Saturday, April 25, 2009

குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய லக்கிலுக் அவர்களின் பதிவும் எனது குழப்பங்களும்

[Child-Abuse.jpg]



லக்கி லுக் ஐயாவின் வலைப் பூவில் மேற்கண்ட படத்தினை பார்க்க நேர்ந்தது. குழந்தைகளின் மீதான வன்முறை பற்றிய படம் என்பதால் அவரை கேட்காமலேயே அந்தப் படத்தினை உபயோகப் படுத்தி உள்ளேன். பொறுத்துக் கொள்வாராக.


இந்தப் படத்தில் இருப்பதில் பெரும்பாலான நிகழ்வுகள் குழந்தைகளின் மீதான வன்முறைதான். இதில் எள்ளளவும் சந்தேகம் இருக்கமுடியாது. ஆனால் சில் விஷ்யங்களில் எனது கருத்து கொஞ்சம் மாறுபடுகிறது. அதைப் பதிவு செய்யவே இந்தப் பதிவு.

1.குழந்தைகளை வேலைக்காரர்களாகப் பயன்ப்டுத்துவது... அது சொந்தக் குழந்தையாக இருந்தால் கூட.....

கண்டிப்பாக குழந்தைகளை வேலைக்காரர்களாகப் பயன்படுத்துவது கொடுமைதான். ஆனால் சொந்த வீட்டில் குழந்தைகளை அவ்வப்போது சின்ன சின்ன வேலைகளைச் செய்யச் சொலவது என்பது வன்முறையில் வருமா....
சட்டத்தின் முன் குழந்தைகளை கொடுமைப் படுத்தவில்லை. என்பதை நிரூபிப்பது எப்படி?

அல்லது குழந்தைகளை ரிமோட் எடுத்துத் தருமாறு சொல்வது எல்லாம் வன்முறை என்ற வட்டத்துக்குள் கொண்டுவந்து விடுவார்களா,,,,

2.அழுக்கான கிழிந்த உடைகளை குழந்தைகள் அணிந்திருக்கும் நிலைகூட குழந்தைகளுக்கெதிரான வன்முறையில் அடங்குகிறதாம்.

அதற்கு என்ன தீர்வு? சட்டப் படி யாருக்கு தண்டனை கொடுப்பது? நல்ல உடைகள் கொடுக்கும் வசதியும், நல்ல உணவும் கொடுக்கக் கூடிய சூழ்நிலையும் இல்லாத பெற்றோரை என்ன செய்வது?

3.குழந்தைகளுக்கு மருத்துவ வசதியும், கல்வி வசதியும் செய்து கொடுக்காத நிலை குழந்தை மீதான வன்முறையாக அமைகிறது.

தமிழகத்தைப் பொறுத்த வரை இந்த இரண்டும் இலவசமாக கிடைத்தாலும் இரண்டு மூன்று கிலோமீட்டர் சென்று அதைப் பெறுவது என்பதனைக் கூட கடினமான வேலையாகக் கருதும் நிலையுல் உள்ள அப்பாவி பெற்றோரை நாம் என்ன செய்ய முடியும்.? மந்தரித்தல் மட்டுமே குணப் படுத்தும், மருந்தும் மாத்திரைகளும் துணை வழிகள்தான் என நினைக்கும் பெற்றோர் இன்னும் நிறைய இருக்கிறார்கள்.

4. கண்காணிப்பிலாத சூழலில் குழந்தையை விடுதல்.

இன்றைய வாழ்க்கை முறையில் பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் சூழலில் தாத்தா பாட்டி இல்லாத நிலையில் வேலைக்காரர்களில் மேற்பார்வையில் குழந்தைகள் இருப்பதும் கண்காணிப்பில்லாத சூழலே என்பது என் கருத்து. ஆனால் பெரும்பாலான நகரக் குழந்தைகள் இந்த நிலையில் தான் இருக்கின்றன.

................................................................................................................

பள்ளியில் தண்டனைகள்:-

பள்ளியில் குறும்புகள் செய்யும் குழந்தைகளைச் சரி செய்வது என்பது மிகப் பெரிய செயலாகவே இருக்கிறது.

மன ரீதியான தண்டனையோ உடல் ரீதியான தண்டனையே கொடுக்கப் படுகின்றன.

தண்டனைகள் இல்லாவிட்டால் எப்படி சரி செய்வது?

நீ செய்வது தவறு என்று சொன்னால் குழந்தையின் மனம் வருத்தப் படும் என்றால அது வன்முறையில் வருமா?

மனரீதியான தண்டனையைவிட உடல்ரீதியான தண்டனைக் கொடுத்தல் பரவாயில்லை என்றால் கொண்டை பிரம்பு கொண்டு அடித்தல் குழந்தையை திருத்தி விடுமா?

ஏதோ ஒரு பள்ளியில் குழந்தை தவறு செய்தபோது ஆசிரியை தன்னைத்தானே அடித்துக் கொண்டதாகவும் அதனால் மணவன் மனம் திருந்தி தவறை ஒத்துக் கொண்டதாகவும் செய்திகள் வந்தன. இது அந்த குழந்தையின் மனத்தை க் காயப் படுத்துவது ஆகாதா? இதைப் பின் பற்றி குழந்தைகள் பெற்றோரை மிரட்டச் செய்ய மாட்டார்களா...?


ஒரு கேள்விக்கான பதிலை நூறுமுறை எழுதுமாறு பணிக்க படுவதால் குழந்தைகளின் தூக்கம் கெடாதா? அது வன்முறை என்று சொல்லப் படுமா? அப்படி என்றால் இரவு முழுவதும் குழந்தைகளை கண்விழித்துப் படிக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்துதல் வன்முறைதானா? அந்த வன்முறை தவிர்க்கப் பட்டால் குழந்தைகள் எப்படி பெரிய அதிகாரிகளாகவும் தொழிலதிபர்களாகவும் வரமுடியும்? அப்படி என்றால் அவர்களை தூங்கச் சொல்லி அவர்களது எதிர்கால வலர்ச்சியை சுருக்குவது கூட வன்முறைதானா?

........................................................................................................................................

பிரம்பால் குழந்தைகளை அடிப்பதை எம்ஜியார் படத்தில் கத்திவீசுவது போல் மிகத்திறமையாகச் செய்யும் ஆசிரியர்களை ஊக்குவிப்பது யார்?

மைதானத்தை சுற்றி வருவதால் உடல் வலிமையடையும் என்றால் குழந்தையின் தாங்கும் சக்தி கூட தெரியாத நிலையில் ஆசிரியர் இருந்தால் அதற்கு யார் பொறுப்பு?
..........................................................................................................................................


இது எல்லாவற்றையும் விட பெரிய வன்முறை ஒன்று பெரும்பாலான குழந்தைகள் மீது நடந்து வருகிறது. பெற்றோர் பள்ளியில், பெற்றோர் விரும்பும் பாடங்களில் பெற்றோர் விரும்பும் விளையாட்டுகளில் குழந்தைகளை கட்டாயப் படுத்துவது.., இதற்கு ஒரு விடிவு காலம் எப்போது வருமோ தெரியவில்லை?

அப்படி வரும் காலகட்டத்தில் மாணவர்களுக்கு இந்தப்பாடம் எடுத்தால் இந்த வளர்ச்சி கிடைக்கும் என்ற முதிர்ச்சி கண்டிப்பாக இருக்குமா ? அதுவும் தெரியவில்லை.

ஆனால் இன்றைய சூழலில் பெற்றோருக்கே அது தெரியாமா என்றும் தெரியவில்லை...

..........................................................................................................................

இது குழந்தைகளின் மீதான வன்முறைதானா? என்பது எனக்குத்தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் கூறுங்களேன்.

பல வீடுகளில் சிறு குழந்தைகளுக்கு உணவு ஊட்டுகிறேன் பேர்வழி என்று குழந்தையை வைத்துக் கொண்டு ஒருமணிநேரம், இரண்டு மணிநேரம் உணவு ஊட்டுகிறார்கள். இது நகர்புறத்தில் ஓரளவு வளர்ந்து கொண்டிருக்கும் கிராமங்களில் குடும்பத்தலைவியாக இருக்கும் தாய்மார்களிடம் சாதாரணமாக காணப் படுகிறது. ஒவ்வொருவேளையும் ஒருமணிநேரத்திற்கு மேல் உணவு ஊட்டுவது வன்முறையா இல்லையா?

சிலநேரங்களில் அவர்களுக்கு பிடித்த ருசியில் சமைத்துவிட்டு சாப்பிடுமாறு குழந்தைகளை கட்டாயப் படுத்துகிறார்கள். சில நேரங்களில் கணவன்மார்களையும் கட்டாயப் படுத்துகிறார்கள். இது வன்முறையா? இல்லையா?

...........................................................................................................................

குழந்தைகளின் மீதான வன்முறை பற்றி பேசும் போது பெற்றோரையும் ஆசிரியர்களையும் தனித்தட்டில் வைத்துப் பார்க்க வேண்டும். அவர்களையும் ஒட்டு மொத்த வன்முறையாளர்களுடன் சேர்ப்ப்து அதைப் பற்றிய பேச்சுகளை நீர்த்துப் போகவே செய்யும்.

பெற்றோர்களுக்கு ஏற்கனவே பல பயிற்சி வகுப்புகள் கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் (அரசுமருத்துவ மனைகள்) தரப் படுகின்றன. ஆசிரியர்களுக்கும் கூட மாணவர்களின் மனவியல் தொடர்பான பாடங்கள் இருக்கும் என்றே நினைக்கிறேன். அவைகளை இன்னும் தரம் உயர்த்தி உணர்ந்து படிக்கச் சொன்னால் அந்தப் பிரச்சனைகளையும் சரி செய்து விடலாம்.

ஒட்டு மொத்த குழந்தைகள் மீதான வன்முறை என்று பேசுவது பல மோசமான கொடுமைகளையும் வீட்டுப் பாடம் எழுத கட்டாயம் படுத்துவதையும் ஓரே தட்டில் வைத்து பார்க்க வழிவகுத்துவிடும்

21 comments:

  1. நெசமாலுமே நக்கல் பதிவுதானுங்க

    ReplyDelete
  2. உங்க பதிவு என் சின்ன வயசுல வந்து இருந்தா நான் தினமும் பிரம்பில் அடிவாங்கி இருக்க மாட்டேன் நன்பா அவ் ... முட்டி போட்டது, அடி, உதை, திட்டு எல்லாம் வாத்திகள் செஞ்சது .. எங்க அப்பா அம்மா ஹ்ம்ம்ம் நல்லவர்கள் என்னை பொருத்து கொண்டு திருத்தினார்கள் ;)

    ReplyDelete
  3. //ILA said...

    நெசமாலுமே நக்கல் பதிவுதானுங்க
    //


    நிஜமாக இதில் நக்கல் எதுவும் இல்லை. தல..


    இந்த கேள்விகள் சராசரி மனிதர்களுக்கு ஏற்படுவதுதான். இவைகளுக்கு விடைதான் தெரியவில்லை.

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. //Suresh said...

    உங்க பதிவு என் சின்ன வயசுல வந்து இருந்தா நான் தினமும் பிரம்பில் அடிவாங்கி இருக்க மாட்டேன் நன்பா அவ் ... முட்டி போட்டது, அடி, உதை, திட்டு எல்லாம் வாத்திகள் செஞ்சது .. எங்க அப்பா அம்மா ஹ்ம்ம்ம் நல்லவர்கள் என்னை பொருத்து கொண்டு திருத்தினார்கள் ;)
    //


    வாங்க தல...,

    திட்டுவது சரியா, தவறா...,

    பொறுத்துக் கொள்வதுமூலம் ஒருவர் செய்யும் தவறு அவருக்கு தெரியாமல் போகுமாறு செய்வதும் சரியா.., தவறா...., தல...

    இதில் ஒருவரையோ, பலரையோ குறை சொல்வதால் நன்மை ஏதாவது உண்டா....,

    ReplyDelete
  5. //பல வீடுகளில் சிறு குழந்தைகளுக்கு உணவு ஊட்டுகிறேன் பேர்வழி என்று குழந்தையை வைத்துக் கொண்டு ஒருமணிநேரம், இரண்டு மணிநேரம் உணவு ஊட்டுகிறார்கள். //


    ஒரு இட்லியை, சிறிதளவு குழந்தை உண்வை ஒரு மணிநேரம் பிசைந்து பிசைந்து ஊட்டுவது தவறு என்கிறேன்...,

    இதில் கேலி கிண்டல் எதுவும் கிடையாது

    ReplyDelete
  6. இது எல்லாவற்றையும் விட பெரிய வன்முறை ஒன்று பெரும்பாலான குழந்தைகள் மீது நடந்து வருகிறது. பெற்றோர் பள்ளியில், பெற்றோர் விரும்பும் பாடங்களில் பெற்றோர் விரும்பும் விளையாட்டுகளில் குழந்தைகளை கட்டாயப் படுத்துவது.., இதற்கு ஒரு விடிவு காலம் எப்போது வருமோ தெரியவில்லை?//

    நல்ல வேளை நான் இதிலிருந்து தப்பித்து விட்டேன்...

    ReplyDelete
  7. சில கேள்விகளில் அர்த்தமுள்ளது....

    ReplyDelete
  8. நீ செய்வது தவறு என்று சொன்னால் குழந்தையின் மனம் வருத்தப் படும் என்றால அது வன்முறையில் வருமா?

    மனரீதியான தண்டனையைவிட உடல்ரீதியான தண்டனைக் கொடுத்தல் பரவாயில்லை என்றால் கொண்டை பிரம்பு கொண்டு அடித்தல் குழந்தையை திருத்தி விடுமா?//

    அப்ப எப்பிடிதான் திருத்துறது???
    :)))

    ReplyDelete
  9. வாங்க வழிப் போக்கன் சார், தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
  10. அழுக்கான கிழிந்த உடைகளை குழந்தைகள் அணிந்திருக்கும் நிலைகூட குழந்தைகளுக்கெதிரான வன்முறையில் அடங்குகிறதாம்.

    அதற்கு என்ன தீர்வு? சட்டப் படி யாருக்கு தண்டனை கொடுப்பது? நல்ல உடைகள் கொடுக்கும் வசதியும், நல்ல உணவும் கொடுக்கக் கூடிய சூழ்நிலையும் இல்லாத பெற்றோரை என்ன செய்வது? ///

    உண்மைதான்!! சிந்திக்கவேண்டிய விசயம்!!

    ReplyDelete
  11. அன்பு சுரேஷ்!

    இந்தப் படம் குழந்தைகள் நல அமைச்சகத்தின் இணையத்தில் இருந்து எடுத்தது.

    இப்பதிவில் நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு மே பத்து அன்று விடையளிக்க டாக்டர் ருத்ரனும், டாக்டர் ஷாலினியும் தயாராக இருப்பார்கள்.

    நன்றி!

    ReplyDelete
  12. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி

    தேவன்மயம் சார்,

    மற்றும்

    லக்கிலுக் சார்.

    ReplyDelete
  13. //இது எல்லாவற்றையும் விட பெரிய வன்முறை ஒன்று பெரும்பாலான குழந்தைகள் மீது நடந்து வருகிறது. பெற்றோர் பள்ளியில், பெற்றோர் விரும்பும் பாடங்களில் பெற்றோர் விரும்பும் விளையாட்டுகளில் குழந்தைகளை கட்டாயப் படுத்துவது.., இதற்கு ஒரு விடிவு காலம் எப்போது வருமோ தெரியவில்லை?//

    சிந்திக்க வேண்டிய விஷயம்

    ReplyDelete
  14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புருனோ சார்

    ReplyDelete
  15. //ரிஷி (கடைசி பக்கம்) said...

    rompa ravusaa irukkunganna//


    இது கொஞ்சம் சீரியஸான பதிவுங்கண்ணா...,

    காமெடியாவே பாக்கறீங்களே....,

    ReplyDelete
  16. //1.குழந்தைகளை வேலைக்காரர்களாகப் பயன்ப்டுத்துவது... அது சொந்தக் குழந்தையாக இருந்தால் கூட.....

    கண்டிப்பாக குழந்தைகளை வேலைக்காரர்களாகப் பயன்படுத்துவது கொடுமைதான். ஆனால் சொந்த வீட்டில் குழந்தைகளை அவ்வப்போது சின்ன சின்ன வேலைகளைச் செய்யச் சொலவது என்பது வன்முறையில் வருமா....
    சட்டத்தின் முன் குழந்தைகளை கொடுமைப் படுத்தவில்லை. என்பதை நிரூபிப்பது எப்படி?
    அல்லது குழந்தைகளை ரிமோட் எடுத்துத் தருமாறு சொல்வது எல்லாம் வன்முறை என்ற வட்டத்துக்குள் கொண்டுவந்து விடுவார்களா,,,,//

    "குழந்தையை வேலைக்காரி மாதிரி நடத்தாதே" என்று சொல்லும்போதே, வேலைக்காரிக்கும், வீட்டில் சின்னச்சின்ன வேலைகள் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் எளிதில் புரிந்துவிடும். இதில் நீங்கள் குழம்பிக்கொள்ள வேண்டியதில்லை.

    //2.அழுக்கான கிழிந்த உடைகளை குழந்தைகள் அணிந்திருக்கும் நிலைகூட குழந்தைகளுக்கெதிரான வன்முறையில் அடங்குகிறதாம்.

    அதற்கு என்ன தீர்வு? சட்டப் படி யாருக்கு தண்டனை கொடுப்பது? நல்ல உடைகள் கொடுக்கும் வசதியும், நல்ல உணவும் கொடுக்கக் கூடிய சூழ்நிலையும் இல்லாத பெற்றோரை என்ன செய்வது? //

    "கூழானும் குளித்துக்குடி; கந்தையானாகும் கசக்கிக் கட்டு" இதைத்தான் மேலிருப்பது சொல்கிறது. நீங்கள் சொல்வதுபோல் வசதி வாய்ப்பையல்ல.

    //3.குழந்தைகளுக்கு மருத்துவ வசதியும், கல்வி வசதியும் செய்து கொடுக்காத நிலை குழந்தை மீதான வன்முறையாக அமைகிறது.

    தமிழகத்தைப் பொறுத்த வரை இந்த இரண்டும் இலவசமாக கிடைத்தாலும் இரண்டு மூன்று கிலோமீட்டர் சென்று அதைப் பெறுவது என்பதனைக் கூட கடினமான வேலையாகக் கருதும் நிலையுல் உள்ள அப்பாவி பெற்றோரை நாம் என்ன செய்ய முடியும்.? மந்தரித்தல் மட்டுமே குணப் படுத்தும், மருந்தும் மாத்திரைகளும் துணை வழிகள்தான் என நினைக்கும் பெற்றோர் இன்னும் நிறைய இருக்கிறார்கள்.//

    இரண்டு மூன்று கிலோமீட்டர் சென்று பெறுவதற்கு எந்தப் பெற்றோரும் தயங்கமாட்டார்கள். நீங்கள் சொல்வதைப்பார்த்தால், ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கும் ஒரு மருத்துவமனையும், கல்வி நிலையமும் இருக்கவேண்டும் என்பதுபோல் உள்ளது. இது சாத்தியமல்ல. சில நேரங்களில் வறுமையின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ குழந்தைகள் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் உள்ளது. இதைத்தான் வன்முறை என்று அப்படம் சொல்கிறது.

    //4. கண்காணிப்பிலாத சூழலில் குழந்தையை விடுதல்.

    இன்றைய வாழ்க்கை முறையில் பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் சூழலில் தாத்தா பாட்டி இல்லாத நிலையில் வேலைக்காரர்களில் மேற்பார்வையில் குழந்தைகள் இருப்பதும் கண்காணிப்பில்லாத சூழலே என்பது என் கருத்து. ஆனால் பெரும்பாலான நகரக் குழந்தைகள் இந்த நிலையில் தான் இருக்கின்றன.//

    ஆம். இது உண்மைதான்.

    //தண்டனைகள் இல்லாவிட்டால் எப்படி சரி செய்வது?//

    ஆம். தண்டனைகள் கண்டிப்பாக இருக்கவேண்டும். ஆனால் அவைகள் கொடூரமானதாக இருத்தல் கூடாது என்பதுதான் முக்கியம். உதாரணமாக தவறு செய்யும் ஒரு மாணவனை, பிரம்பால் கையில் இரண்டடி அடிப்பதற்கும், அவனது சட்டையைக் கழற்றச்சொல்லி காட்டுத்தனமாக அடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
    அதுபோல் ஒரு மாணவியிடம், " நல்லா மேக்கப் போட்டு மினுக்கிட்டு மட்டும் வரத்தெரியுது.. படிக்கத் தெரியலயோ" என்பது போன்ற கடின வார்த்தைகளைப் பயன்படுத்துதலும் கொடூர வகைத்தண்டனையே. இவைகள் கூடாது என்றுதான் அப்படம் வலியுறுத்துகிறது.

    //சிலநேரங்களில் அவர்களுக்கு பிடித்த ருசியில் சமைத்துவிட்டு சாப்பிடுமாறு குழந்தைகளை கட்டாயப் படுத்துகிறார்கள். சில நேரங்களில் கணவன்மார்களையும் கட்டாயப் படுத்துகிறார்கள். இது வன்முறையா? இல்லையா?//

    சில நேரங்களில் என்று சொல்லும்போது அது அப்படி வன்முறையாகும்.

    //மே பத்து அன்று விடையளிக்க டாக்டர் ருத்ரனும், டாக்டர் ஷாலினியும் தயாராக இருப்பார்கள்//

    அனைவராலும் பாராட்டப்படவேண்டிய செயல்.. வாழ்த்துக்கள். நானும் வர முயற்சிக்கிறேன்.

    டாக்டர் ருத்ரன் அவர்களுக்கும், டாக்டர் ஷாலினி அவர்களுக்கும் இப்போதே நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்
    உழவன்

    ReplyDelete
  17. மிக நீண்ட பதிலினைப் பதிவு செய்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தல..,,

    நீங்கள் கூறியுள்ள பதில்களை நானும் ஒத்துக் கொள்கிறேன். இதில் சட்டம் போடுவது என்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதே என்கருத்து. விழிப்புணர்வு என்பது மிகப் பெரிய அளவில் அமைய வேண்டும் என்பதே என்கருத்து, சட்டம் போடுவது என்பது குறிப்பாக அந்தச் சட்டத்துக்குள் ஆசிரியர்களை உட்படுத்துவது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே எனது வாதம்.


    பல நேரங்களில் சின்ன சின்னவேலைகளுக்குக் கூட வேலையாட்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். நம்வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளும் நாம் செய்ய வேண்டிய வேலைகள்தான். இதில் வேலைக்காரி மாதிரி நடத்தாதே. என்ற வாக்கியத்தின் பொருளைக் கூற முடியுமா? வேலைக்காரர்கள் என்பவர்கள் அடிமைகள் அல்ல. உங்கள் வேலையையைச் செய்ய உங்கள் உடலும் நேரமும் இடம் கொடுக்காததால் விலை கொடுத்து வேலையை வாங்குகிறோம். அப்படிப்பார்த்தால் உங்களைவிட வேலைக்காரர்களுக்கு சுயமரியாதை அதிகமாக இருக்கவேண்டும். வேலைக்காரர்களைப் போல் குழந்தையை நடத்தாதே என்ற வாசகம் எழும்போதே வேலைக்காரர்களையும் குழந்தைகளையும் அடிமையாக நடத்துவதாக பொருள்படும் அல்லது உங்கள் வேலையை மற்றவர்கள் மேல் திணிக்கும் கொடூர பழக்கத்திற்கு குழந்தையை அடிமைப் படுத்துவதாகப் பொருள்படாதா......


    கந்தையானாலும் கசக்கிக்கட்டு கூழாலானும் குழித்துக் குடி என்பது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தது. ஆனாலும் நடைமுறைக்கு முழுமையாகக் கொண்டுவரமுடியவில்லை. இதில் சட்டம்போட்டு தண்டனை கொடுத்தால் யாருக்குக் கொடுப்பீர்கள்?


    //நீங்கள் சொல்வதைப்பார்த்தால், ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கும் ஒரு மருத்துவமனையும், கல்வி நிலையமும் இருக்கவேண்டும் என்பதுபோல் உள்ளது.//

    நான் கூறியதை தாங்கள் சரிவர புரிந்துகொள்ளவில்லை. எத்தனையோ குடும்பங்களில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கூட குழந்தைகளை அழைத்துவருவதற்கு சோம்பேறித்தனத்துடன் இருக்கிறார்கள். குழந்தைக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அதே சோம்பேறித்தனத்துடன் தான் இருக்கிறார்கள்.


    தவிரவும் சூழ்நிலையின் காரணமாக குழந்தை வேலைக்குப் போகும் சூழல் ஏற்பட்டால் அந்தச் சூழலை எப்படிக் களைவது?

    //சில நேரங்களில் என்று சொல்லும்போது அது அப்படி வன்முறையாகும். //

    நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை. சிலநேரங்களில் செய்தால் வன்முறையாகாதா?

    வார்த்தைகளால் குதறுவதையும் பிரம்பால் அடிப்பதுமான தண்டனைகள் பற்றி நான் ஏற்கனவே சொன்னது போதும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  18. " உழவன் " " Uzhavan " சார்..,


    குழந்தைகளின் மீதான வன்முறை இந்த நாட்டின் அடிப்படை ஆதாரத்தையே அசைத்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ReplyDelete
  19. திட்ட வட்டமான வரைமுறையோ வழிகாட்டுதலோ வரையறுக்கப் படாத பட்சத்தில் பழிவாங்கவே இது பயன்படும்.

    ReplyDelete
  20. what to do? This is the draw back of indian govts & society. They always adopt the west half way.
    Here the govt has alternatives to take care of the kids when they are rescued from any so called abuse. "Parenting" is aways a complicated task. But basically here everone has their basic understanding they have responsibilities. That attitude is the most needed for our society before adapting to any new different views, laws.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails