Monday, May 4, 2009

வேட்டைக்காரன் இனிய துவக்கம்

பாதுகாப்பு அறிவிப்பு:- இந்தக் கதைக்கும் மக்கள் திலகத்தின் திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதே போல் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த எந்த ஒரு மனிதனுக்கும் தொடர்பு கிடையாது. இது சும்மா ஜாலியா ஒரு கற்பனை. பயங்கரவாதி செவன் அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் உன்னத நோக்கத்தோடு எழுதப் படுகிறது. தளத்திலேயே வந்து வேண்டுகோள் விடுத்துச் சென்றுள்ளார்.(வேண்டுகோள் இங்கே) இந்தக் கதையை ஹாலிவுட் திரைப்படமாக எடுத்தால் எனக்கு எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை என்று முதலியேயே சொல்லிவிடுகிறேன். சின்னத்திரையில் தொடராக எடுத்தால் அதற்கு ஆங்கிலத்தில் சப்-டைட்டில் போட்டே தீர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
(இதில் கிங் விஸ்வா அவர்கள் விரும்பும் பாத்திரத்தை அவருக்கு அளித்தால் மட்டுமே இதை படமாக்க அனுமதிவழங்கப் படும்)

==========================================================
துவக்கம் 1:-

வேட்டைக்காரனின் கைது செய்தி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு சொல்லப் படுகிறது.
என்ன....?
அதிர்ச்சியுடன் எழும் அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கே சென்று வேட்டைக்காரனை விடுதலை செய்ய வைத்து விட்டு இந்த சம்பவத்தை மறந்து விடுமாறு அனைவரிடமும் சொல்லி விடுகிறார்.

இந்த நாட்டில் உள்ள மிக நேர்மையான ஆட்சித்தலைவர் ஏன் வேட்டைக்காரனை விடுதலை செய்யச் சொன்னார்?
=====================================================

வேட்டைக்காரனின் மீசை லேசாகத் துடிக்கிறது.(இதுதான் வேட்டைக் காரனின் மீசையைக் காட்டும் முதல் காட்சி)

வேட்டைக்காரனின் முதல் தளபதி வேகமாகச் சென்று ஒரு அரிசி மூட்டையில் கத்தியைச் செருகுகிறார். அரிசி மூட்டையில் இருந்து ரத்தம் வழிகிறது. மூட்டையைத்திறந்தால் வேட்டைக்காரனைக் கொல்லவந்த நபர் அரிசி மூட்டைக்குள் ஒளிந்திருந்தவர், செத்து விழுகிறார்.
=========================================================

கல்லூரி மாணவி அனுஷ்காவின் முதுகில் இருசக்கர வாகனத்தின் வெளிச்சத்தை பாச்சி விளையாடுகிறார்கள் இரு கல்லூரி மாணவர்கள். டேய்.. சூரியனுக்கே லைட்டா..? என்ற குரல் மட்டும் ஒலிக்கிறது. கல்லூரி மாணவர்களின் வண்டிகள் வானத்தில் பறக்கின்றன.

==========================================================

அமெரிக்க ஜனாதிபதியாக யாரைத் தேர்ந்தெடுப்பது பற்றி அமெரிக்க மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. அனைவரும் தொடர்ச்சியாக வேட்டைக்காரனுக்கு தந்தி அடிக்கிறார்கள். அந்த தந்திகள் தமிழ்நாட்டை வந்தடைகிறது. தந்திகாரர் வேட்டைக்காரன் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் வேட்டைக்காரனின் இருப்பிடத்தைத் தேடுகிறார்.

அப்போது ஒரு பெரியவர்: நீ நிக்கறதே அவரோட எல்லையிலதான். நீ தந்தியைப் படி அப்பு.., வேட்டைக்காரனுக்கு கண்டிப்பா கேட்கும்
என்கிறார்.

தந்திக்காரர் படிக்க படிக்க அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய ஆசிய மக்கள் எல்லோரும் ஓடி வருகிறார்கள். ஷூவிலிருந்து வேட்டைக்காரனை மேல் நோக்கி காட்டுகிறார்கள். வேட்டைக்காரனின் முகத்திலிருந்து வரும் பிரகாசம் சூரியனையே மறைக்கிறது.

துவக்கப் பாடல் ஒலிக்கிறது:

தந்தி பாருடா
தம்பி பாருடா
அமெரிக்கா காரன் கூட அண்ணனை நம்பிதானடா
உலகத்துக்குக்கே வெளிச்சம் இவர்தானடா
=============================================

வேட்டைக்காரன் யார்?
அவரை ஏன் கைது செய்தனர்?
அவரை ஏன் ஆட்சித்தலைவர் யாருக்கும்தெரியாமல் விடுதலை செய்தார்?
அமெரிக்காவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?
அவரை ஏன் கொலை கொலை செய்யப் பார்க்கின்றனர்?

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமா.. தொடர்ந்து படியுங்கள். இன்றே புக் மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
===================================================

இரண்டாம் பாகம்நாசாவுக்குள் போன நம்மாளு
மூன்றாம் பாகம்வேட்டைக்காரச் சாமி
நான்காம்பாகம் உரிமைக்குரல் பன்ச் டயலாக்
படித்து மகிழுங்கள்
=================================================

அமெரிக்க பொருளாதாரம் நாளைய நிலை?சொடுக்குங்கள்,படியுங்கள், மகிழுங்கள்

38 comments:

 1. வழக்கம் போல நக்கல்

  ReplyDelete
 2. கூடிய விரைவில் இதே பேரில், இதே கதையோடு படம் வெளி வர உள்ளது..

  ReplyDelete
 3. கோடு போட்டா ரோடு போடறது கேள்விப்பட்டு இருக்கிறேன்.இதென்ன கோடு போட்டு போட்டு கதை சொல்றது?ஜேம்ஸ்பாண்ட்க்கும்,வந்தியத்தேவனுக்கும் ஒற்றுமை சொன்னது மாதிரி சொன்னாத்தானே பளிச்சின்னு கதை புரியும்:)

  வேட்டைக்காரன் படத்தை ஒருத்தன் படம் பார்த்துட்டு வந்து ஒன்பது பேருக்கு கதை சொன்னா எடுத்த படத்தை திரும்பச் சொல்றதால எளிமையாக இருந்துச்சோ?நீங்க புதுக் கதை சொல்றதுனால தயாரிப்பாளர் படம் எடுத்தாத்தான் விமர்சனம் செய்ய முடியும் போல இருக்கே:)

  ReplyDelete
 4. நல்ல பதிவு ;) உங்க கருத்துகள் மற்றும் அன்பிற்க்கும் நன்றி தலைவா ;) ரொம்ப பாசமா இருக்கிங்க...

  ReplyDelete
 5. ஹ்ம்ம்... நடக்கட்டும்.. வந்துட்டேன்... :-)

  ReplyDelete
 6. தல,

  என்ன கொடூரம் இது? உடனே ஆரம்பிச்சுட்டீங்க. வாழ்த்துக்கள்.

  //இதில் கிங் விஸ்வா அவர்கள் விரும்பும் பாத்திரத்தை அவருக்கு அளித்தால் மட்டுமே இதை படமாக்க அனுமதிவழங்கப் படும்// இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளம் ஆக்கி விடுகிறார்கள். என்ன செய்வது? இப்ப தான் ஒரு வேதாள நகரம் முடிஞ்சது என்று நம்பி வந்தேன். இப்போ வேட்டைக்காரனா?

  கலக்குங்க தல.

  கிங் விஸ்வா.
  Carpe Diem.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 7. தல,

  //கூடிய விரைவில் இதே பேரில், இதே கதையோடு படம் வெளி வர உள்ளது//

  டாக்டர் விஜய் படத்துக்கு நீங்க தான் கதை எழுதறீங்களா என்ன? .

  ஹா ஹா ஹா. இத நான் நம்பவே மாட்டேன்.

  ஏன்னா மருத்துவர் விஜய் படத்துல கதையே கிடையாது. (ஒரே ஒரு எக்ஷப்ஷன் - குருவி).

  கிங் விஸ்வா.
  Carpe Diem.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 8. தம்பிகளா,

  போதும் உங்க விளையாட்டு. இதோட நிறுத்திக்குங்க. இல்லன்னா உடனே குருவி ௨ படத்தை எடுக்க சொல்லி விடுவேன். அதுக்கு அடுத்து படம் வரும். பரவாயில்லையா?

  எஸ். ஏ. சந்திரசேகரா.

  ReplyDelete
 9. //தம்பிகளா,

  போதும் உங்க விளையாட்டு. இதோட நிறுத்திக்குங்க. இல்லன்னா உடனே குருவி-2 படத்தை எடுக்க சொல்லி விடுவேன். அதுக்கு அடுத்து ATM-2 படம் வரும். பரவாயில்லையா?

  எஸ். ஏ. சந்திரசேகரா.//

  தல,

  எனக்கு இப்பவே மிரட்டல் கடிதம் வர ஆரம்பிச்சுடுச்சி தல. எனக்கு Z பிரிவு பாதுகாப்பு வேணும் தல.

  கிங் விஸ்வா.
  Carpe Diem.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 10. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி முரளிக்கண்ணன்சார், லோகு சார்

  ReplyDelete
 11. //ராஜ நடராஜன் said...
  கோடு போட்டா ரோடு போடறது கேள்விப்பட்டு இருக்கிறேன்.இதென்ன கோடு போட்டு போட்டு கதை சொல்றது?//


  தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி தல..

  வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி தல

  ReplyDelete
 12. //Suresh said...

  நல்ல பதிவு ;) உங்க கருத்துகள் மற்றும் அன்பிற்க்கும் நன்றி தலைவா ;) ரொம்ப பாசமா இருக்கிங்க...
  //

  ஒரே ரத்தம் தல

  ReplyDelete
 13. //கடைக்குட்டி said...

  ஹ்ம்ம்... நடக்கட்டும்.. வந்துட்டேன்... :-)
  //

  நடத்துவோம் தல

  ReplyDelete
 14. //King Viswa said...

  இப்ப தான் ஒரு வேதாள நகரம் முடிஞ்சது என்று நம்பி வந்தேன். இப்போ வேட்டைக்காரனா?

  கலக்குங்க தல. //

  நன்றி தல

  ReplyDelete
 15. //King Viswa said...

  எனக்கு இப்பவே மிரட்டல் கடிதம் வர ஆரம்பிச்சுடுச்சி தல. எனக்கு Z பிரிவு பாதுகாப்பு வேணும் தல. //

  கண்டிப்பாகத்தல.. Z பிரிவு மட்டுமல்லாமல் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டு மொழியில் உள்ள கடைசி எழுத்தில் உள்ள பாதுகாப்பு வழங்க ஆவண செய்யப் படும்

  ReplyDelete
 16. //ச்சின்னப் பையன் said...

  :-)))))))))))))
  //

  இது சின்னக் கவுண்டர் படத்தில் வர மாதிரியே இருக்கு தல..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 17. //கண்டிப்பாகத்தல.. Z பிரிவு மட்டுமல்லாமல் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டு மொழியில் உள்ள கடைசி எழுத்தில் உள்ள பாதுகாப்பு வழங்க ஆவண செய்யப் படும்//

  அப்பாடா, இப்ப தான் நிம்மதியா இருக்கு தல.

  தானே தனியாக பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு இட்ட தல வாழ்க.

  வளர்க அவர் ரசிகர் மன்றம்.

  கிங் விஸ்வா.
  Carpe Diem.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 18. //ஒரு அரிசி மூட்டையில் கத்தியைச் செருகுகிறார். அரிசி மூட்டையில் இருந்து ரத்தம் வழிகிறது. மூட்டையைத்திறந்தால் வேட்டைக்காரனைக் கொல்லவந்த நபர் அரிசி மூட்டைக்குள் ஒளிந்திருந்தவர், செத்து விழுகிறார்.//


  அரிசி மூட்டைக்குள் அடியாள் ஒழிந்திருந்து தாக்கும் கலையை முதன்முதலில் வெளி உலகிற்கு அறிமுகப் படுத்தியிருக்கிறோம். யாராவது வந்து பாராட்டுங்க தல

  ReplyDelete
 19. //King Viswa said...
  அப்பாடா, இப்ப தான் நிம்மதியா இருக்கு தல.

  தானே தனியாக பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு இட்ட தல வாழ்க.
  //


  அமெரிக்காவின் நிரந்தர அதிபர்
  ஒபாமாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் தல..

  ReplyDelete
 20. தல,

  எனக்கு அது பச்சரிசி மூட்டையா இல்லை புழுங்கல் அரிசி மூட்டையா என்று குழப்பமாக இருந்ததால் தான் கேட்க்க வில்லை.

  உங்க ரேஞ்சுக்கு நீங்க பாஸ்மதி அரிசி வேற வச்சு இருப்பீங்க.

  ஹீ ஹீ ஹீ. அதனால தான் கேக்கலை தல.

  கிங் விஸ்வா.
  Carpe Diem.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 21. தல என்ன ?? எனக்கு லிங்க் குடுத்து வெச்சுருக்கீங்க. உங்க பாசத்துக்கு ஒரு அளவில்லாம போய்கிட்டு இருக்கு..

  :-)

  ReplyDelete
 22. அண்ணே நீங்க கிண்டல் பண்றீங்க... அவங்க நெஜமாவே இதை படமா எடுத்தாலும் எடுத்துடுவாங்க...கதைக்கு காபி ரைட் வாங்கி வச்சுக்குங்க....

  ReplyDelete
 23. உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே.
  //கல்லூரி மாணவி அனுஷ்காவின் முதுகில் இருசக்கர வாகனத்தின் வெளிச்சத்தை பாச்சி// முதுகில் ஒளியைப் பாய்ச்சாமல் முன்னால் பாச்சி இருக்க கூடாதா!!!!

  ReplyDelete
 24. :))))))))))))

  கலக்கல் !!!!!

  ReplyDelete
 25. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

  King Viswa சார்...


  கடைக்குட்டி சார்...

  Sukumar Swaminathan சார்...


  கனவுகளின் காதலன் சார்...

  பதி சார்...

  ReplyDelete
 26. //அமெரிக்காவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? //

  அய்யோ வேட்டைக்காரன் அமெரிக்கா வரை பிரபலமா.... தாங்க முடியலடா சாமி... இன்னும் என்ன என்ன பயங்கரம் வெளி வர போகுதோ.....

  ரஃபிக் ராஜா காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

  ReplyDelete
 27. very good blog, congratulations
  regard from Reus Catalonia
  thank you

  ReplyDelete
 28. ந்ன்னா.. சான்சே இல்லை.. கலக்கல்.. சீக்கிரமாத் தொடருங்க

  ReplyDelete
 29. //ЯR [comicology] said...

  //அமெரிக்காவுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? //

  அய்யோ வேட்டைக்காரன் அமெரிக்கா வரை பிரபலமா.... தாங்க முடியலடா சாமி... இன்னும் என்ன என்ன பயங்கரம் வெளி வர போகுதோ.....

  ரஃபிக் ராஜா காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
  May 5, 2009 3:53 PM //  வருகைக்கும் கருத்துக்கும் தங்களின் ஆவலுக்கும் நன்றி தல

  ReplyDelete
 30. //Té la mà Maria - Reus said...

  very good blog, congratulations
  regard from Reus Catalonia
  thank you
  //  நன்றி ஐயா; தமிழ்கூறும் நல்லுலகம் தங்களை இனிதே வரவேற்கிறது.

  ReplyDelete
 31. //கார்த்திகைப் பாண்டியன் said...

  ந்ன்னா.. சான்சே இல்லை.. கலக்கல்.. சீக்கிரமாத் தொடருங்க
  //

  நன்றிங்ந்ன்னா

  ReplyDelete
 32. புக் மார்க் , பண்ணிட்டேன், மேலதிக கதைக்காக வெயிட்டிங்.

  ReplyDelete
 33. //தேனீ - சுந்தர் said...

  புக் மார்க் , பண்ணிட்டேன், மேலதிக கதைக்காக வெயிட்டிங்.
  //

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

  அடுத்த பகுதி


  நாசாவுக்குள் போன நம்மாளு

  ஏற்கனவே எழுதி விட்டேன்

  ReplyDelete
 34. www.Tamilers.com

  You Are Posting Really Great Articles... Keep It Up...

  We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

  தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

  அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

  தமிழர்ஸின் சேவைகள்

  இவ்வார தமிழர்

  நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

  இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

  இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

  இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

  இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

  சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

  Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
  It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

  This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

  "சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

  இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

  சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

  இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
  உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

  நன்றி
  உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
  தமிழர்ஸ்
  தமிழர்ஸ் பிளாக்

  ReplyDelete
 35. ஏகப்பட்ட தொடர் ஓடுதுபோல. பொறுமையாத்தான் படிக்கணும். படிச்சிட்டு அப்பாலிக்கா வாரேன்!

  ReplyDelete
 36. விஜய் நிஜமாகவே வேட்டைக்காரன்தான்!
  ஆடியோ இசை வெளியீட்டு விழா @ sep xx 2009

  vettaikaran songs

  ReplyDelete
 37. @தமிழர்ஸ் - Tamilers
  @சங்கா
  @John

  நன்றி நண்பர்களே..,

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails