Saturday, February 28, 2009

கட்டைவிரல் உயர்த்திப் பிடித்த கூட்டம்

வழக்கமாக இடுகை எழுதி முடித்த பின்னர்தான் தமிழ்மணக்கட்டைவிரல் பற்றீயும் அதிலும் மேல்நோக்கிய கட்டைவிரலில் க்ளிக் செய்து வாசகர் பரிந்துரையில் முதல் ஓட்டை நமக்குநாமே போட்டு எப்படியாவது முகப்பில் இடம்பிடிக்க படாதபாடு படுவோம். இந்த இடுகை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தஅந்த கட்டைவிரல் பற்றியதுதான்.


ஒருபள்ளியின் நடைபெற்ற ஆண்டுவிழாவில்தான் இந்த கருத்துக்களைக் கூறினார்கள்.

குழந்தைகளைப் படிக்கச் சொல்லிவிட்டு டி.வி. பார்க்கும் பெற்றோர்களைப் பற்றியும் நாம் பார்க்கும் காட்ட்சிகள் நம்மை எப்படி ஆளுமை செய்கின்றன என்பது பற்றியும் அருமையாகக் கூறினார்கள்.

முதல் வரிசையில் வரிசைகளில் இருப்பவர்களை மட்டும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். பின் வரிசையில் இருப்பவர்களை சாட்சியாக வைய்த்துக் கொண்டனர்.

அனைவரையும் ஆட்டிக் காட்டிவிரலை உயர்த்திக் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர். அதே நேரத்தில் இந்த அறிவிப்பு செய்தவர் தனது கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார். முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலோரும் தங்களது கட்டைவிரலையே உயர்த்திக் காட்டினர். கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆட்காட்டிவிரலை உயர்த்திக் காட்டியவர்கள் வெகு சிலரே.. செயல்முறையிலேயே
நாம் என்னதான் நினைத்தலும் எவ்வளவுதான் அறிவை வள்ர்த்து வைத்திருந்தாலும் நாம் பார்க்கும் காட்சிகள்தான் நம்மை பெருமளவு ஆளுமை செய்கின்றன.
என்பதை அழகாகக் காட்டினார்கள்...

.................................................................................................................................................

19 comments:

  1. \\செயல்முறையிலேயே நாம் என்னதான் நினைத்தலும் எவ்வளவுதான் அறிவை வள்ர்த்து வைத்திருந்தாலும் நாம் பார்க்கும் காட்சிகள்தான் நம்மை பெருமளவு ஆளுமை செய்கின்றன. என்பதை அழகாகக் காட்டினார்கள்...\\

    சரிதான்.

    ReplyDelete
  2. அனைவரையும் ஆட்டிக் காட்டிவிரலை உயர்த்திக் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர். அதே நேரத்தில் இந்த அறிவிப்பு செய்தவர் தனது கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார். முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலோரும் தங்களது கட்டைவிரலையே உயர்த்திக் காட்டினர்///

    சிந்திக்க வைத்த பதிவு

    ReplyDelete
  3. நாம் பார்க்கும் காட்சிகள்தான் நம்மை பெருமளவு ஆளுமை செய்கின்றன. என்பதை அழகாகக் காட்டினார்கள்...\\//

    கண்ணால் காண்பதே!!

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    புருனோ Bruno

    நட்புடன் ஜமால்

    thevanmayam அவர்களே....

    ReplyDelete
  5. தொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறேன்.வ‌ருகையை எதிர்பார்க்கிறேன்:‍)

    ReplyDelete
  6. நல்ல விஷயம்,

    முதல்ல புரியல. திரும்ப படிச்சப்பறம்தான் புரிஞ்சுது.

    ஆட்காட்டிவிரலைத் தேடிக்கொண்டிருக்கிறேன்!!

    ReplyDelete
  7. இது ஒரு மீள்வருகை! இஃகி!!

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    இயற்கை சார், இளைய பல்லவன் சார், பழமை பேசி சார்,

    ReplyDelete
  9. நல்லாயிருக்கு மருத்துவரே..(கட்டை விரலை உயர்த்திட்டு போறேன்)

    ReplyDelete
  10. என்ன இது ?தேதியில்லாம் இப்படி

    ReplyDelete
  11. // தண்டோரா ...... said...

    நல்லாயிருக்கு மருத்துவரே..(கட்டை விரலை உயர்த்திட்டு போறேன்)//

    நன்றி நண்பரே..,

    ReplyDelete
  12. // தண்டோரா ...... said...

    என்ன இது ?தேதியில்லாம் இப்படி//

    மீள் மீள் பதிவு அதனால் இப்படி

    ReplyDelete
  13. // வேந்தன் said...

    :)))//

    நன்றி நண்பரே..,

    ReplyDelete
  14. சரியாகத்தான் கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails