Sunday, November 6, 2011

ஜேம்ஸ் பாண்ட், சூப்பர் ஹீரோவாக சூர்யா நடிக்கும் புத்தம் புதிய படம்

ஸ்பைடர் மேன், பேட் மேன் கதைகள் படிக்கும்போது ஒரு பிரமிப்பு ஏற்படும். அப்படியே அந்தக் காட்சிகளில் நாமும் இருப்பது போன்ற ஒரு உணர்வு. அந்தப் படங்கள் திரைப்படங்களாக வந்தபோது  லாஜிக் பற்றியெல்லாம் கவலைப் படாமல் பிரமிப்புடன் ரசித்துப் பார்த்தோம். கதாநாயகனுக்காக இல்லாமல், கதாப்பாத்திரத்துக்காக பெரிய அளவில் ரசிகர்களை சேர்த்து வைத்த கதாப்பாத்திரங்கள் அவை.  சீன்கானரி வேண்டுமானால் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தைவிட அதிகமாக ரசிகர்களைப் பெற்றிருக்கலாம். ஆனால் பிய்ர்ஸ் பிரஸ்ணனைவிட ஜேம்ஸ்பாண்ட்க்குத்தான் ரசிகர்கள் கூட்டம்  இருக்கும். தமிழில் கூட இதுமாதிரி சூப்பர் ஹீரோ படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன்.  ஆனாலும் அவை இரண்டாம்பாகம் மூன்றாம்பாகம் வந்தமாதிரியெல்லாம் இடுப்பதில்லை.

இரும்புக்கை மாயாவி கதை பார்த்திருப்பீர்கள்.  ஆய்வகத்தில் நடக்கும் ஒரு விபத்தின் காரணமாக மாயாவிக்கு அதீத சக்தி வரும். ஸ்பைடர் மேணுக்கும் அப்படித்தான். அவரின் வில்லன்களுக்கும் அப்படித்தான்.  கந்தசாமி, வேலாயுதம் போன்றவர்களுக்கு இதுபோன்ற விபத்து நடக்காவிட்டாலும் மக்களைப் பாதுகாக்க மிகுந்த சக்தி படைத்தவர்களாக இருந்தார்கள். 

அப்படிப்பட்ட ஒரு கதை இப்போது சூர்யாவிற்கு வாய்த்துள்ளது. ஆய்வக உதவியோடு அதிபயங்கர சக்திகள் அவர் உடலில் ஏற்றப்படுகின்றன. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை விஜய் ஏலத்தில் எடுத்துவிட்டதால்  இவரது படத்துக்கு சீன உளவாளிகளை பயன்படுத்துகிறார்கள்.  அவர்களின் அழிவு சக்தியை சமாளிக்க இந்திய தேசமே நடுநடுங்கிக் கொண்டிருக்கும்போது  சூர்யா தனது அதி அற்புத சக்தியைப் பயன்படுத்தி  சாரூக்கான், சடன்பிரேக் போட்டு ட்ரெயினை நிறுத்துவது போல கொடிய அழிவு ஆயுதங்களின் சக்தியை சூர்யா தடுத்து நிறுத்துகிறார்


ஹலோ ஹலோ என்ன இந்தப் படம் ஏற்கனவே வந்து விட்டதா? ஐயா அது வேற அது பல்லவ தமிழ் இளவரசன் துறவரம் போய் இந்திய தேசத்தை வெல்ல தனியாக ஒரு நாட்டு மக்களை தயார்படுத்திய கதை.  அட அதுவும் இல்லையா? பரவாயில்லை விடுங்கள். சூர்யா, ஏ.ஆர் முருகதாஸிடம் சொல்லி அதி அற்புத சக்தி வாய்ந்த சூர்யாவின் அடுத்த அடுத்த சாகஸங்களை வெளிவிடச் சொல்லுங்கள். நமக்கு ஜாலியாக இருக்கும்

3 comments:

  1. மறுபடியும் சீனாவா... ஆள விடுங்கடா சாமீ...

    ReplyDelete
  2. hii.. Nice Post

    Thanks for sharing

    More Entertainment

    For latest stills videos visit ..

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails