Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Friday, September 2, 2016

ஆண்டைகளை அம்பலப் படுத்திய கே.எஸ்.ரவிக்குமார்.

முதலில் இந்தப் படத்தில் ஆண்ட பரம்பரையின் சாதியை சொல்லாமல் விட்டதற்காக கே.எஸ்.ரவிக்குமாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதனால்தான் அந்த ஆண்ட பரம்பரை பற்றி நம்மால் பேச முடிகிறது.

1.நாட்டாமையில் வரும் ஆண்ட பரம்பரை பாராளும் வம்சம், பச்சை தண்ணியில் விளக்கெரியும் என்ற பில்டப் அல்லது மூட நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்

2.நீதி நேர்மை, நியாயம் காப்பதையே தங்கள் வாழ்க்கையின் உன்னத லட்சியமாக கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் வழங்கும் நீதியின் லட்சனத்தை இரண்டு கேஸ்களில் கே.எஸ்.ரவிக்குமார் கிளித்திருப்பார்.

3.எதையும் தீர ஆராயாமல் தனது தம்பி பசுபதிக்கே ஒரு தவறான தீர்ப்பை தந்து விடுவார்.

4.மனோரமாவின் மகன் செய்த தவறுக்கு குடும்பத்துக்கே தண்டனை தருவார்

5.கற்பழித்த பெண்ணை தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை கற்பழித்தவனுக்கே திருமணம் செய்து வைப்பார்கள்.  பின்னரும் அந்த பாவப் பட்ட பெண்ணை ஊரைவிட்டே தள்ளி வைத்து தீர்ப்பு வழங்குவார்கள்.

6.தவிர தவறான தீர்ப்பை தந்து விட்டது தெரிந்ததும் உயிரை விடும்  கவுர தற்கொலை ஆசாமிகள்தான் அந்த நாட்டாமைகள் என்பதை தோலுரித்திருப்பார்.

7.வெளியில் போய் வீடு திரும்பும் கணவனுக்கு பணிவிடை செய்வதே முழுமுதல் கடமையாக வலியுறுத்துவதே நாட்டாமை குடும்பத்தார்க்கு உகந்ததாக காட்டுவார்கள்.

8.சொத்தை பிரிக்கவே பிரிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

9சொத்தில்லாத தம்பிகள் என்ன செய்வார்கள் என்பதை செந்தில் ( நாட்டமையின் பங்காளி ) பாத்திரம் மூலமாக அழகாக காட்டி இருப்பார்கள்.

10.நாட்டாமையின் பங்காளியின் நடவடிக்கைகளால் மிச்சர் சாப்பிடும் ஒரு குரூப் உருவானதை அழகாக ஆவணப் படுத்தி இருப்பார்.

11.நாட்டாமை தைரியம் தந்தால் பெண்கள் தங்கள் தந்தையையே தூக்கி எரிவார்கள் என்பதை சங்கவி மூலம் ஆவணப் படுத்தி இருப்பார்.

12.தீர்ப்பு ஊருக்காக இருந்தாலும் நேரிடையாக மீற மாட்டார்கள் என்றாலும் தேவைப்படின் மறைமுகமாக மீற தயங்க மாட்டார்கள் என்பதை மனோரமாவுக்கு தண்ணீர் கொடுக்கும் காட்சியில் ஆவணப் படுத்தி இருப்பார்கள்.

13.ஊர் மக்கள் மட்டுமல்ல சொந்த தம்பிகளே அவருக்கு அடிமைதான் என்ற உணர்வில்தான் அந்த பகுதி மக்கள் அனைவரும் உருவாக்கப் பட்டிந்ததையும் ஆவணப் படுத்தி இருப்பார்.

Saturday, December 14, 2013

கல்யாண சமையல் சாதம்- ஏ கிளாஸ்

டிஸ்கி:- முன்னொரு காலத்தில் முத்துராமன் மஞ்சுளா நடிப்பில் மறுபிறவி என்றொரு படம் வந்தது. 1995-98ல் சன் டிவியை இரவு 12க்கு மேல் பார்த்த ரசிக கண்மனிகளுக்கு அந்தப் படம் ரொம்பவும் பரிச்சயம். அடுத்த கட்டத்தில் கார்த்திக் ராதா நடிப்பில் வாலிபமே வா வா என்றொரு படம். அதுவும் பிரபலம்தான்.  இப்போது அடுத்த காலகட்டம். அதே போன்றதொரு கதை. ஆனால் கவுதம் கார்த்திக் நடிக்கவில்லை. பிரசன்னா நடித்து இருக்கிறார். அந்தப் படம் தான் கல்யாண சமையல் சாதம்.


முதலில் இந்தப் படம் ஆகா போன்றதொரு படம்போல என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் தயிர் சாதம் மட்டும் சாப்பிடும் எண்ணத்தில் படம் பார்க்க ஆரம்பித்தவனுக்கு ஓப்பனிங்கே ஒரு இன்ப அதிர்ச்சிதான்.  பொண்ணு உட்கார்ந்துட்டா, ஓ உட்கார்ந்துட்டாளா..., நானும்தான் உட்கார்ந்துட்டேன் என்று ஆரம்பித்து,  if u want to talk, first learn WHISPER, உடனே ஒரு கெக்கெபிக்கே சிரிப்பு என்று டைட்டில் போடுகிறது.

முதல் படத்தில் கல்யாணத்திற்கு பிறகு முத்துராமனுக்கு அதில் ஒரு பலஹீனம் தென்படும். அவரது மனைவி தனது தளராத முயற்சியால் அதை சரிசெய்வார்.

இரண்டாவது படத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் ராதா போடும் சண்டை, மற்றும் கார்த்திக்கின் ஃபேவரிட் குத்துச் சண்டை வீரரின் மேல் திணிக்கப் படும் சதியின் காரணமாக கார்த்திக் தானும் ஒரு பலவீனமான மனிதரோ என்று வீட்டைவிட்டு ஓட கிளைமாக்ஸில் ராதா தானே களத்தில் இறங்கி, அவரும் வெற்றி பெற்று கார்த்திக்கையும் வெற்றியடையச் செய்வார். அவர்கள் இருவரும் வெற்றி யடைந்ததை அவர்களது சொந்தக் காரர்கள் வரிசையாக வந்து பார்த்து மகிழச்சியடைந்து செல்வார்கள்.

இந்தப் படத்தில் என்னவென்றால் முழுக்க முழுக்க ஒரு அரேஞ்சுடு மேரேஜ். பார்த்ததும் நாயகியிடம் விழுந்து விடுகிறார். ஹீரோ .   அவரது தாசானுதாசன் ஆகி விடுகிறார்.  திருமணத்துக்கு முன்பே ஒரு முயற்சித்துப் பார்க்க்க ..........., முயற்சி தோல்வி அடைகிறது.    இந்த முயற்சிக்கு முன்னால் சில டயலாக்குகள்,, இப்பெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடிய மக்கள் களத்தில் இறங்கிடறாங்க,, இன்னும் சிலர் கல்லூரியின் போதே.., நீ அப்படி இல்லையில்ல என்று......  அதாவது ஹீரோ ஹீரோயின் சுத்தமானவங்களாம்........., 


இந்த இடத்தில்தான்  பழையகால விமர்சனங்கள் சில நினைவுக்கு வ்ந்தன. சில நேரங்களில் சில மனிதர்கள், அரங்கேற்றம் போன்ற சில ப்டங்கள் பற்றிய பேச்சுவந்த போது அந்த ப் படத்தின் நாயகிகள் எல்லாம் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக படைப்பக்கப் பட்டிருப்பார்கள்,  அதற்காக சிலர் கொதித்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது படைப்பாளிகளால் சொல்லப் பட்ட ஒரு விளக்கம். பொதுவாக நாயகி கெட்டுப் போகிறார் என்றால் அவர் சுத்தமானவர் என்பதை மக்களிடம் காட்டவேண்டுமாம். இயல்பான கதாநாயகி கெட்டுப் போகிறார் என்றால் மக்களிடம் அதிர்ச்சி எதுவும் வராதாம். அதனால் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த கதாநாயகியைக் காட்டுவார்களாம். அவர்கள் கெட்டுப் போனால் பார்ப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி உருவாகுமாம. ஒரு வேளை அதே தியரிதான் இங்கு உபயோகப் படுத்தப் பட்டு நாயகனையும் நாயகியையும் குறிப்பிட்ட சமூகத்தில் காட்டுகிறார்களா என்ற சந்தேகம் கூட எழுகிறது.

நாயகி மனதளவில் நாயகனுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்.  மறுபிறவியில் திருமணம் முடிந்து விட்டதால் மஞ்சுளா தனது கணவனை மீட்டெடுக்க கண்டபடி போராடுவார். பார்க்கும் நமக்கு தண்ணீரே வந்துவிடும் கண்களில்.



வாலிபமே வா வாவில் கார்த்திக்கின் போராட்டம்தான் படம் முழுவதும் ராதாவின் அதிரடி கிளைமாக்ஸில்தான்.  கிளைமாக்ஸ் முடிந்ததும் அவர்களின் சொந்தக்காரர்கள் பார்த்து சந்தோசப் படுவதுபோல் நாமும் சந்தோஷப் படுவோம்.



 இதில் கல்யாணம் ஆகவில்லை. தவிரவும் இவர்கள் சுத்தமானவர்கள். அதனால் அவருக்கு முழு அளவில் ஆதரவு கொடுக்கிறார் மனதளவில்.  பல இடங்களில் உட்கார்ந்து இது பற்றிப் பேசுகிறார்.

கோபத்தில் மாப்பிள்ளை ஒரு புஸ்ஸூ என்று சொல்லுவிட்டு ஹீரோ வருத்தப் படுவாரோ என்று இவர் வருத்தப் படுகிறார். மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு பிரச்ச்னை இருப்பது தெரிந்தும் மாமனார் திருமணத்தை தொடர்ந்து நடத்துகிறார். வாழ்க அந்த மாமனார்.   இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்வதற்குக்கூட பிரசன்னா அவ்வளவு கூச்சப் படுகிறார். அந்த அளவுக்கு அவர் நல்லவராம்.  இவ்வாறாக பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்பதிலேயேபடத்தை கொண்டு போகிறார்கள். கடைசியில் அவருக்கு எப்படி சரியானது என்பது தெரியாமலேயே சரியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

Monday, May 4, 2009

மகிழ்ச்சிக் கடலில் அமெரிக்கா மூழ்கியது

அமெரிக்க பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்யவும், அமெரிக்க தேர்தலை ஒத்திப் போடும் முயற்சிகளும் துவங்கப் பட்டுள்ளன. இந்த முயற்சிகளை தொடரும்போது அமெரிக்க நாட்டு விளையாட்டுகளின் வண்ணம் மாறத் தொடங்கியுள்ளது. இதனால் அமெரிக்காவின் அரசியல் மற்றும் விளையாட்டு வீரர்கள் கதற தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் 20-20 போட்டிகள் நடத்தப் பட வேண்டும் என ஐ.சி.சி தெரிவித்து இருப்பது. அமெரிக்க வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக கருதப் படுகிறது. 20-20 போட்டிகள் ஆண்டுதோறும் நடக்கத்தொடங்கினால் ஒரு பெரிய திருவிழா போல் ஆகிவிடும் என்பதாலும், நடன குழுக்கள் அமெரிக்க கலாச்சாரத்திற்கேற்ப தங்கள் உடைகளை மைதானத்திலேயே மாற்றக் கூடும் என்பதாலும் அமெரிக்காவில் 20-20 கிரிக்கெட் போட்டிகள் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு 20-20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது எந்த இடையூறும் நிகழக் கூடாது என்பதற்காக அமெரிக்கத்தேர்தல் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப் படலாம் என்று பரவலாகப் பேசப் படுகிறது.

20-20 போட்டிகள் அமெரிக்காவில் ந்டைபெறுவது பற்றி பிற விளையாட்டுவீரர்களிடம் கருத்துக் கேட்டபோது

கால்பந்து வீரர்:-

விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்த போட்டிகள் அமைகின்றன. இதே போல் கால்பந்திலும் 5-5-5 என்ற அளவில் நடத்த வேண்டும். ஒவ்வொரு பாதியும் ஐந்து நிமிடம் மட்டும் நடைபெறுவதால் முதல் வினாடியிலிருந்தே கோல் அடிக்க வேண்டும் என்ற உணர்வு வருவதால் போட்டி இன்னும் ஆக்ரோசமாக அமையும் என்று தெரிவித்தார். இதையே ரக்பி,கைப்பந்து மற்றும் ஹாக்கி வீரர்களும் தெரிவித்தனர்.

கூடைப் பந்துவீரர்கள் இதை பற்றிக் கூறும்போது 20-20ஐப் பின்பற்றி கூடைப் பந்திலும் அளவுகளை மாற்ற வேண்டும். கூடையை 2 அடி உயரத்தில் வைத்தால் இன்னும் அதிகமான புள்ளிகள் எடுத்து போட்டி மேலும் அதிக பரபரப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

ஓட்டப்பந்தயவீரர்கள் கூறும்போது ஏற்கனவே இந்த நடைமுறை ஓட்டப் பந்தயத்தில் இருப்பதாகவும், ஆனால் நூறு மீட்டர் என்ற அளவை 20மீ என்று குறைத்தால் இன்னும் பரபரப்பாக இருக்கும் என்று கூறினார்.

நீச்சல் வீரர் கூறுகையில் நீச்சல் போட்டிகளி ஐந்து மீட்டர் என்ற அளவில் வைத்தால் இன்னும் பரபரப்பாக இருக்கும் என்றார். இவ்வாறு தூரங்களை குறைத்தால் நீச்சல் தெரியாத வீரர்கள் கூட நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொண்டிருந்தனர்.


பொருளாதார நிபுணர்களிடம் கேட்டபோது

20-20 போட்டிகள் அமெரிக்காவில் நடப்பது என்பது சரிந்து கொண்டிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தி விடும்.

சுற்றுலாவிற்கு வரும் அரபு தேசத்தவர்கள் மூலம் பல் ஆயிரம் கோடி டாலர்கள் அந்நியப் பணம் கிடைக்கும்.

உள்நாட்டில் வேலை செய்யும் ஆசியர்கள் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சென்று விட்டால் அந்த வேலைகளை அமெரிக்கர்களுக்கே கொடுத்துவிடலாம். என்வே தற்காலிகமாக பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

நடன குழுக்கள் நிறைய அமைப்பது மூலம் ஒரு லட்சம் பேருக்கு நிரந்த வேலை வாய்ப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமையும்..

தேர்தல் நூறு ஆண்டுகளுக்கு தள்ளிப் போட படுவதன் மூலம் நூறு லட்சம் கோடி கண்டெயினர் டாலர்கள் மிச்சம் ஆகும் என்று கூறினார்.

மொத்தத்தில் ஐ.சி.சியின் அறிவிப்பால மொத்த அமெரிக்காவும் மகிழ்ச்சி கடலில் (மூழ்க ) மிதக்கப் போகிறது என்பதே உண்மை


இது ஒரு மீள்பதிவு

Wednesday, April 15, 2009

IPL கவலைப் படாதீர்கள் ஷாரூக்

ஷாரூக் கான் காவஸ்கரிடம் மட்டும் மன்னிப்பு கேட்டுவிட்டார். காரணம் அவருக்கு மட்டும் கிரிக்கெட் தெரியுமாம். அவர் மட்டும் சாதனைகல் செய்திருக்கிறாராம். ஷாரூக் காட்டமாக திட்டியது கிரிக்கெட் தெரியாத ரசிகர்களைத்தான் திட்டினாராம். யார் சொன்னாலும் சொன்ன சொற்கள் நிஜம்தானே.. அப்புறம் ஏன் அவரிடம் மட்டும் மன்னிப்பு..

...............................................................................................................

முக்கியப் பிரச்சனையையே பார்ப்போம். நான்கு கேப்டன் போடுவதுதானே பிரச்சனை, அனைவரையுமே கேப்டன் ஆக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமே.... கேப்டனுக்கெல்லாம் கேப்டனாக கங்கூலியை நியமித்து விடலாம். அனைவருமே சமாதானம் ஆகிவிடுவார்கள். ஆட்டத்துக்கு ஒரு கேப்டன் என்றில்லாமல் பேட்டிங்கிற்கு ஒரு கேப்டன், பவுலிங்கிற்கு ஒரு கேப்டன், அதிலும் சுழலுக்கு ஒன்று, வேகத்துக்கு ஒருவர், ஃபீல்டிங்கிற்கு ஒருவர், உள்வட்டத்திற்கு ஒருவர், வெளிவட்டத்திற்கு ஒருவர், கீப்பிங்கிற்கு ஒருவர்... அசத்து அசத்து என்று அசத்தி விடலாம்..

Wednesday, April 1, 2009

ஏப்ரல்-1 சிறப்புப் பதிவு; யாரையும் ஏமாற்ற அல்ல




இங்க ஒரு சிங்கத்த சீண்டப் பார்க்கறாங்க. மனைவியின் குரலில் மனைவியின் தோழியைப் பேச விட்டு சிங்கத்தை டீஸ் பண்றாங்க. பாருங்க சிங்கம் எவ்வளவு கோபம்+கடுப்பு அடைகிறார்ன்னு பாருங்க. தயவு செய்து யாரும் மற்றவர்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்.

சிங்கம் சமாளிப்பார். சின்னப் பசங்க.......

Tuesday, March 24, 2009

நடிகனைத் திட்டினால் ரசிகனுக்கு ஏன் கோபம் வருகிறது?

முதலில் ரசிகன் என்பவன் யார் என்பதை கவனியுங்கள்


தன்னால் எழுத முடியாத பாடலைப் பாடும் புலவனுக்கு பாராட்டுகளையும் பரிசுகளையும் கொடுத்து ரசிகனாக மாறுகிறான்.


பாடல்களை தனக்குப் பிடித்தது போல் கற்பனைகள் செய்து கொண்டு ரசனையை வளர்த்துக் கொள்கிறான். ( திருவிளையாடல் பாடலில் கூந்தலுக்கு மணம் இருக்கிறதா வாக்குவாதத்தில் இறையானரின் கூந்தலுக்கும் மணமில்லை என்று வாதம் வந்த போது எப்படி ஆராய்ச்சி நடந்து முடிவு அறியப்பட்டது என்பது பற்றி பலசுவாரசியமான வாதங்கள் வந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்)

இல்லையெனில் நர்சிம் அவர்களின் படைப்புகளைப் பாருங்கள். எவ்வளவு ரசித்து எழுதுகிறார் என்பது புரியும்.

தன்னால் படைக்க முடியாத சிலையை சிற்பி படைக்கும் போது சிலைக்கு ரசிகனாக மாறுகிறான்.

சிலைகளைப் பார்த்து கதைகளை உணர்ந்தது ஒரு காலகட்டம்.

பாடல்களாக வந்த கதைகளை பாடல்களாகவும், கதைகளாகவும் ரசித்துவந்தான். சிலைகளைப் பார்த்து சிலைகளையும் பாடல்களையும் ரசித்துவந்தான். அடுத்த கால கட்டங்களில் நாடகங்களாக வந்த போது சிலையே உருவெடுத்து வந்ததாக கருதி ரசித்தனர். அந்த காலகட்டங்களில் நாடகங்கள் நடிப்பதற்கும் பக்தி நாடகங்கள் பார்ப்பதற்குமே விரதம் இருந்தனர்.

வெறும் அறிவு போதனை மத போதனை கதைகளுக்கு அடுத்து சாகஸ பக்தி இலக்கியங்களை ரசிக்க ஆரம்பித்தான். அப்போதெல்லாம் சாகஸ்ங்கள் செய்யும் கடவுளின் பிம்பங்களாக வழித்தோன்றலாக தன்னை நினைத்துக் கொண்டு இலக்கியங்களை ரசிக்க ஆரம்பித்தான். (பொன்னியின் செல்வன் படித்துப் பாருங்கள் -கடவுளின் சாகஸங்களில் ஒரு பகுதி மக்கள் எவ்வளவு மயங்கி கிடந்தனர் என்றும் மற்றபகுதியினர் அதை எவ்வளவு மொக்கை என்று கூறினார்கள் என்றும் கல்கிஅழகாக விளக்கியிருப்பார்.)

அடுத்த சாகஸ சமூகக் கதைகள் வந்த போது நாயகனின் வழித்தோன்றலாக நினைத்து வந்தவன் தனது பிம்பமாகவே கருத ஆரம்பித்துவிட்டான். பரத்துக்கு பால் அபிஷேகம் செய்பவன் தன்னை கோயில் த்ர்மகர்த்தாவாகவும் முதல் மரியாதை பெருபவனாக தன்னை சமுதாயத்தில் மாற்றிக் கொள்கிறான். தனக்கு அவ்வளவு மரியாதை பெற்று தரும் தன் தலைவனை நாம் திட்டினால் அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. அவ்வாறு சொல்பவனை கண்டபடி கோபப்படுகிறான்.

தன்காலத்தில் இருப்பவர்கள்தான் சிறந்தவர்கள் என்ற எண்ணமும் நிறையப் பேருக்கு உண்டு. சரோஜாதேவி மாதிரி இன்னைக்கு யார் இருக்கா? என்று சொல்பவர்கள் நிறைய உண்டு. அதே போல் நந்திதா தாஸ் கூட அறிவு ஜீவியாகப் பேசப் பட்டிருக்கிறார். ஆனால் எல்லோரும் அவரவர் காலத்தவர்களை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தனது பிம்பத்தை உயர்த்துவது தனக்குத்தானே பெருமை.(இந்த காலத்துக்கு பசங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை என்று நூறு வருடங்களில் வந்த படங்களிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது)

..............................................................................................

பிரச்சனைகளில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், மனம்விட்டு அழ நினைப்பவர்கள், பிறரின் பரிதாபத்தை எதிர்பார்ப்பவர்கள் சிவாஜியின் ரசிகர்களாக மாறுவார்கள்.

பிரச்சனைகளை கண்டு பொங்கி எழ நினைப்பவர்களும், தன்னைக் காப்பாற்ற இன்னொரு கடவுள் வருவார் என்று நினைப்பவர்களும் எம்ஜியார், ரஜினி ரசிகர்களாக மாறுகிறார்கள்.

உருவத்தில் பேச்சில் நிறத்தில் தன்னைப் போல் இருக்கும் நாயகனுக்கு ரசிகன் மானசீக அடிமையாக மாறும்போது அந்த நடிகனை திட்டுப் போது கண்டிப்பாக அந்த ரசிகணுக்கு கோபம் வரத்தானே செய்யும்.

...............................................................................................................

தன் பசிக்காக குளத்தில் இருக்கும் அழுக்குகளை தின்று சுத்தப்படுத்தும் மீன் போல தனது படத்தின் ஓட்டத்துக்காக என்றாலும் நல்ல கருத்துள்ள பாடல்களை சிறந்த கவிஞர்களிடமிருந்து வாங்கி நல்ல இசையமைப்புடன் கொடுத்து கல்வியறிவு இல்லாத ரசிகனுக்கு கொடுத்த ந்ல்ல இதயமுள்ள நடிகர்களும் உண்டு. (அப்பா..... எம்ஜியாரையும் கலைஞ்ரையும் பேலன்ஸ் பண்ணியாச்சு)


...................................................................................................................

இன்றெல்லாம் ரசிகன் தனது இதய தெய்வங்களீன் மனைவியரை அரைகுறை ஆடையுடன் பார்ப்பதை மிகவும் விரும்புகிறானே... ஏன்?


பின்குறிப்பு:- இந்த இடுகை வெளியானபோது விகடன் குட் பிளாக் பகுதியில் இடம்பெற்றிருந்தது

Sunday, March 15, 2009

கருப்பு சிவாஜி இவர்தானுங்க...

http://www.nadigarthilagam.com/papercuttings2/thyagam2.jpghttp://www.tamilvanan.com/content/wp-content/gallery/engal-aasan/Engal-Aasan9.jpg






http://www.nadigarthilagam.com/papercuttings2/aokcbe50days.jpg




http://pothusanam.files.wordpress.com/2009/01/ennakodumai.jpg


விஜயகாந்த் நடித்த எங்கள் ஆசான் திரைப்படம் இன்று வெளியாகி விட்டது. அந்த படத்தின் படங்களை அங்காங்கே பார்க்க நேரிட்டது. அதே நேரத்தில் பழைய சில படங்களின் சுவர்ப்படங்களும் ஏனோ ஞாபகத்தில் வந்து விழுந்தன. இரண்டையும் கோர்த்துப் பார்த்த போது தோன்றியது விஷயம்தான் இது. அரசியல்ல் அவரை கருப்பு எம்ஜியார்ன்னு சொல்லிக்கிற மாதிரி, சினிமாவில் கருப்பு சிவாஜின்னு இனிமேல் அவரை சொல்லிக் கொள்ளலாம். யார் எதிர்ப்பு தெரிவிச்சா நமக்கு என்ன? அவர் பிறந்த நாளைக்கு அவர்க்கும் ஒரு மாலை போட்டுவிட்டால் போச்சு.

மீள் பதிவு...,

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails