Saturday, December 11, 2010

இந்த ஹீரோக்களெல்லாம் யாருப்பா?

ரஜினியை அரசியலுக்கு யாரெல்லாம் கூப்பிடுறாங்க.  அப்படி கூப்பிடும் நபர்கள் எல்லோரையும் ரஜினிக்குத் தெரியுமா என்று கேள்விகேட்டால் அந்த கேள்விக்கு கிடைக்கும் பதிலை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வப்போது பதிவுலகில் பலரும் இதே தலைப்பில் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். எனக்கும் இந்த தலைப்பில் பதிவு போடவேண்டும் என்ற ஆசை.  எனனை யாராவது கூப்பிட்டே இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் என்னைக் கூப்பிட்ட அந்த நண்பருக்கு நன்றியையும் அவரது பதிவினைப் பார்க்காததற்கு  அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு இந்த இடுகையை ஆரம்பிக்கலாம்.

1. திரைப்படம் எண் ஒன்று

ஒரு வேலைக்காரன், விசுவாசமான வேலைக்காரன். அவனது முதலாளி ஆசைப் பட்டதற்காக  ஒருபெண்ணை தூக்கிக் கொண்டுவந்து கொடுக்கிறான்.
அந்தப் பெண்ணை முதலாளி கெடுத்து கொண்றுவிட  அந்த வேலைக்காரனுக்கு அந்தப் பெண் சிறுவயதில் தொலைந்துபோன தனது தங்கை என்று தெரிய  முதலாளியை பழிவாங்க சபதம் ஏற்று நண்டூறுது நரியூருது என்று பாடுவார்.  அந்த ஹீரோ யார்?

2. திரைப் படம் இரண்டு.

இரண்டு நண்பர்கள். முதல்நபர் அலுவலகத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர். இன்னொருவர் அவரது அடிபொடிபதவியில் இருப்பர். பதவிக்காரர் ஒரு அஜால்குஜால் பேர்வழி.   அவரால் கெடுக்கப் பட்ட ஒருபெண்ணுக்கு வாழ்வு கொடுக்கிறேன் பேர்வழி என்று மணந்துகொள்கிறார். அந்தப் பெண்மணி இவரை தெய்வமாக வழிபடுகிறார். தெய்வத்திற்கு கரைப் பட்ட பூவைத் தரமாட்டேன் என்று  பலான விஷயத்திற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறார். ஹீரோ அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகின்றேன் நானும் என்று பாட்டுப் பாடுவார். அந்த ஹீரோ யார்?

3.திரைப் படம் எண் மூன்று.

முறைப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு ஒரு பெண்குழந்தை பெற்றுக் கொள்கிறார். முறைப் பெண் இவரை விட்டு விலகி விட அவரது தங்கையை திருமணம் செய்து கொள்கிறார். பழைய மனைவி பிற்காலத்தில் சுமார் இருபது ஆண்டுகள் கழித்து வர அவரை பெற்றவர்கள் முதல் அனைவரும் ஒதுக்கிவைக்கிறார்கள். அவர் இறந்த உடன் தனி நபராக ஈமச் சடங்குகள் செய்கிறார் ஒரு ஹீரோ.  அவர் யார்?   இதில் மகளாக நடித்தவர் பின்னர் ஜோடியாக நடித்தார். விரைவில் அம்மாவாக நடிக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது

4. திரைப்படம் எண் நான்கு

40வயதைத் தாண்டிய ஒரு ஹீரொயின் அவரது வய்தை ஒத்த ஹீரோவை வைத்து ஒரு படம் எடுத்தார்.  அந்த ஹீரோவுக்கு சின்ன வயது தம்பி, நடக்கமுடியாத தங்கை, வயதான் தாயார். இப்படி இருக்கு மூளையில் கட்டி.  அந்த நேரத்தில் ஊரில் ஒருபிரமுகர் கொல்லப் பட அவரைக் கண்டுபிடித்தால் பரிசாக ஒருபெரிய தொகை அறிவிக்கப் பட தன் குடும்பத்தைக் காப்பாற்ற அவராக அதில் சிக்கிக் கொள்கிறார். சிறையில் இருக்கும்போது  மயக்கம்வர அவரது கட்டியைஅரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றி விடுகிறார்கள்.  இப்போது தன் வக்கீல் காதலியிடம் உண்மையைச் சொல்ல அவரை வெளிக் கொண்டுவர வழி தெரியாமல் தவிக்க  மைக்கேல் டிசௌசா ட்ரூ கிறிஸ்டியன் என்று அறிமுகம் ஆகி  சண்டையெல்லாம் போட்டு கடைசிக் கட்டத்தில் குண்டுகள் துளைக்கப் பட்ட நிலையில் வெகுநேரம் போராடி ஹீரோவைக் காப்பாற்றிய சின்ன ஹிரோ யார்?

5. திரைப்படம் என் ஐந்து
சென்ற படத்தில் ஹீரோ பெரிய அண்ணனாகவும், சின்ன ஹீரோ அடுத்த அண்ணனாகவும் இன்னொரு தம்பியுடன் நடித்த படம்.  சகோதரர் 2, 3 இருவரும் அண்ணியின் கொடுமை காரணமாக வீட்டைவிட்டு வெளியேற  காலங்கள் ஓடுகிறது, 2க்கு 1ஐ அடையாளம் தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். 2. ஒரு கொலைவழக்கில் மாட்டிக் கொள்ள 1 தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து வாதாடி சகோவை காப்பாற்றுகிறார். அந்த நடு சகோதரர் யார்?


6 திரைப் படம் எண் 6, 7.
ஒரு முதலாளி, ஒரு தொழிலாளி. இரண்டு பெண்கள்.  ஒருஹீரோ. ஹீரோ தொழிலாளியை காதலிக்க முதலாளி ஹீரோவைக் காதலிக்கிறார்.

முதலாளியை திருமணம் செய்து கொண்டு பின்விளைவுகளை ஒரு படமாகவும், தொழிலாளியை திருமணம் செய்துகொண்டு ஒரு படமாகவும் தந்து மக்களை மகிழ்வித்த நடிகர் யார்?

7. திரைப் படம் எண்8
ஒரு நண்பன் அவன் மனைவிக்கு பேய்பிடிக்கிறது. நவீன முறையில் மருத்துவர் என்ற பெயரில் பேய் ஓட்டும் கதை. இவரைத் தவிர யார் ஹீரோவாக நடித்திருந்தாலும் அத்தோடு ஓய்வு பெற்றிருப்பார்கள். அந்த ஹீரோ யார்?

8. திரைப் படம் எண் 9
ஒரு சராசரி மனிதன். அவனது தந்தைக்கு வாக்குக் கொடுத்தபடி தனது மாற்றாந்தாய் குழந்தைகளை நல்ல நிலமைக்கு கொண்டுவர வாழ்க்கையை தியாகம் செய்துவிடுகிறார். அவர் அதில் வெற்றிபெறும் நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்த ஒரு நபரை பார்க்கிறார். அந்த மனிதர் நம் ஹீரோ பெரிய தாதாவாக நாயகன் கமலஹாசன் போன்று இருந்த காலத்தில் நன்கு அறிந்த்வர். நமது ஹீரோ மீது கொலை முயற்சியும் செய்தவர். சூழ்நிலை அவரது மகளையே நமது ஹீரோ திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது.

இந்த ஹீரோ யார்?


9. திரைப்படம் எண் 10. 

சின்னத்தம்பி பிரபு மாதிரி ஒரு ஹீரோ. அவருக்கு கடவுள் அவரது வாத்தியார். பல வித்தைகளை வாத்தியார் கற்றுக் கொடுக்கிறார். ஒரு கால கட்டத்தில் அவர் கோபம், தாபம் பற்றியும் சொல்லிக் கொடுக்கும்போது  வாத்தியாரின் காதலியை இவர் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்தம்பி பிரபுதானே என்று அலட்சியமாக கொடுத்த பிரச்சனை ஆகிவிடுகிறது.  வாத்தியாரின் காதலியிடம் தன்னைக் காதலிக்குமாறு கெஞ்சும்போதும்,  வாத்தியாரிடம் தனக்காக காதலியை விட்டுக் கொடுக்குமாறு பேசும்போதும் ஒரு ரொமான்ஸ் ஹீரோவை நாடு இத்தனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவே தோன்றும். பின்னர் அவரே வில்லனாகி காதலியை குழந்தை பெற்றுத் தருமாறு மிரட்டும்போது பகிரென்று இருக்கும். அந்த ஹீரோ யார்?


=====================================================================

ஹீரோ பேர் எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். படத்தின் பேரைச் சொல்லுங்கள்.

25 comments:

 1. தல, பதில் சொல்றதுக்கு முன்னாடி, வெல்கம் பேக்.

  ReplyDelete
 2. //சென்ற படத்தில் ஹீரோ பெரிய அண்ணனாகவும், சின்ன ஹீரோ அடுத்த அண்ணனாகவும் இன்னொரு தம்பியுடன் நடித்த படம். சகோதரர் 2, 3 இருவரும் அண்ணியின் கொடுமை காரணமாக வீட்டைவிட்டு வெளியேற காலங்கள் ஓடுகிறது, 2க்கு 1ஐ அடையாளம் தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். 2. ஒரு கொலைவழக்கில் மாட்டிக் கொள்ள 1 தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து வாதாடி சகோவை காப்பாற்றுகிறார். அந்த நடு சகோதரர் யார்?//

  தல,
  நடிகர் திலகமும், சூப்பர் ஸ்டாரும் சேர்ந்து நடித்த இந்த படத்தை மறக்க முடியுமா?

  ஊரை தெரிஞ்சுகிட்டேன், உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி, என் கண்மணி

  ReplyDelete
 3. //திரைப் படம் எண்8
  ஒரு நண்பன் அவன் மனைவிக்கு பேய்பிடிக்கிறது. நவீன முறையில் மருத்துவர் என்ற பெயரில் பேய் ஓட்டும் கதை. இவரைத் தவிர யார் ஹீரோவாக நடித்திருந்தாலும் அத்தோடு ஓய்வு பெற்றிருப்பார்கள். அந்த ஹீரோ யார்?//

  வர்ற வியாயக்கிழமை அன்று இந்த படத்தோட ரெண்டாம் பாகம் வெங்கடேஷ் நடிச்சு தெலுங்குல வருது தல. சந்திரமுகி டு.

  ReplyDelete
 4. // திரைப் படம் எண் 9
  ஒரு சராசரி மனிதன். அவனது தந்தைக்கு வாக்குக் கொடுத்தபடி தனது மாற்றாந்தாய் குழந்தைகளை நல்ல நிலமைக்கு கொண்டுவர வாழ்க்கையை தியாகம் செய்துவிடுகிறார். அவர் அதில் வெற்றிபெறும் நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்த ஒரு நபரை பார்க்கிறார். அந்த மனிதர் நம் ஹீரோ பெரிய தாதாவாக நாயகன் கமலஹாசன் போன்று இருந்த காலத்தில் நன்கு அறிந்த்வர். நமது ஹீரோ மீது கொலை முயற்சியும் செய்தவர். சூழ்நிலை அவரது மகளையே நமது ஹீரோ திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது.

  இந்த ஹீரோ யார்?//

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பாஷா பாரு, பாஷா பாரு,,,,,

  ReplyDelete
 5. //திரைப்படம் எண் 10.

  சின்னத்தம்பி பிரபு மாதிரி ஒரு ஹீரோ. அவருக்கு கடவுள் அவரது வாத்தியார். பல வித்தைகளை வாத்தியார் கற்றுக் கொடுக்கிறார். ஒரு கால கட்டத்தில் அவர் கோபம், தாபம் பற்றியும் சொல்லிக் கொடுக்கும்போது வாத்தியாரின் காதலியை இவர் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்தம்பி பிரபுதானே என்று அலட்சியமாக கொடுத்த பிரச்சனை ஆகிவிடுகிறது. வாத்தியாரின் காதலியிடம் தன்னைக் காதலிக்குமாறு கெஞ்சும்போதும், வாத்தியாரிடம் தனக்காக காதலியை விட்டுக் கொடுக்குமாறு பேசும்போதும் ஒரு ரொமான்ஸ் ஹீரோவை நாடு இத்தனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவே தோன்றும். பின்னர் அவரே வில்லனாகி காதலியை குழந்தை பெற்றுத் தருமாறு மிரட்டும்போது பகிரென்று இருக்கும். அந்த ஹீரோ யார்?//

  பூம், பூம் ரோபோக்யா,

  நம்ம சிட்டி ரஜினிதானே?

  ReplyDelete
 6. தல,
  ஏதோ என்னோட சினிமா நாலேட்ஜுக்கு எட்டிய அளவுக்கு பதில் சொல்லிட்டேன். அந்த ஆயிரம் பொற்காசுகளில் நானூறு பொற்காசுகளை எனக்கே அளியுங்களேன்?

  ReplyDelete
 7. வோட்டு போட்டாச்சு தல.

  ReplyDelete
 8. வருகைக்கு நன்றி தல,

  மற்ற திரைப்படங்களும் சுலபமானவைதான். முயற்சி செய்து பாருங்களேன்.

  ReplyDelete
 9. பைரவி ரஜினி
  புவனா ஒரு கேள்விக்குறி ரஜினி
  எங்கேயோ கேட்ட குரல்
  படிக்காதவன்
  சந்திரமுகி
  பாட்சா
  எந்திரன்

  அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்கே....நானும் ஒரு போட்டி வச்சுருக்கேன்
  http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html

  ReplyDelete
 10. //ரஹீம் கஸாலி said...

  பைரவி ரஜினி
  புவனா ஒரு கேள்விக்குறி ரஜினி
  எங்கேயோ கேட்ட குரல்
  படிக்காதவன்
  சந்திரமுகி
  பாட்சா
  எந்திரன்

  அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்கே....நானும் ஒரு போட்டி வச்சுருக்கேன்
  http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html
  //


  வாங்க தல

  அப்படியே திரைப்படம் எண் 6, 7 ஐயும் சொல்லிவிடுங்கள்

  ReplyDelete
 11. //தேவன் மாயம் said...

  வருக சுரேஷ்! வருக!
  //


  திரைப்படம் எண் 4 உங்கள் காலத்து படம் என்று நினைக்கிறேன்.

  சொல்லுங்க தல

  ReplyDelete
 12. //சிநேகிதன் அக்பர் said...

  தல வெல்கம் பேக்.//

  நன்றி தல,

  ReplyDelete
 13. //ஒரு முதலாளி, ஒரு தொழிலாளி. இரண்டு பெண்கள். ஒருஹீரோ. ஹீரோ தொழிலாளியை காதலிக்க முதலாளி ஹீரோவைக் காதலிக்கிறார்.

  முதலாளியை திருமணம் செய்து கொண்டு பின்விளைவுகளை ஒரு படமாகவும், தொழிலாளியை திருமணம் செய்துகொண்டு ஒரு படமாகவும் தந்து மக்களை மகிழ்வித்த //


  நிஜமாகவே இந்தப் படங்கள் பற்றி நினைவிற்கு வரவில்லையா?

  ReplyDelete
 14. // திரைப் படம் எண் 6, 7.
  ஒரு முதலாளி, ஒரு தொழிலாளி. இரண்டு பெண்கள். ஒருஹீரோ. ஹீரோ தொழிலாளியை காதலிக்க முதலாளி ஹீரோவைக் காதலிக்கிறார்.//

  mannan

  ReplyDelete
 15. //திரைப் படம் எண்8
  ஒரு நண்பன் அவன் மனைவிக்கு பேய்பிடிக்கிறது. நவீன முறையில் மருத்துவர் என்ற பெயரில் பேய் ஓட்டும் கதை. இவரைத் தவிர யார் ஹீரோவாக நடித்திருந்தாலும் அத்தோடு ஓய்வு பெற்றிருப்பார்கள். அந்த ஹீரோ யார்?//

  aayiram jenmangal!

  ReplyDelete
 16. 1.bairavi
  2.bhuvana oru kelvikuri
  3.engeyo ketta kural
  4.naan vaza vaippen
  5.padikkadhavan
  6.mannan / padayappa
  7.chandramuki
  8.basha
  9.robot

  ReplyDelete
 17. //பெயர் சொல்ல விருப்பமில்லை said...

  // திரைப் படம் எண் 6, 7.
  ஒரு முதலாளி, ஒரு தொழிலாளி. இரண்டு பெண்கள். ஒருஹீரோ. ஹீரோ தொழிலாளியை காதலிக்க முதலாளி ஹீரோவைக் காதலிக்கிறார்.//

  mannan
  //

  நன்றி

  ReplyDelete
 18. //பெயர் சொல்ல விருப்பமில்லை said...

  //திரைப் படம் எண்8
  ஒரு நண்பன் அவன் மனைவிக்கு பேய்பிடிக்கிறது. நவீன முறையில் மருத்துவர் என்ற பெயரில் பேய் ஓட்டும் கதை. இவரைத் தவிர யார் ஹீரோவாக நடித்திருந்தாலும் அத்தோடு ஓய்வு பெற்றிருப்பார்கள். அந்த ஹீரோ யார்?//

  aayiram jenmangal!
  //


  அட ஆமா. லதாவுக்கும் ஜோதிகாவுக்கும் ஒற்றுமை இருப்பது போலத்தான் இருக்கிறது

  ReplyDelete
 19. //chandran said...

  1.bairavi
  2.bhuvana oru kelvikuri
  3.engeyo ketta kural
  4.naan vaza vaippen
  5.padikkadhavan
  6.mannan / padayappa
  7.chandramuki
  8.basha
  9.robot
  //

  ஆங்கிலத்தில் எழுதியதால் ரோபோ என்று எழுதியிருக்கிறீர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு அனைத்து பதில்களும் சரி என தீர்ப்பளிக்கிறேன்.

  ReplyDelete
 20. நான் வாழ வைப்பேன் படத்தில் இந்தியில் அமிதாப் நடித்த வேடத்தில் சிவாஜி ஏற்றுக்கொண்டு பிரான் வேடத்தை ரஜினிக்கு கொடுத்திருப்பார்கள். இந்திப் படத்தில் வரும் சற்று வயதான வேடம் தமிழில் இள்மையாகவே காட்டப் பட்டிருக்கும். ரஜினி நுழைந்தபிற்கு முழு ஆக்சனும் அவருக்குத்தான்.

  ReplyDelete
 21. ////ஒரு முதலாளி, ஒரு தொழிலாளி. இரண்டு பெண்கள். ஒருஹீரோ. ஹீரோ தொழிலாளியை காதலிக்க முதலாளி ஹீரோவைக் காதலிக்கிறார்.

  முதலாளியை திருமணம் செய்து கொண்டு பின்விளைவுகளை ஒரு படமாகவும், தொழிலாளியை திருமணம் செய்துகொண்டு ஒரு படமாகவும் தந்து மக்களை மகிழ்வித்த //


  நிஜமாகவே இந்தப் படங்கள் பற்றி நினைவிற்கு வரவில்லையா?//

  He he..Engum edhilum Mannan & Padayyappa, aaru padayappa

  ReplyDelete
 22. Super star vechu padhivu pottaale, Super dhaan :)

  part 2 part 3 laam potta nalla irukkum :)

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails