Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Monday, September 5, 2016

மினி, ஜெனி மற்றும் மலர் டீச்சர்

என் நண்பர்(மருத்துவர்) ஒருவர் சமீபத்தில் PG சேர்ந்தார். அவர் ட்ரீட் கொடுத்தார். நானும் என்னைப் போல சிலரும் கலந்து கொண்டோம். அவர் வாங்கியிருந்த மதிப்பெண்களுக்கு சிட்டி காலேஜே கிடைக்கும் என்ற நிலையில் அடுத்த நிலைக் கல்லூரியை எடுத்திருந்தார். அந்த ஊர் அவர் ஊருக்கு பக்கமும் அல்ல. காரணம் கேட்ட பொழுது அங்கதான் அந்த கோர்ஸ் நல்லா சொல்லித் தருவாங்கடா என்றார். நாங்களும் அதை நம்பி விட்டோம். சமீபத்தில் அந்த கல்லூரியைச் சேர்ந்த மற்றொரு நண்பரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் அந்தக் கல்லூரியில் இருக்கும் நண்பர்களைப் பற்றி பொதுவாகக் கேட்டோம். அப்போதுதான் ஒரு உண்மை தெரிந்தது.முதல் நண்பர் சேர்ந்திருக்கும் கல்லூரி , கோர்ஸ்ஸில் தான் அவரது கல்லூரிக் க்கால மினி, ஜெனி , இந்நாளில் மலர் டீச்சராக உதவிப் பேராராசியராக இருக்கிறாராம்...,
)
)
)
அடப் பக்கி இன்னும் சில வருஷம் பொருத்திருந்தீன்னா அந்த அம்மா chiefஆவே ஆகியிருக்குமேடா...,
நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Sunday, December 8, 2013

சச்சினை வீழ்த்திய பிபாசா பாசு

டிஸ்கி:- இது கொஞ்சம் காலதாமதமாக வந்த இடுகையாக இருந்தாலுன் கூட இப்போது அலசுவது என்பது கொஞ்சம் நடுநிலையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

சச்சின் ரசிகர்களால் அப்படி இப்படி பேசப்பட்டாலும்  உண்மையில் வெளியான போது தோல்வியான திரைக்கதை அது. சச்சின் வெளியான போது நான் திரைப் படம் பார்க்காமல் இருந்த காலகட்டம் தவிர அப்போது பிளாக்கர் எல்லாம் இருந்ததா என்றும் தெரிய வில்லை. நானும் களத்தில் இல்லை.

 சமீபத்தில்தான் எனக்கு இந்தப் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் ரசிகர்கள்  சிறப்பாகவே சொல்லியிருந்ததால் நானும் நல்ல எதிர்பார்ப்புடந்தான் பார்க்க ஆரம்பித்தேன்.  படம் பார்த்தபின் அது ஒரு படத்துக்கான எல்லா விஷயங்களுடந்தான் இருந்தது. இருந்தாலும் படத்தின் தோல்விக்கான் காரணத்தை அலசியபோது சில் விஷயங்கள் வெளிப்படையாகவே தெரிந்தன.


1.இது போன்ற ஜனரஞ்சகமான படத்துக்கு ஏ சர்டிஃபிகேட் அனாவசியம். குறிப்பாக அதைத் தவிர்த்திருக்க வேண்டும்.  முக்கியமாக குஷி மும்தாஜ் கதாபாத்திரத்திற்கு அந்த வயோதிக தோற்றம் உடைய பிபாசா அம்மையார் தேவையே இல்லை. அதுவும் கல்லூரி முடிய 30 நாட்கள் இருக்கும் நிலையில் நடனப் பயிற்சி எல்லாம் செய்யும் செய்யும் பெண்மணி தேவையே இல்லை.


2.குஷி வெற்றியடைந்திருந்த சில வருடங்கள் வெளிவந்த திருடா திருடியும் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.  இரண்டும் ஈகோ அடிப்படையில் வெளிவந்த படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  திருடா திருடிக்கும்  எம்ஜியாரின் அன்பே வாவுக்கும் உள்ள தொடர்பு ரீமேக் லேபிளை சுண்டி தெரிந்து கொள்ள முடியும். இந்தப் படத்திலும் சரோஜா தேவி சொல்லும் அதே காரணத்தை ஜெனிலியா கிளை மாக்ஸில் சொல்லுகிறார்.   இந்தப் படத்தை குஷி பார்ட் 2 என்றே ரிலீஸ் செய்து இருக்கலாம்.

3.இது போன்ற படங்களுக்கு நல்ல காதல் பாடல்கள் அவசியம். இந்த படத்தில் அவை சுத்தமாக மிஸ்ஸிங்.  ஒருவேளை நல்ல பாடல்கள் இருந்திருந்தால்  இந்தப் பாடல்களும் ஹிட் அடித்திருக்கும்.



4. அந்தப் படம் வந்த போது நாயகி தேர்வைப் பற்றியும் குறை சொல்லி பத்திரிக்கைகளில் எழுதியதாக நினைவு. ஒரு வேளை படம் வெற்றி பெற்றிருந்தால் ஜெனிலியாவை சரியான தேர்வு என்று சொல்லி இருப்பார்கள். இப்போது பார்க்கும்போது பாத்திரத்தில் அவர் சரியாகத்தான் பொருந்தி இருப்பதாகத் தோன்றுகிறது.


மொத்தத்தில்  மிக லேசான சருக்கல்களால் மிகப் பெரிய வெற்றிப் படமாக வந்திருக்க வேண்டிய படம் தூங்கி விட்டதாகவே தோன்றுகிறது. சருக்கல்கள் இருந்தாலும் இன்று மீண்டும் ரிலீஸ் செய்தாலும் படம் வெளியான போது கிடைத்த வர வேற்பை விட இன்று நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.

Friday, November 1, 2013

ஆதித்ய கரிகாலன் மன்னன் ஆகிருந்தால்.....,

டிஸ்கி:-

நமக்கு பிடித்தவர்களை நாயகனாக்கி பல காவியங்கள் எழுதுவது மரபுதான். அது கல்தோன்றி மண் தோண்றா காலத்தில் துவங்கி இன்றைய சினிமா வரைக்கும் இருப்பதுதான். இது ஒரு சுவையாக கற்பனை.  சின்ன வயதில் நான் மன்னனானால்..........,    எதிர்காலத்தில் நான்....., என்றெல்லாம் பேச்சுப் போட்டி நடத்துவார்கள். இதுவும் அது போலத்தான்.


என் மனதில் வெகுநாட்களாக இருந்து கொண்ட அரிப்புதான். தமிழ் சமுதாயம் ஏன் இவ்வளவு சிரமப் பட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த தமிழ் சமுதயாத்தின் இழி நிலைக்கு காரணம் தான் என்ன என்றெல்லாம் நானும் உள்ளங்கிடங்கோடு போராடிக் கொண்டிருந்தவன் தான். 

அப்படி யோசித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் தீடீரென்றா தீயாய், காற்றாய், புயலாய் தோன்றியதுதான். ஆதித்ய கரிகாலன் சக்ரவர்த்தி ஆகி இருந்தால் தமிழ் சமுதாயத்தின் இந்த இழிநிலை மாறியிருக்குமோ என்றுதான் தோன்றியது.இதற்கான காரணங்கள்.



1.  ஆதித்ய கரிகாலன் ஒரு அதிரடி இளவரசன், இணை அரசன், போர்கள் பல பறந்திருக்கும்.  சோழப் பேரரசு விரைவில் உருவாகி இருக்கும்.

2.ஆதித்ய கரிகாலன் தளிச் சேரிப் பெண்டிரை ஆதரித்த சுவடுகள் எதுவும் இல்லை. எனவே தேவரடியார் என்ற தனிப் பிரிவினர் வந்திருக்க மாட்டார்கள். பிற்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட நிலையும், சமுதாயத்தில் அவர்களது நிலையும் அனைவருக்கும் தெரிந்ததே..,

3.அவர் அக்கனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டார். நாட்டுக்கு ஒரே ஒரு ராஜாதான் இருந்திருப்பார்.

4.ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தமிழகத்தில் ஜாதி வாரி பிரிவுகள் வளர்ந்ததாகச் சொல்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் மன்னனாகி இருந்தால் இது தவிர்க்கப் பட்டிருக்கலாம். ( பட்டிருக்கலாம் என்றெல்லாம் இல்லை, கண்டிப்பாக ஜாதியாக இருந்திருக்காது.)

5. ராஜ ராஜன் காலத்தில்தான் கலைஞர்கள் எச்சில் துப்புவதை சேகரிக்க தனி ஆட்கள் நியமிக்கும் பழக்கம் வந்தது.

6. ஆதித்யன் தஞ்சை சக்கர வர்த்தி ஆகியிருந்தால்  அருள்மொழி ஈழ சக்கரவர்த்தி ஆகி இருக்க வாய்ப்பு அதிகம். ஒரு வேளை அது நடந்திருந்தால் இந்திய துணைக் கண்ட அரசியலே வேறு மாதிரி ஆகியிருக்கும்.

7. ஆதித்ய கரிகாலன் தாய் தந்தையர்க்கு செலவு செய்து வீடுகட்டும் இயல்பு கொண்டவன். ராஜராஜனோ பெருத்த செலவு செய்து கோவில் கட்டியன். அவனது மகனே அந்தக் கோவிலும், நகரும் பிடிக்காமல் வேறு ஒரு ஊருக்கு ஒதுங்கியது வரலாறு.


டிஸ்கி:-

எதிர்காலத்தில் ஔவையார் அரசாட்சி செய்திருந்தால் எப்படியிருக்கும்,  மருத நாயகம் பிரதமர் ஆகி\யிருக்க வேண்டும். கோச்சடையான் ஜனாதிபதி ஆகியிருக்க வேண்டும் என்றெல்லாம் பழ இடுகைகள் போடும் எண்ணம் இருக்கிறது.

Saturday, August 31, 2013

விஜய்க்கு மட்டும் ஆசை இருக்க கூடாதா என்ன?

விஜய் ஏறக்குறைய 40 வயதில் இருக்கிறார். திரை உலகிற்கு (ஹீரோவாக) நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 

நாயகன் வந்தபோது கமலுக்கு இதை விட வயது குறைவாகத்தான் இருந்திருக்கும். தளபதி வந்தபோது ரஜினிகூட 40ன் துவக்கத்தில்தான் இருந்தார்.  

எம்ஜியார் நாடோடிமன்னன் எடுத்த போது 40ல் இருந்தார். அஜித்கூட தனது 40;ல் தனது ரசிகர் மன்றங்களை கலைப்பதாக அறிவித்தார். 

இளைய தளபதி என்ற பட்டத்தை தளபதியாக மாற்றிக் கொள்ள ஆசை வருவது இயற்கைதான்.  
==========================================
தமிழில் ஸ்பூஃப் வகைப் படங்கள் அவ்வப்போது வருவது உண்டு. இருந்தாலும்கூட தமிழ் ப் படம் தான் முதல் ஸ்பூஃப் படம் என்பது போல வெளி வந்தபோது நாம் எழுதிய இடுகை இது .அதன் முழு உரிமை விஜய்க்குத்தான்.


தலைவாகூட அப்படித்தான். ஒரு முழு நீள ஸ்பூஃப் வகைப் படம் தான்.  

அஜித் பில்லா , பில்லா 2 விட்டது போல இதையும் நாயகன் 2 என்று சொல்லி இருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. ஸ்பூஃப் வகை சீரியல்களில் கொடி கட்டிப் பறந்த சந்தானத்தையும் திரைக் கதை வடிவமைப்பில் ஈடுபடுத்தி இருந்தால் படம் பட்டையைக் கிளப்பி இருக்கும். 



கருப்புக் கண்ணாடியை கழட்டாமல் சண்டைப் போட்டு அசத்தும் விஷ்வா பாய் அசத்தலோ அசத்தல். எம் ஜியார் கூட கடைசி காலத்தில் டூயட் சீன்களில் மட்டும்தான் கருப்புக் கண்ணாடியை கழட்டாமல் நடித்திருந்தார்.

காதலன் படத்தில் வந்த போலீஸ் அதிகாரியை காப்பி அடிக்கும் நோக்கத்தில் படைக்கப் பட்ட அமலா பால் பாத்திரம் காதலன் போலீஸ் அளவுக்கு நம்மை கவரவில்லை. அதுவும்கூட இந்த படத்தில் நமக்கு ஏற்படும் ஏமாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். இன்றைய சூழலில் பெண் போலீஸ் அதிகாரி என்றால் அவர் நினைத்ததை முடிப்பவன்  மஞ்சுளா போன்ற திறமைசாலியாக இருக்க வேண்டும். ஆனால் புதிய பறவை சரோஜா தேவியோடு எல்லாம் இவரை ஒப்பிடுகிறார்கள். பாவம் அவரது பாத்திரப் படைப்பாளி.சந்தானமே சொல்லி விடுகிறார். டிஸ்கோ சாந்தி மாதிரி இருப்பதாக.





நடிகன் படத்தில் நடித்தபோது சத்தியராஜ் பல காட்சிகளில் தனது சிரிப்பை அடக்க சிரமமப் பட்டதாகச் சொல்லி இருக்கிறார். அந்த வரிசையில் இந்தப் படமும் அமைந்திருக்கும். 

படத்தில் வரும் பல காட்சிகளை பலரும் துவைத்து போட்டதால் நாமும் அதைப் பற்றி பேச விரும்பவில்லை.


==============================================================

 வீடியோ காசெட்டை விஜய் கைப்பற்றும் காட்சி, அதில் விஜய் இந்தி பேசிக் கொண்டே நடித்திருக்கும் காட்சி. கொஞ்சம்  முயன்றிருந்தால் துப்பாக்கி போல வந்திருக்கும் காட்சி அது. என்ன செய்வது எதைப் பார்த்தாலும் காமெடியாகவே தோன்றுகிறது மக்களுக்கு.

=============================================================

அமலா பால் விஜயிடம் உனக்கு அம்மா ஆக ஆசைப் படுகிறேன் என்று சொன்ன போதே  டைரக்டர் சொல்லி விட்டார் அவர் விஜயின் அப்பாவுக்குத்தான் ஆசைப் படுகிறார் என்று. இந்த டைரக்சன் டச் கூட மக்களை சென்றடையவில்லை. 

==================================================================

படத்தில் துவக்கத்தில் அண்ணா(விஜயோட அப்பா) வின் ஃபோன்  வந்ததால் அவரது நடன நிகழ்ச்சியில் அவரை டிஸ்குவாலிஃபை( அதுதாங்க தகுதி நீக்கம்)  செய்து விடுகிறார்கள். பிறகு அவர் தெருவில் ஆடி மக்கள் மனதில் இடம் பிடித்து யூ ட்யூப் மூலம் ஹிட் ஆகிறார். பேசாமல் இந்த முறையை கையாண்டிருந்தால் விஜய் நிஜமாகமாக பெரிய ஆள் ஆகியிருப்பாரோ...,

அரசியல்ல ஏதுவுமோ நமக்கு சாதகமா நடக்கறதில்ல. நடக்கிறத நமக்கு சாதகமா மாத்திடணும்....   இதுவும் கூட இந்தப் படத்தில் வரும் வசனம் தான்.

கிளைமாக்ஸ் சண்டை முடிந்த பிறகு வரும் போலிஸ் அதிகாரி (படம் பார்க்காதவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் )  கருப்பு சிவப்பு உடையில்...,   இதுவும் மக்களைச் சென்றடையவில்லை.

Monday, August 5, 2013

திருமணம் அவசியமா?

 பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

- யாரோ ஒரு புண்ணியவான்.

காதல் திருமணம்தான் நம் வாழ்க்கைக்கு முக்கியம். 21 வயதுக்கு மேல் காதல் திருமணம் செய்து கொள்ள பெற்றோர் சம்மதம் தேவையில்லை. பிரேசில், சிங்கப்பூர், போன்ற நாடுகளில் இப்படி ஒரு சட்டம் உள்ளது என்றெல்லாம் நாட்டில் பேசிக் கொள்கிறார்கள். 

பதினெட்டு வயதில் பெண்கள் சட்ட ரீதியாக திருமணம் செய்து கொள்ளலாம் எனவே அவள் விரும்பிய ஆணைத் திருமணம் செய்து கொள்ளலாம். பெற்றோருக்கு அந்தப் பையனைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஏற்றுக் கொண்டேதீர வேண்டும் என்றெல்லாம் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.  

சாதி ஒழிய வேண்டுமானால் காதல் திருமணமே வழி என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். தென் தமிழகத்தில் பஞ்சமர்களில் இருந்த ஒரு சாதியே தனது உழைப்பால் மிகப் பிற்படுத்தப் பட்டவர் வரிசையில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அவர்கள் காதல் திருமணத்தால் அதை சாதிக்கவில்லை. உழைப்பால்தான் அதை நடத்தினார்கள்,  (ஐந்து சாதிகளில் ஒன்று மி.ப. வரிசையில் சேர்ந்தாலும் இப்போது தமிழ்கத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் எண்ணிக்கை நூறுக்கும் பக்கம் இருக்கிறது. )


தாழ்த்தப் பட்டவர்களைத் தவிர பிறரை காதலித்தால் நகரப் புறத்தில் ஏற்றுக் கொள்ளப் படுவதாக வேறு ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.  

எது எப்படிப் போனாலும் காதல் திருமணம் என்பது காதலிப்பவர்களுக்கும், அவர்களைப் பெற்றவர்களுக்கும் சரி ஒரு இம்சைதான். இதை நாம் தடுத்தே ஆக வேண்டும் என்று யோசித்த போது தான். சில விஷயங்கள் தோன்றின.


1. காதலிப்பவர்கள், கோவிலிலோ , சர்ச்சிலோ, மசூதி மூலமாகவோ திருமணம் செய்து கொள்கிறார்கள். சில நேரங்களில் இதற்கு மதம் மாற வேண்டிய சூழல் இருக்கிறது.

2.மதம் மாற விருப்பம் இல்லாதவர்கள், பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.


திருமணத்திற்கு பின் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம், தானே செய்து கொண்ட திருமணம் எப்படி போகிறது என்று பார்த்தால், பெரும்பாலான மக்கள் தனிக் குடித்தனம் வந்து விடுகிறார்கள். 

நகர் புறங்களில் முதியோர் இல்லத்தை நாடுகிறார்கள். கிராமப் புறங்களில் தனியாக உலை பொங்கிக் கொள்கிறார்கள்.

நகர்புறங்களிலும் சரி கிராமப் புரங்களிலும் சரி குழந்தை வளர்ப்பு என்பது கம்பிமேல் நடப்பது போலத்தான் இருக்கிறது,. என்னதான் கஷ்டப் பட்டாலும் விளைவு என்பது ஏற்கனவே நடந்தது போல பெரிசுகளை விட்டு சிரிசுகள் போய்விடுகின்றன.

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதாக வே   வாழ்க்கை ஓடி விடுகிறது.  இதற்கெல்லாம் என்ன வழி.

திருமணத்தை ஒழிப்பது தான்.


திருமணமே செய்யாமல் இருந்தால் ஜாதிப் பிரச்ச்னை கிடையாது. மதப் பிரச்சனை கிடையாது. 








நான் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்ள சொல்ல வில்லை.  எதுவுமே இல்லாமல் இருந்தால் வாழ்க்கை என்பது இன்ப மயம்தான். 


ஆசையே துன்பத்திற்குக் காரணம்
ஆசையை ஒழித்தால் துன்பம் இன்றி வாழலாம். என்ற பொன்மொழியை ஏற்று

காதலை மறுப்போம். திருமணத்தை ஒழிப்போம். மகிழ்ச்சியாக வாழ்வோம்

Monday, May 27, 2013

IPL மகாபாரத யுத்த விளக்கம்

 ரோஹித் சர்மா: (மீடியாக்களைப் பார்த்து )உங்களால் அல்லவா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நாங்கள் தோற்கடித்தோம்.

மீடியா: உன் ஒருவனால் அவரை தோற்கடிக்க முடியுமா? உங்களுக்கு முன்பே ஆறு பேர் அவர்களை தோற்கடித்து விட்டார்கள். செத்த அடித்துவிட்டு நாங்கள்தான் தோற்கடித்தோம் என்று வீணே மார்த்ட்டுகிறீர்கள்.

  1. பெர்மணண்ட் பிளேயர்களால் மற்றவர்கள் விளையாட வாய்ப்பில்லாமல் பாதி அணியை அவர்களே அழித்து விட்டார்கள்.
  2. ஸ்ரீனிவாசனை வெளியேறச் சொல்லி  சென்னை அணியையே தடை ஆகும் வாய்ப்பை உருவாக்கி விட்டார்கள்.
  3.  லட்சுமிராயுடனான ஃபோட்டோவைப் போட்டு அவரது நண்பர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டனர்.
  4. மும்பை போலீஸ் மும்பை இண்டியன்ஸ்காக மாரல் சப்போர்ட் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தனர்.
  5. டெண்டுக்கரும் ரிக்கி பாண்டிங்கும் கூடுதலாக இரண்டு வீரர்களை உங்கள் அணியில் விளையாட வழிவகுத்துக் கொடுத்தனர்.
  6. காக்க வேண்டிய நேரங்களில் ப்ராவோவையும் பத்ரிநாத்தையும் அனுப்பி விழுந்த விக்கெட்டுகளின் எண்ணிக்கையை டோனி அதிகரித்து விட்டார்.

இப்படி ஏற்கனவே பல பேரால் தோற்கடிக்கப் பட்ட அணியை தோற்கடித்துவிட்டு நாங்கள்தான் தோற்கடித்தோம் என்று வீணே மார்தட்டுகிறாய். பேர் வாங்கப் பார்க்கிறாய். போப்பா போய் ஒழுங்கா விளையாடி டீம்ல இடம் பிடிக்கற வழியப் பாரு.




Monday, May 20, 2013

விகடன் செய்தது சரியா?



இது வழக்கமா யூ ட்யூப் பக்கத்தில் காலங்காலமா நடத்திட்டு வர ஆராய்ச்சிய ஆனந்த விகடன் தனது ஆராய்ச்சியாகப் போட்டு வெளியிட்டு இருக்கிறார்கள். தீம் ஏற்கனவே புழக்கத்தில் இருந்தாலும் கூட இந்தக் கலக்சன் ஆனந்த விகடன்காரர்களுடையதுதான்.

இந்தக் காலத்துக்குச் சரிதான். அந்தக் காலத்தில் நெட்டும் கிடையாது. திருட்டு சிடியும் கிடையாது, அப்ப எல்லாம் இந்திப் பாட்டு கூட நம்ம கிராமங்களுக்கு கிடைச்சு இருக்குமான்னு தெரியல. அந்த நேரத்தில உலக மொழிகள்ல இருக்கும் பாடல்களை நமக்குக் கொடுத்த இசையமைப்பாளர்களை கேலி செய்வது என்னால் ஏற்க முடியவில்லை.

2.52ல் வரும் இந்திப் பாடலை நாம் யாராவது கேட்டது உண்டா? அதைத் தமிழ்படுத்தி நம்மை ரசிக்க வைத்த இசையமைப்பாளர் என்னைப் பொறுத்தவரை ஒரு தெய்வம்(தெனாலி பாணியில்)

3.30ல் வரும் பொண்ணு ஒண்ணு நான் பார்த்த்தேன் மற்றும் அதன் ஒரிஜினல் அதுவே 3.39 மற்றும் 3.48 குறிப்பாக 3,48ஐ ஒருமுறைக்கு இருமுறை நீங்கள் ரசித்தே ஆகவேண்டும்

7.55ல் வரும் என்ன விலை யழகே பாடல் போலவே இருக்கும் மற்றும் பிரபல தமிழ் பழைய பாடல் . அதைத் தொடர்ந்து வரும் புதிய மற்றும் பழைய தமிழ் பாடல் தொடர்புகள்.

8.36ல் வரும் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது பாடலின் முன்னோடியக் கேட்டு மாரடைப்பு ஏற்பட்டால்  8.52ல் வரும் ரெண்டக்கா ரெண்டக்கா வின் முன்னோடியைக் கேட்டால் நெஞ்சே வெடித்து விடலாம். 9.05ல் வரும் வொய் திஸ் கொலவெறியின் ஒப்பீட்டைப் பார்த்தால் உடலில் எல்லா உறுப்புகளே வெடித்துப் போகும் வாய்ப்பு இருக்கிறது.

டிஸ்கி:  கடைசியா விகடனார் சொல்லும் அறிவு ஜீவி, ஆக்ஸிடண்ட் கதையை கண்டிப்பாக கேட்டே தீர வேண்டும்.

கொசுறு: தேவாவிற்கு அறுவை சிகிச்சை நிபுநர் பட்டம் கொடுத்து கவுரவித்து இருக்கிறார்களார். அவர்கள் விட்டு விட்ட ஒரு செய்தி. தேவாவின் பெயரே கூட அந்தக் கால இசையமைப்பாளரான வேதாவின் உல்டாதான். இந்த வேதா அவர்க்ள் அந்தக் கால இந்திப் பாடல்களை தமிழ்படுத்துவதில் வல்லவர்.


===========================================================

இந்தப் பாட்டு மேலே இருந்த பிட்டுல இருந்து தேடி பிடிச்சது.  தமிழ் பாட்ட விட  நல்லாயிருக்க மாதிரி பட்டது. பார்த்தா இது ஷோலேவுக்கும் முன்னாடியே வந்தது போல. சும்மா கும்முன்னு இருக்கு 


Friday, May 10, 2013

கர்நாடகத் தேர்தலும் +2 முடிவும்

கர்நாடக சட்ட சபை ரிசல்ட் வந்த சூட்டோடு ப்ளஸ் 2 ரிசல்ட் வந்துவிட்டது. கர்நாட்க ரிசல்ட் வந்த உடனே பல இடுகைகள் வந்து கொண்டிருக்கின்றன. நாமும் இடுகை போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்த போது ப்ளஸ் 2 ரிசல்ட்டும் வந்து விட்டது. சரி இதற்காவது ஏதாவது எழுதியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது ஒரு வடிவம் கிடைத்தது. இரண்டையும் எழுதிவிடுவோம் என்று யோசித்துப் பார்த்தால் கடைசியில் பல் ஒற்றுமைகள் இரண்டிலும் இருக்கின்றன.

  • ஒண்ணுமே பண்ணாட்டியும் அன்னை சொன்னதக் கேட்டால் ஜெயிக்கலாம்.
  • பூ பின்னாடி சுத்தற விட கையை நம்பலாம்.
  • இன்னைக்கு ஜெயிச்சவங்க அடுத்த அஞ்சுவருஷம் ஆடலாம். ஆனா அதுக்கு அப்புறம் அப்படிங்கறத இந்த அஞ்சு வருஷத்தில கரெக்ட் பண்ணி வச்சுக்கணும்.
  • பப்ளிக்கா  @#*%  படம் பார்த்தா கண்டிப்பா ஆப்புதான்.
  •  
  • தோத்ததுக்காக கவலைப் பட வேண்டியதே இல்ல.
  •  
  • ஊருக்கே புடிக்காத  காலேஜ், கோர்ஸ், கட்சி உங்க வீட்டுக்கு பிடிச்சு போகலாம்.
  • நாமே நம்ம ஆள செலக்ட் பண்ணி வெச்சிருந்தா கூட ஜெயிச்சோட்டோமும் நாமே சொல்லிட கூடாது. அத அன்னை வாயால சொல்லச் சொல்லணும் அப்பத்தான் மரியாதை.
  •  
  • பவர் கட் ஒரு மேட்டரான்னே தெரியவில்லை.

 


ஆனாலும் சில விஷயங்களில் ப்ளஸ் டூ மாணவர்களைப் பார்த்து அரசியல் வாதிகள் பொறாமை படும் விஷ்யங்களும் இருக்கின்றன.

  • ப்ளஸ் டூ தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடியாக சிறப்புத் தேர்வு வைப்பது போல தேர்தலில் தோற்றவர்களுக்கும் வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். 

  • அட்லீஸ்ட் மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதாவது சுலபமாக இருந்தால் பரவாயில்லை.

  • எந்த எந்த தொகுதியில் தோத்தமோ அந்த தொகுதிக்கு மட்டும் சிறப்புத் தேர்தல் வைத்தால் சந்தோஷப் படுவார்கள்.

Saturday, April 27, 2013

ரஞ்சிக் கோப்பைக்கு IPLகாரர்கள் சொல்லித்தரும் பாடம்

ஐ.பி. எல். கிரிக்கெட் ஆரம்பித்த இரண்டாம் வருடத்திலேயே உலகம் சுற்றப் போய்விட்டது. நம்மூர் சின்னப் பசங்க எல்லாம் தென்னாப்பிரிக்கா பார்க்க போய்விட்டார்கள்.(போயிருக்கற பசங்கல விளையாடவிட்டால் பரவாயில்லை) சென்ற முறை உலககோப்பை நடந்த போது அங்கே அழகிகளின் நடனம் நடந்ததே. யாராவது மறக்க முடியுமா.. ஒவ்வொரு சிக்ஸ்ருக்கும் ரசிகர்கள் போல்டு ஆனார்களே... அதே மாதிரி இந்த வருடம் கூட எதிர்பார்க்கலாம்.

ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் இவ்வளவு பேரும்புகழும் பெற்ற போட்டிகளைப் பார்த்தாவது ரஞ்சி கோப்பைக்காரர்கள் சுதாரிக்க வேண்டும்.

ரஞ்சிக்கோப்பை அணிகளையும் ப்ரீத்தி, சில்பா போன்றோருக்கு ஏலம் கொடுத்துவிடலாம். ஏலம் எடுக்காவிட்டால் இலவசமாகவாவது கொடுத்துவிடலாம். பெரிய பெரிய திரை எல்லாம் வைத்து கிரிக்கெட் போட்டியை மைத்தானத்துக்குள்ளேயே ஒளிபரப்புகிறார்கள். அதே போல் பெரிய பெரிய திரை வைத்து போட்டியை ஒளிபரப்ப வேண்டும். கிரிக்கெட் போரடித்தால் அதில் ப்ரீத்தி, ஷில்பா போன்றோர் நடித்த பாடல்களை ஒளிபரப்பலாம். பொன்வைக்கும் இடத்தில் பூ வைப்பது என்பார்களே அப்படி. பெரிய பெரிய திரைகளில் ப்ரித்தியின் நடனத்தைப் பார்க்கவாவது ரசிகர்கள் வருவார்கள். அந்தக் காட்சிகளையும் 3D படங்களாக ஒளிபரப்பலாம். தனியாக கண்ணாடிகளை விற்று காசு பார்க்கலாம்.

அவ்வாறு இலவசமாகக் கூட வாங்க மாட்டேன் என்று சொன்னால் அதற்கும் கவலைப் பட வேண்டியதில்லை. IPL காரர்களிடம் பேசி அந்த அணியை ஏலம் எடுக்க caution depositஆக இந்த அணிகளை ஏலம் எடுக்கவேண்டும் என்ற ஒரு புதிய விதியை கொடுக்கலாம்.

ஆட்டத்தின் போது அக்சய் குமார் வகையாறாவைச் சேர்ந்த ஃபேசன் ஷோ கலைஞர்களைக் கூட்டிக் கொண்டு சென்றால் கூட்டம் அலை மோதத் தொடங்கிவிடும்.
(படத்தைப் பற்றிய விவாதங்கள் இங்கே)அவர்களை மைதானத்திலேயே விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் கொடுக்கச் சொன்னால் ரசிகர்களும் உற்சாகம் கொள்வார்கள். இது போண்ற ஃபேஷன் ஷோ ஆட்களை வைத்து அப்போதே கிளிந்து போன ஆடைகளையும் ஜிப் போன ஆடைகளையும் நல்லவிலைக்கு விற்று விடலாம்.

அனுஷ்கா,மந்திரா பேடி மாதிரி திறமை வாய்ந்த ஆட்களை சின்னத்திரை https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrfpAidiL5VuI7igEMHix_Fb9QHnGTdkbnNlrjvxfjhjXh88Yh3NDxZxVbuIg2T2s9cuheyoCmTaW8aKjqhfZCbCLWtXQF2-W_qaIgDAMC-ZQNWJgluZMPTQlwsaqwtCwIorJWnDpfXcd4/s400/anushka-0003.jpghttp://www.bosey.co.in/blogpics/mandira.jpg
வர்ணனையாளர்களாக நியமித்து அவர்களது கருத்துக்களை ஒளிபரப்பிக் கொண்டே இருந்தால் கிரிக்கெட் ரசிகர்கள் ஐந்து நாட்களும் ஆட்டத்தின் போது தொலைக்காட்சியைவிட்டு நகராமல் இருப்பார்கள். ஆறு, நான்கு, விக்கெட் நிகழ்வுகளின்போது மட்டும் கிரிக்கெட் காட்டினால் போதும். விளம்பர வருவாய் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

ஓரளவு ரஞ்சிக் கோப்பை போட்டிகளும் பிரபலம் அடைந்துவிட்டால் உலகம் பூராவும் நமது போட்டிகளை நடத்தலாம். அங்குள்ள நடிகர்கள், நடிகைகள், விளம்பர மாடல்கள் போன்றோரை உபயோகப் படுத்திவந்தால் உலகின் அனைத்து வித மைதானங்களிலும் விளையாடும் திறமையை நமது ஆட்டக்காரர்கள் பெறுவார்கள். பணமும் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு எத்தனை நாள்தான் குண்டுசட்டியில் குதிரை ஓட்டப் போகிறார்கள்

டிஸ்கி;- மிகப் பழைய பதிவு, மீள்பதிவாக வருகிறது. வெளிவந்த காலம் அறிய முதல் பின்னூட்டத்தின் தேதி பாருங்களேன்.

Sunday, November 6, 2011

ஜேம்ஸ் பாண்ட், சூப்பர் ஹீரோவாக சூர்யா நடிக்கும் புத்தம் புதிய படம்

ஸ்பைடர் மேன், பேட் மேன் கதைகள் படிக்கும்போது ஒரு பிரமிப்பு ஏற்படும். அப்படியே அந்தக் காட்சிகளில் நாமும் இருப்பது போன்ற ஒரு உணர்வு. அந்தப் படங்கள் திரைப்படங்களாக வந்தபோது  லாஜிக் பற்றியெல்லாம் கவலைப் படாமல் பிரமிப்புடன் ரசித்துப் பார்த்தோம். கதாநாயகனுக்காக இல்லாமல், கதாப்பாத்திரத்துக்காக பெரிய அளவில் ரசிகர்களை சேர்த்து வைத்த கதாப்பாத்திரங்கள் அவை.  சீன்கானரி வேண்டுமானால் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தைவிட அதிகமாக ரசிகர்களைப் பெற்றிருக்கலாம். ஆனால் பிய்ர்ஸ் பிரஸ்ணனைவிட ஜேம்ஸ்பாண்ட்க்குத்தான் ரசிகர்கள் கூட்டம்  இருக்கும். தமிழில் கூட இதுமாதிரி சூப்பர் ஹீரோ படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன்.  ஆனாலும் அவை இரண்டாம்பாகம் மூன்றாம்பாகம் வந்தமாதிரியெல்லாம் இடுப்பதில்லை.

இரும்புக்கை மாயாவி கதை பார்த்திருப்பீர்கள்.  ஆய்வகத்தில் நடக்கும் ஒரு விபத்தின் காரணமாக மாயாவிக்கு அதீத சக்தி வரும். ஸ்பைடர் மேணுக்கும் அப்படித்தான். அவரின் வில்லன்களுக்கும் அப்படித்தான்.  கந்தசாமி, வேலாயுதம் போன்றவர்களுக்கு இதுபோன்ற விபத்து நடக்காவிட்டாலும் மக்களைப் பாதுகாக்க மிகுந்த சக்தி படைத்தவர்களாக இருந்தார்கள். 

அப்படிப்பட்ட ஒரு கதை இப்போது சூர்யாவிற்கு வாய்த்துள்ளது. ஆய்வக உதவியோடு அதிபயங்கர சக்திகள் அவர் உடலில் ஏற்றப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை விஜய் ஏலத்தில் எடுத்துவிட்டதால்  இவரது படத்துக்கு சீன உளவாளிகளை பயன்படுத்துகிறார்கள்.  அவர்களின் அழிவு சக்தியை சமாளிக்க இந்திய தேசமே நடுநடுங்கிக் கொண்டிருக்கும்போது  சூர்யா தனது அதி அற்புத சக்தியைப் பயன்படுத்தி  சாரூக்கான், சடன்பிரேக் போட்டு ட்ரெயினை நிறுத்துவது போல கொடிய அழிவு ஆயுதங்களின் சக்தியை சூர்யா தடுத்து நிறுத்துகிறார்


ஹலோ ஹலோ என்ன இந்தப் படம் ஏற்கனவே வந்து விட்டதா? ஐயா அது வேற அது பல்லவ தமிழ் இளவரசன் துறவரம் போய் இந்திய தேசத்தை வெல்ல தனியாக ஒரு நாட்டு மக்களை தயார்படுத்திய கதை.  அட அதுவும் இல்லையா? பரவாயில்லை விடுங்கள். சூர்யா, ஏ.ஆர் முருகதாஸிடம் சொல்லி அதி அற்புத சக்தி வாய்ந்த சூர்யாவின் அடுத்த அடுத்த சாகஸங்களை வெளிவிடச் சொல்லுங்கள். நமக்கு ஜாலியாக இருக்கும்

Monday, October 17, 2011

பவர் ஸ்டார் படம் மச்சி


பவர் ஸ்டாட் பத்தி தெரியாத தகவல்கள் இன்னைக்கு யூட்யூப்ல தெரிஞ்சிக்கிட்டேன். நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Wednesday, October 5, 2011

ஸ்ட்ராங்கான மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்


https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/305116_267436236629976_192867670753500_811266_220613920_n.jpg     









மனைவி நல்லா ஸ்ட்ராங்கா இருந்தா ஒரு சக்கரம் இல்லாட்டிக்கூட வண்டி ஓட்டலாம் அப்படிங்கறதா எவ்வளவு அழகா சொல்லி இருக்காங்க பாருங்க

Friday, June 24, 2011

900/1200 க்கு தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட்

இன்றைய தேதியில் எம்பிபிஎஸ் சீட்டுக்காக பெற்றோர் அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.  (சில பெற்றோர் லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் சீட்டுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொள்வோம்). தமிழ்நாட்டில் கட் ஆஃப் மதிப்பெண் ஒன்று இரண்டு குறைந்தால் கூட தனியார் மருத்துவ கல்லூரிகளில் சில லட்சங்கள் அதிகம் ஆகிக் கொண்டே இருக்கிறதாம்.

ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர 900 மதிப்பெண் எடுத்தாலே கூடப் போதும். ஆனால் என்ன கீழே கொடுக்கப் பட்டிருப்பதுபோல மதிப்பெண் வாங்கி இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

உயிரியல்- 200/200
வேதியியல் 200/200
இயற்பியல் 200/200
கணிதம் 100/200
தமிழ் 100/200
ஆங்கிலம் 100/200

நம்பினால் நம்புங்கள் மேலே உள்ளமாதிரி மதிப்பெண்கள் வாங்கியிருந்தால் கண்டிப்பாக உங்களது 900 மதிப்பெண்ணுக்கே எம்.பி.பி.எஸ் சீட் கண்டிப்பாக கிடைக்கும்.

Wednesday, May 11, 2011

தமிழகம் முழுவதும் நாங்கள் எடுத்த எக்ஸிட்போல் கருத்துக் கணிப்புகள்

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்த நாங்கள் எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து முடிவு செய்தோம்.  நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் எல்லாம் பார்த்தால் ஏறக்குறைய தமிழ்நாடு முழுவதற்கும் ஆள் இருந்தது. கேள்விகளைத் தயார் செய்து வைத்தோம்.

1.இது வரை இருந்த முதல்வர்களில் நன்றாக செயல்பட்டவர் யார்? இந்த தேர்தலில் யார் முதல்வராக வர ஆசைப் படுகிறீர்கள்?

2.புதிய சட்ட சபையில் அதிமுக எத்த்னை இடங்களைப் பிடிக்கும்? திமுக எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? மற்ற அணிகளுக்கு எவ்வளவு?

3 கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் இந்திய அளவை ஒப்பு நோக்க அதிகரித்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா?

4.விலைவாசி அதிகரிப்பு இந்திய அளவைவிட் குறைந்திருக்கிறதா? அதிகரித்திருக்கிறதா?

5. தொலைக்காட்சி, ஸ்டவ், கிரைண்டர் பிரச்சாரம் எடுபடுமா?

6.ஊழல் ஒரு பிரச்சனையாக இருக்குமா?

7.அரசியல் தலைவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறீர்களா?

8.வடிவேலுவின் பிரச்சாரம் எடுபடுமா?   வடிவேலு அடுத்த கருப்பு எம்.ஜி.ஆர் ஆக மாறி திமுக வெற்றிக்கு உதவுவாரா?

9.மின்வெட்டு தேர்தல் பிரச்சனையா?


10.இந்திய அரசியலில் தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் எதிரொலிக்குமா?




இப்படியெல்லாம்  கேள்விகளை வைத்துக் கொண்டு மூத்த நண்பர் ஒருவரிடம் கேள்வித்தாள் பற்றி கருத்துக் கேட்டோம். அவரும் சில விஷய்ங்களைப் பேசி விட்டு, யார் யாரிடம் எல்லாம் கொடுத்து கேட்கப் போகிறீர்கள் என்று கேட்டார். நாங்களும் பெரும்பாலான நண்பர்கள் பெயர் மற்றும் அவரது நண்பர்கள் என்று 150-200 பெயர்களைச் சொன்னோம். 

இது போன்ற வாக்கெடுப்பு ஏற்றவகையில் பலதரப் பட்ட வேளை செய்பவர்கள். பல ஊர்களில் குடியிருப்பவர்கள், பல்வேறு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பவர்கள் என்று பரவலாக இருப்பதையும் சொன்னோம்.

அவர் உடனே சில கேள்விகளில் சில மாற்றங்கள் சொன்னார். 

முதல் கேள்விக்கு சச்சின் பெயரை சேர்த்துக் கொள்

இரண்டாவது கேள்விக்கு இந்திய கிரிக்கெட் அணியை சேர்த்துக்கொள்

மூன்று நான்காவது கேள்விக்கு கேள்வி புரிகிறதா இல்லையா என்று ஒரு வாய்ப்பினைக் கொடு


என்பது மாதிரி வரிசையாகச் சொன்னார். எனக்கென்னவோ கேள்வித்தாளில், சச்சின் பெயரைச் சேர்த்தால் அவர்தான் முதலிடம் வருவார் என்று தோன்றியது. இது போன்று அவர் சொன்ன மாற்றங்களில் மொத்தமாக குழம்பி நின்றதும் அவரே சொன்னார்.   உங்க லிஸ்ட் பாருங்கப்பா, அவங்களெல்லாம் என்ன சொல்லுவாங்கன்னு நீங்க யோசித்து சில எண்களைப் போட்டு கருத்துக் கணிப்பு வெளியிட்டு விடு அவ்வளவுதான் விஷயம். இதுக்கு போய் பக்கம் பக்கமா அச்சிட்டு அதை விநியோகித்து, அதை தபாலில் திரும்பப் பெற்று, அதை தொகுத்து.., அதற்குள் உண்மையான முடிவுகளே வந்து விடும்  என்று சொல்லி விட்டார்.


Thursday, May 5, 2011

தாடிக்குப் பின்னால் இரண்டு பெண்கள் (இருபத்தைந்தாம் பாகம்)


சுமித்ராவின் ஊருக்குள் நுழையும்போது எங்களுக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பெண் விஷயம் அதுவும் ஆள் கடத்தல்,  அரிவாள் கல்யாணம் என்றெல்லாம் கொஞ்சம் குடல் நடுங்கித்தான் போய் இருந்தது,  இருந்தாலும் சுமன் உடன் வந்ததால் எங்களுக்குப் பயம் இல்லாமல் ஊருக்குள் நுழைந்தோம்.

வழியிலே சுமத்ராவின் தந்தையை பார்த்தோம்.  தீஃபக் குமாரை மீட்பதற்காக எங்களுடன் வந்த தீஃபக்கின் நண்பர்கள் ஆடையுடன் சிறுநீர் கழித்து விடுவதைப் போல நடுநடுங்கி அமர்ந்திருந்தனர். சச்சின் தான் எதைப் பற்றியும் கவலைப் படாமல்

அன்கிள்,  சுமன் வீட்டுக்கு வந்தோம். உங்க தோட்டமும் இங்கதான் இருக்குன்னு சொன்னாங்க, அதுதான் அப்படியே உங்களையும் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்.

ஒன்னுமே நடக்காதுபோல சுமன் கூறியது அங்கிருந்த மற்றவர்களுக்கு கிளியைக் கொடுத்தது.

அவரும் மாணவர்களை வரவேற்றுப் பேசி இள்நீர் எல்லாம் போட்டுக் கொடுத்து உபசரித்தார்.

காணாமல் போன தீபக்கைப் பற்றி விசாரிக்குமாறு அவன் நண்பன்கள் கேட்டபோதும் அவனைப் பற்றி நேரடியாக விசாரிக்க தைரியம் இல்லாமல் இருந்தனர்.

அவரிடம் இருந்து விடை பெறும்நேரம் வந்த போது அவரும் தனது அறிவிப்பினை வெளியிட்டார்.   சுமித்ராவிற்கு தேர்வுகள் முடிந்த பிரகு திருமணம் செய்வதாக இருக்கிறோம்.


மாப்பிள்ளை.., இழுத்தோம்.

ம் அதெல்லாம் பார்த்து பலகாலம் ஆச்சுப்பா....,  இவ படிப்ப முடிச்ச உடனே கல்யாணம் செய்ய வேண்டியதுதான்.   உங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்கும்ப்பா..  அவர்தங்கச்சி கூட உங்க கல்லூரில கொஞ்ச நாள் படிச்சா.., அப்புறம் அவங்க ஊர் பக்கமே இடம் மாற்றம் வாங்கிட்டு போய்ட்டா........


எங்களுக்கு ஒன்றும் நினைவில் இல்லை. (எங்களைப் போலவே நீங்களும் 2, 3, 4 ம் பாகங்களை படித்தால் நினைவிற்கு வரும்).

அப்போதும் கூட தீபக்கைப் பற்றி விசாரிக்க எங்களுக்கு தைரியம் வரவில்லை.

எல்லோரும் கிளம்பிய பின்னர் டேஞ்சர் டயபாலிக் அவரை அணுகி அன்கிள் காலேஜில கொஞ்சம் பிரச்சனை.

கேள்விப் பட்டேன்ப்பா..  சுமித்ராட்ட சொல்லியிருக்கறேன். இது அவளது தந்தையார்

முடிஞ்ச வரைக்கும் நீயே சமாளி, முடியலேண்ணா எங்கிட்ட சொல்லு.., அப்புறம் பாரு கதையைன்னு..,

 நீங்களே கதைய முடிச்சிடுவீங்களா..., ஏனோ எங்கள் வாயை விட்டு வார்த்தைகள் வெளிவரவில்லை


அவ எம்பொண்ணுல்ல  எந்த ஒரு பிரச்சனையும் அள்ளி முழுங்கிடுவா., மீசையை முறுக்கிக் கொண்டே அவர் சொன்னார்.

சுமித்ராவின் திமிருக்கு ஆணிவேரே இவர் மீசை முறுக்குவதில் இருக்கிறதா? 




சுமித்ரா ஜடைய சுத்திக்கிட்டே பேசுறது கூட இவர் மீசை முறுக்கிக்கிடே பேசற மாதிரித்தானா?



அப்படி என்றால் தீ*பக் குமார் காணாமல் போனதற்கும் சுமத்ராவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?  திகிலுடன் வெளியேறி விடுதி வந்து சேர்ந்தோம்.


பின்னர் விசாரித்ததில்  தீபக் குமார் அவர் பெயருக்கு ஏற்ப ஒரு தோழியுடன் ஊட்டி சென்று விட்டார் என்பதும் அவரது நண்பர்கள் அலப்பறை விட்டு இருந்ததனர் என்பதும் தெரிந்தது.

=======================================================

பின்னர் பயிற்சிக் காலத்தில் சுமத்ராவிற்கு திருமணம் நடைபெற்றது.  சுமன் சிலநாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டுவந்து மாப்பிள்ளை வீட்டாருக்கு கடும் ஒத்தாசை செய்து கொண்டிருந்தான்.  திருமண நாளன்று ஹ்ருத்திக் ரோஷன் நினைப்பில் லேசான தாடியுடன் திருமண மேடைக்கு எங்களோடு வந்தான்.


அப்போதுதான் சுமத்ராவின் கணவர் அவனைப் பார்த்து அந்தக் கேள்வி கேட்டார். எந்த கேள்வி என்பதை அறிய முதல் பாகத்திற்குச் செல்லுங்கள். அதனால் என்ன நடந்தது என்பதை அறிய அடுத்தடுத்த பாகங்களுக்குச் செல்லுங்கள்.


சுபம்      


கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட

இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல

பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு

பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி,

பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும்

பதினாறாம் பகுதி sweet sixteen

பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி

பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம்

பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை

இருபதாம் பகுதி டபுள் மீனிங்

இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள்

இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே

இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா

இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க?




இந்தப் பாடலின் முதல் மூன்று வரிகள் எழுதிய பாடகர் யாரென்று கண்டுபிடியுங்களேன்

Wednesday, May 4, 2011

விஜயகாந்த், சிம்பு Vs ஒசாமா

டிஸ்கி: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப் பட்டது. யார் மனதாவது புண்பட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.

பாகிஸ்தானில் நேரடியாக ராணுவ நடவடிக்கைகளில் இறங்கி அமெரிக்கா லேடன் மகன் ஒசாமாவை அழித்துவிட்டது. இதில் பாகிஸ்தானுக்கு தங்கியதும் தெரியாது. இவர்கள் அழித்ததும் தெரியாது என்ற நிலைப் பாடுகளை கடைபிடித்துவருகிறார்கள்.


அமெரிக்க தலைமையிடம் இப்போது ஊடக நண்பர்களால் பெரிதும் நோண்ட முடியாத காரணத்தால்  அந்த படையில் இருந்த வீரர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம்  நமது ஊடகங்கள் பேட்டி எடுக்கின்றன. அப்போது கீழ்கண்ட நபர்கள் அங்கிருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள்:-


ரஜினி காந்த்: -  உண்மையில் என்ன நடந்ததுன்னா என்ன சுத்தி நிறைய ஊடக நண்பர்கள் இருந்தார்கள். அப்போது நான் கோப்பில் கையெழுத்து போடுவதுபோல படம் எடுக்க விரும்பினார்கள். அப்போது கைதவறி அந்த கோப்பில் கையெழுத்து விழுந்துவிட்டது. நான் எப்போதும் உலக நாடுகளின் இறையாண்மைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்


கமல்ஹாசன்:-  ஓ.கே. ஃப்ரண்ட்ஸ். இப்ப நடந்தது ஒத்திகைதான்.  திரும்பிக்கங்க நான்  உண்மையான நடவடிக்கை எடுக்கணும். இது ஹைலி கான்ஃபிடன்ஷியல்.


விஜய்காந்த் :-   என் கையால செத்தால் சொர்க்கம் நிச்சயம்.  அதுனாலத்தான் சாக வைச்சேன். 


அஜித் குமார்:-  நல்ல காரியம் செய்யமுன்னு ஆசை இருந்தா போதும் செய்திடலாம். அதனால் நான் ராணுவத்தை இன்னொயோட கலைச்சிடறேன்.

விஜய்:- (மனசுக்குள்ளயே) ஐயோ அப்பா இப்ப என்ன பண்ண

தங்கபாலு: சதாம் ஹூசைன் கொல்லப் பட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன்

டோனி:-  ஒருவேளை இதில் நாங்க தோற்றுப் போயிருந்தால் ஏன் பாகிஸ்தான் போன?  அவங்ககிட்ட ஏன் அனுமதி வாங்கல? அப்படின்னெல்லாம் கேள்வி வந்திருக்கும். ஆனா நல்லவேளை நாங்க ஜெயிச்சிட்டோம். அதிலயும் ஹெலிகாப்டர் ஷாட் ல ஜெயித்தது சந்தோஷமா இருக்கு.

யுவராஜ்சிங்:-  நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்ல ஒரு முக்கியமான நபருக்காகத்தான்னு .  அது எங்க அண்ணன் விஜயகாந்துக்குத்தான் சமர்ப்பணம். ஏன்னா அவர் படம் பார்த்துத்தான் நான் சண்டையே பழகினேன்.


சிலம்பரசன்:- என்ன வாழ்க்கைடா இது?  செத்தவன்கூட இருந்தது அவன் மனைவி இல்லையாமே!



தனுஷ்:- நாங்களெல்லாம் ஒண்டியா ஆள்கிடைச்சா கும்மு கும்முனு கும்முவோம். இதுல ஒசாமாவே கிடைச்சா..,



Sunday, May 1, 2011

விஜயகாந்தின் மே டே வந்திருந்தால்....,

தமிழக வரலாற்றில் பாதியில் நின்றுபோன பல திரைப்படங்கள் உண்டு. பூஜை மட்டும் போடப் பட்டு நின்றுபோன திரைப் படங்கள் உண்டு. சில படங்கள் வந்ததால் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில பல மாற்றங்கள் நடந்திருக்கக் கூடும்.  எம்ஜியார், சிவாஜி எடுக்க நினைத்த பொன்னியின் செல்வன், கமலஹாசன் எடுக்க நினைத்த பொன்னியின் செல்வன், மருதநாயகம்  போல  விஜயகாந்த் எடுக்க நினைத்த மே டே என்ற ஆங்கிலப் படமும் ஒன்று.  நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் அந்த படம்  வரப் போகிறது வரப் போகிறது என்று காத்து கிடந்தோம்.  ஒரு முறை அந்தப் படம் வந்து விட்டது.  ஆங்கிலப் படத்திற்கு நம்மை விட மாட்டார்கள். இருந்தாலும் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று நகரத்திற்குச் சென்று ஏமாந்து வந்த கதை கூட ஒரு முறை நடந்தது.

அந்தப் படம் வந்திருந்தால் என்னென்ன நிகழ்வுகள் நடந்திருக்கும் என்று நினைத்தபோது

1. கேப்டன் என்பவர் கர்னலாக மாறி இருப்பார்.

2.அகில உலக நடிகர் சங்க தலைவர் ஆகி இருப்பார். அவருக்கு இணையாக ஷரன் ஸ்டோன், சோஃபியா லாரண்ஸ் வந்திருப்பார்கள். குஷ்பு ஒரு மூலையில் இருந்திருப்பார்.

3.அவ்ரது படத்தில் பாகிஸ்தான் வில்லனுக்குப் பதிலாக செவ்வாய் தோஷ வில்லன் இருப்பார். பாகிஸ்தான் வில்லனை வைத்தால் பாகிஸ்தானில் படம் ஓடுவது சிரமம் அல்லவா..,

4. உலகத்தொழிலாளர்கள் அனைவரும் இவரது கையால் அடிவாங்க தயாராக காத்து இருப்பார்கள் . ஏனென்றால் இவரிடம் அடிவாங்கினால் மகாராஜா ஆகிவிட்லாம்.

5 வடிவேலுவின் மதுரை மணம் வீசும் ஆங்கிலம் உலகம் முழுவதும் பாவி இருக்கும்.  அமரிக்கன் இங்கிலீஷ், ஃப்ரென்ச் இங்கிலீத் போல் மேஜூரா இங்கிலீஷ் நமக்கு ஒரு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கும்.

6.வைகை ஆற்றைப் பார்க்கவும், உலக அதிசயமாம் நிரம்பி வழியும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை பார்க்கவும் வெளிநாடுகளில் இருந்தெல்லாம்  மக்கள் குவிந்து கொண்டிருப்பார்கள். கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி போன்ற படங்களுக்கெல்லாம் உலக அளவில் மார்க்கெட் கிடைத்திருக்கும்.

7. இங்கிலாந்து இளவரசர் திருமணத்திற்கு அழைப்பு வந்திருக்கும். அவரது பயணத்திட்டம் முன்கூட்டியே திட்டமிடப் பட்டிருப்பதால் கலந்து கொண்டிருக்க மாட்டார்.  பத்தோடு பதினைந்தாக நேரிட்டிருக்கும் என்று எதிர் அணியினரால் பிரச்சாரம் செய்யப் பட்டிருப்பார்.


8.இந்தப் பாட்டு வந்திருக்காது




9. ஆனா இவ்வளவு நல்லா செயல் பட்டு சென்னையை காப்பாற்றுப்வர் வாஷிங்டனைக் காப்பாற்ற போயிருப்பார்.



10.இந்தக் காட்சிகளை உலகமே ரசித்து இருக்கும்.

Monday, April 25, 2011

யார் சொல்லும் தேர்தல் கணிப்பு பொய்த்துப் போகும்?

இன்று நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தபோது தேர்தல் பற்றிப் பேச்சு வந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துச் சொல்லிக் கொண்டு இருந்தோம். அப்போது வயதில் மூத்த நண்பர் ஒருவர் போப்பா.., ஒவ்வொருத்தனும் ஒவ்வொண்ணச் சொல்றான். ஊழல் ஆரம்பிச்சு, மின்சாரம் வந்து, சாலை போடுவது, டாஸ்மாக் திறந்தது, ராஜா பக்‌ஷே விவகாரம் எல்லாம் பேசுறாங்க. நம்மால் ஒண்ணும் கணிக்க முடியலயே அப்படின்னு ரொம்ப ஃபீல் பண்ண ஆரம்பித்தார்.  இன்னொரு நண்பர், அண்ணே அது ரொம்ப சுலபம்ண்ணே நான் சொல்ற வகை ஆட்கள் சொல்றத அப்படியே எதிர்மறையா எடுத்துக்குங்க. அப்புறம் கணக்குப் பாருங்க எல்லாம் சரியா வரும் என்றார்.

அவர் சொன்ன ஆட்கள்:-

1.ரஜினி படம் பார்த்து விட்டு நல்லாவே இல்லை என்று சொல்பவர்கள்.

2.கமலஹாசன் படம் பார்க்காமலே சூப்பர் என்று சொல்பவர்கள்

3.சச்சின் டெண்டுல்கரை சுத்தி சுத்தி திட்டிவிட்டு சச்சின் அவுட் ஆனதும் டிவியை விட்டு நடையைக் கட்டுபவர்கள்

4.எம்.எல்.எம் சோப்புப் போட்டால்தான் சிவப்பானதாகச் சொல்பவர்கள்

5.அலுவலகத்திற்கு தினமும் ஹிண்டு வாங்கி வந்து முதல் கடைசி பக்கம் மட்டும் படிப்பவர்கள்

6.இருமல், சளி என்றால்கூட கோயமுத்தூர் போகும் புள்ளிகள்

7.பகுத்தறிவு கொள்கையில் பிஹெச்டி வாங்கி விட்டு மனைவி சொன்னதற்காக கையில் வண்ணமயமாக கயிறுகள் கட்டிக் கொண்டு சுற்றுபவர்கள்.


நண்பரிடம் இது என்ன கணக்கு என்று கேட்டபோது, இந்த ஆட்கள் அவர்களின் தெரிவை வெளியே சொல்ல தயங்குவார்கள். ரஜினி படம் என்றால் நன்றாக இருக்காது, சச்சின் சதம் அடித்தால் தோற்கும் என்று பேசினால்தான் மற்றவர்கள் மதிப்பார்கள் என்று நினைப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்தால் கூட வெளியே சொன்னால் ஒரு மாதிரி பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் அந்தப் பகுதியில் என்ன பேசிக் கொள்கிறார்களோ அதையே சொல்லுவார்கள்.


உங்களுக்கு என்ன தோன்றுகிறது?


Friday, April 22, 2011

மாப்பிள்ளையில் அனுஷ்கா - ஒரு மாதிரியான பார்வை

தமிழில் பல்வேறு படங்கள் ரீமேக் என்று அதிகார பூர்வமாக அறிவிக்காமல் ரீமேக் நிறைய செய்து உள்ளார்கள். சில படங்களை சொல்லிவிட்டே எடுப்பார்கள். தனுஷின் மாப்பிள்ளை ரீமேக் , படு கேவலமாக இருப்பதாக சொல்லி இணையத்தில் பேசி முடித்துவிட்டுந்தாலும் நமக்கு சில நாட்களுக்கு முன்புதான் வாய்ப்பு கிடைத்து பதிவிடும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது.




http://chennai365.com/wp-content/uploads/movies/Mappillai/Mappillai-Stills-003.jpg
திரையரங்க வாசலிலேயே அந்த ஹன்ஷிதா அம்மையார் ஒரு பக்கமும் மணிஷா அம்மையார் மறுபுறமும் நின்று தனுஷ் காட்சி அளித்திருந்தார். மணிஷா கொடுத்திருந்த பொஸ் அந்தக் காலத்தில் குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்  பாட்டுக்கு கொடுத்திருந்த மாதிரி இடுப்பில் கைவைத்து போஸ் கொடுத்திருந்தார்.  அதைப் பார்த்த உடனேயே நமக்கு ரஜினியின் மாப்பிள்ளையை விட சிரஞ்சீவியின் கில்லாடி மாப்பிள்ளை நினைவுக்கு வந்து தொலைத்தது, ரஜினியின் மாப்பிள்ளை கூட சிரஞ்ச்சீவி தயாரித்ததுதான் எனவே அது சிரஞ்சீவியின் மாப்பிளையாகவும் கொள்ளலாம். ஆனால் இங்கு சிரஞ்சீவியின் மாப்பிள்ளை என்பது தெலுங்கு மொழிமாற்றப் படம். அதில் ரம்யா கிருஷ்ணன்., ரம்பா, மற்றும் லட்சுமி ஆகியோர் நடித்திருப்பார்கள். அதில் ஒரு முக்கியக் காட்சியாக சில நிமிட இருட்டுவேளையில்  சிரஞ்சீவியுடன் குலாவியது யார் என்பது மூன்று பெண்மணிகளுக்குள் குழப்பம் வரும்.


அந்தப் படத்திலாவது இருட்டில் நடப்பதாக கருப்ப்பு இருட்டைக்காட்டி, மீதத்தை வார்த்தையில் சொல்லி விடுவார்கள். இதில் மணிஷாவைக் கட்டியே பிடித்து விடுகிறார்கள்.   (நடுநிசி நாய்களையே பார்த்த நம்க்கு இது எம்மாத்திரம்.) அப்போதுதான் தோன்றியது பேசாமல் இந்தப் பாத்திரத்துக்கு அனுஷகாவைப் போட்டிருந்திருக்கலாம். இரட்டை வேடத்தில் நடிக்க விட்டிருந்தால் கம்பீரத்துக்கு கம்பீரமும் ஆச்சு, கவர்ச்சிக்கு கவர்ச்சியும் ஆச்சு என்று மகிழ்ந்திருக்கலாம்.

http://www.cineherald.com/newsimage/nt_9951_Anushka_Panchakshari_movie.jpg
மனீஷா முதல் காட்சியில் மட்டும் அழகாக தெரிகிறார். அதற்கடுத்த காட்சிகளில் எல்லாம் ராஜ ராஜேஷ்வரியை நினைவு படுத்துவதற்குப் பதிலாகஏனோ ஜெயமாலினியை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒரு காட்சியில் நீச்சல் குளத்திலிருந்து வருவதுபோல காட்டுகிறார்கள். அவர்களூக்கே பொறுக்கவில்லை போல முழு உடையில் துவட்டி உடை மாற்றிய பின் நீச்சல் குளக்கரையில் உரையாடுகிறார்.


மாப்பிள்ளை , மண்டபத்திற்குள் எப்படி வந்தார் போன்ற லாஜிக்குகளையெல்லாம் எதிர்பார்க்கவில்லை என்றாலும்  ராஜ ராஜேஷ்வரியின் முகம் மனிஷாவிற்கு வரவே இல்லை. முகத்தில் ராஜ கோபம் தென்படுவதற்குப் பதிலாக வெட்கப் படுவது போலவே தெரிகிறது.
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRDJHaDeUywRIbVAOQ-uKaFXDHa87-lCgzqivGY_DI3aGrNLwM6kg&t=1நெற்றிக் கண் ரஜினியை இமிடேட் செய்து விவேக் வரும் காட்சிகளில் நமக்கே குமட்டில் குத்தவேண்டும்போல்  தோன்றும்போது ராஜேஷ்வரி அவர்கள் லூசு மாதிரி அவரை நம்முவது கொஞ்சம் அல்ல ரொம்பவே டூ மச்.  விவேக்கிற்கு பதில் கருணாஸையே நடிக்க வைத்திருக்கலாம்.  அல்லது ஏதாவது ஒரு இலம் ஹீரோக்களைப் போட்டு ஒரு கண்ணீர் காதல் ட்ராக்கை ஓட விட்டிருக்கலாம்.  மொத்தத்தில் விவேக் கின் மார்க்கெட்டையும் சேர்த்து இந்த படத்தில் ஒழித்துவிட முடிவு செய்தது போலவே தோன்றியது.



ஹீரோயினைப் பார்த்து நிறைய பதிவர்கள் ஜொல்லுவிட்டதைப் போல ஹன்ஷிதா மோட்டுவாணி அப்படி ஒன்றும் சூப்பராக இல்லை. பழைய குஷ்பூ எந்திரன் வேடம் போட்டிருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்கிறார்.  சீவலப் பேரி பாண்டி படத்தில் வரும் அஹானாவின் சாயல் இருக்கிறது. முடிகூட கலையாமல் படத்தில் வருகிறார். அலுங்காமல் குலுங்காமல் போகிறார். அவர் அதிக வேலை செய்த இடமே போதையில் தனுஷ் ஹன்ஷதாவின் அறைக்குள் செல்வதும் அதைத் தொடர்ந்து நடக்கும் காட்சிகளுமே ( ரேப் செய்யப் பட்டதாக சொன்னாலும் அங்கே ஒன்ன்ன்னுமே இல்லை).

வசனங்களும் படு சொத்தை.  சொல்லிக்க ஒண்ணுமே இல்லை.


கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் தனுஷின் தங்கை முகத்தை ஒரு குளோசப் கூட காட்டவில்லை.

படத்தை மொத்தமாக எடுத்து பின்னர் குலுக்கல்முறையில் காட்சிகளைத் தொகுத்து வழங்கியதுபோல் இருந்தது.


நெருடியவை :-
ஆறுமுகமாக நடித்த ரஜினி படிப்பில்தங்கப் பதக்கம் வாங்கிய நல்லபிள்ளை.  தனுஷயையும் அப்படியே காட்டித் தொலைத்திருக்கலாம். சரவணன் என்று பேரை மாற்றியது கதாபாத்திரத்தையும் போட்டுத் தள்ளிவிட்டார்கள்.

அந்தப் படத்தில் அமலா தென்றல் போல கடந்து சென்றார் என்றால் ஹன்சிதா ஷோகேஸில் இருக்கும் ஐஸ்கிரீம் போல இருக்கிறார்.

ராஜேஷ்வரி மொத்தமாக நெருடுகிறார்.


மணிஹா நான் ராயல் என்றதும் தனுஷ் நான் லோக்கல் என்று சொல்கிறார். இதை ஏன் நாங்க டீசண்ட், அல்லது கல்சுரல், எங்களுக்கு பண்பாடு இருக்கு என்று சொல்லகூடாது.

மகிழ்ச்சியான விஷயம்

ராஜராஜேஷ்வரி என்ற பதம் படத்தில் எந்த இடத்திலுமே உபயோகப் படுத்தப் படவில்லை. ராயல் என்ற சொல்கூட அந்த சவாலில் மட்டுமே உபயோகப் படுத்தப் பட்டுள்ளது.


Monday, April 18, 2011

sweet sixteen

கல்லூரி முடிந்த உடன் சுமத்ராவை மாணவர்கள் நிறுத்தினர்.


இளவரசனை நாளைக்கு சஸ்பண்ட் பண்ண போறாங்களாம். நாளைக்கு காலைல வி.பி. வரச் சொல்லி இருக்காங்க. நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க.

அவன் ரேக்கிங் பண்ணியிருக்கான். அதுக்கு நான் என்ன பண்ண முடியும். இது சுமத்ரா

அவன் என்ன பண்ணினாலும் பண்ணாட்டியும் நீதான் வந்து பேசணும். நீதான் இப்ப ரெப்பு.

பாருங்கப்பா; ஜூனியர் பொண்ண ரேக் பண்ணியிருக்கான்; அதை தட்டிக் கேட்ட இன்னொரு ஜூனியர் பையன அடிச்சிருக்கான். அத ஏ.பி. வேற பாத்திருக்காங்க. நான் என்ன பண்ண முடியும்.

இப்டியே பேசின உன் மண்டைதான் உடையும். மொதல்ல சஸ்பண்சன் ஆர்டர கேன்சல் பண்ண வழியப் பாரு. சச்சின் தனக்கே உரித்தான பன்ச் டயலாக்கோடு தானும் இருப்பதை உறுதி படுத்தினான்.

என்ன நடந்ததுன்னு நாமதான் சொல்லணும் சுமி.., ( பேச்சோடு பேச்சாக அஜித் அவளுடைய பெயரை சுறுக்கி கூப்பிட ஆரம்பித்தான்.

அஜித் போன்றவர்கள் பேச ஆரம்பித்த பின்னர் சுமித்ரா கொஞ்சம் நிகழ்காலத்திற்கு வர ஆரம்பித்தாள்.
என்ன நடந்துச்சு? சுமித்ராவின் அல்லக்கை ஒருத்தி கேட்டாள்.

ரொம்ப நாளாவே நம்ம இளவரசன் ஜூனியர் வினிதா பின்னால் சுத்திட்டு இருந்தான்ல.

ஆமா ..., நீங்க ரெண்டு பேர் கூட உஷாபின்னாடி சுத்திட்டு இருத்தீங்க, அதை சாக்கா வெச்சு ஒருத்தர ஒருத்தர் சகலைன்னு வேற கூப்பிட்டுக்கிட்டு திரியறீங்க, நேரங்காலம் தெரியாமல் சுமித்ராவும் நகைச்சுவை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

இப்ப இளவரசு மேட்டருக்கு வருவோம். இப்ப என்ன ஆச்சுண்ணா இரண்டு பேரும் தினமும் மதிய இடைவேளையிலும் வகுப்பு முடிஞ்சதும் கடலை போட ஆரம்பிச்சிட்டாங்க. அது கடந்த ஒரு வாரமா தினமும் நடக்க ஆரம்பிச்சிருச்சு.

ஐயோ.., ஐயோ.., என்னத் தவிர எல்லாப் பசங்களும் ஒரு திட்டத்தோடுத்தான் சுத்திட்டு இருக்கீங்களாடா.., வழக்கம்போல சச்சின் தனது முத்திரையை பதிக்க ஆரம்பித்தான்.

டேய் நடந்தத சொல்லுங்கடா இது சார்லி

இப்ப என்னண்டா வெள்ளெலி கூட கடலை போடற்து அவங்க பேட்ச்ல அக்ஷ்ய்க்கு புடிக்கல.., கொஞ்சம் இடைவெளிவிட்டு லோலாயி பண்ணிட்டு இருந்தவன். இன்னிக்கு பக்கத்திலயே வந்து கமெண்ட் அடிச்சிருக்கான்.

வெள்ளெலியா?

வினிதா பேருதான் வெள்ளெலி

உடனே தம்பிக்கு கோபம் வந்து அடிச்சிருக்கான். அதத்தான் ஏ.பி. பார்த்திருக்கார்.

அவன் ஃபஸ்ட் இயர் அப்படிங்கறதால அத ராக்கிங்கா காட்டி யிருக்கார். தவிரவும் அவர் வரும்ப்போதெல்லாம் இவன் பாட்டுக்கு வெள்ளெலிக்கூட பேசிக்கிட்டே இவருக்கு ஒரு வணக்கம் கூட போடாம இருந்திருக்கான். அவரும் ஒரு வாரம பார்த்திருக்கார்.

என்ன பேசிக்கிட்ட்ட்ட்டா..., ஓ.ஜி. போஸ்டிங்கில் இருந்த ஒரு மாணவன் கொஞ்சம் வேகமாகவே கத்திவிட்டான்.

அடச்சீ சும்மா இருடா.., எவ்ளோ சீரியஸா பேசிக்கிட்டு இருக்கோம். நீ வேற இது அஜித்

இன்னிக்கும் பார்த்திட்டார். அதுதான் போட்டுக் கொடுத்திட்டார். மீண்டும் சார்லி சொன்னான்.

இவ்ளோ மேட்டர் நடந்திருக்கா. இப்ப நான் என்ன பண்றது? நிஜமாக புரியாதது போல பேசினாள் சுமித்ரா.

இப்ப ரெண்டு வழி இருக்கு.

1. அடிக்கவே இல்லைன்னு நாம நிக்கலாம்

அதுக்கு வழியே இல்ல. ஏ.பி.கண்முன்னாடி அடிச்சிருக்கான்.

2. அக்ஷய் பண்ணினத நாம் நிரூபிக்கணும்.

அப்ப நாம அப்படியே பண்ணிடலாமே அந்த வெள்ளெலி ச்சீ வினிதாவ கூப்பிட்டு சொல்லச் சொன்னா சொல்லிட்டுப் போறா..., இது சுமத்ரா

அதெப்படிச் சொல்லுவா..., என்னத் தப்பா பேசுவாங்க அதுனால நீயெ பார்த்துக்க அப்படின்னு சொலிட்டு ஒதுங்கீட்டாளாம்.

இந்த பொம்பிளங்கலே இப்படித்தான் , சிவப்பு ரோஜாக்கள் சின்னப் பையன் ஒரு ஓரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவள் சொல்றதிலயும் நியாயம் இருக்கில்ல

ஏன் சொல்ல மாட்ட, போன வருசம் நீயும் அப்படித்தானே சொல்லிக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்த

சரி அத விடுங்கடா.., இப்ப என்ன பண்றது.

அக் ஷய் பண்ணினத நீருபிக்க ஒரு வழி அந்தப் பொண்ணுவந்து ஒத்துக்கணும். அப்படி இல்லேண்ணா அவனே ஒத்துக்கணும்.

அவன் ஒத்துக்கற மாதிரி தெரியலயே ஏற்கனவே வெள்ளெலி வேற அவன இரி பண்ணிட்டு இருந்திருக்கா.. (இரி=இரிட்டேட் ன் சுருக்கம்)
அப்ப வெள்ளெலி சொன்னாலும் நம்ப மாட்டாங்க..,

ஆமாமா, செல்லாது; செல்லாது.

அதுக்கு நானொரு ஐடியா வெச்சிருக்கேன். நீ என்ன செய்யற நாளைக்கு காலைல பத்து மணிக்கு வி.பி. ரூமுக்கு வந்திரு.

நாளைக்கா? நாளைக்கு முடியாதே! துறைத்தலைவர் வகுப்பு எடுக்கிறார். நான் தான் கேஸ் பிரசண்ட பண்ணனும். பண்ணலேன்னா தொலைச்சிடுவார்.

தாயி இதெல்லாம் நீ ரெப் ஆகறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். நீ நாளைக்கு ஸ்கூட் விடு. அவ்வளவுதான்,

நீ இறுதி ஆண்டு தேர்வுக்கு போறதுக்கு இன்னும் மூணு வருஷம் இருக்கு. அதுக்குள்ள துறைத்தலைவர் ஓய்வு பெற்றுவிடுவார். நீ கட் அடிச்சித்தான் ஆகணும். நாங்கெல்லாம் கட் அடிச்சிட்டுத்தான் இருக்க போறோம். சச்சினின் இன்னொரு பன்ச் வெளிவந்தது.

இல்ல இன்னிக்கு கூட துரைத்தலைவர் கூப்பிட்டு கேட்டாரே! நாளைக்கு நான் போகலேனா தொலைச்சிடுவார். நான் வேணும்னா வார்டு வகுப்ப வேணும்ணா கட்டடிச்சிட்டு வந்திடரனே அழுதுவிடுவாள் போலிருந்தது.

உனக்கு இருசக்கர வாகனம் ஓட்டத்தெரியுமா?

ம். சைக்கிள் நல்லா ஓட்டுவா! நாமதான் அன்னைக்கு பார்த்தோமே !
அடுத்த பன்ஞ்சை சச்சின் வெளியிட்டான்.

அப்ப ரெண்டாம் எண் பேருந்த புடிச்சி கிளம்பி வந்திரு.

சீஃப் வகுப்பு, அவர் எத்தனை மணிக்கு வேணும்னாலும் முடிப்பார்.

அது நீ ஒழுங்கா கேஸ் பிரசண்ட் செஞ்சாத்தான். நீ ஊத்தை விடு. அவரும் சீக்கிரம் விட்டுவிடுவார்.

நீ வந்தாப் பரவாயில்லை. அப்படியில்லைனா நீயும்தான் ரேக்கிங்கல உடந்தைன்ன்னு நாங்க வாக்குமூலம் எழுதி வி.பி. கையில கொடுத்திடுவோம்.

இல்ல நான் வந்திருவேன்.

அதான் எப்படி?



சும்மா கதை விடாத! சுமனும் நீயும் ஒரே யூனிட் தானே; பேசாம சுமன் வண்டில வந்திடு. அங்க 9.30க்கு புறப்பட்டா 10.கெல்லாம் வி.பி. ரூம்முக்கு வந்திடலாம்.


தேர்தலுக்கு பின் சுமன் சுமத்ரா உரசல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இப்ப நானும் அவனும் பேசிக்கறது இல்ல
சுமித்ரா சற்று குழப்ப்பத்துடன் சொன்னாள்.

அவளுக்கு எப்படி இளவரசனை விடுவிப்பது என்பதிலிருந்து எப்படி வி.பி.யின் விசாரணைக்கு வருவது என்பதுவரை குழப்பமாக இருந்தது. மாணவர்கள் எப்படி கொஞ்சமும் கவலையில்லாமல் வகுப்புகளை தியாகம் செய்கிறார்கள் என்பதும் ஆச்சரியமாகவே இருந்தது

தொடரும்----------------------------------------->

இது கதையின் பதினாறாம் பாகம், அதனால்தான் தலைப்பு இப்படி



இந்தக் கதையைப் படிக்கும்போது அப்படியே இந்தப் பாடலையும் கேளுங்கள். எஸ்.பி.பி, எஸ். ஜானகி குரலில் மிக மென்மையான பாடல் இளையராஜாவின் இசையமைப்பு. ஆனால் மிக அபூர்வமாக வானொலி, தொலைக்காட்சிகளில் வருகிறது. உங்கள் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும்.






===========================================================================

கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட

இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல

பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு

பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி,

பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும்

பதினாறாம் பகுதி sweet sixteen

பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி

பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம்

பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை

இருபதாம் பகுதி டபுள் மீனிங்

இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள்

இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே

இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா

இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க?

இருபத்தி ஐந்தாம் பகுதி  தாடிக்குப் பின்னால் இரண்டு பெண்கள்

நன்றி நன்றி

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails