Monday, August 2, 2010

எந்திரன் பாடல்களுக்கு பின் சில சிந்தனைகள் 2.8.10

நாம் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே சீரான இடைவெளியில் எந்திரன் பற்றிய பதிவுகளை போட்டுக் கொண்டு இருக்கிறோம்.  பாடல் வெளிவந்த பிறகு நிறையப் பதிவர்கள் எந்திரன் பதிவுகளைப் போட ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது பதிவு போட வில்லை என்றால் எந்திரனை வைத்துத்தான் கல்லா கட்டுகிறோம் என்ற பாராட்டுப் பத்திரத்தை பிடுங்கி விடுவார்களோ என்ற பயத்தாலும் நாமும் எந்திரன் புயலில் குதிக்கிறோம்.

================================================================
எந்திரன் சில சிந்தனைகள்

சிந்தனை எண் 1.  ரஜினி படத்தில் ரஹ்மானுக்கு உள்ள சுதந்திரத்தில் பாதி கூட ஷங்கர் படத்தில் ரஹ்மானுக்கு இருப்பது போல தெரியவில்லை.  முத்து, படையப்பா படங்களில் தெரிந்த கட்டுடைத்தல் இசை இதில் இருப்பது போல தெரியவில்லை. அவையெல்லாம் அதற்கு முந்தைய ரஜினி படங்களுலிருந்து கொஞ்சம் விலகியது போல தோன்றும். இந்தப் பாடல்கள் முந்தைய சங்கர் படங்கள் போலவே உள்ளனவே

சிந்தனை எண் 2.  பாடல்கள் எல்லாம் எந்திரனுக்கே வருவதாகத் தோன்றுவதால் ஒருவேளை எந்திரனுக்கு ஜோடிதான் ஐஸ்வர்யாவா?  அப்போ  ராவணன் கதை மாதிரி விஞ்ஞானியிடமிருந்து ஐஸ்ஸை கடத்திக் கொண்டு போய் எந்திரன் லவ் பண்ணுவாரா?  அல்லது விஞ்ஞானிதான் வில்லனா? பத்து வருட உழைப்பின் பலன் ஒன்றும் இருப்பது போல தெரியவில்லை என்று புலம்ப வேறு செய்கிறார்.

சிந்தனை எண் 3: தமிழில் பெயர் வைத்தால் வரிச் சலுகை என்று அறிவித்ததால் ரோபோ எந்திரனாக மாறியது போல தமிழில் கதாபாத்திரங்கள் பெயர் வைத்தால்  தயாரிப்புச் செலவில் பத்து சதம் மானியம்,  வசனங்கள் தமிழில் இருந்தால்  பத்து சதம் மானியம்,  பாடல்கள் தமிழில் இருந்தால் பத்து சதம் மானியம்,  வேற்று மொழிகளில் டப்பிங் செய்யும்போது தமிழில் சப் டைட்டில் கார்டு போட்டால் பத்து சதம் மானியம்,  தயாரிப்புக் கம்பனியின் பெயரை தமிழில் வைத்துக் கொண்டால் இருபத்தைந்து சதம் மானியம் கொடுக்கலாமே, சமீபத்தில் வந்த ஒரு படத்தில் மூலம் எந்திரன் தயாரிப்பாளர் அடைந்த நஷ்டத்திற்கு ஒரு ஆறுதலாக இருக்கும்.  இதன் மூலம் தமிழை வளர்த்தது போலவும் இருக்கும். அதிகமான தயாரிப்புச் செலவு என்று புலம்பும் நபர்களுக்கு உதவுவது போலவும் இருக்கும்.

சிந்தனை எண் 4; பன்னாட்டு கம்பனிகளிலிருந்து வாங்கி தமிழனின் மானம் காத்த தயாரிப்பாளர்களைப் பற்றி ஏன் யாருமே பாராட்ட மறுக்கிறார்கள்?

சிந்தனை எண் 5 : ரஜினியை சின்னப் பையனாகக் காட்டத்தான் ஐஸ்வர்யாவை ஜோடியாகப் போட்டு இருக்கிறார்களாமே உண்மையா ? பல காட்சிகளில் ரஜினி தம்பி போல தெரிவாராமே? அது உண்மையா? சில நாட்கள் பொறுத்திருப்போம்

இதற்கு முன் நாம் எழுதிய் எந்திரன் இடுகைகளுக்கு இங்கே செல்லவும்

13 comments:

 1. ரஜினி தம்பி மாதிரி இருக்காரா ? சூப்பர் :):)

  ReplyDelete
 2. ரஜினிக்கு 60 இருக்கும்.ஐஸுக்கு 37.எப்படி தம்பி மாதிரி தெரிவார்?எவ்வளவுதான் மேக்கப் போடட்டுமே

  ReplyDelete
 3. என்னடா எந்திரன் பாட்டு ரிலீஸ் ஆகி ரெண்டு நாளாச்சே.. இவரு இடுகை போடாம இருக்காரேன்னு நினைச்சேன்..

  ReplyDelete
 4. பாஸ் தைரியமா டவுன்லோடு லிங்க் குடுத்துருக்கீங்க? போலீஸ்க்கு ஃபோன் பண்ணட்டுமா? ஆஸ்பிட்டலுக்கே வந்து அள்ளிட்டுப் போயிருவாய்ங்க..

  ReplyDelete
 5. எந்திரன் பாடல்கள் கேட்டு எனக்குத் தலைவலியே வந்து விட்டது.

  ReplyDelete
 6. எப்படி தல உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியுது.

  தல நீங்க எங்கேயோ போயிட்டிங்க.

  சீக்கிரம் திரும்பி வாங்க :)

  ReplyDelete
 7. // Karthick Chidambaram said...

  ரஜினி தம்பி மாதிரி இருக்காரா ? சூப்பர் :):)//

  வாங்க தல

  ReplyDelete
 8. // சி.பி.செந்தில்குமார் said...

  ரஜினிக்கு 60 இருக்கும்.ஐஸுக்கு 37.எப்படி தம்பி மாதிரி தெரிவார்?எவ்வளவுதான் மேக்கப் போடட்டுமே//

  ஐசுக்கு 37

  நல்ல தலைப்பா இருக்கே.., நீங்க ஸ்டில்ஸ் பார்க்கல்யா தல, ஐசுக்கு 37 தெரியுது, ரஜினிக்கு அவ்வளவாக தெரியல, அதனால் ரஜினி ஐச விட இளசாத்தான் தெரிகிறார்

  ReplyDelete
 9. // முகிலன் said...

  பாஸ் தைரியமா டவுன்லோடு லிங்க் குடுத்துருக்கீங்க? //

  ஐயோ

  டவுன்லோடு தர்ர இடத்துக்குத்தான் லின்க் கொடுத்தேன். மற்றதுக்கெல்லாம் அந்த தளத்துக்காரர்கள்தானே பொறுப்பு.

  வேண்டாமென்றால் நீக்கி விடுவோம்.

  ReplyDelete
 10. // Vijay said...

  எந்திரன் பாடல்கள் கேட்டு எனக்குத் தலைவலியே வந்து விட்டது.//

  பசிக்கும்போது கலை கண்ணுக்குத் தெரியாது. பசியே தெரியாமல் செய்யும் கலை காலம் கடந்தும் நிற்கும்.


  ===========

  ??

  ReplyDelete
 11. // அக்பர் said...

  எப்படி தல உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியுது.

  தல நீங்க எங்கேயோ போயிட்டிங்க.

  சீக்கிரம் திரும்பி வாங்க :)//

  வந்திடுவோம்

  ReplyDelete
 12. பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
  உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
  www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
  எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

  ReplyDelete
 13. ஓ.கே தல...

  இந்த பாட்டுங்க ரஜினி மற்றும் ஷங்கர் கூட்டணி.. ரஹ்மான் கொஞ்சம் பின்னாடித்தான் இருக்கார்... ஆனா மொத நாள் தியேட்டர்ல படம் பாக்குறவன் திருப்தியா இருப்பான்,.. அவங்க எதிர்பார்ப்பதும் அதுதானே...

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails