கொத்து பரோட்டா-08/11/10 படித்த போது நெஞ்சே வெடித்துவிடும் போல ஆகிவிட்டது.
வழக்கமாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை எடுத்து அவருக்குப் பிடித்த மாதிரி ஒரு ட்ரீட்மெண்ட் கொடுத்து உலகத் தரம் வாய்ந்த சில படங்களின் காட்சிகளை இனைத்து என்னைப் போன்ற எளியனுக்கு உலகப் படக் காட்சிகளை பார்க்கச் செய்யும் புண்ணியம் மனிரத்னம் அவர்களையே சாரும்.
அவர் இப்போது எடுக்கப் போகும் படம் பொன்னியின் செல்வன் கதையாம்.
பொன்னியின் செல்வன் கதை உங்களுக்குத் தெரியும் அல்லவா?
ஒரு மகாராஜா, அவரால் நடக்கமுடியாது. வயோதிகர்.
அவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள்.
மூத்தமகனின் ஆக்ரோஷம் தாங்காமல் அவரை நாட்டின் வடபகுதிக்கு அனுப்பி நாட்டைக் காப்பாற்ற அனுப்புகிறார். இளையவரை நாட்டில் அனைவருக்கும் பிடிக்கிறது.

இவர்களில் யாரை மகாராஜாவுக்குப் பின் நாட்டை ஆளவைப்பது என்பது பற்றியும், இந்த இருவர் அல்லாமல் அமைதியாக இருப்பவர்களில் ஒருவரை பதவிப் போட்டிக்கு இருப்பதையும். இதில் அந்த சகோதரி யும், அவரது காதலனும் இந்தப் போட்டியில் என்னன்ன பங்கு வகிக்கிறார்கள் என்பது பற்றியும் கதை போகும்.
தமிழகம் இன்று இருக்கும் நிலையில் இந்த மாதிரிப் படம் இப்போது வேண்டாமே. அவர் அதை இந்தியில் எடுத்தாலும் தமிழில் மொழி பெயர்த்து விடுவார்.
ஐயா மனிரத்னம் அவர்களே தயவு செய்து தமிழ் நாட்டை விட்டுவிடுங்கள்.
உங்களுக்கு கோடி புண்ணியம் வந்து சேரும்.