Sunday, February 6, 2011

வலிமையான இந்திய கிரிக்கெட் அணி வெல்லப் போகும் உலககோப்பை

இந்த உலகக் கோப்பைப் போட்டியிலாவது இந்தியா கோப்பையை வெல்லுமா? என்ற எண்ணத்தில் பலரும் உலகக் கோப்பையை நோக்கி எதிர்பார்க்கும்போது நமக்கு நாமே திட்டத்தின்கீழ்  சில கேள்விகளை நானே கேட்டு நானே பதில் சொல்லி இருக்கிறேன். விருப்பப் படுபவர்கள் பின்னூட்டத்தில் பதில்களைச் சொல்லலாம்.
http://www.bollywoodworld.com/wp-content/uploads/2009/06/bipasha-basu-dhoni-reebok-photo.jpg


1. இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா? 

வலிமையான அணி என்று சொல்லுகிறார்கள். பெட்டிங்கில் இந்தியா அணிதான் வெல்லுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

2. அதுதான் உண்மை நிலவரமா? 

சூதாட்டக்காரர்களிடம் நேரடித் தொடர்பு இருப்பவர்கள் மூலமாகத்தான் பத்திரிக்கைச் செய்திகள் வெளிவருகின்றன.

3.இந்திய அணிவெற்றி பெறும் அளவுக்கு  வலிமையாகத்தான் இருக்கிறதா?

பேட்டிங் ஓகே தான்.

பந்து வீச்சு ..,  இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்று சொல்லுபவர்கள் கூட பந்து வீச்சில் ஆச்சரியம் நிகழும் என்றுதான் சொல்லுகிறார்களே தவிர கண்டிப்பாக சிறப்பாக இருக்கும் என்று சொல்ல மறுக்கிறார்கள்.

4.அதனால் குடியா முழுகிவிடும்?

வலிமையா பேட்டிங் மூலமாக 400 ரண்கள் எடுத்தால் எதிரணியினர் 401 சுலபமாக எடுத்து விடுவார்கள் அவ்வளவுதான்.

5. இந்தியா வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்.?

தொடக்கப் பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு போட்டியிலும் துவக்க விக்கெட்களை வீழ்த்த வேண்டும்.

6. பந்து வீச்சாளர்களால் தான் வெற்றி பெற முடியுமா?

வெற்றியை முழுமையாக்க பந்து வீச்சாளர்களால்தான் முடியும். அப்படித்தான் சரித்திரம் சொல்கிறது.

7.பேட்டிங்தான் வலிமையாக இருக்கிறதே! அதனால் சமாளித்துவிட முடியாதா?

இதற்கு முன் ஒவ்வொரு முறை உலகக் கோப்பைக்குபோன ஒவ்வொரு அணியும் வலிமையான பேட்டிங் வரிசைதான்.  இதற்கு முந்தைய உலகக்கோப்பையில் இருந்த வலிமையான இந்திய அணிகள் எல்லாம் முக்கிய ஆட்டங்களில் சச்சினுக்குப் பின்னால் வரிசையாக பின் தொடர்ந்ததுதான் நாம் கண்டது.

8. அப்படியென்றால் ஐ.சி.சி தர வரிசையில் முதல்,. இரண்டாம் இடங்களில் இருப்பது என்பதெல்லாம்........,

புள்ளிகளின் அடிப்படை என்பது வேறு, தொடர் வெற்றி பெறுவது என்பது வேறு,  முதல் இடம் அமைவதற்கு தொடர் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை.

9. உலகக் கோப்பை யை இந்தியா வெல்ல கடுமையாக விளையாட வேண்டும் அல்லவா..,

அது உண்மைதான். ஆனால் ஐ.பி.எல் மிகச்சிறப்பாக விளையாட வேண்டிய அவசியம் பல வீரர்களுக்கு இருக்கிறது.  அப்போதுதான்  நல்ல சம்பளம் பெற முடியும்.  எனவெ ஐ.பி.எல் வரை உடல் தகுதியைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.

10. உலக் கோப்பையை விட ஐ.பி.எல் முக்கியமானதா? 

 பிரிமீயர் என்றழைக்கப் படுவதுதானே முக்கியமானதாக இருக்க முடியும்

12 comments:

  1. கண்டிப்பா கோப்பை நமக்குத்தான்

    ReplyDelete
  2. முரசொலியில் வருமே அந்த மாதிரி நீங்களே கேள்வி நீங்களே பதிலா...

    ReplyDelete
  3. தானே கேள்வி கேட்டு அதற்க்கும் தானே பதில் அளித்த தானைத்தலைவன் அவர்கட்கு நன்றி.

    ReplyDelete
  4. //அதனால் குடியா முழுகிவிடும்?

    வலிமையா பேட்டிங் மூலமாக 400 ரண்கள் எடுத்தால் எதிரணியினர்401 சுலபமாக எடுத்து விடுவார்கள் அவ்வளவுதான்.//

    கொல வெறி.

    ReplyDelete
  5. //இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா?

    வலிமையான அணி என்று சொல்லுகிறார்கள். பெட்டிங்கில் இந்தியா அணிதான் வெல்லுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்//

    தல,
    டைரெக்ட் பதிலே கொடுக்கலையே?

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. அருமையான +சுருக்கமான அலசல்..
    பல இடங்களில் உண்மைகளை சுரீர் என்று சொல்லியுள்ளீர்கள்.

    இந்தியாவின் பந்துவீச்சு வறுமை தான் பிரச்சினை.

    ReplyDelete
  8. //சிநேகிதன் அக்பர் said...

    கண்டிப்பா கோப்பை நமக்குத்தான்
    //

    [co="blue"]நம்பிக்கைத்தான் எல்லாமே., அப்படின்னு சும்மாவா சொன்னாங்க[/co]

    ReplyDelete
  9. //Philosophy Prabhakaran said...

    முரசொலியில் வருமே அந்த மாதிரி நீங்களே கேள்வி நீங்களே பதிலா...
    //

    [co="orange"]ஆஹா.., கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க[/co]

    ReplyDelete
  10. //King Viswa said...

    //இந்தியா உலகக் கோப்பையை வெல்லுமா?

    வலிமையான அணி என்று சொல்லுகிறார்கள். பெட்டிங்கில் இந்தியா அணிதான் வெல்லுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்//

    தல,
    டைரெக்ட் பதிலே கொடுக்கலையே?
    //


    [co="red"]நாடகமே உலகம்.நாளை நடப்பதை யாரறிவார்?[/co]

    ReplyDelete
  11. //LOSHAN said...

    அருமையான +சுருக்கமான அலசல்..
    பல இடங்களில் உண்மைகளை சுரீர் என்று சொல்லியுள்ளீர்கள்.

    இந்தியாவின் பந்துவீச்சு வறுமை தான் பிரச்சினை.
    //

    [co="violet"]உடல்தகுதி மற்றும் தன்னம்பிக்கை பிரச்சனைகளால்தான் தல இந்த வறுமை[/co]

    கோலி, ரேனா போன்றவர்களைப் போல பந்துவீச்சாளர்கள் சிலர் தொடர்ச்சியாக சாதித்தால் வென்றுவிடலாம்

    ReplyDelete
  12. பேட்டிங்'கில் வெளுப்பார்களோ இல்லையோ..
    பெட்டிங்'கில் (சூதாட்டத்தில்) நன்றாக வெளுப்பார்கள்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails