இந்த ஆண்டு ஏப்ரல்-14ல் பத்ம விருதுகள் வழங்கப் பட்டு விட்டன.. தமிழ்மான வீரராக விவேக் போய் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அதே நேரத்தில் டோனி மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. ஹர்பஜன்சிங் ஏதோ குடும்பசூழல் காரணமாக வரவில்லையாம். இவர்கள் அதே நேரத்தில் ஏதோ விளம்பர நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கில் கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதோடு அனைவரும் இது போன்ற உயரிய விருதுகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு சுற்றறிக்கை அனுப்பப் போவதாக கூறியுள்ளார்.
1.என்ன நடக்கிறது அங்கே..?
2.இது போன்ற விருதுகள் ஏன் மக்களிடம் முக்கியத்துவம் இழந்துவிட்டன?இந்த விருதுகள் மிக உயர்ந்தவை என்ற எண்ணத்தை எப்படி மீண்டும் மீட்டுவருவது?
3.இதைவிட விளம்பர நிகழ்ச்சிகள் முக்கியமா? அந்த அளவு பணத்தேவை விளையாட்டுவீரர்களுக்கு இருக்கிறதா?
4.ஐபியெல் இடம் மாறியதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா? அப்படி இருந்தால்.........
5.இது டோனியின் பெற்றோருக்கு தெரியுமா? மற்றவர்களைவிட டோனியின் பெற்றோர் பத்திரிக்கைகள் சந்திப்பில் மிக முதிர்ச்சியுடன் பேசுகிறார்கள்.
6.வெளிநாட்டில் விளையாட சென்றிருந்தால் சிறப்பு அனுமதி கொடுத்து அவர்களை விருது அனுப்பி இருக்க வேண்டாமா?(கிரிக்கெட் விளையாடுவதே தேசத்தின் மானத்தைக் காக்க என்றுதானே கூறுகிறார்கள்)