Saturday, August 31, 2013

விஜய்க்கு மட்டும் ஆசை இருக்க கூடாதா என்ன?

விஜய் ஏறக்குறைய 40 வயதில் இருக்கிறார். திரை உலகிற்கு (ஹீரோவாக) நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 

நாயகன் வந்தபோது கமலுக்கு இதை விட வயது குறைவாகத்தான் இருந்திருக்கும். தளபதி வந்தபோது ரஜினிகூட 40ன் துவக்கத்தில்தான் இருந்தார்.  

எம்ஜியார் நாடோடிமன்னன் எடுத்த போது 40ல் இருந்தார். அஜித்கூட தனது 40;ல் தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார். 

இளைய தளபதி என்ற பட்டத்தை தளபதியாக மாற்றிக் கொள்ள ஆசை வருவது இயற்கைதான்.  
==========================================
தமிழில் ஸ்பூஃப் வகைப் படங்கள் அவ்வப்போது வருவது உண்டு. இருந்தாலும்கூட தமிழ் ப் படம் தான் முதல் ஸ்பூஃப் படம் என்பது போல வெளி வந்தபோது நாம் எழுதிய இடுகை இது .அதன் முழு உரிமை விஜய்க்குத்தான்.


தலைவாகூட அப்படித்தான். ஒரு முழு நீள ஸ்பூஃப் வகைப் படம் தான்.  

அஜித் பில்லா , பில்லா 2 விட்டது போல இதையும் நாயகன் 2 என்று சொல்லி இருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. ஸ்பூஃப் வகை சீரியல்களில் கொடி கட்டிப் பறந்த சந்தானத்தையும் திரைக் கதை வடிவமைப்பில் ஈடுபடுத்தி இருந்தால் படம் பட்டையைக் கிளப்பி இருக்கும். 



கருப்புக் கண்ணாடியை கழட்டாமல் சண்டைப் போட்டு அசத்தும் விஷ்வா பாய் அசத்தலோ அசத்தல். எம் ஜியார் கூட கடைசி காலத்தில் டூயட் சீன்களில் மட்டும்தான் கருப்புக் கண்ணாடியை கழட்டாமல் நடித்திருந்தார்.

காதலன் படத்தில் வந்த போலீஸ் அதிகாரியை காப்பி அடிக்கும் நோக்கத்தில் படைக்கப் பட்ட அமலா பால் பாத்திரம் காதலன் போலீஸ் அளவுக்கு நம்மை கவரவில்லை. அதுவும்கூட இந்த படத்தில் நமக்கு ஏற்படும் ஏமாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். இன்றைய சூழலில் பெண் போலீஸ் அதிகாரி என்றால் அவர் நினைத்ததை முடிப்பவன்  மஞ்சுளா போன்ற திறமைசாலியாக இருக்க வேண்டும். ஆனால் புதிய பறவை சரோஜா தேவியோடு எல்லாம் இவரை ஒப்பிடுகிறார்கள். பாவம் அவரது பாத்திரப் படைப்பாளி.சந்தானமே சொல்லி விடுகிறார். டிஸ்கோ சாந்தி மாதிரி இருப்பதாக.





நடிகன் படத்தில் நடித்தபோது சத்தியராஜ் பல காட்சிகளில் தனது சிரிப்பை அடக்க சிரமமப் பட்டதாகச் சொல்லி இருக்கிறார். அந்த வரிசையில் இந்தப் படமும் அமைந்திருக்கும். 

படத்தில் வரும் பல காட்சிகளை பலரும் துவைத்து போட்டதால் நாமும் அதைப் பற்றி பேச விரும்பவில்லை.


==============================================================

 வீடியோ காசெட்டை விஜய் கைப்பற்றும் காட்சி, அதில் விஜய் இந்தி பேசிக் கொண்டே நடித்திருக்கும் காட்சி. கொஞ்சம்  முயன்றிருந்தால் துப்பாக்கி போல வந்திருக்கும் காட்சி அது. என்ன செய்வது எதைப் பார்த்தாலும் காமெடியாகவே தோன்றுகிறது மக்களுக்கு.

=============================================================

அமலா பால் விஜயிடம் உனக்கு அம்மா ஆக ஆசைப் படுகிறேன் என்று சொன்ன போதே  டைரக்டர் சொல்லி விட்டார் அவர் விஜயின் அப்பாவுக்குத்தான் ஆசைப் படுகிறார் என்று. இந்த டைரக்சன் டச் கூட மக்களை சென்றடையவில்லை. 

==================================================================

படத்தில் துவக்கத்தில் அண்ணா(விஜயோட அப்பா) வின் ஃபோன்  வந்ததால் அவரது நடன நிகழ்ச்சியில் அவரை டிஸ்குவாலிஃபை( அதுதாங்க தகுதி நீக்கம்)  செய்து விடுகிறார்கள். பிறகு அவர் தெருவில் ஆடி மக்கள் மனதில் இடம் பிடித்து யூ ட்யூப் மூலம் ஹிட் ஆகிறார். பேசாமல் இந்த முறையை கையாண்டிருந்தால் விஜய் நிஜமாகமாக பெரிய ஆள் ஆகியிருப்பாரோ...,

அரசியல்ல ஏதுவுமோ நமக்கு சாதகமா நடக்கறதில்ல. நடக்கிறத நமக்கு சாதகமா மாத்திடணும்....   இதுவும் கூட இந்தப் படத்தில் வரும் வசனம் தான்.

கிளைமாக்ஸ் சண்டை முடிந்த பிறகு வரும் போலிஸ் அதிகாரி (படம் பார்க்காதவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் )  கருப்பு சிவப்பு உடையில்...,   இதுவும் மக்களைச் சென்றடையவில்லை.

Monday, August 5, 2013

திருமணம் அவசியமா?

 பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

- யாரோ ஒரு புண்ணியவான்.

காதல் திருமணம்தான் நம் வாழ்க்கைக்கு முக்கியம். 21 வயதுக்கு மேல் காதல் திருமணம் செய்து கொள்ள பெற்றோர் சம்மதம் தேவையில்லை. பிரேசில், சிங்கப்பூர், போன்ற நாடுகளில் இப்படி ஒரு சட்டம் உள்ளது என்றெல்லாம் நாட்டில் பேசிக் கொள்கிறார்கள். 

பதினெட்டு வயதில் பெண்கள் சட்ட ரீதியாக திருமணம் செய்து கொள்ளலாம் எனவே அவள் விரும்பிய ஆணைத் திருமணம் செய்து கொள்ளலாம். பெற்றோருக்கு அந்தப் பையனைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஏற்றுக் கொண்டேதீர வேண்டும் என்றெல்லாம் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.  

சாதி ஒழிய வேண்டுமானால் காதல் திருமணமே வழி என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். தென் தமிழகத்தில் பஞ்சமர்களில் இருந்த ஒரு சாதியே தனது உழைப்பால் மிகப் பிற்படுத்தப் பட்டவர் வரிசையில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அவர்கள் காதல் திருமணத்தால் அதை சாதிக்கவில்லை. உழைப்பால்தான் அதை நடத்தினார்கள்,  (ஐந்து சாதிகளில் ஒன்று மி.ப. வரிசையில் சேர்ந்தாலும் இப்போது தமிழ்கத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் எண்ணிக்கை நூறுக்கும் பக்கம் இருக்கிறது. )


தாழ்த்தப் பட்டவர்களைத் தவிர பிறரை காதலித்தால் நகரப் புறத்தில் ஏற்றுக் கொள்ளப் படுவதாக வேறு ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.  

எது எப்படிப் போனாலும் காதல் திருமணம் என்பது காதலிப்பவர்களுக்கும், அவர்களைப் பெற்றவர்களுக்கும் சரி ஒரு இம்சைதான். இதை நாம் தடுத்தே ஆக வேண்டும் என்று யோசித்த போது தான். சில விஷயங்கள் தோன்றின.


1. காதலிப்பவர்கள், கோவிலிலோ , சர்ச்சிலோ, மசூதி மூலமாகவோ திருமணம் செய்து கொள்கிறார்கள். சில நேரங்களில் இதற்கு மதம் மாற வேண்டிய சூழல் இருக்கிறது.

2.மதம் மாற விருப்பம் இல்லாதவர்கள், பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.


திருமணத்திற்கு பின் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம், தானே செய்து கொண்ட திருமணம் எப்படி போகிறது என்று பார்த்தால், பெரும்பாலான மக்கள் தனிக் குடித்தனம் வந்து விடுகிறார்கள். 

நகர் புறங்களில் முதியோர் இல்லத்தை நாடுகிறார்கள். கிராமப் புறங்களில் தனியாக உலை பொங்கிக் கொள்கிறார்கள்.

நகர்புறங்களிலும் சரி கிராமப் புரங்களிலும் சரி குழந்தை வளர்ப்பு என்பது கம்பிமேல் நடப்பது போலத்தான் இருக்கிறது,. என்னதான் கஷ்டப் பட்டாலும் விளைவு என்பது ஏற்கனவே நடந்தது போல பெரிசுகளை விட்டு சிரிசுகள் போய்விடுகின்றன.

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதாக வே   வாழ்க்கை ஓடி விடுகிறது.  இதற்கெல்லாம் என்ன வழி.

திருமணத்தை ஒழிப்பது தான்.


திருமணமே செய்யாமல் இருந்தால் ஜாதிப் பிரச்ச்னை கிடையாது. மதப் பிரச்சனை கிடையாது. 








நான் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்ள சொல்ல வில்லை.  எதுவுமே இல்லாமல் இருந்தால் வாழ்க்கை என்பது இன்ப மயம்தான். 


ஆசையே துன்பத்திற்குக் காரணம்
ஆசையை ஒழித்தால் துன்பம் இன்றி வாழலாம். என்ற பொன்மொழியை ஏற்று

காதலை மறுப்போம். திருமணத்தை ஒழிப்போம். மகிழ்ச்சியாக வாழ்வோம்

Thursday, July 4, 2013

பாரதி ராஜா வழுக்கிய இடங்கள்.

பல பல விமர்சனங்களைப் படித்த பின்னர் உந்தப் பட்டு அன்னக் கொடி படம் பார்த்துவிட்டேன். கதை என்று எடுத்துக் கொண்டால் கொஞ்சம் வங்கமொழி திரைப்படங்களில் வருவது போன்று இருக்கிறது. 

அன்னக் கொடி காதலிக்கிறாள். சூழ்நிலை காதலை பிரித்து விடுகிறது. கனத்த இதயத்துடன் அன்னக் கொடி ஒருவனைத் திருமணம் செய்து கொள்கிறாள்.  சில நாட்கள் ( ஆண்டுகளாய் கூட இருக்கலாம்) அன்னக் கொடியின் காதலனும் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இவர்களுக்கு குழந்தை கூடப் பிறக்கிறது.  அன்னக் கொடிக்கு கணவனிடம் சித்ரவதை அதிகரிக்கிறது. பொறுக்க முடியாமல் காதலுடன் சேர்ந்து கொள்கிறாள். அவனும் அவளைச் சேர்த்துக் கொள்கிறான். கணவனுக்கு கோபம் வருகிறது.  அன்னக் கொடியின் காதலனின் மனைவியை கடத்திவிடுகிறான். அவளும் தூக்கில் தொங்குகிறாள். காதலனும் கணவனும் சண்டை போட கணவன் சாக  காதலனுக்கும் அவன் மனைவிக்கும் பிறந்த குழந்தைக்கும் தனது மார்பை உபயோகித்து பால் கொடுக்கிறாள் அன்னக் கொடி. 

மலையாளப் படம் போலவோ அல்லது வங்காளப் படம் போலவோ எடுத்திருந்தால் படம் ஓடியிருக்குமோ இல்லையோ பாரதிராஜா ஒரு திறமையான இயக்குநர். அவர் தமிழனாகப் பிறந்தது அவரது தவறு. தமிழனுக்கு திறமையை மதிக்க தெரியவில்லை அப்படி இப்படி என்று எதாவது எழுதி தள்ளி இருக்கலாம்.  

ஆனால் என்ன செய்வது அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், மாதிரி இல்லாவிட்டாலும் கங்கை அமரன் மாதிரியாவது தனது மகனை அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா? அவருக்கு. தனது படங்களில் வில்லன்களாக நடித்து தமிழ் மக்களின் வெறுப்பை அள்ளிக் கொண்ட ரஜினிகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் ( வில்லனாகத்தான்) போன்றவர்கள் பிற்காலத்தில் பெரிய ஆளான மாதிரி தனது மகனையும் பெரிய ஆளாக மாற்றியே தீர வேண்டும் ஒரு தந்தையாக தன்னை முன்னிறுத்தி எடுத்த படம் என்பதால் அதில் சில பல வகைகளில் மெருகேற்றப் பட்டத்தில்  படம்  என்னவோ மாதிரி ஆகிவிட்டது.

கிழக்குச் சீமையிலே படத்தில் நெப்போலியனின் தங்கையின் காதலையும் அதற்கு  நெப்ஸ் குடும்பம் தரும் எதிர்ப்பையும் பதிவு செய்து இருப்பார். அந்தப் படத்தில் வரும் பாண்டியனின்  கதாப்பாத்திரம் போன்ற ஒரு பாத்திரம்தான் சடையனின் பாத்திரம்.  ஆனால் அந்தப் பாத்திரம் இந்தப் படத்துக்காக மாற்றி அமைத்ததில் அடியில் ஒரு ஒடுக்கு விழுந்து விட்டது. அதனால் நேராக நிமிரவே முடியாது. என்பதாக மாற்றி விட்டார்கள்.

இந்த மேட்டரை முத்துராமன் நடித்த மறு பிறவி சொல்லுவார்கள் என்று நினைத்தேன் ஆனால் ஏற்கனவே பாரதி ராஜா இயக்கிய  கன்னிப் பருவத்திலே மாதிரி ஆக்கிவிட்டிடுக்கிறார்கள்.

ஆனால் வீட்டில் இருக்கும் அத்தனை பெண்கள். அவர்கள் அதுவும் விருப்பப் பட்டாம்.  ஒரு காப்பித் தண்ணியிலேயே சந்தோஷமாய் இருக்கிறார்கள்.  அதுவும் சடையனின் தந்தையின் கையங்கர்யமாக இருக்குமோ என்பதையும் கேள்விக் குறியாக விட்டு இருக்கிறார்கள். 

கிழக்குச் சீமையிலே படத்தில் பாண்டியனின் அறிமுகத்தில் இருக்கும் ஒரு குளுமை கலந்த கிக் இதில் வாந்தியைத் தான் கொண்டுவருகிறது. அதுவும் கோழிக் குழம்பு வைக்கும் பெண்,  அப்பனுக்கு வழக்கமாக கோழிக் குழம்பு வைத்துக் கொடுப்பவர், மகனுக்கும் கொடுக்க ஆசைப் படுகிறார். கைப் பக்குவம் அப்படி போல..,  

ஆனால் அதை ஜீரணிக்கும் பக்குவம்தான் நம்மிடம் இல்லை. 

எதற்காக மின்சாரம் உள்ளே நுழைந்த காலக் கட்டத்திற்குப் போனார் என்று தெரியவில்லை. பேசாமல் இந்தக் கதையை ஐ.டி. கம்பனியை வைத்தே சொல்லி இருக்கலாம்.  ஜாதியை இழுக்காமல் இஷ்டம் படம் போல காட்டி நவீன பெண்களின் நவீண உரிமைக்கான படமாக எடுத்து இருக்கலாம். நவீன மனிதர்களின் பாராட்டாவது கிடைத்து இருக்கும்.

இந்தப் படத்தில் கூட சில பல மாற்றங்களை செய்து இருக்கலாம்.  கிழக்குச் சீமையிலே காதலைப் போல பணம் , வசதி , குடும்ப பெருமை இதைக் காட்டி காதலர்களை பிரித்து இருக்கலாம். அதை விடுத்து விட்டு வீரன் என்ற பெயர் அதுவும் செருப்புத் தைப்பவன் என்ற அடையாளம். பேசாமல் ஆட்டுக் காரனாகவே கூட இருந்திருக்கலாம்.

தமிழ் படத்தில் ஒரு தாழ்த்தப் பட்ட்வன்  ஒரு பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்த வீட்டுப் பெண்ணை காதலிப்பது, மணப்பது போன்ற காட்சிகள் வந்து விட கூடாது அப்படி வந்தால் அந்தப் படம் படுதோல்வி. அப்படி ஒரு காட்சி படத்துக்கு மிக அவசியம் என்றால் பெண்ணை உயர்சாதிக்கு மாற்றி பையனை பிற்படுத்தப் பட்ட வகையறாக்களில்  இருந்து அமைத்துவிட வேண்டும். இந்த அடிப்படை திரைப்பட விதிகூட படத்தில் மீறப் பட்டிருக்கிறது.

 எங்க ஊரு பாட்டுக்காரனில் சிஞ்சனுக்கு ஜனக்கு, நான் சொல்லித் தாரான் கணக்கு பாட்டை கொஞ்சம் உல்டா அடித்து சடையனின்  பஞ்ச் ஆக வைத்து விட்டிருக்கிறார்கள். 

கரகாட்டக்காரன் மாதிரியே காற்றில் பறந்து வரும் சட்டை ஒழித்து வைத்துக் கொள்கிறார்கள்.  சிலம்பரசன் மாதிரி செருப்பைப் பார்க்கிறார்கள்.

அன்னக் கொடியை புகுந்த வீட்டில் கொடுமைப் படுத்துவது என்றால் ஒரு காது வளர்த்த கிழவியை விட்டு கொடுமைப் படுத்தி இருக்கலாம். ஆனால் துண்டெல்லாம் கொடுத்து கொஞ்சம் டூ மச்..,  அதற்காகத்தான் அதை எதிர்பார்த்துதான் படம் பார்க்க போயிருந்தாலும்கூட  ஷாக்தான் அந்த காட்சி. 

ஏவிஎம்மின் புதுமைப் பெண்ணில்  நாயகி வீட்டை விட்டு வெளியேறியதை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதற்காக மக்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வார்கள் என்று அர்த்தம் கிடையாது. 30 வருடத்துக்கு முன்னாடி வீட்டை விட்டு வந்ததை ஏற்றுக் கொண்டதற்காக இன்று சேர்த்து கொண்டதை ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்..

சாமி இரவில் வலம் வரும்போது வில்லன் சாவது கூட பல படங்களில் பார்த்ததுதான்.  

வீட்டை விட்டு வெளியே வந்த அன்னக் கொடி தனியே கஷ்டப் பட அவருக்கு ஒரு ஆடு மாதிரி மாடு மாதிரி பூனைமாதிரி இல்லாமல்   நாய் மாதிரி ஹீரோ உதவி செய்திருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டு இருப்பார்கள். கடைசியில் வில்லனோடு சேர்ந்து ஹீரோவும் சாக அவன் குழந்தைக்காக தனது வாழ்க்கையையே  அன்னக் கொடு அர்ப்பணித்துவிட்டாள் என்று காட்டியிருந்தால் புரட்சிகள் பல கண்ட தமிழுலகம் கண்கள் பனிக்க இதயம் கனக்க படத்தைப் பார்த்து ரசித்திருக்கும். 

என்ன செய்வது பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற சொலவடைக்கு ஏற்ப எந்திரன் ரஜினிக்கு மீசை வைத்தாற்போன்ற முகத்துடன் மே..., மே...., என்று சொல்லிக் கொண்டு உடையார் நாவலில் பாலகுமாரன் விளக்கு ஒரு வண்டியில் வடிவேலுபோல் அடிக்கடி வேட்டியை அவிழ்த்து தலையில் போட்டுக் கொள்ளும் மகனுக்காக என்னத்த்ச் சொல்ல என்ன்னத்தச் செய்ய..,

டிஸ்கி;-  ஒவ்வொரு பத்திக்கும் தொடர்ப்பு இருப்பது போலவும் இல்லாதது போலவும் தோன்றுகிறதா உங்களுக்கு?

உங்களுக்கு படம் பிடிக்காது.


பத்திகள் தொடர்ச்சியாக இருப்பதாக தோன்றுகிறதா? உங்களுக்கு படம் புரிந்து விடும்.


Sunday, June 16, 2013

விகடனுக்கே ஒரு விமர்சனம்.

இந்த வாரம் விகடனில் பிடாரனின் மகள் கதை படித்தேன்.  நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கதை தான் பிடாரனின் மகள்.

கதை என்று பார்த்தால் ஏற்கனவே நமக்கு அறிமுகமான கதைதான். ஏற்கனவே அழகி படத்தில் ஒரு ஓரமாய் எட்டிப் பார்த்த கதைதான்.  செல்லியை சின்ன வயதில் பார்க்கும் கதாநாயகன். அந்த சின்ன வயதிலேயே தனது தாயாரின் ஹேர் பின்களை கொடுத்தும், கொஞ்சம் கரெக்ட் செய்த காசில் நெயில் பாலீஸ் வாங்கிக் கொடுத்தும் ஃபிரெண்டு பிடிக்கப் பட்ட அந்தச் சிறுமியை, சில பல ஆண்டுகளுக்குப் பின் நாயகன் பார்க்கிறார். அப்போது அவரது உணர்வு,. அவ்வளவுதான் கதையின் சுறுக்கம்.  சிறுமியின் பின்புலம், வளர்ந்தபின் அவரது பின்புலம். அவரது தந்தையின் சிந்தனைகள் சில, நாயகனின் கருத்துக்கள் சில என்று புதிதாக கதை எழுத வருவோருக்கு எப்படி நமக்குத் தெரிந்த ஒரு சம்பவத்தை பெரிதாக மாற்றி கதையாக்குவது என்று சொல்வதாக இந்தக் கதை அமைந்திருக்கும்.

பாம்பு விளையாட்டுப் பொருள் இல்ல.., அது ஒரு உசிரு. அந்த உசிரு நமக்கு அடங்கியும் இருக்கும். மீறினா காவு வாங்கிடும்.

பாம்பாட்டுறது ஒரு போதை, நாம ஊதறதுக்குப் பாம்பு கிறங்கி ஆடுதேனு ஒரு மிதப்பு வரத்தான் செய்யும். நாள்பட அந்த கிறுக்கு மண்டைஇல் கிர்னு ஏறிடும்

பாம்பு சாகிறது சாதாரண விஷயமில்லை. எந்த பாம்பாவது தானாக சாகிறத பார்த்து இருக்கியா? 

அப்படி இப்படி பாம்பு பாம்பாட்டி பற்றியெல்லாம் பேசும்போது  பாம்பாட்டியின் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ என்று நம்மை எண்ண வைத்து விடுகிறார். 

நாமும்கூட அப்படியே அப்படியே நம்பிவிடலாம் அதனால் பாதிப்பு ஏதும் இல்லை.

அப்படியே ஒரு டாக்டரைப் பற்றியும் பேசுகிறார்கள் கதையில் அந்த டாக்டருக்கு ரத்தப் பரிசோதனையும் ஸ்கேன் பரிசோதனையும் தேவையில்லாமல் எழுதித் தருவதாகவும் அதில் கமிஷன் பெற்றுக் கொள்வதாகவும் எழுதி இருந்தார். அந்த வகையில் ஸ்கேனில் மட்டும் மாதம் மூன்று லட்சம் வருவதாக சொல்லி இருக்கிறார். 30 நாளில் மூன்று லட்சம் என்றால் ஒரு நாளில் 10,000 வருமானம். அதாவது கமிஷன்.  கணக்கிட வசதிக்காக  கமிஷன் 10%  என்று வைத்துக் கொண்டால் ஸ்கேன் செய்வது ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு வேளை கமிஷன் 2% என்று வைத்துக் கொண்டால் ஸ்கேன் செய்வது 5 லட்சம் ரூபாய்க்கு.  இந்த பெரிய தொகைக்கு கார்ப்பரேட் மருத்துவ மனைகளே செய்வார்களா என்பது சந்தேகமே..,

அதாவது கமிஷனாக பெரும்பங்கு சம்பாதிக்கும் நபர் என்று தேவையில்லாமல் புழுதியை எடுத்து விடுவதாகவே தோன்றுகிறது.  இவ்வாறான வரிகளைப் படித்த போது தனக்குத் தோன்றுவதை எல்லாம் எழுதி அதை இலக்கியமாக மாற்றும் திறன் நட்சத்திர எழுத்தாளர்களுக்கு உண்டு என்பதை ஒரு வார இடைவெளியில் மீண்டும் நிரூபித்து விட்டதாகவே தோன்றுகிறது.

குருடன் யானை கண்ட கதைபோல  இது போன்ற பாத்திரங்களை படைப்பதற்கு முன் எழுத்தர்கள் எழுதுவது போலவே இருந்து விடுகிறார்கள்

Thursday, June 6, 2013

சாமிக்கு விட்றா சர்வேசா........,

+2ல் கண்ணாபின்னாவென்று மக்கள் மதிப்பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கற்கால மாணவர்கள் வெகுசிலரே நூற்றுக்கு நூறு வாங்கி வந்த சூழலில் ஒரே மார்க் மாணவர்கள் வெகுசிலரே இருந்தனர். அந்த கற்கால மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்ற கூடுதல் ஐட்டம் ஒன்று இருந்தது. அதில் பொது அறிவு கேள்விகளெல்லாம் வைத்து இருந்தனர். ஒரே மதிப்பெண்களில் வந்து நிற்பது வெகுசில மாணவர்களே இருந்தனர். பின்னர் அந்த பொது அறிவுக் கேள்விகளை கட் செய்ய அதிலும் மாணவர்க்ள் முழு மதிப்பெண்கள் எடுக்க ஆரம்பித்தனர். 

வெட்டியாக ஒரு கூடுதல் தேர்வாக இருந்த அந்த நுழைவுத் தேர்வை பின்னர் வெட்டி எடுக்க மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் வித்தியாசமும் குறைந்து ஒரே மதிப்பெண்களில் பலரும் வந்து குவிய ஆரம்பித்து விட்டனர்; அந்த பிரச்சனையை சமாளிக்க அறிமுகப் படுத்தப் பட்டதுதான் குலுக்கல் எண் (ராண்டம் நம்பர்). பொறியியல் நேர்காணலில் உபயோகப் படுத்தப் படும் முறை. 

 //பி.இ., சேர்க்கை செயலர் ரைமண்ட் உதிரியராஜ் பேசியதாவது:வரும், 12ம் தேதி, அனைத்து மாணவர்களுக்கும், "ரேங்க்&' பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல் தயாரிக்க, ரேண்டம் எண்கள் உதவுகின்றன. ஒரே, "கட்-ஆப்&' மதிப்பெண்களில், 350 பேர் வரை வருவர்.
இவர்களிடையே, கணித மதிப்பெண் யாருக்கு அதிகம் என, பார்க்கப்படும். இதில், அனைவரும் சமமாக இருந்தால், இயற்பியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண் பார்க்கப்படும். இதுவும், சரி சமமாக இருந்தால், நான்காவது பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதுவும், ஒரே அளவு மதிப்பெண்களாக இருந்தால், மாணவர்களின் பிறந்த தேதி பார்க்கப்படும். இதிலும், "டை" வந்தால், இறுதியில், ரேண்டம் எண்களில், அதிக மதிப்புடைய எண்கள், யாரிடம் உள்ளதோ, அந்த மாணவர், முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார். இவ்வாறு ரைமண்ட் தெரிவித்தார்.//


ஏறக்குறைய இன்னபிற  தேர்வுகளிலும் அப்படித்தான்.   


இந்த குலுக்கல் முறையைவிட  தமிழ்பாட மதிப்பெண் மொத்த மதிப்பெண் போன்றவை உபயோகப் ப்டுத்தினால் தமிழுக்கு மரியாதை கொடுத்த மாதிரியும் இருக்கும்.  

சில பல பள்ளிகளில் மொழிப்பாடங்களுக்கு பெரிய முக்கியத்துவம் தராமல் நான்கு பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பாடம் எடுக்கிறார்களாம். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் என்பதால ஓரளவு படித்தாலே நல்ல மதிப்பெண்களை மொழிப்பாடத்தில் எடுத்து விடுகின்றனர். ,மற்றபடி அந்த பள்ளிகளுக்கு தமிழ், ஆங்கிலம் பாஸ் செய்தாலே போதும் என சாமி விடும் மனப்பாங்கே நிலவி வருகிறது.  இது போன்று ஒரு உத்தரவு வந்தால் ஓரளவு மொழிப்பாடங்களையும் மாணவர்கள் படிக்க ஆரம்பிப்பார்கள்.

Saturday, June 1, 2013

இதுக்கெல்லாம் காந்திய வம்புக்கிழுத்தால் என்ன செய்வது?

//தற்கால சூழலில் காந்தியின் கிராம ராஜ்ஜியம் சாத்தியல்லை என மத்திய மனிதவளத் துறை இணை மந்திரி சசி தரூர் கூறியுள்ளார்.//    

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும்போல.., ஆனாலும் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், அதுவும் ஐ.நா சபையின் பெரிய பதவிக்கெல்லாம் போட்டியிட்ட நபர் இப்படியெல்லாம் பேசுவது சரியல்லதான் தோன்றுகிறது.  

இந்த நாட்டின் அடிப்படையே கிராமம்தான். கிராமங்கள் இல்லாமல் நகரங்கள் மட்டுமே இருந்தால் நகரத்த்துக்கு உணவு மட்டுமல்ல ஆட்கள் சப்ளையுமே குறைந்து போய்விடும். 

ஒரு கிராமம் எப்படி இருக்க வேண்டும் என்று பற்பல் கனவுகளை காந்தி விதைத்திருக்கிறார். காந்தியை ஒத்துக் கொள்ளாதவர்கள் கூட அவரது பல கருத்துக்களை ஒத்துக் கொள்வார்.  

சென்னை மாநகரம் என்பது இப்படி பக்கத்து மாவட்டங்கள் தாண்டி வளரும் என்று 40 ஆண்டுகளுக்கு முன் யாராவது நினைத்து பார்த்திருப்பார்களா? அப்போதைய கிராமங்கள் எல்லாம் இன்று சென்னைக்குள் வந்து விடவில்லை.  கோயமுத்தூரில் 20 ஆண்டுகளுக்கு முன்புகூட சிங்காநல்லூர் ஊருக்கு வெளியேதான் இருந்தது. பீள்மேடு கிராமம்தான். இன்று அவையெல்லாம். உள்ளே வந்து விட்டன. ஆனால் கிராமம் என்ற இயல்பை இழந்து விட்டு நகருக்குள் வந்து விட்டன. ஒவ்வொரு நகரைச் சுற்றிலும் இது போன்ற பலகிராமங்கள் இருக்கின்றன. கோவையிலிருந்து 40கிமீயில் பொள்ளாட்சி பசுமையுடன் விளங்கிக் கொண்டுதான் இருக்கிறது,. 


பழனியை எடுத்துக் கொண்டால் முன்பெல்லாம் விவசாய நிலங்களில் இருந்த  முதலாளிகள் அருகிலிருக்கும் ஓரளவு பெரிய ஊரில் இருந்து கொண்டு விவசாயத்தை கவனித்துக் கொண்டு இருந்தார்கள். இன்று தகவல் தொழில்நுட்பம் போக்குவரத்து வளர்ந்து விட்ட சூழலில் தங்களது தோட்டத்திலேயே வசதியான வீட்டைக் கட்டிக்கொண்டு, டிடிஎச் வசதி, கார், மொபைல் சகிதம் ஒரு ஹைடெக் வாழ்க்கையை விவசாயத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு விவசாயத்தின் வருமானமும் நன்றாகத்தான் வந்து கொண்டு இருக்கிறது.  ஆனால் அடுத்த தலைமுறை ஆட்கள் படித்துவெளிநாட்டிற்குச் செல்வதால்தான் அந்த குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வெளியே வரும் சூழல் இருக்கின்றன.

சிறுவிவசாயிகளுக்கும் நஷ்டப்படாத அளவில் தண்ணீர் வசதியை செய்து கொடுத்தால் ஓரளவு அவர்களும் தங்களது தோட்டங்களைப் பெருக்கி, அங்கேயே இருந்து விவசாயத்தை கிராமத்தை பலப் படுத்துவார்கள்.  இந்த சிறுவிவசாயிகளின் சிலரின் வாரிசுகள் விவசாயத்தை விட்டு வெளியேறினாலும் பலரின் வாரிகள் அதைத் தொடருவார்கள். கிராமங்கள் வளப்படும். சுலப போக்குவரத்தையும், தேவையான நீர்வளத்தையும் ஏற்படுத்தினால் போதும். ( இதைச் சொல்லும் போது கேலியாகச் சிரிக்கலாம். இது ஒன்றும் கஷ்டம் அல்ல, நாற்கரச் சாலைக்கு நம்மால் நிலங்களை கையகப் படுத்த முடியும்போது கால்வாய்கள் அமைக்க நிலங்களை கையகப் படுத்த முடியாதா என்ன? தவிர இந்த கால்வாய்கள் வந்தால் அந்த நிலச் சொந்தக்காரர்களுக்கும் கொழுத்த லாபம்தான் கிடைக்கும். நமக்குத் தேவை சரியான களப்பணியாளர்கள்தான்)


போக்குவரத்தை சுலபமாக்கி தண்ணீர் போதுமான அளவு கிடைக்கும் வகையில் செய்து விட்டால் கண்டிப்பாக கிராமங்கள் பலம் பெறும். தொழிற்சாலைகளை நகரத்திலேயே குவிக்காமல் அருகிலுள்ள சிறு நகரஙகளுக்கு மாற்றி அங்கிருந்து பெரு நகரத்துக்கு போக்கு வரத்தினை துரிதப் படுத்தினாலே  கிராமங்கள் நன்கு பலப் படும்.  

சரிநிகர் சமப்படுத்தப் பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு கிராம ராஜ்யமே தீர்வாக இருக்க முடியும். இல்லையென்றால் பணக்காரர்கள் பணக்காரர்கள் ஆகிக் கொண்டே இருப்பார்கள். ஏழைகள் ஏழைகள் ஆகிக் கொண்டே இருப்பார்கள்.

//கோவாவில் நடைபெற்ற விழாவில் சசி தரூர் பேசியதாவது:-

தங்களுக்கு தேவையான அனைத்து வளங்களையும் கிராமங்களே உருவாக்கிக் கொள்ளக்கூடிய கிராம ராஜ்ஜியம் பற்றி மகாத்மா காந்தி பேசி வந்தார்.

உலகமயமாக்கல், தொலைத்தொடர்பில் நவீனத்துவம் என்று மாறிவரும் தற்கால சூழலில் காந்தி விரும்பிய கிராம ராஜ்ஜியம் என்பது சாத்தியமில்லாத இலக்காகவே தோன்றுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.//
//      

எனக்கென்னவே தொலை தொடர்பு வசதி என்பதை  கிராமங்களுக்கு கொடுக்க முடியாது என்பது போல பேசி இருப்பதாக தோன்றுகிறது. கிராமத்தான் முன்னேறிவிடக் கூடாது என்ற எண்ணமே அவர் நெஞ்சில் இருப்பதாக தோன்றுகிறது.

Thursday, May 30, 2013

அப்துல் ரகுமான் பெயரை கெடுக்கப் பார்த்த நாஞ்சில் நாடன்

டிஸ்கி:- சில நேரங்களில் சில விஷயங்கள் பேசும் போது வெளிவரும் சில விஷயங்கள் விசமாகவும் விஷமாகவும் போய்விடுவதால் உண்மை நிலை தெரிந்தவர்கள் தாராளமாக உண்மையைச் சொன்னால் நான் என்னை சரி படுத்திக் கொள்வேன். 

கடந்த சில நாட்களில் இணையத்தில் பேசப் படும் சில விஷயங்கள், பல விஷயங்களை அம்பலப் படுத்திக் கொண்டு இருக்கின்றன. இதில் எனக்குள் உறுத்திய சில விஷயங்களை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  http://neerottam.wordpress.com/2010/01/07/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/  வலைப்பூவில்  


 //விழாவுக்கு தலைமை தாங்கிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் அப்துல் ரகுமானைப் புகழ்ந்து சொன்ன சில வார்த்தைகள். பல வருடங்களுக்கு முன்பு தனது மகளுக்கு எழுத்தாளர் கோட்டாவில் எம்.பி.பிஎஸ் சீட் பெறுவதற்கு அப்துல் ரகுமான் காரணமாக இருந்தார் என்று குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். தனது மகள் 600க்கு 596 மார்க்குகள் எடுத்ததாக சொன்னார் அவர். “அதற்கு மேல் அவளால் எடுத்திருக்க முடியாது. ஆனால் நான் பிறந்து வளர்ந்த சாதியின் சுமை காரணமாக அவளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை” என்று சொன்னார்..//


எம்பிபிஎஸ் படிக்க அடிப்படைத் தகுதியாக 80களிலிருந்து +2 மட்டும் நுழைவுத் தேர்வும் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து +2 தேர்வு மதிப்பெண்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன.   தர வரிசை கணக்கீட்டிற்க்கு உபயோகப் படுத்தும் முறையிலோ அல்லது +2 தேர்வு மதிப்பெண்களிலோ எப்போதுமோ  600க்கு என்ற கணக்கீடு வந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை பாலிடெக்னிக், திருப்புதல் தேர்வு போன்றவைகளில் அவ்வாறு கணக்கிடுகிறார்களா என்றும் தெரியவில்லை.   

மேற்கண்ட வாக்கியங்களின் படி அவர் சார்ந்த அவர் விண்ணப்பம் செய்திருக்கிறார் ஆனால் கிடைக்கவில்லை. பொதுவாக அனைத்துவகை இட ஒதுக்கீட்டுகளும் ஏறக்குறைய ஒரே நேரத்தில்தான் நிரப்பப் பட்டு வருகிறது.  அவர் மகளுக்கு அதற்கு மேல் வாங்க முடியாது என்பதை ஏனோ அவரே ஒத்துக் கொள்கிறார். அதே நேரத்தில் விண்ணப்பித்து கிடைக்கவில்லை என்பதால் அவரை பிற மாணவர்கள் அதிக மதிப்பெண் வாங்கிவிட்டார்கள் என்பதையும் மறைமுகமாக ஒத்துக் கொள்கிறார்.   எழுத்தாளர் அல்லது ஏதோ ஒரு வகை இட ஒதுக்கீட்டின்படியும் அவருக்கு கிடைக்கவில்லை என்பதையும் ஒத்துக் கொள்கிறார்.  

பின்னர் திரு. அப்துல் ரகுமான் அவர்களைத் தொடர்பு கொண்டபின் எழுத்தாளர் கோட்டாவில் எம்பிபிஎஸ் சீட் வாங்க உதவியதாகச் சொல்கிறார். அப்படி என்றால் எழும் சந்தேங்கள்.

அவரது மகளின் எம்பிபிஎஸ் விண்ணப்பம் முறையாக அனுப்பப் பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப் படும் வரை இவர் ஒரு எழுத்தாளர் என அங்கீகரிக்கப் படாமல் இருந்தாரா? அப்துல் ரகுமான் அவர்கள்தான் அவர் ஒரு எழுத்தாளர் என அங்கீகரிக்கப் பட உதவி செய்தாரா? அப்படித்தான் எனில்  உண்மையிலேயே அப்துல் ரகுமான அவர்களின் உதவி மிகப் பெரியதுதான்.  ஒரு எழுத்தாளருக்கு எழுத்தாளர் என்ற அங்கீகாரம் பெற்றுத்த்ருதல் என்றால் சும்மாவா? தவிரவும் அந்த அங்கீகாரம் மூலம் மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வேறு வாங்கிக் கொடுத்தல் என்பது டபுள் நன்றிக் கடன் அல்லவா?

 ஆனால் நிலமை அப்படித் தோன்றவில்லை. ஏனென்றால் முறையான விண்ணப்பம் மூலமாக இவருக்கு சீட் கிடைக்கவில்லை. ஆனால் அப்துல் ரகுமானின் தலையீட்டுக்குப் பிறகு கிடைத்திருக்கிறது.  என்பதை அவர் ஒத்துக் கொள்கிறார்.

அப்படி என்றால்  அவரின் தலையீடுவரை எழுத்தாளர் ஒதுக்கீடு நிரப்பப் படாமல் இருந்ததா? அவரின் தலையீட்டுக்கு முன்னால் வரைக்கும் இவர் விண்ணப்பம் செய்யாமல் வைத்திருந்தாரா?

ஏற்கனவே மாணவரகளுக்கு இட ஒதுக்கீடு செய்த பிறகு யாருக்காவது கொடுத்த சீட்டை பிடுங்கி இவருக்கு கொடுத்தார்களா? இவர் சொல்வதைப் பார்த்தால்  இவருக்கு சுத்தாமாக கிடைக்காமல் போனபிறகு அப்துல் ரகுமான் அவர்களின் தலையீட்டுக்கு பிறகு சீட் கிடைத்ததாகச் சொல்வதைப் பார்த்தால்  அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. 

நண்பர்களிடம் இதைப் பற்றி பேசிய போது  ஒருவர் சொன்ன கருத்து:- இதுகெல்லாம் சிபிஐ விசாரணையா கேட்க முடியும். போய்யா போய் புள்ளைங்கள படிக்க வைக்கிற வழியப் பாரு. 


டிஸ்கி:- இவ்வாறு தன் மகளுக்கு இடம் வாங்கிக் கொடுத்த போது  தன் மகளைவிட அதிக மதிப்பெண் எடுத்த ஏழை எளிய எழுத்தாளர்களின் குழந்தைகளுக்கும் அவர் மருத்துவ சீட் வாங்கிக் கொடுத்து சமத்துவத்தை நிலை நாட்டினாரா என்று தெரியவில்லை. 






Monday, May 27, 2013

ஐபிஎல் இறுதிப் போட்டி உணர்த்தும் உண்மைகள்

  1. இறுதிப் போட்டியில் தோற்றதன் மூலம் லீக் ஆட்டங்களில் தோற்றது சூத்தாட்டத்தினால் அல்ல. தங்கள் திறமையால்தான் என சூப்பர் கிங்ஸ் நிரூபித்து உள்ளது.
  2. சூப்பர் கிங்ஸ்க்கு போடப் பட்ட கடைசிப் பந்து வைடு ஆக ஆனதால் இதற்கு முன் சில ஆட்டங்களில் போடப் பட்ட கடைசி நோ பாலும் இதே போல் ஏதேச்சையாக நிகழ்ந்த நிகழ்வுதான் என நிரூபிக்கப் பட்டுள்ளது.
  3. விக்கெட் வரிசையாக விழும்போது பத்ரிநாத் ப்ராவோவைக் களம் இறக்கியதன் மூலம் வீரர்களுக்கு போட்டிகளின் முக்கியத் தருணங்களில் வாய்ப்பு தரும் மகா மனிதர் டோனி என்பது மீண்டும் நீருபிக்கப் பட்டுள்ளது,
  4. மும்பை வாலாக்கள் களத்தில் இறங்கினால்  அனைத்தும் சட்ட ரீதியாகத்தான் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
  5. இடியே விழுந்தாலும் கலங்காமல் இருக்கும் மிஸ்டர் கூல் என்பதை டோனி உலகத்துக்கும் அவரது மனைவிக்கும் ஒரு முறை நிரூபித்துக் காட்டி விட்டார்.
  6. இந்த போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டதால் இளைஞர்களுக்கு வழிவிடுபவர் என்பதை டெண்டுல்கரும் நிரூபித்துவிட்டார்.
  7. வெளிநாட்டு கேப்டனை விட உள்நாட்டு கேப்டன் தான் ஐபிஎல் அணிகளுக்கு சரிப் பட்டு வருவார்கள் என்பதை ரோஹித் சர்மா நிரூபித்து விட்டார். 
  8. இதையெல்லாம் விட ஒரு சிறப்புப் படம் ஒன்று ஃபேஸ் புக்கில் பட்டது. அது டோனியின் பக்தியை மெச்சுவதாக உள்ளது அந்தப் படம்.https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc1/391666_10151668132389134_489713509_n.jpg 
  9. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பெண்களுக்கு எதிரான பழமொழியை மாமனார் மருமகனுக்கு மாற்றி எழுதிய பெருமையும் இந்த ஐபிஎல்லையே சாரும். மருமகன் உள்ளே மாமனார் வெளியே .
  10. தங்கள் அணியை வெற்றிப் பெற செய்ய அணி உரிமையாளர் ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருப்பார் என்பதும் இந்த ஐபிஎல்லில் நிரூபணம் ஆகியுள்ளது.    படித்துவிட்டீர்களா? 
  11. IPL இறுதிப் போட்டி -  இறுதிச் சடங்கு?
  12.  IPL மகாபாரத யுத்த விளக்கம்
  13. டிஸ்கி:- மஞ்சள் சீருடை ஒருவேளை பச்சைச் சீருடையாக மாறினால் முக்தி கிடைக்குமோ என்னமோ?

IPL மகாபாரத யுத்த விளக்கம்

 ரோஹித் சர்மா: (மீடியாக்களைப் பார்த்து )உங்களால் அல்லவா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நாங்கள் தோற்கடித்தோம்.

மீடியா: உன் ஒருவனால் அவரை தோற்கடிக்க முடியுமா? உங்களுக்கு முன்பே ஆறு பேர் அவர்களை தோற்கடித்து விட்டார்கள். செத்த அடித்துவிட்டு நாங்கள்தான் தோற்கடித்தோம் என்று வீணே மார்த்ட்டுகிறீர்கள்.

  1. பெர்மணண்ட் பிளேயர்களால் மற்றவர்கள் விளையாட வாய்ப்பில்லாமல் பாதி அணியை அவர்களே அழித்து விட்டார்கள்.
  2. ஸ்ரீனிவாசனை வெளியேறச் சொல்லி  சென்னை அணியையே தடை ஆகும் வாய்ப்பை உருவாக்கி விட்டார்கள்.
  3.  லட்சுமிராயுடனான ஃபோட்டோவைப் போட்டு அவரது நண்பர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டனர்.
  4. மும்பை போலீஸ் மும்பை இண்டியன்ஸ்காக மாரல் சப்போர்ட் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தனர்.
  5. டெண்டுக்கரும் ரிக்கி பாண்டிங்கும் கூடுதலாக இரண்டு வீரர்களை உங்கள் அணியில் விளையாட வழிவகுத்துக் கொடுத்தனர்.
  6. காக்க வேண்டிய நேரங்களில் ப்ராவோவையும் பத்ரிநாத்தையும் அனுப்பி விழுந்த விக்கெட்டுகளின் எண்ணிக்கையை டோனி அதிகரித்து விட்டார்.

இப்படி ஏற்கனவே பல பேரால் தோற்கடிக்கப் பட்ட அணியை தோற்கடித்துவிட்டு நாங்கள்தான் தோற்கடித்தோம் என்று வீணே மார்தட்டுகிறாய். பேர் வாங்கப் பார்க்கிறாய். போப்பா போய் ஒழுங்கா விளையாடி டீம்ல இடம் பிடிக்கற வழியப் பாரு.




Sunday, May 26, 2013

IPL இறுதிப் போட்டி - சடங்கு?

ஒரு பரப்ப்பான சூழலில் ஐபிஎல் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. இது ஒரு சடங்காகத்தான் இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். சடங்கு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இவர் இங்கு நிற்க வேண்டும் இவர் இங்கு உட்கார வேண்டும். இவர் இந்த வசனம் சொன்னால் இவர் இந்த வசனம் சொல்ல வேண்டும் அப்படி இப்படியெல்லாம் சொல்லி நடக்கும். திருமணம், காதுகுத்து ,நல்லது , கெட்டது என எல்லா சம்பவங்களிலும் இப்படித்தான் சடங்கு நடக்கும்.  மரபுப்படி நடக்கும் திருமணம் என்று இல்லை. பதிவுத் திருமணம் கூட இன்னார் இன்னார் இப்படி இப்படி நடக்க வேண்டும் என்று சொல்லி அதுவும் ஒரு சடங்காகத்தான் அமையும். அது போல இன்று நடக்க இருக்கும் இறுதிச் சடங்கு எப்படி இருக்கும் என்பதான் ஒர்  எதிர்பார்ப்பு இது

  இது முழுக்க முழுக்க ஒரு கணிப்பு  மட்டுமே, அதுவும் இதுவரை நடந்த ஆட்டங்களில் அடிப்படையில் தோன்றிய ஒரு குத்து மதிப்பான கணிப்பு மட்டுமே இதற்கும் எந்த புக்கிகளுக்கும் ஒட்டு உறவு கிடையாது என்ப்தையும் இங்கு தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறேன். இது இப்படித்தான் இருக்கும் என்பதாக யாரும் எதுவும் செய்ய முடியாது. 


முதலில் டாஸ் 
நினைத்த டாஸ்போடும் திறமைசாலி யாராவது உண்டா என்று தெரியவில்லை.   இருந்தாலும் கூட ஸ்ரீசாந்துக்கே அடித்து விளையாடும்படி பந்து போட பணம் கொடுத்ததாக பேசிக் கொள்ளும் நிலை இன்று இருப்பதால் டாஸ் ஜெயிக்கும் இடத்திலும் காசு விளையாடியதாக பேசினாலும் ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது.

 பொதுவாக இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயிப்பவர்கள் பேட்டிங்க் எடுக்கும் வாய்ப்புதான் அதிகம் இருக்கிறது.

சென்னை முதலில் பேட்டிங் என்றால்

சென்னை அணியின் ஸ்கோர்:
முதலில் சென்னை பேட்டிங் செய்யும் நிலை வந்தால் சென்னையின் ஸ்கோர் அதிகமாக 180ஐ ஒட்டி இருக்கலாம்.  ஹஸ்ஸியிடம் ஏற்கனவே ஆரஞ்சுத் தொப்பி இருப்பதால் அவர் இந்த ஆட்டத்தில் குறைவான ஸ்கோரில் அவுட் வாய்ப்பே இருக்கிறது. 

ஜூனியர் ஸ்ரீகாந்த் இந்த ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள்.  

ரெய்னா 47, 48, 49ல் அவுட் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. 

முரளி விஜய்  ( ஜூனியர் ஸ்ரீகாந்த் ஆடினால் ரெய்னா ) எப்போது மிக வேகமாக 4ம் 6ம் அடிக்கிறாரோ அடுத்து வேகமாக அவுட் ஆகும் வாய்ப்பு இருக்கிறது.  டோனி கடைசிக் கட்டத்தில் வேகமாக அடித்து ஆடி ரன்களை ஏற்றி விடுவார்.

மும்பை இண்டியன்ஸ்:
 சென்னை சூப்பர் கிங்ஸ் எவ்வளவு ரன் எடுத்தாலும் அதை சேஸ் செய்து வெற்றி பெறும் வாய்ப்பு மும்பை இண்டியன்ஸ்க்கு இருப்பதாகவே தோன்றுகிறது.  அதில்  தினேஸ் கார்த்திக்கின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.  சென்னை சூப்பர் கிங்ஸின் தோல்வியால் சென்னை ரசிகர்கள் வருத்தப்படாமல் இருக்க தினேஸ் கார்த்திக்கின் இந்த ஆட்டம் ஒரு மருந்தாக இருக்கும்.  ஸ்மித், ஹர்பஜன் சிங் ஆகியோர் இறுதிக் கட்ட அதிரடியில் இறங்கி  வெற்றி வாகை சூடுவார்கள்.  சுத்தமாக சென்னை அணியின் பந்து வீச்சு எடுபடாது.


மும்பை முதலில் பேட்டிங் செய்தால்


மும்பை அணி  120-140 எடுக்க வாய்ப்பு இருக்கிறது.  வழக்கம்போல் ப்ராவோ , ஜடேஜா ஆகியோர் அதிக விக்கெட்டுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

டோனி சில கேட்ச்கள் மற்றும் ரன் அவுட் செய்வார்.

சென்னை அணி கடைசி ஓவரில் பத்து பதினைந்து எடுக்க முயற்சித்து தோல்வி அடையும்.  ரெய்னா அல்லது ஹசி போராடுவார்கள்.  ஆனால் 18ம் ஓவரில் அவுட் ஆகி விடுவார்கள்.

ஆட்ட முடிவில் :  சச்சினை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு வீரர்கள் சுற்றும் வாய்ப்பு இருக்கிறது.  இந்த நிகழ்ச்சிக்கு நடிகைகள் வரும் வாய்ப்பு சுத்தமாக இல்லை என்றே நினைக்கிறேன்.  





Friday, May 24, 2013

இதெல்லாம் படிக்கற பசங்களுக்கு நல்லதா?

 நாயக் நஹீ.., கல்நாயக் ஹூன் மே

டிஸ்கி;- இதெல்லாம் படிக்கற பசங்களுக்கு நல்லதா? ,  நாயக் என்ற இந்தி திரைப்படத்தைப் பார்த்து செய்திருக்கலாம். இல்லை முதல்வன் என்ற மூலப் படத்தைப் பார்த்தும் செய்திருக்கலாம்.

//மத்திய பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்த மாணவி, ஒருநாள் கவுரவ மேயர் பதவி அளித்து கவுரவிக்கப்பட உள்ளார்.//

//மாணவியை கவுரவிக்கவும், மாணவ, மாணவிகளை கல்வியின் மேல் ஆர்வம் கொள்ளச் செய்யும் வகையில் அவருக்கு ஒரு நாள் மேயர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகரின் மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார். வருகிற 28 ஆம் தேதியன்று மாணவி சுனந்தா மேயர் பொறுப்பு ஏற்கிறார்.

அன்று காலை முதல் மாலை வரை மேயர் இருக்கையில் அமர்ந்து மேயர் பணிகளை கவனிப்பார். இதற்கான சட்ட நடைமுறைகளை செய்து, அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றுள்ளார் மேயர் ஷோபா யாதவ்.

28 ஆம் தேதியன்று மேயர் பதவியில் அமரும் மாணவி சுனந்தா, அன்றைய தினம் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.40 லட்சம் செலவில் சாலை அமைக்கும் திட்டத்தில் கையெழுத்திடுகிறார்//

 http://kalvi.vikatan.com/index.php?aid=1655#cmt241

செய்தி மேலே உள்ள சுட்டியில் வந்துள்ளது,. அங்கே போனால் முழுச் செய்தியையும் படித்துக் கொள்ளலாம்.


============================================================

முதல்வன் படத்தைப் பார்த்து இது போன்ற ஐடியாக்கள் தோன்றி இருக்கலாம். ஆனால் எல்லா ஊர்களிலும் மேயர் பதவி இல்லையே என்ன செய்யலாம் என்று மக்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கலாம்.  எப்படியாவது விளம்பரம் பெற்றே ஆக வேண்டிய நிலையில் யாராவது யோசித்துக் கொண்டிருக்கலாம். பதவி ஏற்ற பின்  அவர்கள் ஏதாவது எக்குத்தப்பாக முடிவெடுத்து ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் கூட இருக்கலாம். அந்த சிறுவர்கள் கூட முதல்வன் படம் பார்த்து இருக்கலாம் அல்லவா? 

அவர்களுக்கு மேயர் , சேர்மன் பதவிதான் கொடுக்க வேண்டும் என்றில்லை. ஷெரிஃப், நாட்டாமை போன்ற வழக்கொழிந்த பதவிகளைக் கூட கொடுக்கலாம்.  நாட்டாமை பதவியை  வைத்துக் கொண்டு  போட்டாவுக்கு போஸ் மட்டுமே கொடுக்கலாம்.

17 வயது மாணவருக்கு அந்தப் பதவிகள் கொடுக்க முடியுமா?  கௌரவ பதவியாகக் கொடுத்த பதவியை கொண்டு உத்தரவுகள் போட முடியுமா? என்ற கேள்விகளை நாம் கேட்க வேண்டாம்.


பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் அரசியலுக்கு வருவதும் நிர்வாகப் பதவிகளுக்கு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் நல்லதுதான்.




ஆனால் வெறுமனே இது போன்ற ஒரு பதவியில் சிறு குழந்தைகளை தூக்கி வைப்பது தேவையில்லாமல் அவர்களுக்குள் ஒரு அதிர்வினை ஏற்படுத்தி  எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது.

ப்ளஸ் டூ படிப்பில் முதல் மதிப்பெண் எடுப்பதால் அடுத்த கட்ட கல்வியில் வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதில் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அவ்வளவுதான். மேற்கொண்டு அவர் பார்க்கவேண்டிய களங்கள் நிறைய உள்ளன. அதற்குள் இதுபோன்ற கிரீடஙக்ள் அவர்களுக்கு முள் கிரீடங்கள் ஆகி விடக் கூடாது.




Wednesday, May 22, 2013

எதிர்பார்த்தபடியே எதிர்பாராத நிகழ்வுகள் (ipl)

IPL-2 கிரிக்கெட் போட்டிகள். இன்றும்கூட இந்திய மக்களின் விடுமுறைக் கொண்டாட்டங்களில் முதலிடம் வகிக்கிறது. (தேர்தல் என்பது நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிகழ்வாக இருப்பதால் அதை பொழுதுபோக்கு செய்திகளில் சேர்க்கக் கூடாது)

வெற்றிகரமான கிரிக்கெட் போட்டிகளில் சுற்று ஆட்டங்களில் பாதி ஆட்டங்களுக்கு மேல் முடிந்த நிலையில் மேற்கொண்டு என்ன நடக்கப் போகிறது? இன்றய சூழலில் ஹைதராபாத் அணி முண்ணனியில் இருக்கிறார்கள். அந்த அணியில் சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் செய்துள்ள ஒரே மாற்றம் தலமை மாற்றமே..,

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆ.......டிக் கொண்டு இருக்கிறார்கள். இனிவரும் ஆட்டங்களில் இவர்கள் சூப்பராய் ஆட ஆரம்பித்துவிடுவார்கள். அரையிறுதியிருதிக்கு தகுதி பெற ஆறு அல்லது ஏழு அணிகள் ஏற்க்குறைய சமநிலையில் இருந்து சின்ன வித்தியாசங்களுடன் நான்கு அணிகள் உள்ளே நுழைவார்கள்.

ஒரு ஆட்டம் அதிகம் எதிர்பார்க்கப் படுவதாகவும் இன்னொரு ஆட்டம் யானைக்கும் பானைக்குமான போட்டியாக எதிர்ப்பார்க்கப் படும். இறுதி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப் படும் ஆட்டம் ஒரு தலை பட்சமாக முடியும்.
==============================================================
கைமாறும் கிரிக்கெட் அணிகள் சில பரபரப்பான வெற்றிகளைப் பெறுவார்கள். அப்போதுதான் புதிதாக வாங்க நினைக்கும் உரிமையாளர் சற்று அதிகப் பணம் கொடுத்து வாங்குவார்கள்.
=============================================================
போட்டித்தொடர் முடிந்த பின்னர் சில ஆட்டக்காரர்களின் தலைமை பண்பு சிறப்பாக பேசப் படும். அப்போது அவர்களை இந்திய 20-20 அணிக்கு தலைமையாக்கச் சொல்லுவார்கள். அப்பொதுதான் டோனியின் சுமை குறையும் என்பார்கள். குறிப்பிட்ட நபர் தலைவராக இருக்கும் அணிக்கு விளம்பரங்கள் அதிகம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதால் இந்தக் குரல் ஓங்கி ஒலிக்க வாய்ப்பு இருக்கிறது.

==========================================================

இந்தப் போட்டியின் பணச்சுழற்சியைப் பார்த்தால் மற்ற நாடுகளுக்கு வயிற்றில் புளியைக்கரைக்கும் வாய்ப்பு இருப்பதாலும் பல வெற்றிகள், எதிர்ப்பார்த்தபடியே அமைவதாலும் , எதிர்பார்த்தபடியே சற்றும் எதிர்ப்பாராதா முடிவுகளை ஏற்படுத்துவதாலும் முடிவுகள் ஏற்கன்வே நிர்ணயிக்கப் படுவதாக வெளிநாட்டவர்களால் பேசப் படும் வாய்ப்புகள் கூட இருக்கின்றன.

=========================================================

ம் .. நடக்கட்டும்  (இதுவரைக்கும் முதல் பதிப்பில் எழுதியது)

=========================================

பாருங்க தல..,  போன வருஷம் எழுதியது இந்த வருஷத்துக்கும் அப்படியே பொருந்துகிறது. குறிப்பாக சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் பற்றிய கருத்துக்கள் ( இு முபிப்பில்ோட்டு)
============================================ 
இன்னும் எத்ை வம் ஆனாலும் அப்பியே பொரந்தும் போல இருகே! (இு ஒரு மீள்ீள்பிப்பு)

Monday, May 20, 2013

விகடன் செய்தது சரியா?



இது வழக்கமா யூ ட்யூப் பக்கத்தில் காலங்காலமா நடத்திட்டு வர ஆராய்ச்சிய ஆனந்த விகடன் தனது ஆராய்ச்சியாகப் போட்டு வெளியிட்டு இருக்கிறார்கள். தீம் ஏற்கனவே புழக்கத்தில் இருந்தாலும் கூட இந்தக் கலக்சன் ஆனந்த விகடன்காரர்களுடையதுதான்.

இந்தக் காலத்துக்குச் சரிதான். அந்தக் காலத்தில் நெட்டும் கிடையாது. திருட்டு சிடியும் கிடையாது, அப்ப எல்லாம் இந்திப் பாட்டு கூட நம்ம கிராமங்களுக்கு கிடைச்சு இருக்குமான்னு தெரியல. அந்த நேரத்தில உலக மொழிகள்ல இருக்கும் பாடல்களை நமக்குக் கொடுத்த இசையமைப்பாளர்களை கேலி செய்வது என்னால் ஏற்க முடியவில்லை.

2.52ல் வரும் இந்திப் பாடலை நாம் யாராவது கேட்டது உண்டா? அதைத் தமிழ்படுத்தி நம்மை ரசிக்க வைத்த இசையமைப்பாளர் என்னைப் பொறுத்தவரை ஒரு தெய்வம்(தெனாலி பாணியில்)

3.30ல் வரும் பொண்ணு ஒண்ணு நான் பார்த்த்தேன் மற்றும் அதன் ஒரிஜினல் அதுவே 3.39 மற்றும் 3.48 குறிப்பாக 3,48ஐ ஒருமுறைக்கு இருமுறை நீங்கள் ரசித்தே ஆகவேண்டும்

7.55ல் வரும் என்ன விலை யழகே பாடல் போலவே இருக்கும் மற்றும் பிரபல தமிழ் பழைய பாடல் . அதைத் தொடர்ந்து வரும் புதிய மற்றும் பழைய தமிழ் பாடல் தொடர்புகள்.

8.36ல் வரும் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது பாடலின் முன்னோடியக் கேட்டு மாரடைப்பு ஏற்பட்டால்  8.52ல் வரும் ரெண்டக்கா ரெண்டக்கா வின் முன்னோடியைக் கேட்டால் நெஞ்சே வெடித்து விடலாம். 9.05ல் வரும் வொய் திஸ் கொலவெறியின் ஒப்பீட்டைப் பார்த்தால் உடலில் எல்லா உறுப்புகளே வெடித்துப் போகும் வாய்ப்பு இருக்கிறது.

டிஸ்கி:  கடைசியா விகடனார் சொல்லும் அறிவு ஜீவி, ஆக்ஸிடண்ட் கதையை கண்டிப்பாக கேட்டே தீர வேண்டும்.

கொசுறு: தேவாவிற்கு அறுவை சிகிச்சை நிபுநர் பட்டம் கொடுத்து கவுரவித்து இருக்கிறார்களார். அவர்கள் விட்டு விட்ட ஒரு செய்தி. தேவாவின் பெயரே கூட அந்தக் கால இசையமைப்பாளரான வேதாவின் உல்டாதான். இந்த வேதா அவர்க்ள் அந்தக் கால இந்திப் பாடல்களை தமிழ்படுத்துவதில் வல்லவர்.


===========================================================

இந்தப் பாட்டு மேலே இருந்த பிட்டுல இருந்து தேடி பிடிச்சது.  தமிழ் பாட்ட விட  நல்லாயிருக்க மாதிரி பட்டது. பார்த்தா இது ஷோலேவுக்கும் முன்னாடியே வந்தது போல. சும்மா கும்முன்னு இருக்கு 


Sunday, May 19, 2013

தப்புமா? தப்பாதா?

The 1000 year-old Naganathasamy temple built by Rajendra Cholan. Photo: B. Velankanni Raj 
இப்படியும் ஒரு கோயில்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வீர நாராயண புரத்தில் உள்ள சிவன் கோயில்தான் இது. கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது போன்ற கோவில்களை, புராதாணக் காலக் கட்டிடங்களைக் காக்க வேண்டியது நம் கடமை.  
 http://www.thehindu.com/news/national/tamil-nadu/1000yearold-cholaera-temple-facing-threat-of-demolition/article4718623.ece#comments   செய்தியின் படி இந்தக் கோவில் ராஜராஜ சோழன் தன் மனைவியரோடு வந்து வணங்கியது.,   தஞ்சாவூர் விக்கரவாண்டி நாற்கரச் சாலையின் காரணமாக  இந்தக் கோவில் அழிக்கப் படலாம் என்ற எண்ணம் இப்போது தோன்றியுள்ளது. அந்த ஊர் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்திருக்கிறார்கள்.  இப்போதைய கும்ப கோணத்திற்கு அருகில் உள்ள மாணம்பாடி கிராமத்தில் உள்ள இந்தக் கோயில் கடந்த 30 ஆண்டுகளாக மாநிலத்தின் தொல்பொருள் துறையின் கண்காணிப்பில் உள்ளதாம்.
 


முதல்வர் மாதிரி பெரிய பதவியில் இருப்பவர்கள் யாராவது இதில் தலையிட்டு ஏதாவது செய்தால் இந்தக் கோவில் தப்ப வாய்ப்பு இருக்கிறது.

Saturday, May 18, 2013

டோனி! எனக்கு சோடா வேண்டும்



 வியாபார ரீதியான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் வகிப்பது நம்ம ஐ.பி.எல் தான்.

அதன் வியாபாரத் தன்மையிலெயே சில பல சந்தேகங்கள் இருக்கின்றன்.

1. ஏற்கன்வே சச்சின், டோனி போன்றவர்கள் சந்தையில் பல விளம்பரங்களை கையில் வைத்திருக்கும்போது சில பல சிறுவர்களால் அந்த பொருட்களின் மார்க்கெட் கூடுமா? 

2.மேலே உள்ள சிலபல சீறுடைகளில் சிறு சிறு எழுத்துகளில் எழுதியிருக்கும் பொருட்களுக்கு அப்படி எழுதியதால் வியாபாரம் பெருக வாய்ப்பு இருக்கிறதா?
3.ஐ.பி.எல் போட்டிக்கு பல கோடி கொடுத்து பெப்ஸி என்று பெயர் வைத்திருப்பதால் கோக்கிற்கு ஏதாவது நஷ்டம் இருக்குமா?

4.ஷாரூக் போன்று ஒரு பெரிய பிஸினஸ் உள்ள ஒரு நடிகர் இரண்டுமாதம் கிரிக்கெட்டில் சுற்றுவதால்  ஷாருக் கானுக்கு லாபமா நஷ்டமா?  இதே கேள்வி  ப்ரீதி, ஷில்பா வைக்கூட கேட்கலாம். ஆனால் அவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்பதால் அந்த கேள்வி இல்லை

5.சின்ன அம்பானிகளும் கிரிக்கெட் கிரவுண்டில் தனி ஷோபா போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களே.., அவர்களுக்கு அவ்வளவு நேரம் வெட்டியாக இருக்கிறதா? அல்லது அவர்களுக்கு கிரிக்கெட் கிரவுண்டில் இருப்பதால்தான் லாபம் அதிகமா?

6. பூனே அணி அதிக போட்டிகளில் தோற்றதால் கண்ட லாபத்திற்கும். சென்னை அணி வென்றுகொண்டிருப்பதால் அடையும் லாபத்திற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குமா?

7.கங்கூலி போன்ற ஒரு மூத்த முக்கிய வீரரை சும்மா உட்கார வைத்ததற்கு ஏன் கிரிக்கெட் உலகம் பொங்கி எழவில்லை.

8.ரிக்கி பாண்டிங் போன்ற ஒரு மாபெரும் காப்டனுக்கு இந்தியாவில் உள்ள பி தர வீரர் அளவு சம்பளம் கொடுத்து மரியாதை செய்ய என்ன காரணம்? 

9.லட்சுமி கரமான சில நடிகைகள் கிரிக்கெட் முக்கிய நபர்களுக்கு ஏற்கனவே நண்பர்களாக இருக்கிறார்களே.., அவர்களோடு இனிப் பேசிக் கொண்டிருந்தால்கூட சிபிஐ தவறாக நோக்குமா?

10.பெப்சி, கோக் போன்ற பொருட்கள் குக்கிராம பெட்டிக்களில்கூட கிடைக்கும்ப்போது, டோனி விளம்பரப் படுத்தும் கிளப் சோடா மட்டும் ஏன்  டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் கூட கிடைப்பதில்லை?

Thursday, May 16, 2013

ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று நான் நம்புகிறேன்

செய்தி Three Rajasthan Royals players, S. Sreesanth, Ajit Chandila and Ankit Chavan, were detained early on Thursday morning by the Delhi police for allegations of spot-fixing.

The BCCI has swiftly moved in to suspend all three cricketers pending investigation.

Seven bookies in Mumbai and three in Delhi have also been detained along with the three.

AUSTRALIAN PLAYER UNDER SCANNER

The Delhi commissioner of police Neeraj Kumar said “more arrests are likely”. He did not mention if the arrests would be of players, administrators or bookies.  

http://cricket.yahoo.com/news/sreesanth--chandila--chavan-arrested-by-delhi-police-052841701.html 

போன வருஷம் கூட இந்த மாதிரி ஒன்னு ரெண்டு பேர  மாட்ச் ஃபிக்சிங்ல போலீஸ் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. இந்த முறையும் கொஞ்ச பேர கைது பண்ணி யிருக்காங்க.  

நாங்க எப்போதுமே ஐபில் பார்க்கும்போது ரஜினி படம் மாதிரித்தான் பார்ப்போம். ஜாலியா இருக்கும். ரஜினி எவ்வளவு அடிவாங்குனாலும் அவமானப் பட்டாலும் ரஜினிதான் ஜெயிப்பார். ரஜினி தோற்கிற மாதிரி இருந்தா கிளைமாக்ஸில ஜெயிக்கறது இன்னொரு ரஜினியாத்தான் கதை அமைந்திருக்கும். ஜாலியா பார்ப்போம்.  ரஜினி அடிவாங்கறார் என்பதற்காக நாங்கள் கலங்கியதே இல்லை.  அவமானப் படுகிறாரே என்று அதிர்ந்ததே இல்லை. கடைசில் எஸ் பி முத்துராமனும், கே எஸ் ரவிக்குமாரும் அவரை ஜெயிக்க வைத்து விடுவார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு எப்பவும் உண்டு. 


போன வருஷம் ஐ.பி.எல்ல அரெஸ்ட் ஆன பசங்களால எந்த மேட்ச் ஆவது அவஙக் ஜெயிச்சிருக்காங்களான்னு பார்த்தா ஒன்னும் தெரியல.  அவங்க யாருன்னே தெரியல. ஒரு அசாருதீன், ஒரு ஜடேஜா ரேஞ்சுக்கு பேப்பர் ந்யூஸ்  போட்டு எல்லாரும் பார்த்தாங்க. இந்த வருஷம் அரெஸ்ட் ஆன ஆட்கள் பேர பார்த்தா அதுல ஸ்ரீசாந்த பேர் இருக்கு. ஸ்ரீசார்ந்த பேட்டிங் பண்ணியோ இல்ல பந்து வீசியோ அவரால ஒரு டீம் ஜெயிச்சு இருக்கா?   இல்ல அவர் போட்ட பந்துகள யாராவது விலாசோ விலாசுன்னு விலாசி ஜெயிச்சு இருகாங்களா? (அப்படி ஒரு ஓவர் விலாசின பிறகும் அவருக்கும் ஓவர் த ந்திருந்தா அவரோட கேப்டனும், அணி உரிமையாளரும் காரணமாகத்தான் இருந்திருக்கணும்).


ஆனா ஸ்ரீசாந்த் அப்படி பட்டவர் அல்ல.  அவரால் அவுட் ஆக்கும் வகையில் அல்ல. அடித்துவிளையாடும் வகையில்கூட பந்து வீசத் தெரியாது. ஒரு அப்பிராணியின் மீது கேஸ் போட்டு உள்ளதாகவே தோன்றுகிறது.  சிங்கம் பாணி திரைப்படங்களில் அனுப்பப்படும் தோரணை தெரிகிறது. 

ஆனால் ஸ்ரீசாந்த் உறவினர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஏற்கனவே கொச்சி அணி காணாமல் போனதிலேயே அரபிக் கரையோர மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

Monday, May 13, 2013

நான் செய்வது தவறாகக் கூட இருக்கலாம்.

டிஸ்கி:-  இது தவறாக இருக்கலாம். சட்டப் படி தவறாக இருந்தால் கூட சம்பந்தப் பட்டவர்களின் விருப்பப் படி இது சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன். கீழே உள்ள படம் ஃபேஸ்புக்கில் பார்த்தது. இதைப் பலரிடமும் பகிரவேண்டும் என்று நினைப்பதால் இங்கே பகிருகிறேன். படத்தை தனியே சன்னலில் கிளிக் செய்து பிரமாண்டத்தை அனுபவித்து மகிழுங்கள்.
https://www.facebook.com/photo.php?fbid=345073098927907&set=a.140107089424510.21102.140092109426008

தளத்தில் பார்த்தது. இந்தக் காட்சிக்கான விளக்கம்.

கற்பனை புகைப்படம் : அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்
முதலாவது பாகம் - புது வெள்ளம்

காட்சி 1 - பரந்து விரிந்த வீரநாராயண ஏரியின்
அழகை ரசித்தவாறே தென்கோடிக்கு வந்த
வந்தியத்தேவன் கண்ட
காட்சி கற்பனையில்....,  


===========================================================

கல்கியில் எழுத்து வடிவில்  http://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D

===================================================================

This image is a reconstruction of the first few paragraphs of Ponniyin Selvan

Kalki Fans, Don't Miss the relevant paragraphs given below
Those who are not fans of Kalki, you will become a fan, if you read this

ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது.

காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் 'வீராணத்து ஏரி' என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது.

நம் மூதாதையர்கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள்? தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா?

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம்.

வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன.

உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான்.ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.

ஆகா! இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எத்தனை அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும்? வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார்? தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா? போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா? அதனால் 'யானை மேல் துஞ்சிய தேவர்' எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா?

இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான்! அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வபக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பூரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.

இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளாமரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் வெள்ளம் வந்து ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது.

இந்த மனோகரமான தோற்றத்தின் இனிமையையும் குதூகலத்தையும் அதிகப்படுத்தும்படியான இன்னும் சில காட்சிகளை வந்தியத்தேவன் அங்கே கண்டான்.

அன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா? பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள்.

சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வெளியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள்.
"வடவாறு பொங்கி வருது
வந்து பாருங்கள், பள்ளியரே!
வெள்ளாறு விரைந்து வருது
வேடிக்கை பாருங்கள், தோழியரே!
காவேரி புரண்டு வருது
காண வாருங்கள், பாங்கியரே!"
என்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத்தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாகப் பாய்ந்தன.

 ==================================================================

மேலே உள்ள படத்தை மேற்கண்ட விளக்கங்களுடன்  https://www.facebook.com/photo.php?fbid=10151604510794828&set=np.65751321.1028319651&type=1&ref=notif&notif_t=close_friend_activity&theater 

பகிர நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

=================================================================

இவ்வளவு பெரிய காட்சியை படத்தில் கொண்டுவந்திருக்கும் போது, அதுவும் பிரம்மாண்டத்தை உணர்த்துகிறது. என்னும் போது பொன்னியின் செல்வன் திரைப்படமாய் வந்து நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு வளர்க்கிறது.  ஒரு வேளை கோச்சடையான் வென்றால் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்தே தீரும்.

Sunday, May 12, 2013

MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

தமிழ்நாட்டில் தமிழ் மண்ணில் கொண்டாடும் விழாக்கள் பல. அதில் பொங்கல் தனிச் சிறப்பு வாய்ந்தது. அதில் மாட்டுப் பொங்கல் தனித்தன்மை வாய்ந்தது.

விவசாயத்திற்கு பலவிதங்களில் மாடுகளின் பங்கு முக்கியமானது. காளைகள் உழுவதற்கு உதவுகின்றன. வண்டிகளை இழுப்பதன் மூலம் பயணத்திற்கும் சரக்கு இடமாற்றத்திற்கும் மிகவும் உதவுகின்றன. பல எந்திரங்களும் எந்திரங்களின் மூலம் இயங்கும் வாகனங்கள் உபயோகத்தில் இருந்தாலும் காளைகளின் பங்கு முக்கியமானது. பசுக்களும் சளைத்தவை அல்ல. பால் பொருட்கள் இல்லாமல் நம்மால் நமது வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாடுபோல உழைப்பு என்பதே விசுவாததிற்கும் கடின உழைப்புக்கும் கூறப் படும் வார்த்தையாக இருக்கிறது.

அவ்வளவு கடுமையாக உழைக்கும் மாட்டுக்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது. அன்று அதிகாலையிலேயே மாட்டைக் குளிப்பாட்டி விடுவார்கள். அன்றைய தினம் விரும்பிய வண்ணம் மாட்டுக்கு மேய்ச்சல் இருக்கும். விரும்பிய வண்ணம் வண்ணங்கள் தீட்டி, கொம்புகள் அலங்கரித்து சில இடங்களில் துணிகள் கூட அணிவித்து மகிழ்வார்கள்.

மாலைப் பொழுதில் பொங்கல்வைத்து அதனை மாட்டுக்கு ஊட்டி அழகு பார்த்து பின்னரே குடும்பத்தினர் உண்டுமகிழ்வார்கள்.

குறிப்பாக அன்றைய தினம் மாட்டுக்கு எந்த வேலையும் கொடுக்க மாட்டார்கள்.

========================================================================

குடும்பத்திற்காக கடினமாக உழைக்கும் இன்னொரு ஜீவன் உண்டு. அவர்தான் அன்னை. அவர் எவ்வள்வு பெரிய நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் குடும்பத்தின் அடிப்படை வேலைகள் அனைத்தையும் செய்வார். குழந்தை வளர்ப்பில் அவரது பங்கு மிக முக்கியமானது.

வெள்ளையர் கண்டுபிடித்த MOTHER'S DAY அன்று அன்னையருக்கு அனைவரும் மரியாதை செலுத்துவார்களாம்.
அன்றும் கூட இனிப்புகளையும் பலகாரங்களையும் செய்து கொண்டாடினால் அதையும் அன்னைதான் செய்ய வேண்டியிருக்கிறது. தாயாருக்கு மட்டும் புத்தாடை என்பதை அந்த தாயாரே விரும்புவதில்லை.


எனவே அன்னையர் தினத்தை அனுதினமும் கொண்டாடி அன்னையரைப் போற்றுவோம். (அதற்காக இன்று கொண்டாடாமல் இருந்து விடவே வேண்டாம். அவருக்கு ஓய்வு கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம்). அன்னை என்றால் உங்களைப் பெற்ற அன்னையை மட்டுமல்ல.
உங்கள் குழந்தையைப் பெற்ற அன்னையையும் தான்.

=======================================================================
இவரும் கூட அம்மாதான்




=================================================================


சில குடும்பங்களில் அம்மா செய்யும் வேலைகளுக்காகத்தான் வேலைக்காரி வைத்திருக்கிறார்கள். பல குடும்பங்களில் அம்மாதான் அந்த வேலைகளைச் செய்கிறார்.

நாளைய தினம் பதிவர்கள் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய கலந்துரையாடலுக்குச் செல்லப் போவதால் இந்தப் பதிவினை இன்றே வெளியிட்டு உள்ளேன்.

குழந்தைகள் மீதான வன்முறைபற்றி நான் எழுதிய இந்தப் பதிவில்

பின்னூட்டத்தில்

"குழந்தையை வேலைக்காரி மாதிரி நடத்தாதே" என்று சொல்லும்போதே, வேலைக்காரிக்கும், வீட்டில் சின்னச்சின்ன வேலைகள் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் எளிதில் புரிந்துவிடும். இதில் நீங்கள் குழம்பிக்கொள்ள வேண்டியதில்லை.
என்று நண்பர் குறிப்பிட்டிருந்தார்.

எனது பதிலில்



பல நேரங்களில் சின்ன சின்னவேலைகளுக்குக் கூட வேலையாட்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். நம்வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளும் நாம் செய்ய வேண்டிய வேலைகள்தான். இதில் வேலைக்காரி மாதிரி நடத்தாதே. என்ற வாக்கியத்தின் பொருளைக் கூற முடியுமா? வேலைக்காரர்கள் என்பவர்கள் அடிமைகள் அல்ல. உங்கள் வேலையையைச் செய்ய உங்கள் உடலும் நேரமும் இடம் கொடுக்காததால் விலை கொடுத்து வேலையை வாங்குகிறோம். அப்படிப்பார்த்தால் உங்களைவிட வேலைக்காரர்களுக்கு சுயமரியாதை அதிகமாக இருக்கவேண்டும். வேலைக்காரர்களைப் போல் குழந்தையை நடத்தாதே என்ற வாசகம் எழும்போதே வேலைக்காரர்களையும் குழந்தைகளையும் அடிமையாக நடத்துவதாக பொருள்படும் அல்லது உங்கள் வேலையை மற்றவர்கள் மேல் திணிக்கும் கொடூர பழக்கத்திற்கு குழந்தையை அடிமைப் படுத்துவதாகப் பொருள்படாதா......


மேலும் இது தொடர்பான விவாதங்களைப் படிக்க இங்கே செல்லவும்

கலந்துரையாடலுக்குச் செல்லும் முன் இது போல இன்னும் பல கேள்விகளுடன் செல்லுங்கள். தெளிவு படுத்திக் கொண்டுவாருங்கள்

டிஸ்கி;- மீள்பதிவுதான். முதன்முதலில் வெளிவந்த தேதியறிய முதல் பின்னூட்டம் பார்க்கவும்

Saturday, May 11, 2013

தேவையா 11ம் வகுப்பு?

12 வகுப்பு ரிசல்ட் வந்த பிறகு பொதுவாக எழும் விமர்சனம். 11ம் வகுப்பு பாடம் சொல்லித் தராமல் நேரடியாக் 12ம் வகுப்பு பாடங்களைச் சொல்லித் தருவதாக எல்லோரும் விமர்சித்து வருகிறார்கள். நாங்கள் படிக்கும்போதும் இதே போன்று சொல்லுவார்கள். என்னோட சந்தேகம் என்னன்னா   11ம் வகுப்பு பாடம் சொல்லித் தராமல் நேரடியாக 12ம் வகுப்பு பாடம் எடுக்க முடியும் அதுவும் மாணவர்களுக்கு புரியும் அப்படின்னா அந்த 11ம் வகுப்பு பாடம் எதற்காக? 

அப்படி சில பாடங்களை எதற்காக கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டுப் பாடமும் அடுத்த ஆண்டிற்காக பாடத்திற்கு அடிப்படையாக இருந்தால்தானே அந்த பாடத்திற்கு ஒரு மரியாதை இருக்கும்? அதை விடுத்துவிட்டு  அங்க 12ம் வகுப்புப் பாடம் சொல்லியே தருவதில்லை என்று புலம்புவதோ அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யச் சொல்லி போராட்டம் நடத்துவதோ வெட்டி வேலை.

===========================================
உடுமலைப் பேட்டைக்கு அருகே உள்ள ஒரு பள்ளியின் விளம்பரம் ஒன்று இன்றைய தினந்தந்தியில் வந்திருந்தது. மாணவர்கள் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதம், பன்னிரெண்டாம் வகுப்பில் அவரது மதிப்பெண் சதவீதம் ஆகியவை பட்டியலிட்டு இருந்தார்கள். நூறுசதவீதம் தேர்ச்சி தரும் பள்ளி அது. பத்தாம் வகுப்பில் 60% கீழே எடுத்த பல மாணவர்களும்  12ல் 80%க்கும் மேல் எடுத்ததாக விளம்பரப் படுத்தி இருந்தார்கள். வாழ்க அந்தப் பள்ளி


தங்கள் பள்ளியில் இத்த்னை பேர் 1150க்கு மேல் எடுத்ததாக தம்பட்டம் அடிக்கும் பள்ளிக்ள் அதே மாணவர்கள் பத்தாம் வகுப்பில் எத்தனை சதவீதம் எடுத்தனர். தங்கள் பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை விளம்பரம்படுத்தி மாணவர்களை எந்த அளவு முன்னேறி இருக்கிறோம் என்று காட்டுவார்களா? அந்த தைரியம், நேர்மை அந்தப் பள்ளிகளுக்கு இருக்கிறதா?

Friday, May 10, 2013

கர்நாடகத் தேர்தலும் +2 முடிவும்

கர்நாடக சட்ட சபை ரிசல்ட் வந்த சூட்டோடு ப்ளஸ் 2 ரிசல்ட் வந்துவிட்டது. கர்நாட்க ரிசல்ட் வந்த உடனே பல இடுகைகள் வந்து கொண்டிருக்கின்றன. நாமும் இடுகை போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்த போது ப்ளஸ் 2 ரிசல்ட்டும் வந்து விட்டது. சரி இதற்காவது ஏதாவது எழுதியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது ஒரு வடிவம் கிடைத்தது. இரண்டையும் எழுதிவிடுவோம் என்று யோசித்துப் பார்த்தால் கடைசியில் பல் ஒற்றுமைகள் இரண்டிலும் இருக்கின்றன.

  • ஒண்ணுமே பண்ணாட்டியும் அன்னை சொன்னதக் கேட்டால் ஜெயிக்கலாம்.
  • பூ பின்னாடி சுத்தற விட கையை நம்பலாம்.
  • இன்னைக்கு ஜெயிச்சவங்க அடுத்த அஞ்சுவருஷம் ஆடலாம். ஆனா அதுக்கு அப்புறம் அப்படிங்கறத இந்த அஞ்சு வருஷத்தில கரெக்ட் பண்ணி வச்சுக்கணும்.
  • பப்ளிக்கா  @#*%  படம் பார்த்தா கண்டிப்பா ஆப்புதான்.
  •  
  • தோத்ததுக்காக கவலைப் பட வேண்டியதே இல்ல.
  •  
  • ஊருக்கே புடிக்காத  காலேஜ், கோர்ஸ், கட்சி உங்க வீட்டுக்கு பிடிச்சு போகலாம்.
  • நாமே நம்ம ஆள செலக்ட் பண்ணி வெச்சிருந்தா கூட ஜெயிச்சோட்டோமும் நாமே சொல்லிட கூடாது. அத அன்னை வாயால சொல்லச் சொல்லணும் அப்பத்தான் மரியாதை.
  •  
  • பவர் கட் ஒரு மேட்டரான்னே தெரியவில்லை.

 


ஆனாலும் சில விஷயங்களில் ப்ளஸ் டூ மாணவர்களைப் பார்த்து அரசியல் வாதிகள் பொறாமை படும் விஷ்யங்களும் இருக்கின்றன.

  • ப்ளஸ் டூ தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடியாக சிறப்புத் தேர்வு வைப்பது போல தேர்தலில் தோற்றவர்களுக்கும் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். 

  • அட்லீஸ்ட் மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதாவது சுலபமாக இருந்தால் பரவாயில்லை.

  • எந்த எந்த தொகுதியில் தோத்தமோ அந்த தொகுதிக்கு மட்டும் சிறப்புத் தேர்தல் வைத்தால் சந்தோஷப் படுவார்கள்.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails