இந்த கதை கிபி 26ஆம் நூற்றாண்டில் நடைபெறுவதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த கதை எழுத தமிழில் நான்படித்த சில பல நாவல்கள் தூண்டுகோளாக இருந்துள்ளன. அந்த சில பல நாவலக்ளை திரைப்படம் எடுப்பதற்காக திரைக்கதை அமைப்பதற்காக மிகவும் சிரமப் படுவதாக செய்திகள் உலாவருகின்றன. கி.பி26ஆம் நூற்றாண்டில் உலகளாவிய நிலையில் அப்போதைய திரையுலகின் உபயோகப் படுத்திக் கொள்ளும் வகையில் பரம்பரை பரம்ப்ரையாக நாம் கேட்டு ரசித்த படித்த ரசித்த சிலபல கதைகளை கி.பி.26ஆம் நூற்றாண்டிற்கேற்ப எழுதியுள்ளேன். இதில் வாசகர்கள் சொல்லும் சிலமாற்றங்களையும் செய்ய நான் தயாராக இருப்பதால் வாசகரக்ளின் எண்ணங்கள் வரவேற்கப் படுகின்றன.
அரபிக்கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. தனது பறக்கும் குதிரையில் ஜேம்ஸ் வாண்டி வந்து கொண்டு இருந்தான். பறக்கும் குதிரை என்பது 25ம்நூற்றாண்டில் கண்டறியப் பட்ட ஒரு புதுமையான வாகனம். இருவர் பயணம் செய்யக்கூடிய நீர் நிலம், காற்றில் பறக்கும் வண்ணம் வடிவமைக்கப் பட்ட ஒரு வாகணம். இன்னும்கூட முழுமைப் படுத்தப் பட வேண்டும் என்று வாண்டி நினைத்துக் கொண்டே வந்தான். அவன் வரலாற்றுப் புத்தகங்களில் படித்திருக்கிறான். சில நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை அரபிக் க்டல்முழுவதும் நீரால் நிறைந்திருக்குமாம். எப்போதும் ஆர்ப்பரிக்கும் அலைகளாக ஆங்காங்கா கோவா போன்ற கடற்கரை மக்களிடம் விளையாடிக்கொண்டிருக்குமாம். 23ம்நூற்றாண்டின் மத்தியில் உலகில் உணவுப் புரட்சி ஏற்பட்ட பிறகு உலகநாடுகளின் உணவு மையமாக இந்தியா உருவெடுத்தது. உலகில் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தியாவிலிருந்துதான் உணவு அனுப்பப் படும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியா சொல்லும் வார்த்தைகளை தட்ட முடியாத நிலை இப்போது இருக்கிறதென்றால் அது அந்த உணவுப் புரட்சியையே சாரும். மக்கள் வாழும் இடங்களில் விவசாயத்திற்கு ஏற்ற பகுதிகள் எல்லாம் விவசாய பூமியாக மாற்றப் பட்டு அவர்களுக்கு குடியிருப்புக்கள் கடலில் அமைக்கப் பட்டன. இந்தியா தேசம் செய்த இந்த இயற்கை ஆக்ரமிப்புக்களை உலக நாடுகள் தட்டிக் கேட்க முடியாமல் போனது. உலக ஒற்றுமை சபைகூட இந்தியாவின் கைப் பாவையாக மாறிப் போனதாலும் உணவுக்காக இந்தியாவிடம் கைகட்டி நிற்க வேண்டிய நிலை இருந்ததாலும் இந்தியா இதை மிகச் சுலபமாக செய்து கொண்டிருந்தது.
தனது பயணம் இந்திய அரசியலில் எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கப்போகிறது என்பது ஜேம்ஸ் வாண்டி க்கு தெரிந்துதான் இருந்தது. ஆனால் அவனையும் மீறி எவ்வளவு சிக்கல்கள் வரப் போகின்றன. அதுவும் தன்னால் உருவாக்கப் படும் முடிச்சுக்கள், தான் சந்திக்கப் போகும் பிரச்சனைகள் என்பவை அவனுக்கு தெரிந்திருக்க நியாமில்லை. அவனது ஆளுநர் ப்ளாக்பூட் ராஜா அவனுக்கு கொடுத்த வேளையை நினைத்துப் பார்த்தான். அவனிடம் இரண்டு சிப் களைக் கொடுத்து அதை ப்ளாக்பூட் ராஜா தனது தந்தையிடமும், சகோதரியிடமும் கொடுக்குமாறு சொல்லியிருந்தார். ஆனால் ஒருவருக்கு கொடுப்பது இன்னொருவருக்குத் தெரியாகக்கூடாது என்பதில் கவனமாக இருக்குமாறு சொல்லி அனுப்பி இருந்தார். எப்படி சென்னை அரண்மனைக்குள் நுழைவது என்பதே ஒரு கேள்வி என்றாலும். அவரது சகோதரி பாண்டிச்சேரியில் தங்கி இருந்தார். சென்னையில் வேலைமுடித்துவிட்டு பாண்டிச்சேரி செல்வதுதான் அவனது வேளை.
மும்பை நகருக்குள் நுழையும் முன்பே அவன் சுதாரித்துக் கொண்டுதான் இருந்தான். நகரிலும் நகருக்கு வெளியேயும் மாணவர்களும் இளைஞர்களும் ட்விட்டரிலும், ஃபேஸ் புக்கிலும் தங்கள் அலைபேசி மூலமாக உலவிக் கொண்டே இருந்தார்கள். தாங்கள் பார்க்கும் நிகழ்வுகள், புதிய மனிதர்கள் ஆகியவற்றை அவர்கள் தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டே இருந்தார்கள் . உளவுத் துறைக்கு உதவிகரமாக இருந்ததால் பொது சுதந்திரம் என்ற பெயரில் அரசும் இதை ஆதரித்து வந்தது. யாராவது ஒரு இளைஞன் தன்னையோ , தனது வாகனத்தையோ அந்தத் தளங்களில் போட்டு காமெடி ஃபீஸ் ஆக்கிவிட்டால் தனது ஆளுநரின் கோபத்துக்கு ஆளாக வேண்டும் என்பதை ஜேம்ஸ் வாண்டி அறிந்தே இருந்தான். ப்ளாக்பூட் ராஜா சுவிட்ஜர்லாந்தில் கவுரவ ஆளுநராக இருந்தாலும் அவர் இந்திய மன்னரின் மூத்த மகன் ஆவார். ஐரோப்பிய நாடுகளை கண்காணிக்கவும், ப்ளாக்பூட் ராஜாவின் தாத்தா அங்கே இருந்ததாலும் அங்கே அனுப்பி இருந்தார். இதையெல்லாம் விட இன்னொரு நிகழ்வும் இருந்தது. தாய்லாந்து நாட்டுடன் ஏற்பட்ட போரில் அன்னாட்டையே அழித்து அன்னாட்டின் மன்னனின் தலையை சாலையில் எட்டி உதைத்து தனது கோபத்தைக் காட்டியவர் அவர்.
இன்று தனது தந்தை கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கைப்பாவையாக இருப்பதாக தகவல் கிடைத்ததால்தான் தனது நம்பிக்கைக்கு உரிய ஒற்றனாக ஜேம்ஸ் வாண்டியை அனுப்பி இருந்தார்.
மும்பை நகரில் நுழையும்பொதே ஜேம்ஸ் வாண்டி அவனது நண்பன் அபிஷேக் மாறன் அங்கே இருப்பதால் அவன் வீட்டிற்கு சென்று சற்று இளைப்பாறிவிட்டு செல்லலாம் என்று நினைத்தான். தவிர இந்திய அரசியல் நிலவரங்களை அவனிடம் தெரிந்து கொண்டால் தனது பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நினைத்தான்.
வழியில் இரண்டு மனிதர்கள் ரஜினி பெரியவரா, கமல் பெரியவரா என்பது பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தனர். ரஜினி, கமல் இருவரும் 20ம்நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இரு பெரும் நடிகர்கள். அவர்களின் பெயர் 5 நூற்றாண்டுகள் கழித்தும் ரசிகர்களால் பேசப் பட்டு வருகிறது என்றால் அதற்கு இவ்வாறாக சண்டை போடும் ரசிகர்களும், உணவுப் புரட்சியால் சென்னை நகரில் நடப்பவை உலகம் முழுவதும் எதிரொலிப்பதுமே காரணமாக இருந்தது.
அபிஷேக் மாறனின் அரண்மனைக்கு ரகசியமாக செல்லலாமா? அல்லது நேர் வழியிலேயே உள்ளே நுழையலாமா என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த போதே ஒரு அதி நவீன ரதம் ( தமிழின் தாக்கம் உலகம் முழுவதும் இருந்ததால் கார் என்பதை ரதம் என்றே பெரும்பாலான நாடுகளில் அழைத்து வந்தனர்). அதில் உள்ளவர்கள் யார் என்பதே வெளியே தெரியாத வகையில் வடிவமைக்கப் பட்டுந்தாலும் அதன் கதவை சற்றே திறந்து மூடிய கணநேரத்தில் உள்ளே அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்து பிரமித்து போனான். அழகு என்றால்...............
அதற்குமேல் அவனால் சிந்திக்கமுடியவில்லை. மேற்கத்திய பாணி கலந்த வட இந்திய முறையில் உடை அனிந்திருந்தார். அதாவத் முகத்தினை திரையிட்டு இருந்த அவர் உடலின் பல பாகங்களையும் வெட்டவெளிச்சமாக காட்டிக் கொண்டிருந்தார். ஒரு இந்தியப் பெண்ணின் அழகைப் பருகுவது வாண்டிக்கு அதுவே முதல் முறை. சில நிமிடங்களில் அவன் தன்னிலைக்கு வந்தவுடன் அந்த வாகனம் யாருடையது? அதில் உள்ளவர்கள் யார் என்பதையெல்லாம் தனது தகவல் தளத்திலிருந்து பெற்றுக் கொண்டான். அந்த ரதம் மாமன்னரின் பிரதம தளபதியுடையது என்றும் அதில் உள்ள பெண்மணி அவரது இளம் மனைவி என்பதையும் அறிந்து கொண்டான். மேலும் தகவல்களை விசாரிக்க எத்தனிக்கையில் அபிஷேக் மாறனின் படைவீரர்கள் அவனைக் கைது செய்து அபிஷேக் மாறனின் தந்தையிடம் அழைத்துச் சென்றனர்.
தொடரும்

இந்தக் கதைக்கு நிறைய ரசிகர்கள் இருக்கணுமே
ReplyDeleteவாழ்த்துகள் சார்
ReplyDelete//ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteவாழ்த்துகள் சார்
//
நன்றி சார்.