Friday, June 12, 2009

வார்த்தை தவறி விட்டாய் IPL fake player

IPL fake player அனைவரின் எதிர்பார்ப்பும் பொய்த்துவிட்டது. ஐபிஎல் போட்டி முடிந்த உடன் தன்னை வெளிப் படுத்திக்கொள்வேன் என்று சொன்ன நிழல்வீரர் இன்றுவரை தன்னை வெளிப் படுத்திக் கொள்ளவில்லை. அவரது பணி உலகக் கோப்பையிலும் தொடர்கிறது. ஆனால் அதே பெயர்தான். ஐசிசி நிழல்வீரர் என்றெல்லாம் மாற்றிக் கொள்ளவில்லை

சேவக்கின் காயம் பற்றிக் கூட திருவாய் மலர்ந்திருக்கிறார். (நாம்தான் சேவக்,டோனி பெயர்களை உபயோகப் படுத்துகிறோம். அவர் குறிச் சொற்களைத்தானே உபயோகப் படுத்துகிறார். எனவே அவர் இதையெல்லாம் மறுக்கக் கூடும்)

சேவக்கின் காயம் உண்மைதானாம். போட்டியின் முதல்பாதியில் அந்தக் காயம் குணமடைந்துவிட்டால் இரண்டாம் பாதியில் குறைந்த பட்சம் இறுதிப் போட்டியிலாவது விளையாடிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் தான் அங்கே சேவக் போனாராம். வெளிக்காயமும் குணமாகவில்லை. ஊடகங்கள் தயவால் உள்காயமும் உட்பூசலும் உருவாகிவிட்டதால் அவர் திரும்பிவிட்டதாகக் கூறியிருக்கிறார். டோனி கூட எதையும் தாங்கும் இதயத்தை எங்கோ தொலைத்தவர் போல் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இந்திய அணிக்கு நாம்தான் மிகுந்த பக்கபலமாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆறு ஓவருக்கு அடுத்து முதல் விக்கெட் விழுந்தால் டோனியும், அதற்கு முன் முதல் விக்கெட் விழுந்தால் ரெய்னாவும் களத்தில் இறங்கும் விஷயம் கூட நிழல் விளையாட்டுவீர எழுத்தருக்கு தெரிந்திருக்கிறது.

=====================================================

அதெல்லாம் விடுங்க.......

த்ண்ணியிலயே பெறந்து தண்ணிலய வளர்ந்து, தண்ணி காரங்ககிட்ட விளம்பரம் வாங்கற வீரர் தண்ணியடிச்சா தப்பாங்க.., அதுவும் விளையாடும்போது இல்லைங்க.. அந்த இடமும் தண்ணியடிக்க தடை செய்யப் படலயே..........

அவர வீட்டுங்க போங்கண்ணு சொல்லிட்டு அவருக்கு பின்னாடியே அவர் அணியினரும் போறாங்க... என்ன நடக்குது அங்க...........................

நாம எதாவது சொல்லி நாமதான் இனவெறிய தூண்டறோம்ணு சொல்லிட்டா என்னங்க பண்றது?

அப்புறம் நான் அம்மாவைத்தான் கெட்டவார்த்தையில திட்டினேன்னு பல்டியடித்தா அவங்க விட்டுட்டாலும் நம்ம வீட்ல சோறு போடுவாங்களா?

Wednesday, June 10, 2009

ஆஃப்ரிக்காவில் வேட்டைக்காரன்

உலக அமைதி கொஞ்ச நாட்களாகவே கேள்விக் குறியானது. ஆஃப்பிரிக்க நாடு ஒன்றில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரம் காரணமாக உலகப் பொருளாதாரமே நடுநடுங்கிக் கொண்டிருந்தது. பின்னே அந்த நாட்டில் இருந்துதானே உலக நாடுகளுக்கு தங்கமும் வைரமும் வருகின்றன.

இதனால் இந்திய நாட்டில் நடக்கும் பல திருமணங்களில் நகைகளுக்குப் பதிலாக பணத்தையும், பணம் அடங்கிய சூட்கேஸ்களையும் காதுகளிலும், மூக்குகளிலும். கழுத்து மற்றும் இடுப்பு ஆகிய இடங்களில் தொங்க விட ஆரம்பித்தனர்.

இந்தியாவில் பல சமூக நல அமைப்புகள் பற்பல போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் நடத்த ஆரம்பித்தன..

அந்த ஆஃப்பிரிக்க நாட்டின் தூதர்கள் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அகில உலகமும் அஞ்சி நடுங்கும் ஹண்ட்டரை அணுகினார்கள். அந்த நாட்டின் தூதர்களுக்கும் வேட்டைக்காரச் சாமிக்கும் என்ன தொடர்பு? அவர் எவ்வாறு அந்தப் பதவிக்கு வந்தனர் என்பதை இந்தச் சுட்டி மூலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

=========================================================

இந்தக் கதையில் முதல் பாகம் வேட்டைக்காரன் இனிய துவக்கம்

இரண்டாம் பாகம் நாசாவுக்குள் போன நம்மாளு

மூன்றாம் பாகம் வேட்டைக்காரச் சாமி

சுட்டிகள் மூலம் படித்து மகிழுங்கள்

==========================================================

ஹண்ட்டர் நேரடியாக தனி விமானம் மூலமாக அந்த ஆஃப்பிரிக்க நாட்டுக்குச் செல்கிறார். அங்கிருக்கும் தீவிரவாத குழுக்களிடம் பேச்சுவார்த்தை செய்கிறார்.


நாம ஒரு பாதையில போனா அந்தப் பாதையை நாமே மறந்திடனும்.


அப்பத்தான் நம்மள ரவுடின்னு நாலு பேர் ஒத்துக்குவான்.


நீங்க இப்ப வன்முறைப் பாதையில போறீங்க. அத மறந்திடுங்

என்று மனதில் பதியுமாறு எடுத்துரைக்கிறார்.

தனது 15 வயதில் பள்ளியை விட்டு நிறுத்தப்பட்டது. தனது சமூகமே ஒடுக்கப் பட்டது பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார். எவ்வாறு தான் நிழல் உலகத் தொழில் செய்து தனது மக்களை உயர்த்தினார் என்பது பற்றியும் கூறுகிறார்.

மீண்டும் ஒரு முறை

நாம ஒரு பாதையில போனா அந்தப் பாதையை நாமே மறந்திடனும்.

நீங்க இப்ப வன்முறைப் பாதையில போறீங்க. அத மறந்திடுங்க

என்று சொல்கிறார்.

அங்கிருக்கும் வன்முறைக் குழுக்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்புகிறார்கள். அவர்கள் நாட்டின் வளத்தைக் கொண்டு அவர்கள் மிகப் பெரிய தேசத்தை உருவாக்குகிறார்கள். அந்த நாட்டின் புதிய கொடியை அறிமுகப் படுத்துவதற்கான ஒரு மாபெரும் கூட்டம் அந்த நாட்டின் தலை நகரில் நடக்கிறது.

அந்த நாட்டின் உள்நாட்டு கலவரம் முடிந்ததால் கடும் கோபத்திற்கு உள்ளாகிறார் மார்க் ஜீரோடாஸ்க். அவர்தான் அந்த நாட்டின் பெரும்பாலான போராட்டக்குழுக்களுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார். வேட்டைக்காரச் சாமியை அழிப்பதற்காக 100குழல் இயந்திரத் துப்பாக்கியை இடது கையில் தூக்கிக் கொண்டு 1000சி.சி. பைக்கில் அந்த இடத்துக்கு வருகிறார். துப்பாக்கியை உபயோகப் படுத்தினால் மக்களுக்கு அழிவு ஏற்படும் என்பதால் இருவரும் கை மற்றும் கால்களைப் பயன்படுத்தி ஒரு பயங்கர சண்டை போடுகிறார்கள். நடுவில் கண்களையும் உபயோகப் படுத்துகிறார்கள். சண்டையின் முடிவில் வேட்டைக்காரன் ஜெயித்துவிடுகிறார்.

வில்லன் ஜீரோடாஸ்க்கை தூக்கி கடலுக்குள் போடப் போகிறார். அப்போது துப்பாக்கியுடன் இந்திய முப்படை தளபதி வருகிறார்.

தமிழ்! நீ கடத்தல் மன்னன் ஹண்ட்டர் இல்ல.. இந்தியாவின் தளபதி நீ... அவன விட்டுடு..
நீ போன வழியை நீயே மறந்திடு

என்கிறார்.

ஜீரோடாஸ்க்கை கீழே போட்டுவிட்டு வேட்டைக்காரன்@ தொழிலதிபர் தமிழரசன் நடந்துவருகிறார்.

ஜீரோடாஸ்க் கீழே கிடக்கும் 100குழல் இயந்திர துப்பாக்கியை தூக்கி வேட்டைக்காரனை சுட்டுத் தள்ளப் பார்க்கிறான்.

அதற்குள் அந்த விழாவுக்கு வந்திருந்த பல்வேறுநாட்டுத் தாய்மார்கள் தங்கள் கையில் துப்பாக்கியை எடுத்து ஜீரோடாஸ்க்கை சுட்டுத் தள்ளுகிறார்கள்.


என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க..,

இந்த நிலத்தாய் எனக்கு சோறூட்டி வளர்த்தாங்க..,(முதல் அத்தியாயம்)


ஆனால் இப்ப இந்த உலக தாய்மார்கள் எல்லாம் எனக்கு உயிர் ஊட்டி இருக்காங்க..,

எங்கெங்க தாய்மார்கள் இருக்காங்களோ அங்கெல்லாம் என்னோட உரிமைக் குரல் ஒலிச்சிக்கிட்டே தான் இருக்கும்.



என்ற வசனத்துடன்

விரைவில் எதிர்பாருங்கள் உரிமைக்குரல்..,

தங்க எழுத்துக்கள் தோன்றுகின்றன.




Sunday, June 7, 2009

விலைமகளே பரவாயில்லை

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் காய்ச்சல் எங்கும் பரவியிருந்தது. பல இடங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. சிறிய அளவு பகுதி மட்டுமே உள்ளடக்கியிருந்ததால் செல்வாக்கு உள்ளதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் தேர்தலில் நிற்கும் எண்ணத்தில் இருந்தனர்.

அந்த சூடான காலகட்டத்தில் அந்தக் கிராமத்தின் ஒரு பெரிய தென்னந்தோப்பின் நடுவில் சில முக்கியதலைகள் அமர்ந்திருந்தன. இந்நாள் ஆளுங்கட்சியின் உள்ளூர் தலைவர், பழைய ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளி, மற்றும் வருங்கால ஆளுங்கட்சியின் வருங்கால சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரும் அந்த ஊரின் பரம்பரைப் பணக்காரர்கள் சிலரும் நடுராத்திரில் இளநீரை ஊறுகாய் தொட்டுக்கொண்டு குடித்துக் கொண்டிருந்தனர்.

ஏம்ப்பா நம்ம ஊர் பஞ்சாயத்துத் தலைவர இப்படி பண்ணிப் போட்டானுங்களே
நானும் எவ்வளோ முயற்சி பண்ணினேன்.
மாத்தவே முடியாதுன்னு சொல்லிடானுக. இந்த வருஷம் இது ரிசர்வ் சீட்தான்.
காலனிக் காரனுகளுக்கு ஒதுக்கிட்டானுக

என்னப்பா.., இது அநியாயம்.., பரம்பரை பரம்பரையா நாம ஆண்டு அனுபவிச்ச பூமி. இவனுகளுக்கு என்ன தெரியும்? இதுல தலைவர் நாற்காலில இவனுகள எப்படி உட்கார வைக்கறது?

அதெல்லாம் இப்ப பேசி ஒரு பலனும் கிடையாது. இந்த தேர்தலை என்ன பண்றது?


கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி மாதிரி நாமும் தேர்தலை புறக்கணிச்சறலாம்.

அப்படியெல்லாம் செய்ய முடியாது தம்பி. இப்பெல்லாம் அவனுகளே யாரையாவது நிறுத்தி அப்புறம்தான் ராஜினாமா பண்ணச் சொல்றானுக

அப்ப நாமும் அப்படியே பண்ணுவோம்.

டேய், நம்மூர்ல அவனுகளும் பாதிக்கு மேல இருக்காணுக. நெரயாப் பசங்க படிச்சிருக்காணுக.., போலீஸ் நாலுபேர் இருக்காணுக. வாத்தியார் மூனுபேர் இருக்காணுக, பேங்கில ரண்டு பேர் இருக்காணுக, மிலிட்டரிக்கு பத்து இருபது பேர் போயிருக்காணுக, நாம சொல்றதெல்லாம் அவனுக கேட்க மாட்டாணுக

ஏதாவது செஞ்சுதான் நாம ஜெயிக்க முடியும்.

நாம நிக்கவே முடியாது. அப்புறம் எங்க ஜெயிக்கறது. எங்க கட்சில வெங்காய வெடிக்கு சீட் குடுக்கறேன்னு சொல்லிட்டாங்க...


யாரு, உங்கிட்ட எடுபிடியா இருப்பானே அவனா..

அவனேதான். இப்பவும் நான் உட்காருன்னா உட்காருவான். நில்லுன்னா நிற்பான்.

ஆனா ஜெயிச்சா நீ சொல்றதா கேட்பானா?

அதாண்ணே பயமாயிருக்கு, அவனுக்கு சீட் கிடைக்காம பண்றதுக்கு நான் எவ்வளவோ முயற்சி பண்ணிணேன். அவனுக்கு என் பேரச் சொல்லித்தான் சீட்டே கொடுக்கறானுக. நேரடியாத்தடுத்தாத்தான் உண்டு. அப்பிடிச் செஞ்சா பேர் கெட்டிடுமேன்னு பயமாயிருக்கு
பேசாம நீங்க அவனத் தோற்கடிச்சிருங்க

கஷ்டம்டா.., அவனுக்கு ஏற்கனவே ஆனாவுக்கு ஆவன்னா, கானாவுக்கு காவண்ணா போட்டு பேச வேற சொல்லிக் கொடுத்திருக்க. அவன் நின்னா காலனி ஓட்டுப் பூறா அவனுக்குத்தான்

நான் எங்க சொல்லிக் கொடுத்தேன். கூடவே எடுபுடி வேலை செஞ்சிட்டு இருந்தான். அவன்பாட்டுக்கு கத்துக்கிட்டான். சரி.., அவஞ்சாதி ஓட்டு கிடைக்கும்னு தம்பி, தம்பின்னு சொல்லிட்டு இருந்தேன். இப்ப அத வச்சே அவனுக்கு சீட்டு கிடைச்சிடும் போல இருக்கே..

ஏண்ணே... நாம வேற ஒருத்தன பினாமியா நிற்க வச்சா ..


வைக்கலாம்டா.., ஆனா அவனும் ஆளுகள சேத்திக்கிட்டு நம்மள மதிக்காம போயிட்டா..

மதிக்கறது இருக்கட்டும்ணே., நாமெல்லாம் மெம்பரா உட்கார்ந்துக்கிட்டு இருப்போம். அவனுக தலைவரா உட்கார்ந்தா எப்படின்னா..,


இப்போது பெரியவீட்டுக்காரர் பேசினார் " அதுக்குத்தான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். பேசாம வசந்தாவ நிறுத்தலாம்னு இருக்கேன்"

வசந்தா பெரியவீட்டுக்காரரின் சின்னவீடு

அண்ணே அவ கீழ்சாதிக்காரியாண்ணே..


அது உனக்கெதுக்கு? அவ சாதிச் சான்று வச்சிருக்கா.., நாம சொன்னாக் கேட்பா..


நாம இல்ல.., நீங்கசொன்னா கேட்பாள்..


அட நாமெல்லாம் வேறயாடா? ஒரு வீட்டுப் பங்காளிக தானே?



அது வந்துண்ணே..,

டேய் காலணிக்காரன் உட்கார்ரதுக்கு இவ பரவாயில்லடா.., பொம்பளக்கு கொடுக்கறோம்னு சொன்னா பெண்கள் சுய உதவிக்குழு ஓட்டெல்லாம் இவளுக்கு விழுந்திடும். அப்புறம் உங்க காட்டுல வேளை செய்யவணுக எல்லாரும் ஓட்டுப் போட்டா இவ ஜெயிச்சிடுவாடா..,


உங்க கட்சில எல்லாம் ஆள நிறுத்தினா அந்த ஓட்டும் பிரியும் நம்ம சனத்துக்கிட்டச் சொல்லி வச்ந்தாவுக்கு ஓட்டுப்போடச் சொல்வோம்டா.., அவ கண்டிப்பா ஜெயிச்சிருவா..,
சரி சரி எல்லாரும் சாப்பிடுங்க சொல்லிவிட்டு பெரிய வீட்டுக்காரர் இடத்தை விட்டு நகர்ந்தார். நூறு ஆண்டுகளுக்கு முன் அவரது வம்சம்தான் இந்த ஊரை ஆட்சி செய்ததாம். அதனால் அவர் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது..

சின்ராசு ஆரம்பித்தான்.., ஏண்ணே வசந்தாவப் போயி

ஏண்டா

அண்ணே
பெரியவீட்டுக்காரருக்கு சின்னவீடா இருந்தாக் கூட பரவாயில்லண்ணே..,


பத்து வருஷத்துக்கு முன்னாடி ரோட்டுல சுத்திகிட்டு இருந்தான்னே.., அவளப் போயி தலைவராக்கி.. இளநீர் பாணம் கொஞ்சம் , ஊறுகாய் கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டே புலம்பினான் சின்ராசு.

டேய் உனக்கு ரோட்ல நின்னு பார்ட்டி புடிச்சதுதான் தெரியும்.., அதுக்கு முன்னாடி கடலை மிட்டாய்க்கெல்லாம்..,, அவ நாடி நரம்பு எல்லாம் இதுதாண்டா


ரொம்ப காலமா அவளத் தெரியுமாண்ணே.., நெசமாவே அவ கீழ்சாதியாண்ணே..

யாருக்குடா தெரியும். அவ அம்மா இந்த தொழில்தான் பார்த்தாள். இவளும் வந்துட்டா.. அவ கலரப் பார்த்தியா.., வடக்கத்தி ஆளாட்டம்

ஏண்ணே.., வடக்கண்ணாலும் என்ன சாதிண்ணே..,


டேய்.. ரொம்ப பேசாத . அவுக நமக்கு தலைவர் ஆகப் போரவங்க..

அந்தக் காலத்தில அவ எப்படி யிருந்தா இப்ப என்னடா? தலைவர் சொல்லிட்டாரு.. அவளுக்கு ஓட்டுப் போடுவோம். #****%^& நாயிக போய் தலைவர் நாற்காலில உட்கார்ரதுக்கு இவ உட்கார்ரது எவ்வளவோ பரவாயில்லடா..

==========================================================


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Saturday, June 6, 2009

நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்:- தலைவர் பேட்டி

வழக்கமாக I AM STEADY, I AM STEADY, I AM STEADY என்ற பாடலை ஒருவன் பாட ஆரம்பித்தாலே அவன் ஒரு குடிகாரனாக இருக்கவும், கீழே விழும் நிலையில் இருக்கவும்தான் வாய்ப்பு அதிகம்.

மொடாக் குடிகாரன் குடித்துவிடும் தள்ளாடும்போதுதான் இந்த வார்த்தையைச் சொல்லுவான். இந்த வார்த்தைகளை அவன் சொல்ல ஆரம்பித்தாலே அவனது சமநிலை தவறிவிட்டதாக விட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
http://sports.dinamalar.com/SportsImages/photolink01_82_93.jpg

இதே மாதிரி ஒரு பேட்டியை இந்திய 20-20 அணித்த்லைவர் டோனி கொடுத்திருக்கிறார். இந்திய ஒற்றுமையாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். சேவக்கின் காயம் பற்றி கேட்டபோது அதைப் பற்றி அணியின் உடல்தகுதி வல்லுநரின் அறிக்கையை படிக்கச் சொல்லிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன....

இந்திய ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிட்டு இருப்பதாகவும், அணியில் அற்புதமான ஒற்றுமை நிலவுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அப்படியென்றால் இந்திய 20-20 அணி ஒற்றுமையாகத்தான் இருக்கிறது என நம்புவோம்.

===========================================================

முதல் நாள் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது போட்டியில் இடம் பெற்றுள்ள அனைத்து சின்ன அணிகளுக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

வழ்க்கமாக சின்ன அணிகளிடம் தோல்வியடையும் இந்திய பாகிஸ்தான் அணிகள் மத்தியில் இது பயங்கர பீதியைக் கிளப்பியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

20 ஓவர்களில் 162 ஓட்டங்கள் என்பது நல்ல எண்ணிக்கையே. ஆனால் இதில் ஒரு ஆறுகூட அடிக்கவில்லை என்பது இங்கிலாந்து அணியினர் என்ன மனநிலையில் ஆடியிருப்பார்கள் என்பதும் கேள்விக்குறியாகிறது.

மொத்தத்தில் இன்னொரு WWF போட்டியைப் பார்க்க எல்லோரும் தயாராக இருங்கள்

==========================================================

இந்திய அணி வீரர்களிடைய மோதல் பற்றி முறுக்கு விற்கும் பாட்டியிடம் கேட்டபோது இந்திய வீரர்கள் மீது கண்பட்டுவிடும் என்பதால் அணி நிர்வாகமே இது போல வதந்தியை கிளப்பி விட்டிருக்கக் கூடும் என்ற அறிய தகவலை வெளியிட்டார். அவர் பட்டோடி காலத்திலிருந்து முறுக்குவிற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
==========================================================

இப்படித்தான் போட்டியை நடத்தப் போவதாக திட்டமிட்டு இருக்கிறார்கள்

· Group A

Group B

Group C

Group D

இந்தியா

பாகிஸ்தான்

ஆஸ்திரேலியா

நியூசிலாந்து

பங்களாதேஷ்

இங்கிலாந்து

இலங்கை

தென்ஆப்பிரிக்கா

அயர்லாந்து

நெதர்லாந்து

மே.இ.தீவுகள்

ஸ்காட்லாந்து

Group E

A1, B2, C1, D2

Group F

B1, A2, C2, D1

நாள்

போட்டி

நேரம்

இடம்

ஜூன் 5

இங்கிலாந்து vs நெதர்லாந்து

இரவு 10.00

லார்ட்ஸ்

ஜூன் 6

நியூசிலாந்து vs ஸ்காட்லாந்து

பிற்பகல் 2.30

ஓவல்

ஜூன் 6

ஆஸ்திரேலியா vs மே.இ.தீவுகள்

மாலை 6.30

ஓவல்

ஜூன் 6

பங்களாதேஷ் vs இந்தியா

இரவு 10.30

டிரென்ட்பிரிட்ஜ்

ஜூன் 7

தெ. ஆப்பிரிக்கா vs ஸ்காட்லாந்து

மாலை 6.00

ஓவல்

ஜூன் 7

இங்கிலாந்து vs பாகிஸ்தான்

இரவு 10.00

ஓவல்

ஜூன் 8

அயர்லாந்து vs பங்களாதேஷ்

மாலை 6.00

டிரென்ட்பிரிட்ஜ்

ஜூன் 8

ஆஸ்திரேலியா vs இலங்கை

இரவு 10.00

டிரென்ட்பிரிட்ஜ்

ஜூன் 9

பாகிஸ்தான் vs நெதர்லாந்து

மாலை 6.00

லார்ட்ஸ்

ஜூன் 9

நியூசிலாந்து vs தெ. ஆப்பிரிக்கா

இரவு 10.00

லார்ட்ஸ்

ஜூன் 10

இலங்கை vs மே.இ.தீவுகள்

மாலை 6.00

டிரென்ட்பிரிட்ஜ்

ஜூன் 10

இந்தியா vs அயர்லாந்து

இரவு 10.00

டிரென்ட்பிரிட்ஜ்

ஜூன் 11

D1 Vs A2

மாலை 6.00

டிரென்ட்பிரிட்ஜ்

ஜூன் 11

B2 Vs D2

இரவு 10.00

டிரென்ட்பிரிட்ஜ்

ஜூன் 12

B1 Vs C2

மாலை 6.00

லார்ட்ஸ்

ஜூன் 12

A1 Vs C1

இரவு 10.00

லார்ட்ஸ்

ஜூன் 13

C1 Vs D2

மாலை 6.00

ஓவல்

ஜூன் 13

D1 Vs B1

இரவு 10.00

ஓவல்

ஜூன் 14

A2 Vs C2

மாலை 6.00

லார்ட்ஸ்

ஜூன் 14

A1 Vs B2

இரவு 10.00

லார்ட்ஸ்

ஜூன் 15

B1 Vs A2

மாலை 6.00

ஓவல்

ஜூன் 15

B2 Vs C1

இரவு 10.00

ஓவல்

ஜூன் 16

D1 Vs C2

மாலை 6.00

லார்ட்ஸ்

ஜூன் 16

D2 Vs A1

இரவு 10.00

லார்ட்ஸ்

ஜூன் 18

முதல் அரையிறுதி

இரவு 10.00

டிரென்ட்பிரிட்ஜ்

ஜூன் 19

2வது அரையிறுதி

இரவு 10.00

ஓவல்

ஜூன் 21

இறுதி போட்டி

இரவு 7.30

லார்ட்ஸ்

Friday, June 5, 2009

எதிர்த்துக் குத்த நினைக்கிறீர்களா?

அன்புள்ள நண்பா..,

உமக்கு கடிதம் எழுத வெகுநாட்களாக நினைத்ததுண்டு. இன்றுதான் வாய்ப்பு அமைந்தது. உங்கள் வீட்டில் கணினி, சாவிப் பலகை, மற்றும் வெண்திரை அனைத்தும் நலமாகவே இருக்கும் என்று நம்புகிறேன். நானும் சில காலமாக இந்த வலைப் பூவை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நீ அடிக்கடி இந்த வலைப்பூவை நோட்டமிடுகிறாய். மிகவும் நல்லது. தமிழ்மணம் தமிழீஷ் ,உலவு, தமிழர்ஸ் போன்ற திரட்டிகள் மூலமாகவும், இளமை விகடன் மூலமாகவும் அவ்வப் போது எட்டிப் பார்க்கிறாய்.

பல திரட்டிகளில் பிடித்திருந்தால் ஓட்டுப் போடச் சொல்கிறார்கள். அந்தத் திரட்டிகளின் முகப்பில் வெகுநேரம் நிற்பதற்கு இந்த ஓட்டுக்கள் அவசியமாகிறது.

நாளைய தத்துவங்களை (இந்த வலைப்பூவின் தலைப்பின் விளக்கத்தைப் பாருங்கள்) நிறையப் பேர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருப்பதுதானே..


ஆனால் நண்பா...

தமிழ்மணம் திரட்டிக்கு மட்டும் ஒரு வக்கிர (இந்த வார்த்தையை ஒரு சூப்பர்ஸ்டார் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்) எண்ணம் உண்டு. படிப்பவர்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அதன் பரிந்துரை ஓட்டுக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடலாம். அதற்கு கீழ்நோக்கிய கட்டைவிரலில் ஒரு சுண்டு சுண்டினால் போதும். இதற்கு எதோ ஒரு உயரிய நோக்கம்தான் காரணமாக இருக்கும்.


ஆனால் நண்பா

சமீபத்தில் நீ எதிர்த்து குத்திய சில இடுகைக்களைப் பார்த்தால் அதில் எதிர்ப்பதற்கு ஒன்றுமே இருக்காது. நான் எழுதிய சில இடுகைகள் கூட உன்னால் அனுபவித்துப் படிக்கவில்லையென்றால் கூட எதிர்த்து வாக்களிக்க வேண்டிய காரணம் ஏதும் இருக்குமா என்று தெரியவில்லை.


தமிழ்மணம் பரிந்துரை : 3/9
Pathivu Toolbar ©2009thamizmanam.com

யார்க்கராய் இருந்தால் என்ன? ஃபுல்டாஸ் ஆனா என்ன?



============================================

தமிழ்மணம் பரிந்துரை : 4/8

Pathivu Toolbar ©2009thamizmanam.com

கலைஞருக்கே தெரியாத ரகசியம்?


=============================================

போன்ற இடுகைகளுக்கு எதிர்வாக்களிக்க வேண்டிய அவசியம்தான் புரிய்வில்லை.

இதுகூட பரவாயில்லை

சகபதிர்வர்கள் எழுதியவற்றில்

தமிழ்மணம் பரிந்துரை : 11/13

Pathivu Toolbar ©2009thamizmanam.com

"ற்க்" பிழையும் பதிவர்களும்

இந்த இடுகையில் எதற்காக எதிர்வாக்கு குத்தவேண்டும்?

=====================================================

’நறுக்கு’ன்னு நாலு கேள்வி -- 1?

தமிழ்மணம் பரிந்துரை : 6/10



===================================================

தமிழ்மணம் பரிந்துரை : 10/12



இது இதுதான்....

==================================================

நான் எழுதியது கூட சும்மா பொழுதுபோக்கிற்காக என்று எடுத்துக் கொண்டாலும் இந்த இடுகைகளும் இது போன்று பல இடுகைகளும் மிகவும் கடினமாக உழைத்து சிந்தித்து எழுதப் படுகின்றன..


நீ எதிர் ஓட்டுப் போட்டதால் வாசகர் பரிந்துரையில் இருந்த எனது இடுகை ஒன்று வெளியே வந்து விட்டது. நன்றாக வாசகர்கள் வந்து கொண்டிருந்த இடுகை உனது விருப்பச் செயலால் வெளியே தள்ளப் பட்டுவிட்டது. அதனால் உனக்கு கிடைத்த பலன் தான் என்ன? உனது கொள்கையை எதிர்த்து எழுதியிருந்தால் நீயும் அதில் பின்னூட்டம் மூலம் உனது வாதத்தை வைத்திருக்கலாமே? அதைவிட்டு எதிர்போட்டுப் போட்டு என்ன சாதித்தாய் நண்பா?

இனிமேல் முடிந்தவரை யாருடைய இடுகைக்கும் எதிர் ஓட்டுப் போடாதே..

அப்படியே எதிர் ஓட்டுப் போட்டால் அதற்கான காரணத்தைச் சொல்லிவிட்டு எதிர் ஓட்டு போடு நண்பா. உனது கோணத்தையும் மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.

புரிந்துகொள்வாய் என்று நினைக்கிறேன்

இங்ங்னம்
உனது இடுகைக்கு எதிர் ஓட்டுப் போடத்துடிக்கும்
உன்நண்பன்

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails