Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, September 3, 2016

காதல், களவு தமிழர் பண்பாடே 3.9.16

தனக்கு பிடித்த ஒருவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டு தன் வாழ்க்கையை தேடிச் செல்வது என்பது பழந்தமிழர் வாழ்க்கையில் இயல்பான ஒன்றே. அதற்கான ஓர் ஆதாரம் இதோ

கழிய காவி குற்றும் கடல
வெண் தலைப் புணரி ஆடியும் நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர
இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்
பரல் பாழ் படுப்பச் சென்றனள் மாதோ
செல் மழை தவழும் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.

குறிந்தொகை 116, கோடன் கொற்றனார் எழுதியது

கழிய – ஆறு கடலோடு சேருமிடம், மனைவி கணவனோடு சேருமிடமாகவும் கொள்ளலாம்

காவி –தாம்பூலத்தின் வண்ணம், மலர்கள் ,

குற்றும் – பறித்தும்,அரிசி குத்தும் செயலில் வரும் குத்தும் என்ற பொருளிலும் கொள்ளலாம்

கடல – கடலில் உள்ள,

வெண்டலைப் – வெள்ளைத் தலைகளையுடைய ,

புணரி ஆடியும் – அலைகளில் ஆடியும்,

நன்றே – மிக,

பிரிவு இல் ஆயம் – பிரிவு இல்லாத தோழியருடன்,

உரியது ஒன்று அயர – எல்லோருக்கும் உரிய விளையாட்டையும் புரிய,

இவ்வழிப் படுதலும் ஒல்லாள் – இந்த வழிக்கு ஒத்துக் இருக்காமல், 

அவ்வழி – அந்த வழியில்,

பரல்பாழ் படுப்பச் சென்றனள் – சிலம்பில் உள்ள கற்கள் பாழாக்கும்படி சென்று விட்டாள்.

மாதோ – அசை,

செல்மழை – செல்லும் மழைமேகங்கள்,

தவழும் சென்னி – தவழும் மலை உச்சி, 

விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே   – வானத்து அளவும் உயர்ந்த மலைகள் உள்ள நாட்டிற்கு (சென்று விட்டாள் )
.
இது ஒரு செவிலித் தாய் பாடியதாக உள்ள பாடல்.  இந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை படித்து இதில் உள்ள பொருட்களோடு உங்களுக்கு தோன்றும் பொருளையும் சேர்த்து படிக்கும்போது வெளிப்படும் உணர்வுகள் சுவையாக இருக்கும்.
 
இந்தப் பாடல் ஒரு செவிலித்தாயானவள் தனது மகள் காதலனோடு சென்று விட்டதை சொல்லும் வண்ணம் அமைந்த பாடல். இது போன்ற பாடல்களை பள்ளிகளிலேயே சொல்லித் தர ஆரம்பித்தால் காதல் எண்பது மிக இயல்பான ஒன்று என்பதை மிக ஆரம்பத்திலிருந்தே புகட்ட முடியும்.

Friday, May 27, 2011

இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு சவால்

நாட்டில் எல்லோரும் ரொம்ப சீரியஸா யோசனை பண்ணிட்டு இருக்காங்க. சீரியஸா அப்படிங்கறத தீவிரமான்னு எழுதலாமான்னு யோசித்து பார்த்தால் தப்பா அர்த்தம் வந்திருந்தும் நினைச்சால் ஒரு வேளை அதையே மக்கள்  அதுதான் சரி என்று சொல்லி விடுவார்கள் என்று சீரியஸா என்றே எழுதி விட்டேன்.

கொஞ்சம் மென்மையாக ஏதாவது எழுதலாம் என்று நினைத்த போது  சில மென்மையான பாடலகள் நினைவுக்கு வந்தன. அதில் ஒரு பாடல்தான் இது.



ஆனந்த தாகம்
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி
மலர்கொடி நேரம் பார்க்குமே
உரிமையில் என்மயில் ஆடும் முன்
ஆடும் முன்
உன்மழைக்காலம் போய்விடும்
ஆசைஆகிவிட நேர்ந்திடும்
நேருமோ....
ராத்திரி அலைகள் ஓயட்டும்
...
மூத்தவர் தலைகள் சாயட்டும்
..
தீபத்தின் விழிகள் மூடட்டும்
....
ஆடை கொடு
ஆளை விடு
தேகம் கொடு
போதும் விடு
தாகம் ஊருதே
......
( மௌனம்)

வலைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே
கன்னியின் மேனி வேர்க்குதே
ஏனம்மா
ஜன்னலின் கம்பி பார்க்குதே
அடராமா..,

பேசும் ஓசை இங்கு கேட்குதே கேட்குமோ
திரிகளை விரல்கள் தூண்டுதே தூண்டாதோ
அணைகளை வெள்ளம் தாண்டுதே
ஆசைநாகம் வந்து தீண்டுதே

நாணம் வந்து போகின்றது
தீயில் விஷம் சேர்கின்றது
கண்கள் மூடுதே
......(மௌனம்

அனைக்கையில் கவிக்குயில் ஊமை ஆனதே..



அதில் ஒரு பாடல்தான் இது. இந்தப் பாடல் என்ன ராகம் என்றெல்லாம் தெரியாது. ஆனால் இசைக் கோர்வைகள் தனித்தனியாக அசத்தும். அதைவிட  பாடகர்கள் பாடுவதே மிக அழகாக வேறொருவரால் இப்படிக் கொண்டுவர முடியுமா என்பது போல நேர்த்தியாக வடிவமைத்திருப்பார்கள். படத்தின் பெய்ர் தெரியவில்லை. வா இந்தப் பக்கம், ஒரு ஊதாப் பூ கண் சிமிட்டுகிறது என்றெல்லாம் யூ ட்யூப் பக்கம் பேசி இருப்பார்கள். இந்தப் பாடல் பெரும்பாலானவர்களுக்கு புதிதாக் கேட்பதாகவே அமைந்திருக்கும்.


=======================================================================







எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் , நிலாவே, நிலாவே

நான் காண்பதே உன் கோலமே அங்கும் இங்கும் எங்கும்
என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும் இன்றும் என்றும்

உள்ளத்தின் தீபம் உள்ளே என் ஜீவன் நீ நீ நீ

கல்லானவன் பூவாகிறேன் கண்ணேஏஏஏ உன்னைஐஐஐ எண்ணீஈஈஈ

எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான் நீ நாம்ம்ம்ம்



இந்தப் பாடல் பதின்ம வயதில் கேட்டு இருந்தாலும் சமீபத்தில்தான் பார்க்க நேர்ந்தது. கமல்ஹாசனை மனதில் நிறுத்தியே அசைப்போட்டு வந்த பாடல். கேட்ட்கும்போதெல்லாம் ஒரு உலுக்கு உலுக்கும்.  கதாநாயகி பாண்டியனின் போலீஸ் அக்காதான்.
இந்தப் பாடலை கேட்கும்போதே  அலைகள் ஆர்ப்பரிப்பதும்  உள்ளத்தில் புயல் அடிப்பதும்  படக்காட்சியைப் பார்க்காமலேயே நமது உள்ளத்தில் தோன்றும். அதுவும் அந்த கடைசி வரிகள்.  மீண்டும் ஒரு முறை இளைஞனாக மாறி களவு காதலைச் செய்யலாமா என்று தோன்ற வைக்கும். பாடலைப் பார்க்கும்போது குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 2.50க்கு பின் வரும் நடன அசைவுகள் க்க்க்கிரேட்.,

=======================================================================







வேண்டும் வேண்டும் உங்கள் உறவு,
வெண்பனி தென்றல் உள்ளவரையில்..,

தோன்றும் இளமை, தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்..,

நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
நாளை என்பதே மறந்திட வேண்டும்

நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்

கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடைமழையில் நான் நனைந்திட வேண்டும்

உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்

இந்தப் பாடல் சமீப கால அரசியலில் முதல் இரண்டு வரிகளுக்காக பாடப் பட்டு வந்த பாடல். சிவாஜி, ஸ்ரீபிரியா காதல் கோடிகளாக இந்தப் பாடலைப் பாடினாலும் கூட கதை தந்தை சிவாஜிக்கும், மகள் ஸ்ரீப்ரியாவுக்கும் இடையேயானது.  தாயார் ஸ்ரீப்ரியா மகளை பெற்றவுடன் ஓய்வு பெற்றுவிடுவார்.  படம் முடியும் போது இதே பாடலை மகள் தந்தையைப் பார்த்து பாடுவார் என்றால் படத்தின் புரட்சியைப் புரிந்துதான் ஆக வேண்டும். இந்தப் படத்தோடு  மூன்றாம் பிறை, மூன்று முகம் ஆகிய வெளியானதாக பேசிக் கொள்கிறார்கள்.

கடைசி வரியைப் பாடும்போது  ஸ்ரீப்பிரியாவின் கண்களே தனிக் கவிதையாக ஒளிரும்.


டிஸ்கி:- இந்தப் பாடல்களில் இளையராஜாவின் பணி கலந்துள்ள பாடல்களை  கேட்டதும் சொல்லுங்களேன்.

Monday, February 14, 2011

கா...த...ல...ர் தி..ன...ம்

சொல்லிவிடலாம்

ஆனால்

என்ன ஆனால்

சொன்னபிறகு

சொன்னபிறகு?

ஏற்க மறுத்தால்

மறுத்தால் மறக்க வேண்டியதுதானே!

மறக்கும் மனம் இருந்தால்

இருந்திருந்தால்?

நினைக்கவே முடியவில்லையே


மறப்பதை நினைக்கவே

முடியவில்லையே


பின்னர்

நினைத்ததை மறப்பது என்பது...,

தொடக்கம் என்றிருந்தால்


முடிவு என்றும்


ஒன்று இருக்குமே


முடிவே

வேண்டாம் என்றுதானே

சொல்லவே வேண்டாம் என்று

மனம் சொல்கிறது

ஒரு நாள்

பல நாட்கள்

ஒரு வாரம்

பல வாரங்கள்

ஒரு மாதம்

பல மாதங்கள்

பல மாதங்கள் தாண்டி

சில ஆண்டுகள் கூட

ஓடிவிட்டன

கல்லூரி வாழ்க்கைகூட

கடைசி நாளில் சொன்னால்கூட


^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^

சொல்லி இருந்தால் கூட...,





^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
சொன்னதால் என்ன நடந்தது என்பதை அறிய இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்.

Monday, August 9, 2010

????

உணர்வுகளை

உருக்கி


ஒன்ற நினைக்க

உருகி

உருகி

ஒன்றாய் ஆக


அதுவோ இதுவோ



என்றெல்லாம்

அவ்வளவுதான்

அவ்வள்வேதான்

என்றாகிப் போனது

Thursday, April 1, 2010

காதல் - ஏப்ரல் ஃபூல் 1.4.10

நாள் முழுக்க

யோசித்து

தாள் முழுக்க

வாசித்து

உள்ளத்தை

உள்ளபடி

உருக்கொடுத்து

உன்னிடம் கொடுக்க

ஆசையில்

பல கனவுகளை

பலவாறு உள்வாங்கி

எண்ணத்தை உள்ளடக்கி

என்னவளாய் ஆக்க

ஆக்கத்தை கொடுத்து

ஆசையை ஆக்க

காதலை

கருக்கொடுத்து

உருக்கொடுத்து

ஒருநாள்

கையில் கடிதம்

கொடுக்க

ஏப்ரல் ஃபூல் விளையாட்டுக்கு

காதல்தான் கிடைத்ததா?

என

கனிவாய்ச் சொல்லி

கலங்கடித்து சென்றாயே

கடிதம்

கள்ளத்தமாய் சிரிக்க

உள்ளம்

உடைந்த மடைபோல்

சிதறியதை அறிவாயா?

Thursday, March 4, 2010

காற்று வந்த கதை

                                                         என் கணவா!  இது கனவா?

வீடு திரும்பும் துணைவன்

விழுந்தான் படுக்கையில்

கால்கள் பிடித்து

கைகள் அமுக்கி

தோளோடு தோள் சேர்ந்து

என் துணைவன்

என்னவன் துணை

காலையில் எழுந்து

காஃபி கொடுத்து

அயர்ச்சி நீக்கி..,

ஆஹா..,

நல்லவனோ.., கெட்டவனோ

வாழ்க்கைப் பயணத்தை

வழி நடத்தி

தந்தையின் வழியின்


தனையனும் அறிவாளியாய்


அறிவுரைகள் சொல்லி


தொடர்கள் எழுதி



கடவுள்களைக் கடந்த


கடவுளாய் மாறி.................,




நெற்றிக் கண்ணின் வெப்பம்



சூரியன் கதிர்கள்..,


வண்டி பஞ்சர் ஆனது



காற்றுப் போனது

கடவுள் கனவு

கடவுளுக்கே வெளிச்சம்

Thursday, February 4, 2010

நான், நீ, அவள், அவன், கடிதம் 4.2.10

உனக்காக

வைத்திருந்த கடிதம்தான்

உன்னைச் சுற்றி

எழுதியதுதான்

கொடுக்காமல் விட்டதுதான்

கொடுக்க நினைத்ததுதான்

பயம் காரணமல்ல

வாய் சொன்னாலும்

மெய் மொழி

மெய்யாய் தெரிந்திடும்.

ஆனால்

மகன் எடுத்தபின்னால்

மகன் மகன்

எடுக்க போகும் காலத்தில்

மகனிடம் கிடைத்த

தருணத்தில்

தாயிடம் காட்ட

தனயன் ஓட

நல்லவேளை

நீயே அவளாய்

அமைந்து

வெட்கப்பட்டாய்

எல்லாம் இன்ப மய்ம்

Friday, January 15, 2010

கிரகம், கிரகஸ்தன்

சூரியனைச்

சுற்றும் கோள்கள்

குறிப்பிட்ட காலத்தில்

குறிப்பிட்ட பாதையில்

குறிப்பிட்ட வேகத்தில்

துளியும் மாறாமல்

பிசகாமல்

யோசித்து

தானும் குழம்பி

பிறரையும் குழப்பாமல்

தானுண்டு

தன்வேலையுண்டு

என்றிருக்கும்

கோள்களுக்கு இருக்கும்

பெயரை

மனைவிக்கு வைத்த

மாயம் என்ன?

காரணம் தெரியமால்

கழுத்தைச் சொறிந்த

கணங்கள் உண்டு.

கிரகம் பிடித்தால்

தெய்வதிற்கே

சக்தி கிடையாதாம்.

ந்டைசாத்தி

தெய்வத்தையே

பாதுகாக்க வேண்டுமாம்.

அப்ப சரி

அவ்வளவு

பயமும் பாதுகாப்பும்

தேவையாக

இருக்கக்கூடிய

ஒன்று

கிரகம்தான்.

அதாகப் பட்டது

நீயும்

கிரகஸ்தன் தான்

Monday, December 28, 2009

நீ அறிவாயா?

எழுதிய கடிதம்

உனக்கானது

எழுதிய எழுத்தும்

உனக்காகவே

வடித்திருக்கும்

உணர்வும்

உணக்காகவே..,

கடைசியில்

கையெழுத்திட்டவனும்

உனக்கானவனே..,


உண்மை ஒன்று

உனக்காக

சொல்ல நினைத்தது

ஆனால்

சொல்ல மறந்தது

உனக்காக

அமைந்தது

உனக்கானவனால்

கையெழுத்திடப் பட்டது

வழக்கம்போல்

அடுத்த காகிதத்தில்

அடுத்த உணர்வுகளுடன்

இப்போதெல்லாம்

குப்பைத் தொட்டிக்கு மட்டும்

Wednesday, December 23, 2009

இறைவனிடம் சில கேள்விகள்..

1.
வானத்தை மேலும்
பூமியைக் கீழும்
ஏன் படைத்தான்
இறைவா..

2.
தமிழை தமிழனும்
ஆங்கிலத்தை ஆங்கிலேயனும்
தாய்மொழியாக கொள்ளுமாறு
ஏன் படைத்தாய்
இறைவா...


3.
தலையில் ஏன்
முடி படைத்தாய்...
பின்னர்
வழுக்கை என்றோர்
நிலையை
ஏன் படைத்தாய்....


4.
காய்களை சைவம் என்றாய்
மாமிசத்தை அசைவம் என்றாய்
ஏன்..


5.
பெட்ரோலை
உலகிற்களித்தாய்.. ஆனால்
அதில்
டீசல், மண்ணெண்ணெய்
என்ற பிரிவுகளையும் படைத்தாய்.
ஏன் இறைவா.. ஏன்..?

ஓட்டுக்கள் வரவேற்கப் படுகின்றன

Wednesday, December 16, 2009

உலர்ந்த உணர்வுகள்

தெரியவில்லை

மீண்டும்

உன்னைப் பார்த்தபோது

உள்ளுக்குள் வந்த

உணர்வுகளின் தன்மை..,

கல்லூரி தேவதையாய்  நீ

உலவிய போது கூட

ரசிகனாய் கூட

இருந்த நினைவு இல்லை

நட்பாய் பழகிய

நாட்களில் கூட

நண்பனாய்  இருந்த

நினைவு இல்லை.

ஒரு பெண்ணாய்

உன்னைப் பார்த்த

நினைவு

இல்லவே இல்லை,


ஆனால்

இன்று

இப்படி ஒரு பெண்

என்னோடு

பல காலம்

பழகியிருக்கிறாள்

என்பதாக

தோன்றும்போது

காரணம்

புரியவில்லை,

எப்போது

என் கண்களுக்கு

பெண்ணானாய்?

ஒன்றும்

புரியவில்லை





உன்முகத்தின்

ஜொலிப்பு


நகைப்பின் தகைப்பு


பேச்சோடு அசையும்

கைவிரல்கள்

காற்றோடு

உலாவும்

முடிக் கற்றைகள்

உடலோடு இணைந்த

உடைகள்

நாம் பழகிய

நாட்களிலும்

இப்படித்தான்

இருந்தாயா?


ஏனோ தெரியவில்லை

உன்னைப்

பார்த்தபின்

உன்னை

மறந்து விட்டேன்.

புதிய

உணர்வை

உணர்ந்துகொண்டேன்

உணர்வின்

உணர்வு

உணர முடிந்தால்

நீயும் உணர்ந்திருப்பாய்

இல்லை

உணர்வில்

உலர்ந்திருப்பாய்

உணர்வுகள்

உலர்ந்திருந்தால்

உன்னைக்

கண்டிருக்கலாம்

உன்னைக்

கண்டதால்

உணர்வுகள்

உணர்த்தியிருக்கலாம்,

உண்மையைச்

சொன்னால்

உன்னை நான்

கண்டிருக்கவே கூடாது..,

Friday, October 16, 2009

விடுமுறை தின சிறப்பு இடுகை 17/18.10.2009

எண்ணைக் குளியல்
அழைத்தான்

வந்தாள்

சொன்னான்

செய்தாள்

அவள் வந்தால்

நிதானமா?

போனால்தான்

வேகமா?

எதற்கோ

அழைத்து

ஏனோ

போகச் சொல்லி...

அவளை என்ன

ராகுல் டிராவிட் என்று

நினைத்துக் கொண்டார்களா?

=====================================================================

சிறப்புப் படையல்

இது எத்தனையோ யுகங்கள் தாண்டி நடக்கும்வகையிலான கதை. அதனால் கொஞ்சம் கற்பனைக் குதிரையில் ஏறி இந்தக் கதையைப் படித்தல் நலமாக அமையும்.

அந்த யுகத்தில் நமது கதைக்கு இரண்டு நாடுகள் தேவைப் படுகின்றன. ஒரு நாட்டினை ஜி தேசம் எனவும், மற்றதை ஏதேசம் எனவும் அழைப்போம்.

தொழில்நுட்பங்கள் மிகக் கடுமையாக வளர்ந்துவிட்டிருந்த காலம் அது. மிக நவீன ஆயுதங்கள் போர்களத்தில் பயன்படுத்தப் பட்டுவந்தன. மனித உடலிளேயே  ஆயுதங்களை இயக்கும் மென்பொருட்களை இனைத்திருந்தனர்.   அதற்கான தனி தொழிற்நுட்பப் பிரிவு ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டுவந்திருந்தது.

ஏதேசத்தின் தலைவன் திருவாளர் எம்.  பலபல போர்களை ஜிதேசத்தின் மீது பல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார். இதனால் மனம் வெறுத்துப் போன ஜிதேசத்தவர்களின் உயர்மட்டக்குழுவினர் அதைப் பற்றிய ஆலோசனைகளை செய்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே ஜிதேசத்தவர்கள்  ஏதேசத்தவர்களை ஏமாற்றி அழியாவண்ணம் ஒருமென்பொருளை தங்கள் உடலில் பொறுத்தியிருந்தனர். இப்போது திருவாளர்.எம் மை எப்படி அழிப்பது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டபோது அவரது உடலில் இருந்த ஆண்டி-வைரஸ் பற்றிய தகவல்கள் அம்பலமானது . அவரது உடலில் இருந்த ஜீன்கள், புரதங்கள், அமினோ அமிலங்கள் போன்றவை மிகக் கடுமையாக ஆராயப் பட்டன. அந்த ஆண்டி வைரஸை அழிக்க வேண்டுமானால் அவர்மீது தாக்குதல் நடத்துபவரின் உடலில் Y குரோமோம் இருக்கவே கூடாது என்றவகையில்

Friday, September 4, 2009

Thursday, September 3, 2009

கொஞ்சம் தைரியம் வந்து..,

நேற்று

கொஞ்சம் தைரியம்வந்து

உன்னிடம் பேச நினைத்தபோது

அருகில்வந்த

உன் தோழியைப் பார்த்து

கொஞ்சம்பயந்து

கொஞ்சம் நடுங்கி

திரும்பிச் செல்ல

நினைக்கையில்

எதிரே தென்பட்ட

பிள்ளையார்கோவில் பிரசாதம்

நாக்கில் எச்சில்

ஊரச்செய்து

அருகே அழைக்க

போய் கையை நீட்டி

வாங்கினேன்

பிரசாதத்தையும்

என்னவளின்

முதல்பார்வையையும்

Sunday, August 23, 2009

சுழி, சுண்டல் 23.8.09

ஞாபகம் இருக்கிறதா.,

விடுமுறைதினம்

கோவில் வாசல்

சுண்டல் மணம்

பார்த்ததும் பரிமாறியதும்

நம் மனங்கள் அல்லவா..,

கடவுள்

இருந்தாலும் இல்லாவிட்டாலும்

கட்டிடம் இருக்கிறது

காட்சி

கருத்தில் இருக்கிறது

நாட்கள் ஓடினாலும்

நாம் மாறினாலும்

இன்றும்

அதே

கல்லூரி

விடுமுறை

கோவில்

சுண்டல்

மணம்

மனங்கள்

மாற்றங்கள்

தோற்றங்கள்

தோற்காமல்

ஓடுவது நாட்கள்

சுற்றுவது

சுற்றிக் கொண்டே..,

Sunday, August 16, 2009

வில்லனாக ராஜராஜ சோழர் தோன்றும் திரைப்படம் 16.8.09

ராஜ ராஜ சோழன் கதைகளையும் இடுகைகளையும் படித்து வந்திருக்கிறோம். சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது.

இளவரசன் ராஜராஜ சோழன் அடிமை நாடாக இருக்கும் பாண்டிய நாட்டில் பல அக்கிரமங்கள் செய்கிறார். ( அக்கிரமங்கள் என்றால் எல்லாம்தான்)

அந்த சூழலில் சாளுக்கிய இளவரசி மதுரைக்கு வருகிறார். அவரை வரவேற்பதற்காக வெடிகளுடன் கூடிய வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் படுகிறது. வழக்கம்போல் வெடிகள் வெடித்த உடன் இளவரசி அமர்ந்திருக்கும் யானை மிரண்டு ஓடுகிறது.

அப்போது புலவர் பைந்தமிழ்குமரன் யானைமேல் ஏறி யானையை கட்டுப் படுத்தி சாளுக்கிய இளவரசியைக் காப்பாற்றுகிறார்.

ஏற்கனவே புலவரின் புரட்சிகரப் பாடல்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கும் சாளுக்கியப் பைங்கிளி புலவரை அரசவையில் கவுரவிக்க எண்ணுகிறார். அப்போதைய டம்மி பாண்டிய அரச்வைக்கு அவர் வரவழைக்கப் படுகிறார்.

அங்கு பாண்டியர்களை தூற்றி சோழர்களுக்குப் பட்டங்கள் வழங்கப் படுகின்றன. பாண்டியர்களைத் தூற்றுப் போதெல்லாம் புலவர் பைந்தமிழ் குமரனும் அவரது மாணவனும் கொதித்துக் கொண்டிருக்கின்றனர்.

புலவருக்கு கவுரம் அளிப்பதற்காக மாலை அணிவிக்க இளவரசர் ராஜராஜர் வருகிறார். மாலை அணிவிக்கும்போது சற்று குத்தலாக பேசி அவரைப் பாடச் சொல்கிறார். பாடலுக்கு பிறகு மாலை அணிவிக்கப் போவதாகச் சொல்லிவிடுகிறார்.

தனதுபாடல் ஏழை மக்களுக்கானது என்றும் அதில் சோகச்சுவைத்தான் மேலோங்கி நிற்கும் என்று கூறி புலவர் பைந்தமிழ் குமரன் மறுக்கிறார். சொற்சுவை, பொருட்சுவை நிறம்பிய தமிழ்ப்பா எந்தச் சுவையில் இருந்தாலும் ரசித்து இன்புற முடியும் என்று விருந்தினர்களான சாளுக்கிய அரசரும் இள்வரசியும் சொல்ல தனது பாணியிலான பாடலைப் பாட அவர் ஒத்துக் கொண்டு பாடல் படுகிறார்.

அவர் பாடும் திரைப்பாடல்:-

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்


ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்

புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே

நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ?

தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ?
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ


வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா


இந்தப் பாடல் பாடப் படும்போது இளவரசர் ராஜராஜரும் அரசப் பிரதிநிதி ஜயங்கொண்ட மாறவர்மரும் மேலும் மேலும் கோபப் படுகிறார்கள். இருந்தாலும் சாளுக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் என்பதால் முழுப் பாடலையும் அனுமதிக்கின்றனர்.

பாடல் முடிவடைந்ததும் பாடலை மெச்சி சாளுக்கிய இளவரசியே புலவருக்கு மாலை அணிவிக்கப் போகிறார். புலவர் அதைக் கையில் பெற்றுக் கொள்கிறார்.

இந்தப் படத்தின் மூலக் கதையைப் படித்த பின் படத்தின் முழு விமர்சனத்தையும் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

Sunday, July 26, 2009

அந்தப் பார்வை..,

பயந்தது

நடந்தது

அவன்

வென்றான்;

முதல்

பார்வை;

முதல்

எண்ணம்.

இது

இப்படித்தான்

பயம்

படர்ந்தது;

ஒவ்வொரு

பார்வையும்

உள்ளூர

உணர்த்தியது;

தவிர்த்திருக்கலாம்

தவறிவிட்டது

இல்லை

தவறாமல்

நடந்துவிட்டது.

அந்த நாய்

அப்படித்தானோ

தன்

பிறவிபுத்தியை

காட்டிவிட்டது

கடித்து விட்டது

இனி.........,

என்ன?

எப்படி?

எவ்வாறு?

வெறிநாய்க்கடி

ஊசியை

விரக்தியுடன்

போட்டுக்கொண்டேன்

Monday, July 13, 2009

வயிறு காத்திருக்காது

உனக்காக

நான்

எவ்வளவு

நேரம்

ஆனாலும்

காத்திருக்க முடியும்.

என்

வயிறு

காத்திருக்காது;

வெகுநேரம்

காத்திருக்க

வேண்டுமென்றால்

சொல்லிவிடு

என் கண்ணே-

வரும்போதே

கட்டுச் சோறு

கொண்டுவந்து

விடுகிறேன்

Friday, July 10, 2009

உன்னைப் பார்த்தபின்

காதலிக்க

ஆசைப் பட்டேன்

உன்னைப்

பார்க்கும் வரை..,



உன்னைப்

பார்த்த பின்

காதலிக்கப் படவும்

ஆசை...,

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails