Sunday, June 16, 2013

விகடனுக்கே ஒரு விமர்சனம்.

இந்த வாரம் விகடனில் பிடாரனின் மகள் கதை படித்தேன்.  நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கதை தான் பிடாரனின் மகள்.

கதை என்று பார்த்தால் ஏற்கனவே நமக்கு அறிமுகமான கதைதான். ஏற்கனவே அழகி படத்தில் ஒரு ஓரமாய் எட்டிப் பார்த்த கதைதான்.  செல்லியை சின்ன வயதில் பார்க்கும் கதாநாயகன். அந்த சின்ன வயதிலேயே தனது தாயாரின் ஹேர் பின்களை கொடுத்தும், கொஞ்சம் கரெக்ட் செய்த காசில் நெயில் பாலீஸ் வாங்கிக் கொடுத்தும் ஃபிரெண்டு பிடிக்கப் பட்ட அந்தச் சிறுமியை, சில பல ஆண்டுகளுக்குப் பின் நாயகன் பார்க்கிறார். அப்போது அவரது உணர்வு,. அவ்வளவுதான் கதையின் சுறுக்கம்.  சிறுமியின் பின்புலம், வளர்ந்தபின் அவரது பின்புலம். அவரது தந்தையின் சிந்தனைகள் சில, நாயகனின் கருத்துக்கள் சில என்று புதிதாக கதை எழுத வருவோருக்கு எப்படி நமக்குத் தெரிந்த ஒரு சம்பவத்தை பெரிதாக மாற்றி கதையாக்குவது என்று சொல்வதாக இந்தக் கதை அமைந்திருக்கும்.

பாம்பு விளையாட்டுப் பொருள் இல்ல.., அது ஒரு உசிரு. அந்த உசிரு நமக்கு அடங்கியும் இருக்கும். மீறினா காவு வாங்கிடும்.

பாம்பாட்டுறது ஒரு போதை, நாம ஊதறதுக்குப் பாம்பு கிறங்கி ஆடுதேனு ஒரு மிதப்பு வரத்தான் செய்யும். நாள்பட அந்த கிறுக்கு மண்டைஇல் கிர்னு ஏறிடும்

பாம்பு சாகிறது சாதாரண விஷயமில்லை. எந்த பாம்பாவது தானாக சாகிறத பார்த்து இருக்கியா? 

அப்படி இப்படி பாம்பு பாம்பாட்டி பற்றியெல்லாம் பேசும்போது  பாம்பாட்டியின் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ என்று நம்மை எண்ண வைத்து விடுகிறார். 

நாமும்கூட அப்படியே அப்படியே நம்பிவிடலாம் அதனால் பாதிப்பு ஏதும் இல்லை.

அப்படியே ஒரு டாக்டரைப் பற்றியும் பேசுகிறார்கள் கதையில் அந்த டாக்டருக்கு ரத்தப் பரிசோதனையும் ஸ்கேன் பரிசோதனையும் தேவையில்லாமல் எழுதித் தருவதாகவும் அதில் கமிஷன் பெற்றுக் கொள்வதாகவும் எழுதி இருந்தார். அந்த வகையில் ஸ்கேனில் மட்டும் மாதம் மூன்று லட்சம் வருவதாக சொல்லி இருக்கிறார். 30 நாளில் மூன்று லட்சம் என்றால் ஒரு நாளில் 10,000 வருமானம். அதாவது கமிஷன்.  கணக்கிட வசதிக்காக  கமிஷன் 10%  என்று வைத்துக் கொண்டால் ஸ்கேன் செய்வது ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு வேளை கமிஷன் 2% என்று வைத்துக் கொண்டால் ஸ்கேன் செய்வது 5 லட்சம் ரூபாய்க்கு.  இந்த பெரிய தொகைக்கு கார்ப்பரேட் மருத்துவ மனைகளே செய்வார்களா என்பது சந்தேகமே..,

அதாவது கமிஷனாக பெரும்பங்கு சம்பாதிக்கும் நபர் என்று தேவையில்லாமல் புழுதியை எடுத்து விடுவதாகவே தோன்றுகிறது.  இவ்வாறான வரிகளைப் படித்த போது தனக்குத் தோன்றுவதை எல்லாம் எழுதி அதை இலக்கியமாக மாற்றும் திறன் நட்சத்திர எழுத்தாளர்களுக்கு உண்டு என்பதை ஒரு வார இடைவெளியில் மீண்டும் நிரூபித்து விட்டதாகவே தோன்றுகிறது.

குருடன் யானை கண்ட கதைபோல  இது போன்ற பாத்திரங்களை படைப்பதற்கு முன் எழுத்தர்கள் எழுதுவது போலவே இருந்து விடுகிறார்கள்

2 comments:

  1. Well said suresh... நீங்கள் மருத்துவரா ?

    போலவே பாம்பு மகுடியிலிருந்து வெளிப்படும் இசையை கேட்டு ஆடுவது போல சில சொற் பிரயோகங்கள்... உண்மையில் பாம்பிற்கு காது கேட்காது என்பது அறிவியல் உண்மை... இந்த உண்மை பொது மக்களுக்கு தெரியவில்லை என்றாலும் பாம்பாட்டிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்... ஒருவேளை பாம்பாட்டியின் காலசைவில் வெளிப்படும் அதிர்வுகளை உணர்ந்து பாம்புகள் ஆடலாம்...

    ReplyDelete
  2. எஸ்.ரா இப்படி லாஜிக் இல்லாமல் எழுதுவது என்பது புதிதல்ல.. இவரின் புத்தனாவது சுலபம் சிறுகதையில் தந்தையின் வயது மகனின் வயது போன்றவை இது போன்றுதான் இருக்கிறது... வாகை

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails