Thursday, July 4, 2013

பாரதி ராஜா வழுக்கிய இடங்கள்.

பல பல விமர்சனங்களைப் படித்த பின்னர் உந்தப் பட்டு அன்னக் கொடி படம் பார்த்துவிட்டேன். கதை என்று எடுத்துக் கொண்டால் கொஞ்சம் வங்கமொழி திரைப்படங்களில் வருவது போன்று இருக்கிறது. 

அன்னக் கொடி காதலிக்கிறாள். சூழ்நிலை காதலை பிரித்து விடுகிறது. கனத்த இதயத்துடன் அன்னக் கொடி ஒருவனைத் திருமணம் செய்து கொள்கிறாள்.  சில நாட்கள் ( ஆண்டுகளாய் கூட இருக்கலாம்) அன்னக் கொடியின் காதலனும் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். இவர்களுக்கு குழந்தை கூடப் பிறக்கிறது.  அன்னக் கொடிக்கு கணவனிடம் சித்ரவதை அதிகரிக்கிறது. பொறுக்க முடியாமல் காதலுடன் சேர்ந்து கொள்கிறாள். அவனும் அவளைச் சேர்த்துக் கொள்கிறான். கணவனுக்கு கோபம் வருகிறது.  அன்னக் கொடியின் காதலனின் மனைவியை கடத்திவிடுகிறான். அவளும் தூக்கில் தொங்குகிறாள். காதலனும் கணவனும் சண்டை போட கணவன் சாக  காதலனுக்கும் அவன் மனைவிக்கும் பிறந்த குழந்தைக்கும் தனது மார்பை உபயோகித்து பால் கொடுக்கிறாள் அன்னக் கொடி. 

மலையாளப் படம் போலவோ அல்லது வங்காளப் படம் போலவோ எடுத்திருந்தால் படம் ஓடியிருக்குமோ இல்லையோ பாரதிராஜா ஒரு திறமையான இயக்குநர். அவர் தமிழனாகப் பிறந்தது அவரது தவறு. தமிழனுக்கு திறமையை மதிக்க தெரியவில்லை அப்படி இப்படி என்று எதாவது எழுதி தள்ளி இருக்கலாம்.  

ஆனால் என்ன செய்வது அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், மாதிரி இல்லாவிட்டாலும் கங்கை அமரன் மாதிரியாவது தனது மகனை அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா? அவருக்கு. தனது படங்களில் வில்லன்களாக நடித்து தமிழ் மக்களின் வெறுப்பை அள்ளிக் கொண்ட ரஜினிகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் ( வில்லனாகத்தான்) போன்றவர்கள் பிற்காலத்தில் பெரிய ஆளான மாதிரி தனது மகனையும் பெரிய ஆளாக மாற்றியே தீர வேண்டும் ஒரு தந்தையாக தன்னை முன்னிறுத்தி எடுத்த படம் என்பதால் அதில் சில பல வகைகளில் மெருகேற்றப் பட்டத்தில்  படம்  என்னவோ மாதிரி ஆகிவிட்டது.

கிழக்குச் சீமையிலே படத்தில் நெப்போலியனின் தங்கையின் காதலையும் அதற்கு  நெப்ஸ் குடும்பம் தரும் எதிர்ப்பையும் பதிவு செய்து இருப்பார். அந்தப் படத்தில் வரும் பாண்டியனின்  கதாப்பாத்திரம் போன்ற ஒரு பாத்திரம்தான் சடையனின் பாத்திரம்.  ஆனால் அந்தப் பாத்திரம் இந்தப் படத்துக்காக மாற்றி அமைத்ததில் அடியில் ஒரு ஒடுக்கு விழுந்து விட்டது. அதனால் நேராக நிமிரவே முடியாது. என்பதாக மாற்றி விட்டார்கள்.

இந்த மேட்டரை முத்துராமன் நடித்த மறு பிறவி சொல்லுவார்கள் என்று நினைத்தேன் ஆனால் ஏற்கனவே பாரதி ராஜா இயக்கிய  கன்னிப் பருவத்திலே மாதிரி ஆக்கிவிட்டிடுக்கிறார்கள்.

ஆனால் வீட்டில் இருக்கும் அத்தனை பெண்கள். அவர்கள் அதுவும் விருப்பப் பட்டாம்.  ஒரு காப்பித் தண்ணியிலேயே சந்தோஷமாய் இருக்கிறார்கள்.  அதுவும் சடையனின் தந்தையின் கையங்கர்யமாக இருக்குமோ என்பதையும் கேள்விக் குறியாக விட்டு இருக்கிறார்கள். 

கிழக்குச் சீமையிலே படத்தில் பாண்டியனின் அறிமுகத்தில் இருக்கும் ஒரு குளுமை கலந்த கிக் இதில் வாந்தியைத் தான் கொண்டுவருகிறது. அதுவும் கோழிக் குழம்பு வைக்கும் பெண்,  அப்பனுக்கு வழக்கமாக கோழிக் குழம்பு வைத்துக் கொடுப்பவர், மகனுக்கும் கொடுக்க ஆசைப் படுகிறார். கைப் பக்குவம் அப்படி போல..,  

ஆனால் அதை ஜீரணிக்கும் பக்குவம்தான் நம்மிடம் இல்லை. 

எதற்காக மின்சாரம் உள்ளே நுழைந்த காலக் கட்டத்திற்குப் போனார் என்று தெரியவில்லை. பேசாமல் இந்தக் கதையை ஐ.டி. கம்பனியை வைத்தே சொல்லி இருக்கலாம்.  ஜாதியை இழுக்காமல் இஷ்டம் படம் போல காட்டி நவீன பெண்களின் நவீண உரிமைக்கான படமாக எடுத்து இருக்கலாம். நவீன மனிதர்களின் பாராட்டாவது கிடைத்து இருக்கும்.

இந்தப் படத்தில் கூட சில பல மாற்றங்களை செய்து இருக்கலாம்.  கிழக்குச் சீமையிலே காதலைப் போல பணம் , வசதி , குடும்ப பெருமை இதைக் காட்டி காதலர்களை பிரித்து இருக்கலாம். அதை விடுத்து விட்டு வீரன் என்ற பெயர் அதுவும் செருப்புத் தைப்பவன் என்ற அடையாளம். பேசாமல் ஆட்டுக் காரனாகவே கூட இருந்திருக்கலாம்.

தமிழ் படத்தில் ஒரு தாழ்த்தப் பட்ட்வன்  ஒரு பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்த வீட்டுப் பெண்ணை காதலிப்பது, மணப்பது போன்ற காட்சிகள் வந்து விட கூடாது அப்படி வந்தால் அந்தப் படம் படுதோல்வி. அப்படி ஒரு காட்சி படத்துக்கு மிக அவசியம் என்றால் பெண்ணை உயர்சாதிக்கு மாற்றி பையனை பிற்படுத்தப் பட்ட வகையறாக்களில்  இருந்து அமைத்துவிட வேண்டும். இந்த அடிப்படை திரைப்பட விதிகூட படத்தில் மீறப் பட்டிருக்கிறது.

 எங்க ஊரு பாட்டுக்காரனில் சிஞ்சனுக்கு ஜனக்கு, நான் சொல்லித் தாரான் கணக்கு பாட்டை கொஞ்சம் உல்டா அடித்து சடையனின்  பஞ்ச் ஆக வைத்து விட்டிருக்கிறார்கள். 

கரகாட்டக்காரன் மாதிரியே காற்றில் பறந்து வரும் சட்டை ஒழித்து வைத்துக் கொள்கிறார்கள்.  சிலம்பரசன் மாதிரி செருப்பைப் பார்க்கிறார்கள்.

அன்னக் கொடியை புகுந்த வீட்டில் கொடுமைப் படுத்துவது என்றால் ஒரு காது வளர்த்த கிழவியை விட்டு கொடுமைப் படுத்தி இருக்கலாம். ஆனால் துண்டெல்லாம் கொடுத்து கொஞ்சம் டூ மச்..,  அதற்காகத்தான் அதை எதிர்பார்த்துதான் படம் பார்க்க போயிருந்தாலும்கூட  ஷாக்தான் அந்த காட்சி. 

ஏவிஎம்மின் புதுமைப் பெண்ணில்  நாயகி வீட்டை விட்டு வெளியேறியதை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதற்காக மக்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வார்கள் என்று அர்த்தம் கிடையாது. 30 வருடத்துக்கு முன்னாடி வீட்டை விட்டு வந்ததை ஏற்றுக் கொண்டதற்காக இன்று சேர்த்து கொண்டதை ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்..

சாமி இரவில் வலம் வரும்போது வில்லன் சாவது கூட பல படங்களில் பார்த்ததுதான்.  

வீட்டை விட்டு வெளியே வந்த அன்னக் கொடி தனியே கஷ்டப் பட அவருக்கு ஒரு ஆடு மாதிரி மாடு மாதிரி பூனைமாதிரி இல்லாமல்   நாய் மாதிரி ஹீரோ உதவி செய்திருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டு இருப்பார்கள். கடைசியில் வில்லனோடு சேர்ந்து ஹீரோவும் சாக அவன் குழந்தைக்காக தனது வாழ்க்கையையே  அன்னக் கொடு அர்ப்பணித்துவிட்டாள் என்று காட்டியிருந்தால் புரட்சிகள் பல கண்ட தமிழுலகம் கண்கள் பனிக்க இதயம் கனக்க படத்தைப் பார்த்து ரசித்திருக்கும். 

என்ன செய்வது பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற சொலவடைக்கு ஏற்ப எந்திரன் ரஜினிக்கு மீசை வைத்தாற்போன்ற முகத்துடன் மே..., மே...., என்று சொல்லிக் கொண்டு உடையார் நாவலில் பாலகுமாரன் விளக்கு ஒரு வண்டியில் வடிவேலுபோல் அடிக்கடி வேட்டியை அவிழ்த்து தலையில் போட்டுக் கொள்ளும் மகனுக்காக என்னத்த்ச் சொல்ல என்ன்னத்தச் செய்ய..,

டிஸ்கி;-  ஒவ்வொரு பத்திக்கும் தொடர்ப்பு இருப்பது போலவும் இல்லாதது போலவும் தோன்றுகிறதா உங்களுக்கு?

உங்களுக்கு படம் பிடிக்காது.


பத்திகள் தொடர்ச்சியாக இருப்பதாக தோன்றுகிறதா? உங்களுக்கு படம் புரிந்து விடும்.


Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails