எனது இந்த இடுகையைப் படிக்கும்முன் முரளிக் கண்ணன் அவர்களின்
விஜய் நம்பர்- 1 ஆக முடியுமா? படித்துவிட்டு பிறகு வாருங்கள்.
விஜய் அவர்களின் லட்சியம் செயல்பாடு ஆகியவற்றை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் ஒரு உண்மையைத் தெளிவாக அறிய முடியும்.
அதற்கு முன் எம்ஜியாரின் கால கட்டங்களையும் ரஜினியின் கால கட்டங்களையும் கொஞ்சம் ஆராய்ந்தால் முரளிக்கண்ணன் சார் அவர்களின் ஒப்பீடு போல வேறுசில விஷயங்களையும் அறியலாம்.
எம்ஜியாரின் கால கட்டத்திலேயே எஸ். எஸ். ராஜேந்திரன் (தமிழ்நடிகர்களில் முதன்முதலாக ச.ம.உ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.). ஜெமினி, ஆகியோர் இருந்திருக்கிறார்கள். பின்னர் முத்துராமன், ஜெயசங்கர் ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். சிவக்குமார் ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.
பாலச்சந்தரின் படங்களில் கூட ஆரம்ப கட்டங்களில் ஜெமினி , முத்துராமன் ஆகியோரின் இளமை போதாத கதாப்பாத்திரங்களுக்குதான் ரஜினி கமல் போடப் பட்டதாக பேசப் படுவதும் உண்டு.
எம்.ஜி.யாரையும் ரஜினியையும் ஒப்பீடு செய்தோமென்றால் எம்.ஜி.யாரின் காலத்தில் நடித்த நடித்த நடிகர்களையும் ரஜினி காலத்தில் நடித்த நடிகர்களையும் ஒப்பு நோக்குதலே சரியாக அமையும். ஜெய்சங்கரையோ, ரவிச்சந்திரனையோ, ஏ.வி.எம் ராஜனையோ அடுத்த நம்பர் 1 என்று அந்த காலகட்டத்தில் பேசியிருப்பார்களா? என்பது தெரியவில்லை. சிவக்குமாருக்கு கூட அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்குமா தெரியவில்லை. (ஒருவேளை ராமன் பரசுராமன் ஓடியிருந்தால் பேசப் பட்டிருப்பாரோ என்னமோ).
விஜயகுமார், எம்.ஜி.ஆர் ரசிகராகவே கூட நடித்துப் பார்த்தால் ஒருகதாப் பாத்திரமாகக் கூட அவரை ஒருமையில் அழைக்கத்தயங்கியவர் அவர். ( இன்று போல் என்றும் வாழ்க படத்தில் எம்.ஜி.யாரோடு சண்டை போடும்போது பேசும் வசனம்தான்0
அதே போல இன்று நடிக்கும் நடிகர்களையும் எடுத்துக் கொண்டால் அந்த காலக் கட்டத்தில் இருப்பது போன்ற சூழலோடு பொருத்திப் பார்க்கமுடிகிறது. எல்லா நடிகர்களும் அடிதடி, சராசரி இளைஞர்களை கவரும்படியான கதைகளையும் படமாக்கி வருகிறார்கள். இது பழைய காலகட்டத்தில் நடித்த இரண்டாம் வரிசை நடிகர்களின்பாணிதான். எத்தனை நடிகர்கள் ரஜினி பாணியில் நடித்தாலும் ரஜினி ரசிகனாக வேஷம் போட்டாலும் அது ரஜினியின் இடத்தைப் பலப் படுத்துமேதவிர இவர்களுக்கு உதவாது.
விஜய்க்கு கூட தனது இடம் பற்றி மிகத்தெளிவான கருத்து இருப்பதாகவே தோன்றுகிறது. அதனால்தான் வில்லு படத்தைப் பற்றிய பேச்சுகளில்கூட அது ஒரு ஜேம்ஸ்பாண்டு படம் மாதிரி ஒரு தோற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
பழைய தமிழ்நடிகர்களில் ஜேம்ஸ்பாண்ட் என்றால் அது ஒருவர்தான். எத்தனை ரகசிய உளவாளி படங்களில் நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆரை யாரும் ஜேம்ஸ் பாண்ட் என்று சொல்ல மாட்டார்கள். அந்த ஜேம்ஸ் பாண்ட் அவர் ஜெயசங்கர் ஒருவர்தான். எனவே விஜய் அடுத்த ஜெயசங்கராகவே கருதப் படுவார், கருதப் படுகிறார்.
எம்.ஜி.யார்ர்க்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் முதலிடம் பிடித்தவர். அதே காலகட்டத்தில் எம்.ஜி.யார் முண்ணணியில் இருந்தார்.அவர் ஜெய சங்கர்.
அதேபோல ரஜினிக்கு அடுத்த தலைமுறை நடிகர். அவரது தலைமுறையில் அவரே முதலிடம். அவர் விஜய்.
எம்.ஜி.ஆர், ரஜினி வரிசைக்கு இன்னும் பத்து(20) ஆண்டுகள் கழித்து புதிதாக நடிக்க வருபரால் முயற்சி செய்ய முடியும். அதற்கும் திரைப் படக் கலையின் வடிவம்கூட மாறிப் போய்விடும் வாய்ப்பு கூட இருக்கிறது.
===========================================================
இது ஒரு மீள்பதிவு
===========================================================
இன்றைய அவரது பாணி எம்.ஜி.ஆர் பாணி படத்தலைப்புகளிலும், ரஜினி பாணியில் ரசிகர் மன்றங்கள் நடத்துவதிலும் செல்கிறது. இந்த இடுகை வெளிவந்த காலத்திற்குப் பிறகு படத்திற்கு பெயர்வைக்கும் போக்கும் ரசிகர் மன்றங்களை நடத்திச் செல்லும் போக்கும் பெருமளவு மாறியிருக்கிறது என்றாலும் அன்றைய சூழலை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்து ரசிக்கவே இந்த மீள் பதிவு.
இந்த இடுகையைப் படித்துத்தான் விஜய் தனது பாணியை மாற்றிக் கொண்டார் என்றெல்லாம் நான் கூறமாட்டேன் என்பதையும் இந்த இனிய த்ருணத்திலே வலையுலகத்தின் முன் வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்பதனையும் டிஸ்கியாக போட்டுக் கொள்ள இருக்கிறேன் என்பதையும் கூறிக் கொள்ள ஆசைப் படுகிறேன்
மீண்டும் மீள்பதிவு