Sunday, May 26, 2013

IPL இறுதிப் போட்டி - சடங்கு?

ஒரு பரப்ப்பான சூழலில் ஐபிஎல் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. இது ஒரு சடங்காகத்தான் இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். சடங்கு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. இவர் இங்கு நிற்க வேண்டும் இவர் இங்கு உட்கார வேண்டும். இவர் இந்த வசனம் சொன்னால் இவர் இந்த வசனம் சொல்ல வேண்டும் அப்படி இப்படியெல்லாம் சொல்லி நடக்கும். திருமணம், காதுகுத்து ,நல்லது , கெட்டது என எல்லா சம்பவங்களிலும் இப்படித்தான் சடங்கு நடக்கும்.  மரபுப்படி நடக்கும் திருமணம் என்று இல்லை. பதிவுத் திருமணம் கூட இன்னார் இன்னார் இப்படி இப்படி நடக்க வேண்டும் என்று சொல்லி அதுவும் ஒரு சடங்காகத்தான் அமையும். அது போல இன்று நடக்க இருக்கும் இறுதிச் சடங்கு எப்படி இருக்கும் என்பதான் ஒர்  எதிர்பார்ப்பு இது

  இது முழுக்க முழுக்க ஒரு கணிப்பு  மட்டுமே, அதுவும் இதுவரை நடந்த ஆட்டங்களில் அடிப்படையில் தோன்றிய ஒரு குத்து மதிப்பான கணிப்பு மட்டுமே இதற்கும் எந்த புக்கிகளுக்கும் ஒட்டு உறவு கிடையாது என்ப்தையும் இங்கு தெரிவிக்க கடமைப் பட்டிருக்கிறேன். இது இப்படித்தான் இருக்கும் என்பதாக யாரும் எதுவும் செய்ய முடியாது. 


முதலில் டாஸ் 
நினைத்த டாஸ்போடும் திறமைசாலி யாராவது உண்டா என்று தெரியவில்லை.   இருந்தாலும் கூட ஸ்ரீசாந்துக்கே அடித்து விளையாடும்படி பந்து போட பணம் கொடுத்ததாக பேசிக் கொள்ளும் நிலை இன்று இருப்பதால் டாஸ் ஜெயிக்கும் இடத்திலும் காசு விளையாடியதாக பேசினாலும் ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது.

 பொதுவாக இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயிப்பவர்கள் பேட்டிங்க் எடுக்கும் வாய்ப்புதான் அதிகம் இருக்கிறது.

சென்னை முதலில் பேட்டிங் என்றால்

சென்னை அணியின் ஸ்கோர்:
முதலில் சென்னை பேட்டிங் செய்யும் நிலை வந்தால் சென்னையின் ஸ்கோர் அதிகமாக 180ஐ ஒட்டி இருக்கலாம்.  ஹஸ்ஸியிடம் ஏற்கனவே ஆரஞ்சுத் தொப்பி இருப்பதால் அவர் இந்த ஆட்டத்தில் குறைவான ஸ்கோரில் அவுட் வாய்ப்பே இருக்கிறது. 

ஜூனியர் ஸ்ரீகாந்த் இந்த ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள்.  

ரெய்னா 47, 48, 49ல் அவுட் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. 

முரளி விஜய்  ( ஜூனியர் ஸ்ரீகாந்த் ஆடினால் ரெய்னா ) எப்போது மிக வேகமாக 4ம் 6ம் அடிக்கிறாரோ அடுத்து வேகமாக அவுட் ஆகும் வாய்ப்பு இருக்கிறது.  டோனி கடைசிக் கட்டத்தில் வேகமாக அடித்து ஆடி ரன்களை ஏற்றி விடுவார்.

மும்பை இண்டியன்ஸ்:
 சென்னை சூப்பர் கிங்ஸ் எவ்வளவு ரன் எடுத்தாலும் அதை சேஸ் செய்து வெற்றி பெறும் வாய்ப்பு மும்பை இண்டியன்ஸ்க்கு இருப்பதாகவே தோன்றுகிறது.  அதில்  தினேஸ் கார்த்திக்கின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.  சென்னை சூப்பர் கிங்ஸின் தோல்வியால் சென்னை ரசிகர்கள் வருத்தப்படாமல் இருக்க தினேஸ் கார்த்திக்கின் இந்த ஆட்டம் ஒரு மருந்தாக இருக்கும்.  ஸ்மித், ஹர்பஜன் சிங் ஆகியோர் இறுதிக் கட்ட அதிரடியில் இறங்கி  வெற்றி வாகை சூடுவார்கள்.  சுத்தமாக சென்னை அணியின் பந்து வீச்சு எடுபடாது.


மும்பை முதலில் பேட்டிங் செய்தால்


மும்பை அணி  120-140 எடுக்க வாய்ப்பு இருக்கிறது.  வழக்கம்போல் ப்ராவோ , ஜடேஜா ஆகியோர் அதிக விக்கெட்டுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

டோனி சில கேட்ச்கள் மற்றும் ரன் அவுட் செய்வார்.

சென்னை அணி கடைசி ஓவரில் பத்து பதினைந்து எடுக்க முயற்சித்து தோல்வி அடையும்.  ரெய்னா அல்லது ஹசி போராடுவார்கள்.  ஆனால் 18ம் ஓவரில் அவுட் ஆகி விடுவார்கள்.

ஆட்ட முடிவில் :  சச்சினை தூக்கி தலையில் வைத்துக் கொண்டு வீரர்கள் சுற்றும் வாய்ப்பு இருக்கிறது.  இந்த நிகழ்ச்சிக்கு நடிகைகள் வரும் வாய்ப்பு சுத்தமாக இல்லை என்றே நினைக்கிறேன்.  





8 comments:

  1. பல கணிப்புகளை கூறி இருக்கிறீர்களே. உங்களுக்கு புக்கிகளுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? :)

    ReplyDelete
    Replies
    1. நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்க்கிறேன். குரோன்யே, ஜடேஜா போன்றவர்களின் ஆட்டங்களை ஒன்று விடாமல் பார்த்து இருக்கிறேன்.

      Delete
  2. மும்பை 148, (கடைசி இரண்டு பந்துகளில் 12)

    ப்ராவோ 4 விக்கெட்

    டோனி 2 காட்ச்

    ReplyDelete
  3. சச்சினை தோளில் தூக்கியாச்சு

    ReplyDelete
  4. நெய்க்காரபட்டிக்கு “ஓ”

    ReplyDelete
  5. தங்களை விசாரணைக்கு அழைத்து செல்ல மும்பையிலிருந்து சி.பி.ஐ வருகிறது

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails