கொத்து பரோட்டா-08/11/10 படித்த போது நெஞ்சே வெடித்துவிடும் போல ஆகிவிட்டது.
வழக்கமாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை எடுத்து அவருக்குப் பிடித்த மாதிரி ஒரு ட்ரீட்மெண்ட் கொடுத்து உலகத் தரம் வாய்ந்த சில படங்களின் காட்சிகளை இனைத்து என்னைப் போன்ற எளியனுக்கு உலகப் படக் காட்சிகளை பார்க்கச் செய்யும் புண்ணியம் மனிரத்னம் அவர்களையே சாரும்.
அவர் இப்போது எடுக்கப் போகும் படம் பொன்னியின் செல்வன் கதையாம்.
பொன்னியின் செல்வன் கதை உங்களுக்குத் தெரியும் அல்லவா?
ஒரு மகாராஜா, அவரால் நடக்கமுடியாது. வயோதிகர்.
அவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள்.
மூத்தமகனின் ஆக்ரோஷம் தாங்காமல் அவரை நாட்டின் வடபகுதிக்கு அனுப்பி நாட்டைக் காப்பாற்ற அனுப்புகிறார். இளையவரை நாட்டில் அனைவருக்கும் பிடிக்கிறது.
இவர்களில் யாரை மகாராஜாவுக்குப் பின் நாட்டை ஆளவைப்பது என்பது பற்றியும், இந்த இருவர் அல்லாமல் அமைதியாக இருப்பவர்களில் ஒருவரை பதவிப் போட்டிக்கு இருப்பதையும். இதில் அந்த சகோதரி யும், அவரது காதலனும் இந்தப் போட்டியில் என்னன்ன பங்கு வகிக்கிறார்கள் என்பது பற்றியும் கதை போகும்.
தமிழகம் இன்று இருக்கும் நிலையில் இந்த மாதிரிப் படம் இப்போது வேண்டாமே. அவர் அதை இந்தியில் எடுத்தாலும் தமிழில் மொழி பெயர்த்து விடுவார்.
ஐயா மனிரத்னம் அவர்களே தயவு செய்து தமிழ் நாட்டை விட்டுவிடுங்கள்.
உங்களுக்கு கோடி புண்ணியம் வந்து சேரும்.
மணிரத்னத்தை எல்லாம் திருத்தவே முடியாது...
ReplyDeleteஆஹா... வடை எனக்கா... ரொம்ப நாளைக்கு பதிவு எழுதியிருக்கும் முனைவரே... ஏன் இந்த தாமதம்...
ReplyDelete//philosophy prabhakaran said...
ReplyDeleteமணிரத்னத்தை எல்லாம் திருத்தவே முடியாது...//
எத்தனைப் படம் பப்படம் ஆனாலும் தாங்குறாரே..,
//பதிவு எழுதியிருக்கும் முனைவரே//
ReplyDeleteநான் இன்னும் முனைவர் ஆகவில்லை நண்பரே., இப்போதைக்கு மருத்துவர் மட்டும்தான். வருகைக்குக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
தமிழ்மணத்தில் என்னால் சேர்க்கவே முடியவில்லை. யாராவது சேர்த்துவிடுங்களேன்
ReplyDeleteஇப்படியெல்லாம் யோசிக்க முடியுமாய்யா! அட அக்குருமமே! ஆனாலும் குசும்பு ர்ர்ர்ர்ர்ரொம்ப அதிகம்தான்
ReplyDelete:))))
ReplyDelete//விந்தைமனிதன் said...
ReplyDeleteஇப்படியெல்லாம் யோசிக்க முடியுமாய்யா! அட அக்குருமமே! ஆனாலும் குசும்பு ர்ர்ர்ர்ர்ரொம்ப அதிகம்தான்//
யோசித்தது நான் அல்ல தல, கல்கிதான் யோசித்து இருக்கிறார். அதுவும் வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில்தான்.
இதில் குசும்பு ஒன்றும் இல்லை. ஒன்றுமே இல்லை,
//Cable Sankar said...
ReplyDelete:))))//
எனக்கென்னவோ இப்படித்தான் எடுத்து வைப்பார் என்று தோன்றுகிறது.
அவர் இதுபோன்ற கதைகளில் எதிர்மறை பார்வைகளையே அதிகம் கையாண்டு வருகிறார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவரே
//இவர்களில் யாரை மகாராஜாவுக்குப் பின் நாட்டை ஆளவைப்பது என்பது பற்றியும், இந்த இருவர் அல்லாமல் அமைதியாக இருப்பவர்களில் ஒருவரை பதவிப் போட்டிக்கு இருப்பதையும். இதில் அந்த சகோதரி யும், அவரது காதலனும் இந்தப் போட்டியில் என்னன்ன பங்கு வகிக்கிறார்கள் என்பது பற்றியும் கதை போகும்.//
ReplyDeleteஅட அப்படியே பொன்னியின் செல்வன் கதை மாதிரியே இருக்குதே...
வசனம் யாரு சுஹாசினி மணிரத்னம் எழுதறாங்களா?
வணக்கம் உறவே
ReplyDeleteஉங்களின் பதிவினை எமது www.meenakam.com/topsites இலும் இணைக்கவும்.
நன்றி
மீனகம் குழுவினர்
welcome back.
ReplyDelete&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மணிரத்னம் கடைசி படம் ராவணன் என்று பெருமூச்சு விட்டேன்,கருமம் விடாது போல,!!! இந்த ஃபேன்பாய்ஸ் கார்பொரேட் ரசிகர்கள் இருக்கும் வரை மோடிம ஸ்தான் போன்ற இவர்கள் ஆட்சிதான்
ReplyDeleteமுடியாது...
ReplyDeleteநிறுத்த முடியாது..
எடுப்பேன்..
இன்னும்..
நூறு படம்..
தமிழன்..
செத்தான்..
தேவரீர் மன்னிக்க வேண்டும்... இப்படத்தை சனி ரத்னம் எடுத்தால், எனது கதாபாத்திரத்தை, குமிதாப் குஜ்பனுப்புக் கொடுக்க வேண்டுகிறேன்.. ஒரு கெத்தாக இருக்கும்..
ReplyDeleteநாராயணனே நம் தெய்வம்..
நாமெல்லோரும் துதி செய்வம்...
காலாந்தக கண்டா... நம் ஆட்கள் பத்து பேரை அழைத்துகொண்டு, இந்த சனி ரத்னம் என்பவரின் வீட்டுக்குச் செல்.. அங்கே, பக்கத்தில் இருக்கும் பாதாள நிலவறை வழியாக அவரை இங்கே கடத்தி வந்திடு.. அவரை, பூங்குழலியின் உதவியோடு இலங்கைக்குக் நாடு கடத்தி விடுவோம்... (ஆனால் அது இந்த அநிருத்தனுக்குத் தெரிந்துவிடக் கூடாது).. கவனம் !!
ReplyDeleteஇயந்திரத்துக்கு காதல் வருவதை ரசிக்கத் தெரிந்த உங்களால் ஏன் வரலாறுகள் ரசிக்கப்பட்வில்லை.அதன் கதைத் தன்மை தெரிந்ததாலா..வரலாறுகள் எந்த வடிவிலோ எப்படியோ எந்த மாற்றத்துடனோ ஆவணமாக இருப்பதை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தமிழ் திரையுலக வரலாற்றில் தான் இயந்திரத்துக்கு காதல் வருவதையும் அதனால் ஏற்படும் விளைவையும் இவ்வளவு செலவு செய்து தயாரிப்பார்கள்!!மீறி அதில் உள்ளது என்ன என்று சொல்ல முடியுமா!
ReplyDeleteஎடுக்கட்டும் எடுக்கட்டும்... அதயும் பாக்கிறதுக்கு ஆளுங்க இருக்கத்தான செய்றாங்க :)
ReplyDelete//இவர்களில் யாரை மகாராஜாவுக்குப் பின் நாட்டை ஆளவைப்பது என்பது பற்றியும், இந்த இருவர் அல்லாமல் அமைதியாக இருப்பவர்களில் ஒருவரை பதவிப் போட்டிக்கு இருப்பதையும். இதில் அந்த சகோதரி யும், அவரது காதலனும் இந்தப் போட்டியில் என்னன்ன பங்கு வகிக்கிறார்கள் என்பது பற்றியும் கதை போகும்.//
ReplyDeleteஇது அப்படியே நிகழ்காலக்கதை மாதிரியே இருக்கே! :))))
//King Viswa said...
ReplyDeletewelcome back.//
நன்றி தல
//|கீதப்ப்ரியன்|Geethappriyan| said... //
ReplyDeleteவாருங்கள் தல
வாருங்கள் பொ.செ. கதை மாந்தர்களே..,
ReplyDelete//எட்வின் said...
ReplyDeleteஎடுக்கட்டும் எடுக்கட்டும்... அதயும் பாக்கிறதுக்கு ஆளுங்க இருக்கத்தான செய்றாங்க :)
//
குறைந்த பட்சம் விமர்சனம் செய்யவாவது..,
//ரோமியோவின் பக்கம் said...
ReplyDeleteஇயந்திரத்துக்கு காதல் வருவதை ரசிக்கத் தெரிந்த உங்களால் ஏன் வரலாறுகள் ரசிக்கப்பட்வில்லை.//
என்ன கொடுமை என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி..,
//அதன் கதைத் தன்மை தெரிந்ததாலா..வரலாறுகள் எந்த வடிவிலோ எப்படியோ எந்த மாற்றத்துடனோ ஆவணமாக இருப்பதை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//
ReplyDeleteநண்பா சரித்திரம் எழுதுபவர்கள் அடிப்படையில் ஆனது. அவர்களின் பார்வையில் சரித்திரம் என்பதை கண்டிப்பாக ஏற்றுக் கொண்டே தீர வேண்டும்.
பொன்னியின் செல்வன் பற்றிய எனது பார்வைகள் (மற்றவர்களின் பார்வையிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது.) இந்த வலைப்பூவிலேயே எழுதி இருக்கிறேன். பொன்னியின் செல்வன் சுட்டியைத் தட்டிப் பாருங்கள்.
கொஞ்சம் படித்துப் பார்த்துவிட்டு இன்னும் நீங்கள் கொடுத்த அதே கருத்தோடுதான் இருக்கிறீர்களா என்பதையும் சொல்லவும்.
//தமிழ் திரையுலக வரலாற்றில் தான் இயந்திரத்துக்கு காதல் வருவதையும் அதனால் ஏற்படும் விளைவையும் இவ்வளவு செலவு செய்து தயாரிப்பார்கள்//
ReplyDeleteஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டைவிட மிகக் குறைவு என்பது எனது கருத்து
//மீறி அதில் உள்ளது என்ன என்று சொல்ல முடியுமா! //
ReplyDeleteதீபாவளி, ரம்ஜான் கொண்டாட்டங்களிலும்,
அவ்வளவுகூட தேவையில்லை அவரவர் பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் கூட இந்தக் கேள்வியைக் கேட்டால் கொண்டாட்டங்களே தேவையிருக்காது நண்பா!
//ரோமியோவின் பக்கம் said... //
ReplyDeleteமற்ற காதல் கதைகளில் இல்லாத ஏதோ ஒன்று ரோமியோ கதையில் இருப்பதாக நீங்கள் கருதுவதால் மட்டுமே உங்கள் பெயர் இவ்வாறாக வைத்துக் கொள்ளப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன். வாழ்க உங்கள் வாதம்
//விந்தைமனிதன் said... //
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே., தவிரவும்
மூத்தவரின் வீரத்தினைக் காட்ட மதுரைவீதிகளில் மனிதத் தலையை எட்டி உதைத்ததைக் காட்டலாம்.
நந்தினி பாத்திரம் வேறு இருக்கும். நந்தினிக்கு ஒரு வளர்ப்பு மகன் இருப்பார்.
நந்தினியை ஒருகாலத்தில் ஆதித்தன் காதலித்தான்.....
ReplyDelete:P
நிகழ்காலக் கதை..????
ReplyDeleteஐயோ, ஐயோ இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கீங்க சுரேஷ்?
ReplyDeleteஉங்களை யாரு இதை பொன்னியின் செல்வன் கதை என்று பார்க சொன்னா?
நம்ம மணி சார், இருவர் படத்தை தொடர்கிறார் என்று நினைத்து பாருங்கள்...!
படம் பசுமையான கேமிரா, வடக்கு கலாசார உடை நடனம், உயர்குடி மக்கள் தமிழ் என்று கலந்து படம் படு ஹிட்டாகும் :-).
ஆனா என்ன நம்ம மக்கள் மட்டும் என்னதான் சொன்னாலும், இது அல்லது அது என்று மாறி மாறி குத்தி கிட்டேதான் இருப்பாங்க ஓட்டை
நன்றி!.
இந்தமாத இறுதியில் ஒரு வேலையாக உங்கள் ஊருக்கு வருகிறேன், உங்களை சந்திக்க முடியுமா?
ReplyDeleteஉங்களை தொடர்பு கொள்ள எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.
நன்றி!.
வல்லவரையன் வந்தியத்தேவன் வாணர் குலத்தோன் என்பதற்காகவே அவனை எல்லோரும் இகழ்கிறார்கள் என சுந்தர சோழர் புலம்பும் சீன் உண்டா?
ReplyDeleteஅன்புடன்,
டோண்டு ராகவன்