Sunday, December 12, 2010

ரஜினி ரசிகர்கள் செய்யத் தவறிய வேலை நிறுத்தம்

எந்திரன் படம் பார்த்த்போது ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. படம் பிடித்துத்தான் இருந்தது. ஆனாலும் வசீகரனின் உழைப்பு மொத்தமாக வீணாகிபோவதுபோல படம் எடுத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள்.

அதிபுத்திசாலி ரோபோ சமுதாயத்திற்கு ஆகாதாம். என்ன ஒரு பலவீனமான ஒருவாதம்.  படத்தின் ஆரம்பத்திலிருந்தே வசீகரனை காமெடியாக்கி  வைத்த இயக்குநரை என்னவென்று சொல்வது?

போக்குவரத்துவிதிகளின்படி வண்டி ஓட்டத் தெரிகிறது. முன்னால் போகும் வண்டியை ஓவர்டேக் செய்யத் தெரிகிறது.   கேட்டால் புரகிராம் செய்திருக்கிறார்களாம். அதேபோல் மனிதர்களின் குறிப்பிட்ட உறுப்புகள் வெளியே தெரியாவண்ணம் வெளியே வரவழைக்ககூடாது என்று புரகிறாம் செய்து விட வேண்டியதுதானே. அப்புறம் எதற்கு சிட்டியை கொஞ்சம் கொஞ்சமாக கழட்ட வேண்டும்.

உணர்வுகள் இல்லாததால்தான். ரகசியம் கேட்ட புரபஸரிடம் பதில் சொல்ல மறுக்கிறதா சிட்டி?  அழுத்திக் கேட்கும்போது  டாக்டரிடம் கேட்டுக் கொண்டுவந்து சொல்கிறேன் என்கிறதா?

ஐஸ்வர்யாவின் துப்பட்டாவை இழுக்கும்முன் காப்பாற்ற வருகிறதா?

சிந்திக்கும் செயல் இல்லாததால்தான்  வால்யூம் அதிகரித்து  சவுண்ட் சிஸ்டம் உடைக்கிறதா?   ஜிப்பைக் கழட்டி பேண்ட்டை உறுவுகிறதா?

தடுமாறும் ஐஸ்வர்யாவுக்கு ஜிப்ஜாப் மூலமாகவும் பின்னர் ஸ்கேன் மூலமாகவும் பிட் கொடுத்து உதவுகிறதா?

துறைத் தலைவரே பிரசவம் பார்க்க தடுமாறும்போது தேவையான தகவல்களை வரிடைப் படுத்தி, எதை உபயோகிப்பது எதை ஒதுக்குவது என்பதை பகுத்தாய்ந்து பிரசவம் பார்க்கிறதா?  (இது மிகத் திறமை வாய்ந்த அறிஞர்களாலேயே பல நேரங்களில் சாத்தியம் ஆவது இல்லை)

ராணுவத்திற்கு யார் தேவை?

மேலதிகாரியின் உத்தரவை அப்படியே பின்பற்றும் போர்வீரனைத்தான் பெறும்பாலான தளபதிகள் விரும்புவார்கள். அரசுப் பணியில் முதலில் கட்டளையை நிறைவேற்று. பின்னர் எதிர்ப்பை தெரிவி, என்றுதான் சொல்கிறார்கள்.

எதிர் நாட்டு மக்களுக்கும் நம் மக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அழித்துவிடும் என்கிறார்கள். இதுவரை எந்த யுத்தத்தில் நல்லவன் கெட்டவன் பார்த்து போர்வீரர்கள் செயல்பட்டு இருக்கிறார்.

எதிரிகளின் மேல் செலுத்தும் ஆயுதங்கள் செலுத்துபவர்களை பதம் பார்த்த சம்பவங்கள் யுத்த களத்தில் சாதாரணம். அதேபோல்  விலைபோன மனிதர்கள், எதிரிக்காக செயல்பட்ட நபர்களும் அதிகம்.  ஆனால் இது போன்ற ஒரு சொத்தைக் காரணத்தைக் காட்டி சிட்டியை நிகாரித்துவிடுகீறார்கள்.


நாட்டின் பிரதமரையே மெய்காப்பாளர்களை வைத்து முடித்த சம்பவங்களையெல்லாம் பார்த்து விட்டோம்.   இதில் சிட்டியால்தான் உலகம் அழியுமாம். என்ன கொடுமைடா சாமி?


முதல்வன்படத்தில் அர்ஜீனின் ஆட்சியால் தமிழகம் முன்னேறியதுபோல  சிட்டியின் சேவையால் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகக் காட்டி படத்தை முடித்திருக்க வேண்டும் இயக்குநர். படம் வெளியான அன்றே ரசிகர் அனைவரும் உலகம் தழுவிய வேலை நிறுத்தம் செய்திருந்தால்  ஒருவேளை இயக்குநரும், படத் தயாரிப்பாளர்களும் பணிந்திருப்பார்களோ?

ரசிகர்களின் வேலையே படம் பார்ப்பதுதானே?

 ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த பத்து ரஜினி படங்களைப் பற்றி எழுதியபோது பத்து ரஜினி படங்களின் கதைகளை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சொல்லி படங்களை கேட்டு ஒரு இடுகை போட்டிருந்தேன்.  அதில் மூன்று படங்கள் கண்டுபிடிக்கப் படாமல் இருக்கின்றன. நேரம் இருந்தால் கண்டுபிடியுங்களேன்

6 comments:

  1. அடடே,

    நீங்கள் சொல்றது உண்மைதான் தல. இருந்தாலும் நீங்க ரொம்ப லேட். இன்னிக்கு ரஜினி பிறந்த நாள் வேறு.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வதும் நன்றாகவே இருந்திருக்கும்... ஆனால் மொத்த கதையையும் மாற்றுவது கடினம் ஆயிற்றே... மேலும் நீங்கள் சொன்ன கதையைப் போல ஷங்கர் எந்த உலக சினிமாவிலும் பார்த்திருக்க மாட்டார்...

    ReplyDelete
  3. //King Viswa said...

    அடடே,

    நீங்கள் சொல்றது உண்மைதான் தல. இருந்தாலும் நீங்க ரொம்ப லேட். இன்னிக்கு ரஜினி பிறந்த நாள் வேறு.//

    ஆமா தல, ஆனா நான் படம் பார்த்ததும் ரொம்ப லேட்

    ReplyDelete
  4. //philosophy prabhakaran said...

    நீங்கள் சொல்வதும் நன்றாகவே இருந்திருக்கும்... ஆனால் மொத்த கதையையும் மாற்றுவது கடினம் ஆயிற்றே...//


    நான் முடிவை மட்டும்தான் மாற்றச் சொன்னேன் தல, அதுவும் நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின்னர் சில காட்டூன் கிராஃபிக்ஸ் போட்டால்கூட போதும்

    ReplyDelete
  5. //மேலும் நீங்கள் சொன்ன கதையைப் போல ஷங்கர் எந்த உலக சினிமாவிலும் பார்த்திருக்க மாட்டார்...//

    நான் சொன்னதெல்லாம் அந்தப் படத்தில் உள்ள காட்சிகள்தான் தல

    ReplyDelete
  6. தல இவ்வளவு நுணுக்கமாக படத்தை ஆரய்ச்சி பண்ணியிருக்கிறீர்களே. கிரேட்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails