இந்த சூழலில் அந்த ஊர் பெரிய மனிதர்கள் சிலர் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். அருகிலுள்ள நகருக்கு சில மாணவர்களை அனுப்பிப் படிக்க வைக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே..
வாரம் ஒரு முறை அந்த மாணவர்களைச் சந்திக்க யாராவது போய் அவர்களுக்குச் சென்று செலவுக்குப் பணம் தரச் சொல்கிறார்கள். மாணவர்களுக்கு மகிழ்ச்சி.... அப்படியே ஒரு பார்சலை அங்குள்ள ஒரு மளிகைக் கடையில் கொடுத்து வரச் சொல்கிறார்கள். மாணவர்கள் படிக்கும் ஆசையில் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நாள் போலீஸ் அவர்களைப் பிடித்துக் கொள்கிறது, அவர்களிடம் கொடுத்த பார்சலில் கஞ்சா இருப்பதாகக் கூறி கைது செய்கிறார்கள்.
பெரிய மனிதர்கள் கைது செய்யப் படுகிறார்கள். மாணவர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று கூறி விடுதலை செய்யப் படுகிறார்கள். ஆனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக நிற்கிறது..
அப்போது ஒரு குரல்
நான்
ஒரு வழியில போனா அந்த பாதையை நானே மறந்திடுவேன்..இனி திருமபவெல்லாம் முடியாது. என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அங்கே பதினைந்து வயது தமிழரசன் நிற்கிறான்.
நீங்கெல்லாம் படிக்க போங்க.. நான் படிக்க வைக்கறேன்.
பதினைந்து வய்து தமிழரசனின் குரல் உறுதியாக ஒலிக்கிறது. =
எப்படிடா?
தொழிலில் தமிழ்நாட்டில் இருக்குற எல்லோரப் பத்தியும் எனக்குத் தெரியும். தவிர நம்ம பகுதியில் இந்தப் பயிர் நல்லா வளரும்.
நமக்கு இருக்குற ஒரு வாய்ப்பு இந்தச் செடிதான். இத வச்சுத்தான் நம்ம ஊர், நம்ம ஜனங்க நம்ம மக்கள் அனைவரும் முன்னேறப்போறாங்க.
நம்ம பகுதி மட்டும்தான் போலீஸ் கண்ணில தட்டுப் படாம இருக்கு. அதுனால எல்லாப் பசங்களும் படிக்க போங்க
தீர்க்கமாக சொல்லும் தமிழரசனை எல்லோரும் பயந்துக் கொண்டு பார்க்கிறார்கள்.
படிக்கறீங்க எல்லோரும் படிக்கறீங்க
தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் மாணவர்கள் பிரித்து படிக்க வைக்கப் படுகிறார்கள். அனைத்துப் ப்குதிகளுக்கும் தேவையான சரக்குக்களையும் தமிழரசன் அனுப்புகிறான். அந்த மலைப் பிரதேசத்தில் இருக்கும் அனைத்து சிறுவர்களையும் படிக்க அனுப்புகிறான். தனது இளமைப் பருவத்தில் படிக்கச் செல்லாமல் தான் மட்டும் காட்டுக்குள் சுற்றிக் கொண்டு அனைத்துச் சிறுவர்களையும் படிக்க அனுப்பியதால் தமிழரசன்
வேட்டைக்காரச் சாமிஎன்று மரியாதையுடன் அழைக்கப் படுகிறார். சில ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழரசனின் மாணவர்கள் படிக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் IAS, IPS உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழரசனின் மாணவர்கள் படிக்கிறார்கள். ஒவ்வொரு மாணவர் ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் போதும் அங்கே தமிழரசன் தொழில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார். .
தமிழரசனின் நண்பர்களுக்கு தமிழரசன் செய்வது தவறு என்று தெரிந்தாலும் அவன் மூலமே காட்டுவாசிகளாகத் திரிந்த தங்களை மனிதர்களாக மாற்றியவன் என்பதால் அவனுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.
வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள் தமிழரசனின் மாணவ நண்பர்கள். அங்கே செல்லும் வேட்டைக்காரன் அங்குள்ள கல்லூரிகளுக்கு தான் அனுப்பும் சரக்குகள் விநியோகிக்கப் படுவதாக தெரிந்து கொள்கீறார். கடத்தல்மன்னன் மார்க் ஜீரோடாஸ்க் கின் இருப்பிடத்திற்கேச் செல்கிறார்.
நம்ம ஒப்பந்தப் படி இந்த சரக்கை மாணவர்களுக்குக் கொடுக்க கூடாது. நீங்க மீறிட்டீங்க என்கிறார்
மார்க் ஜீரோடாஸ்க்: இங்க பார் தம்பி நீ ஊருக்குப் புதுசு. வந்த வழியே திரும்ப போயிடு. இங்க நா வச்சதுதான் சட்டம்.
வேட்டைக்காரன்: நான் ஒருதடவ போனா அந்தப் பாதையை நானே மறந்திடுவேன். சின்னப் பசங்கள அழிக்கற உன்ன உன் கடத்தல் சாம்ராஜ்ஜியத்தை இன்னும் பத்து நாட்கள்ல அழிச்சுக் காட்டுறேன்.
சவால் விட்டுவிட்டு ஸ்லோமோசனில் வேட்டைக்காரன் நடந்து வருகிறார்.
=======இது நான் எழுதி வரும் வேட்டைக்காரன் கதையின் மூன்றாம் பகுதி ====
முதல் பகுதியை வேட்டைக்காரன் இனிய துவக்கம் சுட்டி மூலமும்
இரண்டாம் பகுதியை நாசாவுக்குள் போன நம்மாளு சுட்டி மூலமும்
நான்காம்பாகம் உரிமைக்குரல் பன்ச் டயலாக் படித்து மகிழுங்கள்
==============================================================
கதை தொடரும்
தல,வணக்கம்,
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட்டு.
//ஒரு வழியில போனா அந்த பாதையை நானே மறந்திடுவேன்
+
நீங்கெல்லாம் படிக்க போங்க. நான் படிக்க வைக்கறேன்//
முடியல. உங்கள ஆந்திராகாரங்க பார்த்த அப்படியே அள்ளிகிட்டு போய்டுவாங்க. சிரஞ்சீவி வேற தோத்துட்டு அடுத்த படத்த பத்தி யோசிக்குராறு. ஜாக்கிரதை.
//தனது இளமைப் பருவத்தில் படிக்கச் செல்லாமல் அனைத்துச் சிறுவர்களையும் படிக்க அனுப்பியதால் தமிழரசன் வேட்டைக்காரச் சாமி என்று மரியாதையுடன் அழைக்கப் படுகிறார்// அதெப்படி? படிப்புசாமி என்றுதானே அழைக்கப் படவேண்டும்?
//மார்க் ஜீரோடாஸ்க்// தயவு செய்து பெயர்க்காரணம் தருக. அவருக்கு வேற வேலையே இல்லாததால் ஜீரோ டாஸ்க்'ஆ?
வாழ்த்துக்கள் தல. தொடருங்கள்.
தல,
ReplyDeleteதமிளிஷ், தமிழ் மணம் என எல்லாத்திலையும் ஓட்டுப் போட்டாச்சு தல.
//King Viswa said...
ReplyDeleteஅதெப்படி? படிப்புசாமி என்றுதானே அழைக்கப் படவேண்டும்?//
வருகைக்கு நன்றி தல....
காட்டுக்குள் சுற்றியும்
கஞ்சா பயிடிட்டும்
கற்கும் மாணவர்களுக்கு
காவல் தெய்வமாகவும்
இருப்பதால் அவருக்கு அந்தப் பெயர்.
அங்கே ஒரு பாட்டை வைத்து பெயர் காரணம் விளக்கி விடலாம் தல
தல, உங்க கிட்ட பேரரசு பிச்சை கேக்கணும் போங்க.
ReplyDelete//அங்கே ஒரு பாட்டை வைத்து பெயர் காரணம் விளக்கி விடலா//
அதெப்படி தல, ரூம் போட்டு யோசிப்பீங்களா?
தலைப்பு போட்டதுமே தானா வருது தல..,
ReplyDeleteநாம ஹீரோவுக்குத்தானே கதை எழுதறோம்
just waiting for next episode dude!
ReplyDelete//பழமைபேசி said...
ReplyDeletejust waiting for next episode dude!
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவரே...,
//நான் ஒருதடவ போனா அந்தப் பாதையை நானே மறந்திடுவேன்.//
ReplyDeleteஅருமை அருமை.....
...நட்புடன் கார்த்திக்
http://karthiscraps.blogspot.com/
வாருங்கள் காதலிக்கலாம்....
ஹா ஹா.. கலக்கவும்
ReplyDeleteதெலுங்கு பட டைரக்டருக்கு பின்னூட்டமிடுவது சந்தோசம்..
//ஒரு வழியில போனா அந்த பாதையை நானே மறந்திடுவேன்
ReplyDelete//
ஆஸ்பத்திரியெல்லாம் போறீயளா?? இல்ல இதுதான் முழுநேரத் தொழிலா??
காலைலேயே ஒட்டு போட்டுட்டேன்.. கருத்து சொல்ல மறந்துட்டேன்..
ReplyDeleteஅட்டகாசம், அமர்க்களம், அசத்தல்..
//நட்புடன் கார்த்திக் said...
ReplyDelete//நான் ஒருதடவ போனா அந்தப் பாதையை நானே மறந்திடுவேன்.//
அருமை அருமை.....//
நன்றி தல..,
//கடைக்குட்டி said...
ReplyDeleteஹா ஹா.. கலக்கவும்
தெலுங்கு பட டைரக்டருக்கு பின்னூட்டமிடுவது சந்தோசம்..
//
நன்றி தல
//கடைக்குட்டி said...
ReplyDelete//ஒரு வழியில போனா அந்த பாதையை நானே மறந்திடுவேன்
//
ஆஸ்பத்திரியெல்லாம் போறீயளா?? இல்ல இதுதான் முழுநேரத் தொழிலா??
//
சட்டவிரோதமான தொழில் செய்து பிள்ளைகளைப் படிக்க வைத்து ஆளாக்கிய கதை ஒரு நோயாளி என்னிடம் கூறியது தான். கடைசியில் அவரது குழந்தைகள் அவரை ஒதுக்கி ஊதாசீனப் படுத்திவிட்டனர்.
//லோகு said...
ReplyDeleteகாலைலேயே ஒட்டு போட்டுட்டேன்.. கருத்து சொல்ல மறந்துட்டேன்..
அட்டகாசம், அமர்க்களம், அசத்தல்..
//
நன்றி தல..,
////கடைக்குட்டி said...
ReplyDeleteஹா ஹா.. கலக்கவும்
தெலுங்கு பட டைரக்டருக்கு பின்னூட்டமிடுவது சந்தோசம்..
//
//
திரைப் படங்களில் இடைவெளி மிகவும் குறைந்து வருகிறது தல..,
அய்யா சாமி கதை தொடருமா ?
ReplyDeleteகருமம் படிக்க கூடாதுனு நினைச்சாலும் மொக்கை மொட்டை போட கூப்பிடுது ..
படிச்சிட்டேன் அடுத்து எப்போ ?
//சூரியன் said...
ReplyDeleteஅய்யா சாமி கதை தொடருமா ?
கருமம் படிக்க கூடாதுனு நினைச்சாலும் மொக்கை மொட்டை போட கூப்பிடுது ..
படிச்சிட்டேன் அடுத்து எப்போ ?
//
வருகைக்கு நன்றி தல..,
கூடிய விரைவில் எழுதி விடுகிறேன்.
உங்கள் பலகைக்கே நேரடியாகக் கிடைக்க follow பொத்தானை அழுத்திவிடுங்கள். நண்பரே
//உங்கள் பலகைக்கே நேரடியாகக் கிடைக்க follow பொத்தானை அழுத்திவிடுங்கள். நண்பரே//
ReplyDeleteஅழுத்தியாச்சுல...
//சூரியன் said...
ReplyDelete//உங்கள் பலகைக்கே நேரடியாகக் கிடைக்க follow பொத்தானை அழுத்திவிடுங்கள். நண்பரே//
அழுத்தியாச்சுல...
//
நன்றி நண்பரே