Sunday, August 30, 2009

சிவாஜியை ரசிக்க மேலும் இரு காரணங்கள்

இன்றைய தலைமுறை திரைப்படங்களில் எதைச் செய்தாலும் அதை ஏற்கனவே சிவாஜி செய்து விட்டார் என்று சொல்லி விடலாம். அந்த மாதிரி இரண்டுகாட்சிகள்தான் இவை. இதை தயாரித்த நண்பர்களுக்கு நன்றிகள்.



Saturday, August 29, 2009

V.I.P யின் பார்வையில் QUICK GUN முருகன்




படத்தின் மேல் கிளிக் செய்யவும்
கடைசிக் கட்டத்தில் தமிழ் இலக்கணம் பற்றிய ஒரு காட்சியும் இருக்கிறது. கண்டிப்பாக காணொளியின் 3.14க்குப்பின் பார்க்கவும்.

இதற்கு முன் வந்த QUICK GUN முருகன் காட்சியையும் பார்த்து விடுங்கள்



எனது விமர்சனம் விரைவில் போட்டுவிடுகிறேன்.

Friday, August 28, 2009

மு.க. நகைச்சுவையாய் சொன்னது இன்று நடந்தே விட்டது

ஜூன் 25ம் நாள்..,


நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்


என்று நினைக்கிறேன்.

இருந்தாலும்

அன்று சிரித்த சம்பவம்

இன்று நடந்துவிட்டது

மேலும் படிக்க இந்த சுட்டியை தட்டுங்கள்

Monday, August 24, 2009

நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் 24.8.09

அடுத்த ஆண்டின் துவக்கம். முதல் வேளையாக கல்லூரி பேரவைக்கு பிரதிநிதி தேர்ந்தெடுக்கும் வேலை ஆரம்பம் ஆனது. அந்தப் பிரதி நிதியே வகுப்பின் தலைவனாகவும் இருப்பான். டேஞ்சர் டயபாலிக் விருப்பம் இல்லாமல் ஒதுங்கிக் கொண்டான்.

ஜில்லட்டின் குமார் ஏற்கன்வே குரூப் ஸ்டடி என்ற பெயரில் ஒரு கூட்டத்தைச் சேர்த்து வைத்திருந்தான். அவனது கூட்டத்தினர் அவன் சொல்வதை பெரும்பாலும் தலையாட்டிக் கொண்டிருந்த காரணத்தால் அவன்தான் இந்த ஆண்டின்ப் பிரதிநிதி என்பதாகவே எல்லோரும் நினைத்திருந்தார்கள்.

ஆனால் நடந்ததோ வேறு

பெண்ணுரிமை, பெண் விடுதலை என்று பேசி பேசி இருந்ததால் அவன் அணி சார்பாக ஒரு பெண்ணைத்தான் நிறுத்த வேண்டும் என்பதில் அந்தப் பெண்கள் மிகவும் உறுதியாக இருந்தனர் . ஜில்லட் ங்ஏ என்று விழித்துக் கொண்டிருந்தான். பெண்களில் வலிமை வாய்ந்தவளும் எதற்கும் அஞ்சாதவளும் எல்லோரிடமும் தைரியமாக நிற்கக் கூடியவளுமான சுமித்ராவே தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவள் என்பதாக அந்தக் குழுமம் முடிவு செய்திருந்தது. வழக்கம் போல் அந்தக் கூட்டத்திற்கும் குழுமி இருந்த அனைவருக்கும் ஜில்லட்டின்தான் குளிர்பானம் வாங்கிக் கொடுத்தான்.

அன்று மாலை அந்த வகுப்பு மாணவர்களின் பொதுக்குழு கூடியது. தேர்தல் பொறுப்பாளராக டேஞ்சர் டயபாலிக்தான் இருந்தான். வகுப்பினில் ஜில்லட்டின் நிற்பான் என்ற எண்ணம் இருந்ததால் ஆண்கள் யாரும் தேர்தலில் நிற்கவில்லை. ஜில்லட்டின் எழுந்து சுமித்ராவின் பெயரை முன் மொழிந்த உடன் ஆண்கள் பலர் சற்று அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவர்களால் ஒரு பெண்மணியை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. புதிதாக தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுக்கும் அவகாசம் இல்லாத நிலையில் குழப்பாகவே நின்றிருந்தனர்.

ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் படலாம் என்ற சூழலில்

சுமன் எழுந்தான். ரங்கீலா தத்தா வின் பெயரை முன் மொழிந்தான். ரங்கீலா பெயரைப் போலவே வண்ணமயமானவள். மாணவர் மனதில் இடம் பிடித்தவள். ரங்கீலா சுமன் பேசியே நாங்கள் பார்த்ததில்லை. தேர்வு மும்மரத்தில் எந்த எந்த கூட்டணி எப்படி இடம் மாறியது என்றே தெரியவில்லை. சைக்கிள் சின்னம் என்.டி.ஆரை விட்டு பிரிந்ததைக் கேட்டதைவிட மக்கள் அதிகமான அதிர்ச்சியை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

வேறு யாராவது நிற்பதற்கு விரும்புகிறீர்களா என்று கேட்ட போது இங்கிலீஷ் குப்பன், டயபாலிக் போன்றவர்கள் பெயர்களையும் பலரும் முன் மொழிந்தனர். (ஜில்லட்டின் பெயரும் முன்மொழியப் பட்டது. அவன் சுமித்ராவை முன்மொழிந்த காரணத்தால் அவனும் ஒதுங்கிக் கொண்டான்.) ஆனால் அவர்கள் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டதால் இறுதிப் போட்டியாளர்களாக ரங்கீலா தத்தாவும், சுமித்ராவும் போட்டியிட்டன்ர்.

------------------------------------------------------------------------------




----------------------------------------------------------------------------------

கொக்கு ஒன்னு காத்திருக்கு

கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது



----------------------------------------------------------------------------------

வடக்கும் தெற்கும் மோதிக் கொண்டதில் அதிபயங்கர திருப்பங்கள் நிகழ்ந்தன.
முதலில் சுமித்ரா நிற்பாள் என்பதே யாரும் எதிர்பாராத ஒன்று. ஜில்லட்டின் குமாரின் வகையறாவில் இல்லாத ஒருத்தி அவர்கள் சார்பாக நிறுத்தப் பட்டிருக்கிறாள். அடுத்ததாக சுமித்ராவில் முன்னாள் சைக்கிள் சாரதியான சுமனின் ஆதரவோடு ரங்கீலா தத்தா நிற்கிறார்கள்.

மூத்த மாணவர்கள் மத்தியில் ஒரு பத்திரிக்கையாளர் கம் அரசியல்வாதியின் தோற்றத்தில் சுமன்குமார் சித்தரிக்கப் பட்டிருந்தான். கிங் மேக்கர், குயின் மேக்கர் என்றெல்லாம் புகழப் பெற்றான்.

சுமித்ராவின் பதவியை முடிக்க வந்த கோடரிக் காம்பாக சுமன் சித்தரிக்கப் பட்டான். ரங்கீலாவிற்காக மாணவர்கள் மத்தியில் அவன் தான் ஓட்டுச் சேகரித்துக் கொண்டிருந்தான். அவனோடு சேர்ந்து வட நாட்டுப் பெண்களும், உள்ளூர் சேட்டுப் பெண்களும் மாணவர்களைத் தேடித்தேடிச் சென்று அளவளாவியதில் மாணவர்கள் தத்தாவிற்கே ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்பது போல தோன்றியது.

ஏற்கனவே இங்கிலீஷ் குப்பன் - சுமித்ரா உரசலில் அவளது சரமாரியான தமிழ் சொற்பொழிவுக்கு உள்ளூர் பாஷையில் பொருள் கொண்ட மக்கள் கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தனர்.

ரங்கீலா மற்றும் தோழிகள் எந்த அலட்டலும் இல்லாமல் கொஞ்சும் தமிழும், குழைந்த குரலுமாய் ஓட்டுக் கேட்க மாணவர்களின் ஓட்டுக்களை அப்படியே அள்ளும் நிலையில் இருந்தாள்.

தேர்தலுக்கு முதல்நாள் காலை:-

தமிழ் மகளின் பிரச்சார பாணியே மாறியது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஊர் மற்றும் பக்கத்து ஊர் மாணவர்களை அனுகினர். மொழிஆர்வத்தையும் மண் பாசத்தையும் உணர்த்தும்விதம் சொற்பொழிவாற்ற ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு வார்டிலும் சராசரியாக ஐந்து மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் நோயாளிகளைப் பரிசோதனை செய்வார்கள். அந்த ஒரு நோயாளியைப் பற்றி உதவிப் பேராசியர்களிடம் கல்ந்துரையாடல் செய்வார்கள். என்வே தினசரி வகுப்புகளுக்கும் அடுத்தடுத்த நாட்களில் எஸ்கேப் ஆவதற்கும் சகமாணவியரின் உதவி தேவை என்பதால் அவர்களின் பிரச்சாரம் வேலை செய்தது.

(சுமத்ராவும், சுமனும் அடுத்தடுத்த பெயர் என்பதால் அவர்கள் ஒரே வார்டில் ஒரே யூனிட்டில் இடம் பெற்றிருந்தனர் ) பொதுவாக கடைசி ஆண்டுவரை இதே நிலைதான் நீடிக்கும்.

மற்றும் வடக்கத்தி மாணவர்களை யாருக்கும் பிடிக்காது என்பதால் அவர்களை எதிர்த்தும் பிரச்சாரம் செய்யப் பட்டது. காலை முதல் மாலை வரை நடந்த பிரச்சாரத்தில் நன்கு பலன் இருந்தது.

தேர்தல் நடந்தது. கடும்போட்டியில் சுமித்ரா வென்றாள்.

சில நாட்களில் பேரவை பதவியேற்பு நடந்தது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பிரதிநிதியாக சுமித்ராவை அழைத்தனர். முக்காடு போட்டுக் கொண்டு சென்றாள். நடந்தாள், நடந்தாள்......, நடந்தாள்......., அவளது சக தோழியர் பாஷா..., பாஷா.., என்ற குரலை அதே தோணியில் எழுப்பிக் கொண்டிருந்தனர். இதே போன்ற சம்பவம் மாணிக ஃபாத்திமாவின் துப்பட்டா பகுதியிலும் இருந்தது என்பதை தெரியாதவர்கள் இந்த சுட்டியை த்ட்டிப் பாருங்கள்

அவள் அணிந்திருந்த துப்பட்டா .., அதே வண்ணம், அதே வடிவம், அதே வேலைப்பாடுகள், மொத்தத்தில் அன்று வந்த அதே துப்பட்டா.

எப்படி?

குப்பன் பக்கம் பார்வையைத் திருப்பிய போது அவன் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் தென்படவில்லை. அவன் மட்டுமல்ல அவனோடு சேர்ந்த யாரின் முகத்திலுமே எந்தவித உணர்ச்சியும் தென்படவில்லை

தொடரும்...,

----------------------------------------------------------
கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட

இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல

பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு

பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி,

தொடரும்..,

Sunday, August 23, 2009

கந்தசாமி கலெக்சன்ஸ்..,

நாட்டு மக்களுக்கு ஒரு நன்மை செய்யும் விதமாக இந்தப் பதிவினை வழங்குவதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்

கந்தசாமி படத்தினை முதல்நாளே பார்த்து விமர்சனம் எழுதிய ரசிகக் கண்மணிகளின் விமர்சனங்களை ஒருங்கே இங்கே கொடுத்துள்ளேன்.
உங்களுக்கு விருப்பமான விமர்சனங்களுக்கு நீங்கள் இங்கிருந்தே போய் கொள்ளலாம்.

இதில் விடுபட்ட விமர்சங்களை நீங்கள் தெரிவித்தால் அவையும் சேர்த்துக் கொள்ளப் படும்

1.கந்தசாமி-காப்பாற்ற வந்த சாமி. SShathiesh

2.கந்த(ல்)சாமி! அதிஷா

3.
கந்த கந்த கந்த கந்தல்சாமி சரவணகுமரன்

4.
நொந்தசாமி! யுவகிருஷ்ணா

5.
நொந்த சாமி. முருகானந்தம்

6.
எந்திரனும் உன்னைப் போல் ஒருவனும் மகேஷ்

7.கந்தசாமி சங்கர் தியாகராஜன்

8.கந்தசாமி - திரைவிமர்சணம் குகன்

9.எந்திரன் மற்றும் கந்தசாமி விமர்சனங்கள்

10.‘கந்தசாமி’க்கு ரஜினி பாராட்டு!

11. கந்தசாமி- நொந்து maggi noodlesaa போயிட்டேன் சாமி! Thamizhmaangani

12.கந்தசாமி – பந்தாசாமி அக்னி பார்வை

13. "கந்தசாமி" - கஷ்டம்டா... சாமி! சக்திவேல்

14.
ஹவ் இஸ் கந்தசாமி? பொழுதுபோக்குக்கு உத்தரவாதம்!

15. விக்ரமும் இடுப்பும் - கந்தசாமி

16.கந்தசாமி - திரை விமர்சனம்

17.கந்தசாமி : விமர்சனம்

18.சென்னை தியேட்டர்களில் “கந்தசாமி” படம் வசூல் சாதனை

19.கந்தசாமி - திரைவிமர்சனம் Cable Sankar

20. கந்தசாமி - விமர்சனம்

21.விக்ரம் அவர்களே ... கேப் விட்டு நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது..... நாய்குட்டி

22.கந்தசாமி-விமர்சனம் பரிசல்காரன்

23.கந்தசாமி - விமர்சனம். ஜெட்லி

24.கந்தசாமி - முதற்காட்சி பார்த்தவனின் எண்ணம்... 25கந்தல்சாமி! அகம் - புறம் - அந்தப்புரம்

26.கந்தசாமி விமர்சனம் - என் பார்வையில்!!! கவித்தோழன்

27.கந்தசாமி - வந்த கதை, போன கதை pappu

28.கந்தசாமி - திரை விமர்சனம்..!!! கார்த்திகைப் பாண்டியன்

29. கொக்...கொக்...கொக்....கொக்...கொக்கரக்கோ நான் ஆதவன்

30.கந்தசாமி - ஷங்கர் ஃபார்முலா?? ஸ்ரீமதி

31.கந்தசாமி - சூப்பர் ஷீரோ வந்தியத்தேவன்


http://www.tamilmanam.net/other_images/394891.png

சுழி, சுண்டல் 23.8.09

ஞாபகம் இருக்கிறதா.,

விடுமுறைதினம்

கோவில் வாசல்

சுண்டல் மணம்

பார்த்ததும் பரிமாறியதும்

நம் மனங்கள் அல்லவா..,

கடவுள்

இருந்தாலும் இல்லாவிட்டாலும்

கட்டிடம் இருக்கிறது

காட்சி

கருத்தில் இருக்கிறது

நாட்கள் ஓடினாலும்

நாம் மாறினாலும்

இன்றும்

அதே

கல்லூரி

விடுமுறை

கோவில்

சுண்டல்

மணம்

மனங்கள்

மாற்றங்கள்

தோற்றங்கள்

தோற்காமல்

ஓடுவது நாட்கள்

சுற்றுவது

சுற்றிக் கொண்டே..,

Saturday, August 22, 2009

எந்திரன் விமர்சனம்.

1. ஏற்கனவே மலைக்கள்ளன், குரு, சிவாஜி என்ற பல பெயர்களில் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி,ரஜினி, கமல் போன்ற பலரும் நடித்த கதை,திரைக்கதை, வசனம்.

2.ஏற்கனவே ஆங்கில்ம், இந்தி, தெலுங்கு கொஞ்சம் மலையாளம் போன்ற மொழிகளில் வந்த பிண்ணனி மற்றும் முண்ணனி இசைக் குவியல்

3.வில்லன் மாதிரியான் கதாநாயகி, பல இடங்களில் அவரால்தான் ஹீரோவுக்கு பிரச்சனை

4.துவக்கக் காட்சி அப்படியே ஆங்கிலத்தில், இந்தியில், பழைய ரஜினி படத்தில் வந்த காட்சி, அடுத்த அடுத்த காட்சிகளும் அப்படியே

5. தேவையில்லாத நகைச்சுவை நடிகப் பட்டாளம்

6. நல்ல நடிகர், மிஷின் மாதிரி உழைத்திருக்கிறார்.

7. 20 ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப் பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள்

8.போலீஸுக்கு தெரியும் ஆனால் பிடிக்க மறுக்கும் காரணங்கள்தான் தெரியவில்லை.

9.மாறு வேடத்தில் இருப்பவர்க்கு எதற்கு இன்னொரு மாறுவேடம் என்றுதான் தெரியவில்லை

10. விஜய், அஜித் படங்கள் ஓடுவதுபோல் இதுவும் ஓடும்

பின்குறிப்பு:- கந்தசாமி வெளிவருவதற்கு முதல்நாள் இந்த விமர்சனத்தைப் போட வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனக்குத் தெரியாமலேயே படம் வெளிவந்துவிட்டது என்பதை பதிவுகளின் மூலம் உணர முடிந்ததால் அதனால் இந்த விமர்சனத்தையே எந்திரன் படத்துக்கும் வைத்துக் கொள்ளுமாறு முன் கூட்டியே ரசிகர்களை கேட்டுக் கொள்க்கிறேன்.

டிஸ்கி:- மீள்பதிவு, எந்திரன் விமர்சனத்தை முதலிலேயே போட வேண்டும் என்ற தனியாத தாகத்தில் போட்டது

Thursday, August 20, 2009

வலிமையான ஆறு வலைப்பதிவுகள்

வலிமை வாய்ந்த பெண்கள் பற்றிய பட்டியல் வெளியிடப் பட்டு பலரும் பார்த்தும் படித்தும் இருப்பீர்கள். கண்டிப்பாக யாராவது வலிமைவாய்ந்த ஆண்கள் பற்றியும் பட்டியல் இட்டு இருப்பார்கள்.

அவர்களுக்குப் போட்டியாக இல்லாவிட்டாலும் அவர்களை காப்பியடித்து நாமும் ஒரு வலிமைப் பட்டியலைத் தயாரித்துப் பார்த்தோம். அது வலிமையான வலைப்பதிவுகள்... இதில் உணர்வுகளைத்தூண்டக்கூடிய கவர்ச்சிப் பெண்களைப் பற்றிய வலை விஷ்யங்களை ஒதுக்குவிட்டுப் பார்த்தால் நமக்குக் கிடைப்பவை.


6.இல்க்கியம், கவிதை: தமிழ் இலக்கியங்கள் குறிப்பாக பொன்னியின் செல்வன் பற்றிய பதிவுகள் ஹிட்ஸ்களை கூட்டச் செய்யும்

5.18+ மென்மையான கெட்டவார்த்தைகள், அல்லது 18+, சில நேரங்களில் 8+ என்று தலைப்பு வைப்பது கூட ஹிட்ஸ்களின் எண்ணிக்கையை கூட்டச் செய்யும்

4.சக பதிவர்களை திட்டுவது: பொதுவாக சண்டையை வேடிக்கை பார்ப்பது எல்லோருக்குமே பிடித்த பொழுதுபோக்கு அல்லவா..

3.ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் என்று தலைப்பு மட்டும் வைத்திவிட்டு உள்ளே ஒன்றுமே எழுதாமல் இருந்தால் கூட ஹிட்டுகளைக் குவிக்கும் திறமை இந்தப் பெயருக்கு உண்டு.

2.இரண்டாம் இடம்: தமிழ்மணம் , பொதுவாகவே திரட்டிகளைப் பற்றிப் பதிவு போட்டாலே கொஞ்சம் ஹிட் கூடத்தான் செய்யும் அதிலும் தமிழ்மணம் பற்றி பதிவு போட்டால் ஹிட்ஸ் எண்ணிக்கை ஏற்முகம்தான். ஆனாலும் தமிழ் மணத்தைவிட ஹிட்ஸ்களை குவிக்கும் இன்னொரு நபரும் இருக்கத்தான் செய்கிறார்.

1.முதல் இடம்: தமிழ் பதிவுகளில் என்றுமே சாம் ஆண்டர்சன் தான் முதலிட மனிதர். அவரைப் பற்றிப் பதிவு போட்டுப் பாருங்கள். ஹிட்ஸ்களின் எண்ணிக்கை ஏதோ பலான தளத்திற்கு வருவதுபோல வரும். அந்த அளவிற்கு ஹிட்ஸ்களைக் குவிக்கும் வலிமைவாய்ந்தவர். பதிவுகளின் நாயகன் அவர்தான்.

==================================================================
இந்த இடுகையின் முதல் பதிப்பின் போது சாம்மிடம் இருந்த முதல் இடம் இன்று வேறொருவருக்கு மாறிவிட்டது. இருந்தாலும் மீள்பதிப்பு என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்..,

சுதேசி மாணவர்கள், விஜயதசமி, 20.8.09

தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் வந்தபின் மாணவர் போட்டி போட்டுக் கொண்டு படிக்க ஆரம்பித்தனர். கட்டிலலில், மெத்தை வடிவத்திற்கு பரப்பி வைக்கப் பட்டிருந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களால் வெளியிடப் பட்டிருக்கும் புத்தகங்களை சில மாணவர்கள் உருப் போட்டுக் கொண்டிருந்தனர். சுதேசி இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்திய ஆசிரியர்கள் எழுதிய தலையணை வடிவ புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் வகுப்புகளில் எடுக்கப் படும் பாடங்களின் குறிப்புகளை கொண்டு தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

குப்பன் குரூப்ஸ் மாணவர்கள் தாங்கள் வாங்கிய பாடப்புத்தகங்களை முதன்முதலாக எடுத்து வைத்து சாமி கும்பிட்டுவிட்டு படிக்க ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு விஜய தசமி அன்று பாடப்புத்தகங்களை படிக்க ஆரம்பித்தால் சுலபமாகத் தேர்ச்சி பெற முடியும் என்ற ஒரு செண்டிமெண்ட் உருவாக இந்தத் தேர்வு முன் உதாரணமாக அமைந்தது. ஆண்டு முழுவதும் பாடம் நடக்கும் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடக்கும். குப்பன் குரூப்ஸ் புத்தகம் எடுப்பது விஜய தசமியன்று. இடைப்பட்ட கால கட்டத்தை நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

குப்பன் குரூப்ஸில் முட்டை தோசை இருந்ததாலும் அவனது வகுப்புக் குறிப்புகள் அவனது கூட்டத்தாருக்கு எளிதில் புரியும் வண்ணம் அமைந்திருந்ததாலும் அவர்கள் புததகங்களை தொடமாலேயே காலந்தள்ளி வந்தனர். முட்டைத் தோசையின் குறிப்புகளை பெண்கள் கேட்ட போது நடந்த நிகழ்வுகள் இங்கே....,

புதிதாக வாங்கி ஃப்ளூரசண்ட் மார்க்கர் பேனாவையும், படித்த பக்கங்களுக்கும் படிக்காத பக்கங்களுக்கும் இடையே வைக்கும் சிறிய அளவுகோலையும் புதிதாக வாங்கிக் கொண்டு மாணவர்கள் இரவு பகலாகப் படிக்க ஆரம்ப்பித்திருந்தனர். தூக்கம் வரும்போது அந்தப் புத்தகங்களையே தலையணையாக உபயோகப் படுத்திக் கொள்ளும் வசதி இருந்தாலும், அதிக உயரம் காரணமாக கழுத்து வலி வரும் வாய்ப்பு இருந்ததால் அதைத் தவிர்த்து பல நேரங்களில் கைகளையே உபயோகப் படுத்தி உணவு உறக்கம் எல்லாவற்றிலும் கட்டுடைப்பு செய்து படிக்க ஆரம்பித்திருந்தனர்.

இதே நேரத்தில் கல்லூரியின் உள்ளே ஜில்லட்டின் குமாரும் கூட்டுப் படிப்பில் ஈடுபட்டுவந்தான். கல்லூரி நூலகத்தின் அருகே இருந்த ஆலமரத்தின் ஒரு பகுதியில் அவன் குழுமம் குழுமி இருந்தது. பெரிய ஆலமரத்தில் சிமிண்ட் பென்ஞ்சுகள் போடப் பட்டு மாணவர்களுக்கு வசதி செய்து கொடுக்கப் பட்டு இருந்தது, ஆலம் விழுதுகள் நிறைய தொங்குக் கொண்டிருந்தன. அதில் மாணவர்கள் அவர்களுக்குச் சொந்தமான ஃபோல்டிங் சேர்களைக் கொண்டுவந்து சிக்கவைத்து ஆடிக்கொண்டே இருக்கும் வகையில் வசதி செய்திருந்தனர். வருடத்தின் பெரும்பாலான நாட்களில் கடலைக்கும், கடலை போடுபவர்களைப் பார்த்து ஏக்கப் புகை விடுவதற்கும் பயன்பட்ட இடம் ஜில்லட்குமாரின் தயவில் அது க்ரூப் ஸ்டடி செய்யும் இடமாக அமைந்திருந்தது. இவர்கள் படிப்பதைப் பார்த்துவிட்டு மற்ற மாணவர்கள் தங்கள் இளைப்பாற்றுதல் வ்கையறாக்களை வேறு இடங்களுக்கு மாற்றி இருந்தனர்.

படித்துக் கொண்டிருக்கும் போதே ஜில்லட்டின் குமார் , தனது நட்புவட்டத்தை பெருதாக்கிக் கொண்டே இருந்தான். அப்படியே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் டேஞ்சர் டயபாலிக் பற்றியும் குப்பன் குரூப்ஸ் பற்றியும் தனக்குத் தெரிந்த கருத்துக்களை, உருவாக்கிய கருத்துக்களை தனக்கே உரித்தான் பாணியில் சொல்லிக் கொண்டுவந்தான். பெண்களிடம் அப்போதைய சூழலில் நட்பு ரீதியில் பேசும் வல்லமை படைத்தவனாக ஜில்லட் குமார் மட்டுமே இருந்த காரணத்தால் அவன் சொல்வதை அந்தக் குழுவில் இருப்பவர்கள் நம்ப ஆரம்பித்திருந்தனர். அவனது குழுவில் மேலும் சில் ஆண்களும் பெண்களும் சேர ஆரம்பித்திருந்தனர்.

அடுத்த கட்டம் விரைவில் வெளிவரும்.,

முந்தைய பகுதிகளுக்கு இந்தச் சுட்டியைப் பயன் படுத்தவும்.


அப்படியே இந்தப் பாடலையும் பார்த்து கேட்டு ரசியுங்கள்

Monday, August 17, 2009

எனது இன்னொரு பக்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

இந்த வார ஆனந்த விகடன் வரவேற்பரையில் http://ruraldoctors.blogspot.com/ வலைப்பூவிற்கு இடமளித்துள்ளனர்.

அந்தப் பூவில் இடம் பெற்றுள்ள கீரைகள் பற்றிய பதிவு பற்றியும் முகப் பரு பற்றிய பதிவு பற்றியும் பேய்பிடித்தல் பற்றிய சிறுகதை பற்றியும் எழுதி அவர்களது வாசகர்களுக்கு வரவேற்பறையில் அறிமுகப் படுத்தி உள்ளனர்.

ஆதலால் ஆனந்த விகடனுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

கனவுகளே என்று இந்த வலைப்பூவை நான் அழைத்தால் கனவுகளைக் கூப்பிடாத மற்ற நேரங்களில் நான் இருக்கும் இடம் பற்றிய ஒரு வலைப்பூதான்

http://ruraldoctors.blogspot.com/

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்



..... Patients, Problems, Routine Practices, Stories, Gossips, Camps, Campaigns, Outbreaks, Innovations and what not !!! ..... பிணிகளும், பிரச்சனைகளும், பழக்கவழக்கங்களும், கதைகளும், முகாம்களும், திட்டங்களும்,

Sunday, August 16, 2009

வில்லனாக ராஜராஜ சோழர் தோன்றும் திரைப்படம் 16.8.09

ராஜ ராஜ சோழன் கதைகளையும் இடுகைகளையும் படித்து வந்திருக்கிறோம். சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது.

இளவரசன் ராஜராஜ சோழன் அடிமை நாடாக இருக்கும் பாண்டிய நாட்டில் பல அக்கிரமங்கள் செய்கிறார். ( அக்கிரமங்கள் என்றால் எல்லாம்தான்)

அந்த சூழலில் சாளுக்கிய இளவரசி மதுரைக்கு வருகிறார். அவரை வரவேற்பதற்காக வெடிகளுடன் கூடிய வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் படுகிறது. வழக்கம்போல் வெடிகள் வெடித்த உடன் இளவரசி அமர்ந்திருக்கும் யானை மிரண்டு ஓடுகிறது.

அப்போது புலவர் பைந்தமிழ்குமரன் யானைமேல் ஏறி யானையை கட்டுப் படுத்தி சாளுக்கிய இளவரசியைக் காப்பாற்றுகிறார்.

ஏற்கனவே புலவரின் புரட்சிகரப் பாடல்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கும் சாளுக்கியப் பைங்கிளி புலவரை அரசவையில் கவுரவிக்க எண்ணுகிறார். அப்போதைய டம்மி பாண்டிய அரச்வைக்கு அவர் வரவழைக்கப் படுகிறார்.

அங்கு பாண்டியர்களை தூற்றி சோழர்களுக்குப் பட்டங்கள் வழங்கப் படுகின்றன. பாண்டியர்களைத் தூற்றுப் போதெல்லாம் புலவர் பைந்தமிழ் குமரனும் அவரது மாணவனும் கொதித்துக் கொண்டிருக்கின்றனர்.

புலவருக்கு கவுரம் அளிப்பதற்காக மாலை அணிவிக்க இளவரசர் ராஜராஜர் வருகிறார். மாலை அணிவிக்கும்போது சற்று குத்தலாக பேசி அவரைப் பாடச் சொல்கிறார். பாடலுக்கு பிறகு மாலை அணிவிக்கப் போவதாகச் சொல்லிவிடுகிறார்.

தனதுபாடல் ஏழை மக்களுக்கானது என்றும் அதில் சோகச்சுவைத்தான் மேலோங்கி நிற்கும் என்று கூறி புலவர் பைந்தமிழ் குமரன் மறுக்கிறார். சொற்சுவை, பொருட்சுவை நிறம்பிய தமிழ்ப்பா எந்தச் சுவையில் இருந்தாலும் ரசித்து இன்புற முடியும் என்று விருந்தினர்களான சாளுக்கிய அரசரும் இள்வரசியும் சொல்ல தனது பாணியிலான பாடலைப் பாட அவர் ஒத்துக் கொண்டு பாடல் படுகிறார்.

அவர் பாடும் திரைப்பாடல்:-

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்


ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்

புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே

நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்

வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா

தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ?

தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ?
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ


வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா


இந்தப் பாடல் பாடப் படும்போது இளவரசர் ராஜராஜரும் அரசப் பிரதிநிதி ஜயங்கொண்ட மாறவர்மரும் மேலும் மேலும் கோபப் படுகிறார்கள். இருந்தாலும் சாளுக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் என்பதால் முழுப் பாடலையும் அனுமதிக்கின்றனர்.

பாடல் முடிவடைந்ததும் பாடலை மெச்சி சாளுக்கிய இளவரசியே புலவருக்கு மாலை அணிவிக்கப் போகிறார். புலவர் அதைக் கையில் பெற்றுக் கொள்கிறார்.

இந்தப் படத்தின் மூலக் கதையைப் படித்த பின் படத்தின் முழு விமர்சனத்தையும் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

Thursday, August 13, 2009

அனுஷ்கா அயல்நாட்டுடன் ஓர் ஒப்பீடு

இது வெளிநாட்டுக்கார பெண்மணி ஆடும் நடனம். அவரும் தாவணி போன்ற உடைகளை வீசியும் குட்டிக் கரணம் அடித்தும் பல விதமான மத்தளங்களுக்கு நடுவில் ஆடுகிறார்.

இது நம்ம ஊர் மொபைள் தேவதை ஜக்கம்மா ஆடும் ஆட்டம்

Monday, August 10, 2009

நன்றி உரையாடல் சிறுகதைப் போட்டி

உரையாடல் போட்டியில் கலந்து கொண்டது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. பொதுவாக போட்டிகளில் கலந்து கொள்ளும்போது எப்போதுமே நான் முடிவை எதிர்பார்ப்பதில்லை.

இதற்கு முன் நடந்த போட்டிகளின் போது மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து நமது பெயரைக் காப்பாற்றிக் கொண்டோம்.பொதுவாக முதல்நாளே எழுதி அனுப்பிவிடுவேன். உரையாடல் போட்டிக்கு மட்டும் எழுத சில நாட்கள் ஆகிக் கொண்டிருந்தது.

அவர்கள் கட்டுடைப்பு என்ற வார்த்தையை உபயோகப் படுத்தியதில் கொஞ்சம் திகிலடைந்து போயிருந்தேன்.

இருந்தாலும் ஏதாவது ஒரு முடிச்சு வேண்டுமே என்று தேடி க் கொண்டிருந்த போது கிடைத்த முடிச்சு தான் விலைமகளே பரவாயில்லை.

உண்மையில் கதையென்றால் முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் பல்ருக்கும் உண்டு. முடிச்சை அவிழ்க்காமலேயே ஒரு கட்டுடைப்பு செய்வோம் என்று எண்ணி அந்தக் கதையை எழுதிவிட்டேன்.

எழுதிய பிறகுதான் தெரிந்தது நாட்டின் மிகப் பெரிய ஜனநாயக சமூகப் பிரச்சனையைக் கையில் எடுத்து வந்திருக்கிறோம் எனப்து.

கொஞ்சம் மிரட்சி வந்திருந்தது. வழக்கமாக மென்மையான விஷயங்களை மட்டுமே எழுதி வரும் நமக்கு இது போன்ற ஒரு மிகப் பெரிய முடிச்சினை தாங்கும் வலிமை இருக்கிறதா என்று யோசிப்பதை விட வெளியிட்டு விடுவோம். பின்னர் என்னதான் நடக்கிறது என்பதை பார்த்துவிடலாம் என்று வெளியிட்டுவிட்டேன்.

வெளியிட்ட பிறகு புருனோ சுட்டிக் காட்டிய பிறகே அந்தக் கதை உரையாடல் பாணியிலேயே எழுதப் பட்டிருக்கிறது என்பதை கவனிக்க முடிந்தது. கொஞ்சம் முன்னதாகவே கவனித்திருந்தால் நூறு சதவிகிதம் உரையாடலிலேயே வெளியிட்டு இருக்கலாம்.

அந்தக் கதை வெளியிடப் பட்ட பிறகு ஹிட் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்து கொண்டே போனது. தவிரவும் புதிதாக பத்து பின் தொடர்பவர்கள் கிடைத்தார்கள். அதையும் விட மின்னஞ்சல் மூலமாக நட்பானவர்களும் அதிகம்.

கதையின் முடிச்சை அவிழ்க்க நினைத்தால் அது மிகப் பெரிய புத்தகமே எழுத வேண்டிய கட்டாயத்துள்ளாகும் வாய்ப்பே தெரிந்தது. தவிரவும் அது மிகப் பெரிய எழுத்தாளர்களால் மட்டுமே சாத்தியம். யார் அதை எழுதினாலும் அவர் மிகப் பெரிய எழுத்தாளர்தான்.

உண்மையில் இட ஒதுக்கீடு என்பது மன் அளவில் ஒரு மாற்றம் ஏற்படுத்திக் கொடுக்கப் பட ஒரு விஷயம்.

பிற்படுத்தப் பட்டவர்கள் இட ஒதுக்கீடு பெருவதை ஏற்றுக் கொள்பவர்களில் பலரும், தாழ்த்தப் பட்டவர்களில் இட ஒதுக்கீடு பெருபவர்களை கொஞ்சம் ஏளனமாகவே பார்க்கிறார்கள். இது பல ஆண்டுகளாகவே இருக்கிறது.
முக்கிய தேர்வுகளில் கலந்து கொள்ளும் பலரும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்து உங்களுக்கு தனி ஒதுக்கீடு இருப்பதால் சுலபமாக தேர்வாகிவிடலாம் என்று சொல்வது மிக சாதாரணமாக இருக்கிறது. உண்மையில் தமிழ்கத்தில் பிற்படுத்தப் பட்டவர், மிகப் பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் கூட இட ஒதுக்கீடு இருக்கிறது என்பதை கொஞ்சம் உணராதது போல பேசுவார்கள்


( இட ஒதுக்கீடு பற்றிய எனது கருத்துக்களை மரு.புருனோ அவ்ர்களின் பதிவின் பின்னூட்டங்களாகக் கொடுத்துள்ளேன். அதை அருள்கூர்ந்து வாசித்து விடுங்கள். ஒரே அந்தஸ்த்தில் உள்ள ஆசிரிய அல்லது அலுவலகப் பணியில் உள்ள நபர்கள் தங்களின் பெண்களின் திருமணத்தை எப்படி நடத்துகிறார்கள் என்று பாருங்கள். அப்போது அவர்களது சமுதாய அந்தஸ்து, நிலை, மற்றும் பணச்சுழற்சி செய்யும் சக்தி ஆகியவை சமுதாயத்தைப் பொறுத்தே அமைகிறது என்பது புலப் படும். இதில் புரட்சித்திருமணங்களை ஒதுக்கிவிட்டுப் பாருங்கள்)

இது போன்ற ஒரு சூழலில் நான் எடுத்த முடிச்சு சில சம்பவங்களை பதிவு செய்யவே முடிந்தது. சில கதைகளுக்கு சம்பவங்களின் தாக்கமே போதும் என்ற நிலைப்பாடுடன் அந்தக் கதை அமைந்தது. குறும்படங்கள், டாகுமெண்டரி படங்கள் போல. இதில் எல்லாம் முடிச்சுக்களை அவிழ்த்து சுபமாக முடிக்க வேண்டிய அவசியமில்லை. அவலங்களைப் பதிவு செய்தாலே போதும். எந்த அளவு மக்களுக்கு உறைக்கிறதோ அந்த அளவு படைப்பாளிக்கு வெற்றி.


நண்பர் ஒருவர் குறிப்பிட்டார் கதையின் முடிவினை தலைப்பு சொல்லிவிட்டதால் கதையின் விறுவிறுப்பு கொஞ்சம் தடைபட்டாற்போல் இருக்கிறது என்றார். உண்மையில் கதையின் தலைப்புதான் தொடக்கம். அந்தத் தொடக்கத்தில் சில் சம்பவங்கள் அதில் வரும் கதாபாத்திரங்கள் தாழ்த்தப் பட்டவரை ஏற்கத்தயாராக இல்லை. அந்த பெண்ணைக்கூட ஒருவேளை தாழ்த்தப் பட்டவாளாய் இருந்தால் ஏற்க தயாராக இல்லை. அந்தப் பெண்ணின் குணங்களைக்கூட கடுமையாக விமரிக்கும் அந்தக் கூட்டம் அந்தப் பெண்ணின் ஜாதியினைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்து விட்டு மேலும் கிளராமல் விட்டுவிடுகிறார்கள். தாழ்த்தப் பட்டவனை தவிர்க்க நினைத்து வென்று விடும் அந்தக்கூட்டத்தினை பதிவிட நினைத்து அதில் மாபெரும் வெற்றி அடைந்து விட்டதாகவே நான் கருதுகிறேன்.

அந்தப் போட்டிக்கு என்றில்லாமல் தனியனாக வலைப்பூவில் இடம் பெற்றிருந்தால் வழக்கமாகப் படிக்கும் நண்பர்கள் மட்டுமே அதைப் படித்திருப்பார்கள். பலருக்கும் கொண்டு சேர்த்ததில் உரையாடல் போட்டி அமைப்பாளர்களுக்கு நான் பெரிய அளவில் நன்றி சொல்லக் க்டமைப் பட்டிருக்கிறேன்.

வெறும் பொழுது போக்கு எழுத்தாளனாக(?) மட்டும் சக நண்பர்களின் எண்ணத்தில் இருந்தவனை கடுமையான எழுத்துக்களை எழுதவும் எனக்குத் தெரியும் என்ற எண்ணத்தை விதைத்த கதையாக அமைந்தது.

தவிரவும் பின்னூட்டத்திற்குப் பதில் சொன்னால் அந்தக் கதையின் வீரியம் குறைந்து விடுமே என்ற எண்ணத்தில் ( சரியா தவறா தெரிய்வில்லை)
பின்னூட்டங்களை அப்படியே விட்டிருந்தேன். பின்னூட்டம் அளித்து ஊக்குவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நன்றி நன்றி என்று உரக்கக்கூவிக் கொள்கிறேன்.

===========================================================

போட்டியின் முடிவு பற்றிய எனது எண்ணங்கள்

பொதுவாக போட்டியின் முடிவுகள் என்பது நடுவர்களின் முடிவுதான். அவர்களின் ரசனையின்படி எடுக்கப் படும் முடிவுதான். 250 கதைகளில் தேர்வு செய்தல் என்னும்போது முற்றிலும் ரசனை மாறுபட்ட பத்து எழுத்தாளர்கள் அனைத்து கதைகளையும் படித்து எடுத்தால் ஓரளவு அதுவும் ஓரள்வுதான் பெரும்பாலானோரை திருப்தி செய்ய முடியும். நம் எழுத்தாளர்கள் ஒரு மணிநேர நிகழ்ச்சியில் கல்ந்து கொள்ளவே பணம் நிறைய கேட்பார்கள். உண்மையில் நமக்காக நேரம் செலவிடுவதால் நாமும் கொடுக்கத்தான் வேண்டும். தானே கைக்காசு போட்டு நடத்தப் படும் அமைப்பால் அப்படி வெளி ஆட்களைப் போட்டு தேர்ந்தெடுப்பது என்பது கட்டுபடியாகாத ஒரு செயல். தவிரவும் நடத்துபவர்களுக்கு என்று ஒரு கவுரவம் தேவை அது அவர்கள் நடுவர்களாக இருந்தால் மட்டுமே கிடைக்கும். அவர்களும் பிரபல எழுத்தாளர்கள்தான்.

எனவே உரையாடல் போட்டியின் முடிவினை அனைவரும் ஏற்றுக் கொண்டு இனிமேலும் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு ஊக்கப் படுத்த வேண்டும்

Sunday, August 9, 2009

அங்க is போடு இங்க was போடு

இன்னும் சில வாரங்களில் கல்லூரியில் மாதாந்திரத் தேர்வு நடை பெற திட்டமிடப் பட்டிருந்தது. இதில் வாங்கும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் இண்டெர்னல் மதிப்பெண்கள் வழங்கப் படும் என்பதால் மாணவர்கள் மும்மரமாகப் படித்துக் கொண்டிருந்தனர்.

இந்தத் தேர்வுகளில் மதிப்பெண் வாங்குவதில் முட்டைத்தோசை கில்லாடி. நூறு மதிப்பெண்களுக்கு நடக்கும் தேர்வில் 30 தேர்ந்தெடுத்து எழுதுக அடிப்படையிலான கேள்விகள் அதில் 25க்கும் மேல் மதிப்பெண் வாங்கி விடுவான். சராசரியாக 60 எடுப்பது என்பதே பெரிய சாதனையாக அமையும் தேர்வில் இந்தப் பகுதியிலேயே அவன் 25 எடுத்து விடுவதால் அவனுக்கு படிப்ஸ் பட்டம் தன்னால் அமைந்திருந்தது. அதற்கு அவன் வகுப்புகளில் எடுக்கும் குறிப்புகள்தான் என்ற பேச்சு பரபரப்பாக இருந்தது. அதனால் மற்ற மாணவர்கள் இரண்டு வழிகளைப் பயன் படுத்தினர்.

ஒன்று முட்டைத்தோசையின் குறிப்புகளைப் படித்துச் செல்வது. அல்லது அவனது குறிப்புகளை எடுத்துச் செல்வது. ( reduced xerox மூலமாகத்தான்)

இந்த இரண்டு வழிகளில் எதாவது ஒன்றைபின் பற்றத் தொடங்கியிருந்தனர்.

இப்போது படித்துக் கொண்டிருந்த போது லிச்சா வந்தாள் அவளோடு அவள் தோழியர் சிலரும். முட்டைத் தோசையின் குறிப்புகளைக் கேட்டனர். முட்டைத்தோசை மறுத்துவிட்டான்.

எண்டா கொடுத்திருக்கலாமில்ல.., பிரதி எடுத்திட்டு திருப்பிக் கொடுத்திருவாளுகல்ல..,

ஆமா, ஆமா, திருப்பிக் கொடுக்கும்போது அங்க is போடு இங்க was போடு இங்கு ing சேர்த்த கூடாது இங்க has been போட்டு எழுதணும். அப்படி இப்படின்னு பெரிய விளக்கம் கொடுப்பாளுக. குறிப்புகளுக்கு எதுக்கு அதெல்லாம். தவிரவும் எனக்கு தெரிந்த ஆங்கிலம் அவ்வளவுதான். இவளுக அமெரிக்காவில படிச்சிருந்தா அத என்ன்கிட்ட காட்டனுமா! அதுதான் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.

போடா.., உங்கிட்ட இல்லேன்னா வேற யார்ட்டயாவது அவள் வாங்கி பிரதி எடுத்துக்குவா...

என்னமோ பண்ணிக்கட்டும், என் மூஞ்சியில முழிக்காதவரைக்கும் எனக்குக் கவலையில்லை

---------------------------------------------------------------------

பார்த்தியா, முட்டை தோசை குரூப்புக்கு எவ்வள்வு கொழுப்புன்னு, நீ போய கேட்டும் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டானுக பார்த்தியா! அவனுக ஆட்டம் தாங்க முடியல..,

ஜில்லட்டின் குமார் பெரிய அளவில் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தான். இப்போது அந்தக் குழுவில் சேர்ந்து படிப்பதற்கு இன்னும் சில மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து இருந்தனர்.

இவனுகளுக்கு இருக்குது ஆப்பு...,
முக்கியத் தீர்மானமாக முன் மொழியப் பட்டது.

==========================================================
சிலநாட்களுக்கு முன்
------------------------------------


குப்பன் மிகவும் நம்பிக்கையுடன் கூறினாலும் கல்லூரி முழுவதும் மிகப் பெரிய புயல் உள்ளுக்குள்ளேயே அடித்துக் கொண்டுதான் இருந்தது.

குப்பனின் சபதத்திற்கு ஆதரவாக அல்லது குப்பனை தூண்டி விடும் வகையில் போஸ்டர் ஒட்டிய மாணவர்கள் தம்தம் தோழியருடன் சுமித்ராவை புகார் கொடுக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன்ர்.

வழக்கமாக சண்டை போடுபவர்கள்தான் பதட்டத்துடன் இருப்பார்கள். இங்கு சாட்சி என்று அழைக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுபவர்கள் பதட்டத்துடன் சுற்றிக் கொண்டிருந்தனர். ஏதாவது எக்குத்தப்பாக நடந்து பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டால் வீட்டில் இருக்கும் நல்ல பெயர் கெட்டுப் போய் விடுமே என்ற பயத்தாலும் அதனால் வீட்டிலிருந்து கிடைக்கும் மானியம் குறைந்து போய்விடுமோ என்ற தொலை நோக்குச் சிந்தனையாலும் பெரும்பாலான மாணவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

லைலா, ரேகா போன்ற மாணவிகள் இங்கிலீஷ் குப்பனின் கொட்டத்தை அடக்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பிரச்சனையை கல்லூரி முதல்வரிடம் கொண்டு சென்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

என்ன பிரச்சனை என்று தெரியாதவர்கள் இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்

லைலா, ரேகா ஆகியோருக்கு ஜில்லட்டின் குமார் உறுதுணையாக இருந்தான்

இந்த அரிபரி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இங்கிலீஷ் குப்பன் அமைதியாக உலாவந்து கொண்டிருந்தான். சுமித்ரா விடுமுறைக்குப் போனவள் திங்கள் கிழமையும் வரவில்லை. செவ்வாய் கிழமையும் வரவில்லை. அவள் உறவினர் ஒருவர் அமைச்சராய் இருப்பதாகவும் அவர் மூலமாக இந்தப் பிரச்சனை கொண்டுச் செல்லப் படுவதாகவும் பரவலாகப் பேசிக் கொண்டிருந்தனர். எப்படி யாரைப் பிடித்துச் சமாதானம் செய்வது என்ற பேச்சே நாள் முழுவதும் இருந்தது.

சுமிதராவும் வந்தாள்... வந்தபின்..........,

தொடரும்.............................................

-----------------------------------------------------------------------------------------

முந்தைய பாகங்களுக்கு

கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட

இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல

பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

படித்துக் கொள்ளலாம்

Friday, August 7, 2009

வாழ்த்துக்கள் கேப்டன்

கேப்டனுக்கு மரியாதை

இதுவும் ஒரு பஞ்சாயத்து செய்திதான். பஞ்சாய்த்து செய்யும் ஐவர் குழுவில் நமது கேப்டனும் இடம் பிடித்து இருக்கிறார். வழக்கமாக கேப்டன் என்பது மிகவும் கவுரமான ஒரு வார்த்தையாக கருதப் பட்டுவருகிறது. ஆனால் உலக வரலாற்றிலேயே உதவிக் கேப்டனுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து கேபடனுக்கு இரண்டாம் இடம் கொடுத்து ஒரு கேப்டன் நியமிக்கப் பட்டது அனில் கும்ளேவாகத்தான் இருக்கும்.

இப்போது பேசப்போவது கேப்டன் கும்ளேக்கு கொடுக்கப் பட்டுள்ள ஒரு கவுரவத்தைப் பற்றிய செய்திதான் இது. உலக் ஊக்க மருந்து தடுப்பு மையம் மற்றும் பி.சி.சி.ஐ இடையேயான பிரச்சனையைத் தீர்க்க ஐவர் கொண்ட குழுவை ஐ.சி.சி. நியமித்துள்ளது.

இக்குழுவில் ஐ.சி.சி., ஊக்கமருந்து தடுப்பு குழு தலைவர் டிம் கெர், ஐ.சி.சி., தலைமை நிர்வாக அதிகாரி ஹரூன் லார்கட், முன்னாள் இந்திய அணி கேப்டன் அனில் கும்ளே, பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன், ஐ.சி.சி.,யின் தலைமை ஆலோசகர் ஐ.எஸ்.பிந்திரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவில் இடம் பெற்றுள்ளதற்கு கும்ளே மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

மற்ற விளையாட்டுவீரர்களுக்கு இல்லாத இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் இருக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு இந்தக் குழு தீர்வு காண முயற்சிக்கும் என்று தெரிகிறது

Wednesday, August 5, 2009

கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு

தோகமலை வலைப்பூவிலிருந்து நமது
சே.வேங்கடசுப்ரமணியன்.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையில் கண்காணிப்பாளராக பணி கரூர் மாவட்டம்
நம்மை தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறார். அவருக்கு நன்றியினைத்தெரிவித்துக் கொண்டு அவருக்காக இந்த பதிவினை இங்கே தந்திருக்கிறேன்

இந்தப் பதிவில் வர்ணம், கடமை கண்ணியம் கட்டுப் பாடு , கடவுள் பற்றியெல்லாம் எழுதியிருக்கிறேன். படிப்பதற்கு சுட்டியை அழுத்துங்கள்

அரங்கேற்றம்

அரங்கேற்றம் அப்படினா என்ன அர்த்தம் அப்படின்னு எங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுத்த படம். எந்தப்பெண்ணுமே இதற்கு மேல் கஷ்டபட முடியுமா என்று தெரியவில்லை.

நீங்க அந்தப் படம் பார்த்திருங்கீங்களா...? அப்படியென்றால் நீங்கள் ஒரு புரட்சிக்காரராகவோ சமூக சீர்த்திருத்தவாதிகவோதான் இருப்பீர்கள்.
அல்லது அவ்வாறு மாறி இருப்பீர்கள். அந்த அளவு ஒரு அழுத்தமான படம் அது.


கல்லூரி விடுதியில் ஏதோ ஒரு சேனலில் இரவு 10 மணிக்கு மேல் பார்த்தபடம்.எங்களைப் போல ஒரு சிலர் அன்றிரவு தூக்கம் வராமல் தொலைக்காட்சி அறைக்குச் சென்று படம் பார்த்துக் கொண்டிருந்தோம். நண்பர் ஒருவர் காதல் தோல்விக்கு ட்ரீட் வைத்துவிட்டு தன் கூட்டத்தோடு அங்கு வந்து வந்து சேர்ந்தார். அவர்களில் சிலருக்கு இந்தப்படத்தைப் பற்றி கேள்விப் பட்டிருப்பார்கள் போல. இந்தப் படத்தைப் பார்த்தே தீர வேண்டும் சொன்னார்கள். நாங்களும் வேறு வழி இல்லாமல் அந்தப் படத்தோம். நேரம் செல்லச்செல்ல நிலமை வேறு மாதிரி ஆனது. அந்தக் கூட்டம் அமைதியாக உட்கார ஆரம்பித்தார்கள்.

சிறிது நேரத்தில், போதை சுத்தமாக தெளிந்து விட்டது. ட்ரீட் கொடுத்த ஜந்து கூட மிரண்டு போனான். மறுநாள் கல்லூரிக்கு போனவர்கள் பேயரைந்தது போல் சென்றது தனிக்கதை...

அந்தப் படத்தில் குறீப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பல விஷயங்கள் இருக்கிறது.
அரசியல்வாதி சிபாரிசு பற்றி எச்சரித்து இருப்பார்கள்..... அங்கேதான் அரங்கேற்றமே... அப்போது ஒரு பாடல் வேறு வரும்.

மூத்தவள் நீ இருக்க.........

குடும்பத்திற்கு ஓடாக உழைக்கும் பெண்மணியாக பிரமீளா நடித்திருப்பார். உங்களுக்கு பிரமிளாவைப் பற்றி தெரியவில்லையா.., தீர்க்க சுமங்கலியில் கே. ஆர். வியுடன் இளமை துள்ள வருவாரே அவர்தான். இன்னும் நினைவுக்கு வரவில்லையென்றால் இன்னொரு செய்தியையும் சொல்லலாம். தங்க பதக்கத்தில் வரும் வற்றாத நதிகளெல்லாம் என்று துவங்கும் வசனத்தைப் பேசுவாரே அவரேதான்.


இந்தப்படம் பார்த்த பெண்களுக்கு தன்னம்பிக்கை கண்டபடி அதிகரித்திருக்கும். ஆனால் அவர்கள் அதற்கடுத்து சொந்தம் பந்தம் ந்ண்பர்கள் யாரையாவது நம்புவார்களா என்பது கேள்விக்குறி.....

அந்த அளவு தன்னம்பிக்கையை வளர்க்கும் படமாக அமைந்திருக்கும். மகள் தந்த தன்னம்பிக்கையில் அவரது தாயார் இன்னொரு குழந்தைக்கு தாயாகும் அளவிற்கு தன்னம்பிக்கையுடன் நாயகி இருப்பார்.

இதையெல்லாம் விட கமலஹாசன் வேறு தம்பியாக வருவார். அவரும் அக்காவின் தன்னம்பிக்கையைக் கொஞ்சம் சீண்டுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். சிவகுமார். முறுக்குடன் கலந்த அறும்பு மீசையுடன் வருகிறார். அவர்தான் நாயகியின் ஜோடி. நாயகியின் ஜோடி அவ்வளவுதான்; நாயகன் கிடையாது.


http://img220.imageshack.us/img220/192/scanimage0013ol.jpg

Sunday, August 2, 2009

சச்சின், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்பதிவர்களுடன் நண்பர்கள் தினவிழா

நாமும் எழுத வந்து ஏறக்குறைய ஒரு ஆண்டு ஆகிறது. இதுவரை எந்த சங்கடமும் ஏற்பட்டதில்லை. ஸ்டார்ஜனின் அந்தக் குறிப்பிட்ட பதிவுவரை. பல தொடர்பதிவுகளுக்கும், தொடர்விருதுகளுக்கும் அழைக்கப் பட்டிருக்கிறேன். உண்மையில் நமது வலைப்பூ துவக்கமே மரு.புருனோ அழைத்த இந்த தொடர்பதிவிலிருந்துதான் ஆரம்பித்தது. திரட்டிகள் பற்றி அறியும் முன்பே எழுத ஆரம்பித்தாயிற்று. பிறகு திரட்டிகள் தெரிந்து கொஞ்சம் கொஞ்சமாக பதிவிட முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

அதில் ஹிட் கவுண்டர்களைப் பார்த்த பின் இன்னும் நிறைய பதிவிடும் ஆசை வந்தது. இந்த காலகட்டத்தில் பொங்களுக்குப்பின் ஜனவர், பிப்ரவரியில் வேலைப் பளு மிகவும் அதிகரித்து விட்டதால் பதிவிடவே முடியவில்லை.சின்ன சின்னதாய் பத்து) பின்னர் மார்ச்சில் தொடங்கியபோது சக்கரை சுரேஷ்ம் எழுத ஆரம்பித்திருந்தார். அவரது அதிரடிக்கு முன் எனது பெயர் (பெயர் குழப்பத்தின் காரணமாக) கொஞ்சம் திரை மறைவிற்குச் சென்றது. அதே காலகட்டத்தில் பிந்தொடர்பவர் பட்டியல் வேறு காணாமல் போனது.

சிலமாதங்கள் கழித்து பட்டியல் கிடைத்தபின் நமது பிந்தொடர்பவர் எண்ணிக்கை கொஞ்சம் அதிகரிக்க ஆரம்பித்தது. இன்று நூறு நபர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதே போல் லட்சம் ஹிட்ஸ்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.(வருகைகள் குறைவாக இருந்தாலும் பார்வையிட்ட பக்கங்கள் லட்சத்தினை நெருங்கிக் கொண்டு இருக்கிறது) அதுவும் வலைப்பூவில் எந்தவித உருப்படியான விஷய்ம எதுவும் எழுதப் படாத சூழலில் இது மிகவும் ஆச்சரியமே. எனக்குப் பின்னால் எழுத வந்தவர்களில் சிலர் 100, 200 பின் தொடர்பவர்கள் இருந்தாலும் கூட என்னைவிட மிகச் சிறப்பாக சுவாரஸிமாக எழுதக் கூடிய பலருக்கும் முன் நான் இந்தக் குறியீடுகளை அடைவது பிரம்மிப்பாகவே இருக்கிறது. அதுவும் அலெஸ்கா வரிசையும் ஓரளவு சிறப்பாகவே இருப்பதும் ஆச்சரியமே. (அதில் யாரும் தங்கள் தொழில் நுட்ப திறமை காட்டி மாற்றம் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.) பின்னூட்டங்கள் என்றெடுத்துக் கொண்டாலும் சராசரியாக பத்து இருபதுதான் வருகின்றன. இருந்தாலும் 200+ இடுகைகளுக்கு லட்சம் என்பது கொஞ்சம் அதிகம்தான்.

ஸ்டார்ஜன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ0GgA_LJ3Up-0qBWl_Lj6rLWZZKM5M1t-bla3G4BEFgN7V09ucas1t3DAF9RzAUH16WB92guqrb0sUvHLafR3cr7vIs7KpJrEpeKWEY_2GclcUnJHCSi53VxBuMBlmMmlKqGhEPsnBL0U/s320/Award_Image%5B2%5D.jpgவிருதினைக் கொடுத்திருக்கிறார். இதை மற்றவர்களுக்கும் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். மற்ற விருதுகளுக்கும் இந்த விருதுக்கும் ஒரு மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. மற்ற விருதுகள் யார் கொடுத்தாலும் ஒரே பெயர்தான் வரும். அதனால் நம் நண்பர்களில் யார் கொடுத்தாலும் அதன் பெயர் ஒன்றுதான். ஆனால் இதில் மட்டுமே நான், எனது என்ற சொற்கள் இடம் பெறுகின்றன.

திருவள்ளுவர் கூட தனது குறளில் ஒரே இடத்தில் மட்டுமே யாம் என்றபதத்தை உபயோகப் படுத்துகிறார்

யாமெய்யாய் கண்ட வற்றில் இல்லை
வாய்மையின் நல்ல பிற

நான், எனது என்ற பதங்களை பயன்படுத்தி ஒரு விருதினைக் கொடுக்க போகிறோம் என்னும்போதே ஒரு பதட்டத்தினை ஏற்படுத்துகிறது இந்தவிருது.

அதுவும் நண்பன் விருது;
நண்பன் என்றாலே எனக்கு நினைவுக்கு வரும் பாடல் இதுதான்



இந்தப் பாடல் நண்பர்களுக்குள் இருக்கும் ஈகோ க்களை அவரவர் போக்கிலேயே காட்டும். பெரிய அளவில் தியாகம் இல்லாமல் நண்பனாக வைத்திருக்கும் வகையில் இருக்கும்.

கல்லூரி நட்பு என்பது மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்தப் பாடல் போல


இதையெல்லாம் பார்த்த பிறகு யாருக்கு இந்த விருதினை வழங்கலாம் என்று ஒரு பட்டியல் தயாரித்த போது கீழ்கண்ட மாணிக்கங்கள் நினைவுக்கு வந்தார்கள் (மாணிக்கத்தின் இன்னொரு பெயர் பாஷா என்பதை நினைவு கூறுவது எனது கடமை)


Suresh Kumar
சம்பத்
LENIN KARUNAKARAN
selvarani
sakthi
வடிவேலன் ஆர்.
Sutha
மயாதி
ஜெகநாதன்
குறை ஒன்றும் இல்லை !!!
அக்பர்
herve anita
நாஞ்சில் நாதம்
சித்து
ஒலக காமிக்ஸ் ரசிகன்
Kakkoo
ஆடிப்பாவை
ராஜ நடராஜன்
ஆ.ஞானசேகரன்
அத்திரி
Thandora
என்னை பார்க்க வராதீங்க!
அபுஅஃப்ஸர்
கீத் குமாரசாமி
Chandru
Shaggy
dhinesh
Kannan.S
shirdi.saidasan@gmail.com
சரவணகுமரன்
STARJAN
வைகரைதென்றல் (vaigaraithenral )
nellaitamil

நாங்கள்
இரவுப்பறவை
Adi ardian putra

முக்கோணம்
saravanan d
vasanth kumar
sankar ganesh
sarathy
தர்ஷன் ' in ' DSHAN2009 TAMIL NETWORK
Sukumar Swaminathan
பயங்கரவாதி டாக்டர் செவன்
திவ்யா செந்தமிழ் செல்வன்
தமிழினி
விஷ்ணு.
Rafiq Raja
Vijay
King Viswa
ஜெட்லி
பாலா
Pradeep
viswam
கடைக்குட்டி
வழிப்போக்கன்
Suresh
உலவு.காம்
Ramya
ஆளவந்தான்
Radialista / Rádio Nova Friburgo Am
Loshan ARV
Seenu
akathiyin
அனுபவம்
Chandru
சே.வேங்கடசுப்ரமணியன்.
சினிமா ரசிகன்
Barani Krishnan
புருனோ Bruno

vinu

சுந்தர்
DG
ச.இலங்கேஸ்வரன்
த.ஜீவராஜ்
நசரேயன்
கணேஷ்
வாழவந்தான்
இளைய பல்லவன்
தமிழ் தோழி
தமிழன் வேணு
தேவன் மாயம்
Jaffer
bhaskar Lakshman
kudikaran .
Coalition
jothi kannan
Madhan Reddy
கதியால்
Maddy
Ab
பிராட்வே பையன்
PRAKASH
வினோத்கெளதம்
முரளிகண்ணன்
தமிழக மருத்துவர்
தமிழ்தினா

ஆனந்தன் சச்சின் டெண்டுல்கர் 90லிருந்து கொஞ்சம் நிதானம் காட்டுவது போல 98லிருந்து கொஞ்சம் நிதானித்து வந்து இப்போது 99வது பிந்தொடர்பவராக
Mrs.Menagasathia வந்திருக்கிறார்

அவரோடு சேர்ந்து 99 பேருக்கும் இந்த விருதினைக் கொடுத்து அனைவரையும் கவுரவப் படுத்த விரும்புகிறேன்.

நூறாவது பிந்தொடர்பவராக இணைந்துள்ள

லோகுவின் பெயர் எப்படி பிந்தொடர்பவர் பட்டியலில் விடுபட்டது என்று தெரியவீல்லை. அவருக்கும் கொடுப்பதில் மிக மகிழ்ச்சிMy Photo

இவர்கள் இல்லாமல் இன்னும் சிலபேர் அனானியாக தங்களை வெளிப் படுத்த விரும்பாமல் பின் தொடரலாம். அவர்களுக்கும் கூட இந்த விருதினை வழ்ங்கி பெருமைப் படுத்த விரும்புகிறேன்.

சிநேகிதனே சிநேகிதனே ...

இந்த விருதினை இங்கு வந்து சேரும் அனைவரும் தங்கள் வலைப்பூவில் ஒட்டிவைத்துக் கொண்டு இந்த விருதினையும், நண்பர்கள் தினத்தையும் சிறப்புறச் செய்தால் சிறப்பாக இருக்கும்.







அதைவிட இந்தப் பாடல் நண்பர்கள் கூட்டத்தில் உபயோகப் படும்



இன்னொரு காணொளியும் இருக்கிறது. இதில் வருபவர்களும் ந்ண்பர்கள்தான்



இந்தப் காணொளிகளை ரசிக்கும் காலகட்டத்தில் தமிழீஷ், தமிழ்மண மேல் நோக்கிய விரல் ஆகியவற்றில் ஒரு கிளிக் செய்து விட்டு ஒரு பின்னூட்டமும் போட்டுவிடுங்கள்.

அனைவருக்கும் நண்பர்தினவிழா வாழ்த்துக்கள்.
இந்த விழா எடுக்க வழிவகுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனக்கு வழிஅமைத்துக்கொடுத்த ஸ்டார்ஜனுக்கும் கோடானுகோடி நன்றிகள்

நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு விருதினை கொடுத்து மகிழுங்கள்

பின்குறிப்பு:- சிலர் தனியாக வலைப்பூ தொடங்காததுபோல் அறியப் படுகிறது அவர்கள் விரைவில் ஒரு பூவினைத்தொடங்கி நமது விருதினை மாட்டிக் கொள்ளவும்

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails