Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Thursday, December 8, 2016

சோ வுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கும் திமுக

1996
அதிமுக மீதும் அதன் தலைமை மீதும் சண்டிவி , வருமான வரி துறை ஆகியவை மிகப் பெரிய வெறுப்பை விதைத்து வைத்திருந்தன.


வைகோவால் திமுக ஒரு பிளவை சந்திருந்தது. 18 மாவட்ட செயலாளர்கள் வைகோ பக்கம். பேச்சாளர்கள், சொந்த செல்வாக்கு உடையவர்கள். மிகப் பெரிய பிளவாகவே அரசியல் பிரமுகர்கள் கருதினார்கள்.


பாஷா பட விழாவில் ரஜினி பேசியதற்காக பாஷா படத் தயாரிப்பாளரும் சத்யா (எம்ஜிஆரின் அம்மா பெயர், எம்ஜிஆர் நடித்த காலத்தில் எம்ஜிஆரை வைத்து மட்டுமே படம் எடுத்த கம்பெணி அது. பினாமியா என்றெல்லாம் எனக்குத் தெரியாது) மூவீஸின் உரிமையாளர் ஆர் எம் வீர்ப்பன் கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தார். ரஜினிகாந்த், தளபதி ,மன்னன், அண்ணாமலை, பாஷா என்று புகழில் உச்சத்தில் இருந்தார். சில்வண்டுகள் முதல் 50 வயது வரையிலான ரசிகர்கள் அவர் என்ன சொன்னாலும் செய்ய தயாராக இருந்தார்கள்.ரஜினியும் சிலபல காரணங்களுக்கா அப்போதைய ஆட்சியாளர்களை எதிர்த்து வந்திருந்தார்.


 கட்சித் தலைவராக ஆர்.எம்.வீ யும் முதல்வர் வேட்பாளராக ரசினியும் வைத்து ஒரு கட்சி உருவாகியிருந்தால் ஆட்சியைப் பிடித்திருக்கும் வாய்ப்பு மிக அதிகமாக இருந்த சூழல்.

அப்போது ஒரு பத்திரிக்கையாளர் தமாகவை உருவாக்கி திமுக தமாகவை உருவாக்கி அதற்கு ரஜினியின் வாய்மொழி ஆதரவையும் அண்ணாமலையிலிருந்து உபயோகப் படுத்தப் படாத ஒரு புகைப் படத்தையும் வாங்கிக் கொடுத்து திமுக வை ஆட்சியில் அமர்த்தினார். அந்தப் பத்திரிக்கையாளர் சோ அவர்கள். அந்த வகையில் சோவுக்கு திமுக மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

Wednesday, December 25, 2013

பாட்ஷா பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?

இப்போது சன் டிவியில் பாட்ஷா படம் ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்தப் படம் இந்தியில் வந்த ஹம் படத்தில் தழுவல் என்பார்கள். இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட வித்தியாசங்களை படிக்க இந்த இடத்தை கிளிக் செய்து படித்துப் பாருங்கள்.


சாம்பிள் வரிகள் சில

///////////////////////சத்யா மூவீஸாரின் படத்தில் ரஜினிதான் ஹீரோ என்றாலும் ஹம் படத்தில் ரஜினி ஹீரோ அல்ல. பாஷாவில் தம்பியாக ஒரு போலீஸ் வருவாரே அந்தப் பாத்திரம்தான் ரஜினிக்கு. நீங்க யாரு.., பம்பாயில என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்று ரஜினியைப் பார்த்து பேசுவது போல ரஜினி அந்தப் படத்தில் இவர் பேரு டைகர், பம்பாயில் ஒரு கிரிமினல் என்றுஅமிதாப்பைப் பார்த்து பேசுவார். அவ்வளவுதான். இத்தனைக்கும் இந்தப் படம் 1991ல் வந்திருக்கிறது. 91ல் தளபதி, மன்னன் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னாலும் கூட மாப்பிள்ளை, பணக்காரன் என்று எல்லாமே ஹிட்டோஹிட்தான்.  ராமராஜன், மைக் மோகன், டி.ஆர். பாக்கியராஜ் போன்ற வெள்ளிவிழா குரூப்ஸ் தங்கள் கடையை காலி செய்து கொண்டிருக்கும்போது, டெண்டுல்கர் போல நின்று நிலையாக ஹிட்களைக் கொடுத்துக் கொண்டு  தான் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்த ஆண்டு அது. அந்த ஆண்டில் அப்படி ஒரு படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்./////////////////  

Thursday, December 19, 2013

HUM- திரை விமர்சனம்.

ஹம் படம் தமிழ்நாட்டு மக்களுக்கே பரிச்சயம் ஆன ஒரு படம். இந்தப் படத்தை அடிப்படையாகக் கொண்டு சத்யா மூவிஸ் எடுத்த படம். அந்தப் படத்தின் வெற்றி விழா . அதைத் தொடந்து சத்யா மூவிஸ் நிர்வாகிக்க்கு ஏற்பட்ட பிரச்ச்னைகள் போன்றவை தமிழ்நாட்டுக்கே அந்த ஆண்டு பிஸியாக அமைய வைத்தன.
http://www.webmallindia.com/img/film/hindi/hum_1323173487.jpg
சத்யா மூவீஸாரின் படத்தில் ரஜினிதான் ஹீரோ என்றாலும் ஹம் படத்தில் ரஜினி ஹீரோ அல்ல. பாஷாவில் தம்பியாக ஒரு போலீஸ் வருவாரே அந்தப் பாத்திரம்தான் ரஜினிக்கு. நீங்க யாரு.., பம்பாயில என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்று ரஜினியைப் பார்த்து பேசுவது போல ரஜினி அந்தப் படத்தில் இவர் பேரு டைகர், பம்பாயில் ஒரு கிரிமினல் என்றுஅமிதாப்பைப் பார்த்து பேசுவார். அவ்வளவுதான். இத்தனைக்கும் இந்தப் படம் 1991ல் வந்திருக்கிறது. 91ல் தளபதி, மன்னன் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னாலும் கூட மாப்பிள்ளை, பணக்காரன் என்று எல்லாமே ஹிட்டோஹிட்தான்.  ராமராஜன், மைக் மோகன், டி.ஆர். பாக்கியராஜ் போன்ற வெள்ளிவிழா குரூப்ஸ் தங்கள் கடையை காலி செய்து கொண்டிருக்கும்போது, டெண்டுல்கர் போல நின்று நிலையாக ஹிட்களைக் கொடுத்துக் கொண்டு  தான் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்த ஆண்டு அது. அந்த ஆண்டில் அப்படி ஒரு படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.


அதற்கு முந்தைய சில வருடங்களில் அமிதாப் பச்சனின் படங்கள் வரிசையாக வெற்றியடையாமல் போயின. அமிதாப்பின் வெற்றிப் படஙக்ள் பலவும் ரஜினியால் ரீமேக் செய்யப் பட்டு இங்கு  ஹிட் ஆனவை. தவிரவும் ரஜினி, கமல் ஆகியோர் இந்தியில் நுழைந்த போது அந்தப் படங்கள் ஒரு துவக்கம் கொடுப்பதற்காக அமிதாப் நடித்துக் கொடுத்திருக்கிறார்.  90களில் ரஜினிக்கு தென்னிந்தியா முழுவதுமே ஒரு மார்க்கெட் இருந்தது. நம்பினால் நம்புங்கள் 94- 95 களில் பல தெலுங்கு படங்கள், வெறுமனவே ரம்பாவையும், ரம்யா கிருஷ்ணனையும் நம்பி இங்கு கல்லா கட்டியுள்ளன. இது இல்லாமல் சிரஞ்சீவி, விஜ்யசாந்திக்கெல்லாம் இங்கு தனி மார்க்கெட்டே உண்டு. அதே கணக்கில் பார்த்தால் ரஜினி நடித்திருப்பது தென்னிந்திய சிறு நகரங்களில் ஒரு நல்ல துவக்கத்தையே கொடுத்திருக்கும். இதில் அமிதாப்பிற்கு ஜோடி இருக்கு ஆனால் இல்லை.. அப்போதைய இளைஞன் கோவிந்தாவும் அதில் நடித்திருப்பார்.

இந்த படத்திற்கு பிற்கு நிஜமாகவே அமிதாப் ஒரு ஓய்வு எடுத்தார். அதுவரை இதுதான் கடைசி, இதுதான் கடைசி என்றே சொல்வார்கள். ஆனால் அடுத்த படம் வரும். இந்தப் படம் ஓரளவு ஹிட்தான். அமிதாப்பும் ஓய்வு எடுத்தார். அந்த ஹிட்டுக்கு உதவுவதற்காக ரஜினி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்ததாகவே எனக்குத் தோன்றுகிறது.

=======================================================================

கதைன்னுப் பார்த்தா ஒரு வரிசையில் சொல்லலாம் மூன்று அண்ணன் தம்பிகள். ஒரு குடும்பப்பாட்டு கிளைமாக்ஸ் காட்சியில் அந்தப் பாட்டைப் பாடி எல்லோரும் ஒன்று சேர்வார்கள்.  யதோன் கி பாரத் என்ற பெயரில் வந்த படம். அதில் அண்ணன் தம்பிகள் ரயிலில் பிரிவார்கள். இதில் மூவரும் சேர்ந்தே ஏறிவிடுவார்கள். அதனால் பிரியவெ மாட்டார்கள். கிளைமாக்ஸில் வில்லன் கட்டி வைத்த பின்னர் குடும்பப் பாட்டை பாடி சேர்ந்து விடுவார்கள்.  இது போலவே  அண்ணன் தம்பிகள் கடைசி வரையில் பிரியாமல் நின்று படம் முடிந்த பின் குடும்பப் பாட்டு பாடுவார்கள் விஜய காந்த் நடித்த வானத்தைப் போல படத்தில் ., அதையும் கூட இந்தப் படத்தின் ரீமேக் என்று சொல்லலாம். ஆனால் ஏனோ சொல்லவில்லை

==============================================================
பாஷா இந்தியில் மீண்டும் ரீமேக் செய்யப் பட்டு அங்கும் நன்றாக ஓடியதாகச் சொல்கிறார்கள். அந்த அளவு ஹம் மிலிருந்து பாஷா மாற்றப் பட்டுள்ளது.

இந்தியில் இந்த ஃப்ளாஷ் பேக் அதனுள் ஒரு ஃப்ளாஷ் பேக் என்றெல்லாம் கிடையாது. சீரான வரிசையாகக் காட்சிகள்தான்.   டைகர் (அவர்தாம் மாணிக் பாஷா) ஒரு கோபக் கார இளைஞர் .அவரது நண்பர்  கோன்சால் கண்ணாடி போட்ட இன்னொரு இளைஞர். இவர்கள்  மும்பை தாதா பாக்தாவர் (நம்ம ஆண்டணி)ஐ  எதிர்கிறார்கள்.  கோன்சாலின் சகோதரி ஜும்மா ஒரு நடனமாது. அவரோடு டீ கப் வைத்துக் கொண்டு ஒரு குத்துப் பாடல் இரண்டு முறை இருக்கிறது.



 டைகரின் அப்பா , மாணிக்கத்தின் அப்பாவைப் போலவே வில்லனிடம் வேலை பார்க்கிறார். டைகரின் அப்பாவுக்கும் இரண்டாம் தாரம் உண்டு. இரு மகன்கள்.  டைகரின் நண்பரைக் கொல்ல, டைகர் கொதித்து எழ  டைகரை காப்பாற்ற டைகரின் அப்பாவும் மாற்றாந்தாயும் பலியாகிறார்கள். கொதித்தெழுந்த டைகர் பாக்தாவாரின் சாம்ராஜ்யத்தை சூரையாடி விட்டு பாக்தாவரை கொல்லப் போகும்போது அங்கொரு டேஞ்சர் காமெடி போலீஸ் அனுபம் கேர் வந்து டைகரை போகச் சொல்லி விடுகிறார். வில்லனின் வீட்டை சூறையாடி விட்டு. அந்த ஊர் ஆண்டனியின் மனைவி குழந்தையை கொன்று விடுகிறார்.

டேஞ்சர் காமெடி போலிஸ் டைகர் ஒரு கெட்டவன் என்று அலுவலக குறிப்பு எழுதி வைத்து விட்டு தொழிலதிபராக செட்டில் ஆகி விடுகிறார். டைகர்தான் வில்லனின் வீட்டைக் கொள்ளையடித்துவிட்டு மனைவி குழந்தையை கொன்றதாக கதை பரப்பி விடுகிறார்.

டைகர் ரயிலில் பாம்பேயை விட்டு வெளியெறுகிறார், அவரது தோழியோடும் சின்னத் தம்பிகளோடும் ஓடும் ரயில் ஏறுகிறார். எல்லோரும் ஏறிய பின் உனது பழைய வாழ்க்கை எதுவும் வேண்டாம். நீ உன் தம்பிகளிடம் முழு அன்பைச் செலுத்து என்று சொல்லி விட்டு ஜும்மா நின்று விடுகிறார்.


கொஞ்சம் மொக்கையாகத் தெரிகிறதா?  அதனால்தான் சத்யா மூவீஸ் கதை இலாகா பிச்சுப் பிச்சு ஃபிளாஷ்பாக் ஆக்கியிருக்கிறார்.



அடுத்த காட்சியில் நேராக ஊட்டிக்கு வந்து விடுகிறார்கள்.  பெரிய தம்பி நல்லா படிச்சு இன்ஸ்பெக்ட்ராகி கல்யாணம்  ஆகி நன்றாக பாட்டுப் படிக்கக் கூடிய பெரிய சைஸ் குழந்தை ஒன்றும் இருக்கிறது.  ஃப்ளாஷ் பாக்கில் அவரை விட ச்ற்றே சின்னப் பையனாக இருக்கும் சின்னத்தம்பி கல்லூரி மாணவனாகவே  இருக்கிறார். மக்குப் பையன் ப்போல..

வீட்டில் ஒவ்வொருவரும் அவரை விரட்ட பம்பரமாய் சுற்றி வேலை செய்கிறார். அந்த வேகத்தில் அவர் கீழே விழுகிறார். விழுந்த உடன் இந்தக் குடும்பத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை என்று கூறி அழுகிறார். உடனே  குடும்பப் பாட்டைப் பாடி சமாதானப் படுத்துகிறார்கள்.



சின்னத் தம்பி  கோவிந்தா ஒரு பெண்ணைக் காதலிக்க பெண்ணின் தந்தையின் விருப்பத்திற்கேற்ப ஒரு மிலிட்டரிக்காரராக வேடமிட்டு அமிதாப் குடும்பட்த்துடன் செல்ல குட்டு  வெளிப்பட   பெண்ணின் வீட்டில் அவரை த் துப்புகிறார். உடனே ரஜினியின் மனைவியாக வரும் பெண் ஐந்து விரல்களையும் காட்டி குடும்பப் பாட்டை ப் பாடுகீறார்.



இதே மாதிரி தங்கையின் திருமணத்திற்காக ரஜினி பேசும்போது அவர்து மாற்றாந்தாய் ரஜினியைப் புகழ்ந்து பேசுவார். ரஜினி எல்லாத்தையும் விட்டு கொடுப்பதாகப் பேசுவார். இதில் பெரிய தம்பியின் மனைவி கூட்டுக் குடும்பத்தைப் ப்ற்றியே பேசுவார்.


அப்படியே படம் செல்ல மெயின் வில்லன் வெளியேறி வருகிறார். உடைந்து போன தன் வீட்டைப் பார்த்து விட்டு டைகரைத்தேட ஆள் அனுப்புகிறார்.  கடைசியில் ஊட்டி வீட்டைக் கண்டு பிடித்து விடுகிறார்கள்.

ரஜினியின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்று மாமியாருக்கும், மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை என்று இவர்களுக்கும் தந்தி வருகிறது.

ரஜினியின் மனைவி, குழந்தையை வில்லன் கடத்தி, தனது உடைந்து போன பழைய வீட்டில் அடைத்து வைக்கிறார். அமிதாப் வீட்டிற்கு ஃபோன் செய்து டைகரைக் கேட்கிறார். ரஜினிக்கு பழசெல்லாம் தெரியாததால் கோன் டைகர் என்று சொல்லி ஃபோனை கட் செய்கிறார்.   ரஜினியின் மனைவி மற்றும் குழந்தையைத் தேடி பெங்களூருவுக்குச் செல்கிறார்கள். இருவரையும் விசாரிக்கும்போது ஒரு டிரைவர் தவறாகப் பேச அமிதாப் கொதித்தெழுந்து அவனைப் புரட்டி விடுகிறார். அதற்கு ஈடாக தமிழில் ரஜினிக்கு கோபம் வரும் காட்சி  படும் பயங்கரமாக இருக்கும்.


அமிதாப் டைகரைப் பற்றி தெரிந்த தன் கடந்த கால நண்பர்களுடன் ஃபோன் செய்ய  ஜும்மா பெங்களூரில் இருப்பது தெரிய வருகிறது. அவரைப் பார்க்க போகிறார். இந்தக் காட்சி வரை படம் வானத்தைப் போல படம் மாதிரியே ஒரு திகிலுடன் தான் செல்கிறது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்த உடன் இந்தக் காட்சி வருகிறது.



ஜும்மா பழைய பாடல் ஒரு குஜாலாகப் பாடுகிறார்.  படம் அப்படியே கமர்ஷியல் ஆக்‌ஷன் த்ரில்லராக மாறுகிறது. இந்த நிலையில் ரஜினிக்கு திரும்பவும் ஃபோன் வருகிறது. உன் அண்ணந்தான் டைகர் என்று சொல்கிறது. உடனே அவர் பழைய ஃபைல்களை எடுத்துப் பார்க்கிறார். அதில் இன்ஸ்பெக்டர் கிரிதர் அவரைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதி இருப்பதை படித்து விட்டு வருகிறார்.  வீட்டிற்கு நுழைந்த உடன் அமிதாப்பை இவர் ஒரு பயங்கர ரவுடி என்று வீட்டிற்குள் திட்டுகீறார்.

இந்தக் காட்சியில் அவர் ஒரு இன்ஸ்பெக்டர் என்பது நினைவுக்கு வந்து துப்பாக்கியைக் காட்டி அண்ணனை கைது செய்யப் பார்க்க சின்னத் தம்பி குறுக்கே பாய்ந்து தடுக்க அண்ணன் தப்பிச் செல்ல இணைந்த கைகள் எதிரும் புதிருமாக மாறுகின்றன. அமிதாப் தப்பிச் சென்றவுடன் ஜும்மா பேச ஆரம்பிக்கிறார். தம்பிகளுக்காக அவர் வாழ்க்கையையே தியாகம் செய்ததையும், அதுவும் மாற்றாந்தாய் வழித் தம்பிகள் என்பதையும் எடுத்துச்சொல்கிறா. உடனே ரஜினி திருந்தி விடுகிறார். கதையின் பிற்பகுதி ரஜினியின் மனைவி குழந்தையைச் சுற்றி வந்தாலும் இந்தக் கதாபாத்திரம் 1991ம் ஆண்டு ரஜினிக்கானது அல்ல.   கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே தெரியும் உண்மை. மார்க்கெட்டிங்கிற்காக நடித்துக் கொடுத்தது போலவே இருக்கிறது.


அதற்குள்  அமிதாப் வில்லனின் இடத்திற்குள் சென்று விட ரஜினியின் குடும்பத்தை வெடி குண்டால் கட்டி வைத்து அவரைச் சுற்றி பெரிய அடியாள் படையுடன் வில்லன் நிற்கிறார். வழக்கம்போல உரத்த குரலில் அமிதாப் பேசுகிறார். சண்டை உனக்கும் எனக்கும்தான் . உன் குடும்பத்தை நான் ஒன்றும் செய்யவில்லை என்று பாஷா போலவே பேசுகிறார். குடும்பத்தைக் கொன்றது. சூரையாடியது எல்லாம்  இன்ஸ்பெக்டர் கிரிதர்தான் என்று சொல்கிறார். அதை உறுதி படுத்துவதற்காக சிரிப்பு போலீஸ் கிரிதர் ஹெலிகாப்டரில் வந்து அத்தனை அடியாட்களை மெஷின் கன் வைத்து சுட்டுவிட்டு படத்தின் முக்கிய வில்லனாக பிரமோசன் பெறுகிறார்.  சகோதரர்கள் பாட்டுப் பாடிவிட்டு ஒருவரை ஒரு கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்படியே ரஜியின் மனைவியைத் தூக்கி தண்ணீருக்குள் போட்டு விடுகிறார்கள்.  சண்டை நடக்கிறது.  கடைசியில் ராணுவம் வருகிறது.  பழைய வில்லன் புதிய வில்லன்மேல் வெடிகுண்டினை மாட்டிவிட பாஷா போல அமிதாப் தலைமேல் அவரைத் தூக்கி இவர் போல போடுகீறார். வெடிகுண்டு வெடித்து வில்லன்கள் சாக  இவர்கள் எல்லோரும் ஒன்று சேருகிறார்கள். சுபம்.


படத்தின் முக்கிய வித்தியாசம் என்னவென்றால் டைகர் ஒரு சராசரி கோபக்கார இளைஞர்.  பாஷா அதிபயங்கர சக்திவாய்ந்த கடத்தல் மன்னன்.

மற்றபடி சிரிப்பு போலீஸ்- கேசவன், கோவிந்தா யுவராணி அப்படி இப்படி என்று சின்ன சின்ன மாறுதல்தான்.


வில்லனின் பெண்ணை தூக்கிக் கொண்டு போய் வளர்ப்பதாக சின்ன வயதில் ஏதோ ஒரு படத்தில் பார்த்த நினைவு. ஆனால் ஹம்மில் தாய் மகள் இருவரையும் கொன்று விடுகிறார். அது எந்த படம் என்று இல்லை.

ஜும்மா பாத்திரத்தை ஃபிளாஷ்பாக் காட்சிகளில் தமிழ்படத்தில் காட்டவேவில்லை . ஃப்ளாஷ்பாக்கிலும் நக்மா வந்திருந்தால் ரசிகர்கள் குழம்பாமல் இருந்திருப்பார்கள். படத்தின் பிற்பகுதியில் வரும் ஜும்மா நக்மா போலத்தான் இளமையாக இருக்கிறார்,.



Saturday, May 28, 2011

சிங்கப்பூரில் ரஜினி ( காணொளிகளுடன்)

சிங்கப்பூருக்கு ஓய்வெடுப்பதற்காக சென்றிருக்கும் ரஜினிகாந்த நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டு பூரண நலத்துடன் தாயகம் திரும்பி ராணா, ஜீணா, நீனாம் கானா, இந்தன்னா, இத்தண்ணா என்று பல படங்களில் நடித்து மகிழ்ச்சியாக வாழுவதற்கு நம்மால் முடிந்த பிராத்தனைகளை செய்வோம்.

ஏற்கனவே ஒரு முறை ரஜினி உடல்நலம் இல்லாதபோதும்  அவரது குருநாதர் கே.பாலசந்தரின் ஏற்பாட்டின்படி  சிங்கப்பூர்தா அப்போது அங்கு படமாக்கப் பட்டதுதான் நினைத்தாலே இனிக்கும்.

இந்தப் படம் நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போதே வந்திருந்தாலும்கூட  ஒரு சராசரி மாணவனாக கல்லூரியில் காலடி எடுத்த வைத்த காலத்தில் நம்மைப் போன்ற ஒரு ஜீவனாக தோன்றிய பாத்திரம்தான் இந்த காணொளியில் வரும் ரஜினி. நமக்கே இவ்வாறு தோன்றியதென்றால் அந்தக் கால கட்ட மாணவர்களுக்கு தங்களில் ஒருவராக ரஜினி தோன்றியிருப்பார். தங்களில் ஒருவராக முதல்மதிப்பெண் வாங்கிய மாணவரை தலைக்குமேல் தூக்கிக் கொண்டாடும் சகமாணவர்களாக அப்போது ரஜினியை நினைத்துப் பார்த்திருப்பார்கள்.

இந்த்க் குறிப்பிட்ட காட்சியில்  துவக்கத்தில் ரஜினி காட்டும் அலட்சியம் பின்னா அவர் காட்டும் பதட்டம். அதையெல்லாம் விளக்கும் சக்தி நமக்கு இருப்பதாகவே தோன்றவில்லை.


ரஜினியின் கதாபாத்திரம் உருவாக்கமே ரஜினியை மனதில் வைத்து ரஜினிக்காக மட்டுமே செய்தது போல இருக்கும். கொஞ்சம் பிசகினாலும்  என்னவோ போல ஆகிவிடும் கதாபாத்திரம் அது.  ரஜினியின் நண்பர் வீட்டில் விடைபெரும்போதும், கமல் வீட்டில் கிளம்பும்போது நகைச்சுவை செய்யும்போது பரிசோதனை செய்யும்போதும் விமானத்திலும் நிதானமாக மீண்டும் மீண்டும் ரசிக்கலாம்.





மேடை நிகழ்ச்சிகளின்போது மாணவர்கள் பலரும் சேர்ந்துதான் அந்த கலைநிகழ்ச்சிகளை உருவாக்குவார்கள். நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த பேர் குறிப்பாக அன்று மட்டும் நிகழ்ச்சிகளை ரசிக்கும் நபர்கள் முன்னால் நிற்கும் மாணவனைத்தான் பாராட்டுவார்கள். கதை திரைக்கதை எழுதும் அதாவது ரூம்போட்டு யோசிக்கும் நபர்களுக்கு பாராட்டு மிக மெதுவாகத்தான் கிடைக்கும். அந்த உணர்வை ரஜினி இந்தப் பாடலின்போது அழகாக வெளிக்காட்டுவார்.  அது.................



முதன்முதலாக நகரத்திற்கு செல்லும் மாணவனுக்கும் இந்தப் படத்தில் வரும் ரஜினிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.





இது ஒரு பக்தி பாட்டுன்னும் சொல்லலாம். ஒரு ஆட்டத்தில் ரிசர்வ் பிளேயர் எப்படி தனக்கு கொடுக்கப்படும் வாய்ப்பை நன்கு உபயோகப் படுத்திக்கொள்ளவேண்டும் என்பதாக இந்தக் கதாபாத்திரம் எனக்குப் படுகிறது.


முப்பது ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் சென்ற ரஜினி நலமுடன் திரும்பியத்தைப் போல இம்முறையும் நல்லபடி திரும்பி வர அனைவரும் பிராத்தனை செய்வோம்

Tuesday, April 5, 2011

விஜய காந்தின் ஓட்டு வங்கியும் ரஜினியும்

இந்திய அரசியலில் மூன்றாவது அணி என்று பேசுவார்கள்; நான்காம் அணி கூட உருவாக்கிக் கொண்டார்கள். அதுபோல் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்காற்றினால் மாநில அளவில் மாவட்டக் கட்சிகள் வளரத் தானே செய்யும்


மாவட்டக் கட்சி என்ற வடிவத்தை நாம் யோசித்தால் நமது மாவட்டங்கள் அப்படி ஒன்றும் பெரிய பரப்பளவு உள்ளவை அல்ல. புதுவை மாநிலமே சிறிய அளவில் இருப்பதால் தான் தமிழகக் கட்சிகள் அங்கே கிளைகளை வெற்றிகரமாக நடத்த முடிகிறது. நமது மாவட்டங்கள் சின்னதாக இருப்பதால் சில நேரங்களில் சில மாவட்டங்கள் பரவி ஒரு கட்சி இருக்க முடியும். தமிழ் முழுவதும் தெரிந்த தலைகளால் அதை மாநிலக் கட்சியாகக் கூட மாற்ற முடியும்.

பொதுவாக நமது மக்கள் கட்சியில் சேர்வது என்பது பெரும்பாலும் மக்களுக்கு சேவை செய்வது என்பதைவிட தனக்கு ஒரு பின்புலமாக பக்க பலமாக இருக்கும் என்ற நிலையில் கட்சிகளில் சேர்கிறார்கள். திறமையாக செயலாற்றத் தெரிந்தவர்கள் மேலும் மேலும் பெரிய அளவில் வளருவதற்கு தற்போதுள்ள சூழலில் பழைய அரசியல் கட்சிகளில் இடம் இருப்பதில்லை. ஏற்கனவே கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களும் அவர்களோடு தோள்நின்ற இளவல்களும் அந்தக் கட்சிகளில் முக்கிய நிலையில் இருப்பதால் புதிதாக பதவி எதிர்பார்த்து கட்சிகளில் சேர்பவர்களுக்கு பதவிகள் என்பது வார்டு செயலாளர் என்பதை தாண்டுவது என்பதே குறைவு.

இந்த சூழலில் புதிதாகக் கட்சி யார் ஆரம்பித்தாலும் இது போன்று பதவி இல்லாமல் சிரமப் படும் நபர்கள் புதிய கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் திறமைக்குத் தகுந்த பதவிகளை அடைந்து மக்கள் சேவைக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள்.

விஜய காந்த் கட்சி ஆரம்பித்த போது கூட அதுதான் நடந்தது. உழைத்து கட்சியில் முன்னேற விரும்பியவர்களும் ஏற்கனவே ஓரளவு முன்னேறியவர்கள் சுதந்திரமாக செயலாற்ற விரும்பியவர்களும் கட்சியில் சேர்ந்து உழைக்கின்றனர். அவர்களது உழைப்பின் காரணமாகவும் தமிழ்நாடு தெரிந்த கட்சித்தலைமையின் காரணமாகவும் அந்த உழைப்பினை ஓட்டுக்களாக மாற்ற முடிகிறது.

பொதுவாக கட்சிமாறித் தலைமை இருந்தால் இந்த வட்ட அளவில், பேரூராட்சி, ஊராட்சி அளவிளான த்லைகளால் தொடர்ந்து போராட முடியாது. நேற்றைய எதிரியை இன்றைய நண்பனாக ஒரு சிலரால் ஒரு சிலரை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். அப்படிப் பட்ட சூழலில் கீழ்மட்டத்தலைவர்களால் தொடர்ந்து திறம்படச் செயலாற்றுவது மிகக் கடினம். ஆனால் விஜயக் காந்த் தனியாக நிற்பது இவர்களுக்கு தங்கள் திறமையைக் காட்டவும், தங்களை வளர்த்துக் கொள்ளவும் மிக உபயோகமாக இருக்கிறது.

நடுநிலை ஓட்டுக்களும், முக்கியக் கட்சிகளை பிடிக்காத ஓட்டுக்களும் விஜயக் காந்த்துக்கு விழுந்ததாக பேசுகிறார்கள். ஆனால் நகரங்களில் கிராமங்களில் யார் தோற்கவேண்டும் என்று போடப் படும் ஓட்டுக்களே அதிகம்.(யாருக்கு வேணும்னாலும் ஓட்டுப் போடு,நம்பியாருக்கு மட்டும் ஓட்டுப் போட்டுராத.. என்ற வசனத்தை கேட்டு இருக்குறீர்களா). பெருநகரங்களிலும் ஓரளவு வளர்ந்த நகரங்களிலும் முக்கிய கட்சிகளை பிடிக்காதவர்கள் வாக்களிக்கவே போக மாட்டார்கள். இவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் புதிதாக பெரிய அளவில் ஓட்டு வாங்கக் கூடிய மற்ற மாவட்டக் கட்சிகளுக்கும், ஜாதிக்கட்சிகளுக்கும் உள்ள நிலை கூட இதுதான்.


முக்கிய இரு கட்சிகளைப் பிடிக்காதவர்களின் ஓட்டுக்கள் என்றால் பகுஜன் சாமாஜ்கட்சி, பா.ஜ.க போன்று பிரதமர் வேட்பாளரை தன்னகத்தே வைத்திருந்த கட்சிகளுத்தான் அந்த ஓட்டுக்கள் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை

தலைவரின் மீதான நம்பிக்கை பெரிய அளவில் இருந்தாலும் கூட அவரால் கிடைக்கக் கூடிய பலன்களை வாங்கிக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய நகர, கிராம, வார்டு தலைகளின் உழைப்பே ஓட்டு வங்கிகளை ஏற்படுத்த முடியும்.

இன்றைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் தெரிந்த தலைவர்கள் கூட குறைவாகவே இருக்கிறார்கள். அதுபோல இந்தியா முழுவதும் தெரிந்த தலைவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுக்குக் கூட நேரடியாகச் சந்தித்துப் பேசக் கூடிய அடுத்தடுத்த கட்ட தலைவர்கள் இந்தியா முழுவதும் இருப்பதும் கேள்விக்குறியே...

அதனால்தான் நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் இது போன்று உழைக்கும் திறமை வாய்ந்தவர்கள் அவர்களது கட்சியில் முதலில் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்களை கட்சித்தலமை அதிகமாக உபயோகப் படுத்திக் கொள்ள தெரிந்திருந்தால் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிகிறது.

அவ்வாறாக ஒரு புதிய அரசியல் கட்சி ஓட்டுக்கள் அதிகம் வாங்கினால் அது இவர்களைப்போன்ற இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவரைகளைப் பொறுத்தே அமையும்.

நடிகர்களின் நற்பணி மன்றங்களில் (இப்போது ரசிகர் மன்றம் என்று ஏதாவது இருக்கிறதா என்ன?) ஆட்கள் சேருவதும் இதற்காகத்தான். தங்கள் தலைவனை தெய்வமாக நினைத்து பாலாபிஷேகம் செய்வர்கள் ஒரு கட்டத்தில் தங்களை பூசாரிகளாக நினைத்துக் கொண்டு பூசாரிக்கு உரிய மரியாதையையும், காணிக்கைகளையும் எதிர்பார்க்க ஆரம்பித்து அதற்கான அடிப்படையாகவே இதில் உழைக்கின்றனர்.

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதில் சேருபவர்கள் இதுபோன்ற பல கூட்டல், கழித்தல் கணக்குகளைப் போட்டுப் பார்த்தே சேருகிறார்கள்.

அவ்வாறு புதிய கட்சி ஆரம்பிக்கும்போது ஏதாவது உணர்ச்சிகரமான பிரச்சனைகளை முன்னிறுத்தி கட்சி ஆரம்பித்தாள். மற்றவர்கள் பெறக்கூடிய ஓட்டுகள் குறையும். ஆரம்பிப்பவர் பெறக்கூடிய ஓட்டுக்கள் வெற்றியைக் குவிக்கும்.

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது சூழல் அப்படித்தான். தி.மு.க. இந்திரா கூட்டு, எதிரணியான ராஜாஜி-காமராஜ் கட்சிகள் வழுவிழந்த சூழல். அந்த சூழலில் தி.மு.க.வின் பொருளாளரான எம்.ஜி.யார் (இப்போது மு.க.ஸ்டாலின் பொருளாளராக இருக்கிறார்) தனியே பிரிந்து வந்து ஒரு உணர்ச்சிகரமான உரைகள் நிகழ்த்தப் படுகிறது. அந்த கட்டத்தில் வந்த எம்.ஜி.யார் பாடல்களைக் கேட்டாலே ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

என்.டி.யார் கட்சி ஆரம்பித்த சூழல் இன்னும் அபாரமாக இருக்கும். எம்ஜியாரைப் போல என்டியார் இருபது ஆண்டுகாலம் ஒரு அரசியல் கட்சிக்கு உழைத்தவரல்ல.மூன்று சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தவரும் அல்ல. எம்ஜியார் போல தெருதெருவாக பிரச்சாரம் செய்த அனுபவமும் அவருக்குக் கிடையாது. ஆனாலும் அவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போதைய காங்கிரஸ் முதலவர் கட்சித் தலைமையை வரவேற்க விமான நிலையத்தில் ஒரு பொழுது முழுதும் காத்திருக்கிறார், ஆனால் கட்சித்தலைமை அவரை நிராகரித்துச் செல்கிறார்கள். அது ஒரு உட்கட்சி விவகாரம். ஆனால் அந்த பிரச்சனையை ஆந்திர மக்களின் ஒட்டு மொத்த கவுரவ பிரச்சனையாக என்டியார் எடுத்துக் கொண்டு ஒரு கட்சி ஆரம்பிக்கிறார். மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். அவரது பிரச்சாரத்தை எதிர்கொள்ள வழியில்லாமல் மற்றவர்கள் தோற்கிறார்கள். 84ல் அதிபயங்கர காங்கிரஸ் அலை அடித்தபோது கூட ஆந்திராவில் தெலுகுதேசம் கட்சிதான் பெருவாரியான வெற்றி அடைந்தது என்பதும் பிரதான எதிர்கட்சியாக பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தது என்பது சரித்திரம்.

96ல்கூட ஒரு உணர்ச்சிகரமான சூழல் நிலவியது. புதிதாக மூப்பனார் கட்சி தொடங்கினார். அவரது கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அந்தக் கூட்டணிக்கு எல்லாமே பிரச்சார பிரம்மாஸ்திரமாக அமைந்தது. தூர்தர்ஸனில் ஒலிபரப்பான ஒரு சாதாரண பேட்டி(தொலைக்காட்சி நிலையத்தை பொருத்தவரை அந்தப் பேட்டி பத்தோடு பதினொன்று) கூட தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி பெட்டிகளிலும் பார்க்கப் பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.

ஆனால் சிரஞ்சீவிக்கோ, விஜயகாந்த்துக்கோ இப்படி ஒரு சூழல் இல்லை, இருந்தாலும் அவர்கள் குறிப்பிடத்தக்க ஓட்டுப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்களது கீழ்மட்டத்தலைவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்.

தமிழகத்தில் எத்தனையோ பெரிய தலைவர்கள் தனியே கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் கட்சி ஆரம்பித்தபோது ஒரு உணர்ச்சிகரமான சூழல் இல்லை. தாய் கட்சியிலிருந்து வெளியேறியவர்களுடன் புதிதாகக் கட்சியில் வந்தவ்ர்கள் கடை மட்டம் வரை மற்ற கட்சிகளை எதிர்த்து வேலை பார்க்கும் தொண்டர்கள் இல்லாத சூழலில் தோல்வியையே தழுவி யிருக்கிறார்கள். (தலைவருக்குத்தான் மற்ற தலைவரோடு பிரச்சனை. கீழே உள்ளவர்களுக்கு மற்ற நண்பர்களோடு பிரச்சனை இல்லையே. அப்புறம் எங்கே கடும் எதிர்ப்பைக் காட்டுவது)

இன்றைய சூழலில் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே இணைத்து கடுமையாக அரசியல் பணி செய்யும் நிலையில் உள்ள யார் அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்தாலும் அவர்களால் நிறைய ஓட்டுக்களைப் பெற முடியும். ஆனால் அந்தத் தகுதி நடிகர்களுக்கு அதிகமாக இருப்பதால் நடிகர்கள் பலரும் கட்சி ஆரம்பிக்கும் ஆவலில் இருக்கிறார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் கூட இம்ரான்கான் மாதிரி கட்சி ஆரம்பிக்க நினைக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் நற்பணி மன்றங்களை ஆரம்பித்து அடிப்படைப் பணிகளைச் செய்ய வேண்டும்.

உண்மையில் ரஜினி அரசியலுக்கு வந்தாலும், விஜய் அரசியலுக்கு வந்தாலும் இரண்டாம் கட்ட மூன்றாம் நான்காம்நிலை த்லைவர்களின் தொண்டர்களி ன் உழைப்பினை பெறும் திறமை இருந்தால் மட்டுமே ஓட்டுக்களைப் பெறமுடியும். அவர்களின் முகத்திற்காகவெல்லாம் ஓட்டு விழவேவிழாது



டிஸ்கி ; இது போன தேர்தல் முடிந்த பின் எழுதியது. இன்றைய விஜயகாந்த்க்கு இதெல்லாம் தெரியுமா?   என்று நினைத்த போது என்னவோ போல் இருந்தது. த்ங்களிடம் மீண்டும் பகிர்ந்து கொள்ள ஒரு மீள்பதிவு

Sunday, December 12, 2010

ரஜினி ரசிகர்கள் செய்யத் தவறிய வேலை நிறுத்தம்

எந்திரன் படம் பார்த்த்போது ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. படம் பிடித்துத்தான் இருந்தது. ஆனாலும் வசீகரனின் உழைப்பு மொத்தமாக வீணாகிபோவதுபோல படம் எடுத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள்.

அதிபுத்திசாலி ரோபோ சமுதாயத்திற்கு ஆகாதாம். என்ன ஒரு பலவீனமான ஒருவாதம்.  படத்தின் ஆரம்பத்திலிருந்தே வசீகரனை காமெடியாக்கி  வைத்த இயக்குநரை என்னவென்று சொல்வது?

போக்குவரத்துவிதிகளின்படி வண்டி ஓட்டத் தெரிகிறது. முன்னால் போகும் வண்டியை ஓவர்டேக் செய்யத் தெரிகிறது.   கேட்டால் புரகிராம் செய்திருக்கிறார்களாம். அதேபோல் மனிதர்களின் குறிப்பிட்ட உறுப்புகள் வெளியே தெரியாவண்ணம் வெளியே வரவழைக்ககூடாது என்று புரகிறாம் செய்து விட வேண்டியதுதானே. அப்புறம் எதற்கு சிட்டியை கொஞ்சம் கொஞ்சமாக கழட்ட வேண்டும்.

உணர்வுகள் இல்லாததால்தான். ரகசியம் கேட்ட புரபஸரிடம் பதில் சொல்ல மறுக்கிறதா சிட்டி?  அழுத்திக் கேட்கும்போது  டாக்டரிடம் கேட்டுக் கொண்டுவந்து சொல்கிறேன் என்கிறதா?

ஐஸ்வர்யாவின் துப்பட்டாவை இழுக்கும்முன் காப்பாற்ற வருகிறதா?

சிந்திக்கும் செயல் இல்லாததால்தான்  வால்யூம் அதிகரித்து  சவுண்ட் சிஸ்டம் உடைக்கிறதா?   ஜிப்பைக் கழட்டி பேண்ட்டை உறுவுகிறதா?

தடுமாறும் ஐஸ்வர்யாவுக்கு ஜிப்ஜாப் மூலமாகவும் பின்னர் ஸ்கேன் மூலமாகவும் பிட் கொடுத்து உதவுகிறதா?

துறைத் தலைவரே பிரசவம் பார்க்க தடுமாறும்போது தேவையான தகவல்களை வரிடைப் படுத்தி, எதை உபயோகிப்பது எதை ஒதுக்குவது என்பதை பகுத்தாய்ந்து பிரசவம் பார்க்கிறதா?  (இது மிகத் திறமை வாய்ந்த அறிஞர்களாலேயே பல நேரங்களில் சாத்தியம் ஆவது இல்லை)

ராணுவத்திற்கு யார் தேவை?

மேலதிகாரியின் உத்தரவை அப்படியே பின்பற்றும் போர்வீரனைத்தான் பெறும்பாலான தளபதிகள் விரும்புவார்கள். அரசுப் பணியில் முதலில் கட்டளையை நிறைவேற்று. பின்னர் எதிர்ப்பை தெரிவி, என்றுதான் சொல்கிறார்கள்.

எதிர் நாட்டு மக்களுக்கும் நம் மக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அழித்துவிடும் என்கிறார்கள். இதுவரை எந்த யுத்தத்தில் நல்லவன் கெட்டவன் பார்த்து போர்வீரர்கள் செயல்பட்டு இருக்கிறார்.

எதிரிகளின் மேல் செலுத்தும் ஆயுதங்கள் செலுத்துபவர்களை பதம் பார்த்த சம்பவங்கள் யுத்த களத்தில் சாதாரணம். அதேபோல்  விலைபோன மனிதர்கள், எதிரிக்காக செயல்பட்ட நபர்களும் அதிகம்.  ஆனால் இது போன்ற ஒரு சொத்தைக் காரணத்தைக் காட்டி சிட்டியை நிகாரித்துவிடுகீறார்கள்.


நாட்டின் பிரதமரையே மெய்காப்பாளர்களை வைத்து முடித்த சம்பவங்களையெல்லாம் பார்த்து விட்டோம்.   இதில் சிட்டியால்தான் உலகம் அழியுமாம். என்ன கொடுமைடா சாமி?


முதல்வன்படத்தில் அர்ஜீனின் ஆட்சியால் தமிழகம் முன்னேறியதுபோல  சிட்டியின் சேவையால் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகக் காட்டி படத்தை முடித்திருக்க வேண்டும் இயக்குநர். படம் வெளியான அன்றே ரசிகர் அனைவரும் உலகம் தழுவிய வேலை நிறுத்தம் செய்திருந்தால்  ஒருவேளை இயக்குநரும், படத் தயாரிப்பாளர்களும் பணிந்திருப்பார்களோ?

ரசிகர்களின் வேலையே படம் பார்ப்பதுதானே?

 ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த பத்து ரஜினி படங்களைப் பற்றி எழுதியபோது பத்து ரஜினி படங்களின் கதைகளை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சொல்லி படங்களை கேட்டு ஒரு இடுகை போட்டிருந்தேன்.  அதில் மூன்று படங்கள் கண்டுபிடிக்கப் படாமல் இருக்கின்றன. நேரம் இருந்தால் கண்டுபிடியுங்களேன்

Saturday, December 11, 2010

இந்த ஹீரோக்களெல்லாம் யாருப்பா?

ரஜினியை அரசியலுக்கு யாரெல்லாம் கூப்பிடுறாங்க.  அப்படி கூப்பிடும் நபர்கள் எல்லோரையும் ரஜினிக்குத் தெரியுமா என்று கேள்விகேட்டால் அந்த கேள்விக்கு கிடைக்கும் பதிலை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வப்போது பதிவுலகில் பலரும் இதே தலைப்பில் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். எனக்கும் இந்த தலைப்பில் பதிவு போடவேண்டும் என்ற ஆசை.  எனனை யாராவது கூப்பிட்டே இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் என்னைக் கூப்பிட்ட அந்த நண்பருக்கு நன்றியையும் அவரது பதிவினைப் பார்க்காததற்கு  அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு இந்த இடுகையை ஆரம்பிக்கலாம்.

1. திரைப்படம் எண் ஒன்று

ஒரு வேலைக்காரன், விசுவாசமான வேலைக்காரன். அவனது முதலாளி ஆசைப் பட்டதற்காக  ஒருபெண்ணை தூக்கிக் கொண்டுவந்து கொடுக்கிறான்.
அந்தப் பெண்ணை முதலாளி கெடுத்து கொண்றுவிட  அந்த வேலைக்காரனுக்கு அந்தப் பெண் சிறுவயதில் தொலைந்துபோன தனது தங்கை என்று தெரிய  முதலாளியை பழிவாங்க சபதம் ஏற்று நண்டூறுது நரியூருது என்று பாடுவார்.  அந்த ஹீரோ யார்?

2. திரைப் படம் இரண்டு.

இரண்டு நண்பர்கள். முதல்நபர் அலுவலகத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர். இன்னொருவர் அவரது அடிபொடிபதவியில் இருப்பர். பதவிக்காரர் ஒரு அஜால்குஜால் பேர்வழி.   அவரால் கெடுக்கப் பட்ட ஒருபெண்ணுக்கு வாழ்வு கொடுக்கிறேன் பேர்வழி என்று மணந்துகொள்கிறார். அந்தப் பெண்மணி இவரை தெய்வமாக வழிபடுகிறார். தெய்வத்திற்கு கரைப் பட்ட பூவைத் தரமாட்டேன் என்று  பலான விஷயத்திற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறார். ஹீரோ அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகின்றேன் நானும் என்று பாட்டுப் பாடுவார். அந்த ஹீரோ யார்?

3.திரைப் படம் எண் மூன்று.

முறைப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு ஒரு பெண்குழந்தை பெற்றுக் கொள்கிறார். முறைப் பெண் இவரை விட்டு விலகி விட அவரது தங்கையை திருமணம் செய்து கொள்கிறார். பழைய மனைவி பிற்காலத்தில் சுமார் இருபது ஆண்டுகள் கழித்து வர அவரை பெற்றவர்கள் முதல் அனைவரும் ஒதுக்கிவைக்கிறார்கள். அவர் இறந்த உடன் தனி நபராக ஈமச் சடங்குகள் செய்கிறார் ஒரு ஹீரோ.  அவர் யார்?   இதில் மகளாக நடித்தவர் பின்னர் ஜோடியாக நடித்தார். விரைவில் அம்மாவாக நடிக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது

4. திரைப்படம் எண் நான்கு

40வயதைத் தாண்டிய ஒரு ஹீரொயின் அவரது வய்தை ஒத்த ஹீரோவை வைத்து ஒரு படம் எடுத்தார்.  அந்த ஹீரோவுக்கு சின்ன வயது தம்பி, நடக்கமுடியாத தங்கை, வயதான் தாயார். இப்படி இருக்கு மூளையில் கட்டி.  அந்த நேரத்தில் ஊரில் ஒருபிரமுகர் கொல்லப் பட அவரைக் கண்டுபிடித்தால் பரிசாக ஒருபெரிய தொகை அறிவிக்கப் பட தன் குடும்பத்தைக் காப்பாற்ற அவராக அதில் சிக்கிக் கொள்கிறார். சிறையில் இருக்கும்போது  மயக்கம்வர அவரது கட்டியைஅரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றி விடுகிறார்கள்.  இப்போது தன் வக்கீல் காதலியிடம் உண்மையைச் சொல்ல அவரை வெளிக் கொண்டுவர வழி தெரியாமல் தவிக்க  மைக்கேல் டிசௌசா ட்ரூ கிறிஸ்டியன் என்று அறிமுகம் ஆகி  சண்டையெல்லாம் போட்டு கடைசிக் கட்டத்தில் குண்டுகள் துளைக்கப் பட்ட நிலையில் வெகுநேரம் போராடி ஹீரோவைக் காப்பாற்றிய சின்ன ஹிரோ யார்?

5. திரைப்படம் என் ஐந்து
சென்ற படத்தில் ஹீரோ பெரிய அண்ணனாகவும், சின்ன ஹீரோ அடுத்த அண்ணனாகவும் இன்னொரு தம்பியுடன் நடித்த படம்.  சகோதரர் 2, 3 இருவரும் அண்ணியின் கொடுமை காரணமாக வீட்டைவிட்டு வெளியேற  காலங்கள் ஓடுகிறது, 2க்கு 1ஐ அடையாளம் தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். 2. ஒரு கொலைவழக்கில் மாட்டிக் கொள்ள 1 தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து வாதாடி சகோவை காப்பாற்றுகிறார். அந்த நடு சகோதரர் யார்?


6 திரைப் படம் எண் 6, 7.
ஒரு முதலாளி, ஒரு தொழிலாளி. இரண்டு பெண்கள்.  ஒருஹீரோ. ஹீரோ தொழிலாளியை காதலிக்க முதலாளி ஹீரோவைக் காதலிக்கிறார்.

முதலாளியை திருமணம் செய்து கொண்டு பின்விளைவுகளை ஒரு படமாகவும், தொழிலாளியை திருமணம் செய்துகொண்டு ஒரு படமாகவும் தந்து மக்களை மகிழ்வித்த நடிகர் யார்?

7. திரைப் படம் எண்8
ஒரு நண்பன் அவன் மனைவிக்கு பேய்பிடிக்கிறது. நவீன முறையில் மருத்துவர் என்ற பெயரில் பேய் ஓட்டும் கதை. இவரைத் தவிர யார் ஹீரோவாக நடித்திருந்தாலும் அத்தோடு ஓய்வு பெற்றிருப்பார்கள். அந்த ஹீரோ யார்?

8. திரைப் படம் எண் 9
ஒரு சராசரி மனிதன். அவனது தந்தைக்கு வாக்குக் கொடுத்தபடி தனது மாற்றாந்தாய் குழந்தைகளை நல்ல நிலமைக்கு கொண்டுவர வாழ்க்கையை தியாகம் செய்துவிடுகிறார். அவர் அதில் வெற்றிபெறும் நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்த ஒரு நபரை பார்க்கிறார். அந்த மனிதர் நம் ஹீரோ பெரிய தாதாவாக நாயகன் கமலஹாசன் போன்று இருந்த காலத்தில் நன்கு அறிந்த்வர். நமது ஹீரோ மீது கொலை முயற்சியும் செய்தவர். சூழ்நிலை அவரது மகளையே நமது ஹீரோ திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது.

இந்த ஹீரோ யார்?


9. திரைப்படம் எண் 10. 

சின்னத்தம்பி பிரபு மாதிரி ஒரு ஹீரோ. அவருக்கு கடவுள் அவரது வாத்தியார். பல வித்தைகளை வாத்தியார் கற்றுக் கொடுக்கிறார். ஒரு கால கட்டத்தில் அவர் கோபம், தாபம் பற்றியும் சொல்லிக் கொடுக்கும்போது  வாத்தியாரின் காதலியை இவர் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்தம்பி பிரபுதானே என்று அலட்சியமாக கொடுத்த பிரச்சனை ஆகிவிடுகிறது.  வாத்தியாரின் காதலியிடம் தன்னைக் காதலிக்குமாறு கெஞ்சும்போதும்,  வாத்தியாரிடம் தனக்காக காதலியை விட்டுக் கொடுக்குமாறு பேசும்போதும் ஒரு ரொமான்ஸ் ஹீரோவை நாடு இத்தனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவே தோன்றும். பின்னர் அவரே வில்லனாகி காதலியை குழந்தை பெற்றுத் தருமாறு மிரட்டும்போது பகிரென்று இருக்கும். அந்த ஹீரோ யார்?


=====================================================================

ஹீரோ பேர் எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். படத்தின் பேரைச் சொல்லுங்கள்.

Saturday, May 8, 2010

ரஜினியின் பாதையில் நம்ம ஊர் சாமியார்கள்.

ரஜினியே பல நேரங்களில் சாமியார் மாதிரி நடந்து கொள்வார்.  அவரது உள்ளக் கிடக்கையிலிருந்து பாபா கதைகூட எழுதினார்.  ரஜினியின் வழியில் நடந்து வரும் சாமியார்கள் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

========================================================

எஜமான்

வானவராயருக்கு குழந்தை இருக்காது. அவரது எதிரி வல்லவராயன், வானவராயரின் ஆண்மையில் சந்தேகம் எழுமாறு பேசுவார். அதைக் கேள்விப் பட்ட வான்வராயரின் பக்தை, விசுவாசி அவர் தன்னைக்கெடுத்து விட்டதாகக்கூறி   பஞ்சாயத்தில் நிறுத்திவிடுவார்.  அந்தக் காட்சியில் சாட்டையால் அடிப்பதாக நடித்தத பின் ஐஸ்வர்யா பட்ட பாடு.  அட.... அட... கடைசியில் வான்வராயர் அடிவாங்கும் காட்சியே வெட்டப் பட்டு விட்டது. 

வானவராயரின் ஆண்மையை பற்றி நல்ல எண்ணம் ஏற்பட ஒரு பக்தை தன்னைத்தானே தாழ்த்திக் கொண்ட நிகழ்வு  அன்று.

இன்று:-

நெற்றி நிறைய பொட்டு வைத்த, மாராப்பு  போட்ட ஆடையை அணிந்த ஒரு நபரை ஆண் என நிருபிக்க ஒரு பக்தையின் மானம் ரூ 150/= க்கு விலைப் பேசப்பட்டது.

பழைய படங்களில் ரஜினி ஏதாவது ஒரு பானத்தைக் குடித்த உடன் சுறுசுறுப்பாக செயல்படுவார். அது கூட நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
===================================================================

ரஜினியின் பல படங்களில் உன்வாழ்க்கை உன் கையில் வசனம் இடம் பெற்று வரும். பாஷாவில் ஆட்டோவில் அந்த வாசகம் எழுதப் பட்டு இருக்கும். நாளை ஒரு பத்திரிக்கையில் ஒரு சுவாமிஜி உன் வாழ்க்கை உன் கையில் என்று ஒரு தொடர் எழுதப் போகிறார்.






=============================================================

ரஜினி அவர்களை சாமியார்களே பின் பற்றுகிறார்கள்.

Thursday, January 14, 2010

எந்திரன் படத்திற்கு விளம்பரம் செய்வது எப்படி?

தமிழ் திரையுலகத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டை தன்னுள் எடுத்துக் கொண்டு வரும் படமாக எந்திரன் வர இருக்கிறது. எந்திரன் பட்ஜெட் ஏறக்குறைய தமிழ்திரையுல பட்ஜெட்டாகவே அமைகிறது, தமிழ் திரையுலகத்தினர் நல்வாழ்வு என்பது தமிழ்மக்களின் நல்வாழ்வோட்டு பின்னிப் பினைந்து இருப்பதால் எந்திரன் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எந்திரன் வெற்றிக்கு உழைக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதால் ஏதோ நமக்குத் தோன்றும் சில யோசனைகளை இங்கு பதிவிட விரும்புகிறேன்.

பாபா, ஆளவந்தான், கஜேந்திரா போன்ற மாபெரும் சரித்திர படங்களின் வரிசையில் எந்திரன் இடம் பெற்றுவிடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.  போட்டிக்கு குருவி, ஏகன் போன்ற படங்கல் ரீ ரிலீஸ் ஆகிவிடுமோஎன்ற அச்சமும் சிலரின் நெஞ்சில் இல்லாமல் இல்லை. பாபா படம் வெளியான போது திருப்பூரில் 500 ரூபாய் கொடுத்து நண்பர் ஒருவர் படம்பார்த்தார்.

இப்போது  திண்டுக்கல் சாரதி, காதலை தேடினேன் போன்ற படங்களையே மாபெரும் வெற்றிப் படம் ஆக்கிய சன் டி.வி.க்கு நாமும் சில யோசனைகளைக் கூறுவோம். விடுபட்டுப் போயிருந்தால்  பின்னூட்டங்களில் நீங்களும் கூறுங்களேன்.

யோசனை 1:-

படத்தின் ஸ்டில்களை ஊர் பெரிய மனிதர்களிடன் காட்டி  படத்தைப் பற்றி ஒரு கருத்தினை வாங்கி சன் டி.வி.யில் ஒளிபரப்பலாம். மக்கள் ஸ்டில் என்பதை திரைப்படம் என்று நினைத்துக் கொண்டு படம் பார்ப்பார்கள்.  இணையத்தில் வந்திருக்கிறதா என்பதை தேட ஆரம்பிப்பார்கள் பயங்கர விளம்பரம் கிடைக்கும்.

யோசனை 2=

சன் டி,டிஎச் சில் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ரகசிய எண் கொடுத்து அதற்கான கட்டணமாக குறைந்த பட்சம் 5000 வசூல் செய்யலாம். அதன் நடுவே  பத்துக்கு பத்து என்ற விகிதத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பி பணத்தை அள்ள முடியும். அதில் இரண்டு நிமிடங்கள் எந்திரன் விளம்பரமே போட்டால் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆசை அனைவரின்ன் மனதிலும் துளிர்விட்டு வளர ஆரம்பிக்கும்.

யோசனை 3=

இப்போது பிரிண்ட் போடுவதற்கு ரூ 50,000 தான் செலவாகிறதாம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ரீலீஸ் செய்தால் படத்தைப் பற்றிய பேச்சு வருவதற்குள் பெரிய அளவில் காசு பார்த்து விடலாம். காசுக்கு காசும் ஆச்சு கின்னஸுக்கு கின்னஸும் ஆச்சு.

யோசனை 4=

படம் வெளியாகும் திரையரங்கின் இடைவேளையின் போது சூப்பர் ஸ்டாரை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று கையைக் காட்டச் சொல்லலாம். ரசிகர்கள் திரையரங்க வாசலில் குவிந்து இருப்பார்கள். நான் எப்ப வருவார் எப்படி வருவார்னு தெரியாட்டியும் கரெக்ட்டா வந்து கையாட்டுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கும் கண்டிப்பாக படம் பார்க்க வந்து விடுவார்கள்.

யோசனை 5=

படம்பார்க்க வரும் ரசிகர்கள் டிக்கெட்டின் பாதியை அனுப்பச் சொல்லலாம். அதில் தேர்ந்தெடுக்கப் படும் ரசிகர்களின் வீட்டிற்கு ஐஸ்வர்யாவை அனுப்பி பொங்கல் வைக்கச் சொல்லலாம். தமிழர் புகழை நிலைநிறுத்திய பெருமை கிடைக்கும்.

யோசனை 6=

ஒரு நாள் எந்திரனின் வசூலை திருட்டி டிவிடியால் பாதிக்கப் பட்ட மக்கள் நிவாரண நிதியாகக் கொடுத்தால் அகில உலக திரையுலகமும் எந்திரன் வெற்றிக்காக பாடுபடும்.

யோசனை 7=

படத்தில் சாம் ஆண்டர்சனை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தால் பதிவுல நண்பர்கள் புகழ்ந்து எழுத படம் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும்.

யோசனை 8=

அமிதாப் வழியை பின்பற்றும் ரஜினி இந்தப் படத்தின் வெளியீட்டின்போது குதா கவா படம் வெளிவந்த போது அமிதாப் கடைபிடித்த வழியை பின்பற்றலாம். ஒரு அருமையான ஒற்றுமை. அந்தப் படத்தின் நாயகி அப்போதைய மூத்த நாயகியான ஸ்ரீதேவி.

யோசனை 9=

படம் பூஜை போட்டு இரண்டு ஆண்டுகள்  நிறைவடைந்ததை முன்னிட்டு ஓராண்டுக்கு மேல் திருட்டு டி.வி.டி வைத்திருப்பவர்களின் உரிமையை ஓரளவு கட்டணம் பெற்றுக்கொண்டு உண்மை என்று அறிவித்துவிடலாம். இதன்மூலம் ஓரளவு வருமாணமும் விளம்பரமும் கிடைத்துவிடும்.

யோசனை 10=

எந்திரன் படம்  injar  என்ற ஃபெரென்ஞ் படத்தின் ரீமேக் என்று ஒரு வதந்தி கிளப்பி விட்டு   injar  என்ற பெயரில் எந்திரனை டப் செய்து வெளியிட்டு உலக அளவில் பணத்தை அள்ளி விடலாம்

டிஸ்கி:-மீள்பதிவுதான்

Friday, November 13, 2009

2012 ஒரிஜினல் தமிழில் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டாருக்குன்னே உருவான ஒரு கதையை வெளிநாட்டு ஆளுங்க படம் எடுத்திட்டு இருக்காங்க..,  நாம சூப்பர் ஸ்டாரை வைத்தே அந்தப் படத்தப் பார்ப்போம்.

====================================================

படத்தின் துவக்கத்தில் கிராமச் சூழலில் ஒரு கவிநயம் மிக்க குத்துப்பாட்டு.

மாயா.. மாயா எல்லாம் மாயா

சாயா  சாயா எல்லாம் சாயா

போயா போயா எல்லாம் போயா

வாயா வாயா எல்லாம் வாயா

காயா காயா எல்லாம் காயா

நாயா நாயா எல்லாம் நாயா

பாயா பாயா எல்லாம் பாயா

என்று ஒரு தத்துவப் பாடலோடு சூப்பர் திரையில் நுழைகிறார். அந்த ஊரே அந்தத் திருவிழாவில் ஆடுகிறது.
http://4.bp.blogspot.com/_03G3R_dD0Cc/SolXPYv_0AI/AAAAAAAAAc0/bLmVdKwdYxE/s320/aaa.jpg
பெரிய மீசையோடு பிரபு வருகிறார். அங்கு நின்றிருக்கும் பூசாரியிடம் சாமி என் பையன் குருவுக்கு  இன்னிக்கு பொறந்தநாள் அதுதான் உங்க ஆசீர்வாதம் வாங்க வந்தோம் என்று சொல்கிறார்.

பூசாரி அருள்வந்து ஆடுகிறார்.  தெயவமே என்ற வார்த்தையோடு அமைதியாகிவிடுகிறார்.  அடுத்ததாக பழைய கால நயந்தாரா மாதிரி இருக்கும் பாவாடை சட்டை பெண்ணை  அழைத்து சாமி இவளையும் ஆசிர்வாதம் பண்ணுங்க இவதான்  குரு கட்டிக்கப் போற பொண்ணு. அடுத்தவருஷம் படிப்பு முடிஞ்சதும் குருவுக்கும் இவளுக்கும் கல்யாணம் என்கிறார் பிரபு.

பூசாரி கூர்ந்து பார்த்துவிட்டு  நீ தலைகீழா நின்னாலும் உனக்கு குரு கிடையாது, நீவேற ஆளப் பார்த்துக்க. அடுத்த வருஷம் குரு இந்த உலகத்திலய இருக்க மாட்டார்   என்று சொல்லிவிட்டு மயங்கிச் சரிகிறார்.

மாயன் கோவிலில் சொன்னால் சொன்னது நடக்கும் என்பது ஐதீகம். அதனால் எல்லோரும் சோகமாக மாறுகிறார்கள். ஆனால் குரு மட்டும்  பகுத்தறிவு வாதம் பேசுகிறார். ஆமாம் குருதான் நம்ம சூப்பர் ஸ்டார்.

இதெல்லாம் பழைய கால மூட நம்பிக்கைங்க..,  நீங்களெல்லாம் சொன்னதுனால் நான் அங்க வந்தேன். அங்க வந்தா என்னெல்லாமோ உளர்றாங்க...,

நான் ஒரு முற்போக்கு பத்திரிக்கைக்காரன். நாலு ஜனங்களுக்கு மூட நம்பிக்கை பற்றி எடுத்துச் சொல்லிட்டு இருக்கேன். என்னோட வலைப்பூ பூரா மூட நம்பிக்கை பற்றித்தான் எழுதிட்டு இருக்கேன். என்கிட்டயே கதை விடுறீங்களா..., என்று சொல்கிறார்.

அப்படியே பழையகால அச்சு இயந்திரத்தின் மேல் அவர் முகம் தெரிகிறது

நான் ஒரு பத்திரிக்கைக்காரன்,

சண்டை சச்சரவுக்கு கத்திரிக்காரன்

நான் எழுதுவது கத்தி முனையிலே

நான் நடப்பது என் பேனா வழியிலே

என்று தத்துவப் பாடல் பாடுகிறார்.

அப்போது அவர் பின்னால் நாட்டில்  உலகில் உள்ள அனைத்து பத்திரிக்கைக் காரர்களும் அவர் பின்னால் குவிகின்றனர்.

அவரின் பின்னால் பல மதரீதியான பத்திரிக்கைக்காரர்களும் வருகின்றனர். அவருக்குப் பின்னால் வந்த உடன் அனைவரது எழுத்தும் பகுத்தறிவுச் சிந்தனையோடு எழுத ஆரம்பிக்கின்றனர்.

மாயன் கோவில் மர்மம் பற்றி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஆய்வு செய்கிறார்கள். அதற்காக தமன்னா நியமிக்கப் படுகிறார். அவர் அடிக்கடி  நான் மாயவரத்துப் பொண்ணு, மாய வரத்துப் பொண்ணு என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

அவர் மாயவரத்துப் பொண்ணு என்ற சொன்ன உடனே அவருடன் வந்திருக்கும் சந்தானம் எ ட்ரூ பீஸ் என்ற கூடுதல் வசனத்தை சொல்லிக் கொண்டே வருகிறார்.

அதைக் கேட்ட சூப்பர் ஸ்டார் என்ன டூ பீஸா என்று கேட்கிறார். திரும்பிப் பார்க்கும் தமன்னா உடனே தலைவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

மாயவரத்துப் பொண்ணு  இவ

மாயன் கோவில் வந்திருக்கா

ட்ரூ பீஸ் கண்ணு  இப்ப

டூ பீஸில் ஆடி    வாரா..,

என்று அழகான ஜோடிப் பாடல் அங்கே அரங்கேற்றமாகிறது.

தொலைக்காட்சியில் மாயன்கோவிலில் சொன்ன குறிகள் பலிதம் ஆகியிருப்பது ஊர்ஜிதம் ஆன பலசெய்திகள்வெளிவருகின்றன.

சூப்பர் ஸ்டார் பற்றிய தகவல் உண்மையா என்பதை அறிய சூப்பர் ஸ்டாருக்கே தெரியாமல்  அவரைப் பற்றி நேரடி ஒலிப்பரப்பு செய்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் வழக்கம்போல வலைப்பூ எழுதிக் கொண்டும் பின்னூட்டம் போட்டுக் கொண்டும் காலம் தள்ளுகிறார். அவரைப் பற்றிய செய்தி எதுவும் அவருக்குத் தெரியாமல் நடக்கிறது.

அப்போது உலகை அழிவில் இருந்து காக்க ஒரு யாகம் நடத்தப் படுகிறது. யாகத்தின் போது வெளியிடப் படும் புகையால் ஓசோன் மண்டலம் பாதிக்கப் பட்டு உலகம் நேரிடும் என்று சூப்பர் பிரச்சாரம் செய்கிறார். அந்தப் பாடலுக்கு ஓசோன் ஓட்டையால் செய்யப்பட்ட  ஆடை அணிந்து முண்ணனி இந்தி நடிகை ஒருவர் ஆட்டம் போடுகிறார்.  யாகம் தடுத்து நிறுத்தப் படுகிறது.  அதனால் யாகம் நடத்த நினைத்த கோடீஸ்வரர்  சூப்பரைக் கொல்ல ஆள் அனுப்புகிறார். சூப்பர் ஸ்டாரின் வீட்டில் வெடி குண்டு வைத்து விடுகிறார்கள்.

அப்போது சூப்பர் ஸ்டார் தனது லேப் டாப்புடனருகிலுள்ள மலை மேல் அமர்ந்து வலைப்பூ எழுதிக் கொண்டும், பின்னூட்டம் போட்டுக் கொண்டும் இருக்கிறார். அப்போது ஒரு வலைப்பூவில் இருந்த லின்க் மூலம் செய்தித்தாளுக்குப் போய் அங்கு தன்வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதை தடுக்க ஓடிவருகிறார்,

அதற்குள் அவர் வீட்டில் இருந்த வெடிகுண்டு வெடித்துவிடுகிறது. ஆனால் அவரது தந்தை  தோட்டத்தில் இருப்பதால் தோட்டத்திற்குச் செல்கிறார்.

ஆனால் அதற்குள் வீட்டிற்குள் இருந்து நெருப்புக் குழம்புகள் வெளிவருகின்றன. சூப்பர் ஸ்டாரின் படுக்கை அறையின் அடியில் இருந்த எரிமலை வெடிக்க ஆரம்பிக்கிறது.  அதற்குள் அந்த ஊரே நெருப்பு குழம்புக்குள் மூழ்க ஆரம்பிக்கிறது.  வேகமாக காரை எடுக்கும் சூப்பர் மின்னல் வேகத்தில் செல்கிறார். அதற்குள் சூப்பரின் கார் வெடித்துவிடுகிறது. 


வெடித்த சிதறலில் இருந்த சூப்பர் அப்படியே வானத்தில் பறக்கிறார். அப்படியே பறந்துவந்து பூமியைப் பெயர்த்து கையில் வைத்துக் கொண்டு அந்தரத்தில் நிற்கிறார். சில நாட்களில் பூமி குளிர்கிறது.

பெயர்தெடுத்த பகுதியில் இருந்த பிரபு

குருவே சரணம்

என்று சொல்ல சூப்பர் ஸ்டார் புதிய யுகத்தின் கடவுளாக மாறிவிடுகிறார்.

http://i11.tinypic.com/42vh3r8.jpg

Sunday, August 30, 2009

சிவாஜியை ரசிக்க மேலும் இரு காரணங்கள்

இன்றைய தலைமுறை திரைப்படங்களில் எதைச் செய்தாலும் அதை ஏற்கனவே சிவாஜி செய்து விட்டார் என்று சொல்லி விடலாம். அந்த மாதிரி இரண்டுகாட்சிகள்தான் இவை. இதை தயாரித்த நண்பர்களுக்கு நன்றிகள்.



Sunday, June 28, 2009

நட்சத்திர ஓட்டலில் ரஜினி போட்ட ஆட்டம்



இந்த ஒளி ஒலிக் காட்சி கூட எனது பழைய நினைவுகளை கிளருகிறது. நேரில் பார்த்தே பிறகே சக தோழர்கள் ரஜினி என்று நம்பினார்கள்.இப்போதுகூட ஏதாவது தொழில்நுட்ப ஏமாற்றுவேளை என்று சிலர் நினைக்கலாம். நம்பினால் நம்புங்கள். இவ்வளவு ஆட்டம் பாட்டம் உள்ள பாடலில் நடித்தது ரஜினியேதான், ஆடியதும் ரஜினியேதான். கல்லூரி அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் தவறாது இடம்பிடித்த இந்தப் பாடல் அடுத்த வாரிசு படத்தில் இடம் பெற்றது. இளைய ராஜாவின் இசையில் வெளிவந்த இந்தப் பாடல் எப்போதுமே இளைய தலைமுறையைத் தன் வசம் வைத்திருந்தது

இந்தப் படத்தில் பேசக்கூடாது என்ற மெல்லிசைப் பாடலுக்கு ரஜினி சில்க் ஸ்மிதாவுடன் நடித்திருப்பார்.

இந்த பாட்டு ரஜினி பாட்டு என்று சொன்னபோது சக நண்பர்கள் பலரும் நம்பவே இல்லை.., வெகு காலத்திற்குப் பிறகு திரையில் இந்த படத்தை பார்த்த பிறகே ரஜினி படம் என்பதையே ஒத்துக் கொண்டார்கள்.

என்னால் இந்தப் பாடலின் ரீமிக்ஸ் பாடலை ரசிக்கவே முடியவில்லை. அதன் பின் வந்த எல்லா ரீமிக்ஸ் பாடலையும் நான் தவிர்ப்பதற்கு அடிப்படையே இந்தப் பாடலின் ரீமிக்ஸ்தான்.

Thursday, April 30, 2009

குடியிருந்த கோவில் ரீமேக்கில் ரஜினிகாந்த்

குடியிருந்த கோவில் படம் பார்த்து இருக்கிறீர்களா.........

MGR அவர்களின் வெற்றிப் படங்களில் ஒன்று. முழுநீள சண்டைப் படமாகவும், உடைகளில் ஸ்டைலில் தனித்தன்மையுடன் விளங்கும் படம். வில்லனாகவும், நாயகனாகவும் மாறி மாறி திற்மைகாட்டியிருப்பார். நாயகிகளின் ஆடலுடன் பாடல்களும் இடம் பெற்றிருக்கும்.

ரஜினி காந்த் அவர்களின் ரீமேக் சரித்திரம் உலகறிந்த விஷ்யம்.சிவாஜி படத்தில் கூட ரிக் ஷாகாரன் எம்.ஜி.ஆர், வசந்தமாளிகை சிவாஜி, சகலகலா வல்லவன் கமல் என ஒரு கலக்கி இருப்பார்.

குடியிருந்த கோவில் படத்தை ரஜினியை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு கற்பனைதான். (கற்பனையின் முடிவில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது)

http://movies.ndtv.com/captionthis/images/rajinikanth.jpg

..................................................................................................................................................................

இயக்குநர்: குடியிருந்த கோவில் படத்தை சூப்பர் ஸ்டாருக்காக எடுக்க போறோம். எந்த மாதிரி மாற்றங்கள் செய்யலாம்.


துணை இயக்குநர்: முதல் சண்டைய அப்படியே வச்சுக்கலாம்ண்ணே... சென்னை முழுதும் கார் சேஸிங், சூப்பர்ஸ்டார் செஞ்சு ரொம்பநாளாச்சு....
வில்லன் எம்ஜியார் தப்பிக்கிறதுக்கு ஒரு துப்பாக்கில சுடுறாரு. இன்றைய ட்ரெண்டுக்கு பெரிய கண்ட்டெயிணர் ஃபுல்லா துப்பாக்கியா வச்சு சுட வைக்கலாம்னே.... அஜித் ரசிகனா மாறினா நம்மாலுக எல்லாம் திரும்பவும் நம்ம கூடாரத்துக்கே வந்திருவாய்ங்க

இணை இயக்குநர்: உயர் போலீஸ் அதிகாரியா மேஜர் சுந்தரராஜன் ரோலுக்கு யாரைப் போடலாம். சுஜாதா ஃபிலிம்ஸ் எடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க..

தயாரிப்பாளரையே போட்டுவிடலாம். இல்லைன்னா பிரபு சார கூப்பிட்டுக்கலாம்ணே...

இயக்குநர்: வில்லன் எம்ஜியார், கோமா ஸ்டேஜுக்கு போறாரே.. அந்த சீன்லாம் அப்படியே வச்சுக்கலாமா....,

துணை இயக்குநர்: சாக வைச்சிடலாம்னே அப்பத்தான் கேரக்டர் நிக்கும்.
இணை இயக்குநர்: கோமாவுல வச்சிக்கலாம்னே. கடைசியில் யோசிச்சிக்கலாம்ணே

இயக்குநர்: சரிப்பா; ஹீரோ எம்ஜியார் எம்ஜியார். ஓப்பனிங் சாங்

என்னைத் தெரியுமா........................ வருவாரே. சூப்பர் ஸ்டாருக்கு அப்படியே வச்சிடலாமா....

து.இ. ; அண்ணே அது ஹோட்டல்ல ஆடமாதிரி இருக்குண்ணே... அத அப்படியே மக்களோடு மக்களா ஆட மாதிரி எடுத்துக்கலாம்ணே

நாட்டுக்குள்ளே தலைவருக்கு ஒரு பேரு இருக்குண்ணே.. அத நாம காப்பத்துணும்ல...

இயக்குநர்: ஹீரோ எம்ஜியார வில்லன் இடத்துக்கு மாத்திறது எல்லாம் அப்படியே வச்சிக்கலாம். தலைவர் அங்க போய் பிரமை புடிச்ச மாதிரி உக்கார வச்சிடலாம். அங்க போய் உலக பயங்கரவாதி மேப் எடுப்பாரே அந்த சீனை கொஞ்சம் மாடர்ணா எடுக்கணுமே..

து. இ;- அண்ணே.. மேப்புனா ஒரே பக்கம்ணே.. டைரி வச்சுக்கலாம்னே 365 பக்கம் இருக்கும்ணே ..,

இ.இ:- அண்ணே இப்ப அல்ட்ரா மாடர்ண் பென் டிரைவ் பிளாப்பி இப்படி போவோம்னே..

இயக்குநர்:- ஏம்ப்பா கவர்ச்சியா ராஜஸ்ரீ நடனம் போடுவாங்களே.. என்ன பண்ணலாம்.

து.இ: அண்ணே நயந்தாரா.. அனுஷ்கா இப்படி பல பேர் இருக்காங்கண்ணே.. டூ பீஸ்ல நடக்க விட்டர்லாம்

இயக்குநர்: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலதான் சுகம் சுகம் பாட்டுக்கு யார புக் பண்ணலாம்..

து. இ: இந்தில இருந்து யாரையாவது வர வச்சுக்கலாம்ணே.. அந்த காலத்தில் ஹெலன்லாம் வச்சு உத்தம புத்திரன்ல இருந்து ஒரு 30 வருஷம் அவங்க வந்து கவர்ச்சி நடனம் ஆடிக் கொடுத்திருக்காங்க. இப்ப கரிஷ்மா வைக் கூப்பிடுவோம். தலைவர் சந்தோஷப் படுவார்.

இயக்குநர்:- ஹீரோ எம்ஜியார் வில்லனோட எடத்துக்கு போன பிறகு ஸ்டேஜ்ல டேன்ஸ் போடுவாரே.. அதை அப்படியே வச்சுக்கலாம்னே

துள்ளுவதே இளமை.... பாட்டு சூப்பரா இருக்கும்ல்ல..

து,இ:- அண்ணே அத ரீமிக்ஸ் பண்ணி வேறபடத்தில போட்டுட்டாணுகண்ணே. நாம அந்த இடத்துல நான் யார் நான் யார் பாட்ட வச்சுக்கலாம்..

அமாண்ணே .. ஹிந்திலயும் அந்தப் பாட்ட அப்படியே வச்சுக்கலாம்ண்ணே

மே ஹூ கோன்.. மே ஹூ கோன்.. மே ஹூ கோன்

மே ஹூ .. மே ஹூ மே ஹூ கோன் கோன் கோன் ..............

இயக்குநர்:- தம்பி இந்தில கூட நீ பாட்டு எழுதுவயாடா...... நீ ஒரு பன் மொழி வித்தகண்டா,,,,,,,

து. இ.:- அண்ணே நம்பியாரும் இதே க்ரூப்ல இருந்தா வில்லன் எம்ஜியார் டம்மியா போயிருவார்னே.. அந்தப் படத்தில் அவர ஹீரோ ஆக்கிடுவாங்க அதனால பரவாயில்ல.ஆனா பாருங்க நம்ம படத்தில் தலைவர் வில்லன்ணே


இயக்குநர்: இப்ப என்னடா பண்ணறது?



து.இ. அதுக்கு ஒரு யோசனைண்ணே... நம்பியார அமெரிக்காவிலிருந்து வர வச்சிடலாம். அப்ப வில்லன் ஹீரோ மெயின் வில்லன் ஆக்கிடலாம்.

இயக்குநர்: ரைட்.. பாட்டு முடிஞ்சதும் போலீஸ் போய் அரெஸ்ட் பண்ண போராங்க........ நாம தான் வில்லன் எம்ஜியாரை சாக வைக்கறமாதிரி கதை பண்ணலாம்ண்ணு சொல்லியிருக்கமே ...

இந்த இடத்துல ஏதாவது சொல்லுங்கப்பா...

து. இயக்குநர்;- அண்ணே ஆள்மாறாட்டம் பண்ற போலீஸ் ஆபிஸரை போட்டு தள்ளிடலாம்ண்ணே படம் பயங்கர திரில் ஆயிடும்..

தலைவர்,  வில்லன் ரஜினி இல்ல..., ஹீரோ ரஜினின்னு போராட ஒரு பெரிய ரிஸ்க் எடுத்தா பட்டைய கிளப்பும்ண்ணே...

இயக்குநர்:- நினைச்சண்டா....................... புது திரைக்கதை எழுத எழுத எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கேண்ணு பார்த்தா............. அப்படியே பில்லா படத்தைச் சொல்லிட்டு இருக்கீங்களேடா.....

து. இ.:= அண்ணே ஏற்கனவே குடியிருந்த கோவிலை பில்லான்னு எடுத்துட்டாங்கண்ணே............ வில்லன் எம்ஜியாரை உயிரோட விட்டு கொஞ்சம் குழப்பி ஷாரூக்கும் டான் படம் எடுத்திட்டாருண்ணே.......

அமிதாப்புக்கு அந்தப் படம் டான்னுன்னே.... எண்டியாருக்கு யுகேந்தர்ன்னேhttp://blog-imgs-32.fc2.com/c/u/r/currynokobushi/yugandhar.jpg
http://blog-imgs-32.fc2.com/c/u/r/currynokobushi/yugandhar.jpg

இந்த இடத்தில அதப் பத்தி விரிவா ஆராய்ச்சி பண்ணியிருக்காங்கண்ணே...


இயக்குநர்: சரி இந்தப் படத்தை விடுங்கடா............. வேற ஏதாவது படத்தை ரீமேக் பண்ணிக்கலாம்.

Wednesday, April 22, 2009

நான்கு கொள்ளையர்கள்

http://mimg.sulekha.com/hindi/don-1978/Stills/don5.jpg


அடிபிறழாமல் எழுதுக என்று தமிழ் பாடத்தில் கேட்பார்கள்। அது போல் அமைந்த படங்கள்தான்। அமிதாப்பின் டான்ம் ரஜினியின் பில்லாவும்।



தான் வளர்க்கும் குழந்தைகளுக்காக தன் உயிரையே பணயம் வைத்து உலகத்தையே அச்சுறுத்தும் கடத்தல் கூட்டத்தைப் பிடிக்க உதவும் தெருப்பாடகன் ராஜாவின் கதைதான் பில்லா॥ அதுதான் டான்। அமிதாப்பின் படத்தில் இருக்கும் கதை திரைக்கதை, கதாப்பாத்திரங்களின் உடைகள் பெயர்கள் அனைத்தும் ஒரே மாதிரி அமைத்திருப்பார்கள்। ரஜினிக்கு மட்டும் பில்லா என்று பெயர் வைத்து இருப்பார்கள்। யார் கொடுத்த யோசனையோ॥ தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரம் ப்ளாஷ்பேக் மற்றும் உடைகள் அனைத்தும் மறுபதிப்பு செய்யப் பட்ட படம் தான் பில்லா। டான் மேல் ரசிகர்களுக்கு ஏற்படும் மலைப்பும் அப்பாவி ராஜாமேல் ஏற்படும் பரிதாபமும், ரசிகர்களின் அனுதாபமும்... தப்பிக்க அவரது முயற்சிகளுக்கு ரசிகர்களின் விசில்களும் இரண்டின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தன। பில்லாவின் வெற்றிக்கு இன்னொரு காரணமும் உண்டு। அது பெரும்பாலான தமிழ்ரசிகர்களுக்கு டான் ப்ற்றி தெரியாததும், தெரிந்தவர்கள் பார்க்க முடியாததுமே..........









இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து ஷாரூக் கான் ரீமேக் செய்கிறார்। திரைக்கதையில் புதுமைகள் புகுத்த முற்படுகிறார்கள்। ஆனால் கதையிலேயே லேசான திருத்தங்கள் செய்யப் படுகின்றன।

கதையில் ஏற்படுத்தும் சின்ன மாறுதல் எவ்வாறு கதையையே மாற்றீ விடுகிறது என்பதனை ஏற்கனவே பார்த்துள்ளோம்। விரும்புவர்கள் இந்தச் சுட்டியில் மீண்டும் பார்த்துக் கொள்ளலாம்.



ஷாரூக்கினை ஆள்மாறாட்டத்திற்கு அனுப்பியவர்தான் கொள்ளைக் கூட்டத்தலைவன் என்னும்போது ஷாருக் மட்டுமல்ல நாம்கூட குழம்பி விடுகிறோம்। ஷாரூக் கொஞ்சம் யோசித்து ஒரு காரணம் கண்டு பிடித்து அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிக் கொள்ளும்போது நம் மணம் அதை ஏற்க மறுக்கிறது। இருந்தாலும் படம் பிரமாண்டமாகச் செல்லும் போது அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது நாமும் சென்று விடுகிறோம்। இந்திய சினிமாக்களுக்கு லாஜிக் தேவையில்லை என்பது மற்றொரு முறை நிரூபணமாகிறது।



அடுத்து வைப்பதுதான் பெரிய ஆப்பு ரசிகனுக்கு வைப்பதாக நினைத்து தனக்குத்தானே வைத்துக் கொண்டது। கடைசியில் உயிருடன் இருப்பது ஒரிஜினல் டான் தானாம்। அப்பாவியை அவன் கொண்று விட்டதாக காட்டும்போது ரசிகர்களுக்கு ஏமாற்றமே..... மும்பை தாதாக்கள் வெற்றி பெறுவதாக அமைக்கப் படும் கதைகளுக்கு வைக்கப் பட்ட பெரிய ஆப்பாகவே கருத வேண்டும்। பாஷாவின் உயிரைக் காப்பற்றியது போல் டானைக் காப்பற்றியது ரசிகற்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை। இரண்டாம் முறை பார்க்கும் ரசிகர்களுக்கு படத்தில் வரும் திருப்பங்கள் உப்புச் ச்ப்பில்லாமல் அமைகின்றன। பாஷாவில் கதை தெரிந்தவர்களுக்கு பாஷா எப்பொது பொங்கி எழுவார் என்பது தெரிந்தாலும் ஒரு ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போகும்। இதில் தெரிந்து விட்டதால் தேவையில்லாமல் டான் ஓடி ஒளிவதாகத் தோன்றும் ஒரு தமாஷாக அமைந்திருக்கும்।



இதே நிலைதான் கொடி பற்க்குது படத்துக்கும் ஏற்பட்டது। விக் வைத்த, விக் வைக்காத ரஜினிகள் மாறீ மாறி சவால் விடும்போது ஏற்படும் த்ரில் இருவரும் ஒரே ஆள் என்பது தெரிந்தபின் சப் பென்று ஆகிவிடுகிறது। இரண்டாம் முறை பார்க்கும்போது த்மாஷு தமாஷு.....



ஒட்டு மொத்தத்தில் டான் (ஷாருக்) எல்லாத்தையும் ஏமாத்திடுச்சு


அஜித்தின் பில்லாவின் வெற்றிக்கு ரஜினியின் பில்லாவும் ஒரு காரணம்। திரைக்கதையில் துணைப் பாத்திரங்களை மட்டும் வெட்டி விட்டு ஒரு ஆங்கில டப்பிங் படம் பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பார்கள்। இதற்கு நயன் மற்றும் நமீ ஆகியோரின் உதவி பெரும் பங்கு வகிப்பார்கள்। மொத்தத்தில் ஷாரூக் தோற்றதால் அஜித் வென்றார் என்றே சொல்லலாம்।






இப்போது தெலுங்கிலும் தயாராகிக் கொண்டிருக்கிறதாம்
Image




மறக்காமல் மேல் நோக்கிய தமிழ்மண கட்டை விரலிலும், தமிழிஷிலும் க்ளிக் செய்து விடுங்கள்



இது ஒரு மீள்பதிவு

Tuesday, April 7, 2009

அருந்ததி பாணியில் எந்திரன்

அ டி யே பொ ம் மா யி............

சமீப காலமாய் இளைஞர்களை தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கும் அருந்ததி படத்தின் விளம்பரங்களிலேயே ஆயிரம் சந்திரமுகி ஒன்றாய் வந்தது போல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்கிற்கு ரசிகர்களை இழுக்கும் படங்களில் ரஜினி படங்கலுக்கு நிகராக அருந்ததி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி நாம் ஏற்கனவே எழுதிவிட்டோம்.

அதே பாணியில் ரஜினிக்கு ஒரு கதை யோசித்தபோது தான் நாம் ஏற்கனவே எழுதிய கதை நினைவுக்கு வந்தது. அதை உங்களின் பார்வைக்கு மீள்பதிவாகக் கொடுக்கிறோம். துளி கூட மாற்றி அமைக்காமல் அப்படியே ஒரு மீள்பதிவு.
==========================================================



எந்திரன் புத்தம்புதிய கதை

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் பரிசாக இந்த பொற்காவியத்தை அவரது காலில் சமர்க்கிறோம்.

யந்திரன் entirely different entertainment

முதல் காட்சியில் நாயகன் சங்கராயனிலிருந்து இறங்கி வருகிறார். நாட்டிலேயே முதல்முறையாக பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டு வருகிறார்.

அவரது பெற்றோர் அவருக்கு திருமண்த்திற்கு பெண் பார்க்கிறார்கள். இந்திய கலாச்சாரத்திற்கு தகுந்த பெண்ணாய் பார்க்கிறார். கேரளாவிற்குச் செல்கிறார். போகும் வழியில் பொள்ளாட்சி ரோட்டில் ஒரு பாட்டு. உடன் ஆட ஸ்ரேயா..


கேரளாவில் அவரை வில்லன் கூட்டத்தினர் கடத்தி விடுகின்றனர். தலமை மந்திரவாதி திலகன்,, தலைவரின் உடலில் ஒரு யந்திர தகட்டை வைத்து விடுகிறார். யந்திர தகடு உடலில் சேர்ந்த உடன் தலைவர் வில்லன் கூட்டத்தின் சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார்.

வில்லன் கூட்டத்தினர், உலகில் உள்ள பெரும்தலைகள் பலரை கொண்று குவிக்க ஆணையிடுகின்றனர். முதலில் ரஷ்யத் தொழில் அதிபரை கொல்கிறார். அதனை ஒரு அழகி விடியோ எடுத்து விடுகிறார். அடுத்து ஜெர்ம்னிக்குச் செல்கிறார்.


இந்த நிலையில் தலைவர் யந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது அவரின் குடும்பத்திற்கு தெரிந்துவிடுகிறது. உடனே இமயமலையில் 1000ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மகான் அமிதாப்ஜியிடம் செல்கின்றனர். அவர் தனது தவ வலிமையால் தலைவரின் ஆன்மாவைத்தனியாக பிரித்து தலைவரைக் காப்பாற்ற அனுப்புகிறார். தலைவரின் ஆன்மா மனித உருக் கொண்டு தலைவரை காப்பாற்றச் செல்கிறார்.

இந்த நிலையில் எந்திரத் தலைவர் அமரிக்கா செல்கிறார். கடல் கடந்து செல்லும் சக்தியை அமிதாப்ஜி தராததால் ஆத்ம சக்தி திரும்பி விடுகிறார்.


கடல் கடந்து செல்லும் சக்தியை ஆதித்ய கணேசச் சித்தரிடம் தான் இருக்கிறது. அவர் விண்ணுலகம் பார்க்கும் ஆசையில் மண்ணுலகம் நீங்கிவிட்டார். அவரை வரவைக்க சிறப்பு வழிபாடுகள் செய்ய வேண்டும் என்கிறார். அந்த பூசைகளை அவர் திருமணம் செய்து கொள்ளும் பெண்தான் செய்ய வேண்டும் என்கிறார்.

ஐஸ்வர்யா பூஜைகள் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ஜெர்மானிய தொழிலதிபரைத் தலைவர் ஐ.நா. சபை வாசலில் வைத்துக் கொண்று விடுகிறார். அடுத்த கட்ட பூஜையாக இமயமலை பனிக்கு நடுவே பூங்குண்டம் அமைத்து அங்கே கிடைக்கும் இலைகளை ஆடையாக அணிந்து நடணம் ஆடி பூஜை செய்கிறார்.கூடவே ஐந்து இளம் கன்னிப்பெண்களும் ஆடுகிறார்கள். தலைவர் செய்த கொலையால் உலகமே பரபரப்பாகிறது. இந்தியாவின் மேல் போர் தொடுக்க அமரிக்கா திட்டமிடுகிறது.



அடுத்த கட்டமாக அமெரிக்க ஜனாதிபதியை முடிக்கும் பணி கொடுக்க்ப் படுகிறது. தலைவர் மறுத்து விடுகிறார். வில்லன் குரூப் மந்திர வாதிகள் அதீத கோபம் அடைகிறார்கள். ஐஸ்வர்யாவின் பூஜை காரணமாக ஆதித்ய கணேச சித்தர் தோன்றி பல ரகசியங்களைச் சொல்கிறார்.இந்த வலுவான பாத்திரத்தை சிவாஜி சாருக்கு கொடுக்கிறார்கள். முழுக்க கிராபிக்ஸ்.

தலைவரின் நாடி, நரம்பு, ரத்தம், சதை, நகம், பனியன், ஜட்டி எல்லாமே நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் இருப்பதால் தலைவர் என்றுமே தவறு செய்யமாட்டார். இதுவரை அவர் கொன்றவர்கள் எல்லாம் உலக பயங்கரவாதிகள். அவர் என்றுமே நல்லவர்களை எதிர்க்க மாட்டார். என்று கூறுகிறார். அடுத்த ரகசியத்தையும் கூறுகிறார். தலைவர் பிறந்த அன்றுதான் வானில் துருவ நட்சத்திரம் காணாமல் போனது. அத்னால் தலைவர்தான் துருவ நட்சத்திரம். இதை வெளியே சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். ஆதம சக்தி அமெரிக்கா செல்லும் சக்தியைக் கொடுக்கிறார்.


வில்லன் கோஷ்டி யெந்திரனை அடைத்துவைத்து விட்டு இந்தியா முழுவதும் குண்டு வைக்கின்றனர். ஆத்ம சக்தி அமெரிக்கா சென்று விட்டு, யெந்திரனை விடிவித்து இந்தியா அனுப்பிவிட்டு அங்கே அவர் தங்கிவிடுகிறார். தலைவர் அனைத்து இடங்களிலும் குண்டுகளை எடுக்கிறார். அங்கே அமெரிக்க ஜணாதிபதியைக் காப்பற்றும் பொறுப்பை ஆத்மாவும். இந்தியாவில் நடக்கும் மயிர் கூச்செரியும் சாகஸங்களை யெந்திரனும் செய்கிறார்கள். கூடவே ஐஸ்ஸும் போய் மிகவும் உதவி செய்கிறார். அங்கே தலைவர்க்கு பிரபல டென்னிஸ் வீராங்கணை உதவி செய்கிறார்.


கடைசியில் அமெரிக்காவையும் இந்தியாவையும் தலைவர் காப்பாற்றீவிடுகிறார். இந்த நிலையில் வெளி கிரகங்களீலிருந்து இரண்டு வாகண்ங்கள் வருகின்றன. அதில் இருந்து இறங்குபவர்கள் தாங்கள் ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிவிட்டு

யூனிவர்ஸ் முழுவதும் உன்னை வென்றிட யாரு...
பிரபஞ்ச நாயகனே ........

பாட்டுடன் படம் முடிவடைகிறது.


டாங்கர் வண்டியில் துரத்தும் படைகளைப் பார்த்து தலைவரின் வசனம்..

யெந்திரனுக்கே யெந்திரமா........



தலைவர் ஒவ்வொருவரையும் போட்டுத்தள்ளும்போது பேசும் வசனம்

நான் ஒருத்தனக் கொண்ணா நூறு பேரை கொண்ண மாதிரி


அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் டக் டக் என்று பயணம் செய்துவிட்டு

ஆண்டவன் சொன்னான் அமெரிக்கா வந்தேன்

ஆண்டவன் சொன்னான் அமெரிக்காவிலிருந்து வந்தேன்


சொல்லி பல வகைகளில் கலகல்ப்பாக்கலாம்.



பின்குறிப்பு:-
வழ்க்கமாக ரஜினி படமென்றால் பழைய ரஜினி படங்களீன் சாயல் இருந்தே தீர வேண்டும். அதனை ஓரளவே நிறைவேற்ற முடிந்தது.

========================================================

நாம் எழுதிய பிற எந்திரன் கதைகளை இங்கே.

அடுத்ததாக இங்கே நீங்கள் படிக்கலாம்

========================================================

முதலிலேயே எழுதிவிட்டதாலும் அதிலும் தமிழுக்காக எழுதியதாலும் அருந்ததி அளவுக்கு ரத்தம் சேர்க்கப் படவில்லை.

Monday, April 6, 2009

ரஜினிக்கு நடிக்கத்தெரியுமா/தெரியாதா?

ரஜினி...

மூன்றேழுத்தில் என்மூச்சிருக்கும் என்று சொன்ன தமிழ்திரை உலகை கட்டிப்போட்ட அடுத்த தலைமுறை மூன்றெழுத்து மந்திரம்.

ரஜினியின் நடிப்பு பலநேரங்களில் கேள்வி கேட்கப் பட்டுள்ளது. கேலி செய்யப் பட்டுள்ளது. அதற்கு பதில்சொல்லும் ஒரு காட்சிதான் இந்த வீடியோ






எம்ஜியாரும் சிவாஜியும் மக்கள் மனதில் நிறைந்த தெல்லாம் முழுநீளக் கதாபாத்திரங்களும் நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களின் மூலம். ஆனால் ரஜினி பெயர் வாங்கியது துண்டுக்கதாபாத்திரங்களில் , ஆபூர்வராகங்கள், மூன்றுமுடிச்சு, 16 வயதினிலே, நான்வாழவைப்பேன் போன்ற படங்களின் மூலமே மக்களின் மனம் கவர்ந்தவர்.

இப்போது நிலைமை இன்னும் மோசம். அவருக்கு நடிக்க கிடைக்கும் ஓரிரு காட்சிகளில் முழுதிறமையும் காட்டவேண்டிய சூழலில் இருக்கிறார். அப்படிப்பட்ட காட்சிதான் பாஷாவில் வந்த காட்சி.

இரண்டு வார்த்தை, நான்கே எழுத்து இதுதான் அவர் வாய்விட்டுப் பேசிய வார்த்தை. மற்றதெல்லாம் அவரது உடல்மொழியும், முகபாவனையும்,கண்களும் பேசியவையே.. அவர் மிகச் சிறந்த நடிகர் என்பதற்கு இது ஒன்றே போதுமே..

Sunday, March 1, 2009

படையப்பா- ஒரு அலசல்

சூப்பர் ஸ்டார் படம் என்றாலே எல்லாருக்கும் கொண்டாட்டம்தான். ஒரு படம் பார்த்தாலே நூறு படம் பார்த்த திருப்தியைக் கொடுப்பவை சூப்பர் ஸ்டாரின் படங்கள். அதிலும் படையப்பா இதுவரை வந்த சூப்பர் ஸ்டாரின் படங்களுக்குள் மிகவும் சிறப்பாக அமைந்த படம். அந்த திரைக் காவியத்தில் எத்தனை எத்தனை சரித்திரங்கள் அடங்கியுள்ளன என்பதைக் காண்லாம்.
http://mail-bag.com/Images/Padayappa_small_t.gifhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVUvazSTU_CD2BbzeKFNTO_fYjXqnyaMySrF-QV3aHokB2Z2ckm3Y0FSNseHgKhMUijjRUddkJdICIrr-o80xMRt20KVY3cVwUklrS3qPmwp2tXausQ13zhSEMvJF1SELu8ih6ZcXUY2I/s400/Padayappa.JPG


துவக்கத்திலேயே நீதி தவறாத தந்தையாக வருகிறார் நடிகர் திலகம் அவர்கள். ஆனால் சின்னக் கவுண்டர், எஜமான், நாட்டாமை போன்ற படங்கள் பார்க்காதவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்த காட்சிகள் அவை. ஒரு அழகான மேடை அமைத்து அதன் மேல் கையில் வேலுடன் சிம்மாசனத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி பல சரித்திரங்களை நமக்கு கண்முன்னே கொண்டுவரும்.
http://www.indiadirect.com/superstar/special/rajni/0012.jpg


அடுத்ததாக எதிலும் முதன்மையாக வரத்துடிக்கும் நாயகியாக பழைய குமரிக்கோட்டம் வகைப் படங்களை பார்க்காதவர்களுக்கு கண்முன்னே காட்சியளிக்க வைத்த படம்.
Kumari Kottam


இளவரசியை விட்டுவிட்டு இளவரசியின் வேலைக் காரியைக் காதலித்து நாயகன் திருமணம் செய்து கொள்ளும் காட்சி அமைப்பு பழைய தங்க மலை ரகசியம் படம் (சிவாஜி, ஜமுனாராணி நடித்த டார்ஜான் வகை ராஜா கால மந்திர தந்திர படம்) பார்க்காதவர்களுக்கு ஒரு வரம் என்றே சொல்லலாம்.
Thangamalai Ragasiyam ரம்யாவின் வேலைக்காரியாக வரும் சௌந்தர்யாவைத் திருமணம் செய்து கொள்வது போல, டி.ஆர்.ராஜகுமாரியை பெண் பார்க்க வந்து அவரது பணிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதால் ராஜகுமாரியின் பழிவாங்கும் படலமே அதன் கதை.


தவிரவும் மன்னன் படம் பார்த்துவிட்டு விஜய சாந்திக்கு பதிலாக குஷ்பூவுடன் தலைவரை ஜோடி சேர்த்து பார்க்க ஆசைப் பட்டவர்களின் பதினேழு ஆண்டுகால கனவையும் நிறைவேற்றி வைத்த படம் படையப்பா..
http://www.harsamay.com/ShowPicture/m/6618/Mannan.aspx



என் வழி தனி வழி வசனத்தின் வீரியத்தை நாளை நமதே படம் பார்க்காதவர்களையும் உணரவைத்த படம் படையப்பா..

அண்ணனை தம்பி ஒட்டு மொத்தமாக ஏமாற்றி சொத்துக்களை மாற்றிக் கொள்ளும் காட்சிகள், தர்மதுரை, முத்து போன்ற படங்கள் பார்க்காதவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தங்கைக்கு மாப்பிள்ளை பார்ப்பது, ஓரே பாட்டில் தலைவர் மிக பெரிய பணக்காரனாக மாறுவது போன்றவை இதுவரை ரஜினி படமே பார்க்காதர்களுக்கும் ரஜினி பட இலக்கண இலக்கியங்களை சொல்லிக் கொடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும்.

padayaipa2.jpg


வளர்ந்த இரு பெண்களுக்கு தந்தையாக வந்து அவர்களின் திருமணம் செய்ய முற்படும்போது பார் மகளே பார் சிவாஜி கணேசனே மீண்டும் வந்தது போல் இருந்தது. அவரளவுக்கு இவரும் கஷ்டப்படுவார். ஏற்பாடு செய்த திருமணத்தை ஒரு மகள் மறுப்பார்.

அப்பாஸுடன் சேர்ந்து கடைசி சண்டைக் காட்சிகளில் ஒட்டு மொத்த தெலுங்கு பட உலகையே கண் முன் கொண்டுவந்து what a man? சொல்ல வைத்து இருப்பார்.

படத்தின் இறுதியில் சபதத்தில் வெல்ல முடியாமல் குத்துப் பட்டு சாகும் காட்சியில் நீலாம்பரி, மகாதேவி வீரப்பாவையும், தூரல் நின்னு போச்சு வில்லன் செந்தாமரையையும்(உண்மையில் அவர் நாயகியின் தந்தை- நல்லவர்) நினைவு படுத்துவார்கள்.


http://pleasantvazanth.blog.co.in/files/2008/12/ps-veerappa.jpghttp://www.behindwoods.com/features/column/images/Senthamarai.jpg

சிவப்பு புடவையைப் பார்த்து மிரளும் மாடு, பாம்பு புற்றுக்குள் கையை விடுவது போன்ற காட்சிகள் ராம நாராயணன் படங்கள் சுவை மாறியதைக் கண்டு வருத்தத்தில் இருந்த ரசிகர்களையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய படம் என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் ஒரு படம் பார்த்தால் நூறு படம் பார்த்த மாதிரி....

இது ஒரு மேம்படுத்தப் பட்ட மீள்பதிவு

Sunday, January 25, 2009

எந்திரன் உங்களுக்காக ஒரு பழைய கதை

ஊழல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தனது முகங்களைக் காட்டி வளர்ந்துகொண்டே இருக்கிறது. கல்தோன்றி மண்தோன்றிய காலத்திலிருந்தே பல்வேறு விதமான மோசடிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அதனடிப்படையில் பல்வேறுவிதமான இலக்கியங்களும் இதிகாசங்களும் உருவாகிக்கொண்டேதான் இருக்கின்றன.

நவீன கால படைப்பாளிகளில் ஷங்கர் மிகவும் முக்கியமானவர். நாட்டில் நடக்கும் பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி மக்களை விழிப்புணர்வு கொண்டுவருவதில் ஷங்கரின் படங்களுக்கு தனி இடம் உண்டு. அதைப் போன்ற ஒரு கதைதான்


கம்ப்யூட்டர் ஊழலுக்குள் எந்திரன்.


முன்குறிப்பு: இந்தக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.


சிறுவன் ரஜினி கூட்டல் கணக்குப் போடுவதற்கு பாசிமணிகளை உபயோகப் படுத்துவதிலிருந்து படம் துவங்குகிறது. அடுத்த காட்சியில் எல்லோரும் வாய்ப்பாடு உபயோகப் படுத்தும் போது சிறுவன் ரஜினி கால்குலேட்டர் உபயோகப் படுத்துகிறார்.

கல்லூரிக்குச் செல்லும்போது பைக் ஓட்டுவதற்கு நவீன சாதனம் ஒன்றை உபயோகப் படுத்துகிறார். தனியாக ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி துவக்குகிறார். அப்போது கார் ஓட்ட தனி சாதனம் ஒன்றை உபயோகப் படுத்துகிறார். அதில் பல்வேறு நவீன வசதிகளை வைத்திருக்கிறார். ஒரு சூப்பர் கம்ப்யூட்டராக அதை உருவாக்கி உபயோகப் படுத்துகிறார். ஆட்டோ அப்டேட் வசதியை உருவாக்கி வைக்கிறார்.

அவரது கம்ப்யூட்டர் கம்பெனி உலக அளவில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கிறது. உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு ஊர்களை தேர்ந்தெடுத்து தன் சொந்த செலவில் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கிறார். உலக மக்கள் அனைவரும் ரஜினிகாருவை புகழ்ந்து விழா எடுக்கிறார்கள்.
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா"
பழைய பாட்டை ரீமிக்ஸ் போட்டு ஆடுகிறார்கள்.

பாட்டு முடிந்ததும் ரஜினிகாரு கைதுசெய்யப் படுகிறார். அவர்மீது சரமாறியாக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன. கழிப்பிடம் கட்ட குழிதோண்டியதில் கிடைத்த மண்ணை நாடுவிட்டு நாடுதாண்டி கொட்டியதாக கணக்குக் காட்டி பலகோடி ரூபாய்கள் வருமான வரி ஏய்ப்பு செய்த்தாக குற்றம் சாட்டப் படுகிறது. அவர் கைது செய்யப் பட்டதால் அவரது கம்பெனியின் ஷேர் மதிப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. அதனால் அப்பாவி கிராமத்து மாணவர்கள் பொங்கி எழுகிறார்கள்.

ரஜினியின் வீட்டை சூறையாடுகிறார்கள். அவரது தானியங்கி சூப்பர் கம்ப்யூட்டர் சாதனம் தூக்கி குப்பை வண்டிக்குள் போடப் படுகிறது. குப்பை வண்டியில் போகும் சாதனம் ஆட்டோ அப்டேட் ஆகிறது. மனித உருவத்தைப் பெருகிறது. குப்பை வண்டிக்குள் இருந்து ரஜினியைப் போலவே உருவ அமைப்பைக் கொண்ட எந்திரன் வெளியே வருகிறார். ( ஜீன்ஸ் படத்தைவிட அற்புதமாக வரவேண்டும் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் அனிமேசன் காட்சிகள் அமெரிக்காவில் உள்ள நானோஹார்டு கம்பெனியில் செய்து வருகிறார்கள். இவர்கள் பில்கேட்ஸுடன் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

எந்திரன் ரஜினி வெளியே வந்தவுடன் துப்பறியும் பணியில் ஈடுபடுகிறார். பிபாசா பாசுவின் நடனம் பார்ப்பதற்காக ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறார். அங்கே அவருக்கு ஒரு உண்மை தெரிகிறது.

அமெரிக்க ஜனாதிபதியின் தூண்டுதல் காரணமாக இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்ற உண்மையை அவர் கண்டறிந்த உடனேயே பிபாசா கடத்தப் படுகிறார். பிபாசாவைப் பின் தொடர்ந்து எந்திரன் செல்கிறார். பிபாசாவை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று அமெரிக்க ஜனாதிபதிமுன் நிறுத்துகிறார்கள். ( அமெரிக்க ஜனாதிபதி பாத்திரம் தமிழ்திரையில் வருவது இந்த ஆண்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது).

அங்கே பிபாசா மீண்டும் நடணம் ஆடுகிறார். அந்த நடனத்தைக் காண அவரின் பால்ய நண்பர்களும் வருகிறார்கள். அவர்களைப் பார்த்த எந்திரன் அதிர்ச்சியடைகிறார். அவர்களில் ஒருவர் வினுசர்க்கரவர்த்தி. கதையில் அடுத்த திருப்பம் வருகிறது.

..........................................................................................................

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ரஜினி கல்லூரியில் படித்துவருகிறார். உலக அளவில் நடக்கும் அறிவியல் வினாடிவினால் வெற்றி பெற்றுவிட்டு விமானத்தில் வருகிறார். அப்போது ஒருபெண் அவரைப் பார்த்த உடன் காதல் கொண்டு பாட்டு பாடுகிறார். ரஜினியிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார்.
நான் தான் மிஸ். வேர்ல்டு.
என்பதைக் கேட்ட ரஜினி தனக்கே உரிய சிரிப்பை உதிர்த்துவிட்டு திரும்பி விடுகிறார். ரஜினி படிக்கும் கல்லூரிக்கு வேலைக்கு சேர்ந்து விடுகிறார் ஐஸ்வர்யா . ரஜினியை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

பணம் அதிகமாய் இருந்தால் ராத்திரி தூக்கம் வராது
பொண்டாட்டி
அழகாயிருந்தால்

எப்போமே தூக்கம் வராது
என்று சொல்லிவிட்டு தன் மாமன் மகளை திருமணம் செய்து கொள்கிறார். கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் துவக்கி உலக அளவில் பெரிய தொழிலதிபர் ஆகிறார். அவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர் மனைவி சமைத்துக் கொடுத்த உணவையே சாப்பிடுகிறார்.

ரஜினி திருமணம் செய்து கொள்ளமுடியாத ஐஸ்வர்யா கிராமத்தில் போய் தவம் செய்யத்தொடங்குகிறார்.

..................................................................................................

ஐஸ்வர்யாவின் தந்தைதான் வினுசர்க்கரவர்த்தி. தன் மகள் சாமியார் ஆக காரணமாய் இருந்த ரஜினியைப் பழிவாங்க தனது பால்ய நண்பன் அமெரிக்க ஜனாதிபதியை அனுகிறார். அவரது செல்வாக்கினைப் பயன்படுத்தி ரஜினியின் கம்ப்யூட்டர் கம்பெனியில் பல ஊழல் குற்றச் சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைக்கிறார்கள்'

அமெரிக்க ஜனாதிபதியை தனியே சந்தித்த எந்திரன் நடந்த உண்மைகளைச் சொல்ல ஜனாதிபதி திருந்திவிடுகிறார். ரஜினியைக் கொல்ல வினுச் சர்க்கரவர்த்தி ஆட்களை அனுப்புகிறார். அவரைக் காப்பாற்ற எந்திரன் பறந்து வருகிறார். வான் வழியிலேயே அவரைத்தடுக்க முயற்சிகள் நடக்கின்றன். பலத்த சண்டைக்குப் பின்னர் முதலாளி ரஜினியும் எந்திரன் ரஜினியும் ஐஸ்வர்யாவின் கிராமத்திற்கு செல்கின்றனர். சண்டை நடக்கிறது. ஐஸ்வர்யா தவம் கலைந்து எழுந்து விடுகிறார். ரஜினியைப் பார்த்து
இன்னும்
கல்லூரி மாணவன் மாதிரித்தான் இருக்கறீங்க
என்று சொல்கிறார். அதற்கு ரஜினி
நீ 94ல தான் மிஸ். வேர்ல்டு

நான் எப்பவுமே மிஸ்டர். வேர்ல்டு


என்று கூறுகிறார். மனம் திருந்திய ஐஸ்வர்யா ரஜினி ரசிகர் மன்றத்தில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பிக்கிறார்.

சத்தியமே லட்சியமாய் கொள்ளலடா
பாட்டுடன் கதை நிறைவடைகிறது.

Thursday, January 15, 2009

நான் பார்த்த படிக்காதவன்

படிக்காதவன் இளம்பருவத்தில் வரும் ரசிகர்களை ஏமாற்றாத படம். முதல் காட்சியிலேயே இரத்தச் சிவப்பினை குளோசப் காட்ட்சியில் காட்டி பயமுறுத்துகின்றனர். அடுத்த காட்சியிலேயே அதனை தக்காலியாக மாற்றி விடுகிறார்கள். டைட்டில் சாங் அற்புதமாக அமைந்திருக்கிறது.

பின்னே சிவாஜிகணேசன் m.p.பாடும் பாட்டென்றால் சும்மாவா.... ஒரு கூட்டுக் குயிலாக... மலேசியா வாசுதேவன் குரலில் பட்டையைக் கிளப்பி இருப்பார். குழந்தைகளாக சூப்பர் தம்பிகள். பாட்டு முடிந்ததும் தேர்வெழுத அவ்ளோ பெரிய சிவாஜி தன்னோட சின்னத்தம்பிகளை அண்ணியிடம் விட்டு விட்டு செல்கிறார்.
அண்ணியின் சொற்கள் தாங்காமல் தம்பிகள் வீட்டைவிட்டு கிளம்பிவிடுகிறார்கள்.

இந்தப் படத்தை முன்னமே பார்த்த காரணத்தாலேயே வெள்ளைச்சாமி அண்ணன் தன் தம்பிகளை அண்ணியிடமிருந்து காப்பாற்றிவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. (வானத்தைப் போல).

மூட்டை தூக்கியாவது தம்பிக்கு ரொட்டி வாங்கி கொடுக்கும் உன்னதமான பாத்திரம் சூப்பர் ஸ்டாருக்கு. பின்னி பெடல் எடுப்பார்.

தப்பி வந்த தம்பிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் தந்தையாக நாகேஷ். அவரது மகனும், மக்ளும் சூப்பர் அவர்களை அண்ணா என்றே அழைக்கிறார்கள்.

சூப்பர் ஒரு கார் வைத்திருப்பார். அதில் யாராவது போதைப் பொருளுடன் ஏறினால் ஸ்டார்ட் ஆகாது. சிவப்பு விளக்கு எறியும். வயிற்றீல் இருந்தால் கூட எறியும். லக்ஷ்மி ஸ்டார்ட்.. சூப்பர் சொல்லும் வசனம்.. நாங்கள் சைக்கிள் எடுக்கும் போது சொல்வது வழக்கமாய் மாறியது.

காரோட்டியாக மாறி தம்பியை காலேஜில் படிக்கவைக்கிறார். தம்பியின் கல்லூரியை விட்டு வரும்போது சட்டை, பேண்ட், கோட் என எல்லா பாக்கெட்டுகளில் இருந்து பணம் கொடுப்பார். கண்கலங்குவார். தனது புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை போன்ற படங்களுக்குப் பின் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம்.

தம்பியின் காதலியாக மனைவியாக நீலாம்பரி வருவார். தம்பியை பணக்கார வீட்டு மாப்பிள்ளையாக கேட்கும்போது சுயமரியாதைபேசிவிட்டு தம்ம்பியின் எண்ணம் தெரிந்தபின் திரும்பவும் போய் சம்பந்தம் பேசுவது, தம்பி பாஸ் என்று தெரிந்த பின் குதியாட்டம் போடுவது.. பின்னர் போலி எண்ணை கொடுத்தி ஏமாற்றிவிட்டார் என தெரிந்தபின் தம்பியிடம் போய் நியாயம் பேசுவது,, பின்னர் தம்பியிடம் மூக்குடை பட்டு திரும்பி வருவது என சூப்பர் அசத்துவார்.

தம்பியிடம் அவமானப்பட்டுத்திரும்பி தண்ணியடிக்கச் செலவது, அங்கே அம்பிகாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு பாடும் பாட்டு இன்னும்கூட கல்லூரிகளில் மாணவர்கலால் பாடப் படுகிறதாம் (காரணம் வேறு).

பின்னர் அதே தம்பி சின்ன மாமனாரால் ஏமாற்றப் பட்டு திரும்ப அவர் வீட்டுக்கு திருமபச் செல்ல அங்கே கொலைக் குற்றம் சாட்டப் பட நீதி மன்றத்தில் நிறுத்தப் படுகிறார். அங்கே நீதிபதியாக பெரியண்ணன்.

பெரிய அண்ணனை முதலிலேயே சூப்பர் பார்த்து விடுகிறார். அவர் முன்னிலையில்தான் தம்பிக்கு திருமணமே செய்து வைக்கிறார்.

குற்றவாளியின் பேர் ஊர் கேட்டவுடன் பெரிய அண்ணன் தெரிந்து கொண்டவுடன் கண் கலங்கி மீண்டும் வக்கீலாக மாறுகிறார். கோர்ட் காட்சிகளுக்கு இங்கே கிளிக் செய்யவும். ஃபோட்டோவில் இருக்கும் நின்று போன வாட்சைவைத்து உண்மை கொலை குற்றவாளிகளை கண்டறிகிறார்.


கடைசியில் சூப்பர் சண்டை போடாவிட்டால் படம் ஓடுமா.. என்ற சந்தேகம் போல .. ஒரு துரத்தல் சண்டை போட்டு வில்லன் ஜேம்ஸ் பாண்டை பிடித்துக் கொடுக்க அண்ணியும் திருந்த சுபம்.


யப்பா... எவ்ளோ பெரிய கதை. இதுல அம்பிகா.. நாகேஷ். அவர்தம் பிள்ளைகள், வில்லன் செயல்பாடுகள் பத்தி வேற எதுவும் எழுதுல..............

எத்தனை படம் எடுத்திருக்கலாம். ஒரே படத்தில் வைத்துவிட்டார்கள்.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails