவலாசிரியர் சொல்லிச் செல்லுகிறார். பதிலி நபர்கள் என்னேரமும் தயாராக இருக்கும் செய்தியையும் ஒவ்வொரு இடத்திலும் மக்களுக்கு சேவை செய்ய தேவையான நபர்கள் எந்நேரமும் இருக்கும் வகையிலும் திடீரென தற்செயல் விடுப்பு எடுத்தால் கூட அந்த இடத்திற்கு வேறொரு நபர் உடனடியாக பணியாற்றும் வகையில் செயல் பாடு இருந்தததையும் நம்மால் உணரமுடிகிறது.

தனியே அழைத்து வந்து மோதிரத்தின் மதிப்பைப் பற்றி கேட்கிறார் அந்த அதிகாரி. நமக்கென்னவோ  அதிலிருந்து பெர்செண்டேஜ் கேட்பார் போல என்று தோன்றியது. அதே எண்ணம்தான் வீரருக்கும் தோன்றியிருக்கும் போல ஆயிரம் பொற்கழஞ்சுகள் என்று மதிப்பைச் சொல்லி அதற்கும் வரிவிதித்தால் கட்டி விடுவதாகச் சொல்லுகிறார்.

அதிகாரி  இப்போது தெளிவாக அந்த மோதிரத்தை, முத்திரை ஒரு சிலரே அணிய முடியும் அதனால் கேட்டதாக சொல்ல அது தனக்குத் தெரியும் என்று வீரர் கூறுகிறார்.  அதுவும் ராஜ வம்சத்தினர் தான் என்று சொல்லி விட்டு தாங்கள் என்று ஒரு இழு இழுக்கிறார்,

கருணாகரப் பல்லவர் என்று பதிலைச் சொல்லுகிறார்.  இளைய பல்லவரா? என்று கேட்டு உறுதி படுத்திக் கொள்கிறா.  பிரமிப்புடன் இருக்கும்போதே இளைய பல்லவர் விடைபெற்றுக் கொள்ள தாங்கள் போகப் போகும் இடம் எது என்று கேட்கிறார் சுங்க அதிகாரி. அதற்கு இவர்  கோடிக்கரை கூளவாணிகன் மாளிகை என்று கூறுகிறார். அபப்டியென்றால் எனது வீட்டில் தங்கி நடு இரவில் செல்லுமாறு சொல்லுகிறார்.  ஏன் இப்போது செல்லவேண்டாம் என்று கேட்கும்போது  அந்த சுங்க அதிகாரி சில விஷயங்களை சொல்ல அந்த கலிங்க பீமனுக்கு அவ்வளவு துணிச்சலா என்று உரக்கச் சொல்லி விடுகிறார். அது கலிங்க சுங்கச் சாவடி ஆகையால அங்கிருக்கும் கலிங்க வீரர்கள் வாளுடம் அவரை நெருங்குகிறார்கள் இப்போது இந்த பகுதி முடிவடைந்து தொடரும் போடப் படுகிறது.


இப்போது நம் மனதில் எழக்கூடிய கேள்விகள். பதில்கள்

1.யார் இந்த இளைய , கருநாகர பல்லவர்.? பொதுவாக கருநாக என்று பெயர் வைத்திருந்தால் சரித்திர கதைகளில் வில்லனாகத்தான் இருப்பார்.

2.அவர் ஏன் கலிங்க துறைமுகத்திற்கு வருகிறார்?  அவர் வந்ததால்தான் இந்தக் கதை இந்த இடத்தில் துவங்கி இருக்கிறது.

3 சுங்க அதிகாரி ஏன் இளைய பல்லவரை ஓரம் கட்டுகிறார்? நடுநிசிவரை வீட்டில் மறைந்திருந்து இரவில் பயணம் செய்யச் சொல்ல காரணம் என்ன? இவரைப் பார்த்தால் கலிங்க தேசத் துரோகி போல் உள்ளது.

4. இளைய பல்லவருக்கு கோபம் வரும் அளவு அப்படி என்ன சொன்னார்? அது சில பாகங்களில் தெரிந்து விடக்கூடியது தான் என்றாலும் ஆவலாகத்தான் இருக்கிறது.

Saturday, May 28, 2011

சிங்கப்பூரில் ரஜினி ( காணொளிகளுடன்)

சிங்கப்பூருக்கு ஓய்வெடுப்பதற்காக சென்றிருக்கும் ரஜினிகாந்த நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டு பூரண நலத்துடன் தாயகம் திரும்பி ராணா, ஜீணா, நீனாம் கானா, இந்தன்னா, இத்தண்ணா என்று பல படங்களில் நடித்து மகிழ்ச்சியாக வாழுவதற்கு நம்மால் முடிந்த பிராத்தனைகளை செய்வோம்.

ஏற்கனவே ஒரு முறை ரஜினி உடல்நலம் இல்லாதபோதும்  அவரது குருநாதர் கே.பாலசந்தரின் ஏற்பாட்டின்படி  சிங்கப்பூர்தா அப்போது அங்கு படமாக்கப் பட்டதுதான் நினைத்தாலே இனிக்கும்.

இந்தப் படம் நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போதே வந்திருந்தாலும்கூட  ஒரு சராசரி மாணவனாக கல்லூரியில் காலடி எடுத்த வைத்த காலத்தில் நம்மைப் போன்ற ஒரு ஜீவனாக தோன்றிய பாத்திரம்தான் இந்த காணொளியில் வரும் ரஜினி. நமக்கே இவ்வாறு தோன்றியதென்றால் அந்தக் கால கட்ட மாணவர்களுக்கு தங்களில் ஒருவராக ரஜினி தோன்றியிருப்பார். தங்களில் ஒருவராக முதல்மதிப்பெண் வாங்கிய மாணவரை தலைக்குமேல் தூக்கிக் கொண்டாடும் சகமாணவர்களாக அப்போது ரஜினியை நினைத்துப் பார்த்திருப்பார்கள்.

இந்த்க் குறிப்பிட்ட காட்சியில்  துவக்கத்தில் ரஜினி காட்டும் அலட்சியம் பின்னா அவர் காட்டும் பதட்டம். அதையெல்லாம் விளக்கும் சக்தி நமக்கு இருப்பதாகவே தோன்றவில்லை.


ரஜினியின் கதாபாத்திரம் உருவாக்கமே ரஜினியை மனதில் வைத்து ரஜினிக்காக மட்டுமே செய்தது போல இருக்கும். கொஞ்சம் பிசகினாலும்  என்னவோ போல ஆகிவிடும் கதாபாத்திரம் அது.  ரஜினியின் நண்பர் வீட்டில் விடைபெரும்போதும், கமல் வீட்டில் கிளம்பும்போது நகைச்சுவை செய்யும்போது பரிசோதனை செய்யும்போதும் விமானத்திலும் நிதானமாக மீண்டும் மீண்டும் ரசிக்கலாம்.





மேடை நிகழ்ச்சிகளின்போது மாணவர்கள் பலரும் சேர்ந்துதான் அந்த கலைநிகழ்ச்சிகளை உருவாக்குவார்கள். நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த பேர் குறிப்பாக அன்று மட்டும் நிகழ்ச்சிகளை ரசிக்கும் நபர்கள் முன்னால் நிற்கும் மாணவனைத்தான் பாராட்டுவார்கள். கதை திரைக்கதை எழுதும் அதாவது ரூம்போட்டு யோசிக்கும் நபர்களுக்கு பாராட்டு மிக மெதுவாகத்தான் கிடைக்கும். அந்த உணர்வை ரஜினி இந்தப் பாடலின்போது அழகாக வெளிக்காட்டுவார்.  அது.................



முதன்முதலாக நகரத்திற்கு செல்லும் மாணவனுக்கும் இந்தப் படத்தில் வரும் ரஜினிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.





இது ஒரு பக்தி பாட்டுன்னும் சொல்லலாம். ஒரு ஆட்டத்தில் ரிசர்வ் பிளேயர் எப்படி தனக்கு கொடுக்கப்படும் வாய்ப்பை நன்கு உபயோகப் படுத்திக்கொள்ளவேண்டும் என்பதாக இந்தக் கதாபாத்திரம் எனக்குப் படுகிறது.


முப்பது ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் சென்ற ரஜினி நலமுடன் திரும்பியத்தைப் போல இம்முறையும் நல்லபடி திரும்பி வர அனைவரும் பிராத்தனை செய்வோம்

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails