Tuesday, March 30, 2010

20-20யின் டான் பிராட்மேன்

பாசத்திற்கு உரிய டோனி,

நீங்களெல்லாம் என்ன செய்கிறீர்கள் என்றே தெரியவில்லை. தலைமுடி வெட்டி ஒரு நாயகன் போல உலாவி வருகிறீர்கள். நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவும் தப்பில்லை என்ற உயரிய கொள்கையுடன் நடத்தப் பட்டு வரும் ஐ.பி. எல் போட்டிகளை வளர்த்துவருபவர்களில் நீங்களும் ஒருவர் என்பதே உண்மை. நீங்களும் சரி, உங்கள் சகா என்றுமே தலைவராக முடியவே முடியாத யுவராஜிம் சரி. நன்றாகத்தான இருக்குறீர்கள். நன்றாகத்தான் ஸ்டைல் செய்கிறீர்கள், நன்றாகத்தான் பேட்டி கொடுக்குறீர்கள். ஆனாலும் என்ன பயன்?

நமது வீட்டு காரமிளகாய் பக்கத்துவீட்டுக் குழம்பில் மிதக்க விட்டு விட்டீர்களே!  டென்னிஸ் ஆடிவந்த மல்லிகை இனி மாற்றான் தோட்டத்தில் மணக்கப் போகிறதாமே..,   சமீப காலத்தில் உங்களால் கிரிக்கெட் தான் விளையாட முடியவில்லை. குறைந்த பட்சம் வில்லனுக்கு வில்லனாகக் கூடவா மாறமுடியவில்லை,

சற்றும் மனம் தளரவேண்டாம். உடனடியாக அஜித் தின் பழைய திரைப் படங்களைப் பாருங்கள். இன்னொருவருடன் நிச்சயம் செய்யப் பட்ட பெண். இன்னொருவரை காதலித்த பெண், இன்னொருவரை மணந்த பெண் போன்றவர்களை எப்படியெல்லாம் நம் வழிக்கு கொண்டுவர முடியும் என்று என்பதை அழகாக விளக்கி இருப்பார்கள்.

இதையெல்லாம் நாங்கள் ஏதோ வயிற்றெரிச்சலில் எழுதும் கடிதமாக நினைக்க வேண்டும். எதிர்காலத்தில் நடக்கப் போகும் ஒலிம்பிக் போட்டிக்களில் இந்தியாவிற்கு கிடைக்க இருக்கும் தங்கப் பதக்கங்கள் வேற்று நாட்டுப் பேரால் வந்து விடக்கூடாதே என்ற தேசப் பற்றால்தான் எழுதுகிறோம்.

கிரிக்கெட்டிற்கு அடிப்படையே டென்னிஸ்தானாமே,  முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பார்களே..,


டென்னிஸ் பதக்கத்தைத்தான் நழுவவிட்டு வீட்டீர்கள்,. 20-20 உலகக் கோப்பையில் நடக்க இருக்கும் சதியையாவது புரிந்து கொள்ளுங்கள்.  இதுவரை தனக்கு கேப்டன் பதவியே வேண்டாம் என்று முடிதுறந்த ஒருவரை துணைத்தலைவராக அனுப்புகிறார்கள். என்னென்னவோ மணிமாறனைத் துணைத்தலைவராக பத்வி கொடுத்து கப்பல் பயணத்திற்கு அனுப்பிய ஆயிரத்தில் ஒருவன் நம்பியார் நினைவிற்கு வருகிறார், மணிமாறன் பதவி வேண்டாம் என்று சொன்னாலும்கூட அவரது வாள்வீச்சு அவருக்கு பதவி வாங்கித்தந்தது போல இங்கும், ஏதாவது நடந்து விடுமோ என்று தோன்றுகிறது  . 

நீங்கள் கவனத்துடன் இருந்தால் ஜோகிந்தர் கூட ஜோராக ஆடுவார். மந்தாரமாய் இருந்தால் மாத்யூ ஹைடனின் மங்கூஸ் பேட் கூட உங்களை ஆட்டமிழக்கச் செய்து விடும் .

போன வருடம் மந்திரா

அடுந்த வருடம் எந்திரா

இதுதான் இங்கு தந்திரா

எச்சரிக்கையுடன் இருங்கள் டோனி. அப்போதுதான் 20-20 யின் டான் பிராட்மேன், ஜார்க்கண்டின் ரிச்சர்ட்ஸ் அப்படியெல்லாம் உங்களுக்கு புகழ்மாலை சூட்ட முடியும். இல்லையென்றால் எதிர்கால கொச்சி அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யுவராஜுடன் போட்டிபோட வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்

இப்படிக்கு

முடியோடு சேர்ந்து முயற்சியைத் தொலைத்த ரசிகர்கள்.

Wednesday, March 24, 2010

பிளாக்கர், பதிவர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி

என்னமோ போங்க..,  கூகிள் அண்ணாச்சி தயவில் காசு செலவில்லாமல் நமக்கொன்று ஒரு பூவை ஆரம்பித்து, சிலரெல்லாம் இரண்டு மூன்று வைத்துக்கொண்டு  விரும்பியதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறோம்.  அந்த வலைப்பூவிற்கு ஒரே சட்டையைப் போட்டு இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது மாற்றுபவர்கள் இருக்கிறார்கள்.

காலையில் ஒன்று மாலையில் மாற்றுபவர்களும் இருக்கிறார்கள். இதில் பிளாக்கர் கணக்கில் வழக்கம்போல் க்ளாசிக் வார்ப்புருக்களை வைத்து அதில் வண்ணங்களை மாற்றி வித்தியாசம் காட்டிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். வெளியாள் கொடுக்கும் வார்ப்புருக்களை போட்டுக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்போது பிளாக்கர் கணக்கிலேயே பல விதங்களில் நமது வலைப்பூவிற்கு  சட்டை, பேண்ட், கோட், சூட் போன்றவை அணிய முடியும். கால்சட்டைக்கு இரண்டு பாக்கெட், மூன்று பாக்கெட் வைத்துக் கொள்ள முடியும். இதெல்லாம் வெளியாள் கொடுப்பதில் இருப்பதில்லை. அதற்கு ஒரே வழி
http://draft.blogger.com  உள்ளே நுழைவது தான் . பின்னர் அதில் நுழைந்து  – Layout ஐ ஒரு தட்டுத் தட்டினால் வழக்கமாகத் தோன்றும் நான்கோடு ஐந்தாக  Template Designer 
 தோன்றுகிறது, அதைத் தட்டி ஒவ்வொரு வகையிலும் நுழைந்தால் அட.., அட...  சட்டை படு சுவாரஸியமாக கிடைக்கிறது .இனி பூந்து விளையாடலாம்.


எனக்கு இந்த தகவல் எப்பூடி.., வலைப்பூ மூலமாக கிடைத்தது.

Tuesday, March 23, 2010

மாத்யூ ஹெய்டன் மட்டையும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும்

ஐ.பி.எல் ஆட்டங்கள் போகும் பாதையப் பார்த்தால் கிரிக்கெட் உருப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. வெகுநாட்களாகவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மென்கள் கடவுள்களாகவும், மற்றவர்களை சார்லி, வையாபுரி லெவலுக்கு வைத்துப் பார்க்கும் நிலையே இருந்து வந்தது. அதுவும் பல போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் ஒரு படி மேலே கீழே போய் காமெடி பீஸாகவே மாறிவிடுவார்கள்.

சூப்பர்கள் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம் பார்த்தவர்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். பந்துவீச்சாளர்கள் உருப்படியாக பந்துவீசினால் ஆட்டத்தை முழுமையாகவே கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும்.

அதுவும் ஒரு பந்துவீச்சாளர் மட்டும் கூட தனது நான்கு ஓவர்களை ஒழுங்காகப் போட்டால் அவர் உடன் வீசப்படும் ஓவர்களையும் சேர்த்து எட்டு ஓவர்கள் கூட முழுமையாக கட்டுப் படுத்தப் பட்டு விடுகிறது,அதைத்தான் முரளி நிகழ்த்தினார். . இந்த கட்டத்தில் களத் தடுப்பாளர்களுக்கும் கொஞ்சம் நம்பிக்கை பெருகி அவர்களும் கூட வேலை ஒழுங்காக செய்ய ஆரம்பித்தால் சுலபமாக ஆட்டத்தை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடிகிறது.

கடைசி ஓவரை உருப்படியாக போட்டால் கூட போதும். அண்ணன் ஜோகிந்தர் டோனியை கேப்டன் வேலையில் நிரந்தரம் ஆக்கியது கூட அப்படித்தான்.  


ஆட்டம் டையில் முடிந்தால் கூட சூப்பர் ஓவரை கொஞ்சம் கவனத்துடன் போட்டால் சுலபமாக வெல்ல முடியும். ஆக  மட்டையாளர்கள் கையிலிருந்த ஆட்டம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக  பந்துவீச்சாளர்களுக்கும் மரியாதை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

சூழ்நிலை சமநிலையியல் விதிகளின்படி அனைத்தும் சமநிலையில் இருந்தால் மட்டுமே அந்த சூழல் நிலைத்து நிற்கும். இது அறிவியல், வரலாறு, புவியியல் ரீதியாக பலமுறை நிரூபிக்கப் பட்ட ஒன்று.

கிரிக்கெட்டில்  மட்டையர்கள் மட்டும் மன்னர்களாக இருந்த நிலைமாறி பந்துவீச்சாளர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்க ஆரம்பித்திருப்பதால் கிரிக்கெட் உருப்பட்டு விடும் என்றே தோன்றுகிறது.

===============================================================

மங்கூஸ் மட்டையைப் பற்றிப் படிக்கும்போது முன்னொரு காலத்தில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நிகழ்ச்சியெல்லாம் நினைவுக்கு வருகிறது,. முதன் முதலாக நினைவு தெரிந்து விளையாடிய மட்டைதென்னை மட்டையில் செதுக்கியது. அதில் ரப்பர் பந்தைப் போட்டு அடித்து விளையாடுவோம். இன்றும்கூட இளஞ்சிறார்கள் அப்படித்தான் இந்தப் பகுதிகளில் ஆரம்பிக்கிறார்கள். அடுத்த கட்டத்தில் கிடைத்த மரக்கட்டைகளை செதுக்கி விளையாடினோம். ஆனால் இன்று அந்தக் கட்டத்திற்கு ரெடிமேட் மட்டைகள் களத்தில் வந்து விட்டன.

போட்டிகள் எல்லாம் பதினைந்து ஓவர்களாக நடக்கும். தொடர் கிரிக்கெட் என்றால் இறுதிப் போட்டி இருபத்தைந்து ஓவர்கள் நடக்கும். பெரிய கோப்பையெல்லாம் வைத்தால் முப்பது ஓவர் போட்டிகளாக் நடக்கும். இப்போது எல்லாமே 20-20 ஆகிவிட்டன.

இது போன்ற போட்டிகளுக்கு எங்கள் சொந்தத் தயாரிப்பு மட்டைகளை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அவை மங்கூஸ் மட்டைகள் போல கைபிடி நீளமாக குட்டையாக இருந்திருக்கின்றன். பிளேடுகள் கூட எங்களுக்க்கு கிடைத்த மரப் பலகைகளைப் பொறுத்து அமைந்திருக்கின்றன. ஆனால் மாத்யூ ஹெய்டனுக்கு மங்கூஸ் மட்டைகள் அனுமதி கிடைக்கிறது, எங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டிருக்கிறது நினைத்தாலே ரத்தம் கொதிக்கிறது.

ஒருவேளை மாங்கூஸ் மட்டையின் காரணமாக மீண்டும் எங்கள் சொந்தத் தயாரிப்பு மட்டைகள் பிரபலமாகும் என்றே தோன்றுகிறது.

புதிய ரக மட்டைகள்

தெண்டுல்கர் உபயோகப் படுத்த  தென்னைஸ் மட்டைகள்

டோணிக்கா டயர்ஸ் மட்டைகள் , மட்டைகளின் தடிமனை அதிகப் படுத்த மட்டைகளில் டயர் சுற்றப் பட்டிருக்கும்.

யுவராஸ் சிங்கிற்கு உருப்பெறா மட்டைகள்   மற்றவர்கள் தயாரிப்பில் முழு உருவம் பெறாத மட்டைகள்  இவரது ரசிகர்கள் விளையாட கொடுக்கப் படும்.

Thursday, March 18, 2010

டோனி நீங்க நல்லவரா/கெட்டவரா?

ஐ. பி. எல் பாருங்க பாஸ். என்னதான் பணம் விளையாடினாலும் நம்ம ஊர் லட்சுமிபதி பாலாஜியெல்லாம் இந்த மாதிரி டி.வி. ல நேரடி ஒளிபரப்பு செய்யும் ஆட்டம், செய்தி தாள்களில் அரைப்பக்கத்துக்கு செய்தி வரும் போட்டிகளில் எல்லாம் கலந்து கொள்ளும் வாய்ப்பு வருமா?

பாலாஜி, பத்ரியெல்லாம் பேர் வாங்கும் அளவுக்கு ஆடப் படும் ஆட்டங்களுக்கு ஒரு ஜே போடுங்க தல..,

உள்ளூர் கிரிக்கெட் வளருது ஓ.கே.., ஆனா தலைவர் பதவிக்கு வெளிநாட்டு ஆட்கள் தேவையா..  எப்படிப் பார்த்தாலும்  மார்க்கெட்டிங் சூப்பராத்தான் போய்க்கிட்டு இருக்கு.  உள்ளூர் பசங்கதான் ஒவ்வொரு அணிக்கும் தலைவராக இருக்க முடியும்ன்னு சொல்லிடலாமே .., கேப்டன் பதவிக்கு ஆட்களைத் தயார் செய்த மாதிரியும் இருக்கும்.

ஏற்கனவே யுவராஜ் சிங்கின் கேப்டன் திறமை நன்கு வெளிப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அவருக்கு மேலும் பயிற்சிகள் தரலாம்.  பார்டர், வாக் போன்றவர்கள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் வக்கார் யூனுஸையாவது கூப்பிட்டு பயிற்சி கொடுக்கச் சொல்லலாம். ஏதோ முதல் வருடத்தில்  நாதியற்றுக் கிடந்த ராஜஸ்தான் அணிக்கு ஓய்வு பெற்ற சானவரன் தலைமையேற்றதை ப் பார்த்து  எல்லோரும் வெளிநாட்டு தலைவர்களை   போட ஆரம்பித்து இருக்கின்றனர்.

அப்படி யாருமே இல்லையென்றால்  கவுரவத் தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்கி வெளிநாட்டு வீரர்களுக்குக் கொடுக்கலாம். அல்லது பொதுச் செயல்ர் பதவியாவது கொடுத்துவிட்டு  தலைவர் பதவியை இந்திய வீரர்களுக்கு கொடுக்கலாமே..,

மகேந்திர சிங் டோனி கையில் ஏற்பட்ட ரத்தக் கட்டு விலக 10 நாள் ஓய்வு எடுக்கப்போகிறாராம். அதனால் சுரேஷ் ரெய்னாவை தலைவராக இருப்பாராம். நல்லவேளை  ஹெய்டனை தலைவராக்காமல் போனார்களே அதுவரை சந்தோஷப் படுங்கள். டோனிக்கு சூப்பர் கிங்ஸ் அணியைவிட நைட் ரைடர்ஸ்தான் பிடித்த அணீயாக இருக்கிறதாமே நிஜமாகவா?

லாரா ஐ.பி.எல் லில் கலந்து கொள்வார் என்று பேசிக் கொள்கிறார்கள்.  அவரெல்லாம் சச்சின் காலத்தில் ஆட வந்தவர். அவரே விளையாட்டு வீரராக வருகிறார். ஏற்கனவே கும்ளே பந்துவீச்சில் அசத்தி வருகிறார்.  20-20 வகையில் கபில்தேவ், கவாஸ்கர் போன்றவர்கள் எல்லாம் விளையாட வந்தால் அவர்களது அனுபவம் புதிய விளையாட்டு வீரர்களுக்கு மிக உதவிகரமாக அமையும். எதிர்கால இந்தியாவில் கிரிக்கெட் வளரவும் உதவும். செய்வார்களா? ஏற்கனவே கில்க்ரிஸ்ட் போன்றவர்கள் தங்கள் அனுபவங்களை இந்திய வீரர்களுக்கு வாரித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

Tuesday, March 16, 2010

என்னைக் கவர்ந்த பத்து பெண் நடிகைகள்

நமக்கும் பெண்களுக்கும் என்றுமே ஒத்துப் போனதில்லை. ஆதியிலும் சரி, பாதியிலும் சரி, வேதியியல் ஒழுங்காக இல்லாமல்  போனதற்கு என்ன செய்ய முடியும். நம்மை யாராவது பிடித்த பத்து பெண்களை பட்டியலிடச் சொன்னால் பெண்கள் என்ற சொல்லைப் பயன்படுத்துவதே பெண்ணடிமைத்தனம் அல்லவா என்று சொல்லி அதைத் தவிர்த்திருப்போமோ..,     சரித்திரம்  படைத்தவர்களை பெண் என்ற கண்கொண்டு பார்ப்பது ஆண் ஆதிக்கம் அல்லவா..,


வழக்கமாக நமது வலைப்பூவிற்கு வருபவர்களுக்கு இதில் வரும் வாசம் கொஞ்சம் வித்தியாசமாகப் படுகிறது அல்லவா..,  என்னை யாரும் அழைக்காமலேயே எனக்குப் பிடித்த பத்து பெண்கள் தலைப்பை நான் எடுத்துக் கொண்டு  இந்த இடுகையை எழுத ஆரம்பித்து விட்டேன்.

சரித்திரம் படைத்தவர்களை பெண்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நினைத்த கூட்டத்தின் வழியே சென்று நான் இன்னும் குறுகிய வட்டத்துக்குள் அடைக்க யோசனை செய்ததில் பிடித்த நடிகைகள் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

1. குஷ்பூ:-

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMba7sbu1948m9XMgwRvMr4GB5cDkIim9UfPKn26zPORP4Wz8ZmW7DAotKMTUzmRQ6bB4-JTk2GqKx-PXvSK5TaM5ZjjNxC8GCN-xHtMVByIHGM3e5zxYHd4kzFtFd5CbVxmReZbIeOPs/s400/kushboo.jpg


பதின்ம வயதில் சுற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவர்தான் மிகவும் பிடிக்கும். என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. கொஞ்ச நாள் கழித்து யோசித்ததில் கண்ணத்தான், கண்ணத்தான் என்று கொஞ்சிக் கொண்டிருந்ததுதான் காரணமாக இருக்கும் தோன்றியது. இருந்தாலும் பிரம்மா எஃபக்ட் மறுக்க முடியாத ஒன்று.  ஆனால் ஏனோ ஜாக்பாட் பார்க்க நமக்கு ஒரு நல்ல காலம் பிறக்க மறுக்கிறது.

2.ராதா:-


இந்த காலகட்டத்தில் நான் பார்த்த இன்னொரு படம் அலைகள் ஓய்வதில்லை.  அந்த படம் பல சுற்றுகளுக்குப் பிறகு எங்கள் ஊருக்கு வந்த போது பார்த்துவிட்டு

தாங்குமோ என் தேகமே..., தென்றலிலே மிதந்து வரும் தேன் மலரே

என்று பாடிக் கொண்டு சுற்றினோம்.

அதே வேகத்தில் சத்தியம் சிவம் சுந்தரம் ( ராம நாராயணன் படம்தான்)  பார்த்துவிட்டு   வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் என்று சுற்றியது நினைவில் இருந்தாலும் அவரது பல படங்கள் பார்க்க இந்த அலைகள் ஓய்வதில்லை எஃபெக்ட் செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.

3.எஸ்.டி.சுப்புலட்சுமி:-

இந்தப் பெயர் சரியா என்று தெரியவில்லை. இருந்தாலும் கதா பாத்திரத்தைச் சொன்னால் சரியாகப் புலப் படும் வாய்ப்பு இருக்கிறது. வேதாள உலகம் படத்தில் சாரங்கபாணி ( நாயகனின் தோழர்) க்கு ஜோடியாக வருவாரே ராஜாக்குட்டி, ராஜாக் குட்டி என்று கொஞ்சிக்கொண்டு வருவாரே அந்த அம்மையார் திரையில் கவர்ந்தவராக இருந்தார்.

4. கிரிஜா

இந்த அம்மையார் நடித்த படமும் உலக்ப் பிரசித்தம். ஆனால் அந்தப் படத்தின் நாயகனுக்கு இணையாக நடிக்கத் தகுந்த இளமையான நாயகிகல் இல்லாததால் இவரை இறக்குமதி செய்தார்களாம்.  அந்தப் படத்தின் வில்லியாகத் தோன்றிய நாயகின் மயக்கும் விழிகளின் முன்னும், நாயகனின் தாயாரான அனல் கக்கும் மொழிகளுக்கு முன் கிரிஜா அம்மையாரின் சிங்கார கண்மனி எடுபடாமல் போய்விட்டதாகவே நினைக்கிறேன். நினைவு கூற விரும்புவர்கள் மனோகரா படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிடவும்.

5. காஞ்சனா

நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா  தா என்று நெளித்து நெளித்து ஆடிவந்தவர்.  இவரைப் போல அழகாக சுரிதார் போட நாயகிகள் யாராவது இருக்கிறார்களா?  வரவு எட்டனா செலவு பத்தனா என்று சோடாப் புட்டி கண்ணாடி அணிந்து ஒரு பெரிய மனிதத் தோரணையோடு இருந்தவர்.   நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் புது வெள்ளம் நதியாக ஓடும் அதில் இளநெஞ்சம் படகாக ஆடும் பாட்டில்  எழுந்து நடக்க முயற்சி செய்து ரசிகர்களை கொள்ளை அடித்தவர். இந்தப் பாடலில் போடும் சுரிதார் கிளிந்து போகும் தன்மையில் இருக்கும் அதனால் காதலிக்க நேரமில்லை சுரிதாரோடு போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது.


6.ராஜஸ்ரீ:-

இவரையும் காதலிக்க நேரமில்லையில்தான் பார்த்தோம். இருந்தாலும் இவரது துள்ளுவதோ இளமைதான்  கண்ணுக்குள்ளேயே இருக்கும் படம். அதில் இவரது விளியோடு போட்டி போட்டு வரும் பாடல் நவீனம். பின்னர் குழந்தைகளுக்கு குடும்பப் பாடல் பாடி செத்துப் போனவர் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டி கொடுத்த போது பத்திரிக்கைச் செய்திகளில் வந்தார்.

7.சில்க் ஸ்மிதா

மேரியின் அண்னன் மனைவி பாத்திரத்தை மறக்க்க முடியுமா..,  அதிலும் வேலைக்காரனை கடைக்குப் போகச் சொல்லும் பாத்திரம்.

பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் இல்லை. என்ற பாடல் கூட இவருக்கு எழுதிய பாடல்தான்.

8. சிம்ரன்:

சிம்ரனை ஏன் பிடிக்கும் என்பதைப் பற்றித் தனியாகச் சொல்ல ஒன்றும் இல்லை. கல்லூரியில் நல்ல தோழி அவர். கல்லூரியில் மற்ற பெண்களைவிட இவர் முகம் பார்த்த நாட்கள்தான் அதிகம். நம் கல்லூரிவாழ்க்கை முடிவுற்ற சில காலங்களில் இவரும் ஓய்வு பெற்றுவிட்டார்.

9.மணிஷா கொய்ராலா

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதப் போகும் காலங்கள், நுழைவுத்தேர்வு எழுதப் போகும் காலங்களில்  ஓடத்துவங்கிய இவரது ஆதிக்கம் ஏறக்குறைய பயிற்சி முடிக்கும் காலம் வரை இருந்தது. கடைசியில் சாமுண்டீஸ்வரியாக செட்டில் ஆவார் என்று நினைத்தபோது மும்பை எக்ஸ்பிரஸில் டிக்கட் ஓய்வு பெற்று விட்டார்.

10. எஸ். வரலட்சுமி

துர்கா என்ற பெயரில் சக்கரவர்த்தித் திருமகளில் அவர் செய்யும் வில்லத்தனம் ஆகட்டும்.  இந்திராணியாக  பாடும் வெள்ளிமலை மன்னவா ஆகட்டும். ஏடுதந்தானடி தில்லையிலே ஆகட்டும்.  தூங்கச் சொல்லும்  பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவினை ஆகட்டும் .இவர் இவர்தான்.


உன்னை நான்றிவேன். என்னையன்றி யாறரிவார் என்னவோ பஞ்ச் டயலாக் மாதிரி தோன்றுகிறது.

Monday, March 15, 2010

நன்றி வலைச்சரமே.....,

மார்ச் 8ம் தேதி முதல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருக்க வாய்ப்புக் கொடுத்திருந்தார்கள்.  வலைச்சர ஆசிரியர் வேலை என்பது அந்தக் கால குமுதம் பொறுப்பாசிரியர் வேலை போல நமது பேரை மட்டும்போட்டுக் கொள்வதாகவோ அல்லது நமது நண்பர்கள் உறவினர்கள் படங்களைப் போட்டு, பேட்டி கண்டு  எங்களோட ஜிம்மி, மத்ததெல்லாம் டம்மி என்று எழுதுவதோ இல்லாமல், ஒவ்வொரு இடுகையிலும்  புதிய பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டுமாம்.  வேலை கொஞ்சம் கடினமானதாகத்தான் இருந்தது, நமது கனவுகளே மாதிரி முழுக்க முழுக்க மொக்கைப் பதிவுகளைப் போட்டு நிரப்பும் இடுகைகளாக இருந்தாலும் ரசிக்கும் படியான இடுகைகள், நம்மால் ரசிக்க முடியாவிட்டாலும்  கருத்துள்ள இடுகைகளை அறிமுகப் படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடனே ஆரம்பித்தேன்.  முழுக்க முழுக்க புதியவர்களை மட்டுமே படித்து, அவர்களுக்கு மட்டுமே பின்னூட்டம் போட்டு ஒருவாரம் காலம் தள்ளினேன். அதில்கூட கடைசி இரண்டு நாட்கள்  விதியின் சதியால் தொலைப் பேசி இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது.  இன்றுதான் மீள முடிந்தது, விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வார்களே  எதாவது பிரவுசிங் செண்டர் போய் இடுகைகள் போடலாம் என்றால் எல்லா பிரவுசிங்செண்டர்களும் நிரம்பி வழிந்து கொண்டு இருந்தன. நமக்கு இடம் கொடுத்த புண்ணியவான்களிடம் தமிழ் டைப்பிங் இல்லை. ஒரு மையத்தில் இருந்த தமிழ் உரு நமக்கு வரவில்லை. சரி என்று அப்படியே விட்டு விட்டேன்.

இன்று இணைப்பு மீண்டும் கிடைத்ததில் மகிழ்ச்சியுடம் வலைச்சரத்திற்கு நன்றியறிவிக்கையாக இந்த இடுகையை நமது பதிவிலேயே போட்டுவிடுகிறேன் நன்றி.., நன்றி....,

===================================================================
முதல் இடுகை:-

புணரலாமா?கூடாதா ?



வலைச்சரத்தின் ஆசிரியராக தேர்ந்தெடுத்த ஆசிரியர் குழுவுக்கும் பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும் நன்றி.

வலையுலகில் மற்றவர்களை அறிமுகப் படுத்துவது என்பதைவிட நான்படித்த சில இடுகைகளை  நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதாகவே இதைக் கருதுகிறேன்.

என்னால் சில இடுகைகள் இன்னும் கூடுதலாக சென்றடையும் என்பதும், என்னால் சிலருக்கு பின் தொடருபவர்கள் கூடுவார்கள் என்றாலும் எனக்கு மிக மகிழ்ச்சி. அந்த வாய்ப்பை வலைச்சரம் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்த வாரத்தினை தொடங்குகிறேன்.

எனவே புதிதாக என்னைப் பார்ப்பவர்கள் நான் எழுதும் எல்லாத் தளங்களையும் புக் மார்க் அல்லது ஃபாலோ செய்து கொண்டு இந்த தளத்தையும் பின் தொடர்ந்து வாருங்கள். வலைச்சரம் மூலம்  முதன் முதலாக பார்ப்பவர்கள் எனது மற்ற பூக்களைத் தொடருங்கள்.  ஏற்கனவே படிப்பவர்கள் இதில் வரும்புது முகங்களைத் தொடருங்கள்.

================================================================

வலைப்பூக்கள் எழுதுபவர்களின் எண்ணங்களில் வலைச் சர ஆசிரியர் பதவி என்பது எப்படி ஒரு கனவாக இருக்கிறது என்பதை  ரங்கன் அவர்களின் இந்தப் பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம்.  அவரே கார் வாங்கிய கதையையும் எழுதி இருக்கிறார், அதையும் படித்துவிடுங்கள். 

ஒரு வயோதிகரிடம் மாட்டிக் கொண்ட வேலைக்காரியின் கதை இதோ

.

==========================================================

//ன்று மாலையும் அதே விவாதம். புணரலாமா கூடாதா என்று.

பளிங்குக் கோப்பையை மேசையில் ஊன்றி, இடமிருந்து வலமாக மெள்ளச் சுற்றினாள். கோப்பையிலிருந்த '94ம் வருட அறுவடையின் இத்தாலிய திராட்சை மது அதற்கேற்ப சுழன்று, கோப்பையின் விளிம்பைத் தொட்டுத் தொட்டு அடங்கியது. "என்ன பார்க்கிறாய்?" என்றாள், எதிரே உட்கார்ந்திருந்த அவனிடம்.//



இப்படி ஒரு கதை ஆரம்பித்தால் என்ன நினைக்கத்தோன்றும்?   சில பல நூற்றாண்டுகள் தாண்டியெல்லாம் போகாமல் நம்மைச் சுற்றியே பின்னப் பட்ட கதை இது.   முதிர்ந்த எழுத்தாளராகக் காட்சி அளிக்கும் அப்பாத்துரையின் எழுத்துக்கள் இவை.  இவரது விபரீதக் கதைகள் கொஞ்சம் விபரீதமாகவே போய் கொண்டிருக்கும். 


======================================================


சில மூத்த பதிவர்கள் மிகக் குறைவாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான அருன் பரத் கோமதிநாயகம் எழுதிய ராஜாக் காலக் கதை. ஆனால் 24ம்புலிகேசி பற்றியது. 


===========================================================
காதல் கதையில் கூட வேகத்தைக் காட்டும் காயத்ரியின் எழுத்துக்கள் இவை. 


=====================================================================


இவர் ஒரு மூத்த எழுத்தாளர்தான் வெயிட்டான ஒரு கதை. ஒரு தம்பியையும் தங்கையையும் ஒப்பீடு செய்திருப்பார் இம்சை அரசி
=====================================================================


கடலை போடுவதற்காக தனியாக வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் வருணின் எழுத்துக்கள் இளமை பொங்குபவை

==================================================================

திருமணத்திற்காக மாமா ஒருவர் எவ்வளவு சிரமப் படுகிறார் என்பது இந்த இடுகையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  
எழுதியவரை பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ள இயலாமல் இருப்பது இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

காந்தித் தாத்தாவின் கண்ணாடி உடைந்திருந்தால்...,

சிந்தனைச் செல்வம் என்பது எல்லோருக்கும் அமையாது.

biopen அவர்களின் சிந்தனை பாருங்கள் எப்படியெல்லாம் போயிருக்கிறது என்று.

=============================================================

நண்பர் கபிலனின் சிந்தனை பாருங்களேன். எப்படியெல்லாம் போகிறது என்று,
 சிநேகா இப்படியெல்லாம் நினைத்திருந்தால் அந்தப் படத்தில் நடித்திருப்பாரா?

================================================================

கபிலன் அப்படியெல்லாம் யோசித்தால்,  நண்பர் சேட்டைக்காரன் எப்படியெல்லாம் யோசிக்கிறார்?  முதலில் இப்படி யோசித்தார்.


பின்னர் இப்படி யோசித்தார்.   அடுத்ததாக இப்படி யோசிக்கிறார்.  இன்னும் யோசித்துக் கொண்டே இருப்பாராம்.


========================================================================

ஆனாப் பாருங்க ஜோதி இந்த மாதிரி இருந்தால்தான் சிந்தனைன்னு லேபிள் போடுவாராம்.

====================================================================

ஆனா எங்களப் பொறுத்த வரை இப்படி இருந்தால்தான் முழுமையான சிந்தனை என்பதை ஒத்துக் கொள்வோம்.  இதுக்குப் போய் பெரிய ஸ்பான்சர்லாம் பிடிக்கணுமா? என்ன?

==============================================================
காந்தியோட நம்பகத்தன்மையையே கேள்வி எழுப்பக்கூடிய இந்த இடுகை வித்தியாசமான என்ற தோற்றத்தில் வந்தாலும் இயல்பான ஒன்றுதான்.

==================================================================
பெருந்தேவியின் சிந்தனைகளை பெண்கள் தின சிறப்பு இடுகையாகப் போடலாம்.
===================================================================

இடுகைகளைப் பற்றிய கருத்துக்களை பின்னூட்டங்களாக பகிர்ந்து கொள்ளலாமே..,>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..

மனைவி கண்கலங்கிய நேரம்

தனது குடும்பத்தார் படத்துடன் ஒரு பதிவு போட்டு தான் நினைத்தவற்றை ஆணித்தரமாகச் சொல்லக்கூடிய இந்தப் பதிவு நான் படித்து மிரண்டது. வெண்ணிற இரவுகளின் இந்த இடுகையை நீங்கள் படித்து விட்டீர்களா..,?

=============================================================
ஆண்மை என்பதன் விளக்கம் இந்த இடுகை என்றால் உங்களது பதில் என்னவாக இருக்கும்? இதுவும் கூட வெண்ணிற இரவின் இடுகைதான்

===============================================================

ஆண்கள், பெண்கள் பற்றியெல்லாம் வெண்ணிற இடுகை தனித்தனியே இடுகைகள் எழுதிக் கொண்டிருந்தாலும்,  சம் உரிமை பற்றி இங்கு மேரி ஜோசப் ஒரு இடுகை போட்டு இருக்கிறார். இதைப் படித்துவிட்டால் நீங்களும் அவரது அடுத்த இடுகைக்காக காத்திருக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

===================================================================
வழக்கமாக இந்த மாதிரி கவிதைகள் படிக்கும்போது பெண்ணீய கவிதை என்று தான் தோன்றும். ஆனால் எனக்கு வேறு மாதிரி தோன்றியது. நீங்களும் படித்துப் பாருங்கள்.  நண்டு@நொரண்டு   எழுதியது

===============================================================

நெருங்கிய உறவினரான ஒரு பெண்ணிற்கு நளினி என்று பெயர் வைத்து ஒரு இடுகை கொடுத்துள்ளார், ஜிகர்தண்டா.  ஆனால் அந்தப் பெயர் அந்த இடுகைக்கு முக்கியமல்ல.  ஆனால் நளினி என்ற பெயருக்கு காரணம் கொடுத்துள்ளார் பாருங்கள்.  அட.. அட... அட...,

================================================================
ஒரு மனைவி கண்கலங்கிய கதை இது.., உணர்வுகள் உடைப்பெடுத்த கதை. மங்குனி அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும்.

=====================================================================

புருஷன் பொண்டாட்டி சண்டையில முதல் அடி வெங்கட்டுத்தான் என்பதை சுட்டிக் காட்டிய இடுகை இது. ஆனால் இதில் வெங்கட்டுக்கு ஏன் விழ வேண்டும் என்பதை அறிய இடுகையைப் படியுங்கள்.

===============================================================

பிரபல பதிவர் ராஜ நடராஜனின் பதிவு இது. ஒரு முக்கியமான விஷயத்தை அதில் சேர்க்காததன் காரணம் எல்லாருக்கும் தெரிந்ததுதானே..,

========================================================================
பெண்ணுக்கு பேர் வைக்கறதுக்கு முன்னாடி எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்குது பாருங்க, ரோஸ்விக் னா அப்படித்தான்.

======================================================================

சில விஷயங்கள் அனுபவித்தால் மட்டும் புரியும்.  Empiric RaaGo  அவர்களின் இந்தப் பதிவினை அனுபவித்துப் பாருங்களேன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

ஆண்ட்ரியா சாயல்காரர்களும். டோனி முதலானவர்களும்


சச்சின் சாதனையைக்கூட முறியடிக்கும் காலம் வரலாம். கவாஸ்கரின் இந்த சாதனையை முறியடிக்க இன்னொரு நபர் பிறந்துதான் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவரது அண்ணன்கள் பற்றிய லோகநாதனின் பதிவு இது
===========================================
ஐ.பி.எல் போட்டிகளின் போது இந்த ஆண்டும் ஒரு ஃபேக் பிளேயர் வரப்போகிறர்ராம். அவர் அமெரிக்க தமிழராம். இந்த இடுகையின் பின்னூட்டம் சொல்கிறது.
பதிவர் பழையவர் என்றாலும் இந்த பதிவு புதிது, இடுகைகள் புதிதோ புதிது
==============================================

ஒரு காதலியின் மனதில் காதலன் இருப்பதை அறிய தாடி பயன்படூம் என்று
எறும்பின் இந்த் இடுகை சொல்கிறது.

===================================================

ஊக்கப் படுத்துவது என்றால் என்ன? என்று +2 தேர்வில் கேட்டால் சாதிகாவின் இந்த இடுகையை அப்படியே தள்ளிவிட்டுவிடலாம்

==============================================


சச்சின் சம்பளத்தைக் குறைப்பது பற்றீ மின்னஞ்சலில் படித்திருந்தாலும் படிக்காதவர்கள் இந்த தளத்தில் போய் படித்துக் கொள்ளுங்கள்.

==========================================================

எனக்கு மிகப் பிடித்த ஒரு கிரிக்கெட் வீரர் தலைவர் ஆகமாலே ஓய்வு பெற்றுவிட்டார். அது ஏன் என்பதை விதூஷ் இந்த இடுகையில் எழுதியுள்ளார். இதை எல்லோரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

=======================================================

குச்சியை வைத்தே சாதனை செய்த நபரைப் பற்றி சசிக்குமார் இந்த இடுகையில் சொல்லி இருக்கிறார். ஒரு எட்டுப் பாருங்கள். அசத்தல் புரியும்.

==================================================

தண்டல் வளருவது எப்படின்னு ஒரு கவிதை

Toto எழுதியிருக்கிறார். சுருங்கச் சொன்ன நிறைவான கவிதை.

==================================================================

லண்டன் போலிஸ் ரஜினியைத் துறத்திய கதை உங்களுக்கு தெரியுமா?

தெரியலேன்னா கோழிப் பையனைக்கேளுங்க

=======================================================

டோனியின் கேரக்டர் தெரியுமா உங்களுக்கு? தெரியாதவர்கள் இவர்களைப் போய் பாருங்கள். கூடவே ரஞ்சிதா பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

==============================================

சின்ன வீடு படத்தில் கவாஸ்கர் சதம் அடித்த செய்தியும் அடுத்த நாள் மீண்டும் சதம் அடித்த செய்தியும் மீண்டும் ஒலிபரப்பப்படும். அந்த சூழ்நிலைக்கு ஏற்ற் கவிதை  சரவணன் சாரதிக்குச் சொந்தம்.

=============================================================
ஐ.பி.எல் அழகிகள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். பாருங்கள் யாருக்காவது ஆண்ட்ரியா சாயல் தென்படுகிறதா? தொகுத்தவர் சிவ்

====================================================================

சச்சின் பெரியவரா? லாரா பெரியவரா என்ற சச்சரவு இங்கே நடக்கிறது. உயிரெழுத்துன்னா சும்மாவா..,

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

வெள்ளிக் கிழமை வெளியீடு இது

பொதுவாக நடிகைகளைப் பாராட்டி ஒரு இடுகை எழுதுவது என்பது மிகவும் சிரம்ம். எழுதுவதற்கு விஷயம் கிடைத்தல் என்பதைவிட மனம் வருதம் என்பது மிக அபூர்வர்ம். ஆனால் ரகுநாதனுக்கு அந்த மனம் இருக்கிறது. அவரை பாராட்டியே தீர வேண்டும்.படங்கள் வேறு போட்டு இருக்கிறார்.
========================================================
தியரி ஆஃப் ரிலேடிவிட்டி என்ற தத்துவம் யார் சொன்னது தெரியுமா? அதன் அடிப்படையில்தான் இந்த இயங்கிறது என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? பிரபுச் சந்திரனின் இந்த இடுகையைப் படித்துவிட்டுப் பின்னர் விவாதிப்போம். வாருங்கள்.

============================================================

சூரியனுக்கே லைட் அடிக்கும் பதிவு இது. லைட் அடிப்பவர் லேகா

=============================================================
சில கதைகளைப் படிக்கும்போது வாய்விட்டுச் சிரிக்கத்தோன்றும். சில கதைகளைப் படிக்கும்போது மனம் விட்டு அளத் தோன்றும். எல்லாக் கதைகளையும் பழைய இலக்கியவாதிகள் ஏதாவது ஒரு கோணத்தில் தொட்டுச் சென்றிருப்பர்.   ஆனால் ஒரு மனிதனின் வெகுசாதாரண உணர்வு புரிந்து கொள்ளப் படாமல் இருந்து அவனின் மிகப் பெரிய இழப்பின்போது கூட அவனின் மிகச் சாதாரண உணர்வு புரிந்து கொள்ளப் படாமல் இருந்து அதுவே அவனுக்கு ஒரு சுமையாய் இருப்பதுவாக  கடுகைத் துளைத்து ஏழ் கடலை நுழைக்கும் வேலையை விட இந்த கதைமாந்தர்கள்களை புரிந்து கொள்வது சிரமமோ? சுந்தராவிடம் கேட்டுப் பாருங்கள்

=======================================================

தகாத உறவு, பொருந்தா உறவுக் காதல், பொருந்தா வயதுக் காதல் சதிவேலைகள் நிறைந்த ஒரு கதை தினமும் படங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்தத் தளத்தில்.  
ஆசிரியர் பெயர் கூட நந்தாவில்தான் முடிகிறது.

===============================================================
மிகப் பிரபலாமன ஒரு தளம் இது. எனக்கென்னவோ நிறையப் பேரை சென்றடையவில்லையோ என்ற எண்ணம் உண்டு அதனால் இதற்கும் சேர்த்து ஒரு அறிமுகம்


============================================================


எதிர்ப்பு மட்டும் முக்கியமா? முன்னேற்றமும் அவசியம்தானே? இது போன்ற இடுகைகள் நிறையப் பேருக்கு புரிவது இல்லை. சிலர் புரிய விரும்புவதும் இல்லை.

===============================================================

உங்கள் பார்வை பறந்து விரிந்து விசாலமாக அமைய லக்கி லிமட்டின் இந்த இடுகையைப் படியுங்கள்.

==============================================

அடுத்து எந்த சாமியார் மாட்டப் போகிறார் என்பதை அறிவியல் ரீதியாக விளக்கும் இடுகை இது. பாஸ்கருடையது.

=======================================================

இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த ஒரு இடுகைபோதும். பெயர் சொல்லாவிட்டால் கூட நீங்கள் வலைப்பூவிற்குப்  போனால் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.  வலைப்பூவின் பெயர் சும்மா

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>...
பின்னூட்டங்கள் குறைவாக வந்திருந்தாலும் இந்தவாரத்தில் நான்கு பிந்தொடர்பவர்கள் வலைச்சரத்திற்கு அதிகரித்து இருக்கிறார்கள். வரூகைகளும் கூட சராசரியாகத்தான் இருந்தது.  நம்மால் வலைச்சரத்திற்கு எந்த கெட்டபெயரும் இல்லை என்ற நம்பிக்கையுடன் மீண்டும் ஒருமுறை வலைச்சரத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, March 7, 2010

வசிய மருந்து வைத்து காரியம் சாதிப்பது எப்படி?

சாமியார்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்றால் வசிய மருந்து செய்ய தெரிந்திருக்க வேண்டும். வசிய மருந்துகளை நன்றாக தயார் செய்து அதனை பக்த கோடிகளுக்குக் கொடுத்து பக்தர்களுக்கு தாங்கள் நினைத்தது நடந்துவிட்டால் கண்டிப்பாக பக்தர்கள் கூட்டம் உங்கள் பக்கம்தான்.

ஏற்கனவே பேயோட்டும்தொழில் வெற்றிகரமாக நடத்த வழிமுறைகள் பார்த்தோம். இந்த இடுகைகள் வசிய மருந்து வெற்றிகரமாக கொடுப்பது பற்றி ஆராய்வோம்.

கிராமத்திலிருந்து ஆரம்பித்து வருவதால் கிராமத்தில் வசிய மருந்து எவ்வாறு செய்து கொடுத்து வெற்றி பெறுவது என்பது பற்றி பார்ப்போம். சிறுநகரத்திற்கும் இது பொருந்தும்.  பெரு நகரத்திற்கு கொஞ்சம் தில்லாலங்கடி வேலை செய்ய வேண்டும் அவற்றைப் பின்னர் பார்க்கலாம்.


வசிய மருந்து கேட்டு வருபவர்களை  வகைப் படுத்த வேண்டும். கணவன் தன்னிடம் அன்பாக இல்லை. மனைவி அன்பாக இல்லை என்றும் அவர்களை வசியப் படுத்த மருந்து கேட்டு வருபவர்கள் ஒரு கூட்டம்.

புகுந்த வீட்டுக்காரர்களின் அன்பைப் பெற முயற்சித்து வசிய மருந்து கேட்டு வருபவர்கள் ஒரு கூட்டம்.

தான் நினைத்திருக்கும் இளைஞன், இளைஞி க்கு  மருந்து கொடுத்து மயக்க நினைக்கும் கூட்டம் ஒன்று.

பக்கத்து வீட்டுக்காரனையோ அவனது மனைவியையோ மயக்க நினைக்கும் கூட்டம் அடுத்தது.

பெரும்பாலான வசிய மருந்து பார்ட்டிகள் இந்த வரையறைக்குள் வந்து விடுவார்கள்.


முதல் இரண்டு வகையினரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களது பிரச்சனை ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் கூட பிரச்சனை தீர்ந்து விடும். யார் விட்டுக் கொடுப்பது என்ற ஈகோவில் தான பிரச்சனை வளர்ந்து கொண்டே போகும். குறிப்பிட்ட காலத்தில் இரு சாரரும் எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். நிம்மதி மட்டும் கிடைத்தால் போதும் என்ற சூழலில் இருப்பார்கள்.  ஆனால் கணவனிடமோ, மனைவியிடமோ அல்லது புகுந்த வீட்டினரிடமோ  விட்டுக் கொடுப்பது என்பதை மட்டும் அவர்களது ஈகோ அனுமதிக்காது.


ஒருவர் விட்டுக் கொடுத்தால் மற்றவர் தானே வழிக்கு வந்து விடுவார். ஆனால் விட்டுக் கொடுக்க மாட்டார்.


வசிய மருந்து சாமியாராகிய உங்களிடம் இது போன்ற ஆட்கள் வந்தால் உங்கள் பாடு கொண்ட்டாட்டம்தான்.  நீங்கள் அவர்களுக்கு தேன், தினைமாவு போன்ற ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்து பூஜை செய்து இதை சம்பந்த பட்டவர்களிடம் இந்த பவுர்ணமி முதல் அமாவாசை வரை கொடுத்து வரச் சொல்லுங்கள்.

மனைவி தினமும் குளித்து , பூ முடித்து இனிப்புப் பலகாரங்கள் செய்து கொடுத்தால் எந்த ஆண்மகனும் வீழ்ந்து விடுவான்.

அதேபோல கணவனும் தினமும் பூ, அல்வா வாங்கிக் கொடுத்து வந்தால் மனைவி சுலபமாக மடங்கி விடுவாள். இந்த பலகீனத்தை வசிய மருந்து சாமியாராகிய நீங்கள் உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்.  நீங்கள் கொடுத்த வஸ்து வால்தான் பிணக்கு நீங்கியது என பெயர் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் மாமனார் மாமியாருக்கும் தினமும் பூஜை செய்யச் சொன்னால் வயதான அவர்கள் மிகச் சுலமாக அல்வாவில் வீழ்ந்து விடுவார்கள்.

அப்படிநீங்கள் கொடுத்த வசிய மருந்தில் மயங்க வில்லை என்றால் கவலைப் படவேண்டியதில்லை.  யாரோ செய்வினை வைத்திருப்பதாகச் சொல்லி நீண்டகால பூஜையை செய்யச் சொல்லலாம். கண்டிப்பாக நீண்டகாலம் வாழ்க்கைத்துணைகளில் ஒருவர் அடுத்தவரின் அன்புக்காகப் போராடினால் வெற்றி கிடைத்தே தீரும்.  

அதை வசிய மருந்துதான் காரணம் என்று கூறி  நீங்கள் நன்றாகப் பைசாப் பார்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே போகும்.

அடுத்ததாக காதலன், காதலி, அடுத்தவன் மனைவிக்கு வசிய மருந்து கொடுத்தல்

இது கொஞ்சம் சிக்கலான பிரச்ச்னை போல் தெரிந்தாலும்  வசிய மருந்து செய்து கொடுக்கும் தொழிலுக்கு வந்து விட்டால் சவாலை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.  முதலில் மேற்கண்ட ஆட்களிடம் நேரிடையாக இந்த மருந்தினைக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துவிடுங்கள்.

(சமீபத்தில் கூட ஏ என்ற நபருக்காக பி என்ற நபர் ஒரு பெண்ணிடம் வசிய மருந்து கொடுக்க பி என்ற நபருக்கு பெண் செட் ஆகிவிட பிரச்சனை கொலையில் முடிந்த கதை செய்தித்தாள்களில் வந்தததல்லவா.., அவற்றை அவர்களிடம் சொல்லிவிட வேண்டும்)

இவர்களுக்கும் அதே போல்தான். உங்களிடம் இருக்கும் தேன், தினைமாவு அல்லது அங்காடிகளில் கிடைக்கும் குழந்தை உணவுகளில் ஏதாவது கொஞ்சம் கொடுத்து சம்பந்தப் பட்ட நபரிடம் கொடுக்கச்சொல்ல வேண்டும்.

இங்கேதான்  ஒரு தொழில் நுணுக்கத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யாரென்றே தெரியாத எந்த நபரிடமும் யாரும் வாங்கிச் சாப்பிட மாட்டார்கள். உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாலே தவறுக்கு முதல் படி ஆகிவிடும். மற்றவைகளை காரியம் சாதிக்கும் நபர் முடித்துக் கொள்வார்.  ஆனால் உங்கள் வசிய மருந்தால்தான் வீழ்த்தியதாக நினைத்து புலகாங்கிதம் அடைவார்.

இதுபோன்ற எளிய முறைகள் மூலம் 95 % சதவீத வசிய மருந்துகள் வெற்றியடைய வைத்து விடலாம். மீதமுள்ளவர்களுக்கு முழு நம்பிக்கைய்ப்ப்டு கொடுக்க வேண்டும். அப்போதுதான் பலிக்கும் என்று சொல்லி காலந்தாழ்த்தலாம்.  கிரக நிலைகள் சரியில்லை என்று சொல்லி காலந்தாழ்த்தலாம்.   அல்லது கேரள் சாமியார், இமயமலை சாமியாரின் வசிய சக்தி ஏற்கனவே அங்கு செயல் கொண்டு இருப்பதால் தனது சக்தி பலிக்கவில்லை என்று சொல்லலாம்.

இது போன்று ஒப்புக் கொள்ளும்போது உங்களது நேர்மை பக்தர்கள் மத்தியில் மேலும் உயர்வடையும்.  நீங்கள் சொல்வதை அப்படியே கேட்க ஆரம்பித்து விடுவார்கள். வசிய மருந்து கொடுப்பதில் நீங்கள் புகழ்பெற்றுவிட்டால் உங்கள் தொழில் பண மழை கொட்ட ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.

Friday, March 5, 2010

சக்ஸஸ்புல் சாமியார் தொழில் ஒரு எழுச்சிக் கட்டுரை

இன்றைய தினம் தமிழ் கூறும் நல்லுலகம் பொறாமைப் படும் ஒரு வேலை சாமியார் வேலை. சாமியாராக மாறுவதற்கு நல்ல வழியும் வழிகாட்டியும் இல்லாமல் தமிழ் இளைஞர்கள் சிரமப் படுவதை நீக்கும் பொருட்டே இந்த இடுகைகள் வரப் போகின்றன.

மிகச் சுலபமாக பணம், புகழ், பெண் சேர்த்துக் கொள்ள எளிமையான வழியாக சாமியார் வேலை இருப்பதால் இளைஞர்களின் பார்வை இதில் அதிகமாக இருக்கிறதாம்.

டிஸ்கி:-

நடுக்காட்டில் அமர்ந்து கொண்டு உடல் முழுவதும் புற்று வளர தவம் செய்யும் சாமியார், தனது உடலைத் திரியாக மாற்றி விளக்கேற்றிய சாமியார் ஆகும் தொடர் அல்ல இது.  முழுக்க முழுக்க கமர்சியல் சாமியார் ஆகும் ஒரு தொடர்.


முதலில் உங்கள் தேவை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தினமும் வயிறு முட்ட சோறு , பீடி வாங்க கொஞ்சம் காசு என்றால் பேசாமல் ஏதாவது ஒரு கோவில் வாசலில் உட்கார்ந்து கொள்ளலாம்.


பணம், புகழ் வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமப் பட வேண்டும்.

உங்கள் தேவை  தினமும் நாட்டு சரக்கு அடிப்பது என்றால் நீங்கள் பேய் ஓட்டும் சாமியாராக மாறினால் போதுமானது.


பேயோட்டும் சாமியாராக மாற கொஞ்சம் பயிற்சி எடுத்துக் கொண்டால் போதுமானது.

அடிப்படையில் நீண்ட கூந்தல், பெரிய மீசை, வைத்துக் கொள்ள வேண்டும்.. உடுக்கை அடிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.  உடுக்கை பழக முடிய வில்லை என்றால் கவலைப்பட தேவையில்லை. நன்றாக சத்தம் வரும் ஏதாவது ஒரு வாத்தியத்தை கற்றுக் கொண்டால் போதும். தென்னை ஓலையில் செய்யும் விசில் கூட சாமியாருக்கு உதவும். ஆனால் இரவு முழுவதும் வாசிக்க உடுக்கைதான் வசதியான வாத்தியம்.

அடுத்ததாக தெலுங்கு அல்லது மலையாளப் பாட்டு ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் . இதை நாம் ஜெமினி, அல்லது சூர்யா டிவி மூலமே கற்றுக் கொள்ளலாம். அந்தப் பாட்டை  பழைய எம்,ஜி,ஆர் அல்லது சிவாஜி பாட்டு மெட்டில் பாடினால் போதும். குறிப்பாக அந்த ஊர் மக்களுக்கு பாட்டு புரியக் கூடாது, அதாவது தெலுங்கு பேசும் மக்களுக்கு தெலுங்குப் பாட்டு ஆகாது.


உங்கள் நண்பர் யாராவது வசிக்கும் ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள புற்ம்போக்கு இடத்தில் ஒரு குடிசையை கட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் நண்பர் மூலமாக மக்களிடம் ஒரு பில்-டப் கொடுக்க வசதியாக இருக்கும். அந்த இடத்தின் அருகிலுள்ள மரங்களை கணக்கெடுத்துக் கொண்டு ஊர் மக்களிடம் அள்ளி விட வேண்டும்.

உதா.     என் கனவில் ஆடு காத்த ஆண்ட்ரியா ஆத்தா வந்து வடக்கில் மூன்று கொய்யா மரமும் தெற்கே தென்னை மரமும் இருக்கும் இடத்தில் தனது சக்தி பொங்கு வருவதாகவும் அங்கு போய் அந்த ஊர் மக்களை காப்பாற்றுமாறு சொன்னதாக சொல்ல வேண்டும்/   கொய்யாமரத்திற்கு பதில் அங்கே உள்ள மாமரம், புளிய மரம் எது அங்கிருக்கிறதோ அதைச் சொல்லலாம். அதனால்தான் இந்த இடத்தில் கோயில் கட்டி இருப்பதாகச் சொல்ல வேண்டு,ம்.


அந்த ஊரில் கடந்த சில ஆண்டுகளில் இறந்தவர்கள், அகால மரணம் அடைந்தவர்கள் பற்றிய  விவரங்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு போய் உட்கார்ந்து இருந்தாலே போதும் சில தினங்களில் பேய் ஓட்டுவதற்கு ஏதாவது ஒரு பெண்மணியை அழைத்து வந்து விடுவார்கள். உடனே பேய் ஓட்ட ஒத்துக் கொள்ளக் கூடாது.  அமாவாசை, அஷ்டமி, நவமி இப்படி ஏதாவது சொல்லி அந்த நாளீல்தான் ஓட்ட ஆரம்பிக்க வேண்டும்.


ஓட்ட ஆரம்பிக்கும்போது அந்த பெண்ணின் ஐ.க்யூ வைப் பார்த்துக் கொள்ளவேண்டும். உள்ளூர் தாண்டாத பெண்ணாக இருந்தால் அந்த ஊரில் சமீபத்தில் இறந்தவர்கள் பெயரைச் சொல்லிவர அந்தப் பெண் பெரும்பாலும் ஒத்துக் கொள்வார்.   சில தினங்கள் ஆடிவிட்டு மலையேறி விடுவார்.

அவ்வாறு மலையேறவில்லை என்றால் கவலைப் பட வேண்டியதில்லை. இன்னும் இரண்டு அல்லது ஐந்து பேய் இருப்பதாகச் சொல்லி ஓட்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

அப்படியும் அடங்க வில்லை என்றால் அடுத்த மாவட்டத்தில் அகால மரணம் அடைந்த வர் பெயரை சொல்லி ஓட்ட வேண்டியதுதான், அவர் பெயரை சரி பார்க்க யாரும் முனைய் மாட்டார்கள் .  ஓட்டும் காலம் முழுவதும் நாட்டுச் சரக்கு வாங்கி வரச் சொல்லிவிட்டால் போதும். திகட்ட திகட்ட நாட்டுச் சரக்கு கிடைக்கும். புதிதாக சூடாகக் காய்ச்சித் தரச் சொன்னாலும் தருவார்கள்.

அப்படியும் பேய் இறங்கவில்லையென்றால் அதற்கும் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. இருக்கவே இருக்கிறது கேரளா.  கேரளாவில் உள்ள தங்கள் குருநாதரிடம் சென்று ஒரு கயிறு மந்தரித்து வரவேண்டும்.  தலைச்சன் ஆண்குழந்தை பெற்ற ஒரு ஆள் தன்னுடன் வந்தால் கயிறு வாங்கி வரலாம் என்று அழைத்தால் யாரும் வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும் போகும்போது நல்ல ஓட்டல்களில் சாப்பிட்டுவைட்டு வரும் போது பாடாவதி ஓட்டலில் சாப்பிட்டு அழைத்துவந்தால் அவருக்கு உடல் நலம் கெட்டுப் போகும். அது பேயின் செயல் என்று கூறிவிடலாம். 

வரமறுத்தால் ஒரு கட்டுச் சேவலை அழைத்துச் சென்று சொந்த ஊரில் கொஞ்ச நாள் ஓய்வெடுத்துத் திரும்பிச் செல்லலாம். சில நாட்களுக்கு சேவலுக்கு உணவே போடாமல் விட்டால் சேவல் நோஞ்சானாய் மாறிவுடும். அதற்குக் காரணம் பேய் என்று சொல்லிவிடலாம்.

இவ்வளவு பூஜைகளும் செய்துவிட்டால் அந்தப் பேய்பிடித்த பெண்ணே பேய் போய்விட்டதாகச் சொல்லிவிடுவார்.

அப்புறம் என்ன ! உங்கள் பாடு கொண்டாட்டம்தான்.


டிஸ்கி:- உங்களுக்கு எந்த வகைச் சாமியார் வேண்டுமென்று சொன்னால் முன்னுரிமை அடிப்படையில் இடுகை வெளியிடப் படும்

Thursday, March 4, 2010

காற்று வந்த கதை

                                                         என் கணவா!  இது கனவா?

வீடு திரும்பும் துணைவன்

விழுந்தான் படுக்கையில்

கால்கள் பிடித்து

கைகள் அமுக்கி

தோளோடு தோள் சேர்ந்து

என் துணைவன்

என்னவன் துணை

காலையில் எழுந்து

காஃபி கொடுத்து

அயர்ச்சி நீக்கி..,

ஆஹா..,

நல்லவனோ.., கெட்டவனோ

வாழ்க்கைப் பயணத்தை

வழி நடத்தி

தந்தையின் வழியின்


தனையனும் அறிவாளியாய்


அறிவுரைகள் சொல்லி


தொடர்கள் எழுதி



கடவுள்களைக் கடந்த


கடவுளாய் மாறி.................,




நெற்றிக் கண்ணின் வெப்பம்



சூரியன் கதிர்கள்..,


வண்டி பஞ்சர் ஆனது



காற்றுப் போனது

கடவுள் கனவு

கடவுளுக்கே வெளிச்சம்

Tuesday, March 2, 2010

சுவாமி நித்யானந்தா விவகாரம்- பதிவர்களுக்கு கண்டனம்

சுவாமி நித்தியானந்தாவைப் பற்றி வலைஞர்கள் வளைத்து வளைத்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர்  சன் டி.வி. செய்தியை அடிப்படையாக வைத்து சுருக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள் . நான் படித்தவைகளில் வால்ப்பையனின் இடுகை மட்டும் கொஞ்சம் விவரித்து எழுதப் பட்டு இருந்தது. வேறு யாரேனும் விவரித்து  இருந்தால் படித்துவிடலாம். நக்கீரன் செய்தியும் கூட சுருக்கமாக எழுதப்பட்டு இருந்தது.

அனைத்திற்கும் ஆதாரம் சன் டி.வி. செய்திகள் மற்றும் அதில் வந்த குறும்படம். தமிழ் பதிவுலகம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். என்னைப்போல நிறையப் பேர் 10.00மணிக்கு மேல் வீடு திரும்புவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். சன் டி.வி.யில் மறு ஒளிபரப்பு இருந்தாலும் குழந்தைகள் தூங்குவதால் டி.வி . தடை செய்யப் பட்டவர்களும் நிறைய இருப்பார்கள்.  அமெரிக்காவில் அலுவல்கத்தில் இருப்பர்வர்களும் இருப்பார்கள்.

நாங்கள் எப்படி இதை நம்புவது? பிளாக்கர் கணக்கில் ஏற்றி இருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் யூ ட்யூபிலாவது சேர்த்திருக்க வேண்டாமா? அல்லது ஸ்நாப் ஷாட் மட்டுமாவது கொடுத்திருக்க வேண்டாமா?

மின்னல் வேகத்தில் விடுபட்ட பகுதிகளையெல்லாம் நமது பார்வைக்கு கொண்டுவந்திருக்க வேண்டாமா? 

நாங்கள் பார்த்தால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் நம்புவோம். எனவே நாங்கள் இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க உடண்டியாக ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத்தவறும் அனைத்துப் பதிவர்களுக்கும் எனது கண்டனத்தை இங்கு பதிவு செய்து கொள்ளவிரும்புகிறேன்.

என்னோடு சேர்ந்து கண்டனத்தை பதியவிரும்புவர்கள் வந்து பதிந்து விடுங்கள்

செந்தழலின் தளம் இங்கே

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails