Saturday, August 21, 2010

அழகிய லைலா.., அவளது ஸ்டைலா.., அந்தப் புரத்து மகராணி

பெண்கள் கல்லூரியில் கலைவிழா தலைப்பின் கீழ் முதன்முறையாக கலைவிழாவிற்கு சென்ற அனுபவத்தை தெரிவித்திருந்தேன். நாங்கள் முதன் முறையாக பெண்கள் கல்லூரிக்குச் சென்ற பிரமிப்பு அடங்குவதற்கே சில மணிநேரம் ஆனது. (உண்மையைச் சொன்னால் இன்னும் அந்த பிரமிப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது).

கலைநிகழ்ச்சிக்குத்தேவையான் லக்கேஜ் பொருட்கள் என்றதும் ஏதோ ஒரு ஸ்கூல் பேக் பொருட்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். மெல்லிசை நிகழ்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள் முதல் பல்சுவை நிகழ்ச்சிக்குத்தேவையான மேக்கப் சாதனங்கள் வரை அதில்தான் இருந்தன. மெல்லிசைக் குழு அதன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தது. நாங்கள் பல்சுவை நிகழ்ச்சிக்கு ரிகர்சல் பார்க்கும் இடத்தில் உதவி (நின்று) கொண்டு இருந்தோம்.


அடுத்த அறையில் மற்றொரு குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அழகிய லைலா பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தது

http://lifeisreallybeautiful.com/wp-content/uploads/2009/08/marilyn_monroe_famous_blown_up_dress_picture.jpg
ஸ்டெப்ஸ் மாத்திப் போடு, ஃபேன் மாத்தி வை போன்ற வார்த்தைகள் எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தது. எங்கள் நெஞ்சம் படக் படக் என்று துடித்துக் கொண்டிருந்தது. சீனியர் மாணவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலை படாமல் அவர்கள் பாட்டுக்கு பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நாங்கள் பக்கத்து அறையை வேடிக்கை பார்க்க போகலாம் என்றாலும் அனுமதி கேட்க பயம். முன்பின் பார்த்திராத இடம் வேறு கொஞ்சம் பயமாக இருந்தது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பக்கத்து அறைப் பக்கம் வந்தோம்.

எங்கள் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுமே... ஜூனியர் என்று. அங்கு இருந்த பெரிய மாணவர் எங்களை அழைத்தார். இருதய துடிப்பு அதிகம் ஆனது. இப்போது அழகிய லைலாவை நினைத்து அல்ல... அருகில் போனதும் இரண்டு வில்ஸ் வாங்கி வா என்றார். எங்கள் கையில் காசு எதுவும் கிடையாது. எங்கள் கல்லூரியில் கடைக்குப் போகச் சொன்னால் பணம் மற்றும் சென்று வர வாகணமும் கொடுப்பார்கள். (அப்படித்தான் நாங்கள் பைக் மற்றும் கார் ஓட்டி பழகினோம்) விழிக்க ஆரம்பித்தோம். அவர் மிரட்ட ஆரம்பித்தார். அதற்குல் எங்கள் அறையில் எங்களை அழைக்க ஒரே ஓட்டமாக ஓடி விட்டோம்.
இருந்தாலும் மின் விசிறியுடன் ஓடும் அழகிய லைலாவைப் பார்க்க மனம் துடித்துக்க் கொண்டே இருந்தது.


சன்னமாக எங்கள் சீனியரிடம் பேச ஆரம்பித்தோம்.
சார் ராக தாவணி (ராகத்வனி எங்கள் மெல்லிசைக் குழு) யில் எங்களை கூப்பிட்டார்களாம். சரி போங்கடா
என்று அனுப்பி வைத்தனர். நாங்கள் மெதுவாக நழுவி வந்து நடன அரங்கிற்க்கு வந்தோம். ஜீன்ஸ் மற்றும் டீசர்ட் அணிந்த அழகிய தமிழ் மகள் எங்களைத் தடுத்தார். அடையாள அட்டை கேட்டார். எங்கள்க்கு புரியாத மொழிகளீல் ஒன்று இளம்பெண்கள் பேசும் நுணிநாக்கு ஆங்கிலம். எங்கள் சொத்ப்பலான பதில் மற்றும் ஜூனியர் தனமான மூஞ்சியைப் பார்த்த பின் அவர் தமிழில் கேட்டார். நாங்கள் காட்டிய அட்டையைப் பார்த்த பின்னரும் எங்களை அனுப்ப மறுத்தார். ஆண்களுக்கு அவர்கள் கலந்து கொள்ளும் போட்டிகளுக்கு மட்டுமே அனுமதியாம்.

நாங்கள் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டிய மன நிலையிலேயே இருந்தோம். எங்கள் அணியில் மற்றொரு பெண் உறுப்பினர் உள்ளே இருக்கிறார் அவரை அழைக்க வேண்டும் என்று போராடி உள்ளே சென்றோம். போன கொஞ்ச நேரத்திலயே சிகரெட் வாங்கச் சொன்ன வேற கல்லூரி சீனியரைப் பார்த்து ஒழிந்து கொண்டோம். இரண்டு பாட்டு முடிந்தது. அடுத்த பாட்டு. அழகிய லைலா...................................


எங்கள் கல்லூரி சீனியர் மாணவி எங்கள் தோளைத் தொட்டார். எங்கடா சுத்திட்டிருக்கீங்க.... அடுத்த ஈவண்ட் மெல்லிசை போய் ட்ரம்ஸ் எல்லாம் தூக்கிட்டு வாங்க்................... மனதுக்குள் நொந்து கொண்டே மெல்லிசைக் கூடத்துக்கு நடந்தோம்

Monday, August 9, 2010

????

உணர்வுகளை

உருக்கி


ஒன்ற நினைக்க

உருகி

உருகி

ஒன்றாய் ஆக


அதுவோ இதுவோ



என்றெல்லாம்

அவ்வளவுதான்

அவ்வள்வேதான்

என்றாகிப் போனது

Monday, August 2, 2010

எந்திரன் பாடல்களுக்கு பின் சில சிந்தனைகள் 2.8.10

நாம் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே சீரான இடைவெளியில் எந்திரன் பற்றிய பதிவுகளை போட்டுக் கொண்டு இருக்கிறோம்.  பாடல் வெளிவந்த பிறகு நிறையப் பதிவர்கள் எந்திரன் பதிவுகளைப் போட ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது பதிவு போட வில்லை என்றால் எந்திரனை வைத்துத்தான் கல்லா கட்டுகிறோம் என்ற பாராட்டுப் பத்திரத்தை பிடுங்கி விடுவார்களோ என்ற பயத்தாலும் நாமும் எந்திரன் புயலில் குதிக்கிறோம்.

================================================================
எந்திரன் சில சிந்தனைகள்

சிந்தனை எண் 1.  ரஜினி படத்தில் ரஹ்மானுக்கு உள்ள சுதந்திரத்தில் பாதி கூட ஷங்கர் படத்தில் ரஹ்மானுக்கு இருப்பது போல தெரியவில்லை.  முத்து, படையப்பா படங்களில் தெரிந்த கட்டுடைத்தல் இசை இதில் இருப்பது போல தெரியவில்லை. அவையெல்லாம் அதற்கு முந்தைய ரஜினி படங்களுலிருந்து கொஞ்சம் விலகியது போல தோன்றும். இந்தப் பாடல்கள் முந்தைய சங்கர் படங்கள் போலவே உள்ளனவே

சிந்தனை எண் 2.  பாடல்கள் எல்லாம் எந்திரனுக்கே வருவதாகத் தோன்றுவதால் ஒருவேளை எந்திரனுக்கு ஜோடிதான் ஐஸ்வர்யாவா?  அப்போ  ராவணன் கதை மாதிரி விஞ்ஞானியிடமிருந்து ஐஸ்ஸை கடத்திக் கொண்டு போய் எந்திரன் லவ் பண்ணுவாரா?  அல்லது விஞ்ஞானிதான் வில்லனா? பத்து வருட உழைப்பின் பலன் ஒன்றும் இருப்பது போல தெரியவில்லை என்று புலம்ப வேறு செய்கிறார்.

சிந்தனை எண் 3: தமிழில் பெயர் வைத்தால் வரிச் சலுகை என்று அறிவித்ததால் ரோபோ எந்திரனாக மாறியது போல தமிழில் கதாபாத்திரங்கள் பெயர் வைத்தால்  தயாரிப்புச் செலவில் பத்து சதம் மானியம்,  வசனங்கள் தமிழில் இருந்தால்  பத்து சதம் மானியம்,  பாடல்கள் தமிழில் இருந்தால் பத்து சதம் மானியம்,  வேற்று மொழிகளில் டப்பிங் செய்யும்போது தமிழில் சப் டைட்டில் கார்டு போட்டால் பத்து சதம் மானியம்,  தயாரிப்புக் கம்பனியின் பெயரை தமிழில் வைத்துக் கொண்டால் இருபத்தைந்து சதம் மானியம் கொடுக்கலாமே, சமீபத்தில் வந்த ஒரு படத்தில் மூலம் எந்திரன் தயாரிப்பாளர் அடைந்த நஷ்டத்திற்கு ஒரு ஆறுதலாக இருக்கும்.  இதன் மூலம் தமிழை வளர்த்தது போலவும் இருக்கும். அதிகமான தயாரிப்புச் செலவு என்று புலம்பும் நபர்களுக்கு உதவுவது போலவும் இருக்கும்.

சிந்தனை எண் 4; பன்னாட்டு கம்பனிகளிலிருந்து வாங்கி தமிழனின் மானம் காத்த தயாரிப்பாளர்களைப் பற்றி ஏன் யாருமே பாராட்ட மறுக்கிறார்கள்?

சிந்தனை எண் 5 : ரஜினியை சின்னப் பையனாகக் காட்டத்தான் ஐஸ்வர்யாவை ஜோடியாகப் போட்டு இருக்கிறார்களாமே உண்மையா ? பல காட்சிகளில் ரஜினி தம்பி போல தெரிவாராமே? அது உண்மையா? சில நாட்கள் பொறுத்திருப்போம்





இதற்கு முன் நாம் எழுதிய் எந்திரன் இடுகைகளுக்கு இங்கே செல்லவும்

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails