முதல் பகுதியைப் படிக்க இங்கே சுட்டுங்கள்.
====================================================
அமெரிக்க நாடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அ.கொ.தீ.க.வின் எச்சரிக்கை அப்படி இருந்தது. ( அது தீ.க. நம்மூர் அரசியல் கட்சி அல்ல). நாசா மையத்தை ஜூலை-29ம்தேதி கைப்பற்றப் போவதாக அறிவித்திருந்தது. ஏற்கனவே நாசா மையம் விண்வெளியில் நிறுவியிருந்த செயற்கைச் சூரியன் இப்போது தான் பயன்பாட்டுக்கு வரும் தருவாயில் அந்த அறிவிப்பு வாஷிங்டன் நகரத்தையே தூங்க விடாமல் செய்திருந்தது.
இந்த சூழலில் நாசா விஞ்ஞானிகள் போர்வையில் சிலதீவிரவாதிகள் கைப்பற்றி விட்டதாகவும் தொலைக்காட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்துக் கொண்டிருந்தனர். அதற்கு ஆதாரமாக செயற்கைச் சூரியனின் பிளேடுகள் இடம் மாறி இருப்பதை ஒரு தொலைக்காட்சியினரும், அந்த பிளேடுகளின் மூலம் ஒட்டு மொத்த வெப்பத்தையும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செலுத்தி அந்த பகுதியையே அழிக்க முடியும் என்று இன்னொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டு செய்தி ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். நாஸாவின் கதவுகள் அடைக்கப் பட்டு உள்ளே யாரும் புகாத சூழல் ஏற்பட்டுவிட்டது.
வழக்கம்போல் பிரச்சனை வெளியே தெரிந்த உடனே பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமரிக்க அதிபர், வழ்க்கம் போல் பெரிய சைஸ் கம்ப்யூட்டர் முன்னால் வந்து நின்று கொண்டு மனித இனத்தை காப்பாற்றுவது பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தார். அப்போது நாஸாவின் உள்ளே இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை வெளியே இருந்த விஞ்ஞானிகள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
உள்ளே விஞ்ஞானிகளும், பயங்கரவாதிகளும் செய்து கொண்டிருப்பது எல்லாம் வெளியே தெரிய ஆரம்பித்தது. அமரிக்க தொலைக்காட்சிகள் அனைத்து நிகழ்ச்சிகளையும் உயிரோட்டத்துடன் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தனர். அமெரிக்காவின் ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளும் வீரர்களும் கலந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது
!
!
!
!
!
நாசாவின் ஈசானி மூலையில் ஒரு ஒருவம் அசைவது கண்காணிப்பு காமிராவில் தெரிய ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பார்த்தபோது அந்த உருவம் ஆசிய முகமாகத் தெரிய வந்தது.
மீசையில்லாத மொழுமொழு உருவம்.... அது...
ஹண்ட்டர்..,
அமெரிக்க அதிபர் இருக்கையை விட்டு எழுந்து விட்டார். ஹண்ட்டர் இப்போது வளர்ந்துவரும் ஒரு கடத்தல் மன்னன். அவன் எப்படி இங்கே?
உடனே அதிபர் ஹண்ட்டருக்கு அலைபேசியில் அழைக்கிறார்.
நான் ரொம்ப பிஸி. அப்புறம் ஃபோன் பண்ணுங்க என்று ஹண்ட்டர் பதில் சொல்கிறார்.
எங்க ராணுவம் உள்ள போகாத எடத்துக்கு நீ எப்படி போன..,
காத்து புகாத எடத்துல கூட இந்த ஹண்ட்டர் போயிடுவான்..
இப்ப ஃபோன வைக்கீறீங்களாண்ணா.....
சொல்லிவிட்டு கையில் ஒரு கைக்குட்டையுடன் ஹண்ட்டர் உள்ளே நுழைகிறார்.
ஹண்ட்டர் போன பாதையில் பிந்தொடர்ந்து நாஸாவுக்குள் நுழைய ராணுவம் முயற்சி செய்கிறது. பிரச்சனை மிகவும் தீவிரமாக இருப்பதால் அமரிக்க அதிபரே ராணுவ சீருடையணிந்து ராணுவத்திற்கு தலமையேற்று உள்ளே வர முயற்சிக்கிறார். ஏற்கனவே கண்காணிப்பு கேமிராவுடன் அந்தப் பகுதியை குறித்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள்.
ஆனால் ஹண்ட்டர் போன பாதையை பின் தொடர முடியவில்லை.
அப்போது ராணுவத்தில் இருக்கும் விவேக் சொல்கிறார்.
அவன் ஒரு முறை போனான்னாநாம எப்படி ஃபாலோ பண்றது?
அதை அவனே மறந்திடுவான்.
மறுபடியும் எல்லோரும் பதட்டத்துடன் நடந்து கொண்டே தொலைக்காட்சியைப் பார்க்க தொடருகின்றனர்.
உள்ளே போய் கொண்டிருக்கும் ஹண்ட்டர் ஒரு கதவின் அருகில் வந்து நிற்கிறார்.
அந்த கதவினை தனது கைக்குட்டையில் லேசாகத் துடைக்கிறார்.
ஹண்ட்டர் நாசாவை கொள்ளை யடித்து என்ன என்ன செய்யப் போகிறார்? என்று முக்கிய தொலைக்காட்சிகள் உலகின் முக்கியப் புள்ளிகளிடம் பேட்டி எடுத்து ஒளீ பரப்ப்ப்ப்ப்ப்பிக் கொண்டே இருந்தனர்.
ஹண்ட்டர் தெற்காசியாவைச் சேர்ந்த கறுப்பர் என்ற காரணத்தினால்தான் ராணுவத்தளபதிகளும் அதிபரும் அவரைப் பின் தொடர்வதற்கு அவர்களின் ஈகோ இடம் கொடுக்கவில்லை என்று ஒரு தொலைக்காட்சியினர் ஒளிப்பரபியதில் உலகெங்கும் கொந்தளிப்பு ஏற்பட ஆரம்பித்தது.
கைகுட்டையில் துடைத்த உடன் கதவின் பளபளப்பு அதிகமாகி அந்த சந்தின் கடைசி பகுதி வரை அந்தக் கதவில் பிரதிபலிக்கிறது. கதவைத்திறந்த ஹண்ட்டர் நேராக மகா கணினியின் முன் செல்கிறார். கணினி கடவுச் சொல் கேட்கிறது. கடவுச் சொல்லாக தலைமைவிஞ்ஞானி கைரேகையைத் தர வேண்டும். அப்போது கணினி திறக்கும்படி அமைக்கப் பட்டிருக்கிறது.
ஹண்டர் கைக்குட்டையை எடுக்கிறார். கதவில் துடைத்த போது அவர் பெறுமனே துடைக்கவில்லை. கதவில் இருந்த தலைமை விஞ்ஞானியின் கைரேகையை ஒற்றி எடுத்து வந்திருக்கிறார். அந்த ரேகையை கணினிக்குத் தருகிறார். கணினி அவரின் கட்டுப் பாட்டுக்குள் வருகிறது. கணினியை இயக்கி செயற்கைச் சூரியனை தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருகிறார். அதன் இறக்கைகளை சரியாக அவிழச் செய்து சரி செய்கிறார். அதிக் இணைக்கப் பட்டிருக்கும் வெடிகுண்டுகளை கழட்டி பிரபஞ்சத்தில் தனியே வெடிக்கச் செய்கிறார்.
வெளியே வரும்போது அழிவு,கொள்ளை,தீமை,கலகம் அமைப்பினைச் சேர்ந்தவர்களுடன் கடும் சண்டை நடக்கிறது. தனது கைக்குட்டையினைப் பயன்படுத்தி அனைத்துவகை நவீன ஆயுதங்களையும் அழித்து வெளியே வருகிறார்.
வெளியே வந்தவுடன் அமெரிக்க அதிபர் கட்டிப் பிடித்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். ஹண்ட்டர் லாங் லிவ், ஹண்ட்டர் லாங் லிவ் கோஷங்கள் வானம் வரை எட்டுகின்றது. உலக மகா கடத்தல் காரன் ஹண்ட்டர் அமரிக்க மக்களின் மனம் கவர்ந்த வில்லனாக மாறுகிறார்.
========================================================
இந்தியா :-
பிரபல தொழிலதிபர் தமிழ்செல்வன் பலகோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களுடன் தனியே காரில் போய் கொண்டிருப்பதாக சமூக விரோதிகளுக்கு தகவல் கிடைக்கிறது. அவரிடமிருந்து அதை அபகரிக்க திட்டமிடப் படுகிறது. ஏற்கனவே அவரைக் கொலை செய்வதற்கு முக்கிய புள்ளிகள் பலரும் பொன்னம்பலத்திடம் முன்பணம் கொடுத்து இருக்கிறார்கள். அவரது கார் தங்க நாற்கர சாலையில் பறந்து கொண்டிருக்கிறது. அவருக்குப் பின்னால் நூற்றைம்பது கார்களும் லாரிகளும் அவரைத் துறத்துக்கின்றன.
அவரும் சந்துகளிலும் இண்டு இடுக்குகளிலும் நுழைந்து வெளியே வந்து முன்னேறிச் செல்கிறார்.
வேகமாக இரண்டு கிலோமீட்டர் பயணம் செய்தவர் மின்னல் வேகத்தில் வண்டியை திருப்பி நிறுத்துகிறார். நிறுத்திய உடன் வண்டியில் இருந்து தமிழ்செல்வனும் அவரது உதவியாளரும் இறங்கி வருகின்றனர்.
தமிழ்செல்வா வைர நகையெல்லாம் கொடுத்துவிட்டு வந்தவழியே ஓடிடு என்று கர்ஜிக்கிறார். பொன்னம்பலம்.
ஹா.... ஹா.. அவர் ஒருமுறை போனார்னா அந்தவழிய அவரே மறந்திடுவார்..
சொல்லிவிட்டு சிரிக்கிறார், விவேக்
அப்போ நீங்க
வேட்டைக்காரன்.................
அகில உலகமும் நடுங்கும் ஹண்ட்டர்.
அகில உலகமும் நடுங்கும் ஹண்ட்டர்.
இப்போது மீசையைத் தடவிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் தமிழ்செல்வனின் மேல் பாயும் வெளிச்சம் அப்படியே பின்னால் பாய்கிறது. அவரது கூட்டத்தைச் சேர்ந்த் வாகணங்கள் ஒரே மாதிரியான வண்ணப் பூச்சுடன் நூற்றுக் கணக்கில் நிற்கின்றன..............
பொன்னம்பலம் அப்படியே வந்து அவரது காலில் விழுகிறார்.
=============================================================
வேட்டைக்காரன் வந்துக் கொண்டே இருப்பான்.
மூன்றாம் பாகம்வேட்டைக்காரச் சாமி
நான்காம்பாகம் உரிமைக்குரல் பன்ச் டயலாக்
நல்லா இருக்கு நண்பா
ReplyDeleteசினிமா விமர்சனமா சார் இது? இல்ல நெஜமா? :)
ReplyDelete//Suresh said...
ReplyDeleteநல்லா இருக்கு நண்பா
//
நன்றி தல
//எட்வின் said...
ReplyDeleteசினிமா விமர்சனமா சார் இது? இல்ல நெஜமா? :)
//
வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி தல...
இது நான் காணும் கனவு.......
ஷ்ச்சோ.........
ReplyDeleteஅப்பறம்.......
ஆங்க்...........
//பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteஷ்ச்சோ.........
அப்பறம்.......
ஆங்க்...........
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல....
தல,
ReplyDelete//முன்னெச்சரிக்கை;- இளகிய மனம் கொண்டவர்களும் கர்ப்பிணிகளும் குழந்தைகளும் இதைப் படிக்கும்பொது உரிய துணைகளுடன் படிப்பது நல்லது//
அப்போ என்ன மாதிரி குழந்தைகள் படிக்க கூடாதா? என்ன கொடுமை இது தல? அது சரி, உரிய துணை என்று ஒரு வார்த்தை வேறு போட்டு விட்டீர்கள். தேடிக் கொண்டு இருக்கிறேன்.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
தல,
ReplyDelete//அமெரிக்க நாடே அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அ.கோ.தீ.க.வின் எச்சரிக்கை அப்படி இருந்தது// அதானே, அ.கொ.தீ.க.வா, கொக்கா?
//வழ்க்கம் போல் பெரிய சைஸ் கம்ப்யூட்டர் முன்னால் வந்து நின்று கொண்டு மனித இனத்தை காப்பாற்றுவது பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தார்// தலையோட டிரேட் மார்க் டச்.
//நாஸாவின் கதவுகள் அடைக்கப் பட்டு உள்ளே யாரும் புகாத சூழல் ஏற்பட்டுவிட்டது// இந்த வரியா படிச்ச உடனே பின்னாடி // காத்து புகாத எடத்துல கூட இந்த ஹண்ட்டர் போயிடுவான்// என்று ஏதாவது பன்ச் டையலாக் வரும் என்று எதிர்பார்த்தேன்.
//சொல்லிவிட்டு கையில் ஒரு கைக்குட்டையுடன் ஹண்ட்டர் உள்ளே நுழைகிறார்// பட் வ்ஹ்ய்?
//பிரச்சனை மிகவும் தீவிரமாக இருப்பதால் அமரிக்க அதிபரே ராணுவ சீருடையணிந்து ராணுவத்திற்கு தலமையேற்று உள்ளே வர முயற்சிக்கிறார்// இதுவே நம்ம ஊரா இருந்தா சிங்கு போவாரா?
//அப்போது ராணுவத்தில் இருக்கும் விவேக் சொல்கிறார்.
அவன் ஒரு முறை போனான்னா
அதை அவனே மறந்திடுவான்.
நாம எப்படி ஃபாலோ பண்றது?// விவேக் அமெரிக்க ரானுவத்திலா? சூப்பர்.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
தல,
ReplyDelete//ஹண்ட்டர் தெற்காசியாவைச் சேர்ந்த கறுப்பர் என்ற காரணத்தினால்தான் ராணுவத்தளபதிகளும் அதிபரும் அவரைப் பின் தொடர்வதற்கு அவர்களின் ஈகோ இடம் கொடுக்கவில்லை என்று ஒரு தொலைக்காட்சியினர் ஒளிப்பரபியதில் உலகெங்கும் கொந்தளிப்பு ஏற்பட ஆரம்பித்தது// உங்களின் நுண்ணரசியல் திறன் என்னை வியக்க வைக்கிறது.
//கணினி கடவுச் சொல் கேட்கிறது. கடவுச் சொல்லாக தலைமைவிஞ்ஞானி கைரேகையைத் தர வேண்டும். அப்போது கணினி திறக்கும்படி அமைக்கப் பட்டிருக்கிறது.
ஹண்டர் கைக்குட்டையை எடுக்கிறார். கதவில் துடைத்த போது அவர் பெறுமனே துடைக்கவில்லை. கதவில் இருந்த தலைமை விஞ்ஞானியின் கைரேகையை ஒற்றி எடுத்து வந்திருக்கிறார்// அய்யோ, தல. கொன்னுட்டீங்க போங்க.
சில பேர் நீங்க தான் மறைந்த சுஜாதா அவர்களுக்கு சிவாஜி த பாஸ் கதையில் உதவியதாக சொன்ன போது நான் நம்பவில்லை. ஆனால் இப்போது நம்புகிறேன்.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
தல.... சீரியஸா சொல்றேன் ... கதைக்கு காபி ரைட் வாங்கிடுங்க.... நாலா பின்ன இதையே படமா எடுத்துடுவாங்க..... வாழ்த்துக்கள்
ReplyDeleteவருக்கைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
ReplyDeleteகிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம் சார்..,
Sukumar Swaminathan சார்...
Wonderful story !! What a funny language ... Sorry for English comments!
ReplyDelete//Rajarajan said...
ReplyDeleteWonderful story !! What a funny language ...//
நன்றி தல..,