Saturday, June 1, 2013

இதுக்கெல்லாம் காந்திய வம்புக்கிழுத்தால் என்ன செய்வது?

//தற்கால சூழலில் காந்தியின் கிராம ராஜ்ஜியம் சாத்தியல்லை என மத்திய மனிதவளத் துறை இணை மந்திரி சசி தரூர் கூறியுள்ளார்.//    

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும்போல.., ஆனாலும் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், அதுவும் ஐ.நா சபையின் பெரிய பதவிக்கெல்லாம் போட்டியிட்ட நபர் இப்படியெல்லாம் பேசுவது சரியல்லதான் தோன்றுகிறது.  

இந்த நாட்டின் அடிப்படையே கிராமம்தான். கிராமங்கள் இல்லாமல் நகரங்கள் மட்டுமே இருந்தால் நகரத்த்துக்கு உணவு மட்டுமல்ல ஆட்கள் சப்ளையுமே குறைந்து போய்விடும். 

ஒரு கிராமம் எப்படி இருக்க வேண்டும் என்று பற்பல் கனவுகளை காந்தி விதைத்திருக்கிறார். காந்தியை ஒத்துக் கொள்ளாதவர்கள் கூட அவரது பல கருத்துக்களை ஒத்துக் கொள்வார்.  

சென்னை மாநகரம் என்பது இப்படி பக்கத்து மாவட்டங்கள் தாண்டி வளரும் என்று 40 ஆண்டுகளுக்கு முன் யாராவது நினைத்து பார்த்திருப்பார்களா? அப்போதைய கிராமங்கள் எல்லாம் இன்று சென்னைக்குள் வந்து விடவில்லை.  கோயமுத்தூரில் 20 ஆண்டுகளுக்கு முன்புகூட சிங்காநல்லூர் ஊருக்கு வெளியேதான் இருந்தது. பீள்மேடு கிராமம்தான். இன்று அவையெல்லாம். உள்ளே வந்து விட்டன. ஆனால் கிராமம் என்ற இயல்பை இழந்து விட்டு நகருக்குள் வந்து விட்டன. ஒவ்வொரு நகரைச் சுற்றிலும் இது போன்ற பலகிராமங்கள் இருக்கின்றன. கோவையிலிருந்து 40கிமீயில் பொள்ளாட்சி பசுமையுடன் விளங்கிக் கொண்டுதான் இருக்கிறது,. 


பழனியை எடுத்துக் கொண்டால் முன்பெல்லாம் விவசாய நிலங்களில் இருந்த  முதலாளிகள் அருகிலிருக்கும் ஓரளவு பெரிய ஊரில் இருந்து கொண்டு விவசாயத்தை கவனித்துக் கொண்டு இருந்தார்கள். இன்று தகவல் தொழில்நுட்பம் போக்குவரத்து வளர்ந்து விட்ட சூழலில் தங்களது தோட்டத்திலேயே வசதியான வீட்டைக் கட்டிக்கொண்டு, டிடிஎச் வசதி, கார், மொபைல் சகிதம் ஒரு ஹைடெக் வாழ்க்கையை விவசாயத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு விவசாயத்தின் வருமானமும் நன்றாகத்தான் வந்து கொண்டு இருக்கிறது.  ஆனால் அடுத்த தலைமுறை ஆட்கள் படித்துவெளிநாட்டிற்குச் செல்வதால்தான் அந்த குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வெளியே வரும் சூழல் இருக்கின்றன.

சிறுவிவசாயிகளுக்கும் நஷ்டப்படாத அளவில் தண்ணீர் வசதியை செய்து கொடுத்தால் ஓரளவு அவர்களும் தங்களது தோட்டங்களைப் பெருக்கி, அங்கேயே இருந்து விவசாயத்தை கிராமத்தை பலப் படுத்துவார்கள்.  இந்த சிறுவிவசாயிகளின் சிலரின் வாரிசுகள் விவசாயத்தை விட்டு வெளியேறினாலும் பலரின் வாரிகள் அதைத் தொடருவார்கள். கிராமங்கள் வளப்படும். சுலப போக்குவரத்தையும், தேவையான நீர்வளத்தையும் ஏற்படுத்தினால் போதும். ( இதைச் சொல்லும் போது கேலியாகச் சிரிக்கலாம். இது ஒன்றும் கஷ்டம் அல்ல, நாற்கரச் சாலைக்கு நம்மால் நிலங்களை கையகப் படுத்த முடியும்போது கால்வாய்கள் அமைக்க நிலங்களை கையகப் படுத்த முடியாதா என்ன? தவிர இந்த கால்வாய்கள் வந்தால் அந்த நிலச் சொந்தக்காரர்களுக்கும் கொழுத்த லாபம்தான் கிடைக்கும். நமக்குத் தேவை சரியான களப்பணியாளர்கள்தான்)


போக்குவரத்தை சுலபமாக்கி தண்ணீர் போதுமான அளவு கிடைக்கும் வகையில் செய்து விட்டால் கண்டிப்பாக கிராமங்கள் பலம் பெறும். தொழிற்சாலைகளை நகரத்திலேயே குவிக்காமல் அருகிலுள்ள சிறு நகரஙகளுக்கு மாற்றி அங்கிருந்து பெரு நகரத்துக்கு போக்கு வரத்தினை துரிதப் படுத்தினாலே  கிராமங்கள் நன்கு பலப் படும்.  

சரிநிகர் சமப்படுத்தப் பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு கிராம ராஜ்யமே தீர்வாக இருக்க முடியும். இல்லையென்றால் பணக்காரர்கள் பணக்காரர்கள் ஆகிக் கொண்டே இருப்பார்கள். ஏழைகள் ஏழைகள் ஆகிக் கொண்டே இருப்பார்கள்.

//கோவாவில் நடைபெற்ற விழாவில் சசி தரூர் பேசியதாவது:-

தங்களுக்கு தேவையான அனைத்து வளங்களையும் கிராமங்களே உருவாக்கிக் கொள்ளக்கூடிய கிராம ராஜ்ஜியம் பற்றி மகாத்மா காந்தி பேசி வந்தார்.

உலகமயமாக்கல், தொலைத்தொடர்பில் நவீனத்துவம் என்று மாறிவரும் தற்கால சூழலில் காந்தி விரும்பிய கிராம ராஜ்ஜியம் என்பது சாத்தியமில்லாத இலக்காகவே தோன்றுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.//
//      

எனக்கென்னவே தொலை தொடர்பு வசதி என்பதை  கிராமங்களுக்கு கொடுக்க முடியாது என்பது போல பேசி இருப்பதாக தோன்றுகிறது. கிராமத்தான் முன்னேறிவிடக் கூடாது என்ற எண்ணமே அவர் நெஞ்சில் இருப்பதாக தோன்றுகிறது.

1 comment:

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails