Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Tuesday, March 8, 2011

இது ஒரு கற்புக்கரசியின் கதை

Mahabharat
பாரதத்தில் நடைப் பெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள்தான் இவை....

பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் செல்லுங்கள். இல்லையேல் சில வருடங்களுக்கு முன் உங்கள் தாத்தா பாட்டியின் சொற்களை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் போதாதென்றால் நீங்கள் படித்த அம்புலிமாமா, சிறுவர் மலர் எதையாவது ரெஃபரன்ஸ் புத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கதைக்கு வருவோம்.

.....................................................................................................................

அந்த மாபெரும் நாட்டின் இளவரசனுக்கு பெண் தேடுகிறார்கள். அண்ணன், தம்பி இருவருமே பலசாலிகள்..

முதலில் அண்ணனுக்குப் பெண் தேடுகிறார்கள்.

தம்பிக்கு பெண் கொடுக்க பலரும் தயாராக இருக்கிறார்கள். அண்ணனுக்கு எல்லோரும் தயங்குகிறார்கள்.

இந்தியத்துணைக்கண்டத்திலே ஏற்க்குறைய மேற்காசிய நாடுகளுக்குச் செல்கிறார்கள். பெண் கேட்கிறார்கள். மூத்த இளவரசனுக்கு பெண் கொடுக்க தயங்கி நிற்கிறார்கள். பெண்கேட்கச் சென்ற குடும்பப் பெரியவர், போருக்கு அழைக்கிறார். அந்நாட்டு இளவரசியின் அனைத்து அண்ணன்களையும் கொள்கிறார்கள். அந்நாட்டின் மன்னனையும் கொல்கிறார்கள். அந்த நாட்டையே அழித்து விட்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் அந்த நாட்டு இளவரசி வருகிறாள். நாட்டின் சண்டையை முடிவுக்கு கொண்டுவரவும், தனது சின்னத்தம்பியைக் காப்பாற்றவும் திருமணத்திற்குச் சம்மதிக்கிறார்.

ஆனால் இந்த கொடிய உலகத்தைக் காண சகிக்காமல் தனது கண்ணைக் கட்டிக் கொள்கிறார்.

அந்த இளவரசிதான் பாரதப் போரின் மகாராணி காந்தாரி அவர்கள்.

அவர் கண்ணைக் கட்டிக் கொண்டது பீஷ்மர் முதலானவர்களை பார்க்க விரும்பாமையா? இல்லை திருதிராஷ்டிரன் பார்க்காத உலகத்தை தானும் பார்க்க விரும்பாத ஒரு பாசத்தின் காரணமாகவா...............

..................................................................................................................

காந்தார தேசத்திலிருந்து தப்பி வரும் குட்டி இளவரன் சகுனி ஒரு சபதம் செய்கிறார். தனது நாட்டை சின்னா பின்னப் படுத்திய பீஷ்மரின் நாட்டையும் வம்சத்தையும் அழிப்பதாக சபதம் செய்கிறார். பின்னர் படிப்படியாக காய் நகர்த்தி பாரதப் போருக்கு காரணமாக அமைந்து கௌரவர்களையும் பாண்டவர்களின் மகன்களையும், ஏராளமான போர்வீரர்களையும் அழிக்கிறார். ஏறக்குறைய தனது சபதத்தில் வெல்கிறார்.

எதிர்மறை நாயகனாக பெருவாரியான வெற்றிகளைக் குவித்த சகுனி .. மகாபாரத்தின் நாயகனா? வில்லனா?

...........................................................................................................
மற்றுமொரு சுவாரசியமான ஒரு ஒற்றுமை... பாண்டவர்களுக்கு தந்தை ஐவர். ஐவருக்கும் மனைவியாக திரவுபதி...

.............................................................................................

Monday, May 17, 2010

முரட்டு சிங்கம் - ஒரு கண்ணீர் காவியம் (இரும்புக் கோட்டை தெரிந்தவர்களுக்கு)

எருமைக்கு நோவுன்னா காக்கைக்கு கொண்டாட்டம் -  என்.எஸ்.கிருஷ்ணன் மதுரை வீரனில்

அக்காமாலாவையும், கப்ஸியையும் கவிழ்த்து, அந்த குளிர்பானங்களுக்கு விளம்பரம் கொடுத்தவர்களை ஓங்கி அறைந்து, நாடக் நடிகை செல்லம்மாவை பெண் என்பதால் விடுகிறேன் என்று சொன்ன சிம்புதேவனின் படத்தை ஆராயாமல் , அனுபவித்து சிரியுங்கள் என்று சொன்னால் எப்படி? அதனால் நாம் நம் பாணியில் ஆராய உட்கார்ந்தோம். வாழ்க ஞாயிற்றுக் கிழமை. 

=========================================================

சில உண்மைக் கதைகளை எடுத்துவிட்டு அதைக் கற்பனை என்று டிஸ்கிபோடுவார்கள் . இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதைதான். ஆனால் அதை வேறு களத்தில் எடுத்து இருக்கிறார்கள் அவ்வளவுதான்.  சிங்கத்தின் பெயரைக் கேட்டாலே அது புரிய வேண்டும்.கௌபாய் பிண்ணனி இல்லாமல் வேறு எந்தக் கட்டத்தில் எடுத்திருந்தாலும் உண்மைக்கதை உடனடியாகப் புரிந்திருக்கும். இப்போது கொஞ்சம் ஆழ்ந்து பார்க்கவேண்டும்

http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/IKMS.jpg

=============================================================

வலைப்பூ எழுதும் பலரும் காமிக்ஸ் ரசிகர்களாக, வெறியர்களாக இருப்பதால் அவர்கள் பலருக்கும்  இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்  முழு திருப்தியளிக்கவில்லை என்றும் ஆனாலும் படத்தைப் பார்த்து மகிழ்ச்சியோடு கூடிய திருப்தி அடைவதாகவும் எழுதியிருந்தார்கள்.  அவர்கள் ஏன் மகிழ்ச்சி அடையவில்லை என்பதைஆராய்வதே நமது முதல் கட்ட லட்சியமாக இருந்தது.  

பொதுவாக டெக்ஸ்வில்லரைப் பார்த்தால் எனக்கு எப்போதுமே எம்ஜியார் நினைவுதான் வரும். லக்கிலுக்கைப் படிக்கும்போது நாகேஷ் நினவு வரும். 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzLPfi-0EtnlMwv18Kp8M5-azDaEWjhhvRoC2nb_mJ9WjZiLEPe8cr9gsBMYO0YEJKehTwcghYMZl51mBJV6U_AEkii2Z3lMy-uWHJHesEYx-h4gundrYGFAya8HyN2k41_zteCzCAsMo/s400/Original+still+for+the+Ad+poster.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiUo7IZlyRt9iOa6MNQKwcqCQxJl6iO5dAojJ0v4jrpR3WTSR6mpEHuUBVXA4MUM5kb50bb6o7M0_-O4xXIFtkL-0n3QM4NRh4tM69-oQK9H_Xe44_Cjs1KJE3hYawzzS9vvKjjOLUgU9z/s400/vijay-vettaikaran-still.jpg
அதுவும் டெக்ஸ்வில்லரின் பாத்திரப் படைப்பு எம்ஜியார் படங்களின் பாத்திரப் படைப்புக்கு ஈடாகவே எனக்குத் தோன்றியது. எம்ஜியார் தாழ்த்தப் பட்ட மக்களுக்காக போராடுபவராக வருவார். ஆனால் அவர் உயர்ந்த குடியில் பிறந்தவராகவே வருவார். மதுரைவீரன் திரைப்படத்தில் கூட  மதுரைவீரன் ஒரு ராஜகுமாரன் என்றும் அந்தக் குழந்தையை தூக்கி காட்டில் வீச அதை எடுத்து செருப்புத் தைப்பவர் வளர்த்ததாகக் கதை சொல்லுவார்கள். நானும் அதற்கான ஆதாரத்தை தேடிக் கொண்டே இருக்கிறேன். எந்த எழுத்துவடிவங்களிலும் அப்படி இருப்பதாக யாரும் சொன்னதில்லை.கர்ணபரம்பரைக் கதைகள் கூட மதுரைவீரன் பூர்வகுடியாகவே சொல்லுகின்றன. ராஜகுமாரனாகக் காட்டவில்லை. ஆனால்  அப்படி ஒரு பிம்பத்தை தொடர்ந்திருப்பார்,அப்படி எடுத்தால்தான் பெருவாரியான மக்கள் பார்ப்பார்களோ என்னவோ!

டெக்ஸ் வில்லரும் அப்படித்தான். பல கதைகளில் நவஜோக்களுக்கு, செவ்விந்தியர்களின் பங்காளராக வந்தாலும் அவர் ஒரு வெள்ளையர். ஒரு வெள்ளயரை முன்னிலைப் படுத்தியே கதை நகரும்.   

ஆனால் லாரன்ஸின் தோற்றம்,  டெக்ஸ்வில்லரின் பழிவாங்கும் பாவையில் வரும் வில்லனைப் போல அதாவது வெள்ளையரின் நடை உடையில் வலம் வரும் செவ்விந்தியரைப் போல அல்லவா தெரிகிறது. டெக்ஸை எதிர்பார்த்து வருவோருக்கு டெக்ஸின் வில்லனை ஹீராவாக ஏற்கும் மனம் வருமா? தவிரவும் தொடக்க காட்சிகளில் ரஜினையை வேறு கிண்டல் செய்கிறார்.   கருப்பராக தோற்றமளிக்கும் லாரண்ஸ் மக்களின் மனதில் இடம் பிடிக்க சிரமப் படுகிறாரோ என்னமோ!

http://www.writermugil.com/wp-content/uploads/2009/12/mgr-vettai.jpg

ஆனால் கதைப் படி  கதாநாயகனின் கூட்டம் பூர்வ குடிகள் அல்ல, அதற்கு மனோரமாவின் உடைகளே சாட்சி

=======================================================

அடுத்ததாக நாயகிகள். என்னத்த சொல்ல, ஒவ்வொரு பாடலின்போதும்  அலைப்பேசியில் பேசி பாடலைக் கவனிக்கத் தவறிவிட்டேன். இருந்தாலும் சந்தியாவின் கண்கள்.  அத்தோடு  மண்டையோடு சேர்த்து, ......... ண்டையும் உடைத்துக் கொண்ட நாயகியின் தலை முடி, லட்சுமிராயின் எஸ்பாஸ் இவ்வள்வுதான் எனக்குத் தெரிந்தவை.

==============================================================

U S A  கோட்டையினருடன் செய்யும், அணு ஆயுத ஒப்பந்தம் ,அணு ஆயுத ஒப்பந்தமாக உங்களுக்கு தோன்றுகிறதா? அதிகாரப் பகிர்வு என்று சொல்லிக் கொள்ளும் எல்லா ஒப்பந்தங்களையும் கேலி செய்வதாகவே தோன்றுகிறது.  

=================================================================

தலைவன் இறந்ததை மறைத்துவிடவேண்டும்,. அப்போதுதான் தொடர்ச்சியாக் போரிட முடியும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லுகிறார்கள். முகலாய சரித்திரத்தில் இதைக் காணமுடியும்.  ஹேமு ஏறக்குறைய போரில் வெற்றி பெற்ற நிலையில் குத்துப் பட்டு இறக்க  அவரது படைகள் முகலாயப் படைகளால் சின்னாபின்னப் படுத்தப் பட்டு முகலாய சாம்ராஜ்யம் இந்தியாவில் ஆழக்கால் ஊன்றுகிறது.

1. சிங்கத்தின் கதை

2. சிங்காரத்தின் கதை

ஒருவேளை சிங்காரம் இறந்திருந்தால் அது ஊடகங்களின் பார்வைக்கு வந்திருந்தால் சிங்காரத்தின் இறந்த புகைப்படம் சிங்கத்தின் பழைய புகைப்படத்துடன்  ஒப்பிடப் பட்டு சிங்கம் இறக்கவில்லை என்று மீண்டும் நிறுவப் பார்த்திருப்பார்களா?  அப்போதும்  ஜெய்சங்கர் புர மக்களின் நம்பிக்கையான சிங்கம் வருவார் என்பது தொடர்ந்திருக்குமோ?

===================================================

ஜெய்சங்கர்புரம், ஷோலேபுரம் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்களே? அனுராதா புரம் என்று அந்தக்காலத்திலேயே தமிழன் ஒரு நடிகையின் பெயரை வைத்திருக்கிறானே அதையெல்லாம் தொடர்படுத்திக் கொள்ளலாமா?

===============================================================

அப்படி என்றால் சிங்கத்திற்கும் சிங்காரத்திற்கும் உள்ள இடைவெளி. அந்த கட்சி மாறும் கோடரிக்காம்புக்கு தெரிந்திருக்குமே?  அப்போது அந்தக் கதாபாத்திரம் என்ன செய்திருக்கும்?

==========================================================
நாசரின் ஒரு கண் சொல்லும் கதைகள் என்ன என்ன? கடைசியில் அந்தக் கண்ணைக் கீழே போட்டு கசக்க வைக்கும் சிம்பு தேவன் சொல்லுவது தான் என்ன? சிலருக்குப் புரியும்.

====================================================

தமிழ் எழுத்துக்கள் எத்தனை ? பொங்குதமிழனுக்கு கஷ்டம் ஏற்படும்போது என்ன செய்வான் போன்ற ஆராய்ச்சிகள் எல்லாம் சிம்பு தேவன் செய்துள்ளார். வாழ்க சிம்பு தேவன்.  நாம் தேடியலையும் பல விஷயங்கள் நம் கண் எதிரிலெயே உள்ளன. அதைவிடுத்து நாம் பல ஆபத்துக்களை தாண்டித் தாண்டி தேடிக்கொண்டே இருக்கிறோம் என்ற ஆன்மீகக் கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார் சிம்புதேவன்.

மீண்டும் மீண்டும் பார்க்க பல கோணங்களில் படத்தை ரசிக்க முடியும் என்றே நினைக்கிறேன்.
=========================================
பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே

-ஆயிரத்தில் ஒருவன்

Wednesday, April 28, 2010

அண்ணாச்சியோட டேலண்ட்

வண்டி சேலத்தின் முக்கிய வீதி (என்று நினைக்கிறேன்)யில் போய் கொண்டு இருந்தபோது நண்பர் கோடைப் பண்பலை போட்டுக் கொண்டிருந்தார். அதில் ஒரு அம்மணி  நேயருடன் கடலைப் போட்டுக் கொண்டிருந்தார்.  படுத்துக் கொண்டு போர்த்திக் கொள்வாரா அல்லது போர்த்திக் கொண்டு படுப்பாரா என்பது பற்றி மிக சீரியஸாக  ஒரு கடலை.  அதை தானைத்தமிழகமே கேட்டு ரசித்துக் கொண்டிருந்தது என்பதை நினைக்கையில் இதயமே புல்லரித்துக் கொண்டிருந்தது.

வழக்கமாக அந்த நேரத்தில்  மகிழ்வுந்தில் இருந்த அனைவருமே  கடமையே கண்ணாக இருக்கும் நேரமானதால் அவர்கள் இது போன்ற கடலைகளையெல்லாம் கேட்டதே இல்லை.  அவ்வப்போது தொலைக்காட்சியில் இது போன்ற கடலைகளை கேட்டிருந்தாலும் பண்பலையில் போட்ட கடலை   பதறவைத்துக் கொண்டிருந்தது.

அந்த மகிழ்வுந்தில் இருந்தவர்கள் யார்? அவர்கள் ஏன்  சேலத்தின் முக்கிய வீதிகளில் சென்றனர்? குறிப்பிட்ட வீதியில் அவர்கள் இறங்க மறுத்தது ஏன் போன்ற விவரங்களை அறிய  இந்தச் சுட்டி உங்களுக்கு உதவும்.

=======================================

இந்த நேரத்தில்  வான வேடிக்கைகள்  விண்ணைப் பிளந்து கொண்டு இருந்தன.  ஏதோ கோவில் திருவிழா போல விஜய் அஜித் ரசிகர்கள் இணைந்து வரவேற்பு வலையங்கள் வைத்திருந்தனர்.  பிரசாந்த்,  அர்ஜுன் போன்றவர்களின் ரசிகர் மன்றங்களைக் கூட காண நேர்ந்தது.

நண்பர்கள் தங்களுக்காகவே வரவேற்பு வாணவேடிக்கைகள் இருப்பதாக மிகவும் மகிழ்ச்சியுடன்  சொல்லிக் கொண்ட்டு ஏறக்குறைய ஒரு மணிநேர டிராஃபிக் ஜாமைப் பொறுத்துக் கொண்டனர்.

இந்த சூழலில் ந்மது இளைய நண்பரின் எம்டியெஸ் அலர ஆரம்பித்தது. அப்போது கோடப் பண்பலையில்  தூங்காதே தம்பி தூங்காதே பாடல் ஒலிப் பரப்பாகிக் கொண்டிருந்தது,.

அந்தப் பாட்டையே இன்னொருவர்

பேசாதே தம்பி பேசாதே என்று பாடிக் கொண்டுவந்தார்.

கடைதனில் பேசியவன் முதல் இழந்தான்.  உயர் கல்வியில் பேசியவன் புகழ் இழந்தான்.  என்று அப்படியே அந்த இடத்திலேயே அந்தப் பாடலை உல்டா அடித்துக் கொண்டே வந்தார்.

ஆனாலும் நமது சிங்கக் குட்டி அந்த டாடா இண்டிகா மகிழ்வுந்தின் ஓர் ஓரத்தில் அமர்ந்து கடலையைச் சார்த்திக் கொண்டு வந்தார்.   இன்னும் சில பாடல்களைப் பாடிய நம்து நண்பர் கொஞ்சம் கடுப்பாகி  அலை பேசியை பிடுங்கி  ஒரு ஓரமாக வீசிவிட்டார்.

வண்டி ஒரு உணவகத்தில் நின்றது. நண்பர் கேட்டார்.

நண்பர் கேட்டார்.
-----------------------------------------------------------------
யார் யாருக்கெல்லாம் கேஸ் ட்ரபுள் இருக்கு

ஏண்ணே..,  ஓட்டல் சரியில்லையா?

இந்த ஓட்டல் சமையல் பூரா கேஸ்ல செய்யராங்களாம். கேஸ் ட்ரபுள் இருக்கறவங்க வேற இடம் பாருங்க.

---------------------------------------------------------------------

ராத்திரி உணவு அமர்க்களமாய் உள்ளே போன பின் பயணத்தைத் தொடர்ந்தோம்.  கொஞ்சம் அப்படி இப்படிச் சென்று கொண்டு இருந்த நேரத்தில் இளஞ்சிங்கம் மீண்டும் தனது அலைப் பேசியில் எம்டியெஸ் கம்பெணியை குழிதோண்டிப் புதைப்பதற்கான வகைகளை ஆராய ஆரம்பித்தது.

டேய், ஃபோனை தூக்கிப் போடல.,  நாங்க உன்னைத்தூக்கி வெளிய போட்டுட்டு போயிடுவோம்.

வேண்டாம்னே அவன் இதுதான் வசதின்னு இங்கியே இறங்கிடுவான்.  பேசாம  வாங்க,

அவன முதல்ல நிறுத்தச் சொல்லு.., அப்புறம் நான் நிறுத்தறேன்.

அண்ணே உங்களுக்கெல்லாம் பொறாமை..,

நீங்க படிக்கும்போது செல் கிடையாது. அப்படியே இருந்தாலும் யாரும் பேசியிருக்க மாட்டாங்க. சின்ன பையன் சந்தோஷமா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலண்ணே..,

ஆமா.., ஆமா..,  இருந்த லேண்ட் லைன்ன கூட இவனுக்கு ஒரு ஃபிகரும்  ஃபோன் பண்ணாது.

டேய்  நாங்கெல்ல்லாம் எப்பவுமே எல்.ஹெச் ல தான் குடியிருப்போம். இங்க வந்தாத்தாண்டா ஃபோனெல்லாம்.  நாங்கதான் டைரக்ட் டீலிங்ஸ் பண்ணுவமே...,

இன்னொருவர்

அண்ணே சும்மா கதை விடாதீங்க.., நீங்க என்ன டீலிங்ஸ் விடுவீங்கண்ணு எங்களுக்குத் தெரியாதா? பத்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வில்ஸ் வாங்கிட்டு ஒரு ஓரமாய் உங்கார்ந்து வர போற ஃபிகர உத்து உத்து பார்ப்பீங்க..,

டேய் எங்க ரேஞ்சே வேற..,

சும்மா கதை விடாதீங்கண்ணே..,  வில்ஸ் வாங்கிக் கொடுத்தது நாணு.

சார் இவர் லவ் மேரேஜ்ன்னு சொன்னாங்க.., மேடம் சூஸைடு அட்டம்ட்டு கூட பண்ணாங்களாமே..,   இளஞ்சிங்கம் ஆர்வமாய் வாய் திறந்தான்.

 ஓ  அதெல்லாம் உனக்கு தெரிஞ்சு போச்சா...!

ஒரு நாள் யாரோ சொன்னாங்க சார்.

அது ஒரு பெரிய கதைடா..,

மாப்பிள்ளை கவர்மெண்ட் வேலை,  தானே சொந்த முயற்சில ஆஸ்பத்திரியெல்லாம் கட்டியிருக்கார், அதுவும் நல்லாப் போயிட்டு இருக்குன்னு தரகர் சொல்லியிருக்கார்.  அவங்க வீட்டலயும் விசாரிச்சுப் பார்த்துட்டு   மாப்பிள்ளை சொக்கத்தங்கம், கடின உழைப்பாளி அப்படின்னு முடிவு கட்டிட்டு  பொண்ணு தர்ரதா ஒத்துக்கிட்டாங்க..,

மேடமும் அப்பா, அம்மா பார்த்து ஓ.கேன்னா சரிதான்னு சொல்லிட்டாங்க.  கடையில் நிச்சயம் பண்ற அன்னைக்கு பார்த்தா மாப்பிள்ளை நம்ம ஆளு..,

மேடம் ஒரே ரகளை,  நான் கல்லை கட்டிட்டி கிணத்துல குதிச்சாலும் குதிப்பேனே தவிர இந்த ஆளக் கட்ட்டிக்க மாட்டேன்னு ஒரே ரகளை, நான் அந்த மாத்திரை முழுங்கிடுவேன் இந்த மாத்திரை முழுங்கிடுவேன்னு ஒரே சீன்.  

அப்புறம் நாங்கெல்லாம் போயி அண்ணன் ரொம்ப நல்லவர்.  காலேஜ்ல கம்ஃப்ளீஷன் வாங்கின அன்னைக்கே வேற ஆளா மாறிட்டார்.  ஊரில் அவர் ஒரு பெரிய புள்ளி, அப்படி இப்படின்னு சொல்லி  ஒரு பில்டப் கொடுத்து மனச மாத்தினோம்.  ஆனா அதயே இவர கல்யாணம் பண்ணிக்கறதுக்காக நடந்ததாச் சொன்னார் பார்த்தியா...,  அங்கதாண்டா இருக்கு அண்ணாச்சியொட டேலண்ட்.

பழச விடுங்கடா..,  இப்ப அவன் எம்டியெஸ ஆஃப் பண்ணுவானா மாட்டானா? அதச் சொல்லச் சொல்லு..

அண்ணே அந்த பாட்டரியும் அவுட்டுண்ணே..,  இனி நம்மளோடதான் அவன் பேசி ஆகணும்.

பேசிக்கொண்டே வண்டி நகர்ந்து கொண்டு இருந்தது.

Wednesday, December 16, 2009

உலர்ந்த உணர்வுகள்

தெரியவில்லை

மீண்டும்

உன்னைப் பார்த்தபோது

உள்ளுக்குள் வந்த

உணர்வுகளின் தன்மை..,

கல்லூரி தேவதையாய்  நீ

உலவிய போது கூட

ரசிகனாய் கூட

இருந்த நினைவு இல்லை

நட்பாய் பழகிய

நாட்களில் கூட

நண்பனாய்  இருந்த

நினைவு இல்லை.

ஒரு பெண்ணாய்

உன்னைப் பார்த்த

நினைவு

இல்லவே இல்லை,

ஆனால்

இன்று

இப்படி ஒரு பெண்

என்னோடு

பல காலம்

பழகியிருக்கிறாள்

என்பதாக

தோன்றும்போது

காரணம்

புரியவில்லை,

எப்போது

என் கண்களுக்கு

பெண்ணானாய்?

ஒன்றும்

புரியவில்லை

உன்முகத்தின்

ஜொலிப்பு

நகைப்பின் தகைப்பு

பேச்சோடு அசையும்

கைவிரல்கள்

காற்றோடு

உலாவும்

முடிக் கற்றைகள்

உடலோடு இணைந்த

உடைகள்

நாம் பழகிய

நாட்களிலும்

இப்படித்தான்

இருந்தாயா?

ஏனோ தெரியவில்லை

உன்னைப்

பார்த்தபின்

உன்னை

மறந்து விட்டேன்.

புதிய

உணர்வை

உணர்ந்துகொண்டேன்

உணர்வின்

உணர்வு

உணர முடிந்தால்

நீயும் உணர்ந்திருப்பாய்

இல்லை

உணர்வில்

உலர்ந்திருப்பாய்

உணர்வுகள்

உலர்ந்திருந்தால்

உன்னைக்

கண்டிருக்கலாம்

உன்னைக்

கண்டதால்

உணர்வுகள்

உணர்த்தியிருக்கலாம்,

உண்மையைச்

சொன்னால்

உன்னை நான்

கண்டிருக்கவே கூடாது..,

Monday, September 7, 2009

வறண்ட தொண்டை

சேகருக்கு தலைகால் புரியாமல் நின்றான். பின்னே கௌதமன் சார் வீட்டுக்குப் போறதுன்னா.., கௌதம் சார் வந்த பிறகுதான் அவன் ஆங்கிலம் ஒழங்காக படிக்க ஆரம்பித்தான். வழக்கமாக சங்கர்தான் போவான். அங்கு போனால் சாரின் மனைவி குடிப்பதற்கு மோர் கொடுப்பாராம். அது தேன் போல தித்திக்குமாம்.

கௌதம் சார் என்றாலே சேகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் பள்ளியில் ழ கரத்தை அழுத்தமாக உச்சரிக்கக் கூடிய ஆள் அவர்தான். அவரது வகுப்புகளை கவனிக்கும்வரை தாங்கள் எல்லோரும் ழ கரத்தைச் சரியாக உச்சரிப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

Friday, July 3, 2009

கலாச்சார மாற்றத்துடன் சில மாற்றங்கள்

நாளை நமதே:-

இதுவே இந்தியில் வந்த ஒரு படத்தின் ரீமேக்தான்.

முதல் காட்சியில்தான் ஒரு குடும்ப பாட்டு. பாட்டு முடிந்த உடன் பெற்றோர் இறந்துவிட அண்ணன் தம்பி மூன்று பேரும் பிரிந்து விடுகிறார்கள். ஒருவர் பயங்கர ரவுடியாகவும், இன்னொருவர் மென்மையான எண்ணங்கள் கொண்டவராகவும், இன்னொருவர் பாடகராகவும் மாறுகிறார்கள். கடைசி அரைமணிநேரத்தில் பழைய பாட்டை பாடி ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். மூத்தவர் ஒரு ஓரமாக நின்று உண்ர்ச்சி கொந்தளிப்பாக பார்த்துக் கொண்டு நிற்பார். வில்லனை பழிவாங்கி அனைவரும் ஒன்றுசேர சுபம்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம், என்வழி தனி வசனம்.... மூத்த அண்ணன் பிரயோகப் படுத்தி இருப்பார். எதிரியையும் மன்னிக்கும் கொள்கை வேண்டும் என மூத்த அண்ணன் கடைசி காட்சியில் வலியுறுத்த விதி அவரையும் மீறி வில்லனைக் கொன்றுவிடும். இந்தியில் இது போன்ற நீண்ட வசனம் இருப்பதாக தெரியவில்லை.{ எனக்கு இந்தி தெரியாது}. இந்திப் படத்தில் மூன்று நடிகர்கள் செய்த பாத்திரங்களை இருவரே செய்திருப்பார்கள். முதல் இரண்டு பாத்திரங்களுக்கு ஒருவரே என்பதால் வித்தியாசப் படுத்திக் காட்ட மேக்கப் கடுமையாக உதவியிருக்கும்.

நீங்கள் கேட்டவை:-
1984ஆம் ஆண்டில் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வந்தபடம். இதி கூட நாளைநமதே படத்தில் வந்தது போல முதலில் ஒரு குடும்ப பாட்டு.

பாட்டு முடிந்த உடன் விதவைத்தாய் கொல்லப் படுகிறார். பாட்டு முடிந்ததும் அண்ணன் தம்பி இருவரும் பிரிந்து விடுகிறார்கள். அதில் வந்த இரண்டாம் மூன்றாம் சகோதரர்களை ஒரே ஆளாக மாற்றி இருப்பார்கள். இதிலும் மூத்தவர்தான் பழிவாங்கும் எண்ணத்தோடு சுற்றிக் கொண்டே இருப்பார். அடுத்தவர் ஜாலியாகப் பாட்டுப் பாடிக் கொண்டு சில்க் உடன் சுற்றிக் கொண்டிருப்பார். அதில் நேரடியாக பாட்டுப் பாடும் போதே மூவரும் உணர்ந்து கொள்வார்கள். இதிலும் இரண்டாம் முறை பாட்டு உண்டு

அது பதிவு செய்து சண்டையின்போது டேப் ரிகார்டர் பாட ஆரம்பித்து ஒன்று சேர்வார்கள். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு புதுமை அப்படத்தில்தான் முதன்முறையாக புதுகுத்தப் பட்டது எனலாம்.
அந்தப் பாடலில் நடித்த நடிகரின் முகபாவங்கள் பலதலைமுறைக்கும் பேசப் படும்வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. .

அடியேய் .. மனம் நில்லுனா நிக்காதடி.... {நன்றி :Thanjavurkaran } இன்னமும் கல்லூரிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதே அந்தப் படத்தின் நீண்ட ஆயுளுக்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. கனவுகாணும்வாழ்க்கையாவும்.. பாட்டுக்கும்கூட ஆயுள் அதிகம்தான்.

முதல் படத்தில் ராஜஸ்ரீ சிறப்புத்தோற்றத்தில் வந்து பாட்டுப் பாடுவார். இரண்டாவது படத்தில் பூர்ணிமா ஜெயராம் வந்து பாட்டுப் பாடுவார்.

தெலுங்கில் கூட இந்தப் படங்கள் வந்துள்ளன

மற்ற படங்களைப் போல இந்தப் படமும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் மற்ற படங்களில் கடைசித் தம்பி டம்மியாயிருக்கும். அவரது முக்கிய வேலை முக்கியமான இந்தப் பாடலைப் பாடுவது தான். நீங்கள் கேட்டவையில் இரண்டு தம்பிகளையும் சேர்த்து ஒரே தம்பியாக்கி இருப்பார்கள். ஆனால் தெலுங்கு படம் எடுத்ததற்கு முக்கிய காரணமே கடைசித் தம்பிதானாம். அவருக்காகத்தான் இந்த படமே..,

கடைசித் தம்பி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தம்பி, பெரிய அண்ணனுக்கு நெருங்கிய சொந்தக் காரர், யாரென்று தெரிந்தால் பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்?

இது ஒரு மேம்படுத்தப் பட்ட மீள்பதிவு. முதற்பதிப்பில் இல்லாத பல பகுதிகளும் படக்காட்சிகளுடனும் வெளியிடப் பட்டுள்ளது.

Thursday, July 2, 2009

முடிந்தாள் நண்பனின் மனைவி

ராஜூவிடம் அந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை முருகன். நானும் பூஜாவும் விவாகரத்து வாங்கலாம் ன்னு இருக்கோம்.

முருகனுக்கு பயங்கர அதிர்ச்சி. ஏண்டா...
......................................................
இந்தக் கதையைத் தொடங்கும் முன் நண்பனின் மனைவி பாகம்-1, பாகம்-2 படித்துவிட்டு வாருங்கள்.
....................................................

பிற்பகலில் ராஜு வீட்டுக்கு வந்த போது தன்னை வரவேற்றது கூட அவ்வளவு மகிழ்ச்சியாக தெரியவில்லை என்றுதான் முருகனுக்குத் தோன்றியது. ஊட்டிவரை போய்விட்டு வருவதாகக் கூறினான். இல்லை. இங்கேயே தங்கு. தோட்டங்களைப் பார்க்கலாம் நிறைய பேச வேண்டியுள்ளது என்றுதான் ராஜு முருகனைத தங்க வைத்தான். இப்போது தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டுதான் இதெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர்.
...........................................................

முருகன் கல்லூரிக் காலத்தை நினைத்துப் பார்த்தான். அன்றெல்லாம் முருகன் கூட்டம்தான் உற்சாக பானம் அருந்துவார்கள். ராஜு வெறுமனே ஒரு சிட்ரா பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு மற்றவர்கள் போதை மயக்கத்தில் பேசுவதை ஊக்குவித்துக் கொண்டிருப்பான். கல்லூரி நாட்களில் அவன் ஒரு போதும் குடித்ததே கிடையாது. இன்று தலை கீழாக இருக்கிறது. முருகன் பெப்சி பாட்டிலுடனும் ராஜு உற்சாக பானத்துடனும் இருக்கிறான். உற்சாக பானம் உற்சாகம் கொடுப்பதற்குப் பதிலாக அவனது துக்கத்தின் கரைகளை உடைத்துக் கொண்டு இருந்தது.

காதல் திருமணம் வேஸ்டுடா...

என்னடா பிரச்சனை..

பூஜா சொல்லியிருப்பாளே.. அவள் என்னைவிட நண்பர்கள்ட்டா தானே நல்லா பேசுவா..

போச்சு இனிமெல் வாயத்திறக்கக் கூடாது. இல்லடா ஒன்னும் சொல்லலியே... ஏன் இப்படியெல்லாம் பேசுர....

நீங்க ரெண்டு பேரும் எப்படி நெருங்கிய காதலர்களா சுற்றி வந்தீங்க...

இல்லைடா நாங்க ரெண்டு பேரும் நெருக்கமாவே இல்லை. அவளுக்கு நண்பர்கள்தான் எல்லாம். அவங்களுக்கு குற்ஞ்செய்தி அனுப்புற அளவிற்கோ பேசும் அளவிற்கோ என்னிடம் அவ பேசியதே இல்லை. சாயங்காலம் ஏதாவது ஒரு ஃபிரண்டு வாங்கி தந்ததுன்னு ஒரு கிஃப்டோட வந்து நிக்கறா.. என்கிட்ட கேட்டா வாங்கி தர மாட்டனா...

வீட்டுக்கு வந்தாலும் ஃபோனும் கையும்தான்.

ஏண்டா எங்காவது வெளியே கூட்டிட்டி போகவேண்டியதுதானே..

எங்கடா இப்பதான் ஹாஸ்பிடல் நல்லா போயிட்டு இருக்கு. அப்பாவுக்குன்னு நோயாளிகள் வந்தது போக இப்ப எங்களுக்கும் நோயாளிகள் வந்துட்டு இருக்காங்க...

அப்புறம் எப்படிடா விவாகரத்து வாங்குவீங்க?

விவாகரத்து வாங்கிவிட்டு திரும்பவும் ஒரே இடத்தில் வேளை செய்வீங்களா..

இப்ப என்னை என்னடா பண்ணச் சொல்ற...
.....................................................

பிரச்சனை ஓரளவு தெளிவானது. பூஜா கல்லூரியில் இருந்த மாதிரியே இன்னும் இருக்கிறாள். அன்று அதை ஏற்றுக் கொண்ட முருகனால் இன்று அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் தொடர்ர்சியாக ஏற்படும் வாக்குவாததில் பற்பல பிரச்சனைகள்.

.......................................................

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு முருகன் ராஜுவுக்கு ஒரு ஏற்பாடு சொன்னான். பரவாயில்லை. விடுடா..

ஆளுக்கொரு வண்டி வைத்துக் கொண்டுதான ஒரே மருத்துவமனைக்கு போய்ட்டுவர்ரீங்க. இனிமேல் ஓரே வண்டில போய்ட்டுவாங்க.

பிறகு பாருங்க..

..........................................
சில நாட்கள் கழித்து ராஜுவிடம் இருந்து முருகனுக்கு அலைபேசி அழைப்பு. நன்றி மச்சி இப்பெல்லாம் பலவிஷயங்கள் நார்மல் ஆயிடிச்சு.
...................................................

இந்தக் கதை இப்போது முடிந்தது. மீள்பதிவுதான்; இருந்தாலும் ஓட்டுக்கள் வரவேற்கப் படுகின்றன

நண்பனின் மனைவி பாகம்-2

நண்பனின் மனைவி முதல் பாகம் படித்துவிட்டு இரண்டாம் பாகத்தினை தொட்ருங்கள்

சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பூஜா மாதிரி ஆட்களுக்கு அழக் கூடத்தெரியுமா.. என்பதே முருகனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. என்னேரமும் பேசிக் கொண்டே இருக்கும் பெண் அவள். இன்று சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவள், காதலித்தவனையே திருமணம் செய்து கொண்டவள், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் நெருங்கிய நண்பனின் மனைவி. இப்போது என்ன செய்வது என்றே முருகனுக்குத் தோன்ற வில்லை. அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.

இப்பொழுதெல்லாம் ராஜு குடிக்கறார். சொல்லிக் கொண்டே அழுதாள். அழுதுகொண்டே சொன்னாள்.

இது அதிபயங்கர அதிர்ச்சியாக முருகனுக்கு அமைந்தது. முருகன் கல்லூரி நாட்களில் தண்ணியடித்திருக்கிறான். கல்லூரி விழாக்கள் முடிந்த பிறகு, நண்பர்களின் பிறந்த நாளில் என்று தேர்ந்தெடுத்த நாட்களில் நண்பர்கள் குடிப்பார்கள். ஆனால் அந்த நாட்கள் வாரா வாரம் வந்திவிடும். அந்த நேரத்தில் எல்லாம் ராஜு குடித்ததில்லை. சிகரெட் கூட உபயோகப் படுத்தியதில்லை. ஆனால் முருகன் உட்பட அவன் நண்பர்கள் யாருமே குடிப்பதில்லை. புகைப்பதில்லை. ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த ராஜு குடிப்பது முருகனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

என்ன ஆச்சு?

தெரியல.. என்னை சந்தேகப் படற மாதிரி தெரியுது. ஆனால் என்கிட்ட ஏதும் கேட்க வில்லை.

எத்தனை நாளா குடிக்கறான்?

ஒரு வருஷமா.. சில நேரங்கள்ல டெய்லி கோட குடிக்கிறார்.

வேலைக்கு ஒழுங்கா போறானா?

அதெல்லாம் போறார். வீட்டுக்கு வரும்போது பெரும்பாலும் குடித்துவிட்டு வருகிறார். குடித்துவிட்டு வந்தாலும் குடிக்காவிட்டாலும் வந்ததும் நெட்டில் உட்கார்ந்துவிடுகிறார்.

அப்புறம் எப்படி சந்தேகப் படுறான்னு சொல்றே..

தோணுது. ஆனால் ஏன்னுதான்னு தெரியல...

கல்லூரித்தோழந்தான். ஆறுஆண்டுகள் ஒன்றாகப் படித்தவர்கள்தான். ஆனாலும் சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அவனின் குடும்ப பிரச்சனையில் தலையிடுவது எப்படி குழம்பிப் போய் நின்றான்.

தொழிலில் ஏதும் பிரச்சனை மாதிரியும் தெரியவில்லை. சந்தேகப் படுவதாக வேறு சொல்கிறாள். அவன் சந்தேகப் படுகிறானா.. இவள் அவனை சந்தேகப் படுகிறாளா...

இந்த நேரத்தில் மகிழ்வுந்து ஒன்று வரும் சத்தம் கேட்டது.

அவர்தான் வருகிறார்.

கண்ணைத்துடைத்துக் கொண்டு பூஜா எழுந்தாள்.

ராஜு உள்ளே வந்தான். இருவரையும் பார்த்தான்.

தொடரும்.............. தொடரும்................... தொடரும்............................

அடுத்த பாகத்திற்கு இங்கே செல்லவும்

Wednesday, July 1, 2009

நண்பனின் மனைவி

பேருந்து அமைதியாக கோவையை நோக்கிச் சென்று கொண்டிருந்த்து. நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று மதியம் இருந்தது. ஒருநாள் கழித்து இன்னொரு நண்பனின் திருமணம் இரண்டிலும் கலந்து கொல்வதற்காக முருகன் சென்று கொண்டு இருந்தான். அநேகமாக ராஜுவின் வீட்டில்தான் தங்கலாம் என்ற முடிவில்தான் வந்து கொண்டிருந்தான். ராஜுவும், ராஜுவின் மனைவி பூஜாவும் அவனது வகுப்புத்தோழர்கள்.

ராஜு உள்ளூர்காரன் தான், ஆனால் அவன் பூஜாவைக் காதலிக்க ஆரம்பித்த பின் கல்லூரியின் விடுதியில்தான் தங்கிப் படித்தான். ராஜு எப்போதும் முருகன் கோஷ்டியுடன்தான் இருப்பான். ஆனால் மாலை வேலையில் எல்லா நாட்களுமே பூஜாவுடன்தான் இருப்பான். பூஜா எப்போதும் கலகல வென்று எல்லோருடனும் பேசிக் கொண்டே இருப்பாள்.

150ஏக்கர் பரவியுள்ள கல்லூரி வளாகத்தில் மாலைவேளையில் ஆங்காங்கே மாணவர்கள் அமர்ந்து படிப்பது வழக்கம். பல ஜோடிகள் தனியே அமர்ந்து படித்துக் கொண்டு இருப்பார்கள். 9மணிக்கு மாணவியர் விடுதி மூடிவிடுவதால் அதுவரை இவர்களது படிப்பு தொடரும். பின்னர் எல்லோரும் விடுதிக்குச் சென்று விடுவர்.

முருகன் மாதிரி ஆட்கள் படிக்க சோம்பல் ஏற்படும் நேரங்களில் அப்படியே மயில் வேட்டைக்குச் செல்வார்கள். அந்தக் கல்லூரியில் மயில்கள் நிறையச் சுற்றிக் கொண்டிருக்கும். மயில் பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆங்காங்கே காதலர்கள் படிக்கும் அழகை ரசித்துக் கொண்டு போவார்கள். அதுதான் மயில் வேட்டை. அப்படி செல்லும் போது ராஜு பூஜா ஜோடி கண்ணில் தட்டுப் பட்டால் ராஜுவைவிட பூஜாதான் அதிகமாக முருகன் குழுவினருடன் பேசுவாள். சிப்ஸ், பிஸ்கெட் போன்றவை வாங்கி வருமாறு தொல்லை படுத்திக் கொண்டே இருப்பாள். பூஜாவுக்குப் பயந்தே அவர்கள் இருக்கும் பகுதியை தவிர்த்துவிடுவார்கள். இருந்தாலும் அவர்கல் எந்த மூலையில் அமர்ந்து படிக்கிறார்கள் என்பது தெரியாத சூழலில் அடிக்கடி செலவு வைத்துவிடுவாள்.

ராஜு பூஜாவை விட்டுவிட்டு வந்துவிட்டால் பிறகு முருகன் குழுவினருடன்தான் இருப்பான். கோயமுத்தூரில் உள்ள பலநூறு கல்லூரிகளில் மாதமாதம் எதாவது ஒரு கல்லூரியில் கலைவிழா நடக்கும். அதற்கு முருகன் குழுவினர் போவர்கள். அதற்கான பயிற்சியில் ஈடுபடும்போது கூட மாலை வேலைகளில் பூஜாவைப் பார்க்க போய்விடுவான். பூஜாவே கூட்டி வந்தால்தான் வருவான்.

நேற்றே அலைபேசியில் ராஜுவுடன் பேசியிருந்தான். ராஜுதான் இங்கேயே தங்கியிருந்து இரண்டுதிருமணங்களிலும் கலந்து கொள்ளுமாறு யோசனை கூறியிருந்தான்.

நேராக திருமண வரவேற்பு நடந்த மண்டபத்திற்கு சென்றான் முருகன். அங்கே நண்பர்கள் கூட்டம் ஒன்றும் அதிகமாகத்தென்படவில்லை. இருந்த ஓரிருவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட நினைத்த போதுதான் பூஜ வந்தாள்.

சில ஆண்டுகளில் கொஞ்சம் குண்டாகியிருந்தாள். ஒப்பனைகளும் கூடியிருந்தன.

"ஃபோன் நம்பர் மாத்திட்டயாமே.. எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டாயா"
கொஞ்சம் பயமுறுத்தும் வண்ணம்தான் பேசினாள்.

ராஜு வரலையா?

இல்ல.. அவர் கொஞ்சம் பிஸி. உன்னை வீட்டுக்கு கூட்டிவரச் சொன்னார்.

திருமண வரவேற்பு முடிந்து அவர்கள் வீட்டுக்கு புறப்படும்போது காரின் முன்பக்க கதவுகளை திறந்துவிட்டாள். முருகனுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. கையில் இருந்த குழந்தைகளுக்கு வாங்கிய பரிசுகளை முன் இருக்கையில் வைத்துவிட்டு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாண். கல்லூரி நாட்களில் சிலமுறை இருசக்கர வாகனத்தில் அவளை அழைத்துவந்திருக்கிறான். இன்று கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

படித்து முடித்த சிலகாலங்களில் இருவரும் திருமணம் முடித்துமேல்படிப்பு முடித்து ராஜுவின் தந்தை கட்டி வைத்த மருத்துவ மனையை கவனித்துக் கோண்டிருந்தார்கள். முருகன் அரசுப் பணி கிடைத்து ஒரு கிராமத்தில் வேலை செய்து வந்தான்.

நீ ஏன் ஃபோன் செய்யறதே இல்லை இது பூஜா

இல்ல கொஞ்சம் வேலை அதிகம்.

ஃபோன் நம்பர் மாத்தினதும் சொல்லவே இல்லை. அதினாலதான் உணக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவே முடியவேயில்லை என்றாள் பூஜா..

உண்மைதான் முருகன் அலைபேசி வாங்கிய காலகட்டத்தில் பூஜாவிடம் இருந்து நிறைய குறுஞ்செய்திகள் வரும். புது எண் வாங்கிய பிறகு எல்லோரும் தெரியப் படுத்தவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை விட்டு விட்டான். ராஜுவுடன் அவ்வப்போது பேசுவான்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் கல்லூரிக்கு எதிரே உள்ள ஐஸ்க்ரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டாள். மாறவே இல்லை இந்தப் பூஜா..

பொதுவான விசாரிப்புகளுடனும் மற்ற நண்பர்களைப் பற்றிய விசாரிப்புகளுடன் மகிழ்வுந்து பூஜாவின் வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் பூஜா அழ ஆரம்பித்தாள்.

தொடரும்...... தொடரும்.......... தொடரும்..........

பின் குறிப்பு:- பச்சை நிறத்தில் பூஜா பேசுவதும்
நீல நிறத்தில் முருகன் பேசுவதும் இடம் பெற்றுள்ளன

நண்பனின் மனைவி இரண்டாம் பாகத்திற்கு இங்கே செல்லுங்கள்

இது ஒரு மீள் பதிவு. மீள்பதிவாக இருந்தாலும் ஓட்டுக்கள் வரவேற்கப் படுகின்றன...,

Sunday, May 3, 2009

அசல் கார்பந்தயம் (நான்காம் பாகம்)

முன்கதை சுருக்கம்:-மர்லின் மன்றோ போன்ற போசில் வெள்ளைக்கார கலெக்டர் பெண்மனியை படம்வரைந்து கொடுத்து அவர் மனதில் இடம் பிடிக்கிறார் சின்ன தல. நாட்டின் வறுமையும், வறட்சியையும் பற்றி கலெக்டரிடன் எடுத்துக் கூறுகிறார் பெரிய தல.

==============================

பெரிய தல, சின்ன தல பற்றி விரிவாகப் படிக்க

முதல் பகுதி,

இரண்டாம் ப்குதி,

மூன்றாம் பகுதியை சொடுக்கி படியுங்கள்

====================================

பெரிய தல சொல்லிக் கொண்டிருக்கும் போதே சின்ன தலயின் கண்களும் வெள்ளை அதிகாரியின் கண்களும் ஒன்றையொன்று கலக்கின்றன. அங்கே சப்தம் இல்லாத ஒரு யுத்தம் நடக்கிறது.

அதே நேரத்தில் பிரிட்டிஷ் அரசின் பார்வையாளராக பெண்கலெக்டரின் தந்தையும் முன்னாள் கலெக்டரும் வந்து சேருகிறார்.

அவர் சின்ன, பெரிய தல களைப் பார்த்து அதிர்கிறார்.

இந்த பையன் இவ்வளவு சிவப்பாக இருக்கிறானே...

உடனே வெள்ளைக்காரப் பாட்டி வந்து பெரிய தலக்கும் சின்னத்தலக்கும் உள்ள உறவு பற்றி சொல்கிறார். அவருக்கும் தலைகளுக்கும் உள்ள உறவு பற்றியும் சொல்கிறார்.( இங்கே சொடுக்கவும்.)
அதே நேரத்தில் அவர்களது தந்தைகள் பற்றியும் சொல்கிறார்.( இங்கே சொடுக்கவும்)

வெள்ளைக்காரர்களால் தங்கள் தந்தையர் இருவரும் அடிமைப் பட்டு இருப்பதை அறிந்த சின்ன தல குமுறுகிறார்.

பெரிய தல:- நம்ம அப்பாக்கள், அம்மாக்கள் மட்டுமல்ல தம்பி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சின்னம்மா, மாமன், மாமன் மகன் அத்தை, அத்தை மகன், மகள், பெரியப்பாவுக்கு பெண்கொடுத்தோர், பெண் எடுத்தோர், சித்தப்பாவுக்கு பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர், அப்பப்பா, அப்பம்மா, அம்மாப்பா, அம்மம்மா, வருவோர், போவொர், வருவதைப் பார்ப்போர், பார்க்காதோர் எல்லோரையும் இந்த வெள்ளையர்கள் அடிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள். இவர்களை உடனே இவர்களை கைது செய்ய வேண்டும்

சின்ன தல:- அண்ணே விடுதலை செய்ய வேண்டும்.

வெள்ளைக்காரப் பாட்டி:- பேரப் பிள்ளைகளா.. வெள்ளைக்கார ராஜா ஒரு போட்டி வெச்சிருக்கார். அச்சு அசலா யார் ஜெயிச்சாலும் அவர்கள் கேட்கும் பரிசைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். வடக்கே நடந்த போட்டியில் கூட கிரிக்கெட் போட்டியில் ஜெயித்து ஒரு நாடு சுதந்திரம் வாங்கியிருக்கிறார்கள்.

பெண்கலெக்டர்( சின்ன தலயின் ஆள்தான்):- உங்களுக்கு கார் பந்தயம்.

மேலிட பார்வையாளர்:- ஹா,,,,, ஹா,,,, இன்னும் மாட்டுவண்டிக்கே டயர் வைக்காத பசங்க....... இவங்களாவது கார் ஓட்டுவதாவது... (சொல்லிக் கொண்டிருக்கும் போதே...)

சின்னத்தல:- தனது உடையின் ஒவ்வொரு முடிச்சிலிருந்தும் ஸ்கூரு டிரைவர், நட்டு, போல்ட், கிளிஞ்சு போன டயர் துண்டு, ஸ்பேன்ர் போன்ற கருவிகளை எடுத்து வைக்கிறார்.

அதிர்ச்சியில் வெள்ளைக்காரர்களின் கூடாரத்தில் இருந்தவர்கள் அனைவரும் உறைந்து போகின்றனர்.

பெரிய தல:- தம்பி உன்ன வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்கவச்சது வீண்போகலடா..... (புதிதாகப் படிப்பவர்கள் இங்கே சுட்டவும்)..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

படத்தின் முக்கிய காட்சியாக கார்பந்தயம் நடைப்பெறுகிறது. அந்தக் காலத்து கார்களைப் பயன்படுத்தி போட்டி நடக்கிறது. சின்னத்தல ஒரு பழைய காரை சைக்கிள் பெடலை சேர்த்துவைத்து ஒரு புதிய தொழில்நுட்பத்தில் வண்டி ஓட்டுகிறார். அவரது கார் சுலபமாக இமயமலை பகுதிகளைச் சுற்றி வந்து வெற்றிவாகை சூடுகிறது.

அடுத்ததுதான் பிரச்சனையே....

மேலிட பார்வையாளர்கள் தல உபயோகப் படுத்தியது காரே இல்லை என்று சொல்கிறார்கள்.

அப்போது வெள்ளைக்காரப் பட்டி ஒரு பழம்பெரும் புத்தகத்தை கொண்டுவருகிறார். அந்த புத்தகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வந்தது. அதில் கூறியுள்ள இலக்கணப் படி சின்ன தல ஓட்டிவந்தது கார்தான் என்பதை ஊருக்கு உணர்த்துகிறார்.
=====================================

கடைசியில் சின்ன தல பெரிய தல ஆகியோரின் நாடும் நாட்டு மக்களும் அவர்களின் பெற்றோரும் விடுதலை செய்யப் படுகிறார்கள்.

Wednesday, April 15, 2009

அசல் படத்தின் கதை.

அசல்

தமிழ்திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கலத்தில் இறங்கி துவக்க விழாவில் ஒரு கலக்கு கலக்கு இருந்தார். அசலில் கதை இதோ:-

கி.பி.17ம் நூற்றாண்டில் தொடங்கிறது கதை.

வெளி நாட்டில் படிக்க போன அஜித் கப்பலிலிருந்து இறங்கி தனது நாட்டிற்கு வருகிறார். வரும் வழியில் வயலில் இறங்கி சுற்றிப்பர்க்கிறார்.

அப்போது வயலில் வேலை செய்பவர்:-

தம்பி யாரு.. சிவப்பா இங்கிலீசு துரை மாதிரி அழகா இருக்கீங்களே அதுதான் கேட்டேன். என்கிறார்.

அப்போது இடி மின்னல் எல்லாம் ஒலிப்பது போன்று ஒரு நிகழ்வு. அப்போது பெரிய மீசையுடன் ஒருவர் வந்து நிற்கிறார்.

தம்பி பாக்கிறதுக்குத்தான் அசலூர் காரர்மாதிரி இருப்பார். ஆனால் அசலாவே அவர்
நம்மூருதான்.

வயலில் வேலை செய்பவர்: தல நீங்களா.. அப்போ அவரு

மீசைக்காரர்:- என் தம்பீ.......லே

படிச்ச அஜித்:- அது..
(அஜித் பேசுவதை அஜித் மாதிரி படிக்கவும். ரகுவரன் மாதிரி படித்து குழப்பிக் கொள்ள வேண்டாம்.) மொத்தம் இரண்டு அஜித்.

வயலில் வேலை செய்பவர்:- அதுதான் அழகா இருக்காக..

இரண்டு பேரும் சாரட் வண்டியில் போய் கொண்டே இருக்கிறார்கள். அப்போது மாவீரன்படத்தில் ரஜினி பாடும் பாடல் ரீமேக் செய்யப்பட்டு ஒலிக்கிறது. இடையிடையே முத்து பிண்ணனி இசையும் வந்து கொண்டே இருக்கிறது.

தம்பி அஜித்:-அண்ணே நம்ம ஜமீன் மக்கள்ளாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்கண்ணே......

அண்ணன் அஜித்:-ஆனா இந்த வெள்ளைக் காரந்தான் சரியில்லே..

நம்மல வரி கேட்கிறான்.

தம்பி அஜித:- அப்படியாண்ணே... வானம் பொழிகிறது .பூமி விளைகிறது.........(முழு வசனத்தையும் அஜித் பேசுகீறார்.)

அண்ணன் அஜித்:-இதெல்லாம் நானும் பேசிப் பார்த்திட்டேன் ஒன்னும் வேலையாகல.. வரிக்கு வட்டி வேற போடறான். அசலையே கட்ட முடியாதுங்கறேன்

கலக்டர் பொண்ணுகூட என்கூடத்தான் கப்பல்ல வந்துச்சு. நான் போயி பேசி பாக்கட்டுமா...

அண்ணன்;- அது அசலாவா கலக்டர் பொண்ணுதானே...

தம்பி;- இல்லணே.. கலெக்டரே பொண்ணுதான்னே... வரும்போது பேசிட்டு வந்தேன்.

அண்ணன்:- நான் தனியாளு இல்லேண்ணு சொன்னியா...

தம்பி:- அதச் சொல்லிட்டுத்தாண்ணே பேசவே ஆரம்பிச்சேன்...

................................................................... தொடரும்>>>>>>>>>>>>.......

இதன் அடுத்த பகுதி இங்கே இடம் பெற்றுள்ளது

அம்மாஇரண்டு அப்பா இரண்டு பாகம் இரண்டு

மர்லின் மன்றோவின் முன்னோடி

அசல் கார்பந்தயம் (நான்காம் பாகம்)

பின் குறிப்பு:- வழக்கம் போல் நமது சொந்தக் கற்பனைதான்

Sunday, April 5, 2009

மூன்றும் சேர்ந்த கூட்டணி

பேருந்து அமைதியாக கோவையை நோக்கிச் சென்று கொண்டிருந்த்து. நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று மதியம் இருந்தது. ஒருநாள் கழித்து இன்னொரு நண்பனின் திருமணம் இரண்டிலும் கலந்து கொல்வதற்காக முருகன் சென்று கொண்டு இருந்தான். அநேகமாக ராஜுவின் வீட்டில்தான் தங்கலாம் என்ற முடிவில்தான் வந்து கொண்டிருந்தான். ராஜுவும், ராஜுவின் மனைவி பூஜாவும் அவனது வகுப்புத்தோழர்கள்.

ராஜு உள்ளூர்காரன் தான், ஆனால் அவன் பூஜாவைக் காதலிக்க ஆரம்பித்த பின் கல்லூரியின் விடுதியில்தான் தங்கிப் படித்தான். ராஜு எப்போதும் முருகன் கோஷ்டியுடன்தான் இருப்பான். ஆனால் மாலை வேலையில் எல்லா நாட்களுமே பூஜாவுடன்தான் இருப்பான். பூஜா எப்போதும் கலகல வென்று எல்லோருடனும் பேசிக் கொண்டே இருப்பாள்.

150ஏக்கர் பரவியுள்ள கல்லூரி வளாகத்தில் மாலைவேளையில் ஆங்காங்கே மாணவர்கள் அமர்ந்து படிப்பது வழக்கம். பல ஜோடிகள் தனியே அமர்ந்து படித்துக் கொண்டு இருப்பார்கள். 9மணிக்கு மாணவியர் விடுதி மூடிவிடுவதால் அதுவரை இவர்களது படிப்பு தொடரும். பின்னர் எல்லோரும் விடுதிக்குச் சென்று விடுவர்.

முருகன் மாதிரி ஆட்கள் படிக்க சோம்பல் ஏற்படும் நேரங்களில் அப்படியே மயில் வேட்டைக்குச் செல்வார்கள். அந்தக் கல்லூரியில் மயில்கள் நிறையச் சுற்றிக் கொண்டிருக்கும். மயில் பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆங்காங்கே காதலர்கள் படிக்கும் அழகை ரசித்துக் கொண்டு போவார்கள். அதுதான் மயில் வேட்டை. அப்படி செல்லும் போது ராஜு பூஜா ஜோடி கண்ணில் தட்டுப் பட்டால் ராஜுவைவிட பூஜாதான் அதிகமாக முருகன் குழுவினருடன் பேசுவாள். சிப்ஸ், பிஸ்கெட் போன்றவை வாங்கி வருமாறு தொல்லை படுத்திக் கொண்டே இருப்பாள். பூஜாவுக்குப் பயந்தே அவர்கள் இருக்கும் பகுதியை தவிர்த்துவிடுவார்கள். இருந்தாலும் அவர்கல் எந்த மூலையில் அமர்ந்து படிக்கிறார்கள் என்பது தெரியாத சூழலில் அடிக்கடி செலவு வைத்துவிடுவாள்.

ராஜு பூஜாவை விட்டுவிட்டு வந்துவிட்டால் பிறகு முருகன் குழுவினருடன்தான் இருப்பான். கோயமுத்தூரில் உள்ள பலநூறு கல்லூரிகளில் மாதமாதம் எதாவது ஒரு கல்லூரியில் கலைவிழா நடக்கும். அதற்கு முருகன் குழுவினர் போவர்கள். அதற்கான பயிற்சியில் ஈடுபடும்போது கூட மாலை வேலைகளில் பூஜாவைப் பார்க்க போய்விடுவான். பூஜாவே கூட்டி வந்தால்தான் வருவான்.

நேற்றே அலைபேசியில் ராஜுவுடன் பேசியிருந்தான். ராஜுதான் இங்கேயே தங்கியிருந்து இரண்டுதிருமணங்களிலும் கலந்து கொள்ளுமாறு யோசனை கூறியிருந்தான்.

நேராக திருமண வரவேற்பு நடந்த மண்டபத்திற்கு சென்றான் முருகன். அங்கே நண்பர்கள் கூட்டம் ஒன்றும் அதிகமாகத்தென்படவில்லை. இருந்த ஓரிருவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட நினைத்த போதுதான் பூஜ வந்தாள்.

சில ஆண்டுகளில் கொஞ்சம் குண்டாகியிருந்தாள். ஒப்பனைகளும் கூடியிருந்தன.

"ஃபோன் நம்பர் மாத்திட்டயாமே.. எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டாயா"
கொஞ்சம் பயமுறுத்தும் வண்ணம்தான் பேசினாள்.

ராஜு வரலையா?

இல்ல.. அவர் கொஞ்சம் பிஸி. உன்னை வீட்டுக்கு கூட்டிவரச் சொன்னார்.

திருமண வரவேற்பு முடிந்து அவர்கள் வீட்டுக்கு புறப்படும்போது காரின் முன்பக்க கதவுகளை திறந்துவிட்டாள். முருகனுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. கையில் இருந்த குழந்தைகளுக்கு வாங்கிய பரிசுகளை முன் இருக்கையில் வைத்துவிட்டு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாண். கல்லூரி நாட்களில் சிலமுறை இருசக்கர வாகனத்தில் அவளை அழைத்துவந்திருக்கிறான். இன்று கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

படித்து முடித்த சிலகாலங்களில் இருவரும் திருமணம் முடித்துமேல்படிப்பு முடித்து ராஜுவின் தந்தை கட்டி வைத்த மருத்துவ மனையை கவனித்துக் கோண்டிருந்தார்கள். முருகன் அரசுப் பணி கிடைத்து ஒரு கிராமத்தில் வேலை செய்து வந்தான்.

நீ ஏன் ஃபோன் செய்யறதே இல்லை இது பூஜா

இல்ல கொஞ்சம் வேலை அதிகம்.

ஃபோன் நம்பர் மாத்தினதும் சொல்லவே இல்லை. அதினாலதான் உணக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவே முடியவேயில்லை என்றாள் பூஜா..

உண்மைதான் முருகன் அலைபேசி வாங்கிய காலகட்டத்தில் பூஜாவிடம் இருந்து நிறைய குறுஞ்செய்திகள் வரும். புது எண் வாங்கிய பிறகு எல்லோரும் தெரியப் படுத்தவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை விட்டு விட்டான். ராஜுவுடன் அவ்வப்போது பேசுவான்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் கல்லூரிக்கு எதிரே உள்ள ஐஸ்க்ரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டாள். மாறவே இல்லை இந்தப் பூஜா..

பொதுவான விசாரிப்புகளுடனும் மற்ற நண்பர்களைப் பற்றிய விசாரிப்புகளுடன் மகிழ்வுந்து பூஜாவின் வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் பூஜா அழ ஆரம்பித்தாள்.

தொடரும்...... தொடரும்.......... தொடரும்..........

பின் குறிப்பு:- பச்சை நிறத்தில் பூஜா பேசுவதும்
நீல நிறத்தில் முருகன் பேசுவதும் இடம் பெற்றுள்ளன

========================================================

நண்பனின் மனைவி முதல் பாகம் படித்துவிட்டு இரண்டாம் பாகத்தினை தொட்ருங்கள்

சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பூஜா மாதிரி ஆட்களுக்கு அழக் கூடத்தெரியுமா.. என்பதே முருகனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. என்னேரமும் பேசிக் கொண்டே இருக்கும் பெண் அவள். இன்று சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவள், காதலித்தவனையே திருமணம் செய்து கொண்டவள், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் நெருங்கிய நண்பனின் மனைவி. இப்போது என்ன செய்வது என்றே முருகனுக்குத் தோன்ற வில்லை. அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.

இப்பொழுதெல்லாம் ராஜு குடிக்கறார். சொல்லிக் கொண்டே அழுதாள். அழுதுகொண்டே சொன்னாள்.

இது அதிபயங்கர அதிர்ச்சியாக முருகனுக்கு அமைந்தது. முருகன் கல்லூரி நாட்களில் தண்ணியடித்திருக்கிறான். கல்லூரி விழாக்கள் முடிந்த பிறகு, நண்பர்களின் பிறந்த நாளில் என்று தேர்ந்தெடுத்த நாட்களில் நண்பர்கள் குடிப்பார்கள். ஆனால் அந்த நாட்கள் வாரா வாரம் வந்திவிடும். அந்த நேரத்தில் எல்லாம் ராஜு குடித்ததில்லை. சிகரெட் கூட உபயோகப் படுத்தியதில்லை. ஆனால் முருகன் உட்பட அவன் நண்பர்கள் யாருமே குடிப்பதில்லை. புகைப்பதில்லை. ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த ராஜு குடிப்பது முருகனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

என்ன ஆச்சு?

தெரியல.. என்னை சந்தேகப் படற மாதிரி தெரியுது. ஆனால் என்கிட்ட ஏதும் கேட்க வில்லை.

எத்தனை நாளா குடிக்கறான்?

ஒரு வருஷமா.. சில நேரங்கள்ல டெய்லி கோட குடிக்கிறார்.

வேலைக்கு ஒழுங்கா போறானா?

அதெல்லாம் போறார். வீட்டுக்கு வரும்போது பெரும்பாலும் குடித்துவிட்டு வருகிறார். குடித்துவிட்டு வந்தாலும் குடிக்காவிட்டாலும் வந்ததும் நெட்டில் உட்கார்ந்துவிடுகிறார்.

அப்புறம் எப்படி சந்தேகப் படுறான்னு சொல்றே..

தோணுது. ஆனால் ஏன்னுதான்னு தெரியல...

கல்லூரித்தோழந்தான். ஆறுஆண்டுகள் ஒன்றாகப் படித்தவர்கள்தான். ஆனாலும் சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அவனின் குடும்ப பிரச்சனையில் தலையிடுவது எப்படி குழம்பிப் போய் நின்றான்.

தொழிலில் ஏதும் பிரச்சனை மாதிரியும் தெரியவில்லை. சந்தேகப் படுவதாக வேறு சொல்கிறாள். அவன் சந்தேகப் படுகிறானா.. இவள் அவனை சந்தேகப் படுகிறாளா...

இந்த நேரத்தில் மகிழ்வுந்து ஒன்று வரும் சத்தம் கேட்டது.

அவர்தான் வருகிறார்.

கண்ணைத்துடைத்துக் கொண்டு பூஜா எழுந்தாள்.

ராஜு உள்ளே வந்தான். இருவரையும் பார்த்தான்.

தொடரும்.............. தொடரும்................... தொடரும்............................
===================================================

ராஜூவிடம் அந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை முருகன். நானும் பூஜாவும் விவாகரத்து வாங்கலாம் ன்னு இருக்கோம்.

முருகனுக்கு பயங்கர அதிர்ச்சி. ஏண்டா...
......................................................
இந்தக் கதையைத் தொடங்கும் முன் நண்பனின் மனைவி பாகம்-1, பாகம்-2 படித்துவிட்டு வாருங்கள்.
....................................................

பிற்பகலில் ராஜு வீட்டுக்கு வந்த போது தன்னை வரவேற்றது கூட அவ்வளவு மகிழ்ச்சியாக தெரியவில்லை என்றுதான் முருகனுக்குத் தோன்றியது. ஊட்டிவரை போய்விட்டு வருவதாகக் கூறினான். இல்லை. இங்கேயே தங்கு. தோட்டங்களைப் பார்க்கலாம் நிறைய பேச வேண்டியுள்ளது என்றுதான் ராஜு முருகனைத தங்க வைத்தான். இப்போது தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டுதான் இதெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர்.
...........................................................

முருகன் கல்லூரிக் காலத்தை நினைத்துப் பார்த்தான். அன்றெல்லாம் முருகன் கூட்டம்தான் உற்சாக பானம் அருந்துவார்கள். ராஜு வெறுமனே ஒரு சிட்ரா பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு மற்றவர்கள் போதை மயக்கத்தில் பேசுவதை ஊக்குவித்துக் கொண்டிருப்பான். கல்லூரி நாட்களில் அவன் ஒரு போதும் குடித்ததே கிடையாது. இன்று தலை கீழாக இருக்கிறது. முருகன் பெப்சி பாட்டிலுடனும் ராஜு உற்சாக பானத்துடனும் இருக்கிறான். உற்சாக பானம் உற்சாகம் கொடுப்பதற்குப் பதிலாக அவனது துக்கத்தின் கரைகளை உடைத்துக் கொண்டு இருந்தது.

காதல் திருமணம் வேஸ்டுடா...

என்னடா பிரச்சனை..

பூஜா சொல்லியிருப்பாளே.. அவள் என்னைவிட நண்பர்கள்ட்டா தானே நல்லா பேசுவா..

போச்சு இனிமெல் வாயத்திறக்கக் கூடாது. இல்லடா ஒன்னும் சொல்லலியே... ஏன் இப்படியெல்லாம் பேசுர....

நீங்க ரெண்டு பேரும் எப்படி நெருங்கிய காதலர்களா சுற்றி வந்தீங்க...

இல்லைடா நாங்க ரெண்டு பேரும் நெருக்கமாவே இல்லை. அவளுக்கு நண்பர்கள்தான் எல்லாம். அவங்களுக்கு குற்ஞ்செய்தி அனுப்புற அளவிற்கோ பேசும் அளவிற்கோ என்னிடம் அவ பேசியதே இல்லை. சாயங்காலம் ஏதாவது ஒரு ஃபிரண்டு வாங்கி தந்ததுன்னு ஒரு கிஃப்டோட வந்து நிக்கறா.. என்கிட்ட கேட்டா வாங்கி தர மாட்டனா...

வீட்டுக்கு வந்தாலும் ஃபோனும் கையும்தான்.

ஏண்டா எங்காவது வெளியே கூட்டிட்டி போகவேண்டியதுதானே..

எங்கடா இப்பதான் ஹாஸ்பிடல் நல்லா போயிட்டு இருக்கு. அப்பாவுக்குன்னு நோயாளிகள் வந்தது போக இப்ப எங்களுக்கும் நோயாளிகள் வந்துட்டு இருக்காங்க...

அப்புறம் எப்படிடா விவாகரத்து வாங்குவீங்க?

விவாகரத்து வாங்கிவிட்டு திரும்பவும் ஒரே இடத்தில் வேளை செய்வீங்களா..

இப்ப என்னை என்னடா பண்ணச் சொல்ற...
.....................................................

பிரச்சனை ஓரளவு தெளிவானது. பூஜா கல்லூரியில் இருந்த மாதிரியே இன்னும் இருக்கிறாள். அன்று அதை ஏற்றுக் கொண்ட முருகனால் இன்று அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் தொடர்ர்சியாக ஏற்படும் வாக்குவாததில் பற்பல பிரச்சனைகள்.

.......................................................

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு முருகன் ராஜுவுக்கு ஒரு ஏற்பாடு சொன்னான். பரவாயில்லை. விடுடா..

ஆளுக்கொரு வண்டி வைத்துக் கொண்டுதான ஒரே மருத்துவமனைக்கு போய்ட்டுவர்ரீங்க. இனிமேல் ஓரே வண்டில போய்ட்டுவாங்க.

பிறகு பாருங்க..

..........................................
..........................................
சில நாட்கள் கழித்து ராஜுவிடம் இருந்து முருகனுக்கு அலைபேசி அழைப்பு. நன்றி மச்சி இப்பெல்லாம் பலவிஷங்கள் நார்மல் ஆயிடிச்சு.
...................................................

இந்தக் கதை இப்போது முடிந்தது

=======================================================

சமீபத்தில் எழுதியத தொடர்கதையின் ஒன்று, இரண்டு மூன்று பாகங்களும் வெளியிட்டுள்ளேன்.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails