பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
- யாரோ ஒரு புண்ணியவான்.
காதல் திருமணம்தான் நம் வாழ்க்கைக்கு முக்கியம். 21 வயதுக்கு மேல் காதல் திருமணம் செய்து கொள்ள பெற்றோர் சம்மதம் தேவையில்லை. பிரேசில், சிங்கப்பூர், போன்ற நாடுகளில் இப்படி ஒரு சட்டம் உள்ளது என்றெல்லாம் நாட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
பதினெட்டு வயதில் பெண்கள் சட்ட ரீதியாக திருமணம் செய்து கொள்ளலாம் எனவே அவள் விரும்பிய ஆணைத் திருமணம் செய்து கொள்ளலாம். பெற்றோருக்கு அந்தப் பையனைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஏற்றுக் கொண்டேதீர வேண்டும் என்றெல்லாம் மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
சாதி ஒழிய வேண்டுமானால் காதல் திருமணமே வழி என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். தென் தமிழகத்தில் பஞ்சமர்களில் இருந்த ஒரு சாதியே தனது உழைப்பால் மிகப் பிற்படுத்தப் பட்டவர் வரிசையில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அவர்கள் காதல் திருமணத்தால் அதை சாதிக்கவில்லை. உழைப்பால்தான் அதை நடத்தினார்கள், (ஐந்து சாதிகளில் ஒன்று மி.ப. வரிசையில் சேர்ந்தாலும் இப்போது தமிழ்கத்தில் தாழ்த்தப் பட்டவர்கள் எண்ணிக்கை நூறுக்கும் பக்கம் இருக்கிறது. )
தாழ்த்தப் பட்டவர்களைத் தவிர பிறரை காதலித்தால் நகரப் புறத்தில் ஏற்றுக் கொள்ளப் படுவதாக வேறு ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
எது எப்படிப் போனாலும் காதல் திருமணம் என்பது காதலிப்பவர்களுக்கும், அவர்களைப் பெற்றவர்களுக்கும் சரி ஒரு இம்சைதான். இதை நாம் தடுத்தே ஆக வேண்டும் என்று யோசித்த போது தான். சில விஷயங்கள் தோன்றின.
1. காதலிப்பவர்கள், கோவிலிலோ , சர்ச்சிலோ, மசூதி மூலமாகவோ திருமணம் செய்து கொள்கிறார்கள். சில நேரங்களில் இதற்கு மதம் மாற வேண்டிய சூழல் இருக்கிறது.
2.மதம் மாற விருப்பம் இல்லாதவர்கள், பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணத்திற்கு பின் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம், தானே செய்து கொண்ட திருமணம் எப்படி போகிறது என்று பார்த்தால், பெரும்பாலான மக்கள் தனிக் குடித்தனம் வந்து விடுகிறார்கள்.
நகர் புறங்களில் முதியோர் இல்லத்தை நாடுகிறார்கள். கிராமப் புறங்களில் தனியாக உலை பொங்கிக் கொள்கிறார்கள்.
நகர்புறங்களிலும் சரி கிராமப் புரங்களிலும் சரி குழந்தை வளர்ப்பு என்பது கம்பிமேல் நடப்பது போலத்தான் இருக்கிறது,. என்னதான் கஷ்டப் பட்டாலும் விளைவு என்பது ஏற்கனவே நடந்தது போல பெரிசுகளை விட்டு சிரிசுகள் போய்விடுகின்றன.
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதாக வே வாழ்க்கை ஓடி விடுகிறது. இதற்கெல்லாம் என்ன வழி.
திருமணத்தை ஒழிப்பது தான்.
திருமணமே செய்யாமல் இருந்தால் ஜாதிப் பிரச்ச்னை கிடையாது. மதப் பிரச்சனை கிடையாது.
நான் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்ள சொல்ல வில்லை. எதுவுமே இல்லாமல் இருந்தால் வாழ்க்கை என்பது இன்ப மயம்தான்.
ஆசையே துன்பத்திற்குக் காரணம்
ஆசையை ஒழித்தால் துன்பம் இன்றி வாழலாம். என்ற பொன்மொழியை ஏற்று
காதலை மறுப்போம். திருமணத்தை ஒழிப்போம். மகிழ்ச்சியாக வாழ்வோம்
ஆஹா, அருமையான தீர்வு.
ReplyDelete