நயந்தாரா இன்று இந்து மதத்திற்கு மாறியதாக செய்திகள் சொல்கின்றன. அவர் திருமணம் செய்து கொள்ள வசதியாகத்தான் இந்து மதத்திற்கு மாறியதாக சில நண்பர்களும் ஊடகங்களும் கருத்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இது அவர்களின் சொந்த விஷயம் என்றாலும்கூட நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. கேள்விகள் கண்டிப்பாக நயந்தாராவின் சொந்த வாழ்க்கை பற்றி அல்ல. எனவே எனது குழப்பங்களுக்கு விடை சொல்ல நினைக்கும் நண்பர்கள் தயவு செய்து நயந்தாராவின் சொந்த வாழ்க்கைக்குள் நுழைய வேண்டாம்.
1.சட்டப் படியோ அல்லது மத முறைப் படியோ ஒருவர் இந்து மதத்திற்கு மாற முடியுமா?
2.இந்து மத கடவுள்களை வணங்குபவர்கள், பின்பற்றுபவர்கள் சட்டப் படி இந்துக்கள் என்று அழைக்கப் படுவார்களா?
3.இந்து மதத்திற்கு மாற முடியும் என்றால், மதத்தில் நுழைந்து விட்டு சாதிக்குள் நுழையாமல் இருக்க முடியுமா?
4.மதத்திற்குள் நுழைபவர்கள் சாதிக்குள் நுழைய முடியும் என்றால் எந்த சாதிக்குள் நுழையலாம்?
5. இந்து மதத்தின் ஒரு சாதியில் இருந்து வேறொரு சாதிக்கு மாறமுடியுமா? அப்படி மாறினால் சட்டப் படி செல்லுபடியாகுமா? அவர்களுக்கு அரசில் சலுகைக்கள் ( இட ஒதுக்கீடு, கலப்புத் திருமண உதவிகள் கிடைக்குமா?
நன்றி தல, நீங்கள் சொன்ன விஷயங்களை பிரிதொரு களத்தில் விவாதம் செய்வோம். இப்போது இடுகை ஒரே ஒரு நேர்கோட்டில்.., (என்று நினைக்கிறேன்)
ReplyDeleteரைட்டோ ...
ReplyDeleteஎல்லாமே டெரர் கேள்விகளா இருக்கே?
ReplyDeleteரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,ரொம்ப,நல்ல கேள்விகள். ஏனென்றால் இந்தக் கேள்விகளுக்கு சோனியா காந்தி அல்லது மு.க. மட்டுமே பதிலளிக்க முடியும்.
ReplyDeletemothathula nayan thara kanavula manna alli potrathinga sir ha ha ha lol
ReplyDeleteஇந்த மாதிரியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது. அப்படி கேட்டா உங்களை கண்டிச்சி அறிக்கை விட்டுடுவாங்க நம்ம 'ஐந்து சமூக காவலர்கள்'.
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
More Entertainment
For latest stills videos visit ..