Monday, August 2, 2010

எந்திரன் பாடல்களுக்கு பின் சில சிந்தனைகள் 2.8.10

நாம் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே சீரான இடைவெளியில் எந்திரன் பற்றிய பதிவுகளை போட்டுக் கொண்டு இருக்கிறோம்.  பாடல் வெளிவந்த பிறகு நிறையப் பதிவர்கள் எந்திரன் பதிவுகளைப் போட ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது பதிவு போட வில்லை என்றால் எந்திரனை வைத்துத்தான் கல்லா கட்டுகிறோம் என்ற பாராட்டுப் பத்திரத்தை பிடுங்கி விடுவார்களோ என்ற பயத்தாலும் நாமும் எந்திரன் புயலில் குதிக்கிறோம்.

================================================================
எந்திரன் சில சிந்தனைகள்

சிந்தனை எண் 1.  ரஜினி படத்தில் ரஹ்மானுக்கு உள்ள சுதந்திரத்தில் பாதி கூட ஷங்கர் படத்தில் ரஹ்மானுக்கு இருப்பது போல தெரியவில்லை.  முத்து, படையப்பா படங்களில் தெரிந்த கட்டுடைத்தல் இசை இதில் இருப்பது போல தெரியவில்லை. அவையெல்லாம் அதற்கு முந்தைய ரஜினி படங்களுலிருந்து கொஞ்சம் விலகியது போல தோன்றும். இந்தப் பாடல்கள் முந்தைய சங்கர் படங்கள் போலவே உள்ளனவே

சிந்தனை எண் 2.  பாடல்கள் எல்லாம் எந்திரனுக்கே வருவதாகத் தோன்றுவதால் ஒருவேளை எந்திரனுக்கு ஜோடிதான் ஐஸ்வர்யாவா?  அப்போ  ராவணன் கதை மாதிரி விஞ்ஞானியிடமிருந்து ஐஸ்ஸை கடத்திக் கொண்டு போய் எந்திரன் லவ் பண்ணுவாரா?  அல்லது விஞ்ஞானிதான் வில்லனா? பத்து வருட உழைப்பின் பலன் ஒன்றும் இருப்பது போல தெரியவில்லை என்று புலம்ப வேறு செய்கிறார்.

சிந்தனை எண் 3: தமிழில் பெயர் வைத்தால் வரிச் சலுகை என்று அறிவித்ததால் ரோபோ எந்திரனாக மாறியது போல தமிழில் கதாபாத்திரங்கள் பெயர் வைத்தால்  தயாரிப்புச் செலவில் பத்து சதம் மானியம்,  வசனங்கள் தமிழில் இருந்தால்  பத்து சதம் மானியம்,  பாடல்கள் தமிழில் இருந்தால் பத்து சதம் மானியம்,  வேற்று மொழிகளில் டப்பிங் செய்யும்போது தமிழில் சப் டைட்டில் கார்டு போட்டால் பத்து சதம் மானியம்,  தயாரிப்புக் கம்பனியின் பெயரை தமிழில் வைத்துக் கொண்டால் இருபத்தைந்து சதம் மானியம் கொடுக்கலாமே, சமீபத்தில் வந்த ஒரு படத்தில் மூலம் எந்திரன் தயாரிப்பாளர் அடைந்த நஷ்டத்திற்கு ஒரு ஆறுதலாக இருக்கும்.  இதன் மூலம் தமிழை வளர்த்தது போலவும் இருக்கும். அதிகமான தயாரிப்புச் செலவு என்று புலம்பும் நபர்களுக்கு உதவுவது போலவும் இருக்கும்.

சிந்தனை எண் 4; பன்னாட்டு கம்பனிகளிலிருந்து வாங்கி தமிழனின் மானம் காத்த தயாரிப்பாளர்களைப் பற்றி ஏன் யாருமே பாராட்ட மறுக்கிறார்கள்?

சிந்தனை எண் 5 : ரஜினியை சின்னப் பையனாகக் காட்டத்தான் ஐஸ்வர்யாவை ஜோடியாகப் போட்டு இருக்கிறார்களாமே உண்மையா ? பல காட்சிகளில் ரஜினி தம்பி போல தெரிவாராமே? அது உண்மையா? சில நாட்கள் பொறுத்திருப்போம்





இதற்கு முன் நாம் எழுதிய் எந்திரன் இடுகைகளுக்கு இங்கே செல்லவும்

Friday, July 30, 2010

சிநேகிதனே...............ய், சிநேகிதனே............ய்

இது மீள்பதிவு அல்ல மீள்பதிவு அல்ல

இந்த தொடர்பதிவினை நான் பங்கேற்றது போல இருந்தாலும் பங்குவகிக்காதது போன்ற ஒரு எண்ணம் இருப்பதால் சிநேகிதனின் அழைப்பை ஏற்று இந்த தொடர்கண்ணியில் ஒரு கண்ணியை இணைத்து விடுகிறேன்.


-------------------------------------------------------------------------------------------
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

SURESHKUMAR P இது பிளாக்கர் கணக்கில் தோன்றும் பெயர். உண்மைப் பெயரும் அதுதான்.




3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
 
 நான் ஆர்குட்டில் பகிர்ந்து கொண்ட சில நிகழ்வுகளை பதிவுலகில் பகிர்ந்துகொள்ளுமாறு ப்ருனோ சொன்னதால் பதிவுலகில் எழுத ஆரம்பித்தேன். அதற்கு முன் எனக்கு இவ்வளவு பெரிய உலகமே தெரியாது. அவரது சில இடுகைகளை மட்டும் படித்திருந்தேன். அடுத்த சில மாதங்களில் கால்பதித்திருப்பது எவ்வளவு பெரிய கடல் என்பதை உணர முடிந்தது.




4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

கொஞ்சம் நகைச்சுவையாக தலைப்புகள் வைத்திருக்கிறேன். சில நேரங்களில் கவர்ச்சியாகவும்

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

உண்டு. உள்ளூரில் மட்டும் பாராட்டுகளும் திட்டுக்களும் வாங்கிக் கொண்டிருந்த நான் உலக அளவில் வாங்க ஆரம்பித்தேன்.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா

பொழுதுபோக்கு என்று சொல்ல முடியாது. பொழுதுபோக்கு, பிரச்சாரம் மற்றும் பழைய நண்பர்களுடன் தொடர்பை புதுப்பிக்க புதிய நண்பர்களுடனான பயணத்திற்கு என்று சொல்லலாம்.  

பதிவுகள் மூலம் இதுவரை பணம் சம்பாதித்தது இல்லை. இனியும் அந்த எண்ணம் இல்லை.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

கனவுகளே..,

 

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

 


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

எல்லாம் பிரமை

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

புருனோ,  அவர்தான் எழுத அழைத்தார். எனவே பாராட்டியே தீரவேண்டிய கட்டாயம் அவருக்கு.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
விருப்பம் இருக்கிறது,  தொடர்ச்சியாக இரண்டு வலைப்பூக்களையும் படித்து வாருங்கள் தெரிந்து கொள்ளுங்கள்  நிறைய எழுதும் எண்ணம் இருக்கிறது



Sunday, June 27, 2010

ஏதோ நினைவுகள் (27.6.2010)

ஒரு பொண்ணு ஐ லவ் யூ சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க..,


ஆனால் நம்ம தலைவர் என்ன செய்தாருன்னு பாருங்க, அவரது தோழர் என்ன பேசுறார்ன்னும் கேட்டுங்கங்க



========================================================================

எப்படியெல்லாம் லவ் பண்னலாம் இந்த அம்மையார் பயிற்சிக் கொடுக்கிறார் பாருங்க



===========================================================================

அப்படி பண்ணாதவங்க கூட இப்படி பண்ணுறாங்க பாருங்க



========================================================================

இந்தப் பாட்டைக் கேட்கும்போது என்னமோ எங்கேயே குடைவதுபோல் இருக்கிறதே, ஏன்




=======================================================================

அந்தப் பாட்டுக்கும் இந்தப் பாட்டுக்கும் ஏதோ ஒரு பிணைப்பு



======================================================================
இந்தக் காணொளியைக் காணும்போது கிடைக்கும் அதிர்வுகளில் சிறு பகுதியைக் கூட மேலே காணும் அனைத்துக் காணொளிகளும் சேர்ந்தே கொடுக்க முடியவில்லையே..,  அது ஏன் ஏன் நண்பனே!

===================================================================


அனைத்து கல்லூரி நண்பர்களுக்கும்  , அனைத்துக் கல்லூரி நண்பர்களுக்கும் எங்களது batch day வாழ்த்துக்கள். 

Thursday, June 24, 2010

பொங்கி எழு: புறப்படு, ( தழுவல் அல்லது புனைவு) 24-6-2010

நண்பா புறப்படு,



கடமை இருக்கிறது,



அழைக்கிறது




ஏற்கன்வே செய்ததுதான்




காலத்தின் கோலம்




மீண்டும் நிகழ்ந்துவிட்டது




அன்று உன்னால்தான்




சாதிக்க முடிந்தது




அன்று நீதான்




மலையைத் தூக்கினாய்





கடலைத் தாண்டினாய்






விசுவாசத்தின் அடையாளமே




நீதான்




வீரத்தின் மறு உருவமே



நீதான்..,




உடனே புறப்படு





என்ன நடந்தது





என்றா கேட்கிறாய்.






ராவணன் சீதையை தூக்கிவிட்டானாம்




வாரணப் படைக்கு




அவசர அழைப்பாம்,





டிஸ்கி:- இப்போது வந்த குறுஞ்செய்தியின் புனைவு, தழுவல்

===============================================================

படித்து விட்டீர்களா?
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.....,

=============================================================



==============================================================



===============================================================

Saturday, June 19, 2010

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.....,

1. சீதைக்கு ராவணன் மேல் காதல் வந்திருந்ததா? இல்லையா?

2.சூர்ப்ப நகை  ராம, லட்சுமணர்கள் மீது ஆசைப்பட்டாரா? இல்லையா?

3.வீரப்பனால் கடத்தப் பட்டவர்கள் அவனது உபசரிப்பு காரணமாக அவன்மேல் பற்றுக் கொண்டவர்களாக மாறி இருக்கிறார்களா? இல்லையா?

4.வசனம் எழுதுபவர்கள்  (இயக்குபவர்களும்கூட)  அந்த ஊர் மக்களிடையே போய் சில காலம் வசிக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற முடியாதா?

5.மனைவியை காஸ்ட்யூம் டிசைனராக போடுபவர்கள் எல்லாம் மனைவி கொடுக்கும் ஆடைகளைத்தான் அணிவார்களா?

6.புனைவு என்று சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் எடுக்கலாமா? இதை தமிழ்கூறும் நல்லுலகமும் பதிவுலகமும் ஆதரிக்கிறதா?

7.கீழ்த்தட்டு மனிதன் எளிதாக அடுத்தவன் மனைவி மேல் காதல் கொள்வானா? இல்லை அதை புணைந்தவர்களின் எண்ணப்படி காதல் கொள்கிறானா?

8.ஐஸ்வர்யாராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்து பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டது யாராவது கொண்டாடுவார்களா?

9.மேட்டுக்குடி, மேடல்லாத குடி பிரச்சனைக்கும் திருநெல்வேலிக்கும் உள்ள தொடர்பு சிலராலாவது பேசப்பட்டிருக்குமா?

============================================================
டிஸ்கி:- மேலும் உண்மை தெரியவேண்டுபவர்கள் பின்னூட்டங்களில் கேட்கலாம்.

Tuesday, June 1, 2010

நெளி 1.6.10

அனுஷ்காவிற்கு அவமானமாக இருந்தது. இப்படியெல்லாம் நடக்கும் என்று துளி கூட நினைக்கவில்லை.  அவள் சூழலில் அவள் செய்தது சரி என்றுதான் நினைத்தாள். இன்னும் கூட அவள் செய்தது சரிதான் என்றே நினைத்தாள். ஆனால் டார்ஜன் செய்த எதிர்வினையை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. 

அனுஷ்காவும் டார்ஜனும் கல்லூரி மாணவர்கள். அவர்கள் அனைவரும் கல்விச் சுற்றுலா வந்திருந்தனர். கல்விச் சுற்றுலா என்று பெயரே தவிர சராசரி மாணவர்களின் சுற்றுலாதான்.   அதில்தான் பூங்காவில் தோழிகளுடன் சுற்றிக் கொண்டிருந்தாள். எப்படி தனிமைப் படுத்தப் பட்டாள் என்றே தெரியவில்லை. திடீரென் அவள் அருகில் டார்ஜனும் நின்றிருந்தான்,. அப்போது கூட எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல்தான் பேசிக்கொண்டிருந்தான். திடீரென ஒரு கடிதத்தைக் கொடுத்து ஐ லவ் யூ சொல்லிவிட்டான். 

அனுஷ்காவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பெரியதாக கோபம் வரவில்லை, தனது குடும்ப சூழல், டார்ஜனின் குடும்ப சூழல் அவர்களது ஊர் இதைப் பற்றியெல்லாம் நீண்ட நெடிய சொற்பொழிவு ஆற்றினாள்.  டார்ஜனுக்கு கொஞ்சம் வியர்த்தாற்போல இருந்தது,  மனம் மாறியிருப்பான் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் இங்கு நடப்பதோ.....................


இரவு உணவு முடித்தபின்  மாணவர்கள் சிறிய கலைநிகழ்ச்சி நடத்துவதாக சொன்னார்கள். அதில் யாரோ ஒருவன் யாரிடமோ ஐ லவ் யூ சொல்ல பெண் பாத்திரத்தை ஏற்றவன் ஏற்ற இறக்கங்களுடன்  அனுஷ்காவின் சொற்பொழிவை சொல்லிக்கொண்டு இருந்தான்.  குரலில் பயன்படுத்திய வட்டார வார்த்தைகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் அது அனுஷ்காதான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. தோழர்களும் தோழிகளும் ஹோ..............ய் என்று கரவொலி எழுப்பிக் கொண்டிருந்தனர்.

அனுஷ்கா நெளிந்து கொண்டிருந்தாள்.

இந்த இடுகை இந்த இடுகையோடு தொடர்பு உடையது. புரியாதவர்கள் இந்த இடுகையை படித்தே தீரவேண்டும்

Monday, May 31, 2010

இலக்கியத்தில் கெட்ட வார்த்தை

விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய இலக்கியங்கள் எவ்வளவோ வந்து இருக்கின்றன. அதிலும் பல இலக்கியவாதிகள் சிலபல நாட்கள் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுத அவர்கள் தங்கியிருக்கும் ஊருக்கே வந்து அவர்களின் வாழ்க்கையைப் பார்த்து எழுதுவார்களாம்.  அவர்களோடு வாழ்ந்து எழுதிருப்பார்களா என்பது அவர்களைக் கேட்டால்தான் தெரியும்,. 

நான் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் விளிம்பு நிலை மனிதர்களின் கதைகளை ப் படிக்கும்போது கெட்ட வார்த்தைகள் குபீர் குபீரென விழும்.   பெண்கள் மிக சாதாரணமாக கெட்ட வார்த்தைகள் உபயோகப் படுத்துவார்கள்.  பதின்மத்தின் துவக்கத்தில் இருந்த நண்பர்கள் அந்த வார்த்தைகளின் உள்ளர்த்தங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.


பின்னர்தான் தெரிந்தது இது போன்ற கெட்ட வார்த்தைகளை சேர்த்தால்தான் விளிம்புநிலை மனிதர்களின் கதை, கதை களத்தோடு ஒன்றிப் போகுமாம்.  இல்லையென்றால் அந்தக் கதைக்கும்  சராசரி மனிதர்களின் பிரச்சனைக்கும் வித்தியாசம் தெரியாதாம்.  அதற்காகவே இந்த கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தே தீரவேண்டுமாம். 

பாகவதர் காலத் திரைப்படங்களில் பேசப்பட்ட மொழியாகட்டும், அதற்கடுத்த மனோகரா கால மொழியாகட்டும், தங்கப் பதக்கம் சிவாஜிகால மொழியாகட்டும், திரைப் படங்களின் தாக்கம் மக்களின் பேச்சுக்களில்  அதிகம் இடம் பிடித்திருக்கிறது. என் எஸ் கே பாணியைவிட நாயக்ர்களின் பாணி பேச்சு வழக்கு இடம்பிடித்து இருக்கிறது.  சிலருக்கு கவுண்டமணி பாணி பேச்சுக்களும் இடம் பிடித்திருக்கிறது.

என் நண்பன் ஒருவன் சின்ன வயதில் மாவீரன் படத்தில் ரஜினி உபயோகிக்கும் ஸ்டைலிஷ் வார்த்தையை அடிக்கடி உபயோகப் படுத்துவான்.  அதற்காக வீட்டில் நிறைய அடிவாங்கினாலும் அவன் அதை மாற்றவே இல்லை, மிக நெடுங்காலம் ஆகியும்கூட அந்த வார்த்தையை மிகக் குறைந்த அளவிலாவது உபயோகப் படுத்தியே தீருகிறான். ஆனால் விளிம்பு நிலை மனிதர்கள் இப்போதெல்லாம் மிகச் சாதாரணமாக கெட்ட வார்த்தைகளை உபயோகப் படுத்துவதில்லை.  புதிய தலைமுறை மாணவர்களிடம் இந்த எச்சரிக்கை உணர்வு சற்று அதிகமாகவே இருக்கிறது,.  கிராம மாணவர்களிடம் மிக அதிகமாகவே இருக்கிறது.  ஆனால் நகரத்தில் இது போன்ற கெட்ட வார்த்தைகளை நண்பர்கள் மத்தியில் சரளமாகவே உபயோகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


பல கதைகளில்  இந்த கெட்ட வார்த்தைகளை தவிர்த்தால் கூட கதையின் சாராம்சம் குறையாமலேயே பார்த்துக் கொள்ள முடியும். இன்று அவர்களின் வாழ்க்கை மாறிக்கொண்டுதான் இருக்கிறது.  மாற முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் மிகத் தவிர்க்க       இயலாத சூழலில் தங்கள்மேல் விழும் உடல் ரீதியான மனரீதியான  வ்ன்முறையை எதிர்க்க மட்டுமே இந்த வார்த்தைகளை உபயோக்ப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

தயவு செய்து விளிம்புநிலை மனிதர்களை பற்றி கதை எழுதினால் அதில் கெட்ட வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள். இதுபோன்று தவிர்ப்பதால் கதை இயல்பாக இல்லாமல் போகலாம். யார் அறிவார்கள்? ஒருவேளை நீங்கள் இயல்பு மாறி எழுதுவதால் கூட அவர்களின் அந்த இயல்பே மாறிப் போகக்கூட நேரிடலாம்.

டிஸ்கி 1:

இது எதிர்வினை அல்ல

டிஸ்கி 2

எதிர்வினை அல்ல என்பதால் எந்தப் பதிவிற்கான எதிர்வினை என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யக் கூடாது

டிஸ்கி 3

இந்தக் கெட்ட வார்த்தைகளை கதையில் புகுத்துவதால் கெட்டவார்த்தைப் போட்டு கூகிள் ஆண்டவரின் தேடும்போது உங்கள் தளம் முண்ணிலையில் வந்து ஹிட்ஸ்களைக் குவிக்கக் கூடும்

Monday, May 17, 2010

முரட்டு சிங்கம் - ஒரு கண்ணீர் காவியம் (இரும்புக் கோட்டை தெரிந்தவர்களுக்கு)

எருமைக்கு நோவுன்னா காக்கைக்கு கொண்டாட்டம் -  என்.எஸ்.கிருஷ்ணன் மதுரை வீரனில்

அக்காமாலாவையும், கப்ஸியையும் கவிழ்த்து, அந்த குளிர்பானங்களுக்கு விளம்பரம் கொடுத்தவர்களை ஓங்கி அறைந்து, நாடக் நடிகை செல்லம்மாவை பெண் என்பதால் விடுகிறேன் என்று சொன்ன சிம்புதேவனின் படத்தை ஆராயாமல் , அனுபவித்து சிரியுங்கள் என்று சொன்னால் எப்படி? அதனால் நாம் நம் பாணியில் ஆராய உட்கார்ந்தோம். வாழ்க ஞாயிற்றுக் கிழமை. 

=========================================================

சில உண்மைக் கதைகளை எடுத்துவிட்டு அதைக் கற்பனை என்று டிஸ்கிபோடுவார்கள் . இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதைதான். ஆனால் அதை வேறு களத்தில் எடுத்து இருக்கிறார்கள் அவ்வளவுதான்.  சிங்கத்தின் பெயரைக் கேட்டாலே அது புரிய வேண்டும்.கௌபாய் பிண்ணனி இல்லாமல் வேறு எந்தக் கட்டத்தில் எடுத்திருந்தாலும் உண்மைக்கதை உடனடியாகப் புரிந்திருக்கும். இப்போது கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கவேண்டும்

http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/IKMS.jpg

=============================================================

வலைப்பூ எழுதும் பலரும் காமிக்ஸ் ரசிகர்களாக, வெறியர்களாக இருப்பதால் அவர்கள் பலருக்கும்  இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்  முழு திருப்தியளிக்கவில்லை என்றும் ஆனாலும் படத்தைப் பார்த்து மகிழ்ச்சியோடு கூடிய திருப்தி அடைவதாகவும் எழுதியிருந்தார்கள்.  அவர்கள் ஏன் மகிழ்ச்சி அடையவில்லை என்பதைஆராய்வதே நமது முதல் கட்ட லட்சியமாக இருந்தது.  


பொதுவாக டெக்ஸ்வில்லரைப் பார்த்தால் எனக்கு எப்போதுமே எம்ஜியார் நினைவுதான் வரும். லக்கிலுக்கைப் படிக்கும்போது நாகேஷ் நினவு வரும். 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzLPfi-0EtnlMwv18Kp8M5-azDaEWjhhvRoC2nb_mJ9WjZiLEPe8cr9gsBMYO0YEJKehTwcghYMZl51mBJV6U_AEkii2Z3lMy-uWHJHesEYx-h4gundrYGFAya8HyN2k41_zteCzCAsMo/s400/Original+still+for+the+Ad+poster.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiUo7IZlyRt9iOa6MNQKwcqCQxJl6iO5dAojJ0v4jrpR3WTSR6mpEHuUBVXA4MUM5kb50bb6o7M0_-O4xXIFtkL-0n3QM4NRh4tM69-oQK9H_Xe44_Cjs1KJE3hYawzzS9vvKjjOLUgU9z/s400/vijay-vettaikaran-still.jpg
அதுவும் டெக்ஸ்வில்லரின் பாத்திரப் படைப்பு எம்ஜியார் படங்களின் பாத்திரப் படைப்புக்கு ஈடாகவே எனக்குத் தோன்றியது. எம்ஜியார் தாழ்த்தப் பட்ட மக்களுக்காக போராடுபவராக வருவார். ஆனால் அவர் உயர்ந்த குடியில் பிறந்தவராகவே வருவார். மதுரைவீரன் திரைப்படத்தில் கூட  மதுரைவீரன் ஒரு ராஜகுமாரன் என்றும் அந்தக் குழந்தையை தூக்கி காட்டில் வீச அதை எடுத்து செருப்புத் தைப்பவர் வளர்த்ததாகக் கதை சொல்லுவார்கள். நானும் அதற்கான ஆதாரத்தை தேடிக் கொண்டே இருக்கிறேன். எந்த எழுத்துவடிவங்களிலும் அப்படி இருப்பதாக யாரும் சொன்னதில்லை.கர்ணபரம்பரைக் கதைகள் கூட மதுரைவீரன் பூர்வகுடியாகவே சொல்லுகின்றன. ராஜகுமாரனாகக் காட்டவில்லை. ஆனால்  அப்படி ஒரு பிம்பத்தை தொடர்ந்திருப்பார்,அப்படி எடுத்தால்தான் பெருவாரியான மக்கள் பார்ப்பார்களோ என்னவோ!


டெக்ஸ் வில்லரும் அப்படித்தான். பல கதைகளில் நவஜோக்களுக்கு, செவ்விந்தியர்களின் பங்காளராக வந்தாலும் அவர் ஒரு வெள்ளையர். ஒரு வெள்ளயரை முன்னிலைப் படுத்தியே கதை நகரும்.   


ஆனால் லாரன்ஸின் தோற்றம்,  டெக்ஸ்வில்லரின் பழிவாங்கும் பாவையில் வரும் வில்லனைப் போல அதாவது வெள்ளையரின் நடை உடையில் வலம் வரும் செவ்விந்தியரைப் போல அல்லவா தெரிகிறது. டெக்ஸை எதிர்பார்த்து வருவோருக்கு டெக்ஸின் வில்லனை ஹீராவாக ஏற்கும் மனம் வருமா? தவிரவும் தொடக்க காட்சிகளில் ரஜினையை வேறு கிண்டல் செய்கிறார்.   கருப்பராக தோற்றமளிக்கும் லாரண்ஸ் மக்களின் மனதில் இடம் பிடிக்க சிரமப் படுகிறாரோ என்னமோ!

http://www.writermugil.com/wp-content/uploads/2009/12/mgr-vettai.jpg




ஆனால் கதைப் படி  கதாநாயகனின் கூட்டம் பூர்வ குடிகள் அல்ல, அதற்கு மனோரமாவின் உடைகளே சாட்சி



=======================================================


அடுத்ததாக நாயகிகள். என்னத்த சொல்ல, ஒவ்வொரு பாடலின்போதும்  அலைப்பேசியில் பேசி பாடலைக் கவனிக்கத் தவறிவிட்டேன். இருந்தாலும் சந்தியாவின் கண்கள்.  அத்தோடு  மண்டையோடு சேர்த்து, ......... ண்டையும் உடைத்துக் கொண்ட நாயகியின் தலை முடி, லட்சுமிராயின் எஸ்பாஸ் இவ்வள்வுதான் எனக்குத் தெரிந்தவை.


==============================================================


U S A  கோட்டையினருடன் செய்யும், அணு ஆயுத ஒப்பந்தம் ,அணு ஆயுத ஒப்பந்தமாக உங்களுக்கு தோன்றுகிறதா? அதிகாரப் பகிர்வு என்று சொல்லிக் கொள்ளும் எல்லா ஒப்பந்தங்களையும் கேலி செய்வதாகவே தோன்றுகிறது.  


=================================================================


தலைவன் இறந்ததை மறைத்துவிடவேண்டும்,. அப்போதுதான் தொடர்ச்சியாக் போரிட முடியும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்கள். முகலாய சரித்திரத்தில் இதைக் காணமுடியும்.  ஹேமு ஏறக்குறைய போரில் வெற்றி பெற்ற நிலையில் குத்துப் பட்டு இறக்க  அவரது படைகள் முகலாயப் படைகளால் சின்னாபின்னப் படுத்தப் பட்டு முகலாய சாம்ராஜ்யம் இந்தியாவில் ஆழக்கால் ஊன்றுகிறது.


1. சிங்கத்தின் கதை


2. சிங்காரத்தின் கதை


ஒருவேளை சிங்காரம் இறந்திருந்தால் அது ஊடகங்களின் பார்வைக்கு வந்திருந்தால் சிங்காரத்தின் இறந்த புகைப்படம் சிங்கத்தின் பழைய புகைப்படத்துடன்  ஒப்பிடப் பட்டு சிங்கம் இறக்கவில்லை என்று மீண்டும் நிறுவப் பார்த்திருப்பார்களா?  அப்போதும்  ஜெய்சங்கர் புர மக்களின் நம்பிக்கையான சிங்கம் வருவார் என்பது தொடர்ந்திருக்குமோ?

===================================================

ஜெய்சங்கர்புரம், ஷோலேபுரம் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்களே? அனுராதா புரம் என்று அந்தக்காலத்திலேயே தமிழன் ஒரு நடிகையின் பெயரை வைத்திருக்கிறானே அதையெல்லாம் தொடர்படுத்திக் கொள்ளலாமா?

===============================================================

அப்படி என்றால் சிங்கத்திற்கும் சிங்காரத்திற்கும் உள்ள இடைவெளி. அந்த கட்சி மாறும் கோடரிக்காம்புக்கு தெரிந்திருக்குமே?  அப்போது அந்தக் கதாபாத்திரம் என்ன செய்திருக்கும்?

==========================================================
நாசரின் ஒரு கண் சொல்லும் கதைகள் என்ன என்ன? கடைசியில் அந்தக் கண்ணைக் கீழே போட்டு கசக்க வைக்கும் சிம்பு தேவன் சொல்லுவது தான் என்ன? சிலருக்குப் புரியும்.

====================================================


தமிழ் எழுத்துக்கள் எத்தனை ? பொங்குதமிழனுக்கு கஷ்டம் ஏற்படும்போது என்ன செய்வான் போன்ற ஆராய்ச்சிகள் எல்லாம் சிம்பு தேவன் செய்துள்ளார். வாழ்க சிம்பு தேவன்.  நாம் தேடியலையும் பல விஷயங்கள் நம் கண் எதிரிலெயே உள்ளன. அதைவிடுத்து நாம் பல ஆபத்துக்களை தாண்டித் தாண்டி தேடிக்கொண்டே இருக்கிறோம் என்ற ஆன்மீகக் கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார் சிம்புதேவன்.

மீண்டும் மீண்டும் பார்க்க பல கோணங்களில் படத்தை ரசிக்க முடியும் என்றே நினைக்கிறேன்.
=========================================
பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே

-ஆயிரத்தில் ஒருவன்

Monday, May 10, 2010

எட்டாம் வகுப்பு படித்து விட்டு நேரடியாக ஐ.ஏ.எஸ் படிக்க என்ன வழி?

சமச்சீர் கல்வி பற்றியும் கூட நாம் எழுத வேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிட்டோம். சில தளங்களில் கொடுக்கப் ப்ட்டிருந்த தகவல்கள் பற்றிப் பார்த்தால் சி.பி.எஸ்.சியில் 7ம் வகுப்பில் படிப்பதைத்தான் ஸ்டேட் போர்டு மாணவன் 12ம் வகுப்பில் படிக்கிறானாம். எனவே சமச்சீர் கல்வி முறையால் மாணவர்களின் தரம்  குறைந்து விடுமாம். எனவே இது போன்ற தரம் குறையாமல் இருக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். தளங்களில் மட்டுமல்லாமல் சில கல்வியாளர்கள் கூட அவ்வாறு சொல்லிக் கொண்டு சுற்றுகிறார்கள் . எனக்கு வெகு காலத்திற்கு முன்பே இது பற்றியெல்லாம் சில சந்தேகங்கள் இருந்தன.

அரசுப் பள்ளிகளில் பின்பற்றப்படும் பாடத்திட்டம் தரம் குறைந்ததாகவும், மெட்ரிக் பாடத்திட்டங்கள் தரம் மிகுந்ததாகவும் இருப்பதாகவும் சமச்சீர் முறையில் தரம் குறைப்பதால் என்ன லாபம் என்று கேட்கிறார்கள்.
---------------------------------------------------------------------------------------------

இந்த தரம் வாய்ந்த கல்விச் சாலைகளில்  7 வகுப்பு மாணவன் அரசுப் பள்ளியின் 12ம் வகுப்பு மாணவனுக்குச் சமம் என்றால் அவன் நேரடியாக பொறியியல் அல்லது மருத்துவம் அல்லது ஏதாவது கல்லூரி யில் பட்டப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப் படுவானா? அல்லது வெட்டியாக இன்னும் ஐந்து ஆண்டுகள் படிக்க வேண்டுமா? தேவையே இல்லை என்னும் போது ஐந்து ஆண்டு படிக்கும் படிப்பு தரம் உயர்ந்ததாய் இருந்தால் அதனால் என்ன பயன்?

அல்லது தேவையே இல்லாத விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் தனியார் பள்ளிகளின் கல்வி முறை எப்படி தரம் உயர்ந்ததாய் கருதப் படும்?

தனியார் பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்தால் இந்திய ஆட்சிப் பணிக்கு நேரடியாகச் சேர்த்துக் கொள்ளப் படுவானா? இல்லையே அவனுக்கும் அந்த அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவன் படிக்கும் வரை காத்துதானே இருக்க வேண்டியிருக்கிறது? பிறகெதற்கு வெட்டி வேலை?

கவுண்டமனி பாஷையில் சொன்னால் இந்த மெட்ரிக் கல்வியால் ஒரே ஒரு நன்மைதான் இருக்கிறது, 10 வது வரை அங்கு படித்து 11,12க்கு மீண்டும் ஸ்டேட் போர்டுக்கு வந்து மீண்டும் படித்து ஆரம்பத்திலிருந்தே ஸ்டேட் போர்டில் படிக்கும் மாணவர்களுக்கு ஆப்பு வைப்பது. அது இந்த சமச் சீர் கல்வியால் தவிர்க்கப் படுகிறது அல்லவா?

============================================================


எவ்வளவு கற்றுக் கொள்கிறோம் என்பதைவிட  அதை எந்த அளவு உபயோகப் படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.  மிக ஆரம்பக் கல்வியில் எளிய கூட்டல் கழித்தல்,  மொழிப்பாடங்களை பிழையின்றி பேச எழுத கற்றுக்கொண்டாலே போதும். சில வருடங்கள் கழித்து  அடிப்படை அறிவியல் மற்றும் நாம் வாழும் இடம் பற்றிய வரலாறு கற்றுக் கொண்டால் போதும். இன்னும் சில நாட்களில் வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களைக் கற்றுக் கொடுக்கலாம். ( இது இப்போது கூட மிக உயர்ந்த தரம் வாய்ந்த கல்வித்திட்டங்களில் இருப்பதாகத் தெரியவில்லை) .  பின்னர் அறிவியல் கணிதங்களில் சற்று வலிமையைக்கூட்டலாம்.

தரம், தரம் என்று இனிமேலாவது முழங்கிக் கொண்டிராமல் உண்மையைப் புரிந்து கொண்டு குழ்ந்தைகளை நிம்மதியாகத் தூங்க விடுங்கள்.

=======================================================
சில ஆட்கள் கல்விக் கட்டணத்தை பள்ளிகளில் குறைவாக நிர்ணயித்து உள்ளதால் இனிமேல் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்விட்டீஸ் கற்றுக் கொடுத்தல் குறைந்துவிடும் என்று சொல்லிக் கொண்டு சுற்றுகிறார்கள். மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது நல்ல விளையாட்டுகளை ஒழுங்கான முறையில் விளையாடக் கற்றுக் கொடுத்தல், மன ஆரோக்கியத்துடன் இயல், இசை, நாடகம், எல்லா மொழிகளிலும் கற்றுக் கொடுத்தல் நல்ல நகைச்சுவை உணர்வைக் கற்றுக் கொடுத்தல். நான் பயின்ற காலத்தில் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளிலும், நுண்கலைப் போட்டிகளிலும்  அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களே முக்கால்வாசிப் பேர்களுக்கு மேலே இருந்தார்கள். மருத்துவக் கல்லூரியிலும் அப்படித்தான். எங்களோடு போட்டி போட்ட க்லை, பொறியியல் கல்லூரிகளிலும் அப்படியே நிலவியது , பின்னர் என்னதான் அந்த விலையுயர்ந்த பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறார்கள்.

---------------------------------------------------------------------
நிறையக் கற்றுக் கொண்டு அறிவு புதையல்களாக மாறுவதைவிட, குறைவாகக் கற்றாலும், கற்றதை முழுவதும் உயயோகப் படுத்தும் வகையில் கற்று  சாதித்து வாழும் வாழ்வே சிறந்தது. அதற்கு எந்தக் கல்வி முறை சிறந்தது என்று கூறுங்களேன்

-------------------------------------------------------------------------

சம்ச்சீர் கல்வி  மாநிலத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கே தேவையான ஒன்று.

==================================================



சீர் மேவு குரு பாதம்
சிந்தையோடு வாக்கினும்
சிரம் மீது வைத்து போற்றி ஜகமெல்லாம் மெச்ச
ஜெயக்கொடி பறக்க விடும்வீரப் பிரதாபன் நானே

சரி

சங்கத்துப் புலவர் பாட தங்கத் தொழில் போர்ப் படர்க்கும்

வங்கத்து பொன்னாடை பரிசளித்தார்

எனக்கு இங்கில்லை ஈடென்ன சொல்லிக் களித்தார்

இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டதாரே

சீரெடுத்து பாடி வாரேன் தானே

அதற்கு ஓரெழுத்து பதில் சொல்லி பாரேன்


யானையை பிடித்து யானையை பிடித்து

ஒரு பானைக்குள் அடைத்து வைக்க

ஆத்திரப் படுபவர் போல் அல்லவே

உம் தாரம்பக் கவி சொல்லுதே புலவா

வீட்டின் பூனைக் குட்டி காட்டில் ஓடி

புலியைப் பிடித்து தின்ன

புறப்பட்டக் கதை போல் அல்லவா

தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா


பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம்

கோதானம் உண்டு பற்பல தானங்கள்

இதற்கு மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்

கேள்விக்கு பதிலை கொண்டா


உடைச்சி ஏறிவென் ரெண்டா

உன்னை ஜெயிச்சி கட்டுவேன் முண்டா

அப்புறம் பறக்க விடுவேன் செண்டா

ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி


சொல்றேன்

எத்தனை தானம் தந்தாலும்

எந்த லோகம் புகழ்ந்தாலும்

தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானந்தனை இழந்தவர்க்கு ஈனந்தான்


சொல்லிட்டான்

கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே

பாத்துக்கடா சரிதான்


அன்ன சத்திரம் இருப்பது எதனாலே

பல திண்ணை தூங்கி பசங்கள் இருப்பதாலே

எப்படி

பரதேசியாய் திரிவது எதனாலே

ம்ம்ம்....அவன் பத்து வீட்டு

சரி ..... வேணாம்

அவன் பத்து வீட்டு சோத்து ருசி கண்டதாலே

தம்பி இங்க கவனி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
காரிருள் சூழுவது எவ்விடத்திலே
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
சொல்லிப்பிட்டியெ

புகையும் நெருப்பிலாமல் எரிவதெது
புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்
நான் சொல்லட்டுமா
சொல்லு
பசித்து வாடும் மக்கள் வயிறு அது
சரிதான் சரிதான் சரிதான்

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
கத்தி
இல்ல
கோடாரி
இல்ல
ஈட்டி
ம்ஹூம்
கடப்பாரை
இல்லை
அதுவுமில்லையா

அப்புறம் பயங்கரமான ஆயுதம் ஆறறிவாகுமோ
அது ஆயுதம் இல்லையே
அட தெரிய மாட்டேங்குதே
நீயே சொல்லப்பா


உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின்
நாக்கு தான் அது
ஆஹா ஆஹா
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது

பாடல் வரிகளுக்கு நன்றி;-பூங்குழலி

நெஞ்சோடு நெஞ்சு மோதிய அனுபவம் .., 10-5-10

அண்ணாச்சியின் மனைவி தற்கொலை முயற்சிக்கான காரணத்தைக் கேட்டவுடன்(சுட்டி) அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.  அரசல் புரசலாக திருமணத்திற்கு முன் தற்கொலை முயற்சியெல்லாம் மேற்கொள்ளப் பட்டது. அவர்கள் இருவரின் காதலும் தெய்வீகமானது என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருந்த கதை ஒரே நேரத்தில் காமடி பீஸ் ஆனதில் அண்ணாச்சிக்கும் துளி கூட வருத்தம் இல்லை. அவர் எப்போதும் எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளக் கூடியவர்.

மகிழ்வுந்து அப்படியே சிங்காரப் பேட்டைக்குள் நுழைந்து அங்குள்ள நண்பரின் வீட்டில் இரவு அடைக்கலம் ஆனோம்.  அன்றிரவு என்ன நடந்தது என்பது போனவர்களின் நினைவுச் செல்களில் திரை போட்டு மறைக்கப் பட்டு விட்டதால் மறுநாள் காலையில் வெகுசீக்கிரத்திலேயே எழுந்து விட்டோம்.  குளித்து தயாராகி ஏலகிரியை நோக்கிச் செல்லத் தொடங்கினோம்.

பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்க திருப்பத்தூரில் சாப்பிடும் முடிவை சற்று முன்னேயே வைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் வழியிலேயே கடையை தேடி கண்டுபிடித்தோம். இடைவெளியில் இருந்த ஓரளவு நல்ல கடையில் சாப்பிட அமர்ந்தோம்.  ஒவ்வொருவருக்கும் மூன்று இட்லிகளும், விருப்பப்பட்ட வகையில் ஒரு தோசையும் கூடுதலாக வடையும் சாப்பிட்டோம் சிலர் இந்த அளவுகளில் சற்று கூடுதலாகவே சாப்பிட்டனர். மொத்தம் ஐந்து பேர். பில் கேட்டபோது தலையே சுற்றிவிட்டது. இவ்வளவுக்கும் சேர்த்து மொத்தம் அறுபது ரூபாய்.  நீண்ட தூர பேருந்து நிறுத்தம் செய்யும் இடங்களில் ஒருவர் சிற்றுண்டி மட்டுமே சாப்பிடும் பணத்தில் ஐந்து பேர் சாப்பிட்டு இருந்தோம்.

மகிழ்வுந்தில் பயணம் செய்தோம் செய்தோம், செய்தோம்.  ஏலகிரி மலையின் அடிவாரத்திற்கு சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் குரங்குகள் வந்து சேர்ந்தன. பழனி மலைக்கே மீண்டும் வந்த உணர்வோடு மலைமீது ஏறத் தொடங்கினோம். ஒவ்வொரு வளைவுக்கும் பாரி, ஓரி என்ற வள்ளல்கள் பெயரும் கபிலர், ஔவை என்று புலவர்கள் பெயராக மொத்தம் 14 பெயர்களில் வைத்திருந்தனர்.

எங்களுக்கு ஒதுக்கப் பட்ட்டிருந்த விடுதி அறைகளுக்குச் சென்று மீண்டும் ஒருமுறை தயாராகிக் கொண்டு  கருத்தரங்கு நடந்த டான்பாஸ்கோ பள்ளிக்கு வந்து சேர்ந்தோம்.

=========================================

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறப்பது சரிதானா..,

அண்ணாச்சியோட டேலண்ட்

இதே தளத்திலும் 

============================================

கூட்டு உழைப்பு - இருதயக் குறைபாடு - தொடர் சிகிச்சை

 

தமிழகத்தில் முதன் முறையாக.., 

 கருத்தரங்குத் துளிகள்

http://ruraldoctors.blogspot.com/  

தளத்திலும் எழுதியுள்ள கருத்தரங்கு பற்றிய பிற இடுகைகள். படித்துப் பார்க்க தொடுப்புகள் கொடுத்துள்ளேன்.

============================================================
கருத்தரங்கில் பேசப் பட்ட விஷயங்களைப் பற்றி தனித்தனி இடுகைகளாக கொடுக்கும் எண்ணம் இருப்பதால் அவற்றைப் பின்னர் பார்ப்போம்.

கருத்தரங்கில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்களில் ஒன்று  இது. கல்லூரிக்கால நண்பர்கள் இருவர் சந்தித்துக் கொண்ட காட்சி நாமெல்லாம் நம்ப முடியவில்லை. சினிமாட்டிக்கான கற்பனை என்றெல்லாம் சொல்லும் வண்ணம் அமைந்த ஒரு காட்சி.  இரண்டு நண்பர்கள் வேகமாக ஓடி வந்து ஒருவர் நெஞ்சில் மற்றவர் மோதி தங்கள் பாசத்தை பரிமாறிக் கொண்டனர்.  அவர்களது வேகத்தை நேரில் பார்த்தால் மட்டுமே புலப் படும் என்றுதான் நினைத்திருந்தோம் சில நாட்களுக்கு முன் தொலைபேசியில் அந்த செய்தியைக் கேள்விப் படும் வரை.  மோதியவர்களில் ஒருவர் தொடர்ச்சியாக மூன்று முறை சிறந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான விருதை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வாங்கியவர். அவருக்கு இரண்டு விலா எலும்புகளில் விரிசல் ஏற்பட்டு விட்டதாம். அவ்வளவு வேகத்தில் இருவரும் மோதியிருந்தார்கள் . பார்த்தவர்கள் கிலியடையும் வகையில்

============================================================

கருத்தரங்கில் நாங்களும்  சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்க இருந்ததால் போன உடன் சம்மந்தப்பட்ட பொறுப்பாளரைச் சந்தித்து எங்களுக்கான நேரம் கேட்கச் சென்றோம்.

அப்போது

புதிய நண்பர்;  எங்களுக்கு எப்போங்க நேரம் ஒதுக்கி இருக்கீங்க?

பொறுப்பு அலுவலர்:  உங்களுக்கு ஹால் 2, தேநீர் இடைவேளைக்குப் பிறகு

புதிய நண்பர்:-  ஹால் 2 தனியா இருங்குங்க. எங்களுக்கு ஹால் 1. கொடுங்க

பொ. அ. :-  இல்லைங்க பார்த்துத்தான் போட்டு இருக்கோம்.

புதிய நண்பர்:- அங்க கூட்டமே வராதுங்க. தனியா இருக்கு

பொ.அ. கவலைப்படாதீங்க. நாங்க பாதிப் பேர பிரிச்சு அங்க அனுப்புவோம்

புதிய நண்பரின் நண்பர்:- புது கோட் சூட் டெல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கான். கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க.

பொறுப்பு அலுவலர் டென்சனாகி விடுகிறார். வாங்க சார் பார்த்துக்கலாம்.

.......................................

பிற்பகல் கட்டுரை சமர்ப்பித்த பின்னர்.

அதே நண்பர்கள், பொறுப்பு அலுவருடன் பேசும் காட்சி

பொ. அ. :- பார்த்தீங்களா சார். எவ்வளாவு கூட்டம். நீங்க என்னமோ கூட்டமே இருக்காதுன்னு சொன்னீங்க. இப்ப என்ன சொல்றீங்க!

புதிய நண்பரின் நண்பர்:-  எல்லாம் சரி மேடம். எவ்ளோ கூட்டத்த அனுப்பின நீங்க எங்கள அனுப்பாம விட்டுட்டீங்களே..........................

பொ. அ. பரிதாபமாக பார்க்கிறார்.
புதிய ந. ந :- எங்களுக்கு நாளைக்காம். பார்த்து அப்பவும் கூட்டத்தை அனுப்புங்க

================================================================

நான்கைந்து ஆண்டுகாலம் கழித்துப் பார்க்கும் தோழிகள்  பேசிக் கொண்டிருக்கும்போது

உன் வீட்டுக்காரர் என்ன பண்ணுறார்டி?

M.D.(psychiatry) பண்ணுறார்.

உங்கூட குடும்பம் நடத்துறார்ல. கண்டிப்பா தங்கப் பதக்கம் வாங்கிடுவார்.

============================================================

ஏங்க்கா நான் கொடுத்த கிரீம் எப்படி இருந்துச்சு. ( இந்த கும்பல் எம்.எல்.எம் மூலமாக பொருட்கள் விற்கும் கும்பல் போல)

அதை ஏண்டி கேட்கிற. போட்ட உடனே முகமெல்லாம் அலற்சி ஆகி வீங்கிப் போச்சு.

இன்னொரு தோழி: பேசாம வேற யாருக்காவது கொடுத்திடு

எப்படிடி. 2000 போட்டு வாங்கி இன்னொருத்தருக்கு சும்மா கொடுக்கறது

இன்னொரு தோழி( அதே) : அப்ப நீயே டெய்லி போடு. மூஞ்சி வீங்கிட்டு சுத்து
=========================================================

இது போன்று பல சுவையான ஒட்டுக் கேட்டல்களுக்குப் பிறகு சான்றிதழ்கள் பரிசுகளைப் பெற்றுக் கொண்டு நாங்கள் திரும்பும்போது எங்களுக்கே தெரியாமல் எங்களைப் புகைப் படம் எடுத்து எங்களுக்கு வழங்கி அசத்தினார்கள் அமைப்புக் குழுவினர்.

எங்களை முதலிலேயே புகைப்படம் எடுத்தது எங்களுக்கு தெரியாது,. ஆனால் எங்களுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியை புகைப்படக்காரர் நிறுத்தி நிதானமாக படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த நண்பர் அவரை அழைத்து எங்களையும் இதே மாதிரி படம் எடுப்பீர்களா? நாங்களும் மேக்கப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறோம் என்றார். புகைப்படக்காரர் அவரையும் நிறுத்தி நிதானமாக எடுத்துக் கொண்டிருந்தார்,  எங்களை படம் எடுத்தது நினைவில் இருந்தாதாலோ என்னமோ எங்கள் பக்கம் அவர் திரும்பவே இல்லை..


மொத்தத்தில் பயணம் சுவையாகவே இருந்தது.

============================================================



=======================================================================



=====================================================================



=========================================================================



====================================================================
சில திரைப்பட காணொளிகளை இணைத்திருக்கிறேன். மின்னஞ்சல் மூலம் வாசிப்பவர்களுக்கு ஏனோ இந்த காணொளிகள் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் தளத்திற்கு வந்து கண்டுகளிக்காறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

Saturday, May 8, 2010

ரஜினியின் பாதையில் நம்ம ஊர் சாமியார்கள்.

ரஜினியே பல நேரங்களில் சாமியார் மாதிரி நடந்து கொள்வார்.  அவரது உள்ளக் கிடக்கையிலிருந்து பாபா கதைகூட எழுதினார்.  ரஜினியின் வழியில் நடந்து வரும் சாமியார்கள் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

========================================================

எஜமான்

வானவராயருக்கு குழந்தை இருக்காது. அவரது எதிரி வல்லவராயன், வானவராயரின் ஆண்மையில் சந்தேகம் எழுமாறு பேசுவார். அதைக் கேள்விப் பட்ட வான்வராயரின் பக்தை, விசுவாசி அவர் தன்னைக்கெடுத்து விட்டதாகக்கூறி   பஞ்சாயத்தில் நிறுத்திவிடுவார்.  அந்தக் காட்சியில் சாட்டையால் அடிப்பதாக நடித்தத பின் ஐஸ்வர்யா பட்ட பாடு.  அட.... அட... கடைசியில் வான்வராயர் அடிவாங்கும் காட்சியே வெட்டப் பட்டு விட்டது. 

வானவராயரின் ஆண்மையை பற்றி நல்ல எண்ணம் ஏற்பட ஒரு பக்தை தன்னைத்தானே தாழ்த்திக் கொண்ட நிகழ்வு  அன்று.

இன்று:-

நெற்றி நிறைய பொட்டு வைத்த, மாராப்பு  போட்ட ஆடையை அணிந்த ஒரு நபரை ஆண் என நிருபிக்க ஒரு பக்தையின் மானம் ரூ 150/= க்கு விலைப் பேசப்பட்டது.

பழைய படங்களில் ரஜினி ஏதாவது ஒரு பானத்தைக் குடித்த உடன் சுறுசுறுப்பாக செயல்படுவார். அது கூட நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
===================================================================

ரஜினியின் பல படங்களில் உன்வாழ்க்கை உன் கையில் வசனம் இடம் பெற்று வரும். பாஷாவில் ஆட்டோவில் அந்த வாசகம் எழுதப் பட்டு இருக்கும். நாளை ஒரு பத்திரிக்கையில் ஒரு சுவாமிஜி உன் வாழ்க்கை உன் கையில் என்று ஒரு தொடர் எழுதப் போகிறார்.






=============================================================

ரஜினி அவர்களை சாமியார்களே பின் பற்றுகிறார்கள்.

Saturday, May 1, 2010

மானஸ்தன் மகள்

அந்த நாய் வீட்டிக்கெல்லாம் பொண்ணக்கொடுக்க முடியாது உறுதியாக இருந்தார் குப்புசாமி செல்லக்கிளியின் தந்தை

செல்லக்கிளிக்கு திருமணப் பேச்சு ஆரம்பித்திருந்தார்கள். அவள் விருப்பப்படியே அவளது மாமன் மகன் சின்னராசுவையே மணமுடிக்கவேண்டும் என்று அவளது தாயார் நினைத்தார். ஆனால் செல்லக்கிளியின் தந்தைக்கு இதில் துளிகூட விருப்பம்மில்லை.

ஆனால் குப்புச்சாமியின் பேச்சு சபையேறவில்லை. அப்படியே சபையேறினால் கூட தாயம்மாவால் அந்த சபையே கலைத்துவிடப் படக்கூடிய அளவில் இருந்தது.

நீங்க பண்ணுனக் கூத்துக்கு எங்கண்ணந்தான் பொண் எடுக்க கூச்சப் படணும். அவரே அதப் பத்தி கவலைப் படாம பொண்ணுக் கேட்டு வரேண்ணு சொல்லிட்டார். தவிரவும் அவர மீறி நம்ம இனத்தான் எவனும் பொண்ணுக் கேட்டு வர மாட்டான். தெரியுமில்ல.

தாயம்மாவின் ஆதிக்கம்கொஞ்சம் அதிகம்தான்.

இதிலயே தெரிஞ்சிக்கடி. நம்ம பொண்ணு வாழ்க்கைய சீறழிக்கணும்னே திரியறானுகடி  குப்புச்சாமி குமுறினான்

வாய மூடுய்யா, எங்கண்ணூட்ல உம்பொண்ண தங்கம் போல வைச்சு பார்த்துக்குவாங்க நீ ஓரமா கிட

ஒரே அடக்காய் அடக்கிவிட்டாள் தாயம்மா

தாயம்மாவுக்கு குப்புச்சாமியின் அப்பா, அம்மா, தம்பி, அக்கா அனைவரும் ஆதரித்தனர். தவிரவும் செல்லக்கிளிக்கு பிடித்த மாப்பிள்ளையாதலால்  அனைவருக்கும் மகிழ்ச்சியே.

ஒரு சுபயோக சுப தினத்தில்  செல்லக்கிளியின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் தங்க ராசு. அன்றைய தினத்தில் பற்பல சடங்குகள் நடந்தேறின. ஒரே ஊர் என்பதாலும் அந்த ஊரைச் சுற்றியே அனைத்துச் சொந்தங்களும்   இருந்ததாலும் மிகப் பெரிய கும்பல் கூடி  குலாவிக் கொண்டிருந்தது குப்புச்சாமியைத் தவிர.

மாலை மயங்கும் நேரம்.  செல்லக் கிளியின் கண்களில் மையிட்டு மையலுக்கு தயார் படுத்திக் கொண்டிருந்தனர்.  பூச்சூடி புதுவாழ்வு பூக்க தயாராகிக் கொண்டிருந்தாள்.

செல்லக்கிளி உங்கப்பன் உங்கிட்ட ஏதோ பேசணுமாம். அப்பத்தாக்கிழவி சொன்னாள். புடிக்காத கல்யாணமா இருந்தாலும் குப்புச் சாமி பாசக்காரண்டி. கடைசில மகள் பின்னாடியே சுத்தி சுத்தி வரான் பாருடி. கிழவு குப்புச் சாமிக்கு ஆதரவு அறிக்கை வாசித்துக் கொண்டிருந்தாள்.

பெத்த மனம் பித்து,.பிள்ளை மனம் கல்லுண்ணு சும்மாவா சொன்னாங்க,  நேரத்துக்கு ஒரு சொலவடை சொல்லியே தீரவேண்டிய கட்டாயத்தில் இருந்த ஒரு பெண்மணி வாய்ப்பை உபயோகப் படுத்திக் கொண்டாள்

உங்கப்ப போதையில இருக்காண்டி. அவன் கோபத்தை கிளறிறாத! கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு உடனே வந்துடு. விவரமான ஒரு கிழவி யோசனை சொல்லி அனுப்பினாள்.

அந்த தோட்ட வீட்டின் ஒரு ஓரத்தில் மரத்தடியில் குப்புச்சாமி அமர்ந்திருந்தான்.  அவனைப் பார்த்ததும் செல்லக்கிளி  குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தாள்.





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXiubYDTFe8lBUabQx2AJHr8fzEvTNOkzybwsKuHce4xW3bifCFPF9H-i3nM5d0EbBy5z4llkJlo_v-QbHihiHdwFEWZd_JxhZidzA8OqFVK8pemIyZ9WsH_GvbNEWi-vMe8Cw-_sSepY/s400/Sangeetha-Bridal-Designer-Saree.jpg


ஏம்மா, நான் அவ்வளவு தூரம் சொல்லியும் என்னை மதிக்காத வீட்டுக்கு போகப் போறியாமா?

அப்பா, மாமன் ரொம்ப நல்லதுப்பா

அப்ப நான் கெட்டவனா, உன்ன வேற யாரும் பொண்ணுகேட்டு வரவிடாம தடுத்து வைச்சிருந்தானுகம்மா

இல்லப்பா! யார் வந்திருந்தாலும் நான் கல்யாணத்துக்கு ஒத்திட்டு இருந்திருக்க மாட்டேன்ப்பா

அப்ப என்னைய மதிக்காத வீட்டுக்கு நீ போகத்தான் போறியா!

செல்லக்கிளி அமைதியாக நின்றிருந்தாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

சடாரென்று ஒரு பாட்டிலை எடுத்து முன் வைத்தான் குப்புச்சாமி .

அது கொடிய விஷம்

அந்த வீட்டுக்கு போன நிமிஷமே இத குடிச்சிடுவேன். என் காரியத்துக்கு கூட நீ வர க்கூடாது.

முழு போதையும் பிடிவாதமும் நிறைந்த தன் தந்தை என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவன் என்பதை தெரிந்த செல்லக்கிளியின் உடல் முழுவதும் நடுங்க ஆரம்பத்தது.

சற்று நேரம் நடுங்கியவள் சட்டென்று அந்த பாட்டிலை திறந்து முழுவிஷத்தையும் ஒரே மடக்கில் குடித்தாள் செல்லக்கிளி.

குடித்த சில வினாடிகளில் மயங்கிச் சரிந்தாள்

செல்லக் கிளியின் கால்களைப் பிடித்துக் கொண்டு ஓ.............வென கதறி அழ ஆரம்பித்தான் குப்புச் சாமி. அவன் அலறலைக் கேட்டு அந்த ஊரே அவன் பக்கம் திரும்பியது

=========================================

இந்தக் கதை இத்தோடு முடிவடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் நேராக ஓட்டுப் போடும் இடத்திற்கு சென்று விடுங்கள்.  ஆனால்  தொடர்ந்து படிக்க விரும்புவர்கள் மேற்கொண்டு  படிக்கலாம் . கடைசியில் டிஸ்கியையும் படித்துவிடுங்கள்

=====================================================


அந்த ஊர் வளர்ந்தும் வளராத ஒரு இயற்கை கொஞ்சும் ஒரு சிற்றூர். அந்த ஊரில் ஒரு மருத்துவர் குடியிருந்து வந்தார்.  அவர் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவந்தார், ஓரளவு வசதியும் நல்ல இயற்கைச் சூழலும் இருப்பதால்  அந்தக் கிராமத்திலேயே தங்கி வந்தார்.  அவருடன் அவரது வயதான பெற்றோரும் தங்கி இருந்தனர்,

அன்றைய் இரவுப் பொழுதில் சாப்பிட்டு விட்டு அப்போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.. அப்போது வீட்டு வாசலில் சில இளைஞர்கள் டாக்டர் சார், டாக்டர் சார்,  தளபதி சூர்யா ஸ்டைலில் கூப்பிட்டுக் கொண்டிடுந்தனர்.

சார் இந்த பொண்ணு விஷம் சாப்பிட்டுட்டா ஒரு ஊசியப் போடுங்க

அந்தப் பெண்ணைப் பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது,  ஏறக்குறைய ஆழ்மயக்க நிலைக்கு சென்று விட்டாள். ஏதாவது சகல வசதிகளும் நிறைந்த மருத்துவமனைக்கு போனால் மட்டுமே காப்பாற்றுவது சாத்தியம்

ரொம்ப மோசமான நிலைமைல இருங்காங்க,
உடனே டவுனுக்கு கூட்டிட்டு போகணும்.

நீங்க எதாவது பண்ணுங்க டாக்டர்.
 உங்க கிளினிக்குக்கூட போயிடலாம்.   வாங்க டாக்டர்.

அங்க அவசரத்துக்கு பார்க்கறமாதிரித்தான் மருந்து இருக்கு. இது டாக்டர்

டாக்டர் இதுதான் அவசரம். டவுன் போற்துக்குக் கூட தாங்குமான்னு தெரியலயே

கொஞ்சம் சுயநினவு இருந்தாக்கூட வயிறு கழுவலாம் இப்ப அதக்கூட பண்ண முடியாது, உடனே டவுனுக்குப் போனா ஏதாவது பண்ணலாம். கிழம்புங்க.

டாக்டர் ஏதாவது பண்ணுங்க.

போலீஸ் கேசெல்லாம் ஆகாதுங்க . நீங்க ஊசி போடுங்க டாக்டர்.

இந்த அம்மாவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுல வைச்சு வைத்தியம் பார்க்கணும். அதுக்கு வழி செய்யுங்க இது டாக்டர்.


நாங்க இவ்வளவு கெஞ்ச்சிட்டு இருக்கோம். நீங்க எதுவும் காதுலயே வாங்க மாட்டீங்கறீங்க


இவர் இப்படியெல்லாம் கேட்டா ஒண்ணும் செய்ய மாட்டார்.நாம வேற வழிக்குத் தான் போகணும்,  அடிங்கடா


அந்த வாடகைவீட்டின் முகப்பு மற்றும்சில பணியாளர்கள் தாக்கப் பட்டனர்.


சற்று நேரத்தில் கோபம் அடங்கிய மற்றவர்கள் விஷம் குடித்த பெண்ணை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். . ஆனால் வழியிலேயே அந்தப் பெண்ணின் உயிர் பிறிந்தது,


டிஸ்கி;-   இந்தக் கதையை ஒன்றாகப் படிப்பவர்கள் படிக்கலாம். இரண்டாகப் பிரித்து இரண்டு கதையாக படிப்பவர்களும் படிக்கலாம். தேவைப் பட்டால் நமக்கென்ன என்று மூன்றாவது கதையை கண்டுபிடித்து படிப்பவர்கள் படித்துக் கொள்ளலாம்

டிஸ்கி:- இதை படித்த பின்னர் ஓட்டுப் போடலாம், பின்னூட்டம் போடலாம் ஏதாவது ஒரு வாய்ப்பு அல்லது இரண்டு வாய்ப்பையுமே உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்

Wednesday, April 28, 2010

அண்ணாச்சியோட டேலண்ட்

வண்டி சேலத்தின் முக்கிய வீதி (என்று நினைக்கிறேன்)யில் போய் கொண்டு இருந்தபோது நண்பர் கோடைப் பண்பலை போட்டுக் கொண்டிருந்தார். அதில் ஒரு அம்மணி  நேயருடன் கடலைப் போட்டுக் கொண்டிருந்தார்.  படுத்துக் கொண்டு போர்த்திக் கொள்வாரா அல்லது போர்த்திக் கொண்டு படுப்பாரா என்பது பற்றி மிக சீரியஸாக  ஒரு கடலை.  அதை தானைத்தமிழகமே கேட்டு ரசித்துக் கொண்டிருந்தது என்பதை நினைக்கையில் இதயமே புல்லரித்துக் கொண்டிருந்தது.


வழக்கமாக அந்த நேரத்தில்  மகிழ்வுந்தில் இருந்த அனைவருமே  கடமையே கண்ணாக இருக்கும் நேரமானதால் அவர்கள் இது போன்ற கடலைகளையெல்லாம் கேட்டதே இல்லை.  அவ்வப்போது தொலைக்காட்சியில் இது போன்ற கடலைகளை கேட்டிருந்தாலும் பண்பலையில் போட்ட கடலை   பதறவைத்துக் கொண்டிருந்தது.


அந்த மகிழ்வுந்தில் இருந்தவர்கள் யார்? அவர்கள் ஏன்  சேலத்தின் முக்கிய வீதிகளில் சென்றனர்? குறிப்பிட்ட வீதியில் அவர்கள் இறங்க மறுத்தது ஏன் போன்ற விவரங்களை அறிய  இந்தச் சுட்டி உங்களுக்கு உதவும்.

=======================================

இந்த நேரத்தில்  வான வேடிக்கைகள்  விண்ணைப் பிளந்து கொண்டு இருந்தன.  ஏதோ கோவில் திருவிழா போல விஜய் அஜித் ரசிகர்கள் இணைந்து வரவேற்பு வலையங்கள் வைத்திருந்தனர்.  பிரசாந்த்,  அர்ஜுன் போன்றவர்களின் ரசிகர் மன்றங்களைக் கூட காண நேர்ந்தது.

நண்பர்கள் தங்களுக்காகவே வரவேற்பு வாணவேடிக்கைகள் இருப்பதாக மிகவும் மகிழ்ச்சியுடன்  சொல்லிக் கொண்ட்டு ஏறக்குறைய ஒரு மணிநேர டிராஃபிக் ஜாமைப் பொறுத்துக் கொண்டனர்.

இந்த சூழலில் ந்மது இளைய நண்பரின் எம்டியெஸ் அலர ஆரம்பித்தது. அப்போது கோடப் பண்பலையில்  தூங்காதே தம்பி தூங்காதே பாடல் ஒலிப் பரப்பாகிக் கொண்டிருந்தது,.

அந்தப் பாட்டையே இன்னொருவர்


பேசாதே தம்பி பேசாதே என்று பாடிக் கொண்டுவந்தார்.

கடைதனில் பேசியவன் முதல் இழந்தான்.  உயர் கல்வியில் பேசியவன் புகழ் இழந்தான்.  என்று அப்படியே அந்த இடத்திலேயே அந்தப் பாடலை உல்டா அடித்துக் கொண்டே வந்தார்.

ஆனாலும் நமது சிங்கக் குட்டி அந்த டாடா இண்டிகா மகிழ்வுந்தின் ஓர் ஓரத்தில் அமர்ந்து கடலையைச் சார்த்திக் கொண்டு வந்தார்.   இன்னும் சில பாடல்களைப் பாடிய நம்து நண்பர் கொஞ்சம் கடுப்பாகி  அலை பேசியை பிடுங்கி  ஒரு ஓரமாக வீசிவிட்டார்.

வண்டி ஒரு உணவகத்தில் நின்றது. நண்பர் கேட்டார்.

நண்பர் கேட்டார்.
-----------------------------------------------------------------
யார் யாருக்கெல்லாம் கேஸ் ட்ரபுள் இருக்கு

ஏண்ணே..,  ஓட்டல் சரியில்லையா?

இந்த ஓட்டல் சமையல் பூரா கேஸ்ல செய்யராங்களாம். கேஸ் ட்ரபுள் இருக்கறவங்க வேற இடம் பாருங்க.

---------------------------------------------------------------------

ராத்திரி உணவு அமர்க்களமாய் உள்ளே போன பின் பயணத்தைத் தொடர்ந்தோம்.  கொஞ்சம் அப்படி இப்படிச் சென்று கொண்டு இருந்த நேரத்தில் இளஞ்சிங்கம் மீண்டும் தனது அலைப் பேசியில் எம்டியெஸ் கம்பெணியை குழிதோண்டிப் புதைப்பதற்கான வகைகளை ஆராய ஆரம்பித்தது.

டேய், ஃபோனை தூக்கிப் போடல.,  நாங்க உன்னைத்தூக்கி வெளிய போட்டுட்டு போயிடுவோம்.

வேண்டாம்னே அவன் இதுதான் வசதின்னு இங்கியே இறங்கிடுவான்.  பேசாம  வாங்க,

அவன முதல்ல நிறுத்தச் சொல்லு.., அப்புறம் நான் நிறுத்தறேன்.

அண்ணே உங்களுக்கெல்லாம் பொறாமை..,

நீங்க படிக்கும்போது செல் கிடையாது. அப்படியே இருந்தாலும் யாரும் பேசியிருக்க மாட்டாங்க. சின்ன பையன் சந்தோஷமா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலண்ணே..,

ஆமா.., ஆமா..,  இருந்த லேண்ட் லைன்ன கூட இவனுக்கு ஒரு ஃபிகரும்  ஃபோன் பண்ணாது.

டேய்  நாங்கெல்ல்லாம் எப்பவுமே எல்.ஹெச் ல தான் குடியிருப்போம். இங்க வந்தாத்தாண்டா ஃபோனெல்லாம்.  நாங்கதான் டைரக்ட் டீலிங்ஸ் பண்ணுவமே...,

இன்னொருவர்

அண்ணே சும்மா கதை விடாதீங்க.., நீங்க என்ன டீலிங்ஸ் விடுவீங்கண்ணு எங்களுக்குத் தெரியாதா? பத்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வில்ஸ் வாங்கிட்டு ஒரு ஓரமாய் உங்கார்ந்து வர போற ஃபிகர உத்து உத்து பார்ப்பீங்க..,

டேய் எங்க ரேஞ்சே வேற..,

சும்மா கதை விடாதீங்கண்ணே..,  வில்ஸ் வாங்கிக் கொடுத்தது நாணு.

சார் இவர் லவ் மேரேஜ்ன்னு சொன்னாங்க.., மேடம் சூஸைடு அட்டம்ட்டு கூட பண்ணாங்களாமே..,   இளஞ்சிங்கம் ஆர்வமாய் வாய் திறந்தான்.

 ஓ  அதெல்லாம் உனக்கு தெரிஞ்சு போச்சா...!

ஒரு நாள் யாரோ சொன்னாங்க சார்.

அது ஒரு பெரிய கதைடா..,

மாப்பிள்ளை கவர்மெண்ட் வேலை,  தானே சொந்த முயற்சில ஆஸ்பத்திரியெல்லாம் கட்டியிருக்கார், அதுவும் நல்லாப் போயிட்டு இருக்குன்னு தரகர் சொல்லியிருக்கார்.  அவங்க வீட்டலயும் விசாரிச்சுப் பார்த்துட்டு   மாப்பிள்ளை சொக்கத்தங்கம், கடின உழைப்பாளி அப்படின்னு முடிவு கட்டிட்டு  பொண்ணு தர்ரதா ஒத்துக்கிட்டாங்க..,

மேடமும் அப்பா, அம்மா பார்த்து ஓ.கேன்னா சரிதான்னு சொல்லிட்டாங்க.  கடையில் நிச்சயம் பண்ற அன்னைக்கு பார்த்தா மாப்பிள்ளை நம்ம ஆளு..,

மேடம் ஒரே ரகளை,  நான் கல்லை கட்டிட்டி கிணத்துல குதிச்சாலும் குதிப்பேனே தவிர இந்த ஆளக் கட்ட்டிக்க மாட்டேன்னு ஒரே ரகளை, நான் அந்த மாத்திரை முழுங்கிடுவேன் இந்த மாத்திரை முழுங்கிடுவேன்னு ஒரே சீன்.  


அப்புறம் நாங்கெல்லாம் போயி அண்ணன் ரொம்ப நல்லவர்.  காலேஜ்ல கம்ஃப்ளீஷன் வாங்கின அன்னைக்கே வேற ஆளா மாறிட்டார்.  ஊரில் அவர் ஒரு பெரிய புள்ளி, அப்படி இப்படின்னு சொல்லி  ஒரு பில்டப் கொடுத்து மனச மாத்தினோம்.  ஆனா அதயே இவர கல்யாணம் பண்ணிக்கறதுக்காக நடந்ததாச் சொன்னார் பார்த்தியா...,  அங்கதாண்டா இருக்கு அண்ணாச்சியொட டேலண்ட்.

பழச விடுங்கடா..,  இப்ப அவன் எம்டியெஸ ஆஃப் பண்ணுவானா மாட்டானா? அதச் சொல்லச் சொல்லு..

அண்ணே அந்த பாட்டரியும் அவுட்டுண்ணே..,  இனி நம்மளோடதான் அவன் பேசி ஆகணும்.

பேசிக்கொண்டே வண்டி நகர்ந்து கொண்டு இருந்தது.

Monday, April 26, 2010

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறப்பது சரிதானா..,

தமிழக சுகாதார அமைப்பின் சார்பாக ஒரு கருத்தரங்கம் ஏப்ரல் 9, 10ம் தேதிகளில் நடைபெறுகிறது என்ற செய்தியும் அதில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும்  தங்கள் அனுபவங்களை ஆராய்ச்சிகளை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் மார்ச் மாதத்தில் எங்களுக்கு தகவலும் சில தினங்களில் அழைப்பிதழும் கிடைத்தது. 

இந்த அமைப்பு உருவாக்கமே நாட்றாம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலரின் எண்ணத்தில் உருவானதாக விழாவில் பேசியவர்கள் சொன்னார்கள். இதில் கலந்து கொள்வதற்காக சுகாதாரச் செயலர் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் போன்றவர்களையெல்லாம் அழைத்திருந்தனர்.

நடைபெறும் இடம் வேலூர் மாவட்டம் என்றதுமே ஆஹா..,  ஊரைவிட்டு வெகுதூரம் என்பதே ஒரு மகிழ்ச்சியான விஷயமாகப் பட்டது .

அடுத்ததாக கலந்து கொள்வதற்கு, தங்குவதற்கு சாப்பிட எல்லாம் நாமே காசு கொடுக்க வேண்டும். அதுவும் முன்னதாகவே கொடுக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள்.  இரண்டுநாள்  டென்சன் இல்லாமல் கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்த பின்னர்  அங்கு ஆராய்ச்சி கட்டுரைகள் வழங்கலாம் என்று முடிவானது.

கல்லூரி காலங்களிலேயே நாமெல்லாம் செமினார் பிரசந்த் செய்வது என்றால் நம்மைவிட மக்கள் மிகவும்மகிழ்ச்சி அடைவார்கள்.  வெகுசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள்  புத்தகத்தில் இருப்பதை அப்படியே பேப்பரில் எழுதிவந்து  over head projector மூலம் காட்டி  அதை வித்தியாசமான ஆங்கிலத்தில் ஒப்பித்து  கைதட்டலும் துறையின் முக்கியஸ்தர்களிடம் நல்ல பெயரும் பெற்றுச் செல்வார்கள். சிலர் சிறப்பாக தயாரித்து  எங்களைப் போன்ற சராசையை எட்ட நினைக்கும் மாணவர்களுக்கும் புரியும் வகையில் எடுப்பார்கள்.அவர்களை பல அறிவு ஜீவுகள் ரஜினி படம் பார்ப்பது போல பார்த்து பாராட்டுவார்கள். 

இந்த இடைவெளியில் நாங்களும் செமினார் எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் கொஞ்சம் நகைச்சுவையாக ( திருவிளையாடலில் தருமி சொல்வாரே " கொஞ்சம் நகைச்சுவையா எழுதறேன். இருந்தாலும் புலவன்னு ஒத்துக்கறாங்க - அந்த மாதிரி) வழங்குவது மக்களுக்கு புத்துணர்ச்சி வழங்குவதாக இருக்கும்.  

அதே போல இந்த கருத்தரங்கிலும் நாம் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து தயார் செய்து சுருக்கத்தை ஆராய்ச்சி குழுவிடம் அனுப்பி ஒப்புதல் வாங்கலாம் என்று முடிவுக்கு வந்தோம். நமது சுருக்கத்தை சக மருத்துவர்களுக்கு அனுப்பினோம்.

டேய். அந்தக் காலத்துல ஸ்டூடண்ட்.  ஸ்டூடண்ட மாதிரி சுத்திட்டு இருந்ததை மக்கள் ஒத்துக்கிட்டாங்க. இன்னிக்கு டாக்டர். டாக்டர் மாதிரி சுத்திட்டு இருந்தா ஒத்துக்க மாட்டாங்க. டாக்டராவே ஏதாவது செய்  அப்படின்னு ஒரு பெரிய முட்டுக் கட்டை போட்டனர்.

சரி என்று யோசித்த போதுதான் அப்போதைய முண்ணனி பத்திரிக்கையில் வந்த ஒரு தவறான செய்தியைப் பற்றி உண்மை நிலவரத்தை கண்டறியும் பணியும் மக்களிடம் ஏற்பட்டிருந்த பதட்டத்தை தணிக்கும் பணியும்  எங்கள் தலையில் அமர்ந்திருந்தது, ஓரளவு அதில் வெற்றியும் கண்டுவிட்டதால்  அதையே கருத்தரங்கில் சம்ர்ப்பிப்பது என்று முடிவு செய்து அதை ஆராய்ச்சிக் குழுவிற்கு அனுப்பி ஒப்புதலும் பெற்றுவிட்டோம். 

இனி எப்படி  ஏலகிரிக்கு போவது என்று முடிவு செய்தோம். நான்கு பேர் எங்கள் பகுதியிலிருந்தே புறப்பட ஆயத்தம் ஆனோம்.  பேருந்தா? புகைவண்டியா என்ற கேள்வி எழுந்தது. அருகில் ஜோலார்பேட்டை இருப்பதால் அங்குவந்துவிட்டால் அங்கிருந்து சுலபமாக சாலைப் போக்குவரத்து இருப்பதாக சொன்னார்கள். ஆனால் ஜோலார்பேட்டை போக கோவை , திருப்பூர், ஈரோடு போன்ற ஏதாவது ஒரு ஊரில் வந்து ரயில் ஏற வேண்டும். அதற்கு மூன்று மணி நேரம் சாலைப் போக்க்குவரத்து.

திண்டுக்கல்லில் இருந்து விழுப்புறம் வந்து அங்கிருந்து செல்லலாம் என்றார்கள்.  அதற்கும் திண்டுக்கல்லுக்கு ஒன்னறை மணீநேரமும். விழுப்புறத்திலிருந்து   மூன்று மணிநேரத்திற்கு மேலும் சாலைப் பயணம் செய்ய் வேண்டியிருக்கும் என்ற சூழல்.  பேருந்தில் வந்தால் ஈரோடு மூன்று மணிநேரம் அங்கிருந்து சேலம் ஒன்றரை மணிநேரம், அங்கிருந்து திருப்பத்தூர் இரண்டு மணிநேரம். அங்கிருந்து  ஜோலார்பேட்டை ஒன்றரை மணிநேரம் அங்கிருந்து  மலைப் பயணமாக முக்கால் மணிநேரம்.  இந்த ஒவ்வொருஇடத்திருக்கும் பேருந்து மாறி மாறி மாறி மாறி மாறி பயணிக்க வேண்டிய சூழல்.   முழுப் பயணத்தையும் சாலைப் பயணமாகவே மேற்கொள்வது என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொண்டோம். நண்பரின் டாடாஇண்டிகா வை  தேர்ந்தெடுத்து ஓட்டுனரையும் ஏற்பாடு செய்து விட்டோம்.  நிகழ்ச்சிக்கு புறப்பட சில நாட்கள் இருக்கும்போது இன்னொரு நண்பர் எங்களை அணுகி தானும் வருவதாகச் சொன்னார்.  இல்லையென்றால் அவர் பேருந்தில்தான் வர வேண்டும் என்றும்  அதற்கு வராமலேயே போய்விடலாம் என்றும் சொன்னதில் அவரையும் அழைத்துச் செல்வது என்று முடிவானது, 

வேறொரு வாகனம் கிடைக்காத சூழலில் ஓட்டுநரை கழட்டிவிட்டுவிட்டு நாங்களே ஓட்டுவது என்று முடிவு செய்தோம். பெரும்பாலோனோர் சொந்தமாக ஓட்டுநர் உரிமம் வைத்து இருப்பவர்கள் இருபது கிமீக்கு மேலே போனார் ஓட்டுநர் வைத்துக் கொள்ப்வர்கள்.  இருந்தாலும் இவ்வளவு தூரத்தையும் நாங்களே ஓட்டுவது என்று முடிவு செய்தொம். 

ஒருவழியாக  முதல்நாள் மாலை  வாகனத்தை கிளப்பினோம். நண்பர் ஓட்ட ஆரம்பித்தார். 
ஓட்ட ஆரம்பித்த சில நிமிடங்களில் நண்பருக்கு அலைப்பேசி அழைப்பு 
சார் நேற்று பார்த்தோம். இன்னிக்கும் பார்க்கணும் . நான் பிஸி இது நண்பர். இதே போன்று அவருக்கு சில அழைப்புகள். 

நீ விலகு நான் ஓட்டுகிறேன். மற்றொரு நண்பர் களம் புகுந்தார், அவருக்கும் அதேபோல அழைப்புகள். 

சில மணிநேரம் இதேபோல நடக்க  அனைத்து அலைப்பேசிகளையும்  மௌனவகையில் போடு ஒருகைப்பையில் வைத்துவிட்டு  பயணத்தைத் தொடர்ந்தோம். 


சில நிமிடங்கள் போயிருக்கும்

அடி ஆத்தாடி இள மனசொன்னு ரெக்கை கட்டி பறப்பது சரிதானா..,  என்றொரு அலறல். ஒரு அலை பேசியிலிருந்து.  இருப்பதிலேயே இளைஞனான நண்பருக்கு அவரின் வருங்கால வழிகாட்டியின் அழைப்பு சுருக்கமாக சொன்னால்  போலிஸிடம் இருந்து  மிரட்டல் . நண்பர் தனது அலைப் பேசீயை வைத்து பேசிக் கொண்டெ வந்தார்.  வண்டி  பெருந்துரையை கடந்தபோது சன்னமாக அண்ணே எங்க பேட்டரியைக் கொடுங்கண்ணே என்று மற்றொரு நண்பரின் கெஞ்சிக் கொண்டிருந்தா.  அவரோ சத்தமாக கார் ஓடிட்டி இருக்கும்போதெல்லாம் பேட்டரியக் கொடுக்க முடியாது. தவிர  இன்னும் கொஞ்சம் நேரத்தில் கார் லைட்டெல்லாம் போட வேண்டி இருக்கு,  என்று கூறினார். அண்ணே மொபைல் பேட்டரியை க் கொடுங்கண்ணே.  ஒருவழியாக எம்டியெஸ் வைத்திருக்கும் நபரின்  அலைபேசி மூலம் அவர் தொடர்ந்தார்.  அவரே அருகில் இருக்கும் நபரிடம்

எப்ப சார் நாம் ஏற்காடு போவோம் ?என்றார்.

ஏற்காடா? நாமா? நாம போகப் போவது ஏழகிரிடா.., 

சார் அது வறக்காடு சார். இந்த வெயில்ல போனா  கருவாடா போயிடுவோம்.

அடே..,  நம்ம துறை முன்னோடிகள் என்ன சொல்லியிருக்காங்க.  நாமெல்லாம் கிராமத்த நோக்கி போகனும்டா..,  இந்த மாதிரி வறட்சியான இடங்கள்ல தாண்டா நம்ம வேலை அதிகம்.  அதுனாலதான் இந்த மாநாட்ட கூட ஏழகிரில வச்சிருக்காங்க.


நீங்க ஏற்காடுன்னு சொன்னதுனாலதான் நான் வந்தேன். நாம் இப்படியே போறவழில இறங்கிக்கறேன். நீங்க போய்ட்டு வாங்க.

மகனே உன்பேர்ல டிக்கெட் எடுத்தாச்சு,  ரூம் போட்டாச்சு. நீ வரல ...  இனிமேல் நீ வேலைக்கே வர முடியாது. இன்னொரு நண்பர் விரட்ட ஆரம்பித்தார்.

தெரியும்டி.  உன் ஆளு ஏற்காட்டில் இருக்கான்னுதான் நீ கிளம்பி வந்தேன்னு எங்களுக்கு தெரியும். ஆனா நீ ஏற்காடு போகப் போவதில்லை எங்களோடு  ஏலகிரிக்குத்தான் வரப் போறே..

இல்லண்ணே வந்து

இப்படியே வந்து போயின்னுட்டு இருந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் இன்னும் கொஞ்சம் நேரத்தில் வரும் அதுல புடிச்சு தள்ளிவ்விட்டிருவேன்.

அப்பக்கூட நீ ஏற்காடு போக முடியாது

உன் ஆளுக்குச் சொல்லிடுறா...,

இவ்வாறு சொல்லிக் கொண்டு இருக்கும்போதே வண்டி சேலத்தின் முக்கிய வீதியில் செல்ல ஆரம்பித்தது,

அண்ணே இந்த வீதியில்தான் அவன் படிக்கும்போது தங்கி இருந்தான்.

டே தப்பித்தவறி இங்க இறங்கிடாதடா..,   உலக்த்தின் மோசமான கிருமியெல்லாம் இங்க தங்கி இருந்திருக்கு. இறங்கின அப்படியே  பரலோகம்தான். 

வண்டி சென்று கொண்டே இருந்தது.................,

இத்தோடு தொடர்புடைய இடுகைகள்

தமிழகத்தில் முதன் முறையாக.., 


கருத்தரங்குத் துளிகள்

Sunday, April 25, 2010

சந்தில் பாடப் படும் சிந்து

http://img.photobucket.com/albums/v243/rajinifans/top2.jpg   


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxK1BrvecVbA3oml-LjPhvazE3_3S6XiH_RmvCm2UQCJsTJS4uyyrR_RmwamFS3cKzUxaut3J4QGh_66WSdNzsagbf2I6Uf-3dhLpNFs9VQQsNBd9Lqo7Q6faKrmYARNNpqSYq7IV4tNVn/s400/Vijay-Anushka-Vettaikaran-Movie-still.jpg   


http://thalagroups.weebly.com/uploads/3/2/2/7/3227748/3784056_orig.jpg 


நண்பா

உன்

உணர்வுகள்

உன் கவனிப்புகள்

தமிழ்மணமும்

தமிழிஷும்

திரும்பிப் பார்க்கும்

டோனி மட்டுமல்ல

தோழர்களும் கூட

தேடி வருவார்கள்

================================

இதெல்லாம் என்ன என்று புரியாதவர்கள் இந்த இடுகையை ஒரு எட்டு பார்த்துவரவும்.

============================================================

சந்தில் பாடப் படும் சிந்து :-

டோனி தோற்பதை  சச்சின் விரும்ப மாட்டார்.

சச்சினுக்கு நல்ல பிறந்த நாள்  பரிசு கொடுக்க டோனியும் விரும்புவார். இர்பான் பதான் டோனிக்கு செய்த மரியாதையைவிட நல்ல வகையில் மரியாதை கொடுக்க டோனியும் நினைப்பார்.

Sunday, April 18, 2010

வெள்ளையர்கள் Vs அமெரிக்க அதிபர்

டிஸ்கி: இது அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஆதரவான இடுகை.


பல நேரங்களில் பல உணர்வுகள் பாதிக்க பட்ட பிறகுதான் உணர்ந்து கொள்ள முடியும். குறைந்த பட்சம் நமக்கு மிகவும் வேண்டியவர்களாவது பாதிக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா அரசியல் வாதி  ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியை குரங்கு என்று குறிப்பிட்டதாக செய்தி கூறுகிறது.


ஹர்பஜன் சிங், சிமன்ஸ் சர்ச்சையில் கூட பலருக்கும் ஆச்சரியம் அளித்திருக்கக் கூடும். அந்த நாட்டு மக்கள்  தாயின் வாழ்க்கைமுறையை விமர்சிப்பதைவிட  குரங்கு என்று சொல்வது மோசமானதாக இருக்குமா? என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள் என்று கேட்கத் தோன்றியிருக்கும்.


நிற வெறி என்பதையும் அதன் ஆழமான வரலாற்றையும் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அதாவது  கருப்பராக பிறந்த ஒரே காரணத்துக்காக அந்த சமுதாயத்தை அசிங்கப் படுத்துவது அது.    ஒட்டு மொத்த சமுதாயத்தையும் அதாவது பரம்பரையையே கேவலப் படுத்தும் விஷயம் அது.  




இந்தக் காணொளியில் வரும் கெட்ட வார்த்தைகளை எல்லாம் ஒன்றாய் எடுத்து சுருக்கமாய் சொல்வதானால் உலக அளவில் குரங்கு என்று சொல்லி விடலாம்,

நம் நாட்டில் குறிப்பாக தமிழக மக்கள் நிறவெறியால் பாதிக்கப் பட்டிருப்பார்களா? என்று தெரியவில்லை.  நெறவெறியின் கொடுமையின் பாதிப்பு தமிழகத்தில் இருந்திருக்குமேயானால் கண்டிப்பாக ஜாதி வெறி என்பதும்,  ஜாதியின் காரணமாக ஒருவரை குறிப்பிட்ட வரையறை தாண்டி விட மறுக்கும் கொடுமைகளும் நடந்தே இருக்காது.  அதுவும் தமிழகத்தில் வெள்ளையரின் பிரதிநிதிகளாய் சிலர் இருந்து கொண்டு  நிறவெறியையே  தீண்டாமையாக வளர்த்த கதையும் நடந்தது போலவும் தெரிகிறது.

இன்னும் சிலர்  ஒவ்வொருவரும் தங்கள் ஜாதிப் பெயரை பெருமையாக சேர்த்துக் கொண்டால் என்ன தவறு என்று கூட கேட்கிறார்கள்.  அவர்களை எல்லாம் இந்த நிறவெறி நாடுகளில் கொண்டு போய் சில நாட்கள் விட்டால்தான் நிலமை புரியும்.


உலகப் போலிஸ் காரரின் தலைமை பீடத்தில் இருப்பவருக்கே இந்தக் கொடுமைகள் அரங்கேறினால், சாமானியர் நிலை என்னவாக இருக்க முடியும்.

ஹர்பஜன் குரங்கு என்று திட்டியதாக குற்றம் சாட்டப் பட்டபோது கூட அதனால்தான் ஒட்டு மொத்த ஊடகங்களும்  ஹர்பஜனுக்கு எதிராக திரண்டன.

உலக ஊடங்கள் ஹர்பஜன் என்ற பழுப்பு நிறத்தவர்   ( மீனுக்கு தலை,  பாம்புக்கு வால் காட்டும் பிராணிகள் பற்றி உங்களுக்கு தெரியும் அல்லவா)   சாதாரணமாக உபயோகப் படுத்தும் வார்த்தை என்பதாக உலக அளவில் பதிவு செய்யும் முயற்சியாக இதைக் கையாளப் பார்த்தன.

நல்ல வேளையாக குரங்கு தவறான வார்த்தை என்பதாகவே அந்த வழக்கினைமுடித்தனர்.  இருந்தாலும் கூட ஆஸ்திரேலியர்  அமைச்சர் கிளப்பி உள்ள இந்தப் பிரச்சனை எப்படிப் போகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


அமெரிக்கர்கள் இதனை தங்கள் தலைவனுக்கு ஏற்பட்ட பிரச்ச்னையாக எடுத்துக்கொண்டு கையாளுவார்களா? அல்லது வெள்ளையரின் பெருமையை கட்டி காத்து அதிபரின் மானத்தை காற்றில் பறக்க விடுவார்களா? பார்ப்போம்

Wednesday, April 14, 2010

திருமணத்திற்கு முன் கழட்டிவிடுவது எப்படி?

மன்னா! ஏன் இப்படிக் கவலையில் மூழ்கி இருக்கிறீர்கள்?

அமைச்சரே இந்த தங்கவியாபாரி பொன்னம்மாளின் தொந்தரவு தாங்க முடியவில்லை. 

மன்னா!  தாங்களும் நகையரசி பொன்னம்மாள் அம்மையாரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே

அவளேதான் அமைச்சரே!

மனைவி என்று வந்துவிட்டாளே தொல்லை கொடுப்பவர்தானே மன்னா,


அவளே ஒரு கருத்தைச் சொல்லுவாள். அதை அவளே அதை தவறு என்பாள். அதற்கு காரணம் கணவனாகிய நீங்களே என்று சொல்லுவாள். அதுதானே மன்னா மனைவிக்கான அடையாளம். 

ஜப்பான், கொரிய, ஆப்ரிக்க, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து பிரான்சு அனைத்து நாட்டு மனைவிகளும் அப்படித்தானே மன்னா! உலகம் முழுவதும் சுற்றியவரும் அனைத்து நாடுகளிலும் நண்பர்கள் படைத்த உங்களுக்கா இது தெரியாது மன்னா,


அமைச்சரே வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டாம்.  நகைக்கடை பொன்னம்மாவை மணந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை

அவரை உங்களுக்கு பிடிக்கவில்லையா மன்னா?

நிறையப் பிடித்திருக்கிறது. அதற்காக திருமணம் செய்து கொள்ளமுடியுமா?

மன்னா அவரை கழட்டிவிட வேண்டும் அவ்வளவுதானே? நாட்டின் மன்னர் நீங்கள் முடியாது என்று சொல்லிவிடுங்கள்.

இல்லை அமைச்சரே, நாட்டின் பொருளாதார சூழலில் பொன்னம்மாளின் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  நேரடியாக அவ்வாறு சொன்னால் நமது நிலமை பரிதாப கரமாகிவிடும்.

ஓ.கே மன்னா! ஒரு யோசனை சொல்லுகிறென், முயற்சித்துப் பாருங்கள்

==================================================================

நாட்டு மக்களுக்கோர் அறிவிப்பு. நமது நாட்டில் இருக்கும் கொச்சியாற்று ஓரம் இருக்கும் பூங்காக்களை வேடிக்கை பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கும் உரிமை வழங்கப் பட உள்ளது.  ஏற்கனவே  இது போல எட்டு இடங்களில் இருப்பது போல இதுவும் அமையும். விருப்பம் உள்ளவர்கள் டெண்டர் அனுப்பலாம்.

====================================================================

பொன்னம்மாவின் நிறுவனம்:

நிறுவன இயக்குநர்களின் கூட்டம் நடைபெறுகிறது.  இந்த ஒப்பந்தம் மட்டும் நமக்கு கிடைத்துவிட்டால் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை நமது நிறுவனம் மிகப் பெரியதாகி விடும்.

அதில் பெரிய வருமானம் ஒன்றும் இல்லையே. ஏற்கனவே மற்ற பூங்காக்களை டெண்டர் எடுத்தவர்கள் விற்கும் சூழலில் இருக்கிறார்களாமே

பூங்காவிலிருந்து வருமானம் வருகிறதோ இல்லையோ, பூங்காவிலுள்ள பூக்களின் மூலம் நமது நிறுவனங்களுக்கு மிக நல்ல விளம்பரம் பெற இயலும்.

சரி பெற்றுவிடலாம். தாங்கள் நேரடியாக மன்னரை அனுகலாமே,

இல்லை இதை நான் நேரடியாக கேட்டால் எதிர்கட்சியினர் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திவிடுவார்கள். ஆனால் நான் பேசி விடுகிறேன்.. நமது சகோதர நிறுவனத்தின் மூலம் அதைப் பெற்றுவிடுங்கள். அந்த நிறுவனத்தில் எனக்குள்ள பங்கு பற்றி யாரும் பேச வேண்டாம்.

=====================================================================

அமைச்சரே போன்னம்மாவின் நிறுவனத்திற்கே அந்த உரிமம் கொடுத்தாகிவிட்டது. இருந்தாலும் பிரச்சனை ஓயக் காணோமே,

மன்னா, உரிமம எடுத்தது அவரது சகோதர நிறுவனம், அதில் அவருக்க்குள்ள தொடர்பு மிக ரகசியமானது.

அப்படியென்றால் எனக்கு விடுதலையே கிடையாதா?

கவலைப் படாதீர்கள் மன்னா! நமது தோழர்கள் எதிரிகளிடமும் இருக்கிறார்கள், அவர்களின் உதவியை நாடுவோம்.

என்ன! நீ எதிரியின் ஆளா?

அரசிய;ல்ல இதெல்லாம் சகஜம் மன்னா....,

============================================================

உரிமம் கொடுக்கும் துறையின் தலைவர் தனக்குத் தெரிந்த தகவல்களை கசியவிட்டு விடுகிறார்.

பொன்னம்மாளின் நிறுவனங்கள் கொதித்தெழுந்து ரகசியம் காக்க வேண்டிய செய்திகளை வெளியிட்டு விட்டதாக குற்றம் சாட்டுகின்றன.

இது போன்ற செய்திகளை வெளியிடுவது சகஜம்தான் என்ன உ. கொ. து தலைவர் சொல்லிவிடுகிறார்.

=====================================================

தனது காதலிக்காக மன்னர் நாட்டின் வளங்களை தாரைவார்த்து தந்துவிட்டதாக எதிர்கட்சிகள் கும்முகின்றன; குதறுகின்றன

=============================================================
அமைச்சரே என்ன கொடுமை இது! நீர் எதிர்கட்சி ஆள் என்பதைநிரூபித்துவிட்டீர். நாட்டு மக்கள் என்மீது மிகவும் கோபமாக இருக்கிறார்கள். நான் என்ன செய்வது

=========================================
                                                நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பு:
நம் நாட்டின் மிக முக்கிய நகைக் கடை அதிபர் பொன்னம்மாள் நமது மன்னருக்கு மிக வேண்டியவர் அவ்வளவுதான். நாட்டின் ஒவ்வொரு குடிமக்களும் அவருக்கு வேண்டியவர்களே. அவர் பொன்னம்மாளை எக்காரணம் கொண்டும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்.  தவிரவும் மக்களின் எதிர்ப்பு மிக அதிகமாக இருப்பதால் இப்போது கொடுக்கப் பட்ட உரிமம் முடிந்த பின்னர் பொன்னம்மாளின் நிறுவனங்களுக்கு உரிமம வழங்கப் படாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படிக்கு அமைச்சர்  23ம் இம்சைவாசி

==============================================
டிஸ்கி:  இது முழுக்க முழுக்க கற்பனைக்கதை

Tuesday, April 13, 2010

புருனோ - நான் - சில சந்தேகங்கள்

ஒரு சரித்திரக் கதை என்றால்  பல  நேரங்களில்  வரலாற்று ஆசிரியர்களின் கற்பனைதான் அதில் ஓடும். அதுவும் அந்த ஆசிரியர் கதையில் வரும் பாத்திரங்களில்  ஒருவரிடம் சம்பளம் வாங்கும் நிலையில் இருந்தால் சம்பளம் கொடுப்பவர் பாத்திரம் எம்ஜியார் நடிக்கும் அளவிற்கு மிகத்தூய்மையான பாத்திரமாக வடிவமைக்கப் பட்டுவிடும்.

http://vicky.in/dhandora/wp-content/uploads/2006/07/Imsai_Arasan.jpg
23ம் புலிக் கேசியில் வடிவேலுவின் ஒருவத்திற்கு வேறொரு உருவம் அமைத்து படம் வரைவார்களே அப்படித்தான் பெரும்பாலான கதைகள் அமைகின்றன.  அது போன்ற கதைகளுக்கு பல ஆதார நூல்களை தேடிப் படித்து அதில் நாம் பெரும்பகுதியினர் துளி கூட கேட்டிராத ஒரு காதல் கதை இந்த இடத்தில் உள்ளது.   அதில் எனக்கு பத்து சந்தேகங்கள் உள்ளன. அதைப் படித்துப் பார்த்து உங்களுக்கு ஏதாவது ஆரோக்கியமாகத் தெரிந்தால் அதில் பகிர்ந்து கொள்ளுங்களேன். அப்படியே தமிழ்மணம், தமிழீஷில் ஓட்டும் போட்டு விடுங்கள்.

================================================================
தமிழில் பிரபல எழுத்தாளர். அவர் எழுதிய ஒரு ரீமேக் கதையில்  அவரை ஆதரித்த சடையப்ப வள்ளலை ஆதரித்து 4000 அடிக்கு ஒருமுறை அவரை புகழ்ந்து கொண்டே இருந்து, கிளைமேக்ஸ் காட்சியில் சடையின் முன்னோர்க:ளை மிகவும் மரியாதை செய்திருப்பார். அந்த எழுத்தாளர் யார் என்று தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன். உங்களுக்காக பின்னூட்டம் மட்டறுத்தப் படுகிறது.

Thursday, April 8, 2010

சானியா Vs நயந்தாரா

சானியா VS நயந்தாரா

திரைமணத்தில் சேராததால் இந்தப் பதிவு. இங்கு போய் பாருங்கள்
 

Tuesday, April 6, 2010

சானியா VS நயந்தாரா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvJsBLaUbqzToO9ZK_CaBRN2c7OSeW2W_S9oJAZPnRawhZnLO85HPxE-5tS6PpAXMrBs1nneAJqD_B1Z8ZDxIpyhVWNB8EvD0pi_MtDQD__MlKtiUsIzc5OAeGtOFLgqpg8EKw0Ow9E4K_/s400/Sania_mirza_005.jpg      


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2az-ajcKV2ztnMLievhMS3hM3FlxzecGeS0zp3gTOkot-SLb63QGDbbHE-qXPPjsQPTVhI2w6LOkwmjZAEhPu_lIm5P_pi3vU6lCFuy7rMljCkQmsg1pMrLzYs9IFUzz-hndLzp5pVs-v/s400/nayanthara.jpg          




http://celebrity.beboindia.com/images/saniamirza.jpg         


http://www.thenaali.com/UltimateEditorInclude/UserFiles/images/kollywood/actress/nayanthara-sept-22.jpg  


http://pramanik.in/images/bollywood/BOLLYWOOD%20ACTRESSES%20IN%20SAREES/Tennis_players_in_saree/sania_mirza_saree.jpg         

http://worldcelebrity.files.wordpress.com/2008/01/11.jpg  


http://shaanentertainyou.files.wordpress.com/2009/07/sania-mirza-engagement.jpg 








http://www.indiangossips.com/wp-content/uploads/2009/11/Simbu-and-Nayanthara.jpg





 


http://l.yimg.com/t/images/saniashoiab_0604_30.jpg


http://www.southgossips.com/wp-content/uploads/2009/06/nayanthara-prabhu-deva.jpg 


http://ready2beat.com/files/n/s/8407-current-news-general-news-sania-mirza-engagement-sohrab-mirza-pics.jpg  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkWqrt6okKP9SrwJLXU5Friqdmtp-jyZuIrSy0B10iVkyvRiYpoPro16uPmSVaBMuf-MwqH3EnXmxjpZ0M56BMsy6RKeiywnTqp2Ms7jUOeJKWVk707F6ceoZqaCguHH_FKJgchZaEnac/s400/nayanthara2.jpg




http://www.envazhi.com/wp-content/uploads/2009/09/prabhu_deva_son.jpg 


http://static.ibnlive.com/pix/sitepix/02_2008/0208_shoaib_malik_248.jpg

சானியாவின் உரிமை சிவ சேனாவின் உணர்வு

அலுவலகத்தில் மிக அசதி,

வெளியே அழைந்து திரிந்து வருகிறோம். மிகக் கடுமையான சோர்வு.  பிரதான அலுவலகம். மிக முக்கிய கோப்புகள் மேசையின் மீது இருக்கின்றன. மேசையின் மீது கால்வைத்து  உங்களால் ஓய்வெடுக்க மனம் வருமா? அது ஓய்வறையில் உள்ள மேசை அல்ல உங்களது பிரதான அலுவலக மேசை.  கண்டிப்பாக பெரும்பாலனோருக்கு அப்படி ஓய்வெடுக்க மனம் வராது. அதுவும் தேசியக் கொடி வைத்திருக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகம் மேசையில் தேசியக் கொடி இருக்கிறது. அப்படியென்றால் அந்த அலுவலகத்தில் அமருவதற்கும் அந்த நாற்காலியின் மரியாதையைக் காக்கவுமே நமக்கு ஒரு உள்ளூர பயம் இருக்க வேண்டும்.


அதிலுமே தேசியக் கொடி அருகில் காலை வைத்து அதுவும் புகைப் படங்களாக வரும் அளவு கவனக் குறைவாக இருந்தவர்தான்.  சானியா மிர்சா. அந்த படத்தை நான் இந்த தளத்தில் வெளியிட விரும்பவில்லை. தேவைப் படுபவர்கள் ஆங்கிலத்தில் சானியா மிர்சா என்றடித்து கூகிளாண்டவரைக் கேளுங்கள் தருவார்.

சானியாவின் உடைகளுக்காகவே  டென்னிஸ் பார்ப்பவர்கள் உண்டு.  ஸ்டெபி கிராஃப் அளவிற்கு ரசிகர்கள் படைத்தவர் அல்லர். மேல் நாட்டுப் பெண்கள் போல ஆடைகள் அணிய ஆசைப்பட்டு ஆனால் அந்த ஆடைகளை நம்ம ஊர் திரைப்பட கவர்ச்சி நடிகைகள் போல அணிந்து ஆடிவருபவர் சானியா.  வில்லியம் சகோதரிகளோ, அன்னா கோர்ன்னிகாவோ அணியும் காற்றோட்டமான உடைகள் இவ்வாறு அழகு கொந்தளிக்க இருந்ததில்லை. இந்த அழகைச் சுட்டிக் காட்ட பேச்சு எழுந்த போது பர்தா போட்டுக் கொண்டா விளையாட முடியும் என்பது போன்ற பேச்சுக்கள் வந்து விவாதங்கள் திசை மாறிப் போயின.
http://www.celebs101.com/gallery/Steffi_Graf/109840/steffi_graf_photo_5.jpg

தங்க மங்கை பி.டி.உஷா கூட ஒரு முறை சானியாவின் புகழுக்கு டென்னிஸ் விளையாட்டு மட்டும் காரணம் அல்ல என்று மனம் நொந்து சொல்லி இருக்கிறார்.

திருமணம் பற்றிய பேச்சுக்களில் கூட பலா அதிரடிகள் செய்து வருபவர் நமது மிர்சா,

இன்றைய செய்திகளில் மாலிக்கின் பணம் பல கோடி சானியாவிடம் கொடுத்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அதுவும் சூதாட்டப் பணமாம். பணத்தையெல்லாம் வாங்கி பத்திரப் படுத்திக் கொள்ள இவர் என்ன வங்கி நடத்திவருகிறாரா என்ன?

பேசாமல் இவருக்கு சீக்கிரம் நடத்திக் கொடுத்து ஏதாவது நாட்டின் குடியுரிமையும் வாங்கிக் கொடுத்து வழியனுப்பி விட்டால் இந்தியாவின் மானம் காப்பாற்றப் படும். அதைவிடுத்து அவர் இந்தியரா? இதயம் இந்தியாவுக்குத் துடிக்குமா? என்றெல்லாம் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தால் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும்தான் அசிங்கம்.

எனவே சானியாவின் உணர்வுகளை மதிப்போம். அவரது உரிமைக்கு குரல்கொடுப்போம். ஊருக்கு அனுப்பி வைப்போம்.

Sunday, April 4, 2010

மாயாவதி வழியில் மேலும் ஐந்து மாலைகள் 4.4.10

பண மாலை போடுவதில் சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பண மாலை போடுவதற்கு சில கட்சிகள் (மட்டும்) எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. எதிர்ப்பு தெரிவிக்காத கட்சிகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளும் உதவும் வகையில் சில யோசனைகள்.
[mayawati_3.jpg]1. பத்திர மாலை: -


அந்த ஊரில் உள்ள முக்கிய இடங்களின் பத்திரங்களை கட்சித் தலைமையின் பெயருக்கு இடம் மாற்றம் செய்து மாலையாக அணிவிக்கலாம்,. நல்ல மதிப்பு பெறும் மாலையாக அமையும்.

2. கார்ச்சாவி மாலை: -
தேர்தல் நேரத்தில் கட்சித் தொண்டர்களின் பயண நேரத்தைச் சுருக்க கார்ச்சாவிகளால் ஆன மாலையை  கட்சித் தலைமைக்கு அளிக்கலாம்.  கட்சித் தலைமைக்கு ஓ.கே. என்றால் கார் மாலையே கூட அணிவிக்கலாம்.

3.கணினி மாலை:-

தொழிற்நுட்ப ரீதியாக நாட்டை முன்னேற்றியே தீருவேன் என்று அடம்பிடிப்பவர்களுக்கு மடிக் கணினியால் கோர்க்கப் பட்ட மாலையை அணிவிக்கலாம். விருப்பப் பட்டால் மேசைக்கணினி மாலை கூட அணிவிக்கலாம்.

4. ஹேக்கர்ஸ் மாலை:-

எந்த ஒரு தளத்தையும் ஹேக் செய்யும் வல்லமை வாய்ந்த சிலரின் கையைக் காலைக் கட்டி மாலையாகச் செய்து மாலை அணிவித்துவிடலாம்.இவர்கள் ஓட்டுப் பதிவின் போது பதிவர்களின் ஓட்டுப் பதிவு எந்திரத்தை ஹேக் செய்வார்கள் என்றால் தலைமை மிகவும் மகிழ்ச்சி அடையும்

5.பாஸ்போர்ட் மாலை:-

ப்ளான்க் செக் கொடுப்பது போல பிளான்க் பாஸ் போர்ட் மாலை அணிவித்தால் நினைத்த நேரத்தில் வெளிநாடு செல்லவும், நண்பர்களை வெளிநாடு அணுப்பவும் சுலபமாக இருக்கும்.

பின்குறிப்பு:- இது போன்ற மாலை அணிவிப்பதில் எந்த தடையும் இதுவரை இல்லாத காரணத்தால் பின்பற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை.

பின்குறிப்பு:- நாட்டு மக்களின் நலன் கருதி மேற்கண்ட ஐடியாக்களுக்கு காப்புரிமை பதிவு செய்யப் படவில்லை. யார் வேண்டுமானாலும் இவற்றை உபயோகித்துக்   கொள்ளலாம்.

Friday, April 2, 2010

கற்பழிப்பு என்றால் என்ன? 2.4.10

இந்திய தண்டனைச் சட்டத்தில் கற்பழிப்பு என்பதை பிரிவுகள்375, 376 ஆகியவை வரையறை செய்கின்றன. மற்றும் தண்டனையை தெரிவிக்கின்றன,

தற்போது அந்தப் பிரிவுகளில் தற்போது சில திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஒரு ஆணின் உடலில் ஒருபகுதி அல்லது ஒரு பொருள் முழுமையாகவோ அல்லது லேசாகவோ ஒரு பெண்ணின் உடலில் எந்த வடிவத்தில் நுழைய முற்பட்டாலும் இனி அந்த நிகழ்வு கற்பழிப்பாகவே கருதப் படும். ஆணுறுப்பை வைத்துத்தான் முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை.

=======================================================

உடலுறவிற்கு சம்மதம் கொடுக்கும் வயதினையும் சற்று உயர்த்தியிருக்கிறார்கள். தற்போதைய திருத்தத்தின் படி ஒருவனின் மனைவியே ஆனாலும் அவளது சம்மதத்துடன் உடலறவு கொள்ளும் பட்சத்தில் அவளது 18 வய்துக்கு கீழே இருந்தால் அது கற்பழிப்பாக கருதப் படும்.  ஏற்கனவே 15வய்துக்கு மேற்பட்ட மனைவியின் சம்மதத்துடன் கொள்ளும் உடலுறவு கற்பழிப்பாக கருதப் பட மாட்டாது. இப்போது அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது உடலுறவு என்பது எந்த ஒரு பாலியல் நடவடிக்கையும் குறிக்கும்.

===================================================

இது தொடர்பான குற்றங்களை சரியாக விசாரிக்காத காவலர்களுக்கு தண்டனை அளிக்கவும் இந்தச் சட்டத் திருத்தத்தில் இடம் கொடுக்கப் பட்டுள்ளது.

=================================================

பிரிவு 376 C (1)  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் இருந்து இருபால் குழந்தைகளையும் பாதுகாக்கிறது.

=================================================

நான் படிக்கும் காலத்தில் எனது பேராசியர் சொன்ன ஒரு கதை நினைவுக்கு வருகிறது. இது அவரது காலத்தில் நடந்தும் இருக்கலாம். அல்லது அவரது பேராசிரியர் அவருக்கு சொன்னதாகக் கூட இருக்கலாம்.

ஒரு கற்பழிப்பு . அதில் புண்ர்ச்சி நடந்து முடியும் போது மற்றவர்கள் பார்த்துவிடுகிறார்கள். பார்த்தவர்களில் காவல்துறை ஆய்வாளரும் அடக்கம். அவர்கள் குற்றவாளியைத் துறத்துகிறார்கள். குற்றவாளி அருகில் உள்ள ஆற்றில் விழுந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். ஆனால் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்டோர்   அவரைப் பிடித்து வழக்குப் பதிவு செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.


ஆனால் குற்றவாளி அதாவது குற்றம் சாட்டப் பட்டவர் விடுதலையாகிவிடுகிறார்.

காரணம் இதுதான்.

வழக்குப் பதிவு செய்யும்போது குற்றம் நடைபெற்ற இடத்திலேயே நேரிடையாக பார்த்து கைது செய்ததாக வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்,

மருத்துவ பரிசோதனையின் போது அவரது ஆண்குறியில் விந்து இருப்பதான அறிகுறி இல்லை. ஆற்றில் விழுந்து நீந்தும் போது கழுவப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் பாதிக்கப் பட்டவரின் உடலில் விந்து இருந்திருக்கிறது. இது போன்ற நிலை அதுவும் அந்த இடத்திலேயே கைது செய்யப் பட்டிருப்பின் நிகழ வாய்ப்பில்லை என்றும். இது உள்நோக்கத்தோடு பதிவு செய்யப் பட்ட வழக்கு என்றும் கூறி விடுதலை செய்யப் பட்டுவிட்டாராம்.

ஆற்றில் குதித்த நிகழ்வு பதிவு செய்யப் படவில்லை. பிற்சேர்க்கையாகச் சொல்லும்போது உள்நோக்கத்தோடு பதிவு செய்யப் பட்ட வழக்கு என்ற வாதம் மேலும் வலுப் பெற்று விட்டதாம்.

வழக்குகளில் நிகழ்வுகள்ன் வரிசைக்கும், நடந்ததை அப்படியே தெரிவிக்க பதிவு செய்ய வேண்டியதின் அவசியத்தையும் எங்களுக்கு புரிய வைக்க எங்கள் பேராசியர் சொன்ன நிகழ்வு இது.

Thursday, April 1, 2010

வெளிய வாடா............. 1.4.10

நான் சுமித்ராவப் பார்க்கணும்.

தீபக் குமார் விஜயாவிடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

தீபக் குமாருக்கு சுமித்ராவைப் பார்ப்பதை விட விஜயாவிடம் பேசுவது தான் அப்போதைக்கு முக்கியமாகப் பட்டது. ஆனால் விஜயா நிஜமாகவே சுமித்ராவிடம் பேசத்தான் தீபக் குமார் வந்திருப்பதாக நினைத்தாள். அவர்களுக்கு நேர் மேலே மாடிப் படியின் வளைவுகளில் அமர்ந்து சுமித்ரா, சவீதாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

கடந்த சில நாட்களாகவே  சுமித்ரா, ஆண்களுடன் பேசுவதையே தவிர்த்து வந்தாள். இந்த ஆண்டு முடிந்த உடன் மாணவர் தலைமைப் பதவியை விட்டு விலகி விடவும் முடிவு செய்திருந்தாள்.  கல்லூரிக்கு வந்தாமோ, படித்தோமா, டிகிரி வாங்கினோமா என்றிருப்போம். டரியல் செய்ய நினைத்தால் டரியல் ஆகியல் ஆகிவிடுவோம் என்ற பயம் வந்திருந்தது அவளுக்கு.

அவளுக்கு ஏன் அப்படி அந்த எண்ணம் வந்தது என்று அறியாதவர்கள் இந்தச் சுட்டியை அழுத்துங்கள்.

சுமித்ராவின் ஆரம்ப கால கல்லூரி வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்று அறிய இந்தச் சுட்டி உங்களுக்கு உதவும்.

தீபக் குமாருக்கு மென்மையாகப் பதில் சொல்லி அவனை அனுப்பியிருக்கலாம். ஆனால் விஜயாவுக்கு தீபக் குமாரை சீண்டிப் பார்க்க நல்ல வாய்ப்பாக இருந்ததால் உடனே சொல்லிவிட்டா:ள்.

உன்னை மாதிரி பொறுக்கிப் பசங்களோட எல்லாம் சுமித்ரா பேச மாட்டாள்.

தீபக் குமாருக்கு சுறுசுறுவென கோபம் வந்தது. ஓ.., அதுதான் நீ பேசிட்டு இருக்கியா? சடாரென்று மடக்கினான். தீபக்

அவதான் உன்னவிட்டு விலகிட்டு இருக்கால்ல அப்புறம் ஏன் அவகிட்டயே பேசி ஆகனும்னு பார்க்கற..,  என்னவோ சொல்ல ஆரம்பித்தாள் விஜயா

தீபக் குமார் தனது கொள்கைப் படி எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பேச்சை வளர்த்திக் கொண்டே இருந்தான். இருந்தாலும் கூட நல்ல பசங்க, பொறுக்கிப் பசங்க கான்செப்ட் வந்திருந்ததால் கொஞ்சம் டென்சனாகவே பேச ஆரம்பித்திருந்தான்.

தானே பேசி என்னவென்று கேட்டுவிடலாம் என்று நினைத்தாள் சுமித்ரா.., ஆனால்  மேல் மாடியிலிருந்து கீழ் மாடிக்கு சத்தம் போட்டுப் பேச கூச்சமாக இருந்ததால் நடந்து வர ஆரம்பித்தாள். ஒரு சுற்று சுற்றி படிதாண்டி வருவதற்கு சில நிமிடங்கள் ஆக ஆரம்ப்த்திருந்தது.

ஏன்.., அவ எங்கூட பேச மாட்டாளாமா?  நேத்துவரைக்கு கூடச் சுத்துனா? இன்னிக்கு பத்தினி ஆயிட்டாளா?
 

தீபக்கின் வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்திருந்தன.  அப்படியே சடன் பிரேக் போட்டது போல நின்றாள் சுமித்ரா.  என்ன செய்வது என்றே புரியவில்லை.

போ..,  நீ பண்றதப் பண்ணு சொல்லிவிட்டு எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தாள் விஜயா.  கோபத்துடன் எதிர் திசையில் சென்றான் தீபக்.

=================================================

டே வெளிய வாடா!  சுமனின் வாசல் கதவுகள் துடிக்க ஆரம்பித்தன.யார்ரா இவன் நேரங்கெட்ட நேரத்தில் கதவை உடைக்கிறவன். சுமன் இரியோடு வந்து கதவைத் திறந்தான். வெளியே  தீஃபக்கின் நண்பர்கள்.  கையில் ஸ்டம்ப் , பேட் போன்ற அதிபயங்கர ஆயுதங்களுடன்  வாசலில் நின்று கொண்டிருந்தனர்,


காதல் - ஏப்ரல் ஃபூல் 1.4.10

நாள் முழுக்க

யோசித்து

தாள் முழுக்க

வாசித்து

உள்ளத்தை

உள்ளபடி

உருக்கொடுத்து

உன்னிடம் கொடுக்க

ஆசையில்

பல கனவுகளை

பலவாறு உள்வாங்கி

எண்ணத்தை உள்ளடக்கி

என்னவளாய் ஆக்க

ஆக்கத்தை கொடுத்து

ஆசையை ஆக்க

காதலை

கருக்கொடுத்து

உருக்கொடுத்து

ஒருநாள்

கையில் கடிதம்

கொடுக்க

ஏப்ரல் ஃபூல் விளையாட்டுக்கு

காதல்தான் கிடைத்ததா?

என

கனிவாய்ச் சொல்லி

கலங்கடித்து சென்றாயே

கடிதம்

கள்ளத்தமாய் சிரிக்க

உள்ளம்

உடைந்த மடைபோல்

சிதறியதை அறிவாயா?

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails