Sunday, January 31, 2010

விஜய்க்க்கு கொடுக்கப் படாத அங்கீகாரம் 31-1-10

தமிழ் ப் படம் தமிழ் வலைஞர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஏதோ தமிழின் முதல் ஸ்பூஃப் படம் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர் டிவியில் விளம்பரங்களும் பாடல்களும் அசத்திக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே சோ முதலான சிலர் சில படங்களை எடுத்திருந்தாலும் இந்த ஆண்டின் முதல் ஸ்பூஃப் படமாக வேட்டைக்காரனே (சில நாட்களுக்கு முன் வெளிவந்திருந்தால் கூட) அமைந்திருந்தது. ஏனோ அதை அங்கீரங்கரிக்க தமிழ் சமுதாயம் மறுக்கிறது.


படத்தின் ஆரம்பத்திலேயே  ஒரு போலீஸ் அதிகாரிக்கு கட் அவுட் வைப்பது, அவரது செய்திகளை சேகரிப்பது என்று முதல் காட்சியிலேயே அதகளம் பண்ணியிருப்பார்கள்,  அவரைப்போலவே 4 வருடம் ஃபெயில் ஆவது ரசிகர்களை கேலி செய்வது போல இருந்தாலும் படங்களில் வந்துள்ளது என்று பார்த்தால் பக்தி படங்களையும், அதில் வரும் சடங்களையும் கேலி செய்வது போல எடுத்துக் கொள்ளலாம்.

போலீஸாக ரயில் ஏறி சென்னை வருவது, அவர் போலவே ஆட்டோ ஓட்டுவது என்று ஒரு சினிமா தாகத்தில் ஓடி வருபவர்களை கேலி செய்வதாகவே படம் அமைகிறது.

பாஷா படத்தில் ஒரு அடியில் அடியாள் போய் மின் கம்பத்தின் உச்சியில்தான் விழுவார். ஆனால் வேட்டையன் அடித்தால் அந்த சிமிண்ட் கம்பமே இடியும் காட்சிகள். ஏனோ ரசிக கண்மனிகளுக்கு விளங்கவில்லை.

அடுத்ததாக தூக்குகுடியில் சாத்துக்குடி காட்சி..,

காதலுக்கு மரியாதை புத்தக காட்சியை இமிடேட் செய்தது ஏனோ நிறையப் பேர் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.

அனுஷ்கா சம்பந்தப் பட்ட அனைத்துமே பல எம்ஜியார், ரஜினி படங்களை இமிடேட் செய்யப் பட்டிருப்பதுதான். அதையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை.

படையப்பா படத்தில் ரஜினியை இளைமையாக காட்ட அவரது நண்பர்களாக ஓரளவு முத்திய நண்பர்களாக போட்டிருப்பார்கள். அதே போல் விஜயை இளமையாக காட்ட அனுஷ்காவை நாயகி ஆக்கி இருக்கிறார்கள்.

வில்லனின் கோட்டைக்குள் நாயகன் புகுந்து சவால் விடும் காட்சிகள் ஏராளமாக வந்து விட்டன.  வேட்டைக்காரனிலும் அப்படி ஒரு காட்சி வருகிறது.  விஜய் பேசி விட்டு வெளியேறியதும் ஜிந்தா அடியாளிடம் ஒரு கேள்வி கேட்பாரே..,

எல்லாரும் படம் பார்த்துவிட்டதால் வசனத்தையும் சொல்லிவிடலாம்.

ஏண்டா.., அவன் பேசிட்டு இருக்கும் போது என்னடா செஞ்சிட்டு இருந்தீங்க..,

இதைவிட அந்த காட்சிகளை கேலி செய்ய ஏதாவது செய்ய வேண்டுமா? என்ன!

வழக்கமாக விஜய் சட்டைக்கு பட்டன் போடாமல் இருப்பார். அதையும் கூட இதில் கேலி செய்து அதற்கு மேல் பட்டனே இல்லாத ஒரு மேல் சட்டை அணிந்திருப்பார். ( அனுஷ்காவை கடத்தும் காட்சி). பின்னர் அதையும் கழட்டி சண்டை போடுவார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் அல்லவா..,!

கரப்பான் பூச்சி மருந்தடித்து விஜய் ஒரு படத்தில் வில்லனின் அடியாளை கொல்வார். இதில் போலிஸின் கண்ணை வில்லன் குருடாக்குகிறார்.

ஜாக்கி சான் ஷாப்பிங் காம்பளக்ஸில் போடும் சண்டைகளையும், துணியைப் பிடித்து குதிக்கும் காட்சிகளையும் விஜய் அதகளம் பண்ணிய விஷயமே  நமக்கு தமிழ் படம் பார்த்த பிறகுதான் புரிகிறது.

ஒரே பாடலில் பணக்காரன் ஆவது, ரவுடி பாஸ் ஆவது மாதிரி காட்சிகளை இவர்களும் செய்திருக்கிறார்கள். ஆனால் அடிவாங்கிய ஒரு ரவுடி மருத்துவமனையிலிருந்து வெளியேறுவ்வதற்குள் போலீஸ் ரவி பெரிய ஆள் ஆகிவிடுகிறார்.

விஜயிடம் நட்பின் பெருமையைப் பற்றி அவரது கிருதா நண்பர் பேசும்போது நடுநிலை ரசிகர்கள் சிரித்தே ஆகவேண்டும்.  அவ்வளவு இயல்பு..,

பெரிய ரவுடியாக வரும் நாயகனின் நண்பனாக ஒரு சாதா நண்பன் இருக்கும் காட்சி பல படங்களில் வந்திருக்கிறது. அதை கேலி செய்து இதில் சத்யனைப் போட்டிருப்பார்கள். மற்ற படங்களில் எல்லாம் வில்லனிடம் தப்பிவிடும் பாத்திரம் இதில் செத்தே போகிறது.

வில்லன்கள் பெண்களூடன் ஜலக்கிரீடை செய்யும் காட்சியும் இந்தப் படத்தில் இருக்கிறது.  ஆனால் தனக்கு நீச்சல் தெரியாது என்று  மகன் வில்லன் சொல்லும் காட்சியில் ஏனோ பில்லா ரசிகர்களுக்கு கூட கோபம் வரவில்லை.

இறுதிக் காட்சிக்கு முந்தைய காட்சியில்  வில்லனின் சாம்ராஜ்ஜியத்தை சிதைக்கும் காட்சியில் சிதைந்த படங்களை மீண்டும் பாஷாவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.


இறுதிக்காட்சியில் ஜிந்தாவைக் கொல்லும் காட்சி, குறுக்கே யாரும் வராமல் ஒதுங்கும் காட்சி, கண்பார்வை இல்லாத நபருக்கு விஜய் குறிப்ப்புகள் கொடுக்கும் காட்சி போன்ற காட்சிகளில் கேலியை விட புத்திச் சாலித்தனமே தென்படுவதால் அவற்றை விட்டுவிடலாம்.

அதே போல் விஜய் அருவியில் குதிக்கும் காட்சி, அருவிக்கு சில அடி தூரத்தில் அருவியின் இழுவைக்கு கொஞ்சம் அசராமல் நங்கூரம் இட்டது போல நிற்கும் காட்சிகளும் ஏற்கனவே விஜய் படத்தில் வந்த காட்சிகள் தான் என்பதும் தனியாக சொல்ல வேண்டியது இல்லை.

ராவாக ஸ்பிரிட்டைக் குடித்து, அடிவயிற்றுக்குப் போன ஸ்பிரிட்டை மீண்டும் ஆயுதமாக மாற்றி எதிரியை அழிக்கும் காட்சிகளைக் கூட ஸ்பூஃப் ஆக எடுத்துக்கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்ட நண்பர்களை என்னவென்று சொல்வது.


இவ்வளவு கேலி, கிண்டல் செய்து எடுக்கப் பட்ட வேட்டைக்காரனை விட்டுவிட்டு தமிழ் ப் படத்தை இந்த ஆண்டின் முதல் கேலிச் சித்திரமாகச் சொல்வது விஜய் எதிரான சதி என்று சொல்லாமல் என்ன நினைப்பது..,

=====================================================================

வேட்டைக்காரன் விளம்பரம் சன் டி.வி யில் இன்னும் வந்து கொண்டிருந்தாலும் கலைஞர் டி.வி.யில் வரும் தமிழ் ப் படம் அளவிற்கு வலுவாக இல்லை என்பதும் ஒரு உண்மை

Thursday, January 28, 2010

சுமித்ராவின் சரித்திரம் பக்கம் 6

சுமன் மடியில் படுத்திருந்த சுமித்ராவை பார்த்தவுடன் எங்களுக்கு கொடைக்கானல் நிகழ்ச்சிகள் நினைவுகளில் வந்தது. ஏனோ மறக்க நினைத்தாலும் அதன் தொடர்ச்சியும் சேர்ந்து மூளையின் ஒரு மூலையில் ஓட ஆரம்பித்தது.

==================================================

கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

சுட்டிகளைப் பயன்படுத்தி படித்துவிடுங்கள்

========================================================

நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஆட்களையெல்லாம் சேர்த்துவிட்டு சுற்றுலாவைத் தொடர ஆரம்பித்தோம். சேட்டைக்கார மாணவர்கள் வேறு வந்திருந்தார்கள் அல்லவா... அவர்களைப் பற்றிய ஒரு அறிமுகம் இந்தச் சுட்டியில் உள்ளது. அவர்கள் பாட்டுக்கு பாட்டு விளையாட ஆரம்பித்திருந்தனர். ஏறக்குறைய பயணம் தொடங்கி பனிரெண்டு மணிநேரம் ஆகியிருந்ததால் ஓரளவு மாணவ, மாணவியரிடம் ஒரு கூச்சம் விலகியிருந்தது. அது ஒருசிலரிடம் மட்டும்தான்.

சேட்டை3 உரத்த குரலில் பாட ஆரம்பித்தான்..

மடிமீது தலைவைத்து விடியும்வரை தூங்குவோம்

உடனே அடுத்தவன் பாட ஆரம்பித்தான். மறுநாள் எழுந்து பார்ப்போம்.

உண்மையில் பாடல் வரிகள் அப்படித்தான் இருக்கும். ஆனால் அவர்கள் பாடிய ராகம்தான் கொஞ்சம் வேறு மாதிரி இருந்தது. அதுவும் மறுநாள் எழுந்து பார்ப்போம் என்று பாடிவிட்டு எழுந்துநின்று எட்டிப் பார்த்துவிட்டு

இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?

இந்தப் பார்வைக்குத்தானா பெண்ணானது?


போன்ற பாடல்களையும் பாட ஆரம்பித்திருந்தனர்.

போட்டியின் விதிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பாடல்கள் வந்த போதிலும் எதையும் ரசிக்கும் மனநிலையில் இருந்த சகாக்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. உண்மையில் அந்த குழுவில் இருந்த பல மாணவிகளுக்கு இப்படியெல்லாம் பாடல்கள் தமிழில் வந்திருக்கின்றதா? என்று கூடத்தெரியாது.

எங்கள் வகுப்புத்தலைவர் ராஜஸ்ரீயின் ரசிகராக இருந்தகாரணத்தால் ராஜஸ்ரீ நடித்த சிலபடங்கள் பேருந்தில் இருந்த சின்னத்திரையில் ஓடவிட்டிருந்தார். (இந்தியன் படமும் பாடல்களும் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது) ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காதலிக்க நேரமில்லை படத்தின் நகைச்சுவையில் கொஞ்சம் லயித்திருந்தகாரணத்தாலும் மற்றும் சிலர் கடலை சாகுபடியில் குதித்திருந்த காரணத்தாலும் மற்றும் சிலர் பாட்டுப் போட்டியில் களம் இறங்கியிருந்தகாரணத்தாலும் அந்தப் படம் அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.

அப்படியே பாட்டுப் போட்டி திசைமாறி வார்த்தை விளையாட்டாக மாறியிருந்தது. தொடர்ச்சியாக இரண்டுநிமிடம் தமிழில் பேசும் போட்டி அது. ஒருவார்த்தையை மூன்றுமுறை உபயோகப் படுத்தக் கூடாது. ஆங்கில வார்த்தை உபயோகப் படுத்தக் கூடாது போன்ற பல கடினமான விதிமுறைகளைக் கொண்ட போட்டியாக அது இருந்தது. ஆனால் சேட்டைக் குழாமில் இருந்த மாணவர்கள் எந்தமாதிரி தலைப்புகளைக் கொடுத்தாலும் மடியில் தலைவைத்துப் படுப்பதைப் பற்றியே பேச ஆரம்பித்தனர். இந்தப் போட்டி பயங்கர சூடாக அமைந்த காரணத்தால் மற்ற கடலை கோஷ்டிகளும் இதைப் பற்றியே பேச ஆரம்பித்திருந்தனர்.

இதையெல்லாம் சட்டை செய்யாத சுமித்ரா அவள்பாட்டுக்கு தொடையில் தலைவைத்து படுத்து ஏறக்குறைய தூங்கியதுபோலவே வந்தாள். சுமன் அதற்காகவே ஜென்மம் எடுத்தது போல் அவளைத்தாங்கிக் கொண்டு காதலிக்க நேரமில்லை படத்தைப் பார்த்துக் கொண்டுவந்தான்.

மடியில் படுத்திருப்பதைப் பற்றியும், முதல் சுற்றுலாவில் இருவரும் சேர்ந்து சைக்கிள் ஓட்டியது பற்றியும் வார்த்தை விளையாட்டில் வந்தபோது நக்மா பொங்கி எழுந்தாள். நக்மா எங்கள் கல்லூரியின் பெண்ணீய வாதிகளில் ஒருத்தி அவளையும்கூட ஒருநண்பன் காதலித்துக் கொண்டிருந்தான். அவனுடன் நக்மாவும் சேர்ந்து சைக்கிள் ஓட்டியிருக்கிறாள். எங்களின் கண்ணில் நக்மாவும் நக்மாவின் நண்பனும் எங்கள் கண்களில் தட்டுப் படவே இல்லை. எங்கள் கண்ணில் மட்டுமல்ல.. சேட்டைகளின் கண்களில் கூட தட்டுப் படவில்லை.

நக்மா பொங்கிஎழுந்த உடன் அவளோடு சேர்ந்து சில பெண்களும் சேர்ந்து வார்த்தை விளையாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். பெண்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் ஆபாசமாக பேசுவதாகவும் குற்றங்களை அடுக்க ஆரம்பித்தனர். வார்த்தை விளையாட்டில் ஏற்கனவே ஈடுபட்டு வந்த பெண்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நக்மா கூட்டம் மேலும்மேலும் பெரிய குரலில் சண்டையிட ஆரம்பித்தனர். அவர்களுக்குள் சமாதானம் வராத சூழலில் நாங்கள் த்லையிட்டு அமைதிப் படுத்தினோம்.

ஒரு வழியாக பேருந்து பெங்களூருவை அடைந்தது. அங்கே மதிய வேளையில்
பெங்களூருவில் லாக்பாக் தோட்டத்தை சென்றடைந்தோம்.

வழக்கம்போல் நாங்கள் கெம்ப கௌடாவைப் பற்றியும் ஹைதர் அலி புராணம் பற்றியும் கிடைக்கும் துண்டு பிரசுரங்களையும் குட்டிப் புத்தகங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு கடலை போடுவதற்கான குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தோம். எங்கள் கல்லூரி வாழ்க்கை இவ்வாறு குறிப்பெடுப்பதிலேயே கழிந்தது. கடலை என்பது கானல் நீராகவே அமைந்து விட்டது என்பது சென்ற நூற்றாண்டில் பொன்னெழுத்துக்களால் எழுதப் பட்டுவிட்ட ஒரு சரித்திரம் என்பதையும் இங்கே குறீப்பிட்டாக வேண்டும். தலைவர் டயபாலிக் அவர்கள் எல்லோரையும் நான்கு மணிக்குள் பேருந்துக்குள் வந்துவிட வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார்.

நாங்கள் அந்த தோட்டத்துக்குள் சென்றவுடன் கெம்பே கவுடாவும், ஹைதர் அலியும் எங்கள் நினைவுகளிலிருந்து மறைந்துவிட்டனர். அங்கெ இருந்த இயற்கை அழகை ரசிக்க ஆரம்பித்தோம். ஆங்காங்க மக்கள் இயற்கை காட்சிகளை தங்கள் கொண்டுவந்திருந்த புகைப் படக் கருவியில் பதிவு செய்ய ஆரம்பித்திருந்தனர்.நிறைய இயற்கை காட்சிகள் இயற்கையாகவே காணப் பட்டன. கோயமுத்தூரில் இது போன்ற இயற்கைக் காட்சிகள் தென்படாது என்ற சூழலில் மக்களின் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. கடலை போட வைத்திருந்த குறிப்புகளை நாங்கள் சுத்தமாக மறந்துவிட்டிருந்தோம். சில மணிநேரங்கள் ரசித்த பின்னர் டயபாலிக் இன் உத்தரவுக்குப் பணிந்து நாங்கள் அனைவரும் பேருந்துக்கு திரும்பியிருந்தோம்.

புற்ப்படும் சூழலில்தான் தெரிந்தது சுமித்ரா உட்பட இரண்டு பெண்களைக் காணவில்லை. கொஞச நேரம் காத்திருந்தோம். நக்மா எழுந்து தான் போய் தேடிவருவதாக தனது தோழியுடன் கிளம்பினாள். ஏற்க்குறைய 250 ஏக்கர் பரப்பளவும் பல இடங்களில் வாசல்களும் கொண்டது லால்பாக் பூங்கா..

பதினைந்து இருபது நிமிடம் போயிருக்கும். சுமித்ரா மற்றும் தோழியும் திரும்பவில்லை. நக்மா மற்றும் தோழியும் திரும்பவில்லை.

பேருந்துக்குள் இருந்த இரண்டு எள் களும் எண்ணெய்களுக்காக காய ஆரம்பித்தன..,

======================================================

தொடரும்.... தொடரும்..................................

Tuesday, January 26, 2010

ஃபாண்டஸிக் கதையின் தொடர்ச்சி 26.1.10

ஒரு ஃபேண்டஸி கதை எழுத ஆரம்பித்ததில் வித்தியாசமான கதைக்களம் என்று பாராட்டப் பட்டாலும் செக்ஸ் போதவில்லை என்ற குறையும் அதில் தென்பட்ட போதிலும் பின்னூட்டத்தில் நீளமாய், நீலமாய் இருப்பதாக சொல்லப்பட்டுவிட்டதாலும் இந்தப் பகுதியையும் அதன் போக்கிலேயே விட்டுவிடுகிறேன். எனவே போன பகுதிக்கு போட்ட முன்னறிவித்தல் இதற்கும் பொறுந்தும்.

முன்னறிவித்தல் 2: சென்ற பகுதியே மிக நீளமாகத் தென்பட்டாலும் எனக்கென்னவோ அதைச் சுருக்கி சிலவரிகளில் சொல்லமுடியும் என்று தோன்றாத காரணத்தால் இந்தச் சுட்டி மூலம் சென்ற பகுதியைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள்


========================================================================

கவுரவர்களின் மன்னன் 110ஆம் துரியோதனன் நேரடியாக வந்து கம்பு வீரனையும் அவனோடு வந்த பெண்களையும் ( அதிகாரிகள்) கைது செய்து  கொழுமண்டபத்திற்கு கொண்டுவருகிறார்கள்.

 கொழு மண்டபத்தில் குற்றவாளிக்கூண்டில் ஏற்கனவே காணாமல் போன  இரண்டு அரசு அதிகாரிகளும் ஒரு கூண்டில் நிற்க  கம்பு வீரனோடு வந்த மற்ற பெண்கள் ஒரு கூண்டில் அமர்ந்திருக்க  12203வது வது கர்ணன்  ( கர்ணனின் மகன் போரிலேயே இறந்துவிட்டதாக சிலர் பேசலாம். ராஜவிசுவாசிகள் பலருக்கு கர்ணன் எனப் பெயரிடப் படுவதை இங்கு பதிவு செய்துவிடுவோம் ) பேச ஆரம்பிக்கிறார்.

மகாராஜாவுக்கு வந்தனம்.  சென்ற யுகத்தில் உங்களுக்கும் உங்கள் தந்தைகளுக்கும் நடந்த கொடுமை சரித்திரம் அறிந்ததே..,

மூத்தவருக்கே நாடு சொந்தம் என்பது பரம்பரை பரம்பரையாக  உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப் பட்ட நடைமுறை.

ஆனால் கிருஷ்ணனின் தூண்டுதலின் காரணமாக  தங்கள் முன்னோர் திருதராஷ்ட்டிரனின் தம்பி பாண்டுவின் மைந்தர்கள்  நாட்டை துண்டாடச் சொன்னார்கள். அவர்களுக்காக கிருஷ்ணரே போர் களத்தில் இருந்தார். என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் கிருஷ்ணரின்  படைகள் நம்மோடுதான் இருந்தன என்பது அனைவருக்கும் தெரிந்ததே..,

பாண்டுவின் மைந்தர்களின் செய்த சதிகளை பல வழிகளில் முறியடித்த தங்கள் முன்னோர்களால்  போரைத் தவிர்க்க முடியவில்லை. அபகரிக்க முடியாத சூழலில் நாட்டைத் துண்டாட நினைத்ததும், சில ஊர்களை மட்டுமாவது தனியாக பிரித்து பிரிவினை செய்தே தீரவேண்டும் என்று கிருஷ்ணரின் துணையோடு சதிவகைகள் செய்ததை இன்றைய மக்கள் திரைப்படம் மூலமாவது தெரிந்தே இருக்கிறார்கள்

கைது செய்யப் பட்டுள்ள அதிகாரி:

திரவுபதையை உங்கள் முன்னோர்கள் கையைப் பிடித்து இழுத்ததால்தான் அனைவரும் வெகுண்டு எழுந்து வன்மம் கொண்டாட வேண்டியதாகப் போயிற்று.

12203வது கர்ணன்:  கவனியுங்கள். தம்பிகளின் மனைவி யாரையும் அவர்கள் அவமதிக்க வில்லை. சகோதர்களின் பொதுவான மனைவியை மட்டுமே அவர்கள் சபைக்கு அழைத்திருந்தனர்.

இன்னொரு அதிகாரி:

அதனால் நீங்கள் செய்தது சரியாகிவிடாது. இ.பி.கோ 376ன் படி கண்டிப்பாக தண்டனைக்குரிய குற்றம் அது.

12203வது கர்ணன்:

அதெல்லாம் நடந்து முடிந்த பிரச்சனை.  பாண்டவர்களின் வம்சத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளையும் இப்போது கைது செய்தாயிற்று.

அவர்களின் வழிவந்த   பெண் அதிகாரிகள் இருவரையும் கைது செய்தாயிற்று. 

இவர்களை அழித்துவிட்டு நம் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பாரத தேசம் முழுவதும்  100 கிராமங்களில் மறைந்து வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்டால்  இந்த பாரத தேசமே மீண்டும் தங்கள் ஆட்சியின் கீழ் வந்துவிடும்.

===================================================

இரண்டு பெண்களும் மன்னரிடமும் தளபதியிடமும் தனியே பேச வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள். தனியே பேசுவதை சபையினர் முணுமுணுத்தலாக எதிர்த்தாலும்  நேரடியாக சொல்ல் யாருக்கும் தைரியம் வரவில்லை.

முக்கிய அலுவல்கள் இருப்பதால் அதை முடித்துவிட்டு  மாலை நேரத்தில் சந்திப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு  சென்று விடுகிறார்கள்

=========================================================

மன்னர் துரியோதனனும் தளபதி கர்ணனும்  ஆயுதசாலைக்குச் செல்கிறார்கள். முக்கிய கேந்திரத்தில் உள்ள கண்ணாடி அறைக்குச் செல்ல அங்குள்ள மாயக்கண்ணாடிகள் மூலமாக மீதமுள்ள 99 கிராமங்களையும் தொடர்பு கொண்டு பேசுகிறார்.  மறைமுகத் தாக்குதலுக்கு இதுவே சரியான சமயம் என்றும் அனைவரும் தயாராக இருப்ப அறிவுறுத்துகிறார்கள்.

================================================================

மாலையில் பெண்களை சந்தித்த மன்னரும் தளபதியும் மிகவும் குழம்பிப் போகிறார்கள். அவர்களுக்கு இடையே பலத்த சண்டை ஏற்படுகிறது.

பூட்டிய அறையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் மற்றவர்கள் குழம்புகிறார்கள்.அறையில் ஏற்படும் அதிர்வுகள் மட்டும் மற்றவர்களுக்கு புலப் படுகிறது.

=============================================================

கம்புவீரன் முக்கிய கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்து கட்டுப் பாட்டு அறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். இந்திய ராணுவ தளபதிகளை  தொடர்பு கொண்டு அனைத்து நிலையங்களைப் பற்றியும் தகவல் கொடுக்கிறார்.

இந்திய ராணுவம் அனைத்து கிராமங்களையும் சுற்றி வளைக்க வலிமைவாய்ந்த கத்தி மற்றும் கதாயுதங்களின் முன் ஒவ்வொரு குண்டாக போட்டுச் சூடும் துப்பாக்கியை வைத்துக் கொண்டு இந்திய ராணுவம்  அனைவரையும் வீழ்த்துகிறது.

உள்ளூரில் நடக்கும் சண்டையில் கம்புவீரன் அனைவரையும் அழித்துவிடுகிறான்.  கம்புவீரனின் கையில் சக்கர ஆயுதம் வந்து நிற்கிறது. கம்புவீரனையும் மற்ற பெண்களையும் கொண்டுவந்த சேர்த்த பெரிய வகை கருடன் அவர்களின் அருகில் வந்து அமர்கிறது. (மீண்டும் முதல் பகுதியில் வந்த கருடனை நினைவில் கொண்டுவந்துவிடுங்கள்)..

Saturday, January 23, 2010

இது ஒரு ஃபாண்டஸி கதை

முன்னறிவிப்பு:- இந்தக் கதையில் லாஜிக் இருக்காது. செக்ஸ் நிறைய இருக்கும். தற்கால அவலங்களை சாடுவதாக அங்காங்கே வசனங்கள் வரும்.  முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக முயற்சி செய்ய பட்டிருந்தாலும் சில நேரங்களில் கொஞ்சம் கொடுமையும் வருவதால் மனம் திடமானவர்கள் மட்டும் படித்தல் நலம். ஆனால் இது ஆயிரத்தில் ஒருவனின் தழுவல் அல்ல.., 


கொடைக்கானல் மலையுச்சியில் இருந்து கீழே பார்த்தால் அதல பாதாளத்தில் இருக்கும் ஒரு கிராமம் அது. அதற்காக மலையின் அடிவாரம் என்று நீங்களாக கணக்குப் போட்டுக் கொள்ளக் கூடாது. அந்த பாதாள லோகத்தில் ஒரு ஓட்டுச் சாவடி. அந்த மக்களுக்கு  ஓட்டுரிமை இருப்பதே தெரியாமல் வசித்து வருகிறார்கள். ஆனால் நூறு சதவிகிதம் ஓட்டுப் பதிவு ஆகிக் கொண்டு இருக்கிறது. அங்கே பணிக்கு வரும் அரசு அதிகாரி ஒருவர் இதைக் கண்டுபிடித்து விடுகிறார்.உடனே உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி அந்த கிராம மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். உயர் அதிகாரிகளும் உடனே அதற்காக எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க அந்த கிராமத்திற்குச் செல்கிறார்  அந்த அதிகாரி. அத்தோடு காணாமல் போய் விடுகிறார்.

==================================================


அவரது தோழர் இன்னொரு அரசு அதிகாரி இருக்கிறார். அவர் சத்திய மங்கலத்திலிருந்து பணிமாறுதல் வாங்கிக் கொண்டு அந்த கிராமத்திற்குச் செல்கிறார். அவரும் காணாமல் போய்விடுகிறார்.

=====================================================


உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப் படுகிறது. சாட்டிலைட்டின் உதவியோடு ஒரு தங்கப் பேழையும் பட்டுத்துணிகளும் கண்டறியப் படுகின்றன. அந்தப் பட்டுத்துணிகளில் அந்த கிராமத்திற்குச் செல்லும் வழிகள் கண்டறியப் படுகின்றன. அவைகளில்   கொடுத்துள்ளப் படி அந்த கிராமத்திற்குச் செல்லும் வழியானது லண்டன் நகரத்திலிருந்து தொடங்குகிறது. பின்னர் கோவா வருகிறார்கள். கோவாவிலிருந்து புகை வண்டி மூலமாக சென்னை வந்து சென்னையிலிருந்து மதுரைவரை சாலை பயணமாகவும். பின்னர் வத்தலகுண்டுவரை மாட்டுவண்டிப் பயணமாகவும் வத்தலக் குண்டிலிருந்து கொஞ்சம் நடை ப் பயணம் சென்று பின்னர் காட்டுக்குள் கிடைக்கும் வழிகளெல்லாம் பயணித்தால் கிடைக்கும் வழிகள் மூலமாக அந்த கிராமத்திற்குச் சென்றடைய முடியும் என்பதாக அமைகிறது. அந்தக் காட்டுக்குள் வரும் மிருகங்கள் தரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அந்தக் காட்டுக்குள் பிறந்த ஒரு ஆளை பிடிக்கிறார்கள்.

குழுவில் முக்கியப் பொறுப்புகளில் உடல் வலிமைமிக்க பெண்கள் நியமிக்கப் படுகிறார்கள். அவர்களுக்குத் துணையாக கிராமத்தான் கம்புவீரன் நியமிக்கப் படுகிறான்.

கம்புவீரன்: ஒரு குவாலிஸ் எடுத்துக்களாம் சார். நேரா வத்தலக்குண்டு தாண்டி அந்த கிராமம் வரைக்கும் போயிடலாம். அப்புறம் எப்படின்னு அங்க விசாரிச்சுக்கலாம்.

முக்கிய பொறுப்பாளர்: இப்படி பொறுப்பில்லாம போய்த்தான் இரண்டு அரசு அதிகாரிகள் என்ன ஆனாங்கன்னே தெரியல. பேசாம பட்டுச் சுவடிய பின்பற்றுங்க..


கம்புவீரன்: அப்பிடியில்ல சார். எப்படியும் சுத்தி சுத்தி வத்தலக் குண்டுதானே வரப்போறோம். அப்புறம் ஏன்சார்.

மு.பொ. இதுக்குத்தான் படிச்ச பசங்கள வேலைக்கு வெக்கணும்கறது.  இத்தன பேர் ஆலோசனை பண்ணி போட்ட திட்டம் இது. அந்த கிராமத்துக்கு நாம நன்மை செய்தே தீர வேண்டும். அதுக்காக எவ்வளவு இடையூறு எவ்வளவு செலவு வந்தாலும் நாங்க கவலைப் பட போறதே இல்ல.

அந்தக் காலத்தில பல ஆராய்ச்சிகள் செய்து நம்ம முன்னோர் கண்டுபிடிச்ச பட்டுப் பத்திரம்  இது. காரணம் இல்லாம எதையும் சொல்லி இருக்க மாட்டாங்க. நீங்க பேசாம ஃபாலோ பண்ணுப்பா..,

இல்லேன்னா மக்காச்சோளவீரன் தயாரா இருக்கான். அவனைக் கூட்டிட்டுப் போய்விடுவோம்.

கம்புவீரன்:- என்னமோ போங்க.., நல்ல சம்பளம் கொடுக்கறீங்க.., செய்வோம்

=======================================================================

லண்டன் மாநகரில் அவர்களுக்காக பாய்மரக்கப்பல் தயாராக இருக்கிறது.

கம்புவீரன்: யோவ் என்னய்யா இது.., இப்பல்லாம் போக்குவரத்து பயங்கர வேகம்யா.., இப்பப் போய், பாய்மரப் படகு, நீராவி எஞ்சின் அப்படின்னு..,

முக்கியப் பொறுப்பாளர்:-  கம்புவீரா., நீ இப்ப டம்மி பீஸு, வத்தலக் குண்டு வந்த பிறகு தான் உன் வேலை ஆரம்பிக்கும். அதுவரை அடக்கிவாசி

================================================================
கப்பலில் கேப்டன் தனித்தன்மை வாய்ந்த உடையுடன் இருக்கிறார்.

மு.பொ.:- கப்பலை நேராகச் செலுத்துங்கள்

கேப்டன்:- சார் நேரா போனா மேற்கிந்திய தீவுகளுக்குத்தான் போகும். அந்த வழியில போனா என்ன ஆகும்னு அமெரிக்கோ வெஸ்புகி சொல்லிட்டாரு.

மு.பொ. :- எங்க நாட்டுல ஒரு கிராமமே என்ன ஆச்சுன்னு தெரியல, உனக்கு வரலாற்று நக்கல் கேட்குதா போய்யா , சொன்ன வேலையை மட்டும் செய்.

====================================================================

படகு போகும் வழியில் கப்பலின் கேப்டன் முக்கிய பெண் அதிகாரியைப் பார்த்து ஜொள் விட்டுக் கொண்டே வண்டியை ஓட்ட கப்பல் ஒரு பெரிய பனிப் பாறையில் முட்டி பாய்மரங்கள் எல்லாம் சேதாரம் ஆகிவிடுகின்றன. கப்பலில் இருந்த முக்கிய பணியாளர்கள் இறந்து விடுகிறார்கள்.  சில பெண் அதிகாரிகள் மற்றும் கம்புவீரன் ஆகியோர் மட்டும்  பக்கத்து தீவுக்குள் கரை ஒதுங்குகிறார்கள்.

அந்த தீவில் கறுப்பாக ஆஃப்ரிக்க தேசத்தவர் போன்ற தோற்றம் கொண்ட மக்கள் சிலர் இருக்கிறார்கள்.  அவர்கள் இவர்களை கைது செய்து அவர்களின் தலைவன் முன்னாள் நிறுத்துகிறார்கள்.

தலைவன்:- ஆஹா.., நம் வம்சம் விருத்தி செய்ய சிறந்த பெண்கள் இவர்கள்தான். நாளை பூஜை நடக்கட்டும்.

மூவரும் நடுமைதானத்தில் கட்டிவைக்கப் பட்டிருக்கிறார்கள்.  பல நூறு ஆண்கள் நிர்வாணமாக மது அருந்திய படி பூஜை நடக்கிறது. .....................,
..............................................,
................................                            .......................              ..........................


...............................................................,







...........................



........................................( நடப்பதை எல்லாம் எழுதினால் ஓ.எஸ். கரப்ட் ஆகிவிடும் அபாயம் இருப்பதால் வெறும் புள்ளிகள் மட்டும் வைக்கப் பட்டுள்ளன)


இந்த நேரத்தில்  கட்டை அவிழ்த்துக் கொண்ட கம்புவீரன்  உடன் இருக்கும் பெண் அதிகாரிகளுடன் அந்த இடத்தைவிட்டு தப்பி விடுகிறான்.  தனது உடையை இரண்டாக கிழித்து அவர்களை அணியச் சொல்லி விடுகிறான்.  அங்கிருந்து பறக்கும் ஒரு பெரிய பறவையின்  காலில்  கம்புவீரன் தொங்க அவரது இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு  பெண்கள் தொங்க  பெரிய பறவை பறந்து வந்து  ஓரிடத்தில் போட்டு விடுகிறது.

எந்த இடம் என்றே தெரியவில்லையே..,

கொஞ்ச தூரம் நடந்து போவோம்.  எதாவது தென்படுகிறதா பார்ப்போம்.

சொல்லிய படியே மூவரும் நடந்து அந்தக் காட்டுக்குள் செல்கிறார்கள். போகும் வழியில் அவர்களது வழியைக் குறுக்கிடும் யானையை அடித்து தோலை உரித்து ஆடையாக அணிந்து கொண்டு நடக்கிறார்கள். ஓரிடத்தில்  ஒரு திசை காட்டி கிடக்கிறது.  அதில் வத்தலகுண்டு 30 கி.மீ. என்று எழுதப் பட்டு உள்ளது. ஆனால் அதை கவனிக்காமல் அவர்கள் போய் கொண்டு இருக்கிறார்கள்.

உள்ளே செல்லச் செல்ல  ஒரு பாறை தென்படுகிறது.  அந்தப் பாறைக்கு அருகில் ஏதாவது கிடைக்கிறதா என்று கம்புவீரன் பார்க்க உள்ளே இரு நாகரீக மனிதர்கள் தென்படுகிறார்கள். அவர்களிடம் பேச கம்புவீரனுடன் வந்த பெண்கள் முற்படுகிறார்கள்.

அப்போது அந்த மனிதர்கள் தங்களை கவுரவர்கள் சிறை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

என்ன கவுரவர்களா..,

ஆமாம். பாரதப் போரின் முடிவில் உயிர்பிழைத்த கவுரவர்கள் இந்தப் பகுதியில் குடியிருப்பதாகவும் நல்ல செய்தி கிடைத்தால் திரும்பவும் பாரத தேசத்திற்கு திரும்பலாம் என்று இருப்பதாகவும் தங்களை பாண்டவர்களின் ஒற்றர்கள் என்று கைது செய்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் போதே கவுரவர்களின் மன்னன் 110 ஆம் துரியோதனன் அங்கு வந்து மூவரையும் கைது செய்கிறான்.

அடுத்த பாகத்தில் கண்டிப்பாக முடிந்துவிடும்.

Tuesday, January 19, 2010

ஒரு கப் காஃபியும் பழைய புடவையும்

ரேஷ்மாவிற்கு எப்படி இதை கணவனிடம் ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

கணவனின் பேச்சை மீறி எதையும் செய்ய யோசிக்கும் சராசரிப் பெண்ணாக அவள் இருந்துவிட்டாள். இருந்தாலும் கணவன் தடுத்தாலும்கூட லட்சுமி பாட்டிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது. அதுவும் லட்சுமி பாட்டியே ஏதாவது பழைய புடவை கொடு என்று கேட்டபோது மறுக்கத் தோன்றவில்லை.  பார்த்துவைப்பதாக சொல்லி அனுப்பி விட்டாள்.


லட்சுமி அந்த பகுதியில் வசிப்பவர்தான். தெருவில் வசிப்பவர்கள் சொல்லும் சின்ன சின்ன வேலைகள் செய்து வருவார். அந்த பகுதி மக்கள் கொடுக்கும் கொஞ்சம் உணவு, கொஞ்சம் உணவுகளில் காலம் தள்ளி வந்தார்.


ஒரு முறை லட்சுமி பாட்டிக்கு பழைய சோறு கொடுக்கும்போது ரேஷ்மாவின் கணவன் பார்த்துவிட்டு தடுத்துவிட்டான். அன்று பெரிய சண்டை. இன்னொரு நாள் பாட்டியிடம் ஒரு ஷாம்பு சாஷே வாங்கி வரச் சொன்னபோது அப்படித்தான், ஷாம்பு போடாவிட்டால் தலையென்ன கெட்டா போய்விடும் என்று சண்டை. 


சில நாட்களுக்கு முன்கூட லட்சுமி பாட்டிக்கு ஒரு கோப்பை காஃபி கொடுத்திருந்தாள். அப்போதுதான் ரேஷ்மாவின் கணவன் வந்து கோபமாகப் பார்த்துவிட்டுச் சென்றான். நல்லவேளை சண்டை இல்லை என்பதே நிம்மதிப் பெருமூச்சாக இருந்தது.


இருந்தாலும் லட்சுமி பாட்டியின் உதவி இல்லாமல் காலம் தள்ளுவது என்பது அந்தத் தெரு ஆட்களுக்கு சிரமான செயல்தான். அலுவலகத்திற்குச் செல்லும் பெற்றோர்கள் சிறிது நேரமானால் கூட பக்கத்துவீட்டில் சொல்லி லட்சுமி பாட்டியை துணைக்கு இருக்கச் சொல்வார்கள். நம்பகமான பாட்டிதான் அவர்.


மாலை நேரத்தில் ஆரம்பித்தாள் ரேஷ்மா.


லட்சுமி பாட்டி பழைய புடவை ஏதாவது இருந்தா கேட்டாங்க.., நானும் தர்ரேன்னு சொல்லிட்டேன். சொல்லிவிட்டு கணவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


லட்சுமிப் பாட்டியே கேட்டாங்களா..,


ஆமா அவங்களே கேட்டாங்க..,


கொடுத்துட்டயா.., இனித்தான் கொடுக்க போறீயா..,


சும்மா கிடக்கறதுதானே.., கொடுக்கலாம்னு இருக்கேன். உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கொடுக்கலாம்னு...., கொஞ்சம் எரிச்சலால்தான் சொன்னாள். இதைக்கூடவா மறுப்பார்கள்.


அவங்க கேட்டாங்க அப்படிங்கறதுக்காக பழைய புடவை கொடுத்துடாத.., 


ரேஷ்மாவுக்கு கோபம்தான் வந்தது.


புதுசாவே இரண்டு புடவை எடுத்துக் கொடுத்துவிடு. அந்த காலத்தில் பெரிய வாழ்வு வாழ்ந்தவங்க அவங்க.
அவங்களுக்குப் போய் பழசெல்லாம் கொடுத்தா நமக்குத்தான் பாவம் வரும்.  இந்தத் தெருவே அவங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கு. பாவம் பசங்க சரியில்லை. பாட்டி இப்படி இருக்காங்க.


ரேஷ்மாவுக்கு என்னவோ தெரு மக்கள் இன்றும்கூட லட்சுமிப் பாட்டிக்காக கடன் பட்டிருப்பதாகவே பட்டது.

Monday, January 18, 2010

நன்றி,வாழ்த்துக்கள் மற்றும் சபதம்

நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்

என்ற கொள்மையுடன் ஆரம்பிக்கப் பட்ட நமது வலைப்பூ வலையுலகில் பல போட்டிகளை சந்தித்து வந்துள்ளது. நமது வலைப்பூவுக்கும் 189 பிந்தொடர்பவர்கள் சேர்ந்து இருக்கின்றனர். இருந்தாலும் ஒரு மொக்கை வலைப்பூ என்ற பிம்பத்துடனேயே காலத்தை ஓட்டி வரும் நமது வலைப்பூ தமிழ்மணம் நடத்திய போட்டிகளின் முடிவுகளின் படி அடுத்த கட்டத்தை எட்டிவிட்டதாகவே கருதுகிறேன். இந்த வலைப்பூவிலிருந்து அனுப்பப்பட்ட 


சிவாஜிக்கு விருது ஏன்? எதற்கு?


விலைமகளே பரவாயில்லை 


ஆகிய இரண்டு இடுகைகளுமே அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு தகுதிப் பெற்று இருந்தது. இந்த வலைப்பூவிற்கு பதிவர்கள் மத்தியில் கிடைத்த பெரிய அங்கீகாரமாகவே அமைந்திருந்தது. 


அந்த இடுகைகளுடன் பெரிய பெரிய தலைகளுடன் போட்டிபோட்டதில் நம்மைவிட அதிக ஆதரவு பெற்ற இடுகைகள் நிறைய இருந்த காரணத்தால் அந்த இடுகைகள் வெற்றிக் கனியைப் பெற்று விட்டன. 


எனவே அவர்களுக்கும், அவர்களோடு போட்டியிட்டு வென்ற  மற்ற இடுகைதாரர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.


பெரிய பெரிய தலைகளின் இடுகைகளோடு நமது இடுகையையும் இடம் பெற வைத்த தமிழ்மண நிர்வாகத்திற்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஓட்டுப் போட்ட வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஏதோ கிவ் அண்ட் டேக் பாலிஸி மாதிரி ஆகிவிடுமோ என்ற எண்ணம் வந்தாலும், நம்மை ஊக்குவித்துக் கொண்டிருப்பதற்காக அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


வாசகர்களுடைய ஆதரவு தொடர்ந்து இருந்தால் நமது வலைப்பூவில் வரும் எழுத்துக்கள் விரைவில் தத்துவங்களாகக் கருதப் படும் காலம் விரைவில் வந்து விடும் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.




Friday, January 15, 2010

கிரகம், கிரகஸ்தன்

சூரியனைச்

சுற்றும் கோள்கள்

குறிப்பிட்ட காலத்தில்

குறிப்பிட்ட பாதையில்

குறிப்பிட்ட வேகத்தில்

துளியும் மாறாமல்

பிசகாமல்

யோசித்து

தானும் குழம்பி

பிறரையும் குழப்பாமல்

தானுண்டு

தன்வேலையுண்டு

என்றிருக்கும்

கோள்களுக்கு இருக்கும்

பெயரை

மனைவிக்கு வைத்த

மாயம் என்ன?

காரணம் தெரியமால்

கழுத்தைச் சொறிந்த

கணங்கள் உண்டு.

கிரகம் பிடித்தால்

தெய்வதிற்கே

சக்தி கிடையாதாம்.

ந்டைசாத்தி

தெய்வத்தையே

பாதுகாக்க வேண்டுமாம்.

அப்ப சரி

அவ்வளவு

பயமும் பாதுகாப்பும்

தேவையாக

இருக்கக்கூடிய

ஒன்று

கிரகம்தான்.

அதாகப் பட்டது

நீயும்

கிரகஸ்தன் தான்

Thursday, January 14, 2010

எந்திரன் படத்திற்கு விளம்பரம் செய்வது எப்படி?

தமிழ் திரையுலகத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டை தன்னுள் எடுத்துக் கொண்டு வரும் படமாக எந்திரன் வர இருக்கிறது. எந்திரன் பட்ஜெட் ஏறக்குறைய தமிழ்திரையுல பட்ஜெட்டாகவே அமைகிறது, தமிழ் திரையுலகத்தினர் நல்வாழ்வு என்பது தமிழ்மக்களின் நல்வாழ்வோட்டு பின்னிப் பினைந்து இருப்பதால் எந்திரன் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எந்திரன் வெற்றிக்கு உழைக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதால் ஏதோ நமக்குத் தோன்றும் சில யோசனைகளை இங்கு பதிவிட விரும்புகிறேன்.

பாபா, ஆளவந்தான், கஜேந்திரா போன்ற மாபெரும் சரித்திர படங்களின் வரிசையில் எந்திரன் இடம் பெற்றுவிடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.  போட்டிக்கு குருவி, ஏகன் போன்ற படங்கல் ரீ ரிலீஸ் ஆகிவிடுமோஎன்ற அச்சமும் சிலரின் நெஞ்சில் இல்லாமல் இல்லை. பாபா படம் வெளியான போது திருப்பூரில் 500 ரூபாய் கொடுத்து நண்பர் ஒருவர் படம்பார்த்தார்.

இப்போது  திண்டுக்கல் சாரதி, காதலை தேடினேன் போன்ற படங்களையே மாபெரும் வெற்றிப் படம் ஆக்கிய சன் டி.வி.க்கு நாமும் சில யோசனைகளைக் கூறுவோம். விடுபட்டுப் போயிருந்தால்  பின்னூட்டங்களில் நீங்களும் கூறுங்களேன்.

யோசனை 1:-

படத்தின் ஸ்டில்களை ஊர் பெரிய மனிதர்களிடன் காட்டி  படத்தைப் பற்றி ஒரு கருத்தினை வாங்கி சன் டி.வி.யில் ஒளிபரப்பலாம். மக்கள் ஸ்டில் என்பதை திரைப்படம் என்று நினைத்துக் கொண்டு படம் பார்ப்பார்கள்.  இணையத்தில் வந்திருக்கிறதா என்பதை தேட ஆரம்பிப்பார்கள் பயங்கர விளம்பரம் கிடைக்கும்.

யோசனை 2=

சன் டி,டிஎச் சில் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ரகசிய எண் கொடுத்து அதற்கான கட்டணமாக குறைந்த பட்சம் 5000 வசூல் செய்யலாம். அதன் நடுவே  பத்துக்கு பத்து என்ற விகிதத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பி பணத்தை அள்ள முடியும். அதில் இரண்டு நிமிடங்கள் எந்திரன் விளம்பரமே போட்டால் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆசை அனைவரின்ன் மனதிலும் துளிர்விட்டு வளர ஆரம்பிக்கும்.

யோசனை 3=

இப்போது பிரிண்ட் போடுவதற்கு ரூ 50,000 தான் செலவாகிறதாம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ரீலீஸ் செய்தால் படத்தைப் பற்றிய பேச்சு வருவதற்குள் பெரிய அளவில் காசு பார்த்து விடலாம். காசுக்கு காசும் ஆச்சு கின்னஸுக்கு கின்னஸும் ஆச்சு.

யோசனை 4=

படம் வெளியாகும் திரையரங்கின் இடைவேளையின் போது சூப்பர் ஸ்டாரை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று கையைக் காட்டச் சொல்லலாம். ரசிகர்கள் திரையரங்க வாசலில் குவிந்து இருப்பார்கள். நான் எப்ப வருவார் எப்படி வருவார்னு தெரியாட்டியும் கரெக்ட்டா வந்து கையாட்டுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கும் கண்டிப்பாக படம் பார்க்க வந்து விடுவார்கள்.

யோசனை 5=

படம்பார்க்க வரும் ரசிகர்கள் டிக்கெட்டின் பாதியை அனுப்பச் சொல்லலாம். அதில் தேர்ந்தெடுக்கப் படும் ரசிகர்களின் வீட்டிற்கு ஐஸ்வர்யாவை அனுப்பி பொங்கல் வைக்கச் சொல்லலாம். தமிழர் புகழை நிலைநிறுத்திய பெருமை கிடைக்கும்.

யோசனை 6=

ஒரு நாள் எந்திரனின் வசூலை திருட்டி டிவிடியால் பாதிக்கப் பட்ட மக்கள் நிவாரண நிதியாகக் கொடுத்தால் அகில உலக திரையுலகமும் எந்திரன் வெற்றிக்காக பாடுபடும்.

யோசனை 7=

படத்தில் சாம் ஆண்டர்சனை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தால் பதிவுல நண்பர்கள் புகழ்ந்து எழுத படம் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும்.

யோசனை 8=

அமிதாப் வழியை பின்பற்றும் ரஜினி இந்தப் படத்தின் வெளியீட்டின்போது குதா கவா படம் வெளிவந்த போது அமிதாப் கடைபிடித்த வழியை பின்பற்றலாம். ஒரு அருமையான ஒற்றுமை. அந்தப் படத்தின் நாயகி அப்போதைய மூத்த நாயகியான ஸ்ரீதேவி.

யோசனை 9=

படம் பூஜை போட்டு இரண்டு ஆண்டுகள்  நிறைவடைந்ததை முன்னிட்டு ஓராண்டுக்கு மேல் திருட்டு டி.வி.டி வைத்திருப்பவர்களின் உரிமையை ஓரளவு கட்டணம் பெற்றுக்கொண்டு உண்மை என்று அறிவித்துவிடலாம். இதன்மூலம் ஓரளவு வருமாணமும் விளம்பரமும் கிடைத்துவிடும்.

யோசனை 10=

எந்திரன் படம்  injar  என்ற ஃபெரென்ஞ் படத்தின் ரீமேக் என்று ஒரு வதந்தி கிளப்பி விட்டு   injar  என்ற பெயரில் எந்திரனை டப் செய்து வெளியிட்டு உலக அளவில் பணத்தை அள்ளி விடலாம்

டிஸ்கி:-மீள்பதிவுதான்

Tuesday, January 12, 2010

நான் சுத்தமானவள் (நடப்பது 21)

பிள்ளைங்களா......, என்ற குரலோடு வந்தாள் சவீதா. அவள் எப்போதும் அப்படித்தான் சகமாணவிகள் ஜூனியர் மாணவிகள் எல்லோரையும் பிள்ளைங்களா என்றுதான் அழைப்பாள்.  சுமத்ரா  சவீதாவின் குரலைக் கேட்டதும் சற்று நினறாள். ஒரே வகுப்பு மாணவிகள் என்பதால் சேர்ந்தே மாணவியர் விடுதிக்குச் செல்லலாம் என்ற யோசனையும் ஒரு காரணமாக இருந்தது.  சவிதாவும் சுமித்ராவும் சேர்ந்தபின் அவர்கள் இருவர் மட்டுமே கல்லூரியில் இருந்து மாணவியர் விடுதியை நோக்கிச் செல்வது போல இருந்தது. மற்ற மாணவியர் யாருமே அவர்கள் இருவருடம் வரத் தோன்றாதது போல இருவரும் தனித்து விடப் பட்டிருந்தனர்.



சுமித்ரா உங்கிட்ட ஒண்ணு சொல்லனும்..,

சொல்லு.., தான் மாணவர் தலைவி என்பதால் ஏதோ பிரச்சனையை தன்னிடம் சொல்லப் போகிறாள். தான் போய்தான் பஞ்சாயத்துச் செய்ய போகிறோம் என்பது போல இருமாப்புடன் கேட்டாள் சுமித்ரா

நீ தீபக் குமாரோட சுத்தரயாம்..,  ஹாஸ்டல்ல பேசிக்கறாங்க...,

சுமித்ராவுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.  இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஹாஸ்டல்ல பேசிக்கறாங்களா..,  காலேஜ்ல பேசிக்கறாங்களா..,

இல்ல  எல்லோரும் ஒரு மாதிரியா பேசறாங்க (அதற்கான காரணத்தை அறிய இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்)

நம்ம பசங்கள சுத்த மோசம்டி. எப்ப பாரு அசிங்க அசிங்கமா பேசிட்டு இருப்பாங்க..,

இல்லடி இப்ப கொஞ்சம் வேறமாதிரி சொல்றாங்க..,

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தறீங்களாம். பல இடங்களும் போறீங்களாம். ரொம்பவே தப்புத் தப்பா பேசறாங்க..,

எனக்கு எல்லாம் மரத்துப் போச்சுடி.., ஆரம்பத்தில இங்கிலீஷ் குப்பானோட சேர்த்துப் பேசுனாங்க..,  அதற்கப்புறம் சுமனோட சேர்த்துப் பேசுனாங்க

இப்ப தீபக்கோட சேர்த்துப் பேசுறாங்க..,

ரொம்ப தத்துவஞானி மாதிரி பேசாதடி,  முதல் ரெண்டும் வேற..,  இது வேற

ஏண்டி என்னப் பார்த்தா உனக்கு எப்படித்தெரியுது? கொஞ்சம் விரக்தி மற்றும்  கடும் கோபம் கலந்த கலவையாக சுமித்ரா பேசினாள். 

கொஞ்சம் கோபம் படமா நான் சொலறதா கேளு..,

நான் ஏன் நீ சொல்றத கேக்கணும்.  நீ அந்த பசங்க பேசுற பேச்சக் கேட்டுக்கிட்டு என்ங்கூட சண்டைக்கு வற்ர..,

நான் உங்கூட சண்டைக்கு வரல..,  தவிரவும் இப்ப நான் சண்டை போட காரணமும் இல்ல. கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.

நீங்களெல்லாம் என்ன புரிஞ்சிக்க மாட்டீங்க ஆனா நான் உங்கள புரிஞ்சிக்கணுமா..,

இவனுக்கு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ஆளோட சேர்த்து பேசுவானுக அதுக்கெல்லாம் நான் டென்சன் ஆக முடியாது..,  அவளுடைய கோபத்தில் அவளுடைய மூக்கு,நெஞ்சு எல்லாம் வெடித்துவிடுவது போல பேச ஆரம்பித்தாள்.

இங்க பாரு சுமித்ரா முதல் இரண்டு மேட்டரும் பசங்க சும்மா சாதரணமா  பேசுனது.  அத யாருமே என்னிக்குமே பெரிசா எடுத்துக்கல..,  அதெல்லாம்  அப்பவே போச்சு. ஆனா இந்த மேட்டர் அப்படி இல்ல..,

ஏண்டி சேர்த்து பேசரவங்க பேசுவீங்க.., அதுல இதெல்லாம் சும்மாவாம். அதெல்லாம் சீரியஸாம். உன்ன இப்படி நிறையப் பேரோடு கிசுகிசுக்க விட்டு அப்புறம் அதெல்லாம் சும்மா அப்படின்னா நீ அமைதியா போயிடுவயா..,

வெட்டியா கோபப் பட்டு பேசிட்டு இருக்காத..,  நீயும் தீபக்கும் இருக்கும் புகைப்படத்தை நாங்க பார்த்தோம். அதுனாலதான் உங்கிட்ட பேசி புரியவைக்கலாம்னு பார்த்தேன். நீ கோபப் படறதப் பார்த்தா ஏண்டா பேசுணொம்னு இருக்கு. சாரிப்பா.., நான் வாரேன்.  சூடாக சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்த சவீதா சொத் என்று சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். சுமித்ரா  மயங்கிக் கிடந்தாள்.

ஏனோ கிராமத்து மருத்துவச்சிகளெல்லாம் சவீதாவின் நினைவுக்கு வந்தார்கள்.
===============>>>>>>>  தொடரும்>>>>>> தொடரும்>>>>>>தொடரும்

இந்தக் கதையின் முந்தைய இருபது பாகங்களுக்கு  இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்   

இருபது வருஷமா தேங்காய் ஸ்ரீனிவாசன் என்ன செய்தார்னு பார்க்க இந்த காணொளியைப் பார்த்து விடுங்கள்



Friday, January 8, 2010

அருளும் பொருளும் கூட்டிய பின்னூட்டம்

பஞ்சவன் மாதேவி பற்றி கேள்வி எழுப்பி நான் கொடுத்த இடுகைக்கு (இடுகை தழுவல்தான்) மறுமொழி கொடுத்த
சங்கர் ,சிங்கக்குட்டி,Starjan ( ஸ்டார்ஜன் ),ஸ்ரீராம்,dondu(#11168674346665545885) s,அக்பர், கடைக்குட்டி,  seemangani உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி
=====================================================================


அறிவன்#11802717200764379909 said...

உடையார் பா.கு.னின் அப்பட்டமான தழுவல்.
பொ.செ.மாதிரி ஒரு வரலாற்றுப் புதினம் எழுதிப் பெரும்புகழ் வேண்டும் என்ற வேட்கையில் எழுதப்பட்டது உடையார்.அதற்காக வேறொரு களம் அமைத்துக் கொண்டு எழுதினால் கூட சாதாரண வாசகன் இரண்டையும் எளிதாக ஒப்பு நோக்க மாட்டான்;அதற்கு கடும் உழைப்பும் வரலாற்று ஆய்வும் தேவை.ஆனால் களம் முதல் பாத்திரங்கள் முதல் அனைத்தும் அப்பட்டமான பொ.செ.னின் தழுவலாக எழுந்தது உடையார்.

ஆனால் துரதிருஷ்ட வசமாக பொ.செ.னின் நிழலாகக் கூட வர உடையாரால் முடியவில்லை;ஒரவேளை வேறொரு வரலாற்றுச் சூழலை மையமாக எடுத்துக் கொண்டு எழுதி இருந்தால் கூட உடையார் இன்னும் நன்றாக வந்திருக்கக் கூடும் !

பாத்திரப்படைப்புகளைப் பொறுத்த வரை,கல்கி நந்தினியை கற்பனையாகப் படைத்தாலும் வரலாற்று நிகழ்ச்சிகளின் இடையில் நூலிழைப் பாவு போல அழகாகக் கோர்த்து ஒருவேளை நந்தினி இருந்திருப்பாளோ என்று சந்தேகம் தோன்றும் அளவிற்கு அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டி விட்டார்.

பொ.செ.ல் வானதி பாத்திரத்தை சிறிது தட்டிக் கொட்டி பஞ்சவன் மாதேவியைப் படைத்து உலவ விட்டிருக்கிறார் பா.கு.அநாவசியமாக அப்பாத்தரத்தை தேவரடியாராக்கி இல்லாத வேலைகளைச் செய்தும் அப்பாத்திரம் வானதி போல மனதில் பதியவில்லை.

உண்மையில் ராஜராஜனின் பட்டத்து ராணியாக அமர்ந்தவள் வானவன் மாதேவி;அவள் கல்கி சித்தரித்த வானதி அல்ல.

வானதி என்று கல்கி குறிப்பிட்ட பாத்தரத்துக்கு பிறந்தவனே ராஜேந்திரன்;அவனை வளர்க்கும் பொறுப்பையும் குந்தவையே ஏற்றுக கொண்டிருக்கலாம் என்று வரலாறு சுட்டுகிறது.

உடையாரைப் பொறுத்த வரை அது ஒரு இலக்கியத் தரம் மிக்க கதையின் மாதநாவல் காப்பி என்றுதான் சொல்ல வேண்டும்.அநியாயமாக அதற்கு 6 பாகங்கள் வேறு.முழுக்கப் படிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது.

ஆனால் பொ.செ.அப்படி அல்ல.ஏன் கல்கி இப்படி தடாலடியாக நிறுத்தி விட்டார் என்று தொடர் வந்து கொண்டிருந்த சமயத்தில் வாசகர்களைத் துக்கப்பட வைத்த விதத்தில் அதை முடித்தார் கல்கி.

இன்னும் என்னால் பொ.செ.னை மறு வாசிப்பு செய்ய முடிகிறது,சுமார் 50 முறை வாசித்த பிறகும் கூட..

===================================================================

ஒரு இடுகையைவிட அதில் வரும் பின்னூட்டங்கள் இடுகையை எவ்வளவு தூரம் உயர்த்தும் என்பதற்கு இந்தப்பின்னூட்டமே ஒரு அழகிய உதாரணம். நண்பர்க்கு நன்றியை உரித்தாக்கிக் கொள்வோம்.

பின்னூட்டம் பற்றிய நமது பகிர்தல்கள் சில..,

----------------------------------------------------------------------------------------------

// அறிவன்#11802717200764379909 said...

உடையார் பா.கு.னின் அப்பட்டமான தழுவல்.
பொ.செ.மாதிரி ஒரு வரலாற்றுப் புதினம் எழுதிப் பெரும்புகழ் வேண்டும் என்ற வேட்கையில் எழுதப்பட்டது உடையார்.//

தங்களின் வருகைக்கும் கூடுதல் தகவல்களுடன் கூடிய பின்னூட்டத்திற்கும் நன்றி

பொ.செ.வின் தொடர்ச்சியாக எழுதப்பட்டதாக பேசிக் கொள்கிறார்கள்

----------------------------------------------------------------------------

//அதற்காக வேறொரு களம் அமைத்துக் கொண்டு எழுதினால் கூட சாதாரண வாசகன் இரண்டையும் எளிதாக ஒப்பு நோக்க மாட்டான்;அதற்கு கடும் உழைப்பும் வரலாற்று ஆய்வும் தேவை.//

உண்மைதான் ஐயா, அதுவும் பொ.செ. போன்ற செம்மை இலக்கியங்களை அவற்றைப் படைத்தவர்களால் கூட பிந்தொடர்ந்து எழுத முடியுமா என்பது கேள்விக் குறியே

------------------------------------------------------------------------------------
//கல்கி நந்தினியை கற்பனையாகப் படைத்தாலும் வரலாற்று நிகழ்ச்சிகளின் இடையில் நூலிழைப் பாவு போல அழகாகக் கோர்த்து ஒருவேளை நந்தினி இருந்திருப்பாளோ என்று சந்தேகம் தோன்றும் அளவிற்கு அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டி விட்டார்.//

நான் நந்தினியைக் கற்பனை பாத்திரமாகப் பார்க்கவில்லை. பொ.செ.வில் சரித்திர ஆதாரத்துடன் கூடிய ஒரு உண்மைப் பாத்திரத்தின் சில குணாதிசயங்களை மட்டும் எடுத்து தனி பாத்திரமாக உலவவிட்டதாகவே கருதுகிறேன்.

இதைப் படித்துவிட்டீர்களா



------------------------------------------------------------------------------------

//பொ.செ.ல் வானதி பாத்திரத்தை சிறிது தட்டிக் கொட்டி பஞ்சவன் மாதேவியைப் படைத்து உலவ விட்டிருக்கிறார் //

கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

//அநாவசியமாக அப்பாத்தரத்தை தேவரடியாராக்கி இல்லாத வேலைகளைச் செய்தும் அப்பாத்திரம் வானதி போல மனதில் பதியவில்லை.//

அதற்காகத்தான் அவ்வாறு செய்து விட்டாரோ என்னமோ

--------------------------------------------------------------------------------------------------

//ஆனால் பொ.செ.அப்படி அல்ல.ஏன் கல்கி இப்படி தடாலடியாக நிறுத்தி விட்டார் என்று தொடர் வந்து கொண்டிருந்த சமயத்தில் வாசகர்களைத் துக்கப்பட வைத்த விதத்தில் அதை முடித்தார் கல்கி.//

எனக்கென்னவோ சில அதிர்ச்சிகரமான உண்மைகளுக்கான ஆதாரங்கள் கல்கிக்கு கிடைத்திருக்கக்கூடும். அதை வெளியிட்டுவிடக் கூடாது என்ற உறுதியை மேற்கொண்டு கல்கி முடித்திருப்பார் என்று தோன்றுகிறது

-----------------------------------------------------------------------------------------------------
//இன்னும் என்னால் பொ.செ.னை மறு வாசிப்பு செய்ய முடிகிறது,சுமார் 50 முறை வாசித்த பிறகும் கூட..//

முதல்முறை படிக்கும்போதே ஒரே மூச்சில் படிக்கத்தூண்டும் வெறி ஊட்டும் கதை அது

-----------------------------------------------------------------------------------------------------

இது பற்றி பலரும் பல இடுகைகளில் பகிர்ந்து கொண்டிருந்தாலும் மீண்டும் ஒரு பகிர்ந்து கொள்ளும்போது மகிழ்வாகவே இருக்கிறது.

Wednesday, January 6, 2010

நந்தினி =/= பஞ்சவன் மாதேவி

பொன்னியின் செல்வன் பதிவெழுதி ரொம்ப நாளாச்சில்ல..,

ஏதாவது எழுதுவோம் என்று சில மாதங்களாக யோசனை இருந்தது.

அப்போது இந்த தளத்தில்  பஞ்சவன் மாதேவி பற்றி எழுதியிருக்கிறார்கள்.

பஞ்சவன் மாதேவி ராஜராஜ சோழனின் மனைவி என்பதற்கு உடையாரை சாட்சி சொல்லுகிறார்.

பஞ்சவன்மாதேவி ராஜேந்திரனின் மனைவி என்பதற்கு உளியின் ஓசையைச் சாட்சி சொல்லுகிறார்.

அந்தக் கதையில் நந்தினி மட்டும்தான் ஒரு குழப்பமான படைப்பு என்றால் பஞ்சவன் மாதேவியுமா?

இல்லை குந்தவை மாதிரி இரண்டுபேர்களா?

உண்மையை நிலையை யாராவது சொல்லுங்களேன்.

பின்குறிப்பு:-
உடையாரின் சில பக்கங்கள் படித்ததுண்டு. அதுவும் விவாதங்களில் பாலகுமாரன் ரசிகர்களை திட்டுவதற்காக..,

உளியின் ஓசை படம்பார்க்க வெகுநாட்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் வாய்ப்பு அமையவில்லை.

Saturday, January 2, 2010

தமிழ் பதிவர்கள் அளித்த ஷாக்

தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகள் அறிவிக்கப் பட்டுவிட்டன.

அடுத்தக் கட்டமாக வாசகர்களும் பதிவர்களும் பங்கேற்கும் சுற்று நடைபெற இருக்கிறது. முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளின் படி அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கான  இரண்டு பிரிவு மட்டும் இங்கு பார்ப்போம்.
====================================================================

 பிரிவு: நூல், திரைப்படம் அறிமுகம்/விமர்சனம்/திறனாய்வுகள்





  1. எல்லைகள் இல்லா உலகம்!







  2. ( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் பீஸ்...







  3. நான் கடவுள்







  4. நா.பார்த்தசாரதியின் ‘மொழியின் வழியே’







  5. சுண்ணாம்பு கேட்ட இசக்கி







  6. எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி







  7. பெற்றோர்கள் மன்னிக்கவும்







  8. உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!







  9. சிவாஜிக்கு விருது ஏன்? எதற்கு?













  10. ஜெயமோகனின் ஊமைச்செந்நாய்..



=========================================================================

 பிரிவு: தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்





  1. அவர்கள் !!







  2. சாதி ஒழிப்பு: இஸ்லாமே தீர்வு







  3. தந்தியற்ற வீணை







  4. ஷாருக்கானுக்கு ஒரு நியாயம்? தமிழனுக்கு ஒரு நியாயமா?







  5. தலித்தை கொளுத்தினார்கள்







  6. நான் ஒரு கறுப்பினத்தவன், நான் ஒரு கறுப்பினத்தவனாகவே இருப்பேன்







  7. திரு. அம்பேத்காரின் சாதனையும் உலக புரட்சியின் வித்தும்







  8. விலைமகளே பரவாயில்லை  ======================================================================



 இந்த இரு பிரிவுகளையும் பாருங்கள் . முதல் பிரிவில் 90க்கும் மேற்பட்ட இடுகைகள். பதிவர்களின் வாக்கெடுப்பின்படி அடுத்தக் கட்ட வாக்கெடுப்பிற்கு அனுப்பட்ட இட்டுகைகள்.  இதில் பெரும்பாலானவர்கள்  மிகப் பெரிய வாசகர்கள் கூட்டத்தை தன்னகத்தை அமைத்து வைத்திருப்பவர்கள். அவர்களின் எழுத்தின்மேல் தனிபிரமிப்பே ஏற்படுத்தும் வகையில் எழுதுபவர்கள். இன்றும் பல புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பவர்கள். இவர்களோடு போட்டி போட என்னை அனுமதித்த அனைத்து பதிவர்களும் நன்றி  நன்றி...,

===============================================================

அப்படியே இடுகைகளுக்கு ஓட்டும் போட்டுவிடுங்கள். ஓட்டுப் போடும் வழிமுறைகளை இந்தச் சுட்டியைத் தட்டி

http://blog.thamizmanam.com/archives/194

http://www.tamilmanam.net/login/register.php தெரிந்து கொள்ளுங்கள்.

மின்னஞ்சலில் வாசிப்பவர்கள் அருள்கூர்ந்து சுட்டிகளின் வழியே பயணம் செய்து வாசகர்களுக்குரிய வாக்குகளை பதிவுசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  முடிந்தவரை 16பிரிவு வாக்குகளையும் வீணாக்காமல் வாக்களித்து விடுங்களேன்..,

Friday, January 1, 2010

புத்தாண்டு ஆஃபர்

அனைவருக்கும்


புத்தாண்டு வாழ்த்துக்கள்..,


வலையுலகம் வளர வாழ்த்துக்கள்..,


நீங்கள் பிந்தொடரும் அனைத்து பக்கங்களையும் நீங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்குறீர்கள் என்பதை உறுதி செய்ய ஃபாலோ பட்டனையோ சைன் இன் பட்டனையோ மீண்டும் ஒரு முறை அழுத்தி உறுதி செய்து கொள்ளுங்கள்..,   உங்கள் நண்பர்கள் நீங்கள் விலகி விட்டதாக வருத்தப் படுவதை இந்த புத்தாண்டு முதல் நாளில் தவிர்த்துவிடுங்கள்.., 

இதன் மூலம் நீங்கள் அந்த தளத்திற்கு வருகை தந்து கொண்டு இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்..,


நட்புகள் செழிக்க

பதிவுலகம் பரவ

வலையுலகம் வளர வாழ்த்துக்கள்..,


Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails